*திராவிடர் தொழிலாளர் கழகம்// லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
*திராவிடர் தொழிலாளர் கழகம்// லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜனவரி, 2017

நன்றி எதிர்பாராத பெரியார் தொண்டர்னு

வீரமணி என்ன செஞ்சு கிழிச்சாருன்னு ஒரு இளைஞன் கேட்டான்
இன்னைக்கு மத்திய அரசு வேலைக்குOBC ன்னு ஒரு சான்றிதழைக்கொடுத்து வேலைக்குப் போறியே அது யாரு வாங்கிக் கொடுத்த உரிமை தெரியுமான்னேன்
தெரியாதுன்னான்
உங்க அப்பா அம்மா அதுக்காகப் போராடி ஜெயிலுக்குப் போயிருக்காங்களான்னு கேட்டேன்
இல்லேன்னான்
உங்க தாத்தா பாட்டி அதுக்காகப் போராடுனாங்களான்னேன்
அதுக்கும் இல்லேன்னான்.
அதுக்கு யாரு போராடுனதுன்னு தெரியுமான்னேன்
தெரியாதுன்னான்

நீ OBC ன்னு சான்றிதழ் கொடுத்து வேலைக்குப் போறே
உங்க அப்பா அம்மா யாரும் அதுக்காகப் போராடல
ஆனா வீரமணியோட பிள்ளைங்க யாரும் அரசாங்க வேலைக்குப் போகல
அவருதான்யா 42 மாநாடு நடத்தி 16 போரட்டங்கள் நடத்தி ஜெயிலுக்கெல்லாம் போயி இந்த உரிமைய உனக்கு வாங்கிக் குடுத்தாருன்னேன்

அப்பவும் அவன் ஒரு நன்றி கூடச் சொல்லல

என்னா வீரமணி போராடலன்னா இது கெடச்சிருக்காதான்னு எகத்தாளமாக் கேட்டான்
அப்பவும் சொன்னேன்
இந்த நன்றியக் கூட எதிர்பாராமத்தான்யா அவரு போராடுனாருன்னு சொன்னேன்
அவர் நன்றி எதிர்பாராத பெரியார் தொண்டர்னு சொன்னேன்
அப்படியான்னுட்டு அங்க இருந்து நகர்ந்துட்டான்

இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை

புதன், 25 ஜனவரி, 2017

அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருந்திருக்கும். அப்படி மனுதர்மம் என்கிற அதர்மம் மட்டும் சட்டமாகி இருந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே உங்கள் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும்தானே நிலை நிறுத்தப்பட்டிருப்பீர்கள்? நீங்கள் படித்திருக்க முடியுமா? பட்டம் பெற்றிருக்க முடியுமா? பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா? இன்றைக்கு நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வசதிகளை அனுபவித்திருக்க முடியுமா? சிந்தியுங்கள் நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை அவரையும் ஒரு தேசியத் தலைவராக அங்கீகரித்தாலே போதும் அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மட்டும் பார்க்காதீர்கள்

அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருந்திருக்கும்.

அப்படி மனுதர்மம் என்கிற அதர்மம் மட்டும் சட்டமாகி இருந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே உங்கள் நிலை என்ன?

சிந்தித்துப் பாருங்கள்!

நீங்கள் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும்தானே நிலை நிறுத்தப்பட்டிருப்பீர்கள்?

நீங்கள் படித்திருக்க முடியுமா?
பட்டம் பெற்றிருக்க முடியுமா?
பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா?
இன்றைக்கு நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வசதிகளை அனுபவித்திருக்க முடியுமா?

சிந்தியுங்கள்

நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை


அவரையும் ஒரு தேசியத் தலைவராக அங்கீகரித்தாலே போதும்

அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மட்டும் பார்க்காதீர்கள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?
துக்ளக் இதழில் (11.1.2017) வெளிவந்த பார்ப்பன அமைப்பின் விளம்பரத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
துக்ளக்கின் விளம்பரம் இதோ:
அறிமுகம்:
Website: www.BrahminsforSociety.com
Great Contributors:
தன் தியாகத்தால் நம் நாட்டுக்கு
பெருமை சேர்த்தவர்கள் /
தன் திறமையால் தானும் உயர்ந்து
பிறரையும் உயர்த்தியவர்கள்;
இது அடுத்த தலைமுறைக்கான Electronic Database
இடஒதுக்கீடு: இன்றைய தமிழ் நாடு அரசு வேலையில் நம் பங்களிப்பு 0% சதவிகிதத்திற்கு அருகில் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும் நம் குல இளைஞனை கண்டதுண்டா? இல்லை! இல்லை!! இல்லவேயில்லை!!! நம் இளைஞர்கள் சமூக நிலவரம் புரிந்து, மறுக்கப்படும் அரசு வேலையில் இருந்து விலகி இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் இப்போதைய நம் நிலை என்னவாக இருக்க வேண்டும்? ஒரு பார்வை.
குருவிக் கூட்டம்: 5-ல் மூன்று தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்துகிறார்கள். 5-ல் 2 இளைஞர் களுக்கு திருமணம் ஆவதில்லை. 10-ல் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி தன் அடையாளம் இழக்கிறது. திருமண வயது 30 தாண்டி போய் கொண்டிருக்கிறது. 50 வயதுக்கு கீழ் அரசு ஊழியர், எழுத்தாளர், ஆசிரியர், கல்வியாளர், பத்திரிகையாளர், வக்கீல்கள், நீதிபதிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அறிஞர்கள், பல துறைகளில் வல்லுநர்கள் என பொதுவாழ்வில் எவரும் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய பங்களிப்பை கொடுத்த சமூகம், இன்று  Tech  கூலிகளாக சுருங்கி விட்டோமா?
திருமணம்: லட்சம் இளைஞர்களுக்கு திருமணம் ஆகப் போவதில்லை. ஆண், பெண் விகிதாச்சாரம் மிக மிக மோசமான சரிவில் இருக்கிறது. இந்தப் பிரச்சினை அடுத்த 20 ஆண்டுகளில் நம் சமூகத்தை முழு அழிவில் நிறுத்தும். தமிழகத்தில் ஒரு குலத்தோர் மற்றும் கர்நாடக பிராமணர்கள், இதே பிரச்னைக்கு எப்படி தீர்வை நோக்கி செல்கிறார்கள் - E Book.
வெறுப்பின் நிழலில்: "My Code is My Craft"  என்று பெருமையாய் சொல்லும் Software நிறுவனத்தின் Management
கூட்டத்தில் “இங்கு இருக்கும் பிராமணர்கள் கை தூக்குங்கள்" என்றார்கள். கைகள் தூக்கப்பட்டன. "எங்களுக்கு பிராமணர்கள் தேவை இல்லை. அடுத்த
6 மாதத்தில் நீங்கள் அனைவரும் விலகலாம்" (மீன்களின் கண்ணீர்?) - வெறுப்பை எதிர் கொண்டு அதை அன்பால் வென்றவர்கள் நிஜ கதைகள்.
வைதீகத்தில் இருப்பவர்களின் இன்றைய நிலை என்ன? "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்" என்பதில் நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்.
About us  கண்ணாடியின் முன்னே, தமிழ் கல்வி (white space for next generation) நான் ஆரியனா? (ஒரு சாமானியன் பதில்) (பதில் என்ன?), நம் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகலாம் வாங்க (Business Networ...) etc...
We say "No" to Donations, "No" to membership "No" to politics, "No" to hatred against any one.
Email: contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu.
(We are in the draft version;
Looking for change agents like you to complete (y) Our mission.)
- மேலே கண்ட ஒரு பக்க விளம்பரம் 'துக்ளக்' 11.1.2017 இதழில் வெளி வந்துள்ளது!
contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu â¡ø e-mail - - மின்னஞ்சலிலிருந்து இந்த விளம்பரம்.
ஸ்ரீமான்களான பூதேவர்களே, உங்களின் இந்த அழுகை பொய் அழுகையா? அல்லது நிஜப்புலம்பலா?
இடஒதுக்கீட்டில் உங்களது மக்கள் தொகையான 3 சதவிகிதத்திற்கு மேல், 3 அல்லது 4,5 மடங்கினை இன்னமும் எல்லாத் துறைகளிலும் அனுபவித்துக் கொண்டே இப்படி ஒப்பாரியை வைத்து உங்களவா எல்லோரையும் கூட்டிடும் முயற்சியா?
குழந்தை பெற்றுக் கொள்ளவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ எந்த திராவிடன் - தமிழன் - பார்ப்பனரல்லாதான் உங்களைத் தடுத்தான்? தடுக்கிறான் இல்லையே!
குருவிக் கூட்டமாகவா உள்ளீர்கள்? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்;  பருந்துக் கூட்டமாய், வல்லாதிக்க வல்லூறுக் கூட்டமாகவல்லவா இன்றும் எங்களை அடிமைப்படுத்துகிறீர்களே, அதற்கு என்ன பதில்?
ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கவே கூடாது என்கிற மனு வேத தர்மத்தை எத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர, பஞ்சம சமுதாயத்தின்மீது சுமத்தி அவர்களை ஏர் கட்டி ஓட்டினீர்கள்?
'தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்திராதீனம் துதெய்வதம்
தன்மந்த்திரம் பிராமணாதீனம்
தஸ்மத், பிரபுஜெயத்'.
'இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.
மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது.
எனவே, பிராமணனை வணங்குவதே முதன்மை.'
- இப்படியெல்லாம் எழுதி வைத்து, மற்றவர்களை நம்ப வைத்து, இன்று வரை அவர்களது புத்தியை நீங்கள் சுவாதீனப்படுத்தி, பெரும்பான்மையான முட்டாள்தனத்தை, வெகு சிறுபான்மையான நீங்கள் ஆளுவது எந்த அளவு சரி - நியாயம்?
மற்றவர் நோய் வாய்ப்பட்டாலும் உங்களுக்கு வருமானம்; மரணமடைந்தாலும் தொடர் வசூலுக்குப் பஞ்சமில்லை - அதுவும் "முதல் போடா பக்தி வியாபாரம்", கன ஜோராக நடப்பதை ஏனோ வசதியாக மறந்தீர் அல்லது மறைத்தீர்? விதைக்காது விளையும் கழனி என்று அறிஞர் அண்ணா உங்களைப்பற்றி அழகாகச் சொல்லியுள்ளாரே!
இப்போது எம்மக்களுக்கு சிறிது மாறுதல் என்ற வுடன் இப்படி ஒரு பொய் அழுகையா? புலம்பலா? வெறுப்பின் நிழல் அல்ல; நெருப்பின் சூடு எங்கள் சமுதாய உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு காட்டமாக இருந்தது என்பதற்கு இதிகாச கால ஏகலைவனும், சம்பூகனும், பிற்கால நந்தன்களும் சாட்சியங்கள் அல்லவா? வெறுப்பின் நிழலில் இவாள் நிற்கிறார்களா? பொறுப்பின்மையால் புலம்புகின்றனர்! எங்கள் தாய் மார்களை "தேவடியாள்களாக" மானமிழக்கச் செய்து, எங்களை தாசி மக்கள் - வேசி மக்களாக இன்னமும் எழுதியுள்ள நீங்கள் வெறுப்பைப் பற்றி வேதாந்தப் பாடம் எடுப்பது என்னேகொடுமை! என்னே தலைகீழ் நிலைமை!!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியும் உங்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே - எங்களை சூத்திரன் பஞ்சமன் என்று சொல்லி, நாங்கள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும், செத்து விடும் என்கிறீர்களே, நீங்களா திருந்தி விட்டீர்கள் - மாற்றம் பெற்றுள்ளீர்கள்!
புத்தரை விழுங்கிய உங்களால் பெரியாரை விழுங்கிட முடியாமல் திணறித் திக்கு முக்காடி தெருவில் வந்து புலம்புகிறீர்கள் என்று தானே பொருள் கொள்ளப்படும்?
புத்தரை விரட்டினீர்! காந்தியைக் கொன்றீர்கள்!! பெரியார் தாக்கத்திடமும், தர்க்கத்திடமும் உங்கள் கதை எடுபடவில்லை.
காரணம் பெரியார் வெறும் தத்துவம் மட்டுமல்ல;
நடைமுறை - வாழ்க்கை நெறி! வீண் பழிக்கஞ்சாப் பாதை ஈரோட்டுப் பாதை; வரலாறு உண்மைகளைக் கூறும்போது அது கசப்பாக இருக்கும் - பிறகு உலகத் திற்கே வெளிச்சம் தரும்!
தொடருங்கள் உங்கள் மாய்மாலத்தை; நாங்கள் தொடர்ந்து கொடுக்கிறோம் - சொடுக்கிறோம்.

