*BMS/ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
*BMS/ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூன், 2018

பாரதீய மஸ்தூர் சங்கம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

பாரதீய மஸ்தூர் சங்கம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

பாரதீய மஸ்தூர் சங்கத்தினுடைய துவக்கமே வெகு மக்களுக்கு எதிரானது. ஏனெனில் அவர்களே பெருமையுடன் கூறுகிறபடி அவர்களது சங்கம் தேசபக்த திலகம் பாலகங்காதர திலகருடைய பிறந்த நாளன்று துவக்கப்பட்டதாகும்.

அந்தத் திலகர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு எதிரானவர்.
இந்த நாட்டுக்கு விடுதலைக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் திலகர் அவர்கள்äவிடுதலைக்குப்பின் இந்த நாட்டுக்கு அரசியல் சட்டமாக மனுதர்மம்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். பிராமணர்கள் சொற்படிதான் அரசுகள் இயங்கவேண்டும் என்பது மனுதர்மம். சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதும் மனுதர்மம். அவரவர் குலத்தொழிலை அவரவர் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதும் மனுதர்மம்.
அதன்படி ~எண்ணெய்க் கடைக்காரனும், வெற்றிலைபாக்குக் கடைக்காரனும், வண்ணார்களும் மற்றவர்களும் சட்டமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது ஏன்? என்று தனக்குப் புரியவில்லை| என்றார் திலகர். அதே கருத்தைத்தான் வல்லபாய் பட்டேலும் கொண்டிருந்தார்.    (ஆதாரம்: காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற புத்தகத்தில் அண்ணல் அம்பேத்கர்|

இந்தத் திலகரையும் வல்லபாய் பட்டேலையும் பிஎம்எஸ் காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இந்தத் திலகரும் பட்டேலும் கீழ்ஜாதி மக்கள் ஆரம்பக் கல்வியோடு நின்றுவிட வேண்டும். உயர் கல்வி கற்க ஆசைப்படக் கூடாது என்றவர்கள்.

அத்துடன் விவேகானந்தரை ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடி வருபவர்கள் பிஎம்எஸ் காரர்கள். அந்த விவேகானந்தர் எழுதிய பாரதமே உயிர்த்தெழு என்ற நூலினை பெல் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியது. அந்த நூலில் ஜாதி நல்லது. அது காப்பாற்றப்பட வேண்டும். அதனை  அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார். அது மாத்திரமல்லாமல் குயவன் குயவனாகவும் மீனவன் மீனவனாகவும் விவசாயி விவசாயி ஆகவும்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அத்துடன் ஒரு செருப்புத் தைப்பவன் நாட்டை ஆள முடியுமா? என்று கேட்டு உயர்ஜாதிப் பார்ப்பான்தான் நாட்டை ஆள வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிறார்.

மேலும் பெண்ணுரிமைக்கு எதிராக பல்வேறு  கருத்துக்களை முன் வைக்கிறார். விதவைகளுக்கு மறுமணம் கூடாது என்பதையும் மறுமணம் என்கிற கருத்தினையும் மிக மிக கொச்சைப் படுத்துகிறார்.
BJP யும் BMS ம் RSS எங்கேயும் மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா?

 தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டதால் வெளிப்படையாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேச மாட்டார்களே தவிர அவர்களுடைய வார்த்தைகளில் மறைமுகமாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு
“நமது சமுதாயத்தில் அர்ச்சகர்கள், ஆசிரியர்கள், மற்றும் வைத்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களைக் காப்பாற்றியது. அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷி, முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்குப் பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாகக் காத்து வருகிறது. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்”                                                                     (BMSசங்க மடல் 1998 ஜன. பிப்)
இப்படிச் சொல்கிறது பிஎம்எஸ்ஸின் சங்க மடல்.

இதில் உள்ள வார்த்தை ஜாலத்தைக் கவனித்தால் இதில் உள்ள விசமத்தனமும் ஆபத்தும் நன்றாகப் புரியும். இதுதான் மனுதர்மம். அர்ச்சகர்கள் ஆசிரியர்கள், வைத்தியர்கள் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றினார்களாம். என்ன தொண்டு? அவர்களால் யாருக்கு என்ன நன்மை? அர்ச்சகர்கள் யார்? ஆசிரியர்கள் யார்?இவர்கள் அனைவரும் பிராமணர்கள்தானே? அர்ச்சகர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? ஆசிரியர்கள் யாருக்குக் கல்வி புகட்டினார்கள்? பிராமணர்கள் வைத்தியத்தொழில் செய்தார்களா? அவர்கள் எல்லா சாதிக்காரர்களையும் தொட்டு வைத்தியம் செய்தார்களா? அடுத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுhயத்திற்காகத் தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களை; காப்பாற்றியது என்கிறது.


அர்ச்சகர்கள் ஆசிரியர்கள் வைத்தியர்கள் என்பவருக்கு மாத்திரமல்ல தொழிலாளர்களுக்கே கூலி என்பது கிடையாது. தொழிலாளர் என்பவர்களை சூத்திரன் என்றது மனுதர்மம். அந்த சூத்திரர்கள் ஏழு வகைப்படுவார்கள். அதில் ஒன்று சூத்திரன் பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளை என்று இழிவுபடுத்துகிறது.

சூத்திரனிடத்தில் ஒரு பிராமணன் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்கிறது மனுதர்மம். அந்த சூத்திரர்கள் மேல் வருணத்தாருக்கு தொண்டு செய்வதற்காகவே படைக்கப்பட்டார்கள் என்றும் மனு கூறுகிறது. அவர்களது உழைப்பை உறிஞ்சி உல்லாச வாழ்வு வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஏதோ சமுதாயத்திற்காக ஊதியம் எதுவும் வாங்காமலேயே இலவசமாக பணியாற்றியதுபோல பிஎம்எஸ் கதை விடுகிறது.

கல்வி சூத்திரர்களுக்குக் கிடைத்ததா? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றுதானே இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் இயற்றிய சட்டங்கள் சொன்னது?

இவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தார்கள் என்பதுதானே கடந்த கால வரலாறு? அர்ச்சகர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு  ப10ஜை புனஸ்காரங்கள், சடங்குகள்  செய்யாமல் இருந்தால் யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்குமா? எந்த நட்டமும் ஏற்பட்டிருக்காது. மாறாக நன்மைகள்தான் ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்கள் என்று சவடால் அடிக்கிறது பிஎம்எஸ்.

அடுத்து அரசர்கூட சட்டத்தை இயற்ற முடியாதாம். அது ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டதாம். சுவாமி சிவானந்தா என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்து ரிஷிகளும் முனிவர்களும் சமூகத்திற்குரிய லட்சியம் நிறைந்த திட்டத்தைத் தீட்டினர். தனியாரின் வாழ்வுக்கான லட்சியம் வாய்ந்த வழியையும் வகுத்துத் தந்தனர். அம்முறைதான் வர்ணாஸ்ரமதர்மம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வர்ணாஸ்ரமதர்மம் என்னும் அடிமனையால் இந்துமதம் என்னும் சொர்ண மாளிகை கட்டப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தலானது தன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவி புரிகிறது. இது மிகமிக அவசியமானது. அதன் விதிகள் மீறப்படுமானால் நாடு இருந்த இடம் காடாக மாறிவிடும். பொதுவான நிலையான தர்மத்தின் வளர்ச்சியை அல்லது மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துதலே வர்ணாஸ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கமாகும்.
  (இந்து தர்மம் என்ற நூலில் பக்கம் 89, சிவானந்தா ஆஸ்ரமம் வெளியீடு, நாமக்கல்)

~சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்@ பிராமணன் கொலை செய்தால் அவனுடைய தலையை மொட்டையடித்தால் போதும்| (மனுதர்மம் - அத்தியாயம் 8)

என்ற சாஸ்திர விதிகள் எல்லாம் இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் உண்டாக்கியதுதானே! இதனால் முழுப் பலனையும் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தானே? அதே அடிப்படையில் நமது சமுதாயத்தை அமைப்பதுதான் நமது இலட்சியம் என்று பிஎம்எஸ் சொல்கிறது என்றால் அவர்கள் யாருக்காக சங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் சொல்லுகின்ற அந்த சமுதாய அமைப்பு இன்று மாறிப்போய் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றியுள்ளார்கள். பிஎம்எஸ்ஸின் இந்தக் கூற்றுப்படி அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இந்த மனுதர்மம் தொழிலாளியிடத்தில் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொல்லுவதன் அடிப்படையில்தான் பெல் நிர்வாகம்கூட பொறியாளர்களையும் மேற்பார்வையாளர்களையும் நிரந்தர ஊழியர்களாக எடுக்கிறது.

ஆனால் உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில்நுட்பப் பணியாளர்களை மட்டும் முதலில் தற்காலிக ஊழியராக எடுத்து பிறகு அவர்களை நிரந்தரம் செய்கிறது. அதற்காகத்தான் நிர்வாகம் விவேகாநந்தர் எழுதிய பாரதமே உயிர்த்தெழு என்ற நூலை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியது. அதனை பிஎம்எஸ் வரவேற்றது.

உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால் பிஎம்எஸ் சங்கம் மட்டும் மே தினம் தொழிலாளர் தினம் அல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

மே தினத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் வைக்கும் முழக்கம் “உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்” என்பதாகும். தொழிலாளர்கள் ஒன்று பட்டால்தான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும். ஆதிக்க சக்திகளின் எதேச்சாதிகாரத்தை முறியடித்து பாட்டாளி சமுதாயத்தை அமைக்க முடியும் என்பது இதன் பொருள். ஆனால் பிஎம்எஸ் என்ன சொல்கிறது தெரியுமா?

“தொழிலாளர்களே, உலகை ஒன்று படுத்துங்கள்” என்று சொல்கிறது. (ஆதாரம் : பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001)

இதனுடைய நோக்கம் என்ன? தொழிலாளர்கள் ஒன்று பட்டுவிடக் கூடாது. அப்படி ஒன்றுபட்டு விட்டால் முதலாளிகளுக்கும் ஆதிக்கசக்திகளுக்கும் அது மிகப் பெரிய தொல்லையாகிவிடும். அதனால் தொழிலாளர்களை ஒன்று சேர விடாமல் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தால்தான் தங்கள் சுரண்டலை தாராளமாகச் செய்ய முடியும் என்பதுதான் அதன் நோக்கம்.

பிஎம்எஸ் சும் சங் பரிவாரும் அமைக்க விரும்பும் சமுதாயம் இந்து சமுதாயம் ஆகும். அந்த இந்து சமுதாயம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு தொழிலைச் செய்பவனும் ஒவ்வொரு ஜாதி;.

அந்தத் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உதாரணத்திற்கு செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர் ஜாதிக்காரருக்;குத்தான் செருப்புத் தைத்துத் தர வேண்டுமே தவிர தனது காலிலே அணிந்து கொண்டு வீதிகளிலே நடமாடக் கூடாது. வெயிலில் வெந்து சாக வேண்டும். கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அவன் நடக்க அவதிப்பட வேண்டும்.

அதுபோல ஒரு விவசாயி நன்றாக மாட்டை வளர்த்து பாலையும், நெய்யையும், தயிரையும் உயர் ஜாதிப் பார்ப்பனருக்குக் கொடுத்து விட்டு தான் அய்ந்துக்கும் பத்துக்கும் மற்றவர் கையை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.

ஒரு தொழிலாளியும் இன்னொரு தொழிலாளியும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது. கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக் கூடாது என்று தொழிலாளர் சமுதாயத்தைப் பிரித்து வைத்தது இந்து மதம்.

உதாரணமாக தீண்டத்தகாவர்களே ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ண மாட்டார். பெண் கொடுக்க மாட்டார். பெண் எடுக்க மாட்டார். ஒரு சலவைத் தொழிலாளியும் நாவிதரும் ஒன்று சேரக்கூடாது. ஒரு தச்சரும் குயவரும் ஒன்று சேரக்கூடாது. இப்படி எல்லா சாதியினரையும் பிரித்து வைத்து அவர்கள் உழைப்பையெல்லாம் சுரண்டி உயர்ஜாதியினர் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த உல்லாச வாழ்வுக்கு கேடு வந்துவிடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்று சேரக் கூடாது என்று பிஎம்எஸ் சொல்கிறது.

நாங்கள் ஏன் கீழ் ஜாதியாக இருக்க வேண்டும்? என்று கேட்டால் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவம், உங்கள் தலையெழுத்து, விதி என்றெல்லாம் காரணம் காட்டுவர். நீங்கள் மட்டும் எந்த உழைப்புமின்றி எங்கள் உழைப்பிலே உல்லாச வாழ்வு வாழ்கிறீர்களே! என்றால் அது எங்கள் முன்னோர் செய்த புண்ணியம் என்பார்கள்.

தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். பாவம், புண்ணியம், தலைவிதி, என்ற இந்த ஏமாற்று வேலை எடுபடாது. தங்கள் உல்லாச வாழ்வு ஒரு நொடியில் பறிபோய்விடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்றுபடக் கூடாது என்கிற தத்துவத்தை ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது.

அது உயர் ஜாதியினருக்கான அமைப்பு. தொழிலாளர் மத்தியில் அந்த சிந்தனையை அடிமை மனப்பான்மையை வளர்க்கத்தான் பிஎம்எஸ்ஸை ஆர்எஸ்எஸ் துவக்கியது. அதனால்தான் ஆர்எஸ்எஸ்ஸால் இயக்கப்படும் பிஎம்எஸ் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்தை முன்வைக்கும் மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

மே தினம் தொழிலாளர் தினம் அல்ல என்பவர்கள் விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறார்கள். அந்த விஸ்வகர்மா தினம் எது என்றால் செப்டம்பர் 17 என்கிறார்கள். இந்து மதத்தில் எந்த ஒரு கடவுளர் பிறப்பும் குறிப்பிட்ட நாளில் வராது. திதி நட்சத்திரம் ஆகியவற்றை வைத்துத்தான் அந்தப் பண்டிகை வரும். கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, கந்தர் சஷ்டி என்பதும் தீபாவளி, ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகைகளும் அப்படித்தான். ஆனால் இந்த விஸ்வகர்மா மட்டும் செப்டம்பர் 17 அன்று பிறந்தான் என்பது அவர்களது சூது மனதைக் காட்டுகிறது.

அந்த செப்டம்பர் 17தான் பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் வாயிருந்தும் ஊமையாய் கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கிடந்த மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டி சுயமரியாதை உணர்வூட்டி மனிதராய் மாற்றிய மகத்தான மனிதர் தந்தை பெரியார் பிறந்த நாளாகும். அந்த நாளுக்குரிய சிறப்பைக் குலைக்கவே இந்த செப்டம்பர் 17 அய்த் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் அதனை அறிவுப்பூர்வமாக மறுக்க வக்கற்று நாம் ஏதோ இந்த அய்ந்தொழிலாளர் எனப்படும் விஸ்வகர்மாத் தொழிலாளர்களுக்கு எதிரானவர் என்பதுபோல அவர்களை நமக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள்.

விஸ்வகர்மாவைக் கொண்டாடுவது அந்த கைவினைத் தொழிலாளர்களைச் சிறப்பிக்க அல்ல. மாறாக அவர்களையும் சூத்திரர் என்று சொல்லி அவர்கள் அணியும் பூணூலுக்கும் பார்ப்பனர் அணியும் பூணூலுக்கும் வேறுபாடு உள்ளது. பார்ப்பனர் அணியும் பூணூல்தான் உயர்ந்தது பார்ப்பனர்தான் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை நிலைநாட்டத்தான் என்பதால்தான் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி என்கிற நயவஞ்சகத்தை எதிர்க்கிறோம்.

