* பிஎம்எஸ்// லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
* பிஎம்எஸ்// லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 2 மே, 2017
திங்கள், 30 ஜனவரி, 2017
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
அம்பேத்கரை திரிபுவாதம் செய்யும் பிஜேபி
வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்
இது உண்மையா?
வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறுவதைக் கேளுங்கள்
நியமம் அல்லது சடங்குகளின் கோர்வையாக ஆரியர்களின் மதம் இருந்தது. சிறந்த வாழ்ககை வாழ வேண்டும். ஒழுக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரிய மதம் ஆகிவிட்டது.
ரிக் வேதத்தில் இருக்கும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்
இந்தப் பாசுரங்கள் ஆரியர் தம் கடவுளைப் போற்றிப் பாடியவை.
எதைக் கேட்பதற்குப் பிரார்த்தனை செய்தனர்?
ஆசைகளிலிருந்து விடுவிக்கும்படி வேண்டினார்களா?
தீமைகளிலிருந்து நீக்கும்படி வேண்டினார்களா?
பாவமன்னிப்பு கேட்டார்களா?
இந்திரனைப் போற்றிப் புகழ்வதாக அமைந்தவை இந்தப் பாசுரங்கள்.
ஆரியர்களின் எதிரியை அழித்ததற்காக – கிருஷ்ணன் என்னும் அசுரனின் கர்ப்பிணி மனைவியை அவன் கொன்றதற்காக
அசுரர்களின் நூற்றுக்கணக்கான கிராமங்களை நாசப்படுத்தியதற்காக
பாராட்டு தெரிவிக்கின்றன.
இலட்சக் கணக்கான தஸ்யூக்களை அழித்ததற்காக இந்திரனை அவை போற்றுகின்றன.
அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும் அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும்
அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்ந்தார்கள்.
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரியமதம் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது
என்கிறார் அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 7 பக்கம் 40
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
என்று மிகத் தெளிவாக அண்ணல் குறிப்பிட்டிருந்தும் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அண்ணல் அம்பேத்கர் வேதங்களைப் பாராட்டினார் என்று பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது புரிகிறதா? இல்லையா?
வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்
இது உண்மையா?
வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறுவதைக் கேளுங்கள்
நியமம் அல்லது சடங்குகளின் கோர்வையாக ஆரியர்களின் மதம் இருந்தது. சிறந்த வாழ்ககை வாழ வேண்டும். ஒழுக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரிய மதம் ஆகிவிட்டது.
ரிக் வேதத்தில் இருக்கும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்
இந்தப் பாசுரங்கள் ஆரியர் தம் கடவுளைப் போற்றிப் பாடியவை.
எதைக் கேட்பதற்குப் பிரார்த்தனை செய்தனர்?
ஆசைகளிலிருந்து விடுவிக்கும்படி வேண்டினார்களா?
தீமைகளிலிருந்து நீக்கும்படி வேண்டினார்களா?
பாவமன்னிப்பு கேட்டார்களா?
இந்திரனைப் போற்றிப் புகழ்வதாக அமைந்தவை இந்தப் பாசுரங்கள்.
ஆரியர்களின் எதிரியை அழித்ததற்காக – கிருஷ்ணன் என்னும் அசுரனின் கர்ப்பிணி மனைவியை அவன் கொன்றதற்காக
அசுரர்களின் நூற்றுக்கணக்கான கிராமங்களை நாசப்படுத்தியதற்காக
பாராட்டு தெரிவிக்கின்றன.
இலட்சக் கணக்கான தஸ்யூக்களை அழித்ததற்காக இந்திரனை அவை போற்றுகின்றன.
அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும் அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும்
அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்ந்தார்கள்.
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரியமதம் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது
என்கிறார் அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 7 பக்கம் 40
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
என்று மிகத் தெளிவாக அண்ணல் குறிப்பிட்டிருந்தும் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அண்ணல் அம்பேத்கர் வேதங்களைப் பாராட்டினார் என்று பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது புரிகிறதா? இல்லையா?
