புதன், 31 ஜனவரி, 2018

கிரகணம்

கிரகணம் தோஷமல்ல... குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் பெற்றோரே!
கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?-

 : கிரகணம் என்பது தோஷமல்ல அதனை அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும்இ வெறும் கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கிரகணம் என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. காலம் காலமாக புரையோடி இருக்கும்

மூடநம்பிக்கைகளில் இருந்து இளம் தலைமுறையினரை அறிவியல் ரீதியாக சிந்திக்க வைக்க வேண்டியதும் பெற்றோர் செய்ய வேண்டியதே. பூமியின் ஒரு பக்கம் சூரியனும் மறுபக்கம் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூப்பர் மூன் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமி ப்ளூ மூன் என்று அறிவியல் ரீதியில் அழைக்கப்படுகிறது. ப்ளூ மூன் என்பதால் நிலவு நீல நிறத்தில் தெரியாது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம்.


 வழக்கமாக நிலவு வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆனால் இன்றைய அதிசய நிகழ்வின் போது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும். இதோடு பூமி நிலவு சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது நிகழும் கிரகணத்தின் போது நிலவொளி முற்றிலும் இருண்டுவிடும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பூமி விலகிச் செல்லச் செல்ல நிலவு மீண்டும் முழு வடிவிற்கு வரும்.

எப்போது கிரகணத்தை பார்க்கலாம்

மாலை 5.48 மணிக்கு கிரகணம் தோன்றினாலும் நிலவு உதயம் மாலை 6.04 மணிக்கே கிரகணத்தை பார்க்க முடியும். தொடர்ந்து 2 மணி நேரங்கள் படிப்படியாக நிலவு மீது இருக்கும் பூமியின் நிழல் விலகத் தொடங்கி 8.40 மணியளவில் முழுமையாக நிலவு தெரியும். அதன் பின்னர் நிலவு வழக்கம் போல வெண்மை நிற ஒளி வீசும். வெறும் கண்களாலேயே பார்க்கலாம் பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படாமல் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே கிரகணத்தை பார்க்கலாம். கடற்கரைகளில் கிரகணம் இன்னும் சற்று தெளிவாகத் தெரியும் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடற்கரைகளுக்கு அழைத்து சென்றும் கிரகணம் பற்றிய புரிதலை ஏற்படுத்தலாம்.

 குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்

அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் வானியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக அறிவியல் இயக்கம் சார்பில் விளக்கக் கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வளர் தலைமுறையினருக்கு கிரகணம் தொடர்பான புரிதலை ஏற்படுத்த பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சரியான முறையில் அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

வானியல் நிகழ்வை பார்த்து மகிழுங்கள் கிரகணம் என்றாலே தோஷம் என்று பார்க்கப்படும் நிலை இனியேனும் மாற அவை தொடர்பான அறிவியல் காரணங்கள் மிக முக்கியம். எனவே மக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் குடும்பதோடு குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சூப்பர் மூனைக் காட்டி விளக்க வேண்டும்.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

பார்ப்பனர்கள்


*பார்ப்பன சாம்ராஜ்யம் 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்*
*(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பன..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பன..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.
பாரப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரபிரதேசம்.
பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.
பார்ப்பன..ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.
பார்ப்பன...அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பார்ப்பன....
பொருளாதாரத்தில் பார்ப்பன...பின்தங்கிய மாநிலம் := கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.
பார்ப்பன...அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.
பார்ப்பன MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரபிரதேசம்
லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%
ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%
பார்ப்பன கவர்னர்கள் := 50%
பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%
மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பன...54%
இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன....62%
பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன...70%
பல்கலைக்கழகங்களில் பார்ப்பன வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%
சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%
ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%
வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனர்தள் := 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பன...மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%
வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%
ஏர்லைன்ஷ் சில் பார்ப்பனர்கள் := 61%
IAS ல் பார்ப்பனர்கள் := 72%
IPS ல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%
CBI மற்றும் Custom சில் பார்ப்பனர்கள் := 72%
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்*
இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!