கி.வீரமணி
பெரியாரின் தொண்டர்களின் தொண்டன்

சென்னை
8-1-2017


Read more: http://www.viduthalai.in/headline/136057-2017-01-08-10-23-37.html#ixzz4VF23BFi5

புதன், 4 ஜனவரி, 2017

உதார் விடுகிறது மகஇக.


ஈழப்பிரச்சினையில் 23-09-2008 அன்று தமிழ்நாட்டில் முதல்முதலாக சென்னையில் இரயில் மறியல் போராட்டம் நடத்தி இப்பிரச்சினையைத் துவக்கி வைத்ததே திராவிடர் கழகம்தான்.

அதற்கு முன்பு இந்தப் பிரச்சினையைப் பேசுவதற்கே மகஇக உட்பட யாருக்கும் தைரியமில்லை. ஈழம் என்றாலும் புலிகள் என்றாலும் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி தலையை நீட்டும். அந்த நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் தைரியத்தை ஊட்டிய இயக்கம் திராவிடர் கழகம்தான். அதற்குப்பிறகுதான் மற்ற இயக்கங்கள் தைரியமாய் இதில் தலையிட்டன.

அந்த இயக்கம் ஈழப் பிரச்சினையில் துரோகம் செய்து விட்டதாம். அள்ளி விடுகிறது மகஇக. இவர்கள் இயக்கம் முளை விடாத காலத்திலிருந்தே உறுதியான நிலைப்பாடு எடுத்து தனி ஈழத்தையும் விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கும் இயக்கம் திராவிடர் கழகம். அதை மறைத்து ஏதோ தாங்கள்தான் வீராதி வீரர் சூராதிசூரர் என்பதுபோல உதார் விடுகிறது மகஇக.
எங்கள் தலைவர் வுPரமணியை எதிர்த்துத் கேள்வி கேட்டதையே தவறு என்றா சொன்னோம். கேள்வி கேட்டிருந்தால் அதையும் முறைப்படி கேட்டிருந்தால் உடன் தக்க பதில் கிடைத்திருக்கும். ஒரு கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அதில் சிறப்புப் பேச்சாளர் பேசி முடித்த பிறகு உங்கள் கேள்விகளை எழுப்பலாம். அல்லது அவர் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் கேள்விகளை கூட்டத்தலைவர் மூலமாகக் கேட்கலாம். அப்பொழுது சரியான பதில் கிடைத்திருக்கும். இதுதான் கேள்வி கேட்கும் முறை. அதை விட்டுவிட்டு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே காட்டுமிராண்டியைப் போல் கத்திக்கொண்டு மேடையை நோக்கி ஓடுவதுதான் நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கும் பண்பாடா?

எந்த ஒரு கூட்டத்திலும் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள். அங்கே ஒருவன் காலி;த்தனம் செய்தால் நடப்பதே வேறு. திராவிடர் கழகமாக இருந்ததால் உங்கள் ஆட்களை அப்படியெல்லாம் செய்யாமல் எங்கள் தலைவர் உங்கள் தொ(கு)ண்டரை காவல்துறையில் பிடித்துக் கொடுத்துக் காப்பாற்றி இருக்கிறார். இதையே வேறொரு கட்சிக் கூட்டத்தில் உங்கள் குண்டரை அனுப்பி இதேபோலச் செய்யச் சொல்லுங்களேன். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த இலட்சணத்தில் நாடு பூராவும் போஸ்டர் வேறு. அந்தப் போஸ்டருக்கு முறைப்படி பதில் சொன்னதற்கு முறையாக விளக்கம் அளிக்காமல் ஜெயலலிதாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்ததைப்பற்றி எழுதியதற்கும் ஈழப்பிரச்சினைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அதனால்தானே உங்கள் வண்டவாளங்களை எழுத வேண்டி வந்தது?

தேர்தல் புறக்கணிப்பை நாடு பூராவும் பிரச்சாரம் செய்துகொண்டு இங்கே தேர்தலில் நின்றது ஏன் என்று கேட்டால் வெண்டைக்காய் விளக்கம்.