சனி, 17 டிசம்பர், 2016
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி
தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி ஜாதியை ஒழிக்க முடியாது. நமது நாட்டில் சமத்துவம் வராது என்று அடித்துச் சொல்கிறார்.
இவர் RSS ன் குருநாதராகச் செயல்படக் கூடியவர். இவர்தான் விவேகானந்தர் ரதத்தை பள்ளிகளுக்குக் கொண்டு செல்கிறார். அந்த விவேகானந்தர் ஜாதி அழியக்கூடாது. ஜாதியை அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார். நம்மBMS போற்றிப் புகழும் திலகர் இந்த நாட்டிற்கு மனுதர்மம்தான் சட்டமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
நம்ம BMS என்ன சொல்கிறதென்றால் அரசனுக்கு சட்டம் இயற்றும் உரிமை இருக்கக் கூடாது. அந்த அதிகாரம் ரிஷிகளிடத்திலும் முனிவர்களிடத்திலும் விடப்பட வேண்டும் என்கிறது.(ஆதாரம் அக் 2001BMS சங்கமடல்)
அந்த ரிஷிகளும் முனிவர்களும் எழுதிய ஸ்ருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் திலகர் சொல்லும் மனுதர்மத்திலும் மனித குலத்தை நான்கு வருணங்களாகப் பிரித்துள்ளனர். அதில் பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன் தொடையில் பிறந்தவன் வைசியன்ää காலில் பிறந்தவன் சூத்திரன் என்று கூறப்பட்டுள்ளது. இது எதிலும் சேராத அய்ந்தாவதாக ஒரு பிரிவு இருக்கிறது. அது பஞ்சமன் என்று அழைக்கப்பட்ட பள்ளர் பறையர்ää சக்கிலியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்கள். அவர்கள் எங்கே பிறந்தார்கள் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.
தந்தை பெரியாரிடத்தில் ஒருவர் கேட்டார் இவர்கள் எங்கே பிறந்தார்கள் என்று. அதற்கு அவர் சொன்னார் “இவர்கள்தான் உண்மையாக மனிதன் எங்கே பிறக்க வேண்டுமோ அங்கே இயற்கையாக முறையாக அவர்கள் அப்பா அம்மாவுக்குப் பிறந்தவர்கள்” என்றார்.
சூத்திரன் என்பவர்கள் யாரென்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று மனுதர்மம் அத்தியாயம் எட்டு சுலோகம் 415 சொல்கிறது.
இதனால்தான் நம்முடைய மக்களை அது ஜமீன்தாராக இருந்தாலும் மிட்டா மிராசாக இருந்தாலும்; அவர்களை அய்ந்து வயதுப் பார்ப்பனச் சிறுவன் டேய் குப்புசாமிää டேய் முத்துசாமி என்று ஏகவசனத்தில் கூப்பிட்டான். சூத்திரப்பயலே தள்ளிப்போடா என்றான். இதைப் பார்த்து யாருக்கும் ரோஷம் வரவில்லை. மாறாக தங்களுக்குக் கீழே பஞ்சமர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டு அய்ந்து வயது பிற்படுத்தப்பட்ட சிறுவன் அறுபது வயது தாழ்த்தப்பட்ட முதியவரை வாடா கருப்பாää வாடா முனியா என்று அழைத்தான். இது அவமானம் இல்லையா? இந்த அவமானத்தை ஒழிக்கத்தான் தந்தை பெரியார் தன்மான இயக்கம் கண்டார்.