திங்கள், 29 ஜனவரி, 2018

வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர் வேதங்களை ஆதரித்தாரா?
அம்பேத்கரை திரிபுவாதம் செய்யும் பிஜேபி
வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்
இது உண்மையா?
வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறுவதைக் கேளுங்கள்
நியமம் அல்லது சடங்குகளின் கோர்வையாக ஆரியர்களின் மதம் இருந்தது. சிறந்த வாழ்ககை வாழ வேண்டும். ஒழுக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரிய மதம் ஆகிவிட்டது.
ரிக் வேதத்தில் இருக்கும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்
இந்தப் பாசுரங்கள் ஆரியர் தம் கடவுளைப் போற்றிப் பாடியவை.
எதைக் கேட்பதற்குப் பிரார்த்தனை செய்தனர்?
ஆசைகளிலிருந்து விடுவிக்கும்படி வேண்டினார்களா?
தீமைகளிலிருந்து நீக்கும்படி வேண்டினார்களா?
பாவமன்னிப்பு கேட்டார்களா?
இந்திரனைப் போற்றிப் புகழ்வதாக அமைந்தவை இந்தப் பாசுரங்கள்.
ஆரியர்களின் எதிரியை அழித்ததற்காக – கிருஷ்ணன் என்னும் அசுரனின் கர்ப்பிணி மனைவியை அவன் கொன்றதற்காக
அசுரர்களின் நூற்றுக்கணக்கான கிராமங்களை நாசப்படுத்தியதற்காக
பாராட்டு தெரிவிக்கின்றன.
இலட்சக் கணக்கான தஸ்யூக்களை அழித்ததற்காக இந்திரனை அவை போற்றுகின்றன.
அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும் அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும்
அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்ந்தார்கள்.
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரியமதம் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது
என்கிறார் அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 7 பக்கம் 40
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
என்று மிகத் தெளிவாக அண்ணல் குறிப்பிட்டிருந்தும் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அண்ணல் அம்பேத்கர் வேதங்களைப் பாராட்டினார் என்று பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது புரிகிறதா? இல்லையா?

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கோவிந்தா, கோவிந்தா


முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடும் போதும், சாமியைக் கும்பிடும் போதும் அரோகரா, அரோகரா, என்று கூச்சலிடுவதைப் பார்க்கலாம். அதே போல, பெருமாள் கோவில்களில் சாமியை பாடையில் தூக்கி வரும் போதும், சாமியைக் கும்பிடும் போதும் கோவிந்தா, கோவிந்தா, என்று அலறுவதை பார்க்கலாம்... 
நீங்கள் புதிதாக ஒரு வீடோ, அல்லது ஒரு கடையோ புதிதாகத் திறக்கும் போது, உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்கள் மேல் பக்தி( மரியாதை) உள்ளவர்கள் யாரேனும் கோவிந்தா, கோகோவிந்தா. என்றோ அரோகரா..அர அர அரோகரா என்று கூடி வாழ்த்தினால், கோபப்படுவீர்களா, அல்லது மகிழ்ச்சி அடைவீர்களா? 
டேய் வாய மூடரா, நல்லவார்த்தையே வராதா என்று தானே சொல்லுவீர்கள்? கோவிலில் நல்ல வார்த்தை, வீட்டில் எப்படி கெட்ட வார்த்தையானது