எங்கோ நடந்த பிரச்சினைக்கு யாரோ கொடுத்த போஸ்டரை இங்கே ஒட்டப்போய் நம்முடைய வண்டவாளங்களெல்லாம் தண்டவாளத்தில் ஏறுகிறது என்றவுடன் முதலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிப்போம் என்று கூறிவிட்டு எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இப்பொழுது இதனைப் பேசாதே ஈழத்தைப் பற்றி மட்டும் பேசுவோம் என்பது கொள்கையற்ற கோமாளித்தனம்.
நீங்கள் கேள்வி எழுப்பியவுடன் பொதுவிவாதம் நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். தேர்தல் முடியட்டும் என்று சொன்னது நீங்கள். பொதுமேடையில் பேச காவல் துறையிடம் அனுமதி கேட்டதில் அவர்கள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். அதனால்தான் தனித்தனியாகக் கூட்டம் போடலாம் என்று சொன்னோம். உங்களுக்கும் உங்கள் அப்பனுக்கும் பதில் சொல்ல எங்களால் முடியும். உங்கள் இயக்கம் தோன்றாத காலத்திலிருந்து உடம்பெல்லாம் மூளை என்று வர்ணிக்கப்பட்ட பார்ப்பன இராஜாஜியிலிருந்து சீரங்கத்து அம்பிவரை நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்த வரலாறு உண்மை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். உனக்கு பதில் சொல்வது ஒன்றும் பெரிய விசயமல்ல.

நாங்கள் காவல்துறையையும் சட்டம் ஒழுங்கையும் மதிக்கக் கூடியவர்கள். பொது அமைதிக்குப் பங்கம் வரக்கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள். உங்களுக்குத்தான் அவை எதைப்பற்றியும் கவலையில்லையே! எவன் எக்கேடு கெட்டாலென்ன என்று செயல்பட்டு அய்ந்து தொழிலாளரையே வீட்டுக்கு அனுப்பிய கும்பலாயிற்றே!

உங்கள் செயலாளர் சொன்னபடி காவல்துறையிலும் நிர்வாகத்திடமும் முறைப்படி அனுமதி வாங்கிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்பொழுது எல்லாவற்றையும் பேசுவோம்.

போனஸ் என்பது எங்கள் உழைப்பின் பலன். அதை வாங்குவது எங்கள் உரிமை. அந்த போனசை தீபாவளி போனஸ் என்றும் அதை வாங்காதே என்றும் ஆர்எஸ்எஸ் காரன் போல உளறுவதிலிருந்து நீங்கள் யார் என்பது தெரிகிறது. மேலும் தொடர்வோம்!


திங்கள், 2 ஜனவரி, 2017

viduthalai

2016 ஆம் ஆண்டு


2016 ஆம் ஆண்டு தன் பயணத்தை முடித்து 2017 ஆம் ஆண்டு தன் அடியைப் பதித்துள்ளது. 2016 என்பது தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டதுபோல சோகங்களையும்இ துயரங்களையும் சந்தித்த ஆண்டாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் அ.இ.அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற செல்வி ஜெ.ஜெய லலிதா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு 75 நாள்கள் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு - மரணத்தைத் தழுவினார்.

அவர் உயிர் பிழைக்க மிகப்பெரிய அளவில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. யாகங்களும்இ வழிபாடுகளும் இதுவரையில் இல்லாத அளவுக்கு நாடெங்கும் நடை பெற்றன. ஆனாலும்இ அவர் உயிர் பிழைக்கவில்லை. இனிமேலாவது இந்த அனுபவத்திலிருந்து பாடம் பெற்றுஇ பக்தி மூடநம்பிக்கையிலிருந்து  அ.இ.அ.தி.மு.க.வினரும்இ அக் கட்சியின் அனுதாபிகளும் மட்டுமன்றிஇ பக்தி செலுத்தினால்  விரும்பியது நடக்கும் என்ற அறியாமை இருளிலிருந்து பக்தர் கள் மீளவேண்டும் என்பது நமது அறிவார்ந்த வேண்டுகோள்.

முதலமைச்சர் மறைந்த நிலையில்இ அடுத்து ஆட்சியைத் தொடரச் செய்வதில் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சுமுகமாக அமைந்தது வரவேற்கத்தகுந்ததே!

அதேநேரத்தில்இ ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது  உதய் மின் திட்டம்இ உணவுப் பாதுகாப்புத் திட்டம்இ ‘நீட்’ தேர்வு ஆகிய மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில்இ அவர் மறைவைத் தொடர்ந்து அந்த மூன்றிலும் தமிழக ஆளும் தரப்பில் மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது கண்டிக்கத் தக்கதாகும்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைந்த நிலையில்இ மத்திய பி.ஜே.பி. அரசு தன் மூக்கை நுழைத்து அரசியல் லாபம் தேடலாம் என்ற முயற்சியில் ஈடுபடுவது நாகரிகமற்றது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஆளும் தரப்பினை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.

திராவிடர் கழகத் தலைவர் சொன்னது மிகவும் சரியானதே என்பது - ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் திரு.மதுசூதனன் அவர்கள் வெளியிட்ட உண்மையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

தன் சொந்த பலத்தில் கட்சியை வளர்க்க வக்கில்லாத பி.ஜே.பி. ஒரு மரணத்தை முன்வைத்து அரசியல் லாபத்தைத் துய்க்கலாம் என்று கருதுவது அதன் பலகீனத்தையும்இ அரசியல் அநாகரிகத்தையும் தான்வெளிப்படுத்துகிறது.

அதேநேரத்தில்இ எஞ்சியுள்ள நான்கரை ஆண்டு காலத்தில் ஆளும் கட்சியின் பெயருக்கேற்ப அண்ணா வகுத்த கொள்கைகளையும்இ திராவிட இயக்கச் சித்தாந்தங்களையும் மறந்துவிடாமல் மக்கள் நல அரசாக நடத்துவது அவசியமாகும்.

2016 ஆம் ஆண்டின் இறுதியில் வீசிய வார்தா புயல் குறிப்பிட்ட மாவட்டங்களை சின்னாபின்னப்படுத்தி விட் டது. உரிய காலத்தில் வந்து சேதங்களைப் பார்வையிடத் தவறியிருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில்இ மாநில அரசு கோரிய தொகையை அளிக்கவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

மக்கள் நல வளர்ச்சியில் கவனம் செலுத்தாமலும்இ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையைத் தூக்கி எறிந்துவிட்டுஇ இந்து மத வெறியோடுஇ கோட்பாட்டோடு மத்திய பி.ஜே.பி. அரசு நடந்துகொள்வது மிகப்பெரிய ஆபத்தான போக்காகும்.

பசுவதை என்ற பெயராலே ஆளும் தரப்பினர் கோரத் தனமான ஆட்டம் போட்டு வருகின்றனர். செத்துப் போன மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்கள் அய்வர் கொல்லப்பட்டதும்இ குளிர்சாதனப் பெட்டியில் பசுக் கறி வைத்திருந்ததாகக் கற்பித்து முசுலிம் பெரியவர் ஒருவரை அடித்துக் கொன்றதெல்லாம் அநாகரிகக் காட்டு விலங்காண்டித்தனத்தின் எல்லையாகும்.

தேசியப் புதியக் கல்விக் கொள்கை என்று கூறிஇ மனுதர் மத்தின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது மத்திய அரசு. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இது தொடர் பான எதிர்ப்பினை முன்னெடுத்துச் சென்று வருகிறது திராவிடர் கழகம்.

பொருளாதாரத் துறையில் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிஇ 500 ரூபாய்இ 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று திடீரென்று அறிவித்த மத்திய பி.ஜே.பி. அரசு ஆப்பதனை அசைத்துவிட்ட மந்தியைப் போல விழிப் பிதுங்கி நிற்கிறது. வெகுமக்களோ தங்களுக்கு உரிமையான பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்கு வீதியில் மணிக்கணக்கில் நின்று தங்களின் நேரத்தையும்இ உழைப்பையும் வீணாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசின் நூற்றுக்கு மேலான அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக வெளியாகி தானும் குழம்பிஇ மக்களையும் குழப்பி வருகின்றனர்.