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்றார் பெரியார். ஆங்காங்கே அடித்தார்கள். பார்ப்பான் சூத்திரன் என்று அழைப்பதை நிறுத்தினான். சூத்திரப்பட்டம் ஒழிந்தது. ஆனால் அந்த மிட்டா மிராசுகள் ஜமீன்தார்கள் தங்களுக்குக் கீழே பள்ளன் பறையன் இருக்க வேண்டும் என்றார்கள். பெரியார் அவர்களைப் பார்த்துக் கேட்டார் “உங்களைப் பார்ப்பான் சூத்திரன் என்று அழைக்கக் கூடாது என்கிறீர்களே, உங்களுக்குக் கீழே தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களே! உங்களது சூத்திரப்பட்டம் போக வேண்டும் என்றால் அவர்களது பறையன் பட்டமும் போக வேண்டும். பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது” என்று சொன்னார். அதனால் பள்ளன் பறையன் பட்டமும் ஒழிந்தது. இன்று ஜாதியைப்பற்றிப் பேசும் துணிச்சல் யாருக்கும் இல்லை.
இப்படி தந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட மனுதர்மத்தை சூத்திரப்பட்டத்தை பறையன் பள்ளன் என்ற பட்டத்தை மீண்டும் கொண்டுவரவே RSS சங்பரிவார் துடிக்கிறது. அதனுடைய வெளிப்பாடே குருமூர்த்தியின் இந்த ஆணவப் பேச்சு. அந்த RSS சினுடைய வால்தான் BMS. அந்த அமைப்புக்களைத் தூக்கிப்பிடிக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சகோதரர்களே! இவர்கள் சொல்லும் மனுதர்மம் சட்;டமானால் மறுபடியும் பார்ப்பான் நம்மை சூத்திரன் என்று அழைக்க மாட்டானா? பஞ்சமன் என்று ஒதுக்கி வைக்க மாட்டானா? அந்த சூத்திர பஞ்சமப் பட்டத்தை மீண்டும் நம் மக்கள் சுமக்க வேண்டுமா? சிந்திப்பீர்
திங்கள், 28 நவம்பர், 2016
நாட்டை ஆள்வதைப் பெருமைக்குரிய விஷயமாக செருப்புத் தைக்கிறவர்களுக்குச் சொல்லாமல் செருப்புத் தைப்பதைப் பெருமைக்குரிய விஷயமாகச் சொல்வது ஏன்?
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சகத்தையே நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது என்றால் அது பிஎம்எஸ்தான். கடந்த ஆண்டு விவேகானந்தர் ஜெயந்தி(?)யைக் கொண்டாடியது. நிர்வாகமும் ~பாரதமே உயிர்த்தெழு| என்ற பெயரில் நூல் வழங்கியது. அதனை விமர்சனம் செய்து நாம் கூட்டம் நடத்தி துண்டறிக்கைகள் வெளியிட்டோம். அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நிர்வாகமும் பிஎம்எஸ்சும்தான்.
ஆனால் பாரத தொழிலாளர் கழகம், விவேகானந்தர் நல உரிமைச்சங்கம் ஆகிய பெயர்களில் மோடியையும் விவேகானந்தரையும் உயர்த்;தியும்; பாராட்டியும் பெரியார் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தியும் துண்டறிக்கை வந்தது.
விவேகானந்தர் புத்தகத்திலுள்ள கருத்துக்களுக்கு அறிவுநாணயமான பதிலோ மறுப்போ வரவில்லையே ஏன்? இந்த பா.தொ.கää வி.ந.உ எல்லாம் யாரு? எங்கே ஒளிஞ்சிருந்தாங்க? ஜெயலலிதாவுடைய ளயசநந க்குப் பின்னால் ஒளிஞ்சிக்கிட்டு தமிழக அரசும் விவேகானந்தர் விழாக் கொண்டாடுகிறது என்று சொன்னது ஏன்? அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இந்த ஆண்டும் விவேகானந்தர் ஜெயந்தி என்பது பித்தலாட்டமா? இல்லையா?
எதற்காக இந்த நாடகம்?
சாதாரணமாக எங்கள் விமர்சனத்துக்குப் பதில் சொல்லக்கூட வக்கற்று பல முகமூடிகளை அணியும் நீங்கள், காந்தியைக் கொன்ற கோட்ஷேவை உங்கள் ஆள் என்று எப்படிச் சொல்வீர்கள்?