அதற்கு உதராணம் என்னவென்றால் இத்தமிழ் மண்ணில் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, தான் பதவிக்கு வந்த உடன் இந்த அய்ந்தொழிலாளர்களான விஸ்வகர்மாத் தொழிலாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக்கூடாது, ஆசாரி என்றுதான் போடவேண்டும் என்று உத்தரவிட்டவர். அது ஏனென்றால் ராஜாஜியும் ஆச்சாரி என்று போடுகின்றார். இந்த விஸ்வகர்மாத் தொழிலாளியும் ஆச்சாரி என்று போடுகின்றார் என்றால் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும் என்பதால் இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக் கூடாது என்கிறார்.

அத்துடன் பாரதீயர்களுக்கு லட்சியம் மோட்சம் அடைவதுதான். ஆனால் பிற நாட்டினருக்கோ அதிக சொத்து சேர்ப்பதுதான். நமக்கு புண்ணிய பாபங்களுக்கு வேறுபாடு தெரியும். பிற நாட்டவருக்கு பாவ தத்துவம் மட்டுமே தெரியும். புண்ணிய தத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். நமது கலாச்சாரத்தை நாம் மதித்துப் புகழ வேண்டும் என்று ஒரே சிந்தனை என்ற தலைப்பில் ஜெயதேவ்ஜி என்பவர் ஆற்றிய உரையை பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001 கூறுகிறது.

அந்த பாவ புண்ணிய தத்துவம்தான் நமது மக்களை ஏழைகளாகவும் தொழிலாளிகளாகவும் கீழ்ஜாதியாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

பாடுபடாத சோம்பேறி பணக்காரனாகவும் உயர்ஜாதியாகவும் முதலாளியாகவும் இருக்க பாடுபடும் நீ ஏன் ஏழையாக இருக்கிறாய் என்று கேட்டால் மக்களிடமிருந்து வரும் பதில் எல்லாம் அவன் செய்த புண்ணியம் நாங்கள் செய்த பாவம் என்கின்ற பதில் வரும். இந்த பாவ புண்ணிய தத்துவம் என்பது உழைக்கும் மக்களையே தங்களது இழிநிலைக்குக் காரணம் தங்கள்தான் தங்களை சுரண்டிப்பிழைக்கிற  உயர்ஜாதியினரோ பணக்காரர்களோ முதலாளிகளோ அல்ல என்கின்ற ஒரு சிந்தனையை உருவாக்கி சுரண்டல்வாதிகளுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கி வைத்திருக்கிறது.
அந்த பாவம் - புண்ணியம் என்கிற சிந்தனையைப் பாதுகாத்து காலா காலத்துக்கும் தொழிலாளர்களை ஏழைகளாகவும் கீழ்ஜாதியாகவும் வைத்திருந்து சுரண்டல்வாதிகளைப் பாதுகாப்பதுதான் பிஎம்எஸ் சின் கொள்கை என்பதால்தான் அதனை நாம் எதிர்க்கிறோம்.

அதுபோல ஏழைகள் கீழ்ஜாதியினர் உயர்ஜாதியினர்களுக்கு குறிப்பாக பார்ப்பனர்களுக்கு சேவை செய்வதன் மூலமாகத்தான் அடுத்த பிறவியில் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும் என்கிறது அவர்கள் கூறுகின்ற அந்த மதம். அதுதான் இந்து மதம். அந்த இந்துமதம்தான் தொழிலாளர்களுக்கும்  அதாவது சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடையாது. அவர்கள் சொர்க்கம் அடைய வேண்டும் என்றால் இந்தப்பிறவியில் பிராமணர்களுக்கு தொண்டூழியம் செய்வதன் மூலம் அடுத்த பிறவியில் பிராமணராகப் பிறப்பார்கள். அதன்பிறகே அவர்கள் மோட்சத்தை அதாவது சொர்க்கத்தை அடைவார்கள் என்கிறது.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்த ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் மறுபிறப்பு ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். அவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன் என்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் இந்த ஆத்மாபற்றியும் சொர்க்கம் நரகம் பற்றியும்  என்ன கூறுகிறார் என்றால் "இறந்தபிறகு ஆத்மாவுக்கு என்ன ஆகும்? என்ன ஆகாது? என்று வியாக்கியானம் செய்யும் மதம் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். அவர்களும் சாவகாசமாக உட்கார்ந்து அந்த மதத்தைப்பற்றி நினைத்து நினைத்து தங்கள் பொழுதுகளைப் போக்கிக் கொள்ளலாம். வாழும்போது அனைத்துவிதமான உல்லாசங்களிலும் ஊறித் திளைத்தவர்களுக்கு செத்த பிறகும் அதே உல்லாசத்தோடு வாழ மேலே ஒரு லோகம் காத்துக் கிடக்கிறது என்று ஆசை காட்டும் மதம்தானே  ஒரு மதமாகத் தெரியும்? ஆனால் அந்த மதத்தில் இருப்பதனாலேயே மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டவர்களும் உணவு உடை மறுக்கப்பட்டவர்களும் மனிதர்களாகக் கூட நடத்தப்படாதவர்களும் உலகியல் நோக்கில் மதத்தை அணுகாமல் கண்களை மூடி வானம் பாரத்து வணங்குவார்கள் என்று எதிர் பார்;க்க முடியுமா? இந்தப் பணக்கார சோம்பேறிகளின் வேதாந்தங்களினால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது| என்று கேட்பதன் மூலம் இந்த மோட்சம் நரகம் பாவம் புண்ணியம் என்ற தத்துவத்தை சோம்பேறிகளின் வேதாந்தம் என்கிறார்.

அப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக உழைக்கும் மக்களைத் தயார் படுத்துவதே பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ்சின் கொள்கை என்பதால்தான் நாம் பிஎம்எஸ் சையும் ஆர்எஸ்எஸ் சையும் எதிர்க்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனருக்கு அடிமையாக்கி பார்ப்பனர்களே நாட்டை ஆள வேண்டும். அவர்களுக்குக் கீழே தொழிலாளர்கள் உழைத்துப் போட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிஎம்எஸ் சும் ஆர்எஸ்எஸ் சும் செயல்படுகிறது என்பதனாலேயே அதனை எதிர்க்க வேண்டியது அவசியம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அதில் இருப்பது அவமானம் மட்டுமல்ல அடிமைத்தனம் என்பதாலும் அதனை எதிர்க்கிறோம்.

அத்துடன் இவர்கள் சங்கம் துவக்கிய காலத்தில் தங்களுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் தொடர்பே இல்லை என்று சத்தியம் செய்தார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மை மக்களை ஏமாற்றி சங்க அங்கீகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அதில் சேர்ந்த பிறகு தொழிலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக மூளைச்சலவை செய்து ஆர்எஸ்எஸ் சின் பக்கம் ஈர்த்து தங்களது மதவெறிக்கு அவர்களைப் பலிகடாவாக்குவதற்குப் பயன்படுத்துவார்கள்.
மேலும் இதுவரை பிஎம்எஸ் சங்கம் அரசியல் கட்சியான பிஜேபி யோடு உறவே இல்லாததுபோல நடிப்பார்கள். அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதாகக் கூட நாடகம் ஆடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்து விட்டால் பிஜேபிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பார்கள்.

பிஜேபி பெரும்பாலும்தேர்தலில் போட்டி இட மாட்டார்கள். ஆனால்திருச்சியிலும் திருவெறும்பூரிலும்   ரங்கராஜன் குமாரமங்கலம்ää சுகுமாறன் நம்பியார்ää லலிதா குமாரமங்கலம் போன்றோர் போட்டி இட்ட போது அவர்களுக்காக வரிநது கட்டி தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.
இப்படி எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடுவதே அவர்களது செயல்பாடாக இருக்கிறது என்பதனால்தான் பிஎம்எஸ்ஸை எதிர்க்கிறோமே தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.

மற்ற சங்கங்களிடமும் குறை இல்லாமல் இல்லையா. அவர்களைக் குறை கூறாமல் பிஎம்எஸ் சை மட்டும் குறை சொல்வது ஏன் என்று கேட்டால் மற்றவர்கள் தாங்கள் யார், தங்களது கொள்கை என்ன? எந்த அரசியல் கட்சியினுடைய சங்கம் என்பதை வெளிப்படையாக அறிவித்து செயல்படுபவர்கள்.
ஆனால் பிஎம்எஸ் எதையுமே வெளிப்படுத்தாமல் ரகசியமாக இயங்கக் கூடியவர்கள்.

மற்ற சங்கங்களில் குறை இருக்கிறது என்றால் அது பாலில் தண்ணீர் கலந்ததுபோல. அதனை அருந்தினால் சத்துக்கள் குறையலாமே தவிர உயிருக்கு ஆபத்தில்லை.
ஆனால் பிஎம்எஸ் மட்டும் விசம் கலந்த பால் போன்றது. அதனை அருந்தினால் உயிர் போகும். அந்த விசம்தான் ஆர்எஸ்எஸ் என்பது. அந்த ஆர்எஸ்எஸ் நச்சரவம் உழைக்கும் மக்களுக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை பார்ப்பனர்களுக்கு அடிமையாக்குவது. அதனால்தான் அதனை எதிர்க்கிறோம்.

எனவே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் அதனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டு;க்கொள்கிறோம்.


வெள்ளி, 25 மே, 2018

கம்யூனிசம் பற்றி பிஎம்எஸ் சின் புருடா



“காட்டுத்தீ எரிந்துகொண்டே இருக்கும். அனைத்தையும் கருக்கி விடும். கம்யூனிசமும் இதைப் போலவே செய்லபட்டு வருகிறது. எனவே,கம்யூனிசமும் ஜனநாயகமும் ஒருபோதும் சேர்ந்து இருக்க முடியாது” என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதாக புருடா மன்னர்கள் தனது பிஎம்எஸ் நியூஸ் மே 2018ல் தெரிவித்துள்ளார்கள். இதற்கு என்ன ஆதாரம்? அண்ணல் அவர்கள் எங்கே அப்படிச் சொல்லி இருக்கிறார்? என்றெல்லாம் ஒன்றும் அதில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் நாம் படித்தவரை “இந்துமதம் ஒரு எரிமலையின் மீது மிதந்துகொண்டிருக்கிறது. இன்று அது உயிரற்ற எரிமலையாகத் தோன்றலாம். ஆனால் அதில் உண்மை இல்லை. இந்த வலுமிக்க கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்கள் தாங்கள் இழிநிலையில் இருப்பதற்குக் காரணம் இந்து மதத்தின் தத்துவங்கள்தான் என்பதை உணர்ந்த நொடியில் அது உயிர்பெற்று வெடிக்கத் தொடங்கிவிடும்” என்கிறார் அம்பேத்கர். ஆதாரம் : அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு தொகுதி 17

அதுபோல கம்யூனிசமும் ஜனநாயகமும் சேர்ந்து இருக்க முடியாது என்று சொல்லும் புருடா மன்னர்களுக்கு அம்பேத்கர் என்ன கூறுகிறார் தெரியுமா?

 “ பார்ப்பனியமும் ஜனநாயகமும் எதிரெதிர் நிலைகளில் நிற்பவை. ராமன் கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்கள். ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள்” என்று கூறி அவர்களின் தேசியக் கதாநாயகர்களான ராமன், கிருஷ்ணன் ஆகியோரின் யோக்கியதையைத் தோலுறிக்கிறார். ஆதாரம் ஜனதா இதழில் 17.5.1951ல் அம்பேத்கர் எழுதிய கட்டுரை

மேலும் அம்பேத்கர் அவர்கள் “ உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக்கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான் ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும்  இந்த வகையில்  முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். உழைக்கும் வர்க்கம் இந்த ஆவணங்கள் மீது உரிய கவனம் செலுத்தத் தவறி விட்டன. மாறாக பண்டைய மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய புனைசுருட்டல்களின் கட்டுக்கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர். இந்தக் கெட்ட பழக்கத்திற்கு அடிமைகளாகி விட்டனர்” என்று அம்பேத்கர் நூல் தொகுதி 18 பக்கம் 144ல் குறிப்பிடுகிறார்.

மார்க்சின் மூலதனத்தைத் தொழிலாளர்கள் படிக்க வேண்டும் என்று சொல்கிற அம்பேத்கர் எந்த இடத்திலும் இராமாயணத்தைப் படியுங்கள், கீதையைப் படியுங்கள், வேத புராண இதிகாசங்களைப் படியுங்கள் என்று சொன்னதில்லை. மாறாக சாதி ஒழிய வேண்டுமானால் இந்தப் புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் அனைத்தும் புனிதமானவை என்ற நம்பிக்கையைத் தகர்க்க வேண்டும் என்று தனது ஜாதி ஒழிப்பு என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். (நூல் தொகுதி 1)


அத்துடன் தொழிலாளர்கள் காங்கிரஸ் மற்றும் இந்துமகாசபையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறார். அப்படி விலகி இருப்பதன் மூலமாகத்தான் தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அண்ணல் கூறுகிறார். (ஆதாரம் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் நூல் தொகுதி 18பக்கம் 146)

இந்துமகாசபை என்பது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கட்சி. பாஜக வின் முந்தைய பெயர். பிஎம்எஸ்சின் மூத்த சகோதரர்) இந்துமகாசபையில் சேரக் கூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் இன்று பிஎம்எஸ் வைக்கும் தேசபக்தியுள்ள தொழிலாளர்களை உருவாக்குவோம் என்ற முழக்கமும் தொழிலாளர்களை ஏமாற்றும் தந்திர வார்த்தை என்றும் கூறுகிறார்.


எனவே,ஆர்எஸ்எஸ் பிஎம்எஸ் கும்பல் தன்னை செருப்பாலடித்ததை மறைத்து அடுத்தவரை குச்சியால் அடித்ததாக பெரிதுபடுத்தி இன்பம் காண்கிறது. அவர்களின் பித்தலாட்ட வார்த்தைகளில்; மயங்க வேண்டாம் என்று தொழிலாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


திங்கள், 26 ஜூன், 2017

எதையாச்சும் தியாகம் செஞ்சுதானே ஆகனும்



அண்ணன்ஜி : டேய் தம்பி இங்கே வாடா

தம்பி : என்னண்ணே ரொம்பநாளா இந்தப் பக்கமாக் காணோம், போன பங்குபெறும் சங்கத் தேர்தலின்போது பாத்தது அதுக்கப்பறும் இப்பத்தான் பாக்கிறேன், என்னண்ணே விசேசம்

அண்ணன் : அப்படிக் கேளுடா பணிக்குழுத் தேர்தல்ல நம்ம பிஎம்எஸ் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டுருடா தம்பி அதாண்டா இப்ப வேணும்

அண்ணேää போன பங்கு பெறும் சங்கத் தேர்தலில நீங்க சொன்னிங்கன்னு மரியாதைக்கு ஓட்டுப் போட்டேன். அதுக்கப்புறம் அவங்க நடவடிக்கை ஒன்னும் திருப்தியா இல்லியேண்ணே

அப்படி என்னடா நடந்துபோச்சு

அப்படிக் கேளுண்ணேää இதுக்கு முன்னே இருந்தவங்க எல்லாம் கையாலாகாதவங்கன்னும் நாங்க வந்தா இழந்தத மீட்போம் இருப்பதைக் காப்போம்னெல்லாம் சொன்னீங்களேண்ணே இப்ப செஞ்சீங்களான்னே PPP போனசும் ளுஐP போனசும் இதுவரைக்கும் இருந்தவங்க வாங்கிக் குடுத்ததைவிட மிகமிக குறைஞ்சுபோச்சுண்ணே. என்னோட பத்து வருட சர்வீஸ்ல இவ்வளவு கேவலமான போனச நான் வாங்கினதே இல்லண்ணே. இதுக்கு முன்ன இருந்தவங்க முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணவங்க வாங்கின போனசை எங்களுக்கு வாங்கிக் கொடுத்தாங்க நீங்க வந்து அதைக்கூட இல்லாம படு கேவலமான தொகைய வாங்கிக் கொடு;த்தீங்க. வீட்டுல கொண்டு போயி இதான் போனசு ன்னு கொடுத்தா என் பொண்டாட்டியே என்ன நம்ப மாட்டேங்குறாண்ணே

விடுறா விடுறா கம்பெனியே நஷ்டத்துல ஓடுது நாம என்னடா பண்ண முடியும்?