இதுகுறித்து விவாதத்தைச் சந்தித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கும்இ சந்தேகங்களுக்கும்இ குற்றச்சாட்டு களுக்கும் பதில் அளிக்க முன்வராமல்இ நாடாளுமன்றத்திற்கு வருவதையே தவிர்த்த ஒரே பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற பெயரைச் சம்பாதித்ததுதான் மிச்சம்.

தெருக்களில் மேடைப் போட்டு முழங்கும் பிரதமர்இ மக்கள் பிரதிநிதித்துவ சபையில் பேசத் தயங்குவது  - அச்சத்தைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்த நிலையில்இ 2017 ஆம் ஆண்டாவதுஇ 2016 ஆம் ஆண்டிலிருந்து பாடங்களைக் கற்றுஇ நாடு நேர் நடைபோடுமா என்று எதிர்பார்க்கிறோம்.




வெள்ளி, 30 டிசம்பர், 2016

அனுப்புதல் 

வை.இராசேந்திரன்   உதவிப்பொறியாளர்                                                       பாரத மிகுமின் தொழிலகம்    திருச்சி -14.

பெறுதல்
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி                                            தலைவர் திராவிடர் கழகம்

அய்யா, வணக்கம்!

என்னுடைய சகோதரிக்கு இரண்டு மகள்கள். இருவருமே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். அந்த இருவருக்கும் எப்படித்திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று எங்கள் குடும்பத்தில் கவலையாக இருந்தோம். திருச்சியில் நவம்பர் 30 அன்று நடந்த மன்றல் விழா குறித்து பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் துண்டறிக்கை வழங்கினார்கள். ஃபிளக்ஸ் போர்டு வைத்திருந்தார்கள். அத்துடன் பூவை.புலிகேசியை வைத்து வாயிற்கூட்டம் நடத்தினார்கள். இதையெல்லாம் பார்த்தபிறகு எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அந்நிகழ்வில் கலந்துகொண்டோம். அன்றைக்கே பெரிய பெண்ணான செல்வி விக்னேஸ்வரிக்கு திருமணம் உறுதி ஆகிவிட்டது. தென்னூரைச் சேர்ந்த செல்வன் பாஸ்கரன் (அவரும் ஒரு மாற்றுத் திறனாளி) திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு வரும் ஏப்ரல் 14 அன்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்வு பெரியார் மாளிகையில் நடைபெற வேண்டும் என்ற அனைவரது ஆசையின்படி அது முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் இயக்கத் தோழர்களைப் பெருமளவு கலந்துகொள்ளச் செய்து திருமணத்தை நடத்தித் தர அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணமும்கூட.


மார்ச் 17ல் மதுரையில் நடந்த மன்றல் விழாவில் கலந்துகொண்ட தோழர் சரவணன் (மதுரை – 18) என்பவர் எனது சகோதரியின் இன்னொரு மகள் செல்வி வினோதினி என்பவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இதுபோன்ற விழாக்களை நடத்தும் தங்களுக்கு என் பாராட்டுக்களைத்   தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கும் தங்கள் இயக்கத்துக்கும் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்பதைத் தெரிவித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மணமகன் பெயர் : செல்வன் பாஸ்கரன் வெள்ளாளர் தெரு தென்னூர் திருச்சி – 17
       
மணமகள் பெயர் : செல்வி விக்னேஸ்வரி பெரியபுதூ சாரதா கல்லூரி அருகில் சேலம் -6

இப்படிக்கு
வை.இராசேந்திரன்


01-04-2013
திருச்சி -14.


தண்ணீரும் தாகமும்

தண்ணீரும் தாகமும்

உயிரினங்கள், செடிகொடிகள் அனைத்தும் உயிர்வாழத் தண்ணீர் மிகமிக அவசியம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கே குடிக்கத் தண்ணீர் தர மறுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. பண்பாடு இருக்கிறது. பாரம்பரியம் இருக்கிறது என்று சொல்லி ஆர்எஸ்எஸ் பிஎம்எஸ் கும்பல் செய்துவரும் பிரச்சாரத்துக்குச் சொந்தமான இந்துமதத்தில்தான் இந்தக் கொடுமை. இது ஓராண்டு ஈராண்டல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தது. விலங்குகளிடமும் அன்பு செலுத்துகிறவர்கள் என்று பெருமை பேசுகின்ற அவர்கள்தான் மனிதன் தாகத்தால் தவிக்கும்போதுகூடத் தண்ணீர் தர மறுத்தார்கள்.

ஒருசாதிக்காரன் தொட்ட பாத்திரத்தில் இன்னொரு சாதிக்காரன் தண்ணீர் அருந்த மறுத்தான். தீண்டத்தகாதவர்கள் அழுக்கடைந்த குட்டைகளில் கிடந்த மாசடைந்த நீரை அருந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்;. சொர்க்கத்துக்குப் போக ஆசைப்பட்ட சில ~தர்மவான்கள்| வைத்த தண்ணீர்ப்பந்தல்களில்கூட மூங்கில் குழாய்களில்தான் தீண்டத்தகாதவர்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. அதை மறுமுனையில் நின்று அவன் கைகளில் பிடித்துக் குடிக்க வேண்டும்.

தந்தை பெரியார் 1924ல் வைக்கத்தில் போராடி தீண்டத்தகாதவர்களுக்கு பொதுவீதியில் நடக்க உரிமை பெற்றுத் தந்தபிறகு சென்னை மாகாணத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பொதுவீதி, குளங்கள், கிணறுகள், சாலைகள் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டு வந்து நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல பம்பாய் மாகாணத்திலுள்ள மகாத் நகராட்சியிலும் போலே என்பவராலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அண்ணல் அம்பேத்கர் மகாத் குளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களோடு சென்று 1927 மார்ச் 20 அன்று  நீர் அருந்தும் போராட்டத்தை நடத்தினார். அதற்கு அவருக்கு உந்துசக்தியாக இருந்தது பெரியார் நடத்திய வைக்கம் போராட்டமாகும். அம்பேத்கரும் அவரது மக்களும் அக்குளத்து நீரைப் பருகியதால் குளமே தீட்டாகிவிட்டது என்று நீரெடுக்க மறுத்தனர் உயர் ஜாதியினர்.

எல்லாவற்றுக்கும்தான் பார்ப்பனர்கள் பரிகாரம் வைத்திருக்கிறார்களே! அதன்படி 108 குடங்களில் பசுவின் சாணம்ää பசுவின் மூத்திரம், பால், தயிர் இவற்றைத் தண்ணீரில் கலக்கி பார்ப்பனர்கள் தவளைகளைப்போல் கூச்சல் போட்டு வேதமந்திரம் முழங்கி இவற்றைக் குளத்தில் கொட்டி தீட்டுப்போக்கினர்.

மனிதன் தண்ணீர் அருந்தியதால் தீட்டானதாகக் கூறி மாட்டுச்சாணியையும், மூத்திரத்தையும் கலந்தால் தீட்டுப்போகும் என்று சொல்லுகின்ற மதம்தான் இந்துமதம். மாட்டுச்சாணியையும் மூத்திரத்தையும் விடக் கேவலமாக மனிதனை மதித்தது இந்துமதம்.

 மகாராஷ்டிரத்தில் சிவாஜிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பேஷ்;வாக்கள் இந்தத் தீண்டாமையை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தார்கள். அந்த பேஷ்வாக்களால் துவக்கப்பட்ட அமைப்புத்தான் ஆர்எஸ்எஸ்.

வெள்ளைக்காரன் வந்ததால் இந்தப் பார்ப்பன மனிதவிரோதச் செயல்களில் சில மாற்றங்கள் வந்தது. அந்த மாற்றங்களைக்கூடத் தாங்கிக் கொள்ளாமல் மீண்டும் தங்களது சாதி ஆதிக்கத்தைத் தக்கவைக்க மராத்திய சித்பவன் பார்ப்பனர்களால் துவக்கப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். அதனுடைய தொழிற்சங்கம் பிஎம்எஸ். இவர்கள் தண்ணீருக்காகக் கண்ணீர் விடுவது ஓநாய் ஆட்டுக்காக விடும் கண்ணீருக்குச் சமம்.