தாய்ää தந்தை மற்றும் சகோதரர், சகோதரியுடன் உள்ள உறவை வெளியிடத் தயங்குவோர் பிறப்பில் ஒழுக்கம் இருக்குமோ? தான் சார்ந்திருக்கும் சங்கத்தின் பெயரை மறைத்து வேறு பெயரில் ஒளிந்துகொண்டிருப்பவர் செயலில் நேர்மை இருக்குமோ?
அந்த நேர்மையும் அறிவுநாணயமுமற்ற பிஎம்எஸ் இந்த ஆண்டு விவேகானந்தர் விழாக் கொண்டாட அருகதையுண்டோ? அப்படி அருகதை இருப்பதாக நீ கருதினால் கடந்த ஆண்டு கேட்ட வினாவுக்குக் கூட விளக்கம் வேண்டாம். தற்பொழுது அதன் தொடர்ச்சியாகத் தொடுக்கும் வினாவுக்கு விடை சொல்:
~பாரதமே உயிர்த்தெழு| நூலில் பக்கம் 155ல் ~நீங்கள் ஒரு நாட்டை ஆள்பவராக இருக்கலாம். நான் ஒரு ஜோடி பழைய செருப்பைத் தைக்கலாம். அதற்காக நீங்கள் உயர்ந்த ஜாதியாகிவிட மாட்டீர்கள். உங்களால் எனது செருப்பைத் தைக்க முடியுமா? என்னால்தான் நாட்டை ஆள முடியுமா? நான் செருப்புத் தைப்பதில் வல்லவனாயிருக்கலாம். நீங்கள் வேதம் படிப்பதில் நிபுணனாக இருக்கலாம். அதற்காக என் மீது ஏறி மிதிக்க வேண்டுமா?| என்று கேட்கிறாரேää அதன் பொருள் என்ன? ஜாதி நல்லது. ஜாதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதானே?
நாட்டை ஆள்வதைப் பெருமைக்குரிய விஷயமாக செருப்புத் தைக்கிறவர்களுக்குச் சொல்லாமல் செருப்புத் தைப்பதைப் பெருமைக்குரிய விஷயமாகச் சொல்வது ஏன்? இதுநாள்வரை செருப்புத் தைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாட்டை ஆளும் பொறுப்பைக் கொடுத்து விட்டு நாட்டை ஆள்பவர்களை செருப்புத்; தைக்கச் சொல்லலாமே! ஏன் அதனைச் சொல்லவில்லை?
உங்கள் குருநாதர் திலகர் சொன்னதுபோல இந்த நாட்டுக்கு மனுதர்மத்தைச் சட்டமாக்கி பிராமணர்களை நாட்டை ஆளச் செய்து விட்டு அல்லது மோடி போன்ற பிராமண தாசர்களை பிராமணர்களின் ஆலோசனைப்படி ஆளச்செய்து ää செக்காட்டுபவனும்ää துணி வெளுப்பவனும்ää முடி திருத்துபவனும்ää செருப்புத் தைப்பவனும்ää சாக்கடை அள்ளியவனும்ää விவசாயியும்ää மீனவனும்ää குயவனும்ää கொல்லனும்ää ஆசாரியும்ää கள்ளனும்ää கவுண்டனும்ää வன்னியனும்ää நாடானும்ää பள்ளனும்ää பறையனும் அவனவன் குலத்தொழிலையே செய்து செத்து மடிய வேண்டும் நாட்டை ஆள ஆசைப்படக் கூடாது என்பதுதானே அதில் உள்ளடங்கி இருக்கிறது?
பிஎம்எஸ்ஸே! இப்பொழுதும் அறிவுநாணயம் இருப்பதாக நீங்கள் சொல்வீர்களானால் இந்தக் கேள்விக்கு திருடனைப் போல் முகமூடி அணியாமல் நீயே நேரடியாக பதில் அளித்து விட்டு விவேகானந்தர் 151வது பிறந்தநாள் என்ன? 1500வது பிறந்தநாள்கூடக் கொண்டாடு! இல்லையேல் வாலைச் சுருட்டிக் கொண்டு வடநாட்டுக்கு ஓடு! மோடி முகமூடியும் நீ அணியும் பாதொகää விநஉ முகமூடியும் ஒன்றுதான். அனைத்து முகமூடிகளையும்; பெரியார் தந்த அறிவாயுதத்தால் கிழித்தெறிவோம்! எச்சரிக்கை!