வெள்ளி, 26 ஜனவரி, 2018

கலைஞர் பக்கம் நிற்பது கடமை


"தமிழை தாக்குபவன் முதலில் குறி வைப்பது கலைஞர் கருணாநிதியை தான்".. ஏன்??
ஏனென்றால், அவர்களால் "நீச பாஷை" என கேவலப்படுதபட்ட, இழிவுப்படுதபட்ட தமிழ் மொழியை, தான் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது,
ஆலய வழிப்பாட்டில் தமிழ் - சட்டத்தின் மூலம் செயல்படுத்தினார்...
தமிழ்த் தாய் வாழ்த்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார்...
இசை மேடைகளில் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு சார்பில் உதவிகள் பல செய்தார்..
தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் அமைத்தார்..
பல தமிழ் புலவர்கள், அறிஞர்களுக்கு நினைவு சின்னங்கள் அமைத்தார்...
பல தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்கி உதவினார்..
தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை துவக்கினார்...
தமிழ் இணைய பல்கலைகழகம் துவக்கினார்...
1970ஆம் ஆண்டிலேயே தமிழ் நாடு பாடநூல் கழகம் மூலம் கம்ப்யூட்டர் & எலக்ட்ரானிக்ஸ் குறித்த விஞ்ஞான நூல்களை தமிழில் அறிமுகப்படுத்தினார்..
"தமிழ் யூனிகோட்" எழுத்துருவை, கம்ப்யூடருக்கு பொதுவான எழுத்துருவாக அதிகாரப்பூர்வ அறிவித்தார், இதினால்தான் இணையத்தில் தமிழின் பயன்பாடு சுலபமாகியது.. பரவலாகியது..
கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைவரும் கற்க, தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களை அறிமுகம் செய்தார்..
தமிழ் வழி படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு அளித்தார்..
தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்றினார்...
வணிகநிறுவனகளின் பெயர்பலகையில் தமிழ் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றினார்...
தமிழ் மொழிக்காய் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தார்...
மொழிப்போர் தியாகிகளுக்கு அரசு வேலை, பென்ஷன் போன்றவற்றை அளித்தார்..
நீதிமன்றங்களில் தமிழையும் ஒரு வழக்காட்டு மொழிக்க வழிவகுத்தார்..
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தார்....
திருக்குறள் வளர்சிக்கு பல உதவிகள் செய்தார், திருவள்ளுவர் புகழ் பாடும், வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை போன்றவற்றை அமைத்தார்...
திருவள்ளுவர் தினத்தை அறிவித்தார்..
உலக தமிழாராய்ச்சி நூல்நிலையம் அமைத்தார்..
தமிழிசை பண்ணாராய்ச்சி மையம் அமைத்தார்..
தமிழ்வளர்ச்சித்துறை என்று தனி அமைச்சகம் கண்டார்...
இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்...எந்த ஒரு முதல்வரையும் விட, தமிழுக்கு, அதின் வளர்ச்சிக்கு அதிகம் பாடுபட்டவர் கலைஞரே....
எனவே, தமிழ், தமிழர் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும், சோ.சாமி, சு.சாமி, குருமூர்த்திகள், எச்.ராஜாக்கள், தினமலர் கும்பல், குமுதம் வரதராஜன், தினமணி வைத்தியநாதன், பாண்டேக்கள் போன்ற ஆரிய பார்ப்பனீய சக்திகளால் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படும், "புகையையும் பகையையும் மிச்சம் வைக்ககூடாது, அழித்துவிடவேண்டும்" என்ற தீரா வன்மத்துடன் அவர்களால் எதிர்க்கப்படும், ஒரே அரசியல் தலைவர், கலைஞர் மட்டுமே...எதிர்க்கப்படும் ஒரே அரசியல் இயக்கம், திமுக மட்டுமே.....
ஆகையால், உண்மையான தமிழர்கள், திராவிடர்கள் அனைவரும் திமுக & கலைஞர் பக்கம் நிற்பது கடமையல்லவா...

புதன், 24 ஜனவரி, 2018

சங்கர மடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்!

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க கி. வீரமணி வலியுறுத்தல்

 தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் அவமதித்த விஜயேந்திரர்..கொந்தளித்த தமிழ் ஆர்வலர்கள் சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கி. வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர் ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல் இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார். ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்துஇ புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால் வெளியில் நடமாடும் இவர் அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில்இ தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூடஇ எழுந்து நிற்க மறுத்து
 அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது? இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?

தமிழ் நீஷ பாஷை - சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் - கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்? தள்ளாத வயதில்கூட கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில்இ கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும் நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை பேதத்தன்மை இவர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்! தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை - தமிழர்கள் புரிந்துகொள்வார்களா - அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட? தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்! இவ்வாறு வீரமணி வலியுறுத்தியுள்ளார்.


விஜயேந்திரனின் கொழுப்பு



தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனர்கள் தமிழில் பேசினாலும் தமிழையே வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் தமிழைத் தமது தாய்மொழியாகக் கருதுவதில்லை. செத்துப்போன சமஸ்கிருதத்திற்குக் கொடுக்கும் மரியாதையை சீரிளமைத் திறத்தோடு விளங்கும் தமிழுக்குத் தருவதில்லை.