பார்ப்பன சனாதன தருமத்தைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்களுக்காகவும் குரல் கொடுப்பதுபோல் நடிப்பது இவர்களுக்குக் கைவந்த கலை. எனவே, இவர்களின் பசப்பு வார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


வியாழன், 29 டிசம்பர், 2016

பெரியாரியல் பயிலரங்கு

பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிலரங்கு 16-06-2013 அன்று பெல் தொமுச அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெல்;;;;;; திராவிடர் தொழிலாளர் கழகம் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரியாருடைய கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இது குறித்து நல்ல விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதில் ஏராளமான இளைஞர்கள் தாங்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற விரும்புவதாகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தார்கள். எனவேää குறிப்பிட்ட நேரத்திலேயே தோழர்கள் அனைவரும் வந்து தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

காலை சரியாக 10 மணிக்கு பயிலரங்கத் துவக்க விழா நடைபெற்றது. திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு மு.சேகர் தலைமை உரையாற்றினார். திருச்சி மண்டலத் தலைவர் மானமிகு ஞா.ஆரோக்கியராஜ்ää திருவெறும்பூர் ஒன்றியத்தலைவர் வ.மாரியப்பன்ää ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திராவிடர் கழக செயலவைத்தலைவர் பயிலரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியாரின் பன்முக ஆற்றல் என்ற தலைப்பில் இளைஞர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிக அருமையாக முதல் வகுப்பை நடத்தினார்கள்.

சிறிது நேர தேநீர் இடைவேளைக்குப்பிறகு செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்கள் வருணமும் வர்க்கமும் என்ற தலைப்பில் ஏராளமான ஆதாரங்களோடு வகுப்பினை எடுத்தார்கள்.

அதனையடுத்து துணைத்தலைவர் அவர்கள் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில் தமிழர் அடையாளத்தை பார்ப்பனர் எவ்வாறு சிதைத்தனர் நம்முடைய தமிழர்களின் பண்பாட்டை எப்படிக் கெடுத்தனர் என்பதனை தமிழர்களின் பெயர்கள்ää ஊர்ப்பெயர்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி அந்த அடையாளத்தை மீட்டெடுக்க தந்தை பெரியார் இயக்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் சுட்டிக்காட்டிப் பேசியபோது மாணவர்கள் வியப்பிலாழ்ந்தார்கள்.

பகல் 1.30 மணிக்கு அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

 உணவு இடைவேளைக்குப்பின் 2.30 மணிக்கு செயலவைத்தலைவர் அவர்கள் தொழிலாளரும் பகுத்தறிவும் என்ற தலைபபில் தொழிலாளர்களிடமும் சமுதாயத்திலும் நிலவி வரும் மூட நம்பிக்கைகளையும் அவற்றைக் களைந்து அனைவரும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பாடம் நடத்தினார்கள்.

அனையடுத்து துணைத்தலைவர் கவிஞர் அவர்கள் ஜாதி மதக் கேடுகள் என்ற தலைப்பில் மிக அருமையாக வகுப்பு எடுத்தார்கள். ஜாதிää தீண்டாமை ஆகியவற்றின் கொடுமைகளையும் மதத்தின் கேடுகளையும் அவற்றை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும்ää ஜாதியையும் மதத்தையும் ஒழிக்க தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் மிகப் பெரிய வரலாற்று ஆசிரியர்போல வகுப்பு எடுத்தார்கள்.

பிற்பகல் 4.30 மணிக்கு தேநீர் இடைவேளைக்குப் பிறகு செயலவைத் தலைவர் அவர்கள் தொழிலாளர்க்கான இயக்கங்கள் என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்கள். இந்தியாவில் தொழிலாளர்களின் நிலையையும் தொழிற்சங்கங்கள் தோன்றிய வரலாற்றையும் மும்பையில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்காமல் முண்டியடித்துச் சென்றபோது தங்களுடைய சாப்பாட்டு மூட்டையை தீண்டத்தகாதவர்கள் தொட்டுவிட்டார்கள் என்பதற்காகத்தான் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது என்பதனையும் அகில இ;திய தெரிற்சங்க காங்கிரஸ்ää அதிலிருந்து உடைத்து காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய வரலாறுää சிங்காரவேலர்ää ஜீவா போன்றவர்களின் வரலாறுகளையும் தந்தை பெரியார் நாகை ரயில்வே ஊழியர் போராட்டத்தை ஆதரித்தது முதல் மேதினத்தைக் கொண்டாடிய வரலாறுää இரயில்வேயில் தென் இந்திய இரயில்வே தொழிற்சங்கத்தைத் துவக்கிய வரலாறு ஆகியவற்றையும் எடுத்துச் சொல்லி உண்மையான தொழிற்சங்கவாதிகள் யார் என்பதையும் உண்மையான கம்ய10னிஸ்ட்கள் நாம்தான் என்பதையும் வரலாற்று ஆதாரங்களைக் காட்டி வகுப்பெடுத்தார்கள்.

மாலை 5.30 மணிக்கு தேநீர் இடைவேளை முடிந்த உடன் கேள்வி பதில் நேரம் துவங்கியது. அதில் இளைஞர்கள் தொடுத்த வினா மிகவும் சமூகப்பொறுப்புடனும் சமுதாய மாற்றத்தை நோக்கியதாகவும் இருந்தது. ஜாதிää தீண்டாமை தொடர்பாகவும்ää சமூகநீதி தொடர்பாகவும் பெண்ணடிமை ஒழிப்புக் குறித்தும் பலகேள்விகள் தொடுக்கப்பட்டன.

துணைத்தலைவர் அவர்களும்ää செயலவைத் தலைவர் அவர்களும் அக்கேள்விகளுக்கெல்லாம் சுவைபடவும் அறிவுப்ப10ர்வமாகவும் ஆதாரப் பூர்வமாகவம் விடையளித்தார்கள். அந்த விடைகளால் இளைஞர்கள் அனைவரும் திருப்தி அடைந்து மனநிறைவுற்றார்கள். இதற்கு மேலும் உங்களுக்கு அய்யங்கள் எழுமேயானால் எங்களுக்கு எழுதுங்கள். தாராளமாக விடையளிக்கிறோம் என்று கவீஞர் அவர்களும் செயலவைத் தலைவர் அவர்களும் உறுதியளித்தார்கள்.

பயிலரங்கில் 54 இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். பயிற்சி நிறைவில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பாக தோழர் சண்முகம் கவிஞர் அவர்களுக்கும்ää செயலவைத் தலைவர் அவர்களுக்கும் பயனாடையும் கேடயமும் வழங்கினார். பயிற்சிக்கான களத்தினை உருவாக்கிக் கொடுத்த பெல் திதொக செயலாளர் ம.ஆறுமுகம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

பயிலரங்கு நிறைவடைந்த உடன் 24-06-2013 அன்று பணி ஓய்வு பெற உள்ள பெல் திதொக தலைவர் மானமிகு க.வெ.சுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. மாவட்ட தி.க தலைவர் மு.சேகர் தலைமையேற்றார். திருச்சி மண்டலத்தலைவர் ஆரோக்கியராஜ் திருவெறும்ப10ர் ஒன்றியத்தலைவர் வ.மாரியப்பன் ஒன்றியச் செயலாளர் இரா. தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகி;த்தனர். பெல் திதொக செயலாளர் ம.ஆறுமுகம் க.வெ.சுப்பிரமணியன் அவர்களின் தொண்டினையும் அவர் ஏற்ற பொறுப்புக்கள் செய்த பணிகள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் க.வெ.சுப்பிரமணியன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கினார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் ஆடையணிவித்து வாழ்த்திப் பேசினார். ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் வ.மாரியப்பன் நன்றியுரையாற்றினார்.

பயிலரங்கத்திலும் பணி ஓய்வு பாராட்டு விழாவிலும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட முன்னாள் செயலாளர் சி.மேகநாதன்ää பெல் திதொக முன்னாள் தலைவர் சி.பிச்சைமணிää காட்டூர் பக தோழர் சங்கிலிமுத்துää காட்டூர் கிளை செலாளர் சிவானந்தனää துவாக்குடி நகரத்தலைவர் விடுதலை கிருஷ்ணன்ää நகரச் செயலாளர் ஆ.இராமலிங்கம்ää கவிஞர் இனியன்ää தி.தொக பொருளாளர் தாமஸ்ää தி.தொக தாமோதரன்ää திரு தமிழரசன்ää பாலகங்காதரன்ää திருவேங்கடநகர் கணேசன் விடுதலை செய்தியாளர் மா.செந்தமிழினியன்ää அமைப்புசாரா திராவிடர் தொழிற்சங்கத்தலைவர் திராவிடன் கார்த்திக்ää செல்வக்குமார்ää ஜோ.பி.சேவியர்ää காட்டூர் கனகராசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள். பயிற்சியாளர்களுக்கு உணவு தேநீர் ஆகிவற்றை வழங்கும் பொறுப்பை மானமிகு பூபாலன்ää தோழர் மேகநாதன்ää தோழர் சி.பிச்சைமணிää தோழர் ம.சங்கிலிமுத்து கவிஞர் இனியன் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சுவையான உணவும் தேநீரும் வழங்கினார்கள்.