எஜமான விசுவாசத்தைக் காட்டும். BMS
BMS ன் பித்தலாட்டத்தை உணர்ந்த மூத்த ஊழியர்கள் 1996க்குப் பிறகு அதனை அடித்து விரட்டினார்கள். இளைய ஊழியர்களுக்கு இவர்களின் பித்தலாட்டம் தெரியாது என்று கருதி;க்கொண்டு பழைய புராணக் குப்பைகளைக் கிளறி வயிறு வளர்க்கும் பிரசங்கிபோல பித்தலாட்ட வேலையில் இறங்கியுள்ளது BMS
. BJP ஆட்சியில் இ;ல்லாதபோது வீராவேசமாக சண்டப்பிரசண்டம் செய்வதும் BJP ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தகிடுதத்த வேலை செய்த அந்த ஆட்சியைக் காப்பாற்ற எந்தத் தில்லுமுல்லு வேலை செய்தும் தன் எஜமான விசுவாசத்தைக் காட்டும். உதாரணத்திற்கு கடந்த ஆண்டு நடந்த செப்டம்பர் 2 வேலைநிறுத்தம். எல்லா சங்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடினால் அதில் கலந்துகொள்ளாமல் நான் தனியாகப் போராடுகிறேன் என்பார்கள்.
வருங்கால வைப்புநிதியில் கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து பெங்களுரு நகரமே கொதித்ழுந்து போராடியபோது BMS ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.
இதுபோல BHEL ல் நடைபெறும் எஜமான விசுவாசங்களில் சில. BHEL க்கு எதிராக இவர்கள் மட்டுமே சட்டப்போராட்டம் நடத்துவதுபோலவும் மற்றவர்களுக்கெல்லாம் சட்ட அறிவே இல்லை என்பதுபோலவும் புருடாக்களை அவிழ்த்து விடுகிறது BMS. எத்தனையோ சங்கங்கள் வழக்குப் போட்டு பல வழக்குகளில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு2nd BATCH வழக்கு. அதனால் அந்த 2nd BATCH ஊழியர் மட்டுமல்லாது எதிர்கால தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர்.
ஆனால் இந்த புருடா மன்னர்கள் போடுகின்ற வழக்கில் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதைவிட நாங்கள் வழக்குப் போட்டுள்ளோம் என்று சொல்லி ஓட்டுக் கேட்க மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் போட்ட வழக்குகளால் இதுவரை யாருக்காவது எந்தப் பலனாவது கிடைத்திருக்கிறதா?
எந்த வழக்கிலும் வெற்றி பெறுவதுபோல் இருந்தாலும் அது நிர்வாகத்தை எந்த விதத்திலும் பாதி;க்காத வகையில்தான் இருக்குமே தவிர தொழிலாளி யாருக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டிருக்காது. இவர்கள் போட்ட அனாமலி வழக்கில் எத்தனை பேருக்கு லாபம்? அதே மாதிரி சர்வீஸ் வெயிட்டேஜ் வழக்கால் பலன் அடைந்தவர் யார்?
CONSOLIDATED WAGE வழக்கையும் 2.5 இன்கிரிமென்ட் வழக்கு இரண்டையும் ஒரே வழக்காக இணைத்துப் போட வேண்டிய அவசியம் என்ன? இது தோற்றுவிடும் என்று தெரியும். நிர்வாகமே இவர்களுக்கு வழியைச் சொல்லிக் கொடுத்து இவர்களை வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. வழக்குப் போட்டிருக்கிறேன் வழக்குப் போட்டிருக்கிறேன் என்று சொல்லி பிரச்சாரம் செய்து ஒரு நல்ல தொகையையும் வசூல் செய்த பிறகு வழக்கு தோற்று விட்டது என்று கூறுவதற்குப் பதிலாக சாதகமாக தீர்ப்பு இல்லை என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
எனவே, இதனால் எந்தத் தொழிலாளிக்கும் பலனில்லை. வடிவேலு பாணியில் நாங்களும் கேஸ் போட்டிருக்கிறோம், நாங்களும் கேஸ் போட்டிருக்கிறோம் என்ற பிரச்சாரத்துக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர வேறு ஒன்றும் ஆகப் போவதில்லை.