சரிண்ணே இந்த வருஷம்தான் இலாபம் வந்துருச்சில்லண்ணே இப்ப என்ன நடந்துச்சு. நஷ்டம்னு சொன்னப்ப அரைகிலோ ஸ்வீட் கொடுத்தாங்கண்ணே இப்ப அதுகூட இல்லையேண்ணே வெறும் நானூறு கிராம்தான் குடுத்தாங்கன்னு கொண்டுபோயி வீட்டில கொடுத்தா என்னோட கடைக்குட்டி பிள்ளைகூட என்னை கேவலமாப் பாக்குதுண்ணே,என்னப்பா இதெல்லாம் ஒரு ஸ்வீட்டான்னு கேட்குதுண்ணே என்னால ஒன்னும் பேச முடியலேண்ணே

சரிடா தம்பி ஸ்வீட்டெல்லாம்  ஒரு மேட்டரா வேற சொல்லு தம்பி

ஸ்வீட்டெல்லாம்கூட என் பிள்ளைகளுக்கு வாங்கிக் குடுத்துருவேன் அண்ணே,தமிழக முதல்வர் செத்தப்ப லீவு கெடைக்கும்னு நம்பி நானும் வேலைக்கு வரலேண்ணே இந்த வீராதி வீர சூராதிசூர உங்க சிங்கக் குட்டிக எனக்கு மட்டுமில்லை என்னப்போல முப்பது நாப்பது கிலோமீட்டருக்கு மேல இருந்து வார்றவங்க எல்லோருக்கும் நாமத்த சாத்திப்புட்டாங்களேண்ணே

 தம்பி கம்பெனி நல்லா இருக்கனுமின்னா நாம எதையாச்சும் தியாகம் செஞ்சுதானே ஆகனும்

நாங்க நல்லா இருந்தாத்தானே கம்பெனி நல்லா இருக்கும்? நீங்க போன தேர்தல்ல மத்த சங்கத்த எல்லாம் பாத்து சொன்னாங்களே செஞ்சாங்களா சொன்னாங்களே செஞ்சாங்களான்னு கேட்டு புக் போட்டீங்களே அண்ணே ஒங்க ஆளுங்க சொன்னத எதையாச்சும் செஞ்சாங்களா அண்ணே! காலாண்டுப் பரிசுப்பொருள் வாங்கித்தருறோம்னு சொன்னாங்க செஞ்சாங்களா? 2012லே இருந்து புது வேஜ் ரிவிசன் வாங்கித் தருவோம்னு சொன்னாங்களே, இப்ப 2017 முடிஞ்சு அஞ்சு மாசம் ஆயிருச்சேன்னே வேஜ் ரிவிசன்கிற வார்த்தையையே உங்க ஆளுங்க உச்சரிக்கிறதில்லையே அண்ணே, எப்பவும் ஏப்ரல் பொறந்த ஒடனே இலாபம் இவ்வளவுன்னு தெளிவா சொல்லிப்புடுவாங்க. இந்த வருடம் இலாபமா? நட்டமா? எதுவுமே தெரியலேண்ணே! இன்னும் எவ்வளவோ இருக்குது அண்ணே அந்த லட்சணத்துல மறுபடியும் வந்து பிஎம்எஸ்சுக்கு ஓட்டுப் போடுன்னு கேட்குறீங்களேண்ணே, உங்களுக்கு வெட்கமே இருக்காதாண்ணே!

டேய், வெட்கத்தப் பாத்தா எல்லாம் நடக்குமாடா, நம்ம ஆளுக நிக்குறாக அவுகளுக்கு எப்படியாவது ஓட்டுப்போட்டுருடா அவ்வளவுதான்

இப்படியெல்லாம் நம்மாளுக அவங்க ஆளுக அப்படின்னெல்லாம் பேசிக்கிட்டு வராதீங்க. ஒன்னு மட்டும் சொல்லுறேன் யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப்போடுவேன். எதையாவது கேட்டா தியாகம் பண்ணனும்னு சொல்லுற ஒங்க ஆளுகள இப்ப தியாகம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்ää போயிட்டு வாங்கண்ணே!
கருத்து :

BMS n கிடுகிடு போராட்டம்



BMS n  கிடுகிடு போராட்டம்

நாங்க நடந்தா நிர்வாகமே நடுநடுங்கும்! கார்ப்பரேட்டே கதிகலங்கும்! மத்திய அரசே மதிமயங்கும் என்றெல்லாம் சவடால் விட்டாங்க! எங்க கிடுகிடு போராட்டத்தால மத்திய அரசு போட்ட உத்தரவையே வாபஸ் வாங்கும். மோடியே பயந்து நடுங்குவாரு.
மத்த யாருமே கையலாகாவங்க! எங்களாலதான் எல்லாம் முடியும்! ஏற்கனவே நாங்க வந்து அதப்புடுங்கினோம் இதைக் கத்தை கட்டினோம் என்று மற்றவர்கள் சாதிச்சத எல்லாம் தன்னோட சாதனைன்னு சொல்லி ஏமாத்தி ஓட்டுக் கேட்டாங்க. அதையும் நம்பித் தொழிலாளிங்களும் ஓட்டுப் போட்டாங்க.  இப்ப என்னய்யா ஆச்சு?

உற்பத்தி முடிஞ்சு போச்சு. முடிஞ்ச உடனே நிர்வாகம் உற்பத்தி முடிஞ்ச மகிழ்ச்சியைக் குடும்பத்தோடு கொண்டாடுங்கன்னு சொல்லி கிலோ கணக்கில இனிப்பு காரமெல்லாம் கொடுப்பாங்க. இலாபம் நெறையக் கெடச்சப்ப நெறைய இனிப்பு கெடச்சது. போன வருடம் லாபம் இல்லேங்கிறது எல்லோருக்கும் தெரியும்.
நிர்வாகம் இந்த ஆண்டு இனிப்புக் கொடுத்து கொண்டாடுற மனநிலை இல்லே. அதனால இனிப்பு இல்லே அப்படின்னாங்க. அப்போ இருந்த கையாலாகாத நாலு பங்குகளும் இந்த வருடம் இலாபமில்லாட்டி என்னங்க. இனி வரப்போற வருடத்திலே இலாபத்த சம்பாதிச்சுத் தர்றோம். இத்தனை வருடமா கொடுத்துப்புட்டு இப்ப கொடுக்கறத நிறுத்தினா நல்லா இருக்காது என்று வலியுறுத்தி அரை கிலோ இனிப்பாவது வாங்கிக் கொடுத்தாங்க.

இலாபம் இல்லாதப்பவே அரை கிலோ வாங்கிக் கொடுத்தாங்க என்கிறபோது இலாபம் வந்துள்ள இந்த வருடம் எப்படி இருக்கனும்? அதை விட கூட இல்லாட்டியும் குறையாமலாவது இருக்கனுமா இல்லையா?

இப்ப எவ்வளவு? கிலோ கணக்கெல்லாம் கிடையாது. போனாப் போவுது 400 கிராம் வாங்கிக்கன்னு நிர்வாகம் சொல்ல அதுகூட எதுக்குங்க நீங்க குடுக்கறதக் குடுங்கன்னு கால்கிலோ மிக்சர் கூட இல்லாம 200 கிராம் வாங்கித் தர்றாங்க வீராதி வீர சூராதி சூரர்கள் இடம் பெற்றுள்ள இந்த ஆண்டில்.

இதுதான் பெர்ர்ரிய சாதனை இந்த ஆண்டில். அது மட்டுமா?
கையாலாகாத பங்குகள் இருந்தப்ப நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள் மறைவுற்றாங்க.

இந்திராகாந்தி அம்மையார் இறந்தப்ப நாலுநாள் லீவு கெடச்சது. எம்ஜியாருக்கும் நாலுநாள். அதே மாதிரி ராஜீவ் மறைந்தபோதும் லீவு கெடைச்சது.

அதெல்லாம் கையாலாகாதவர்கள் வாங்கித் தந்தது.
இப்ப இந்த வீராதி வீர சூராதி சூரப்புலிகள் வந்த பிறகு தமிழக முதலமைச்சராக இருந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் மறைவுற்றாங்க  ஏற்கனவே முன்னுதாரணம் இருக்கறதால வெளியூரில இருந்து வருகிற தொழிலாளியெல்லாம் சிறப்பு விடுப்பு கிடைச்சிரும் கிற நம்பிக்கையில மெத்தனமா இருந்துட்டாங்க. அதோட இந்த வீராதி வீர சூராதி சூரப்புலிகள் கிடு போராட்டம் நடத்தியாவது சிறப்பு விடுப்பு வாங்கித் தந்துருவாங்கன்னு நம்பி … லீவு போட்டுட்டாங்க. இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா பஸ் இல்லாட்டியும் நடந்தாவது வேலைக்கு வந்திருப்பாங்க. யாரு அடிச்சாலும் பரவாயில்லேன்னு மறைஞ்சு மறைஞ்சாவது வேலைக்கு ஓடோடி வந்திருப்பாங்க.

நம்பிக்கையெல்லாம் வீணாப்போச்சே! இனி எதிர் காலத்தில யார் செத்தாலும் லீவு கெடைக்காதுங்கிற பெரிய சாதனை நடந்துருக்கு.
அதுக்குப் பிறகும்கூட நம்ம மருத்துவ பிடித்தம் சம்மந்தமா கிடுகிடு போராட்டம் நடத்தி கார்ப்பரேட்டையே கதிகலங்க வச்சாங்க. அப்படிக் கதிகலங்க வச்சவங்க ஜெ.அம்மையார் மறைவுக்கு லீவு வாங்கித் தருவாங்கன்னு எதிர்பார்த்தாங்க. அதுவும் நடக்கல. இப்ப ஸ்வீட்டும் கசப்பாப் போச்சு. இனனும் என்ன என்னவெல்லாம் பறிபோகுமோ? வேஜ் ரிவிசன் வேற வருதுன்னு தொழிலாளி பயத்தோட இருக்கிறான். பார்ப்போம். என்ன நடக்குதுன்னு!

புதன், 11 ஜனவரி, 2017

இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?



விவேகானந்தர் இந்தமதத்தின் பெருமைகளை அமெரிக்காவரை சென்று பரப்பி வந்தவர் என்று எல்லோரும் பெருமைபொங்கச் சொல்லுவர். அவருக்கு அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? அமெரிக்கா உருவாகி 400வது ஆண்டுவிழா 1883ல் சிகாகோவில் நடத்தப்பட்டது. உலக மதங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது. இந்து மதத்தில் பார்ப்பனர் ஒருவருக்குத்தான் அந்த அழைப்பு வந்தது. பார்ப்பனர் கடல் தாண்டிச் செல்வது ~தோஷம்| என்பதால் அவர் செல்ல மறுத்ததனால் பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

அங்கு பேசிய அனைவரும் ~லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்| என்று பேசினார்களாம். விவேகானந்தர் ~பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்| என்று பேசினாராம். உடனே அவருக்குக் கூடுதல் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள் என்று வானத்தைக் கிழித்து எழுதி வருகிறார்கள்.

உண்மையில் இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா? கூட்டம் முடிந்தவுடன் பலர் அவரிடம் கேள்வி கேட்டார்கள். உங்கள் நாட்டில் மனிதனை மனிதன் தொட்டால் தீட்டுää பார்த்தால் பாவம்ää நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை இருக்கிறதே! அப்படியிருக்க, சகோதரத்துவம் நிலவுவதாகச் சொல்வது சரிதானா? என்ற கேள்விக்கு விவேகானந்தரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

பிறப்பதற்கு முன்பே ஒரு குழந்தையின்மீது திணிக்கப்பட்ட ஜாதி அந்தக் குழந்தை பெரியவனாகி இறந்த பிறகு சுடுகாட்டில்கூடத் தொடர்கிறதே! மனிதன் சாகிறான்@ ஆனால் அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மதத்தில் சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால்ää அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துச் சொல்லப்பட்ட பொய்யுரை அல்லவா?

அமெரிக்கா வரை சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

அந்த விவேகானந்தர் விழா என்று இங்கே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புருடா மன்னர் சங்கமான பிஎம்எஸ் கொண்டாடுவதற்கு யாரை அழைத்து நடத்துகிறது? ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து நடத்துகிறது! அந்த ஆர்எஸ்எஸ் சுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லையென்று இவ்வளவு நாள் சத்தியம் செய்து வந்ததே! அது என்ன ஆனது? அப்பாவி கிறிஸ்தவää முஸ்லிம்ää தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களை ஏமாற்றுவது அல்லாமல் வேறு என்ன?

அந்த ஆர்எஸ்எஸ் மனுதர்மத்தை இந்த நாட்டின் சட்டமாக்குவோம் என்கிறது. மனுதர்மம் தொழிலாளர்களை தேவடியாள் பிள்ளை என்கிறது. அவனிடத்தில் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்கிறது அந்த மனுதர்மம்.

இந்நிலையில் தொழிலாளிக்காகப் பாடுபடுவதாகச் சொல்வது யாரை ஏமாற்ற? உழைப்பவனுக்கு எந்த உரிமையுமில்லை என்பதோடு அவன் இழிந்தவன் கீழானவன் என்கிறது மனுதர்மம்@ உழவுத்தொழில் பாவமான தொழில் என்பதும் அந்த மனுதர்மம். ஆனால் உழவுத்தொழிலால் கிடைக்கும் பச்சரிசி, வாழைக்காய், கத்திரிக்காய், பருப்பு, புடலங்காய், மாங்காய் எல்லாவற்றையும் தின்று கொழுப்பவன் பார்ப்பான். உழவுத்தொழில் இல்லாமல் இவையெல்லாம் பார்ப்பான் சொல்லும் மந்திரத்தில் கிடைக்கிறதா? பாவமான உழவுத்தொழிலைச் செய்யும் விவசாயி கீழ்ஜாதி! உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பான் மேல்ஜாதியா? பிஎம்எஸ்ஸே! பிதற்றாமல் பதில் சொல்!!

வியாழன், 5 ஜனவரி, 2017

ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசும்; வீராதி வீரர்களே! இதற்கும் பதில் சொல்லுங்க!

இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இறந்தாங்க. பேருந்து ஓடல. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாலுநாள் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் இறந்தபோது அதே நிலை. சிறப்பு விடுப்பு கிடைத்தது. இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இறந்தார். அதற்கும் சிறப்பு விடுப்பு கிடைச்சது.


ஆனா இப்போ தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் இறந்துபோனார். முதல் நாள் தொழிலாளர்கள் வீடு திரும்பும்போதே அவரது இறப்புச் செய்தி கசிந்தது. அப்பவே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. ஒருவித பீதி கிளப்பப்பட்டது.

அதனால் அதிகாரப்பூர்வமாக அவரது இறப்பு அறிவிக்கப்பட்ட பிறகு வேலைக்கு வருவதற்கு ஒருவித அச்சம் ஏற்பட்டதால் வெளியூரிலிருந்து வேலைக்கு வருபவர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. ஏற்கனவே இந்திராகாந்திää எம்ஜிஆர்ää ராஜீவ்காந்தி ஆகியோரது இறப்பிற்கு விடுமுறை கிடைத்தது என்ற முன்னுதாரணம் இருப்பதால் இதற்கும் விடுப்பு கிடைக்கும் என எல்லோரும் நம்பினாங்க. வெளியே வர பயந்துகொண்டு லீவு போட்டுட்டாங்க.

ஆனால் நாங்க கோரிக்கை வச்சோம். நிர்வாகம் முடியாது போன்னு சொல்லிருச்சு. நாங்களும் மூடிக்கிட்டு வந்துட்டோம் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது? அப்போதுகூட நான்கு நாட்கள் லீவு கிடைத்தது. இப்போது ஒரே ஒருநாள்தான் தேவைப்பட்டது. அதைக்கூட வாங்கித் தர முடியவில்லையென்றால் இந்தப் பங்குகளை என்ன சொல்வது?

அப்போது இருந்தவங்க எல்லாம் கையாலாகாதவங்கதானே? அவங்களே லீவு வாங்கித் தந்திருக்கிறபோது அதை முன்னுதாரணமாக எடுத்துக்கிட்டு அதே போக்குவரத்துப் பிரச்சினையைக்காட்டி ஏன் இப்போது வாங்கித் தர முடியல? தேர்தலின்போது விட்ட வாய்ச் சவடால் என்னாச்சி? அர்ஜூனரு வில்லு. இராமரோட அம்பு. அனுமானோட தெம்பு எல்லாம் இருந்தும் இப்ப ஏன் வாங்கித் தரமுடியல?

பிஎஃப் வட்டிய மோடி அரசு குறைச்சப்ப நாங்க நடத்தின கிடுகிடு போராட்டத்துக்கு பயந்துக்கிட்டு வட்டிக் குறைப்ப வாபஸ் வாங்கிட்டாங்கன்னு பீலா உட்டீங்களே! இப்ப வட்டியையும் குறைச்சுட்டாங்க. இங்க கிடைச்ச லீவும் கிடைக்கலயே! அதுக்கு என்னா பதிலு? வீராதி வீரர்களே பதில் சொல்லுங்க! இல்ல இல்ல. நாங்க மோடியோட ஆளுங்க. அவரு அப்பப்ப வாய்ச்சவடால் அடிப்பாரு. அம்பது நாள் பொறுத்துக்கச் சொன்னாரு. அம்பது நாள் ஆன பிறகு வேற கதையச் சொல்றாரு. அது மாதிரிதான் நாங்களும். எங்களால வாய்ச்சவடால்தான் அடிக்க முடியும். காரியத்துல ஒன்னும் ஆகாதுன்னு ஒத்துக்கங்க. யாரும் கேக்கல.

திருமயம் தொழிலாளர்களின் பரிதாப நிலை

அதே மாதிரி திருமயத்தில இருந்து பல தொழிலாளர்கள் இங்கே வந்திருக்காங்க. இங்கே வந்து மத்த தொழிலாளிங்க மாதிரியே கடுமையா வேலையும் பாக்குறாங்க. மிகைநேரப்பணிக்குரிய உற்பத்தியையும் கொடுக்கிறாங்க. அப்படி இருந்தும் அவங்களுக்கு மிகைநேரப்பணி இல்லையே! அதுக்கு என்ன காரணம்?

ஒரே பந்தியில உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவருக்கு வடை பாயசத்துடன் சாப்பாடு. இன்னொருவருக்கு பிரியாணிää கறிää மீன் பரிமாறுறாங்க. ஆனா அதில ஒட்கார்ந்திருக்கிற சில பேருக்கு வெறும் ரசம் சோறுதான் கிடைக்குதுன்னா இது என்ன வகைக் கலாச்சாரம்? ஒரு கண்ணில் வெண்ணை. மறு கண்ணில் சுண்ணாம்பா? ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசும்; வீராதி வீரர்களே! இதற்கும் பதில் சொல்லுங்க!

திங்கள், 19 டிசம்பர், 2016

விவேகாந்தருக்கு விழா எடுக்கும் பிஎம்எஸ்ஸே! பதில் சொல்!

விவேகாந்தருக்கு விழா எடுக்கும் பிஎம்எஸ்ஸே!

1) கடந்த ஆண்டு பெல் நிர்வாகம் வழங்கிய பாரதமே உயிர்தெழு! என்ற நூலில் கடமையைச் செய் பலனை எதிர் பாராதே! என்று கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக தொழிலாளிக்குப் பாடுபடுவதே எங்கள் கடமை! பங்குபெறும் சங்கத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பலன் எங்களுக்குத் தேவையில்லை என்று அறிவிப்பீர்களா?

2) விவேகானந்தர் ஜாதி போகக் கூடாது ஜாதிகள் நல்லது. ஜாதியை அழிக்க விரும்புவது முட்டாள்தனம் என்கிறார். அதுதான் உங்கள் கொள்கையா?

3) விதவைத் திருமணம் கூடாது என்கிறார். ஒரு ஆண் மனைவி இறந்த உடன் மறுமணம் செய்துகொள்ளலாம். ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ளக் கூடாதா? இதுதான் உங்கள் தர்மமா?

4) ஸகஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜோத| எவ்வளவு குறையுடைதாக இருந்தாலும் அவரவர் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். குயவன் குயவனாகவும், மீனவன் மீனவனாகவும், விவசாயி விவசாயியாகவும்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே? பரம்பரைத் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்லக் கூடாதா? விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு தொழில்களைச் செய்யக் கூடாதா? விருப்பமில்லாமல் குலத்தொழிலை மட்டுமே செய்துகொண்டிருந்தால் நாட்டில் தொழில் வளர்ச்சி எவ்வாறு உண்டாகும்?

5) செருப்புத் தைப்பதை சக்கிலியனுக்கு பெருமைக்குரியதாக சொல்லும் அவர் நாட்டை ஆள அவன் ஆசைப்படக் கூடாது என்கிறாரே! இதுதான் உங்கள் தருமமா? நாட்டை பிராமணர் மட்டும்தான் ஆள வேண்டுமா? மற்ற ஜாதிக்காரன் ஆள்வதற்கு ஆசைப்படக் கூடாதா?

6) பிராமணன் தனது குலத்தொழிலான மணியடிப்பதை விட்டுவிட்டு சத்திரியனின் வேலையான நாட்டை ஆளச்செல்லலாம். மற்ற ஜாதிக்காரர்கள் மட்டும் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டுமா?

7) பிராமணனின் பூணூலால் எந்தப் பலனும் இல்லை. அது கோவணம் கட்டத்தான் பயன்படும் என்று விவேகானந்தர் சொன்னாரே! இனியும் பூணூல் அணிவது அவசியமா?

8) உங்கள் தெங்கடிஜி தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டதாகக் கூறுகிறீர்களே! ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை எப்படி ஒழிக்க முடியும்? தீண்டாமைக்கு ஆதாரமே ஜாதிதானே!

9) ஒரு பாட்டா செருப்புக் கடையில் வேலைபார்ப்பவனையும் செருப்புத் தைக்கிற சக்கிலியனையும் யாராவது ஒரே மாதிரிக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்களா? ஜாதிக்கண் கொண்டுதானே பார்ப்பார்கள்? அப்படிப் பார்க்கும்போது தீண்டத்தகாதவனாகத்தானே ஒரு சக்கிலியனை சமூகம் பார்க்கும்? இது மாதிரி ஜாதியை வைத்துக் கொண்டு எப்படி தீண்டாமையை உங்களால் ஒழிக்க முடியும்?

10) எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உருவானால்தானே சமுதாயத்தில் ஜாதியப் பார்வை குறையும்?

11) பிஜேபிக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? தொடர்பு இல்லையென்றால் சென்ற தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?

12) பிஜேபியும் நீங்களும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்தானே! இரண்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு இல்லை என்று மறைப்பது யாரை ஏமாற்ற?

13) மோடிஜி நல்லவர் வல்லவர் என்று ஓட்டுப் போட்டுவிட்டு இப்பொழுது அவர் சரியில்லை என்று சொல்லுவது யாரை ஏமாற்ற?
இதற்கெல்லாம் நேரடியாகப் பதில் சொல்.

 2013ம் ஆண்டு போல குதர்க்கமாக விவேகானந்தர் நல உரிமைச்சங்கம், பாரத தொழிலாளர் கழகம் என்ற முகமூடி அணிந்துகொண்டு திருட்டுத்தனமான வந்து பித்தலாட்டம் செய்யாதே!

நீங்கள் நேர்மையானவர்களாய் இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்! அதற்குத் திராணியின்றி எங்கள் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கையெழுத்து வேட்டையாடி தொழிலாளர்களால் ஓட ஒட விரட்டப்பட்டு மூலையில் போய் முடங்காதே!


புதன், 14 டிசம்பர், 2016

காவிகள் தொழிற்சங்கப் போர்வைக்குள் முடங்கிவிட்டார்கள்.


புருடா மன்னர்கள் சங்கம் ஜெயிச்சு வந்த ஒடனே ஏன் கார்ப்பரேட்டுக்கு கம்ப்ளெயின்ட் எழுதினாங்க? இந்தக் கேள்வி எல்லார் மனசிலயும் எழும்.

இதுதான் காவிக் கோட்பாடு. சென்னை IIT யில இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் இந்தக் காவிக் கும்பலின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏத்தியது. இங்கே இருப்பது மாதிரியே தொழிற்சங்கம் என்பதற்குப் பதிலாக ABVPஎன்றும் விவேகானந்தர் பேரவை என்றும் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தார்கள். அவர்களெல்லாம் காவிச் சிந்னையை மாணவர் மனதில் விதைத்து நாட்டை இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சித்தார்கள். அங்கே இருந்த ஐஐவு நிர்வாகம் முழுக்க அவாளாக இருந்த காரணத்தால் அது சுலபமாக நிறைவேறியது.

ஆனால் இங்கே அது முடியவில்லை. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் எல்லா இடங்களிலும் அதிகாரிகளாக இருப்பதால் நம்மை அந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைப்போல முடக்க வேண்டும் என்ற அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான் தங்களுக்கு வேண்டியவர்கள் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் கார்ப்பரேட்டை அணுகினார்கள். அது இங்கே புஷ்வாணமாகிவிட்டது.

அடுத்து ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவைப்போல தற்கொலைக்கு ஆளாக்கலாம் என்றால் அது பெரியார் தொண்டர்களிடம் எடுபடாது. பெரியார் தனது தொண்டர்களை எதற்கும் துணிந்தவர்களாக தன்னம்பிக்கை உள்ளவர்களாகப் பக்குவப்படுத்தி இருக்கிறாரே தவிர கோழைகளாக உருவாக்கவில்லை. அதனால் அதுவும் இங்கே நடக்கவில்லை.

அதற்கும் மேலே JNUல்கலைக்கழகத்தில் நடந்த மாதிரி கன்னையக்குமார் மீதும் கம்யூனிஸ்ட் தோழர் ராஜாவின் மகள்மீதும் தேசத்துரோக வழக்குப்போட்டு; பாக்கிஸ்தான் ஆதரவாளர் என பழிபோட்டது போல நம்மையும் மாட்டிவிட கனவு கண்டார்கள். இங்கே புகார் கொடுத்த மாதிரி காவல்துறையிலும் புகார் கொடுத்;துள்ளார்கள். நாம் அதற்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல. இங்கே உள்ள போலீசு டெல்லி போலீஸ் மாதிரி இவர்கள் கைக்கூலி அல்ல. அதுவும் நடக்காது.

இந்த நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் முழுக்க மதவாத சக்திகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது. அதையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நம்மை முடக்க நினைத்தார்கள். அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.

நிர்வாகம் நடத்திய அந்த சட்ட வகுப்பே நிர்வாகத்தின் கடந்த கால நிலைக்கு எதிராக இருந்ததைச் சுட்டிக்காட்டினோம். நிர்வாகம் கொடுத்த பதில் அவ்வளவு சட்டரீதியாக இல்லை. விவேகானந்தர் புத்தகத்தை நிர்வாகம் ஏன் எல்லாத் தொழிலாளர்களுக்கும் தனது சொந்த செலவில் கொடுத்தது என்ற வினாவிற்கும் நிர்வாகம் பதிலளிப்பதற்கு முன் புருடா மன்னர்கள் சங்கம் பதிலளிக்க முயன்று மூக்குடைபட்டது. அதுபோல சுளுமு பள்ளியில் வழங்கப்பட்ட ஆண்டு மலரில் உள்ள குருகுலப் படத்தையும் மறைக்க நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

ஆக இங்கே திதொக தேர்தலில் நிற்காவிட்டாலும் கண்ணுக்குத் தெரிந்து ஒரு சில உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் மற்ற எல்லோரும் நம் செயல்பாட்டை ஆதரிப்பவர்களே. அனைத்து சங்கங்களும் நமக்கு ஆதரவாக இருப்பதைப்; பார்த்த காவிகள் தொழிற்சங்கப் போர்வைக்குள் முடங்கிவிட்டார்கள்.

நம்மை முடக்க நினைத்தவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டு விட்டது. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படைக் கடமைகள் மற்றும் உரிமைகள் 51(h)ன்படி தொழிலாளர் மத்தியிலே அறிவியல் மனப்பான்மையை ஊட்டவும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் சமுதாய சீர்திருத்தம் வளரவும் மனிதநேயத்தை வளர்க்கவும் தொடர்ந்து செயல்படுவோம்

மதவெறியை மாய்ப்போம்! சாதிவெறியை சாய்ப்போம்!! மனிதநேயம் காப்போம்!!!

அப்புடு சுப்புடு உரையாடல்.


                                  அப்புடு சுப்புடு உரையாடல்.

அப்புடு : என்ன மாமா எப்படி இருக்கேள்?

சுப்புடு : நேக்கு என்னடா அம்பிää பேஷா இருக்கேன். BHEL PARTICIPATION ELECTIONலே நம்மளவாளோட சங்கம் அதாண்டா BMS இராமர் காட்டுக்கு பதினாலு வருஷம் வனவாசம் போனா மாதிரி போயிட்டு 2002க்குப் பிறகு திரும்பி வந்திருக்காளோ இல்லியோ. ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா அம்பி. இனிமே தேனாறும் பாலாறும் ஓடப்போறதுடா அம்பி.

அப்புடு : என்னா மாமா சொல்றேள்?

சுப்புடு : ஆமாண்டா அம்பி. இவ்வளவு நாளா இந்தக் கையாலாகாத பங்குகள் இருந்துண்டு எல்லாத்தையும் இழந்துட்டா. நம்மளவா வந்து அதையெல்லாம் மீட்கப்போறாடா.