 

புதன், 28 டிசம்பர், 2016

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!


‘‘யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும்இ ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்குகிறாரோஇ
அவர் மற்ற மக்கள் யாவரும் அப்பண்புகளைப் பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

அப்பேர்ப்பட்டவரை மக்கள் உணரும்படிச் செய்யவேண்டும்.

அவரின் உயரிய பண்புகளையும்இ சேவைகளையும் மற்ற மக்களும் பின்பற்றி நடக்கும் வண்ணம் செய்யவேண்டும்.

அதற்கென்று அவரின் குணங்களை மக்கள் பார்த்துத் தமது வாழ்க்கையில் பின்பற்றி வந்த தகாத காரியங்களை விட்டொழித்துத் திருந்தி வாழவேண்டும்.

அதற்காக இவரைப் பார்த்தவுடன் அவரின் உயர்ந்த பண்புகள் யாவும் உதித்து அதனைப் பின்பற்றச் செய்யவேண்டும் என்பதற்காகவே படத்திறப்பும்இ சிலை திறப்பும் ஆன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.’’

- இவ்வாறு தந்தை பெரியார் கூறியுள்ளார்.

பொதுவாக தந்தை பெரியார் கூறியிருந்தாலும்இ இது தந்தை பெரியார் அவர்களுக்கே பொருந்தக் கூடியதாகும். இதனைப் படிக்கும் ஒவ்வொருவர் அகக் கண்ணிலும் தந்தை பெரியார் அவர் களின் உருவமே நிழலாடும்.

பண்பு என்று சொல்லும்பொழுது - புரட்சிக்கவிஞர் சொன்னாரே - தந்தை பெரியார்பற்றி ‘‘மிக்க பண்பின் குடியிருப்பு’’ என்றுஇ அந்த வரி நினைவுக்கு வருமே!
சேவைகளை மதிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர் கள் கூறும் வரியைப் படிக்கும்பொழுது - புரட்சிக்கவிஞர் கூறிய ‘‘தொண்டு செய்து பழுத்த பழம்‘’ என்ற வரி நினைவுக்கு வந்தே தீரும்.

மனிதனாக இருப்பதே பிறருக்குத் தொண்டு செய்வதே என்பது தந்தை பெரியார் அவர்களின் செழித்த சிந்தனையாகும்.

‘‘மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவேஇ அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல்புரிவதுதான் மனிதத் தன்மை’’ (21.7.1962) என்று தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

95 வயதிலும் மூத்திர வாளியைச் சுமந்து கொண்டு கடைசி நிமிடம்வரை பாழ்பட்டுப் போன திராவிடர் சமுதாயத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் தலைவரின் நினைவு நாள் இந்நாள் (43 ஆம் ஆண்டு).

அவர் வாழ்ந்த காலத்தைவிடஇ மறைந்த இந்தக் காலகட்டத்தில் அதிகமாக நினைக்கப்படுகிறார் - இன்னும் சொல்லப்போனால் தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை.

அதுவும் மத்தியில் இந்துத்துவா வெறி கொண்ட ஓர் ஆட்சி நடந்துகொண்டுள்ளது. தங்கள் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனீயத்துக்குப் புத்துயிரூட்டிஇ மனுதர்மக் கொடியை ஏற்றிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறது.

செத்தொழிந்து போன சமஸ்கிருதத்தைப் பாடத் திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்பது எதைக் காட்டுகிறது? குருகுல முறையைப் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதன் பின்னணி என்ன?

தேசிய புதிய கல்விக் கொள்கை - 2016 என்பது நவீனக் குலக் கல்வித் திட்டம்தானே! இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்ப்பதில் முன் வரிசையில் தமிழ் மண் மார்தட்டி நிற்கிறது என்றால் காரணம் - இது தந்தை பெரியார் அவர்களால் செப்பனிப்பட்டது என்பதுதானே!

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைச் சித்தாந்தத்தை செயல்படுத்த முனைகிறார்கள் என்கிறபோது - யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும்இ அந்தக் கொடும் நோயை ஒழிப்பதற்குச் சரியான அறுவை மருத்துவம் தந்தை பெரியார் கொள்கையும்இ சித்தாந்த முமே தான் என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியத் துணைக் கண்டத்துக்கே தேவைப்படும் கருத்தாகி விட்டது. அதன் எதிரொலியாக இந்தி யாவில் பல மாநிலங்களிலும் உள்ள பல்கலைக் கழகங்களிலும்இ கல்லூரிகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப் படுகிறதுஇ நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது எதனைக் காட்டுகிறது?

சென்னை அய்.அய்.டி.இயில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டபோதுஇ பார்ப்பன அதிகாரவர்க்கம் தடை செய்தது. அதனை நிலை நிறுத்த முடிந்ததா? தடை உடைபட்டதே! சென்னை கிண்டியில் அவர்கள் தடை செய்ததன் விளைவு - இந்தியாவில்  பல மாநிலங்களில் உள்ள அய்.அய்.டி.இகளில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு விட்டதே!

எதிர்க்க எதிர்க்கத்தான் தந்தை பெரியார் கொள்கை தலை நிமிர்ந்து வெற்றிக் கொடியை நாட்டும். வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டுதானே தந்தை பெரியார் வெற்றி பெற்றார்.

விநாயகனை உடைத்ததுமுதல் இந்திய அரசமைப்புச் சட்டத் தையே கொளுத்தவில்லையா? இந்தச் செயல் வேறு எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது?
பிரச்சாரம் - போராட்டம் என்ற இரு அணுகுமுறைகளைத் தந்து சென்றுள்ளார் அந்தப் புரட்சித் தந்தை.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டு விட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும்இ வேலை வாய்ப்பிலும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

மதச் சார்பின்மைஇ சமூகநீதி என்னும் குடையின்கீழ் இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள்இ முற்போக்குவாதிகள்இ இடதுசாரிகள் ஒன்றிணைந்து ‘பெரியார் வாழ்க!’ என்று குரல் கொடுத்துத் தீரவேண்டிய காலகட்டம் இது.

அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாளில் நமது செயல் பாட்டில் கூடுதலான வேகமும்இ எழுச்சியும் இருக்கப்போவது உறுதி! அதற்கான பழுத்த சூழ்நிலையை நமது எதிரிகள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!




செவ்வாய், 27 டிசம்பர், 2016

கடவுள் கதைகளில் உள்ளதையெல்லாம் யாராவது நம்புகிறீர்களா?



அன்புள்ள ஆத்திக சகோதரர்களே!

கடவுள் கதைகளில் உள்ளதையெல்லாம் யாராவது நம்புகிறீர்களா?
எல்லா புராணத்திலும் உலகம் தட்டை என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனை யாராவது இன்று நம்புகிறீர்களா?

அந்தப் பூமியை ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலைப் பாம்பு தாங்கிக் கொண்டுள்ளதாக புராணங்கள் சொல்கிறதே அதனை யாராவது நம்புகிறீர்களா?

எந்தப் புராணத்திலும் அமெரிக்கா என்ற ஒரு நாடு இருப்பதையோää ஆஸ்திரேலியா என்ற நாட்டைப்பற்றியோää அய்ரோப்பா பற்றியோ குறிப்பிடப்பட்டுள்ளதா?

புராணங்களில் சொல்லப்பட்டுள்ள மேல் ஏழு லோகம் கீ; ஏழு லோகம் என்பதை இன்று யாராவது நம்புகிறீர்களா? இந்திரலோகம்ää சந்திரலோகம்ää எமலோகம்ää சிவலோகம்ää பரலோகம்ää வைகுண்டம் இவையெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றன? அவற்றை யாராவது நம்புகின்றார்களா?

புராணங்களில் அடிக்கடி பூலோகத்திற்கு இந்திரன் வந்தான் சந்திரன் வந்தான் நாரதன் வந்தான் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளதே! இப்பொழுது ஏன் வருவதில்லை?