கடந்த 1997 WAGE REVISION போது பங்குபெறும் சங்கமாக இருந்தது BMS அன்று ஆட்சியில் இருந்ததும் BJPஅதனால் 5 ஆண்டு ஊதிய ஒப்பந்தமானது பத்து ஆண்டாக ஆனது. அதேபோல இப்பொழுதும் மத்தியில் BJPஇருக்கிறது. இந்த நேரத்தில் BMS ஜெயிக்குமானால் 10 ஆண்டு என்பது 15 ஆண்டாகவும் ஆகலாம். இருபது ஆண்டாகவும் ஆகலாம். எனவே, வரும் தேர்தலில் BMS அய் ஓரங்கட்டுவதன் மூலமே நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!!
தொழிலாளர்கள் மனுதர்மத்தின்படி சூத்திரர்கள்
நம்நாட்டில் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டுக்கும் ஒவ்வொரு கடவுள். கல்விக்கு சரஸ்வதியாம். செல்வத்துக்கு இலட்சுமியாம். வீரத்துக்குப் பார்வதியாம். இவர்களில் யார் ஒஸ்த்தி என்று குஸ்தி போட்ட சினிமாக்கூட வந்தது. சரஸ்வதி சபதமாம்.
இந்த இலட்சுமி கடவுளாக இருந்தும் நம் நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. கலைஞர் ஆட்சியில்தான் 1989ல் தகப்பன் சொத்தில் பெண்பிள்ளைக்கும் பங்குண்டு என்று சட்டம் போட்டார். அதற்கு அடிப்படை பெரியார் 1929ல் மாநாடு போட்டு பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று போட்ட தீர்மானம்தான். சரஸ்வதி கல்விக் கடவுளாக இருந்த நாட்டில் சரஸ்வதி என்று பெயர் வைத்திருந்த பாட்டி கைநாட்டு. அவள் பேத்தி இன்று கம்ப்யூட்டர் எஞ்சினியர்.
அது மாதிரி தொழிலாளர்களாகப் பிறந்த பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட எவருக்கும் படிப்பு இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இரண்டு பிரிவிலும் பணக்காரன் எவனுமில்லை. இன்றைக்கு வந்திருக்கும் படிப்பும் பணமும் கண்டிப்பாக சரஸ்வதியின் தயவாலோ இலட்சுமியின் தயவாலோ வந்ததல்ல.
நம்நாட்டில் தொழிற்சாலைகள் என்பது அண்மைக் காலமாகத்தான் உருவாகியிருக்கிறது.
அத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களை நாம் தொழிலாளி என்கிறோம். தொழிற்சாலைகள் வருவதற்கு முன்பும் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்கள் ஜாதித் தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். வண்ணார், நாவிதர் குயவர் ஆசாரி பொற்கொல்லர் தட்டார், சக்கிலி, தோட்டி, பள்ளர், பறையர் ஆகிய அனைவரையும் இன்னமும் கிராமங்களில் தொழிலாளி என்றுதான் அழைப்பார்கள்.
அந்தத் தொழிலாளர்கள் மனுதர்மத்தின்படி சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்று மனுதர்மம் எட்டாவது அத்தியாயம் சுலோகம் 415 சொல்கிறது.