அப்புடு : எப்படி மாமா சொல்றேள். நம்மளவா அஞ்சாவதாத்தானே வந்துருக்கா. எப்படி இவா மட்டும் எல்லாத்தயும் மீட்டுக் குடுப்பா.

சுப்புடு : அபிஷ்டு, நோக்கு ஒன்னுமே புரியலே, இந்த நம்பர் ஒன் இருக்காளே அவா தெம்புள்ளவான்னு சொல்லிக்கிட்டு கம்பக் குடுன்னு கேட்டா. தெம்பிருந்தா எதுக்குக் கம்பு? தெம்பில்லாம தடிய ஊனி நடக்கத்தான் கம்பக் கேட்டா.

இந்த நம்பர் டூ இருக்காளே அவா லோக்கல் சங்கம். அவாளாலே ஒன்னும் முடியாது. நம்பர் த்ரீ யும் லோக்கல். சென்ட்ரல்ல எதாவது வேணும்னாக்கூட நம்மளவா தயவுதான் தேவை.

இந்த நம்பர் ஃபோர் அவா நம்ம நாட்டு மேல பற்றே இல்லாதவா? சைனா ஏஜன்ட். இந்த நம்பர் சிக்சும் அதே மாதிரிதான்.

நம்பளவாதான் பாரதத்துலேயே ஃபர்ஸ்ட். லோகத்துலயே பெஸ்ட். அதனால அவா அடியெடுத்து வச்சாலே அட்மினிஸ்ரேஷன் டிபார்ட்மென்டே அலறும். காலடி எடுத்து வச்சாலே கார்ப்பரேட்டே கதறும். இவாளோட அண்டங்கிடுகிடுத்த போராட்டத்தாலே மோடிஜியே பயந்துட்டாள்னா பாத்துக்கோயேன்.

 
இவாளன்டே இராமனோட அம்பு இருக்கு. அர்ஜூனனோட வில் இருக்கு. பீமனோட தண்டாயுதம் இருக்கு. ஹனுமானோட கதாயுதம் இருக்கு. எல்லாத்தயும் எடுத்து விட்டாள்னா  மேனேஜ்மென்ட் பயந்துபோய் ஹன்ட்ரட் அவர்ஸ் ஓட்டீய ஓடனே குடுத்துருவா.

டூ தவுசன்ட் ட்வல்லேயிருந்து புது வேஜ் ரிவிஷன் வந்துடும். அஞ்சு வருஷத்துக்கு அரியர்சும் வந்துடும். இந்த D.A  உடனே பேசிக்ல மெர்ஜ் ஆயிடும். இப்போ இம்மிடியட்டா ஜாயின்ட் கமிட்டியைக் கூட்டி வேணும் வேண்டாங்க போனசை அள்ளிக் குடுக்கப் போறா.

மொத்தத்துல BHEL எம்ப்ளாயீஸ் வாழ்க்கையிலே பாலாறும் தேனாறும் ஓடப்போறது. ரிடயர்ட் ஆகப்போறவாள்லாம் சாக்குமூட்டையத் தயாரா வச்சுக்கோங்க பணத்த அள்ளிண்டு போக. நியூ எம்ப்ளாயீஸ் எல்லாம் சூட்கேசை ரெடி பண்ணிக்கோங்கன்னு எல்லார்ட்டயும் போயிச் சொல்லுடா அம்பி.

அப்புடு : அது சரி மாமா, இதனால நம்பளவாளுக்கு என்ன லாபம்?

சுப்புடு : என்னடா அபிஷ்டு இப்படி அசடு மாதிரி பேசறே. கூடிய சீக்கிரம் இராமராஜ்யம் அமைக்கறதுக்கு சூத்திராளெல்லாம் நமக்கு குரங்குப் படையாக் கெடச்சிருக்காளோல்லியோ. இராமராஜ்யம் வந்தா நம்பளவாதானே அவாளுக்கெல்லாம் பகவான். நம்மவாளத்தானே அவாளெல்லாம் சாமின்னு கூப்பிறா? பிராமணா மமதேவதாஹான்னு ரிக் வேதம் சொல்றதே நோக்குப் புரியாதோ.

அப்புடு : நன்னாப் புரியறது மாமா. இது சூத்திராளுக்குப் புரியாம இருக்கனுமே. அதான் நேக்குக் கவலை.

சுப்புடு : அதெல்லாம் இந்த சூத்திர முண்டங்களுக்குப் புரியாது. புரிஞ்சிருந்தா BMSக்கு ஓட்டுப் போட்டுருப்பாளோ? நீ போயிட்டு வா.

சுயமரியாதை உள்ளவனெல்லாம் இங்கே இருக்கப்படாது. தெரியுமா?



தம்பி : அண்ணே! எப்படீண்ணே இருக்கிறீங்க?

அண்ணன் : நான் நல்லா இருக்கேன் தம்பி. நான் சொன்னபடி BMSக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்சிட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சி தம்பி.

எண்ணண்ணே மகிழ்ச்சின்னு சொல்றீங்க. நன்றின்னு சொல்ல மாட்டீங்களா?

நன்றி எல்லாம் சொல்லக் கூடாது தம்பி. நம்ம BMS கூட்டத்துல என்னைக்காவது நன்றின்னு செல்லி இருக்காங்களா? மகிழ்ச்சின்னுதான் சொல்லுவாங்க. அதனாலதான் தம்பி.

நன்றி உணர்ச்சிங்கறது தமிழர் பண்பாடுதானே அண்ணே! நாம ஏன் அதைச் சொல்லக் கூடாது?

தம்பி, நாமெல்லாம் பாரதப் பண்பாட்ட கடைப்பிடிக்கறவங்க. பாரதப் பண்பாட்டில நன்றி உணர்ச்சிக்கெல்லாம் இடமில்லே.

ஆமாண்ணே, இந்தத் தேர்தலுக்கு முன்னே BMS க்கும் BJP, RSS க்கும் தொடர்பு இல்லேன்னு சொன்னீங்கண்ணே! இப்ப BMS காரங்க RSS ஒரு அறிமுகம்னு நோட்டீஸ் போட்டிருக்காங்களேண்ணேää அது எதுக்குண்ணே!

ஆமா தம்பி, அது ஓட்டு வாங்கறதுக்காகச் சொன்னது. இப்பத்தான் ஜெய்ச்சுட்டம்ல. அடுத்த கட்டமா உங்கள RSS ல சேத்தாகனும். RSS ங்கிறது ஒரு தேசபக்த அமைப்பு. சேவை செய்யறதுதான் அதனுடைய ஒரே நோக்கம். அதனால அதைப்பத்தி சின்னப் பிள்ளைங்களான நீங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதனாலதான் போட்டிருக்கிறாங்க..

அது சரிண்ணே! RSS அய் காந்தி பாராட்டினாரு, அம்பேத்கர் பாராட்டினாரு அப்படீன்னெல்லாம் போட்டிருக்காங்க! அதுக்கெல்லாம் ஆதாரம் ஏதாச்சும் இருக்காண்ணே!

தம்பி, ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது தம்பி. சொன்னா அப்படியே நம்பனும். அவ்வளவுதான்.

அண்ணே! இந்த திக காரன் BMS சுக்கு ஓட்டுப்போட்ட எங்களையெல்லாம் சூத்திரன்னு சொல்லி கேலி பண்ணி நோட்டீஸ் போட்டாண்ணே,அந்த நோட்டீஸ்ல எல்லாம் நானும் நம்ம BMS சகோதரர் ஒருத்தரும் போயி அவனைக் கெட்ட வார்த்தையில திட்டி அந்த நோட்டீஸ்ல கிறுக்கி வச்சிட்டு வந்துட்டோம்ணே

சபாஷ் தம்பி, அப்படித்தான் இருக்கனும். இந்த திக காரன் ஒரு கூமாச. ஒரு பொறம்போக்கு. அட்ரஸ் இல்லாத பய. குடிகாரன். அவன சும்மா விடக்கூடாது.

சரிண்ணே இந்த திககாரன் அதுக்குப் பிறகு இந்துராஜ்யம், இராமராஜ்யம்னு ஒரு நோட்டீஸ் போட்டிருக்காண்ணேää அதுல பிராமணரல்லாத நாமெல்லாம் பிராமணரத்தான் கடவுளா வணங்கனும்னு இராமரே சொல்றதாப் போட்டிருக்காண்ணே! அதப்பத்தி நீங்க என்னண்ணே நெனக்கிறீங்க!

ஆமா, தம்பி, இராமர் சொல்லி இருக்கிறதெல்லாம் உண்மைதான் தம்பி. பிராமணர்கள்தான் இந்த லோகத்தில நமக்கெல்லாம் கடவுள். அதனாலதானே தம்பி நாம அவங்கள சாமின்னு கும்பிடுறோம். அவங்கள வணங்கினாத்தான் நாம மோட்சத்துக்குப் போக முடியும். மோட்சத்துக்கு வழிகாட்டுறதுக்குத்தான் தம்பி நாம சங்கமே வச்சிருக்கிறோம்.

அண்ணே! இந்த உலகத்தில சிறப்பா வாழனும்னு நாங்க ஆசைப்படுறோம். அதுக்கு உதவியா BMS இருக்கும்னுதான் ஓட்டுப் போட்டோம். இப்பப் போயி மோட்சம் நரகம்னெல்லாம் பேசுறீங்க! பார்ப்பான் கால்ல எல்லாம் விழுந்து கும்பிடனும்னு சொல்றிங்க. இதுக்கெல்லாம் எங்க சுயமரியாதை இடம் கொடுக்காதுண்ணே!

என்ன தம்பி பேச்செல்லாம் ஒரு மாதிரியாப் போகுதுää சுயமரியாதை அது இதுன்னெல்லாம் பேசுறே! சுயமரியாதை உள்ளவனெல்லாம் இங்கே இருக்கப்படாது. தெரியுமா?

அப்படியாண்ணே! ரொம்ப நன்றிண்ணே, சுயமரியாதை உள்ளவன் உங்க சங்கத்தில இருக்கப்படாதுன்னா, நானும் உடனே வெளியேறுறேண்ணே!

போடா, போ, தி.க காரன் பேச்சக் கேட்டு பல பேர் வெளியேறிட்டான். அவனெல்லாம் நாசமாத்தான் போவான். நீயும் நாசமாத்தான் போகப்போறே போ.

அண்ணேää நான் நாசமாப் போறேனோ இல்லையோ, சுயமரியாதையோட இருப்பேன் அது போதும்ணே!


இவண்: அனைவரும் சுயமரியாதையுடன் வாழ வழி காட்டும் தி.தொ.க

செவ்வாய், 13 டிசம்பர், 2016

“Dattopant Thengadi National Board for Workers Education and Development”



அகில இந்திய அளவில் மத்திய அரசின் சார்பில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்டு வந்த மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் CENTRAL BOARD OF WORKERS EDUCATION   “Dattopant Thengadi National Board for Workers Education and Development”     
என்று மத்திய பிஜேபி அரசால் மாற்றப்பட்டுள்ளது.

யார் இந்த தத்தோபந்த் தெங்கடி?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை முழு நேரத் தொண்டராக இருந்து அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை நாட்டு மக்கள் மத்தியிலே கொண்டு சென்றவர்.

குருஜி கோல்வால்க்கரின் ஆணைக்கிணங்க தொழிலாளர்களை ஆர்எஸ்எஸ் சின் கொள்கைக்கு ஈர்ப்பதற்காக பாரதீய மஸ்தூர் சங்கம் என்ற தொழிலாளர் அமைப்பைத் தொடங்கியவர். சுதேசி ஜாக்ரான் மஞ்ச்ää பாரதீய கிசான் சங்கம்ää ஆகியவற்றையும் துவக்கியவர். கோல்வால்கரின் ஆலோசனையின்படி மாணவர் மத்தியில் ஆர்எஸ்எஸ் சிந்தனைகளைக் கொண்டு செல்ல அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்ää வழக்கறிஞர்களிடையே அதன் கருத்துக்களைப் பரப்ப அகில பாரத அதிவக்தா பரிஷத்ää ப்ரக்ஞா ப்ரவாஹ்ää பாரதீய விசார் மஞ்ச் என்கின்ற சிந்தனையாளர் அமைப்பு அகில பாரத க்ராஹக் பஞ்சாயத் என்கிற்க நுகர்வோர் அமைப்பு ஆகியவை உருவாக வழிகாட்டியாக இருந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மக்கள் மத்தியிலே கொண்டு சென்றவர்.

ஆக மத்திய பாரதீய ஜனதா அரசு கல்வியைக் காவிமயமாக்குவதுபோல மத்திய அரசின் திட்டங்களுக்கும் இதுபோன்ற வாரியங்களுக்கும் ஆர்எஸ்எஸ் காரர்களை தலைவர்களாக நியமித்து அதன் பெயர்களையெல்லாம் இப்படிப்பட்டவர்களின் பெயரை வைத்து எல்லாவற்றையும் காவி மயமாக்கி வருகிறது.  ஏற்கனவே இந்த கல்வி வாரியத்திற்கு பிஎம்எஸ் சின் அகில பாரத துணைத்தலைவராக இருந்த ஸ்ரீலட்சுமாரெட்டி என்பவரைத் தலைவராகப் போட்டுள்ளது.

பிஎம்எஸ் தன்னை அரசியல் சாராத அமைப்பாக அறிவித்துக் கொண்டு தனது முகத்தை மறைத்துக்கொண்டிருந்தாலும் அந்த சங்கத்தைத் துவக்கிய தத்தோபந்த் தெங்கடி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் சார்பாக 1964 முதல் 1976 வரை நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்தவர்.

இப்படி பச்சையாக ஒரு அரசியல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் துவக்கிய பிஎம்எஸ் தன்னை அரசியல் சார்பற்ற சங்கம் என்று சொல்லிக்கொள்வது கேலிக்கூத்து அல்லவா? இன்றைய அதன் தலைவர் மத்திய அரசு வழங்கிய பதவியை நேரடியாக அனுபவித்துக் கொண்டு எங்களுக்கும் பாஜக  வுக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்வதும் பித்தலாட்டம் அல்லவா?

தெங்கடி அவர்கள் துவக்கிய சுதேசி ஜாக்ரான் மஞ்ச் இன்று காணாமல் போய்விட்டது. மோடி அவர்கள் உலகத்திலுள்ள குட்டி குட்டி நாடுகளுக்கெல்லாம் சென்று எங்கள் நாட்டில் வந்து தொழில் துவங்குங்கள். எங்கள் நாட்டில் மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பார்கள் என்று சொல்வது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கா? அவர்களைப் பன்னாட்டு தொழில் நிறுவனஙகளுக்கு கொத்தடிமைகள் ஆக்குவதற்கா?

அதேபோல தெங்கடி துவக்கிய அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் என்கின்ற மாணவர் அமைப்பு பச்சையாக இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்ற அமைப்புIIT,IIM,AIMSமத்திய பல்கலைக்கழகம்  போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு பல தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமான அமைப்பு. அதேபோல தெங்கடி துவக்கிய வழக்கறிஞர் அமைப்பான அகில பாரத அதிவக்தா பரிஷத் அமைப்பு மதுரையில் மாநாடு கூட்டி மனுதர்மத்தை இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று சொன்ன அமைப்பு ஆகும்.