தேவலோகத்திலிருந்து தேவலோக கன்னிகைகள் பூலோகம் வந்து இங்குள்ள பொய்கையில் நீராடி பூக்களைப் பறித்துச் சென்றதாக எழுதப்பட்டுள்ளதேää இப்பொழுது யாரும் ஏன் வருவதில்லை?

முன்பெல்லாம் கடவுள் தன் பக்தர்களைச் சோதிக்க அடிக்கடி சிவனடியாராகவும் பல்வேறு வடிவங்களில் வந்ததாகவும் பெரியபுராணம் போன்ற புராணங்கள் சொல்கின்றதேää இப்பொழுதெல்லாம் ஏன் கடவுள் அவ்வாறு வருவதில்லை?

முன்பெல்லாம் கடவுள் அடிக்கடி அவதாரம் எடுத்து வந்து இங்குள்ள அதர்மங்களை அழித்ததாகப் புராணங்கள் சொல்கின்றனவேää இப்பொழுது ஏன் அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுப்பதில்லை?
சிவபெருமான் பல்வேறு திருவிளையாடல்களை இங்கு நடத்தினாராமே! அந்தத் திருவிளையாடல்கள் ஏன் இப்பொழுது நடப்பதில்லை?

தேவலோகத்தில் ரம்பாää ஊர்வசி மேனகா என்றெல்லாம் இருந்தார்களாமேää இப்பொழுது அவர்கள் எல்லாம் எங்கே?
பாற்கடலைக் கடைந்து தேவாமிர்தம் எடுத்து அதை உண்டதால் தேவர்களுக்கு இறப்பே இல்லையாமேää இறவா வரம்பெற்ற அந்த தேவர்களெல்லாம் இப்பொழுது எங்கே?

தேவாமிர்தத்தைக் கொடு;த்த அந்த திருப்பாற்கடல் இப்பொழுது எங்கே இருக்கிறது?

எமன் வந்து உயிரை எடுக்க வந்தபோது சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்திருந்த மார்க்கண்டேயனை சிவன் காப்பாற்றி என்றும் பதினாறு வயது என்று சாகாவரம் கொடுத்தாராமேää அந்த மார்க்கண்டேயன் இன்று எங்கே?

ஊமையனைப் பேசவைத்த பாடவைத்த சரஸ்வதி இன்று எங்கே? எத்தனை ஊமைகள் இன்று இருக்கிறார்கள்? அவர்களில் ஒருவரையாவது பாடவைக்காவிட்டாலும் பேச வைக்கலாமே! கோழையை வீரனாக்கிய பார்வதியும்ää ஏழையை பணக்காரியாக்கிய லட்சுமியும் இன்று எங்கே?

ஈ. எறும்புää எண்ணாயிரம் உயிர்களுக்கும் எப்படி இருந்தாலும் படியளக்கும் பகவான் இன்று எங்கே? இன்னும் எத்தனையோ ஏழைகள் பட்டினியாகப் படுக்கச் செல்கிறார்களே! அவர்களுக்கு ஏன் பகவான் படியளப்பதில்லை?

இவையெல்லாமே பொய் கற்பனை என்பதுதானே இன்றைய அறிவியல் உலகின் முடிவு?

அப்படி இருக்கää பூமி தட்டையானதுää அதனை ஒரு அசுரன் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளித்து வைத்தான்ää ஆண்டவன் பன்றி அவதாரம் எடுத்து அந்த பூமியை மீட்டான்ää அந்த பூமிக்கும் பன்றிக்கும் காதல் வந்து அதனால் பிறந்த பிள்ளைதான் நரகாசுரன் என்றும்ää அந்த நரகாசுரன் இறந்த நாளே தீபாவளி என்றும் புராணங்களில் எழுதப்பட்டுள்ளதேää அதுவும் பொய்தானே! கற்பனைதானே? அதை நம்பி தீபாவளி கொண்டாடுவது எந்த விதத்தில் அறிவுடைமை?

( அனைத்து சாதியினருக்கும்) பள்ளிக்கல்வி கிடைக்கவில்லை?

அந்தக் காலத்தில் ஏன் எல்லோருக்கும் ( அனைத்து சாதியினருக்கும்) பள்ளிக்கல்வி கிடைக்கவில்லை? அப்படி என்னதான் அக்கால பள்ளிக் கல்வியில் சிறப்பம்சம் இருந்தது? என்ன பாடங்கள் சொல்லித்தரப்பட்டன?*
1800 களில் நிலவிய கல்விக்கூடங்களில் கற்பிக்கப்பட்ட ஆரம்பக் கல்வியின் அடிப்படையே நல்லொழுக்கத்தையும், சமயத்தையும், சனாதான தர்மத்தையும் பேணும் ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதையும், அதற்கு சாதி விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதேயாகும். அந்த காலத்துக் கல்விமுறையில் அறிவியலுக்கும், வரலாறுக்கும் இடமில்லை.
பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகும் இந்நிலை மாறவில்லை. மார்ச் 10, 1826ல் ஜார்ஜ் ஹேயன் என்பவர் செயலாளராக இருந்த பிரிட்டிஷ் அரசின் பாடநூல் நிறுவனத்தின் மூலம் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டன. அதனை தயாரித்தவர்கள் இந்தியர்களே ஆவர். அப்படி என்ன பாட நூல்கள் இருந்தன தெரியுமா?
1. விஷ்ணுவைத் துதித்து பாடம் கற்றல் ( அரிச்சுவடி அல்லது நெடுங்கணக்கு)
2. வரிக்குவரி பாடம்
3. ஆத்திச்சூடி
4.கொன்றைவேந்தன்
5. பள்ளிப்பிளை சிந்து
6. பிளையார் துதி
7.நெல் இலக்கம் ( தானியக் கணக்கு)
8.பெருங்குழி ( பெருக்கல் வாய்ப்பாடு)
9.சிறு குழி (வகுத்தல் வாய்ப்பாடு)
10. திவாகரம் 12 ( கடவுள், மனிதன், விலங்கு பற்றியது)
11. மண்டல புருஷ நிகண்டு
12. கோவிந்த சதகம்
*13.மணவாள நாராயன சதகம் ( நால்வருண தொழில் பேதம்)*
14.திருக்குறள்
15. பொன்னிலக்கம்
16.நைடதம்
இவைகளிலிருத்தது நடத்தப்பட்டதே ஆரம்பக் கல்வியின் பாடங்களாகும்.
இந்தக் கல்விமுறையில் அறிவியல், வரலாறு போன்ற எந்த பாடத்திட்டங்களும் இல்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களாகவோ, குருகுலக் கல்வி முறையாகவோ இருந்தன. அனைத்து (சாதி) மக்களுக்கும் கல்வி கிடைக்கவில்லை.
இந்தப் பாட வரிசையில் இடம்பெற்ற
*13.மணவாள நாராயன சதகம் ( நால்வருண தொழில் பேதம்)* என்ற நூல் சாதிக்கேற்ற தொழிலைச் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது.
இப்படி சாதி வேற்றுமை பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் என்ன நியாயத்தை கற்றுத் தந்திருக்கமுடியும்?
நன்றி-Mulnivasi.
Like
Comment

திங்கள், 26 டிசம்பர், 2016

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரே கூடாது என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு



பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசைப் பொறுத்தவரை எப்போது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அளிக்கப்பட்டது என்பது மிகவும் முக்கியமான வினாவாகும். இந்திய அரசமைப்புச்சட்டம் என்றைக்குச் செயல்பாட்டுக்கு வந்ததோ (1950ää சனவரி26) அன்றிலிருந்து இதுவும் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் 1990 ஆகஸ்ட் 7ந்தேதி அறிவி;க்கப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் அந்நாள் பொன்வரிகளால் தீட்டப்பட வேண்டிய நாள் என்பதிலே எந்தவித அய்யப்பாடும் கிடையாது.

அதனை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றனர் உயர்ஜாதிப் பார்ப்பனர்கள். அதன் காரணமாக மேலும் ஈராண்டுகள் தாமதப்பட்டது. இவ்வளவு காலம் தாழ்த்தி இட ஒதுக்கீடு அளிக்கும்பொழுது எப்படி பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) திணிக்கப்பட்டது? பந்தியிலே உட்கார வைக்கப் படுவதற்கு முன்பே இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர். எனவேää இதனைத் தரம் பிரிக்கச் சொல்லுவது சரியா? என்ற வினாவை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு க.வீரமணி அவர்கள் சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

இந்தப் பொருளாதார அளவுகோலைத் திணிக்கவேண்டும் என்ற முயற்சியை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட காலத்திலேயே உயர்ஜாதிப் பார்ப்பனர்களால் மேற்கொள்ளப்பட்டதுண்டு. ஜவஹர்லால் நேரு அவர்கள் அதுபற்றி நாடாளுமன்றத்தில் பின்வருமாறு கூறினார்.