காஞ்சி சங்கராச்சாரி தமிழில் பேசினால் தீட்டு என்று கருதுபவர். தப்பித் தவறித் தமிழில் பேசிவிட்டால் தீட்டாகிவிட்டது என்று கூறி உடனே குளிக்கக் கூடியவர். தமிழில் பத்திரிகை நடத்தி தமிழால் பிழைப்பு நடத்தும் தினமலர்ப் பார்ப்பான் சமஸ்கிருதம் செம்மொழி ஆக அறிவிக்கப்பட்டதை வரவேற்றான். ஆனால் தமிழ் செம்மொழி ஆனால் வீட்டு;க்கு வீடு பிரியாணி வருமா என்று கேட்டான்.

தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திய துக்ளக் பார்ப்பான் தமிழ் படித்தால் சட்டி சுரண்டும் வேலைக்குக்கூடப் பயன்படாது என்று சொன்னான்.

 படிப்பறிவில்லாத பார்ப்பான் கூட தமிழில் கோயில்களில் அர்ச்சனை செய்ய வேண்டுமென்றால் கூடவே கூடாது என்பான். சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமி என்ற முதியவரை அங்குள்ள தீட்சதப் பார்ப்பான்கள் அடித்து கையை முறித்துப் போட்டார்கள்.

அப்படிப்பட்ட பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு எச்.ராஜா என்ற எச்சக்கலைப் பார்ப்பான் இன்று தமிழ்நாட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறான். அவன் தமிழில் பேசினாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் தமிழுக்காக என்றும் குரல் கொடுக்க மாட்டான். ஏனெனில் அவனது பூர்வோத்திரம் பீஹார் ஆகும். அவனது தந்தை ஹரிஹர சர்மா என்பவர் தமிழ் - சமஸ்கிருத அகராதியை எழுதி இருக்கிறார். அந்த நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து நடந்திருக்கிறது. அப்போது அனைவரும் எழுந்து நிற்க அதில் கலந்துகொண்ட இளைய சங்கராச்சாரி விஜயேந்திரன் மட்டும் எழுந்திருக்காமல் அப்படியே இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் விழா முடிந்து தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நின்றிருக்கிறார். இது எவ்வளவு பெரிய கொழுப்பு? தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நின்ற நபரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்க முடியாதா?
காரணம் என்ன? தமிழுக்கு நாம் ஏன் மரியாதை அளிக்க வேண்டும் என்ற திமிர்தானே இதற்குக் காரணம்? திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் தேசிய அவமதிப்பு என்று நீதிமன்றமே கூறும்போது அதே சட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காவிட்டால் குற்றம் என்று சொல்லாதா? அப்படி எழுந்து நிற்காத, சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கிய சொர்ணமால்யா புகழ் விஜயேந்திரனுக்கு அது பொருந்தாதா?

வைரமுத்து ஏதோ ஆண்டாளைப் பற்றிச் சொல்லி விட்டார் என்பதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று துள்ளிக் குதிக்கும் பார்ப்பனர்கள் இந்த சங்கராச்சாரியை மன்னிப்புக் கேட்கச் சொல்வார்களா?

வைரமுத்து தலை இந்நேரம் உருண்டிருக்க வேண்டாமா? என்று காட்டுக்கத்தல் கத்திய எச்சராசாவிடம் இது பற்றிக் கேட்டதற்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்று அலட்சியமாகச் சென்றிருக்கிறார்.

எனவே, தமிழர்களே! பார்ப்பான் என்றைக்கும் தமிழுக்கோ தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்கோ எதிரிகள்தான். அவர்களது வலையில் சிக்கி சீரழியாதீர்!

வைரமுத்து அவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லும் பார்ப்பனர்களே! தமிழையும் தமிழ் இனத்தையும் இழிவுபடுத்தும் சங்கராச்சாரியும் பார்ப்பனர்களும் மன்னிப்புக் கேட்பது எப்போது?

சமாளிக்கவே தியானம்