மன்னராட்சிக் காலத்தில் தொழிலாளர் எவரும் படிக்கவும் கூடாது. செல்வம் வைத்துக்கொள்ளவும் கூடாது. படித்தால் நாக்கை அறுப்பான். செல்வம் வைத்திருந்தால் அதனைப் பிடுங்கிக் கொள்வான். இவையெல்லாம் மனுதர்மத்தில் உள்ள விதியின்படி. அந்த மனுதர்மத்தின்படி தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை. அவன் கெட்டியான ஓடு போட்ட வீடு கட்டிக் கொள்ளக் கூடாது. நல்ல துணிமணி உடுத்தக்கூடாது. பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது. ஆண்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது. இவைதான் அன்றைக்கு சட்டம்.
இந்தத் தத்துவம் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. அதனால்தான் எஞ்சினியர், சூப்பர்வைசர் எல்லோரும் நிரந்தரமாக எடுக்கப் படும்போது தொழிலாளி மட்டும் தற்காலிகமாக எடுக்கப் படுகிறார்கள். இதை நியாயப் படுத்துவதற்குத்தான் ஆயுதபூஜை என்பதே நாட்டில் அறிமுகமானது.
இந்த பூஜை போடுவதால் தொழிலாளிக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. தற்காலிகம் என்பது ரத்தாகாது. தற்காலிகக் காலம் முடிந்தவுடன் எழுத்துத் தேர்வு செய்முறைத்தேர்வு என்பது ஒழியப் போவதில்லை. ஆயுதபூஜை போடுவதால் வராத ஆர்டர்கள் வந்து குவியப் போவதில்லை.PRP என்ற பெயரில் அள்ளிக்கொள்ளும் அதிகாரிகளைப் போல் தொழிலாளிக்கும் இலாபத்தில் பங்கு கிடைக்கப் போவதில்லை.
இந்த ஆயுதபூஜை என்பது முட்டாள்தனத்தையும் மூடத்தனத்தையும் மூலதனமாகக் கொண்டது. எனவேää இந்த அர்த்தமற்ற ஆயுதபூஜையைக் கொண்டாடாதீர்! என்றென்றும் நிரந்தர அடிமையாகாதீர்!
பிஎம்எஸ் _ம் நிர்வாகமும் நாணயமாக நடந்துகொள்வார்களா?
1977ல் நடந்த பங்குபெறும் சங்கத் தேர்தலில் சி.அய்டியு , தொமுச, பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன். அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகியவை வெற்றி பெற்றன. அதற்குப் பிறகு பங்குபெறும் சங்கத் தேர்தலையே நடத்தாமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது.
அதன் பின்னர் 1995ல் பங்குபெறும் சங்கத் தேர்தல் நடந்தது. அதில் பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகிய இரு சங்கங்களும் தோல்வி அடைந்தன. புதிதாக அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியனும் பிஎம்எஸ் ஸ_ம் வெற்றி பெற்றன. தோல்வியுற்ற பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகியவை தொழிலகத்தின் உள்ளேயிருந்த தங்கள் அலுவலகங்களை நிர்வாகத்திடம் ஒப்படைத்தன. வெளியில் உள்ள அலுவலகங்களை ஒப்படைக்கவில்லை.
அதில் பிஎம்எஸ்எஸ_க்கு படுகோபம். அந்த இரண்டு சங்கங்களும் நாணயமில்லாதவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள் என்ற பாணியில் பிரச்சாரம் செய்தது குடியிருந்தவனுக்கு வீடு சொந்தமா? 17 ஆண்டுகளாய் அனுபவித்துவிட்டால் அலுவலகம் சொந்தமா? டவுன்ஷிப்பில் குடியிருப்பவர்களுக்கெல்லாம் வீடு சொந்தமாகிவிடுமா என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் பில்ஸ் வெளியிட்டது பிஎம்எஸ்.
2001ல் நடந்த பங்குபெறும் சங்கத் தேர்தலில் பிஎம்எஸ் தோற்றுப் போனது. பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகியவை மீண்டும் வெற்றி பெற்றன தங்கள் அலுவலகத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டன.