“எனக்கிருக்கிற சிரமம் எல்லாம் இதுதான். சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் முன்னேற்றத்திற்காக என்ற சொற்களை ஏன் போட வேண்டும் என்றால்ää அவை அரசியலமைப்புச் சட்டம் 340 ல் இடம் பெற்றிருக்கின்றன என்பதால் நாம் அவற்றை இதிலே இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிறோம். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியாக என்பதனைச் சேர்க்க எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் பொருளாதார ரீதியாக என்பதனைச் சேர்த்தால் சொற்களை அடுக்கிக் கொண்டே போகிறோம் என்பதோடு இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்பதும் முக்கியமாகும். சமூகரீதியாக என்பது பரந்துபட்ட பல பொருள் தரக்கூடிய ஒரு சொல்லாகும். என்று பிரதமர் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்

சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும்தான் இட ஒதுக்கீடு – பொருளாதார அளவுகோல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதற்கான வரலாறு இவ்வாறு இருக்க உச்சநீதிமன்றம் தன் மனம் போன போக்கில் கிரீமிலேயர் என்ற சொல்லாக்கத்தை உண்டாக்கித் திணித்தது எந்த வகையில் நியாயம்? “இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. சமூகநீதிக்கான வாய்ப்பினைக் காலம்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு” என்று இதே உச்சநீதிமன்றமே சொன்னதுண்டு.

நீதிபதி நாற்காலிகளில் உட்காருவோரைப் பொறுத்து தீர்ப்புக்களும் ஆணைகளும் மாறும் என்றால் இது என்ன திருக்கூத்து? அரசு வகுக்கும் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது சரியாகுமா? நீதிபதியாகி விட்டால் வானக் கூரையின்கீழ் உள்ள அனைத்தும் தங்களுக்கு அத்துபடி என்று நினைக்கும் மனப்பான்மை மாறவேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிளவு ஏற்படுத்திய கிரீமிலேயரைப் புகுத்தியதால் ஏற்பட்ட பலன் என்ன? 27 சதவிகிதம் இடங்களைப் பூர்த்தி செய்ய பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து உரியவர்கள் கிடைப்பதில்லை. வெறும் 7 சதவிகித இடங்கள்தான் இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. மீதி 20 சதவிகித இடங்கள் எங்கே போகின்றன தெரியுமா? உயர்ஜாதியினரின் வயிற்றில் அறுத்து வைத்துக் கட்டப்படுகின்றன. கிரீமிலேயரால் ஏற்பட்ட அநீதி இது. இட ஒதுக்கீட்டைக் கொடுப்பதுபோல் கொடுத்துத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சிதானே!

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரே கூடாது என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு. அந்த நிலை எட்டப்படும் வரை இப்போதுள்ள ஆண்டு வருமானம் 6 லட்சம் என்பதைத் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பத்தரை லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியே திராவிடர் கழகம் போராடி வருகிறது.

எனவே ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களே! திராவிடர் கழகத்தின் இந்த சமூகநீதிப் போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!  திராவிடர் தொழிலாளர் கழகத்தில் இணைந்து பெல் நிறுவனத்திலும் அனைத்துப் பதவிகளிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளைப் பெற உறுதுணையாக இருப்பீர்!
நன்றி : விடுதலை தலையங்கத்திலிருந்து



திங்கள், 19 டிசம்பர், 2016

தை முதல் நாளைத் தமிழனின் புத்தாண்டாக்கி நம் தன்மானத்தை மீட்டெடுப்போம்!




சித்திரை 1அய் அடிப்படையாகக் கொண்ட ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழில் இல்லை. அதற்குச் சொல்லப்படும் கதையும் மிகமிக இழிவானது. தமிழகத்தை அய்ந்து முறை ஆட்சிசெய்த டாக்டர் கலைஞர் தமிழர்களின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் ஒத்துவராத அந்த சித்திரை 1அய் மாற்றி, மறைமலையடிகள், திரு.வி.க, நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் 1920ல் கூடி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி தை முதல்நாள்தான்  தமிழர்க்குப் புத்தாண்டு என்று அறிவித்தார்கள்.

உடனே இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உடனே ஜெயலலிதா தலைமையிலான அக்கிரஹார திமுக அரசாங்கம் இதனை மாற்றிவிட்டது.  பார்ப்பனர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் இருக்கிறது. இது என்னவென்றே தெரியாத தமிழர்களும் இதனை எதிர்த்தார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கத்தை மாற்றலாமா? என்பதுதான்.

காலம் காலமாக இருக்கிறது என்பதற்காக சம்பிரதாயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாகத்தான் இருப்போம். இந்த சம்பிரதாயங்களை மாற்றக் கூடாது என்று இன்று மட்டும் இவர்கள் சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பிஎம்எஸ் கும்பல்களின் குருநாதர் பாலகங்காதர திலகரும் சொன்னவர்தான்.
பிரிட்டிஷ்;காரன் காலத்தில் 1891ல் சம்மத வயதுச்சட்டம் என்ற ஒன்றை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார்கள்;.

 இந்த சட்டம் என்ன சொன்னது என்றால் மனைவிக்கு 12 வயது ஆனபிறகுதான் கணவன் அவளோடு உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றது. இதற்கு முன்பு இந்த வயது  பத்தாக இருந்தது. அப்படியென்றால் பத்து வயதுக்கு முன்பே திருமணம் நடந்தது என்பது மட்டுமல்லாது அப்போதே உடலுறவு கொண்ட காட்டுமிராண்டித்தனமும் நடந்தது நிச்சயமாகிறது.

என்ன கொடும சார் இது! விலங்குகள் பறவைகள்கூட குறிப்பிட்ட வயது வந்தபிறகுதான் அதனதன் இணையுடன் ஒன்று சேரும். ஆனால் அர்த்தமுள்ள இந்துமதத்தில் வயதுக்கு வருவதற்கு முன்பே, அதாவது ஒரு குழந்தையை வயது வந்த தடியன் உடலுறவு கொள்ளலாம் என்ற சட்டம் இருந்ததென்றால் இது என்ன நாடு?

இதனைக் காப்பாற்றுகின்ற மதம் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது?

இந்தச் சட்டத்தை எதிர்த்து வீராவேசமாக வெளிவந்தவர்தான்  லோகமான்ய பாலகங்காதர திலகர்.  பத்து வயதுக் குழந்தையை அவளது கணவன் என்ற முரடன் உடலுறவு கொண்டு கொன்று விட்டான். இத்தகைய கொடுஞ்செயலைப் பார்த்தே பிரிட்டிஷ் அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. திலகர் அந்தக் கொடியவனின் செயலை ஆதரித்ததோடு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.

இது எங்களுடைய மத உரிமை. எங்கள் மதத்தில் காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பழக்கத்தை மாற்ற அரசு சட்டம் இயற்றக்கூடாது என்று வாதிட்டார் திலகர்.

  அந்த வாதத்தை ஏற்று அச்சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் நாம் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான நாட்டில் வாழ்ந்திருப்போம் என்பதை எண்ணிப் பாருங்கள். அந்தத் திலகரின் வழி வந்த இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் கும்பலும் அவர்களின் சூழ்ச்சியை என்ன ஏதென்று அறியாத அப்பாவித் தமிழர்களும்தான் சித்திரை 1அய் மாற்றுவது கூடாது என்று வாதிடுகிறார்கள்
.
இது தமிழனின் மானத்துக்கும் அறிவுக்கும் விடப்பட்ட சவால். அதனை எதிர்த்து முறியடிப்பதில்தான் தமிழனின் தன்மானம் காப்பாற்றப்படும். எனவே, இந்துமத பிற்போக்கு வாதிகளின் பித்தலாட்டத்தை முறியடிப்போம். தை முதல் நாளைத் தமிழனின் புத்தாண்டாக்கி நம் தன்மானத்தை மீட்டெடுப்போம்!