இப்படி தெங்கடி அவர்களால் துவக்கப்பட்ட அமைப்புக்களெல்லாம் ஜாதி வெறி மதவெறி அமைப்புக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பிஎம்எஸ் காரர்களும் பாஜகவில் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரு ரூபாய் மிச்சப்படுத்திக் கொடுத்தற்காக 4 பக்கம் நோட்டீஸ் போடுபவர்கள் இவ்வளவு பெரிய மாற்றத்தினை ஏன் இதுவரை வெளியில் சொல்லவில்லை? சொன்னால் பாஜக வுக்கும் தனக்கும் உள்ள கள்ள உறவு அம்பலப்பட்டுப் போகும் அல்லவா? அதனால்தான் சொல்லவில்லை. இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்வீர்!


வெள்ளி, 2 டிசம்பர், 2016

திலகர் பிறந்த நன்னாளில் பிஎம்எஸ் துவக்கப்பட்டது


பிஎம்எஸ் ஸின் 57ம் ஆண்டுவிழாவும், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுத் தெருமுனைப் பிரச்சாரம் என்ற தலைப்பிட்டு பிஎம்எஸ் துண்டறிக்கை வழங்கியுள்ளது. அதில் 1955ம் ஆண்டு ஜூலை 23ம் நாள் தத்தோபந்த் தெங்கடிஜி அவர்களால் திலகர் பிறந்த நன்னாளில் பிஎம்எஸ் துவக்கப்பட்டதாக குதூகலத்துடன் கூறியுள்ளார்கள்.

அப்படியானால் இவர்களது குருநாதர்களில் திலகர் பெருமான் முதன்மையானவர் என்பது நன்கு விளங்குகிறது. எனவே, திலகருடைய கொள்கைகளில் பிஎம்எஸ் ஸ_க்கு முழு உடன்பாடு இருக்கும் என்பதில் அய்யமில்லை.

இருந்தாலும் பிஎம்எஸ் இன்று அணிந்திருக்கும் முகமூடி நமக்கு சில அய்யங்களைத் தோற்றுவித்துள்ளது. அந்த அய்யங்களை பிஎம்எஸ் போக்குமா?

திலகர் பெருமான் ~~சுயராஜ்யம் நமது பிறப்புரிமை|| என்று முழங்கினார். அதில் நமக்கு எந்த அய்யமும் இல்லை. ஆனால் அவரது சுயராஜ்யத்தில் மனுஸ்மிருதிதான் சட்டமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் கற்றறிந்தவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ~~ ~~Our law is manusmiriti’’ and pointed out that the law (Manusmiriti) orders king to administrate with the help of learned persons and Brahmins vd;W Samagra Logmanya Thilak Volume VI pages 449-450  என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பம்பாய் மாகாண சட்டமன்ற மேலவையில் பல்வேறுபட்ட தொழில் செய்பவர்களுக்கும் இடம் அளிப்பதை எதிர்த்து திலகர் ஆதானியில் 1917 நவம்பர் அன்று பேசிய தனது பேச்சில் கடுமையான மொழிpயில் ஒரு தீவிரமான வாதத்தை முன்வைத்தார்.

~~தொடக்கக் கல்விக்குப்பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம் என்று தீண்டத்தகாத மக்களுக்கு திலகர் ஆலோசனை கூறினார் இதன்மூலம் தீண்டத்தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்”
இதன் தொடர்ச்சியாகத்தான் திலகருடன் ஒத்த கருத்துள்ளவரான ராஜாஜி தமிழகத்தில் 1952ல் ஆட்சிக்கு வந்து

குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் (மட்டும்) ஒருவேளை படிப்புää ஒருவேளை அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
அத்துடன் சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திலகர் என்ன சொன்னார் தெரியுமா? எண்ணெய்க் கடைக்காரர்களும் புகையிலைக் கடைக்காரர்களும் வண்ணார்களும் மற்றவர்களும் (பார்ப்பனரல்லாதாரை இப்படித்தான் அவர் வர்ணித்தார்) சட்டமன்றத்துக்குச் செல்ல ஆசைப்படுவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றார்.

அவரது கருத்துப்படி இவர்களது வேலை சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தவிர சட்டங்களை இயற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படுவது அன்று என்பதாகும். (அண்ணல் அம்பேத்கர் எழுதிய~காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?| என்ற நூல் பக்கம் 254)

இதனை பிஎம்எஸ் ஏற்றுக் கொள்கிறதா? தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களை தங்கள் சங்கத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்காகப் பாடுபடுவதாக் கூறுவதெல்லாம் யாரை ஏமாற்ற? திலகர் கூற்றுப்படி மனுதர்மம் சட்டமானால் இவர்கள் கதி என்ன?  இந்த மொழி புரிந்தால் அறிவுநாணயத்துடன் பிஎம்எஸ் பதில் சொல்லட்டும்.                    


பொறியாளர் நிரந்தரம், மேற்பார்வையாளர் நிரந்தரம், ஆர்டிசான் மட்டும் தற்காலிகம் - இது ஏன்?


பொறியாளர் நிரந்தரம், மேற்பார்வையாளர் நிரந்தரம், ஆர்டிசான் மட்டும் தற்காலிகம் - இது ஏன்? ஏன்? ஏன்? என்று ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். அதுதான் நம்முடைய நாட்டின் கலாச்சாரம். நமது பாரத கலாச்சாரத்தில் மனுதர்மம் நீண்ட காலமாக ஆட்சி செய்தது.

 உடலுழைப்புத் தொழிலைச் செய்யக்கூடியவர்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள். உழைத்துப்போடுவது மட்டுமே அவர்கள் கடமை. கூலி அவர்கள் கேட்கக் கூடாது. கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்பது மனுஸ்மிருதி. அந்த மனுஸ்மிருதி ஏதோ செல்லரித்த ஏடுகளில் இருப்பதல்ல. இன்னும் நடைமுறையில் இருப்பதற்கு உதாரணம்தான் நம் நிறுவனம்.

அந்த மனுதர்ம மனப்பான்மை உள்ள அதிகாரிகள் கார்ப்பரேட் முழுக்க ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைத்ததே சட்டம். செய்வதே நிர்வாகம். கேட்க யாரும் இல்லை. முதல் பேட்ஜ் ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டபொழுது எந்த சங்கமும் கண்டுகொள்ளவில்லை.

திராவிடர் தொழிலாளர் கழகம் மட்டும்தான் அதனைத் தட்டிக் கேட்டு துண்டறிக்கை வெளியிட்டது.

 ஏனென்றால் தி.தொ.க தேர்தலுக்காக உள்ள அமைப்பு அல்ல.

இது முதல் பேட்ஜ் ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். இன்று மாய்ந்து மாய்ந்து எழுதுபவர்கள் எல்லாம் அன்று எங்கே சென்றார்களோ தெரியவில்லை. 2007ல் தேர்தலில் தற்காலிக ஊழியர்களுக்கும் ஓட்டுரிமை வந்தது. உடனடியாக எல்லோருக்கும் அவர்கள்மீது கரிசனம் பொத்துக்கொண்டு வந்தது. அதற்குப்பிறகுதான் நான் முந்தி நீ முந்தி என்று காட்டிக்கொள்கிறார்கள். இப்பொழுதும் அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்றால் யாரும் அவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் யாரும் காரணத்தைச் சரியாக உணரவில்லை. ஆர்டிசானாக இருப்பவர்களில் 99 சதவிகிதம் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அப்பா – அம்மா கூலித் தொழிலாளி, அல்லது விவசாயக்கூலி, மூட்டை சுமப்பவர், நெசவாளர், தச்சு வேலை செய்பவர், கொத்தனார், சித்தாள், பீடி சுற்றுபவர் கல் உடைப்பவர் செருப்புத் தைப்பவர் துணி வெளுப்பவர் இப்படித்தான் இருக்கிறார்கள். இதில் யாரும் அதிகாரிகள் வீட்டுப்பிள்ளைகளோ டாக்டர் வீட்டுப் பிள்ளைகளோ எஞ்சினியர் வீட்டுப்பிள்ளைகளோ அய்ஏஎஸ் அய்பிஎஸ் வீட்டுப்பிள்ளைகளோ கிடையாது. ஒரு ஜிஎம் ஏஜிஎம் வீட்டுப்பிள்ளைகளும் கிடையாது. இவர்களெல்லாம் மேல்தட்டு அய்ஸ்கிரீம் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் பார்ப்பனரில் ஏழை இல்லையா? அவர்களுக்கும் பொருளாதார அளவுகோலில் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாதா? என்றெல்லாம் வியாக்கியானம் பேசுகின்றார்கள்.

அடுத்த வேளை கஞ்சிக்கில்லாத  உஞ்சிவிருத்திப் பார்ப்பான் வீட்டுப்பிள்ளையும் யாரும் கிடையாது. ஏனென்றால் இந்த வேலை முழுக்க முழுக்க உடலுழைப்பு சம்மந்தப்பட்ட வேலை. உடலுழைப்பு என்பது நம் அர்த்தமுள்ள பாரதப் பண்பாட்டில் கேவலமானது. அதனால் அதில் யாரும் போட்டிபோடுவது இல்லை.

நூற்றுக்குப் பத்துப்பேர் பார்ப்பன வீட்டுப் பிள்ளை இருந்திருக்குமேயானால் இந்தத் தற்காலிகம் என்பதெல்லாம் ஒருநொடியில் நிரந்தரம் ஆகியிருக்கும். எஞ்சினியரில் பார்ப்பனப்பிள்ளை இருக்கிறது. சூப்பர்வைசரில் பார்ப்பனர் வீட்டுப்பிள்ளை இருக்கிறான். அதனால் அவர்களெல்லாம் எடுக்கும்போதே நிரந்தரம். தொழிலாளரில் அப்படி யாரும் இல்லை. அதனால் அவர்கள் தற்காலிகம். இந்தக் கஷ்ட நஷ்டமெல்லாம் அதன் காரணமாகத்தான்.

இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் புரிந்தும் புரியாததுபோல் நடிப்பதெல்லாம் காரியத்துக்கு ஆகாது. இந்த மனுதர்மத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் அழித்து ஒழிக்கும் நாளே தொழிலாளர்களின் உண்மையான விடுதலை நாளாகும். தயாராவீரா?


டெக் - அப் பெற்றது இவர்களது சாதனை என்றால் ஒரு பேட்ஜ் தவிர அடுத்த பேட்ஜ் ஏன் எடுக்கப்படவில்லை?


ஆரம்ப காலத்தில் நமது நிறுவனத்தில் அய்டிஅய் படித்துவிட்டோ அல்லது டிப்ளமா படித்து விட்டோ வருபவர்கள் மேற்படிப்பு படித்து வந்தால் அவர்களுக்கு முறையான தேர்வு வைத்து அனைவருக்கும் பதவி உயர்வு கொடுத்து வந்தது நிர்வாகம். 1989க்குப்பிறகு அது நிறுத்தப்பட்டு உயர் படிப்பு படித்த எவருக்கும் பதவி உயர்வு மறுக்கப்பட்டது. கிரேடு 1 டு சார்ஜ்மேன் பதவி உயர்வில்கூட அவர்களது உயர் படிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 400 பேருக்குமேல் தொழிலாளர்களில் டிப்ளமா பிஈ எம்ஈ என்று படித்திருந்தார்கள். இவர்களுடைய கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. பிஎம்எஸ் உட்பட எந்த சங்கமும் கண்டுகொள்ளவில்லை. அதனால் DIPLOMA HOLDERS ASSOCIATION என்ற பெயரில் அமைப்பைத் துவக்கி அதன் பெயரில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கேட்ட வினாவின் அடிப்படையில் நிர்வாகம் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க ஒத்துக்கொண்டு 40 பேரை மட்டும் ஒரே ஒரு பேட்ஜ் டெக் அப் எடுத்தது. தொழிற்சங்கங்கள் தலையீடோ, அந்தந்தத் துறை நிர்வாக அதிகாரிகளின் தலையீடோ எதுவுமின்றி மனிதவள மேலாண்மை நிர்வாகம் முறையாக நேர்மையாக சரியாகத் தேர்வு நடத்தி அந்த 40 பேரைத் தேர்ந்தெடுத்தது. அந்த நாற்பது பேருக்கும் மூன்று மாதம் பயிற்சிப்பள்ளியில் வகுப்பு முடிந்தவுடன் அவரவர் துறைக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். ஆனால் உற்பத்தித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க மறுத்து விட்டனர். இதனையும் பிஎம்எஸ் உட்பட எந்த சங்கமும் தட்டிக் கேட்கவில்லை.

அதற்குப்பிறகு அவர்கள் மீண்டும் பயிற்சிப்பள்ளியின் கட்டுப்பாட்டிற்கு அனுப்பப்பட்டு தரக்கட்டுப்பாடு போன்ற வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சி முடிந்த உடன் அவர்களுக்கு சார்ஜ்மேன் பதவி உயர்வு வழங்காமல் மறுபடியும் அவர்களது பழைய துறைக்கே அனுப்பப்பட்டார்கள். அந்தத் துறையில் அவர்களை மீண்டும் பழைய வேலையைச் செய்யச் சொன்னார்கள். எல்லோரும் பழைய வேலையையே செய்தார்கள். இப்படி எட்டு மாதங்கள் பழைய வேலையை செய்த பிறகு நிர்வாகம் எந்தத் தேதியில் பயிற்சி முடித்தார்களோ அந்தத் தேதியிலிருந்து ஆணை வழங்காமல் டிசம்பர் மாதம் தேதியிட்டு ஆணை வழங்கியது. அதனால் அவர்களது அடுத்த பதவி உயர்வு ஜூனுக்குத் (ஓராண்டு) தள்ளிப் போனது.

இவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்க பிஎம்எஸ் இந்த டெக் அப் பெற்ற விவகாரம் தன்னுடைய சாதனை என்கிறது. இது பிஎம்எஸ் ஸினுடைய சாதனை என்றால் அவர்களுக்குப் பயிற்சியளிக்க மறுக்கப்பட்டதுää பயிற்சி முடிந்தபின் எட்டு மாதங்கள் பழைய வேலையையே செய்ததுää ஓராண்டுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு ஓராண்டு கழித்துக்கிடைத்தது போன்ற வேதனைகளுக்கெல்லாம் பிஎம்எஸ் பொறுப்பேற்குமா?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் டிப்ளமா அசோஷியேசனால்  TECH APP கிடைத்ததைப் பயன்படுத்தி பிஎம்எஸ் ஸின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் (அவர் ஒரு மாற்றுத்திறனாளி) எம்ஈ படித்திருந்ததால் ரங்கராஜன் குமாரமங்கலம் மூலமாக அகில இந்திய அளவில் தனியாக அவருக்காகவே பிஈ படித்த மாற்றுத்திறனாளிக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று ஒரு விளம்பரம் செய்து அவருக்காகவே அகில இந்திய அளவில் ஒரு தேர்வுக்குழு அமைத்து தேர்வு நடத்துவதாக பாவ்லா செய்து அவருக்கு பொறியாளர் பதவி உயர்வு பெற்றுக்கொடுத்து அறுவடை செய்து கொண்டது. இது ஒன்று வேண்டுமானால் பிஎம்எஸ் ஸின் சாதனையாக இருக்கலாமே தவிர எங்களுடைய சங்கச் செயலாளர் உட்பட பிஎம்எஸ்ஸால் யாருக்கும் ஒரு காதொடிந்த ஊசி அளவு கூடப் பயன் இல்லை என்பதுதான் உண்மை.