ஆனால் அதில் தோற்றுப் போன பிஎம்எஸ் என்ன செய்திருக்க வேண்டும்? பாய்லர் பிளான்ட் எம்ளாயீஸ் யூனியன், அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் செய்தது தவறு என்று வாதிட்ட பிஎம்எஸ் முறைப்படி அவர்கள் அலுவலகத்தை உடனடியாகக் காலி செய்து நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டுமா இல்லையா?
அப்படிச் செய்யாமல் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனக்குச் சிறிதும் உரிமையில்லாத அலுவலகத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது. ஒழுக்கத்துக்கும் நாணயத்துக்கும் நேர்மைக்கும் தாங்கள் மட்டுமே மொத்த குத்தகைதாரர்கள் போலவும் மற்றவர்கள் எல்லாம் மோசம் என்றும் பேசியவர்களின் யோக்கியதைக்கு இதுவே தக்க சான்று.
இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. யோக்கியமும்ää நாணயமும் ஒழுக்கமும் மருந்துக்கேனும் தங்களிடம் இருந்தால் பிஎம்எஸ் தன்னுடைய அலுவலகத்தை உடனடியாக நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இப்பொழுது நடைபெறும் தேர்தலில் நியாயமாக பிரியாணி, தண்ணி தங்கக்காசு, செல்போன், வெள்ளிக்குத்துவிளக்கு, குங்குமச்சிமிழ் எதுவுமே தொழிலாளிக்குக் கொடுக்காமல் தங்கள் கொள்கைகளையும் சாதனைகளையும் மட்டுமே சொல்லி வெற்றி பெற்று இழந்த தங்கள் அலுவலகத்தை மீண்டும் பெறலாமே!
தாங்கள் மகாமகா யோக்கியர்கள் என்று நிரூபிக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பிஎம்எஸ் பயன்படுத்திக்கொள்ளுமா? பிறர் தம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதே போலத் தாமும் நடப்பதுதானே ஒழுக்கம்?
மற்ற சங்கங்களை ஒழித்துக்கட்ட பிஎம்எஸ் ஸை வளர்த்து விட்டு ஆர்எஸ்எஸ் ஸை வளர்க்கத் துணையாக இருந்த நிர்வாகம் உடனடியாக பிஎம்எஸ் ஸின் அலுவலகத்தைக் கைப்பற்றி முறையாகத் தேர்தலை நடத்த வேண்டும்.
இல்லையேல் பங்குபெறாத மற்ற சங்கங்களுக்கும் பிஎம்எஸ்எஸ_க்குக் கொடுத்துள்ள அலுவலகம் போல் அலுவலகம் ஒதுக்கித் தரவேண்டும்.
பிஎம்எஸ் ஸ_ம் நிர்வாகமும் நாணயமாக நடந்துகொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இவண்:
திதொக ஏன் பிஎம்எஸ் அய் மட்டும் எதிர்க்கிறது?
திதொக ஏன் பிஎம்எஸ் அய் மட்டும் எதிர்க்கிறது?
ஏனென்றால், அது ஒன்றுதான் மதவெறியைத் தூண்டி நாட்டில் ரத்த ஆறு ஓடச்செய்யும் RSS ன் அமைப்பு
அது ஒன்றுதான் 44 தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்கும் BJP யின் சகோதர அமைப்பு.
அது ஒன்றுதான் சாதியைப் பாதுகாக்க வேண்டும் மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று சொல்லுகிற அமைப்பு.
அது ஒன்றுதான் அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க பெல்லில் இருந்து ஆட்களை அனுப்பிய அமைப்பு.
அது ஒன்றுதான் ராமர் கோயில் கட்ட இங்கிருந்து செங்கல்லை அனுப்பிய அமைப்பு
அது ஒன்றுதான் சேதுசமுத்திரத்திட்டத்தை எதிர்க்கின்ற அமைப்பு
அது ஒன்றுதான் இஸ்லாமியரையும் கிறித்துவர்களையும் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று சொல்லும் மதவெறி அமைப்பு
அது ஒன்றுதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்புக்களில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லுகின்ற அமைப்பு.
அது ஒன்றுதான் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் புகுத்தி தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க நினைக்கும் அமைப்பு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)