டெக் - அப் பெற்றது இவர்களது சாதனை என்றால் ஒரு பேட்ஜ் தவிர அடுத்த பேட்ஜ் ஏன் எடுக்கப்படவில்லை? காரணம் நிர்வாகம் அந்த வழக்கை நீதிமன்றத்தில் தனக்கிருந்த செல்வாக்கின்மூலம் தள்ளுபடி செய்ய வைத்து விட்டது. இதற்கும் பிஎம்எஸ் பொறுப்பேற்குமா? புதிய ஊழியர்கள் உண்மை உணர வேண்டும்@ பிஎம்எஸ் ஸின் புருடாக்களைக்கண்டு ஏமாறக் கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம். பிஎம்எஸ் தன்னுடைய புருடாவை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்எஸ்எஸ் சுக்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை. நாங்கதான் அக்மார்க் ISI,ISO தொழிற்சங்கம்




நம்ம BHEL லில் 1996ல நடந்த பங்குபெறும் சங்கத்தேர்தலில நம்ம மோடி சொன்ன மாதிரி நாங்க வந்தா வானத்த வில்லா வளைப்போம், மணலக் கயிறாத் திரிப்போம் னு கத விட்டு ஜெயிச்சாங்க. ஜெயிச்சு வந்து நம்ம மோடி மாதிரியே மோடி மஸ்தான் வித்தை காட்டினாங்களே தவிர ஒரு புல்லையும் புடுங்கல. அதனால அடுத்து வந்த மூனு தேர்தல்லயும் ஓட ஓட விரட்டினாங்க தொழிலாளிங்க.

நாங்கதான் ஒழுக்கமானவங்க ரொம்ப ரொம்ப யோக்கியமானவங்க ன்னு சொன்னவங்க ஒழுக்கமாவும் யோக்கியமாவும் ஆபீசக் காலி பண்ணல. விட்ட பதவிய எப்படியாவது புடிச்சு அலுவலகத்தத் தக்க வச்சுக்கனுமின்னு எவ்வளவோ குட்டிக்கரணம் அடிச்சுப் பாத்தும் கதையாவல. ஒரு நியாயமான அதிகாரி மரியாதயா ஆபீசக் காலி பண்ணுங்கன்னு நோட்டீஸ் குடுத்து அவங்க காலி பண்ணாததால ரெண்டு பூட்டுப்போட்டு இழுத்து மூடினாரு.

அத எதிர்த்து கேசு போட்டதா பாவலா பண்ணினாங்க இந்த யோக்கியவான்கள். எல்லாம் சட்டப்படிதான் நாங்க நடப்போம்னு சொல்றவங்க எந்த சட்டப்பிரிவையும் காட்டி அதன்படி இந்த ஆபீசைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை இருக்குதுன்னு கேசு போடல. தொழிலாளர் சட்டம், தொழிற்சங்க சட்டம் இந்தப்பிரிவு இந்த செக்ஷன் அப்படீன்னு எதையுமே காட்டல. பொதுவா இந்திய அரசியல் சட்டப்படின்னு ஒரு கேசப் போட்டாங்க. எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்ய வேண்டிய ஜட்ஜ் அதுக்கும் ஒரு தீர்ப்புச் சொன்னாரு. அதுல இவங்க ஆபீசக் காலி பண்ணினது தப்புன்னும் சொல்லல. இவங்களுக்கு ஆபீசத் தொறந்து உடனும்னும் சொல்லல.

ஒரு பொது இடத்த ஆக்கிரமிச்சவங்கள எப்படி முறைப்படி நோடடீஸ் கொடுத்து காலி பண்ணனுமோ அப்படிக் காலி பண்ணுங்க அப்படின்னுதான் நிர்வாகத்துக்கு ஜட்ஜ் உத்தரவு போட்டாரு. ஆனாää நம்ம ஹிந்துத்துவா மேனேஜ்மென்ட் ஏதோ உச்சநீதிமன்றத் தீர்ப்ப அமல்படுத்தறதா நெனச்சுக்கிட்டு ஒடனடியா ஆபீசத் தொறந்து உட்டுட்டாங்க.

எப்படி தேர்தலில் தோற்ற சங்கத்துக்கு அலுவலகத்தத் திறந்து வுட்டீங்கன்னு நாங்க நிர்வாகத்தக் கேட்டோம். அதுக்கு ஹிந்துத்துவா மேனேஜ்மென்ட் என்ன சொன்னது தெரியுமா? அவங்க PURELY தொழிற்சங்க வேலைக்குத்தான் அந்த ஆபீசப் பயன்படுத்தறாங்கன்னு தலையில அடிச்சுச் சத்தியம் செஞ்சது.

அப்படிச் சத்தியம் செஞ்ச நிர்வாகத்தின் மூஞ்சியக் கிழிச்சுத் தொங்க விடுற மாதிரி அவங்க சொன்ன ஒரு சில நாட்களிலேயே அந்த ஆபீசில RSSகுருபூஜை விழா நடத்த ஏற்பாடானது. எல்லாவற்றிலும் ரகசியம் காப்பாற்றும் அந்த ரகசிய திருட்டுக்கும்பல் இந்த விசயத்தில ரகசியத்தக் காப்பாத்த முடியல. எங்க கைக்கே அந்த நோட்டீஸ் கெடச்சது.
நிர்வாகத்துக்கு அதச் சுட்டிக்காட்டி இப்பவாச்சும் அவங்க அலுவலகத்த உடனே காலிபண்ணச் சொல்லுங்க அப்படீன்னு கடிதம் கொடுத்தோம்.

ஆனா நிர்வாகம் அந்தக் குருபூஜையை நிறுத்துச்சே தவிர அலுவலகத்த இன்னமும் காலி பண்ணல. எப்படியாச்சும் அவங்கள அடுத்த தேர்தலில ஜெயிக்க வச்சே தீரணும். அப்பத்தான் தொழிலாளர்களுக்கு எதிரா நாம நெனக்கறதயெல்லாம் செயல்படுத்த வசதியா இருக்கும் னு நிர்வாகமே அவங்கள வளத்து விட்டுக்கிட்டு இருக்குது. அவங்க விரிக்கிற வலையில சிக்கி மோசம் போகாதீங்கன்னு எமதருமைத் தொழிலாளர்களை அன்போட கேட்டுக்குறோம்.

இதோ ஆர்எஸ்எஸ் சுக்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை. நாங்கதான் அக்மார்க் ISI,ISO தொழிற்சங்கமுன்னு சொன்னவங்க போட்டிருந்த முகமூடி அதுக்கு சப்பைக் கட்டுக்கட்டின நிர்வாகத்தோட முகமூடி ரெண்டும் கிழிஞ்சு தொங்குது.





ஆர்எஸ்எஸ், பிஜேபி,பிஎம்எஸ் எல்லாம் ஒன்றுதான் என்று நீயாகவே ஒத்துக் கொள்ளும்வரை உன்னை விடப்போவதில்லை!
01.04.2015

விஸ்வகர்மா பிறந்த நாளுக்கு திதிநட்சத்திரம் எதுவும் சொல்வதில்லை.


இந்து மதத்தில் இந்தக்கடவுள் இந்த தேதியில்தான் பிறந்தார் என்று சொல்ல முடியாது. கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான்@ இராமன் நவமியில் பிறந்தான்@ விநாயகன் சதுர்த்தியில் பிறந்தான்@ முருகன் சஷ்டியில் பிறந்தான் என்று அவர்கள் பிறந்த திதியைச் சொல்லுவார்கள். பிஎம்எஸ் காரர்கள் மேற்சொன்ன கடவுளர்களைப்போல விஸ்வகர்மா பிறந்த நாளுக்கு திதிநட்சத்திரம் எதுவும் சொல்வதில்லை.

இவர்களது இந்துமதத்தின்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குறிப்பிட்ட தேதியிலும் கொண்டாடுவதில்லை. வெள்ளைக் காரனை மிலேச்சர் அதாவது கீழானவர்கள் என்பார்கள். அந்த மிலேச்சனான வெள்ளைக்காரர்களது ஆண்டுக்கணக்கில் செப்டம்பர் மாதத்தில் அதுவும் 17ந்தேதி பிறந்தார் என்கிறார்கள். அதற்கு என்ன ஆதாரம் என்றால் ஆதாரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.

இருந்தால்தானே ஆதாரம் காட்டுவதற்கு? அந்த செப்டம்பர் 17 அன்று தமிழர் அனைவரும் தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கின்ற பெரியார் பிறந்தநாள். அதனால் அந்த நாளுக்குப் பெருமை வந்து  விடக்கூடாது என்பதற்காக அந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

 ஆனால் அவர்களில் அதிபுத்திசாலி ஒருவர் நாங்கள் செப்டம்பர் மாதத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. செப்டம்பர் 17 புரட்டாசி 1ந் தேதி வருகிறது. அதனால் புரட்டாசி 1அய்த்தான் நாங்கள் விஸ்வகர்மா பிறந்தநாளாகக் கொண்டாடுகிறோம் என்று உளறினார். .

அதாவது உண்மையா? 2011ம் ஆண்டு ஆவணி 31ந்தேதியே செப்டம்பர் 17 வந்தது. அந்த ஆண்டும் செப்டம்பர் 17ல்தான் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடினார்கள்.

 விஸ்வகர்மாவைப் பற்றிப் புராணங்களில் கூறப்பட்டுள்ள கதை ஒன்று இவர்களது அறிவுக்குச் சான்று: விஸ்வகர்மாவின் மகளை சூரியன் திருமணம் செய்துகொண்டானாம். சூரியனின் வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் அவள் தன்னுடைய வேலைக்காரியை சூரியனுடன் அனுப்பி வைத்தாளாம்.

அவள் இரண்டு பிள்ளை பெற்ற பிறகு சூரியனுக்கு சந்தேகம் வந்ததாம். (இரண்டுபிள்ளை பெறும்வரை அவள் முகத்தைப் பார்க்கவில்லைபோலும்) சூரியன் விஸ்வகர்மாவிடம் முறையிட்டானாம். விஸ்வகர்மா அவனது மகளிடம் கேட்டானாம். சூரியனின் வெப்பம் தாங்க முடியாததால் வேலைக்காரியை அனுப்பி வைத்ததாகக் கூறினாளாம். அதற்குப்பிறகு சூரியனின் வெப்பத்தைக் குறைக்க விஸ்வகர்மா சூரியனில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து சிவபெருமானுக்கு சூலாயுதமும் விஷ்ணுவுக்கு சக்கராயுதமும் செய்து கொடுத்தானாம். இப்படிப்போகிறது இந்தக்கதை.

இதை அறிவுள்ள மக்கள் யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? சூரியன் என்ன இரும்புத்தகடா? அல்லது செப்புத் தகடா வெட்டி எடுக்க? அவன் எந்த முறையில் வெட்டிஎடுத்தான்? GAS CUTTING ஆ அல்லது PUG CUTTING ஆ? அல்லது HACKSAW CUTTING ஆ? எங்கே நின்றுகொண்டு வெட்டியெடுத்தான்?

சூரியன் மனிதனா? கடவுளா? அவன் திருமணம் செய்து பிள்ளை குட்டி பெற்றெடுத்தானா?

இதையெல்லாம் உண்மை என்று நம்பினால் விஸ்வகர்மா என்ற ஒருவன் இருந்தான் என்பதையும் நம்பலாம்.

நீ சொல்வதை அறிவு சிறிதுமற்ற காட்டுமிராண்டிகள் நம்பலாம். பெல் மனிதவளத்துறை அதிகாரிகள் வேண்டுமானால் நம்பி

செப்டம்பர் 17ல் தந்தை பெரியார் பிறந்தநாளில் விஸ்வகர்மா ஜெயந்தி(?) கொண்டாட அனுமதி கொடுக்கலாம். பெரியார் பிறந்தநாளுக்கு அனுமதி மறுக்கலாம். ஆனால் இந்த அறிவியல் யுகத்தில் அனைத்து அறிவியல் சாதனங்களையும் பயன்படுத்துகின்ற அறிவுள்ள தொழிலாளர்களும் நம்ப வேண்டுமா?
எனவேää தொழிலாளர்களே! நம்மைக் காட்டுமிராண்டிக் காலத்துக்கு அழைத்துச்செல்லும் பிஎம்எஸ் சின் பித்தலாட்டத்தைப் புரிந்துகொள்வீர்! அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவீர்!            

பாபர் மசூதியை இடித்ததன் விளைவாகத்தான் நாட்டில் இந்த அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது.

                ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாந் தேதி வந்துவிட்டால் நாட்டில் யாருமே நிம்மதியாக இருக்க முடியாது. நிம்மதியாகப் பேருந்தில் இரயிலில் விமானத்தில் இருசக்கர வாகனத்தில் போக முடியாது. வீட்டை விட்டு வெளியில் வந்தால் கையில் ஒரு பை கூட எடுத்துச்செல்ல முடியாது.

அந்த அளவிற்கு அந்த நாளை ஒரு பயங்கரவாத நாளாக சித்தரித்து விட்டார்கள். இந்த நாடு அமைதியாக இருக்கக் கூடாது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று கருதிய ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பிஜேபி பிஎம்எஸ் கும்பல் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளான டிசம்பர் ஆறாந்தேதியைத் தேர்ந்தெடுத்து நானூறு ஆண்டு பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்ததன் விளைவாகத்தான் நாட்டில் இந்த அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது.

அந்தக் காரியத்தை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் கண்டிக்கின்ற சூழ்நிலையில் அந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதியை இடித்த தினத்தை வரவேற்று துண்டறிக்கை ஒட்டி பெல் நிறுவனத்திலேயும் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று சதி நடந்துகொண்டிருக்கிறது. அடுத்து காசியும் மதுராவும் இடிக்கப்பட வேண்டும் என்றும் நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளையும் இடித்து அங்கே கோயில் கட்ட வேண்டும் என்ற பொருளிலும் ஒவ்வொரு ஆண்டும் துண்டறிக்கை ஒட்டப்பட்டு வருகிறது. இது தொழிலாளர் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கி வருகிறது.

இதனைச் செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்தான் என்பது வெள்ளிடைமலை. அவர்கள் ஒழிந்துகொண்டிருப்பது பிஎம்எஸ்ஸில். இப்படிப்பட்ட மதவெறியைத் தூண்டி அதன்மூலம் இந்த நாட்டை இந்து நாடாக்க வேண்டும். அதன்மூலம் பார்ப்பனர்கள்தான் அனைத்து உரிமையும் பெற்றவர்கள்: அவர்கள் ஆண்டவனுக்கும் மேலே@ அவர்களுக்குக் கட்டுப்பட்டே அரசாங்கம் உள்பட அனைத்தும் இயங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள். அவர் இறந்த ஜனவரி 30அய் இப்படி வெளிப்படையாகக் கொண்டாட மாட்டார்கள். காந்தியைக் கொன்ற கோட்ஷே ஆர்எஸ்எஸ்காரன் என்றால் இவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்று சொல்பவர்கள் கோழைகள் என்று கோட்ஷேயின் தம்பி கோபால் கோட்ஷே கூறுவார். அப்படிப்பட்ட கோழைகள்தான் இதுமாதிரி பெயர் போடாமல் துண்டறிக்கை ஒட்டி மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள்.

அவர்கள் பெயர் போடாமல் ஒட்டினாலும் ஒட்டியது பிஎம்எஸ்ஸில் உள்ளவர்கள்தான் என்பது நிர்வாகத்திற்கு நன்கு தெரியும். அவர்கள் பாபர் மசூதியை இடிக்க பெல் நிறுவனத்திலிருந்து சென்று கலந்துகொண்டவர்கள் என்பதும் நிர்வாகத்துக்குத் தெரியும்.

நிர்வாகம் தனக்குத் தெரியாது என்று கூறுமேயானால் ஒட்டியவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்தான். அவர்கள் பிஎம்எஸ்ஸில்தான் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

இந்த நிலையை முறியடிக்க ஒன்று அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நாட்டில் மூன்றுமுறை தடைசெய்யப்பட்டு ஆர்எஸ்எஸ் ஸின் இலட்சியங்களை தொழிலாளர்களிடத்தில் பரப்பி ஆர்எஸ்எஸ் அமைக்க இருக்கும் இந்து ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணியில் செயல்பட்டுவரும் பிஎம்எஸ் ஸைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல் இங்கே ஜாதிக்கலவரமும் மதக்கலவரமும் ஏற்பட்டு தொழிலமைதி சீர்குலையும் என்று எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவண் :

புதன், 30 நவம்பர், 2016

பல பரிவார் அமைப்புகள் பணியாற்றுவதைப்போல தொழிலாளர்துறையில் பிஎம்எஸ் பணியாற்றுகிறது|


டிசம்பர் - 6 என்றதும் நமது நினைவுக்கு வருவது அண்ணல் அம்பேத்கர் அவர்களின்  நினைவுதினம். அந்த நினைவு மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்று அந்த நாளைத் தேர்ந்தெடுத்து 400 ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி என்ற நினைவுச்சின்னத்தை இடித்து நாட்டை மதவெறிக்கடாக்கியவர்களுக்கு நினைவுக்கு வருவது மசூதி இடிப்பு. அதனால்தான் அம்பேத்கருடைய வரலாற்றிலிருந்து அந்தக் காலத்தில் பார்ப்பனரல்லாதாரின் கல்வி நிலைபற்றியும் அக்கல்வி பற்றி பிஎம்எஸ்ஸின் புருடா பற்றியும் எழுதியிருந்தோம்.  

அதேபோல ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான விஹெச்பி யின் பெயரிலும் அன்னிய ஆக்கிரமிப்பாளனால் கட்டப்பட்ட அவமானச்சின்னம் அகற்றப்பட்டநாள் என்றும் தேசிய எழுச்சிநாள் என்றும் அடுத்து காசியும் மதுராவும் இடிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் சுதந்திரம் ஆகஸ்ட் 15 என்றும் தன்மான சுதந்திரம் டிசம்பர் 6 என்றும் தொடர்ந்து ஒட்டுவார்கள். இந்த ஆண்டு ஒரு வித்தியாசம். விஹெச்பி என்பதற்குப் பதிலாக பேட்ரியாட் என்று போட்டிருந்தார்கள்.

இவர்களுடைய நோக்கம் நாட்டை மதவெறிக்காடாக்கி சிறுபான்மையினரை அச்சத்திலாழ்த்தி பார்ப்பனரல்லாதாரை மதவெறிக்கு பலிகடாவாக்கி பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதே. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருக்க வேண்டுமானால் இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமகன் என்ற உரிமையுமின்றி இங்கே வாழவேண்டும் என்று அவர்களை மிரட்டிவைக்க வேண்டும் என்பதே.

இதனை சமூகநல்லிணக்கத்தை விரும்புபவர்களும் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நிர்வாகம் அவர்களது நடவடிக்கையைக் கட்டுப்படுத்த இதுவரை உருப்படியான எதனையும் செய்யவில்லை. மனிதவளநிர்வாகம் இதுவரை அளித்த பதில் அப்படிச் செய்வது யாரென்று தெரியாது என்று கூறி அவர்களை வளரவிட்டுக்கொண்டிருந்தது.


பிஎம்எஸ்ஸை ஆரம்பித்தது அவர்கள்தான். அதன் பாதுகாவலர்களும் வழிநடத்துவதும் அவர்கள்தான் என்பதில் எள்ளவும் அய்யமில்லை. பிஎம்எஸ் சார்பாக அவர்கள் வெளியிட்ட சங்கதீபம் என்ற இதழ் (அக்டோபர் 1999ல்) இப்படிக்கூறுகிறார்கள். ~நமது தேவையறிந்து ஒரு முழுநேரப்பணியாளரை பிஎம்எஸ் சுக்காக ஆர்எஸ்எஸ் பேரியக்கம் அளித்துள்ளது. அவர்தான் சிறீமான் சங்கரசுப்பிரமணியம். அவரை வாழ்த்தி வரவேற்கிறோம்| என்று அவர்கள் கூறுகிறார்கள். பிஎம்எஸ் சங்கமடல் 2001ல் ~பரிவார் இயக்கங்கள் வவேறு துறைகளில் பணியாற்றி வருகின்றன. கல்வியில், கலை கலாச்சாரத்துறையில், விவசாயத்துறையில், பண்பாட்டுத்துறையில் பல பரிவார் அமைப்புகள் பணியாற்றுவதைப்போல தொழிலாளர்துறையில் பிஎம்எஸ் பணியாற்றுகிறது| என்று கூறுகிறார்கள்.

இப்படி இருக்கும்போது எங்களுக்கும் பிஜேபிக்கும் சம்மந்தமில்லை. எங்களுக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் தொடர்பு இல்லை என்பதெல்லாம் இளம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்கள் உறுப்பினராக்கி பின்னர் அவர்களை ஆர்எஸ்எஸ் பணிகளில் ஈடுபடுத்துவதற்கே.  ஆர்எஸ்எஸ் பணி என்பது மதவெறியே. அதனையும் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

 17-8-1997 அன்று பிஎம்எஸ் ஸின் உறுப்பினர்களை சங்கப்பணியில் ஊக்கப்படுத்தும் முகமாக பயிற்சிமுகாம் நடந்ததாக செப்டம்பர் 97 இதழில் தெரியப்படுத்துகிறார்கள். இங்கே சங்கப்பணி என்பது ராஷ்ட்ரிய ஸ்யம் சேவக் கின் பணிதான்.

ஆர்எஸ்எஸ் என்பது மூன்றுமுறை தடைசெய்யப்பட்ட அமைப்பு. அதனை தொழிலாளர் மத்தியில் வளரவிட்டால் மதவெறி தலைதூக்கும். அதனால்தான் அதற்குத் தடைவிதிக்கச் சொன்னோம். இவற்றுக்கெல்லாம் தத்துவரீதியாக பதிலளிக்க முடியாதவர்கள் நாங்கள் கூலிக்கு மாரடிப்பதாகவும் பங்குகளுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதாகவும் சொல்வது பந்தை அடிக்க முடியாதவன் காலை அடிப்பது போன்றது. கூலிக்கு மாரடிப்பதாக நீ சொல்வது உண்மையானால் உன்னிடம் இல்லாத பணமா? அந்தக் கூலியை நீ தரலாமே! கோடிகள் இட்டழைத்தாலும் அதைத் தொடாமல் உன்னை அம்பலப்படுத்துவோம் என்பது உனக்கும் தெரியுமே!                

தொழிலாளர்களே! வெல்டர்கள் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக நடவடிக்கை எடுக்கச் சொல்பவர்கள் தொழிலாளர்களின் தோழர்களா? சிந்திப்பீர்! பங்குபெறாத சங்கக் கூட்டத்திற்கு அழைப்பு ஏதும் இல்லாதபோது அழையா வீட்டு நுழையா விருந்தாளியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால்தான் தேர்தலில் எங்கள் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆதாரமில்லாமல் பேசுபவர்கள் இவர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம்.    

இவண் : பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச்சங்கம்

இருவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்த நிர்வாகம் இவருக்கு ஏன் வழங்கவில்லை?


1992ல் 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்த நாளைத் தேசிய எழுச்சி தினம் என்று நோட்டீஸ் ஒட்டியது பிஎம்எஸ். 1992க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 என்றாலே யாருமே நிம்மதியாக வீட்டை விட்டு வெளிவரவே முடியாது. அவ்வளவு பிரச்சினைக்குரிய செயலை ஆதரித்து நோட்டீஸ் ஒட்டுவது என்பது நம் நிறுவன தொழில் அமைதியைப் பாதிக்கக் கூடிய செயல்.

பல மதத்தவர்களும் இனத்தவர்களும் பணியாற்றும் இந்நிறுவனத்தில் சிறுபான்மை மக்களை அச்சத்திலாழ்த்தும் செயல் இது என்பதால் அந்த நோட்டீஸ் ஒட்டியவர் மீது நடவடிக்கை எடு என்று திதொக கோரிக்கை வைத்த உடன் பிஎம்எஸ், எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.

அல்லது தைரியமாக நாங்கள்தான் அதனை ஒட்டினோம்@ ஆனதைப் பாருங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அத்தகைய வீரத்தை அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்று சொல்லும் வகையில் உங்கள் சங்க செயலாளர் வெல்டர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் பேசினார். அதற்கு ஏன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு ஆட்காட்டி வேலை செய்கிறது.
எங்கள் செயலாளர் அந்தக் கூட்டத்தில் பேசியது உண்மைதான். அது ஒன்றும் இரகசியக் கூட்டம் அல்ல. அனைவருக்கும் அழைப்பு விடுத்து பொதுவான மண்டபத்தில் ஒலிபெருக்கி வைத்து அனைவருக்கும் கேட்கும் வண்ணம் நடைபெற்ற அக்கூட்டத்தில் வெளிப்படையாக அவர் பேசினார்.

 அவருடைய பேச்சு அனைத்துத் தொழிலாளர்களாலும் வரவேற்கப்பட்டது. அதற்கு முதல் நாள் எங்கள் சங்கத்தின் பெயர் போட்டு போராட்டத்திற்கு ஆதரவாகவும் வெல்டர்ஸ் அசோசியேசன் இல்லாமல் பேச்சுவார்த்தை என்பது நோயாளியை அழைத்துச் செல்லாமல் மருத்துவரிடம் அவருக்கு வேண்டியவர் சென்று மருந்து கேட்பது போலத்தான் முடியுமே தவிர நோய் தீர வழியேற்படாது என்றும் வெல்டர்ஸ் அசோசியேசனையும் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்றும் நிர்வாகத்துக்கும் பங்குபெறும் சங்கங்களுக்கும் வேண்டுகோள் வைத்து துண்டறிக்கை வெளியிட்டோம்.

அது அனைத்து வெல்டர்களாலும் குறிப்பாக இளம் வெல்டர்களால் வரவேற்கப்பட்டு ஒருவருக்கொருவர் அது குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. பொதுக்குழுவில் பேசுகின்றபொழுது முதல் நாள் அந்தத் துண்டறிக்கை வெளியிட்டது தங்கள் சங்கம்தான் என்றோää தான் அந்த சங்கத்தின் செயலாளர் என்றோ வெளிப்படுத்தி பிஎம்எஸ் சைப்போல நாங்கள் மட்டுமே உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். எங்கள் சங்கத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றோ ஓட்டுப்போடுங்கள் என்றோ நன்கொடை தாருங்கள் என்றோ பொருள்படும்படிப் பந்தலிலே பாகற்காய் என்ற பாணியில் பேசவுமில்லை. ஆதாயம் தேடவுமில்லை. இது தவறான செயலா? தொழிலாளர்களை இது பாதிக்கச் செய்ததா? பங்குபெறாத சங்கமாக இருக்கும்போதே இதற்காக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சங்கம் பங்குபெறும் சங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எத்தகைய பாதகத்தைச் செய்வார்கள் என்பதைத் தொழிலாளர்களே! புரிந்துகொள்வீர்!
இதுபோல துணிச்சலாக பாபர் மசூதி இடித்த தினத்தை தேசிய எழுச்சிநாள் என்று துண்டறிக்கை ஒட்டியது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளத் தயாரா?

அக்கூட்டத்தில் பேசிய இருவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்த நிர்வாகம் இவருக்கு ஏன் வழங்கவில்லை? இவருக்கும் நிர்வாகத்துக்கும் என்ன தொடர்பு? என்று ஏதோ புலன் விசாரணை செய்து மர்மக்கதை எழுதுகிறது. 21-08-2011 அன்று வெல்டர்ஸ் அசோசியேசன் கூட்டம் நடைபெற்றது. 13-08-2011 தேதியிட்டு எங்கள் சங்கத்துக்கு எதிர்காலத்தில் எப்பொழுதுமே வாயிற்கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று நிர்வாகம் கடிதம் வழங்கியது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தவறு என்பதை நிரூபித்துத்தான் மீண்டும் எங்கள் சங்கத்துக்கு வாயிற்கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டது. இதுதான் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் உள்ள தொடர்பு. இதனையும் மீறி நிர்வாகத்துடன் எங்களுக்கு என்ன உறவு என்று பிஎம்எஸ் சொல்கிறதோ புரியவில்லை. எனவே தொழிலாளர்களே! புரிந்துகொள்வீர் பிஎம்எஸ்ஸை!  இவண் :

வெள்ளைக்காரன் வந்தபோது முப்பத்து நான்காயிரம் கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் இந் நாட்டைவிட்டுப் போனபோது 1400 கப்பல்கள் இருந்ததாம்.



ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17,2010 அன்று ஜமுக்காளத்தில் வடிகட்டி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டது.

வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்த நாட்டில் 70 சதவிகிதம் பேர் படித்திருந்ததாகவும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் வெள்ளைக்காரன் வந்தபிறகு படித்தவர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உலகமகாப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள்.

70 சதவிகிதம்பேர் படித்திருந்தார்கள் என்றால் யார் படித்தது? பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் படித்திருந்தானா? பார்ப்பனர் மட்டும் படித்திருந்தார்களா? என்று கேட்டோம். இதுவரை நாணயமான பதில் இல்லை.

அதேபோல 2012 செப்டம்பர் 17லிலும் இன்னொரு பொய்யைத் துணிச்சலாக அவிழ்த்துவிட்டுள்ளார்கள். அக்பர் இந்த நாட்டைக் கைப்பற்றியபோது நாற்பதாயிரம் வணிகக்கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் வந்தபோது முப்பத்து நான்காயிரம் கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் இந் நாட்டைவிட்டுப் போனபோது 1400 கப்பல்கள் இருந்ததாம்.

சரி, இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள் யார்?   வணிகக் கப்பல் என்றால் வைசியர்கள்தான் அதில் பயணம் செய்திருக்க முடியும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு வைசியர். அவர் பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக இலண்டன் செல்ல முயற்சிக்கிறார்.

அப்பொழுது அவருடைய  ஜாதிக்காரர்கள் நம்முடைய இந்து சாஸ்திரப்படிää வைசியன் கடல் தாண்டிப் போகக்கூடாது என்று அவரைத் தடுக்கிறார்கள். அதையும் மீறி அவர் இலண்டன் செல்கிறார். அதனால் அவரை ஜாதியை விட்டே நீக்கி வைக்கிறார்கள்.

இதனை அண்ணல் காந்தியடிகள் தனது சுயசரிதையான சத்தியசோதனையில் தெரிவிக்கிறார்.

ஆக வைசியர் அக்கப்பலில் பயணம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.
அடுத்து பிராமணர்கள் இக்கப்பலில் சென்றார்களா என்று ஆய்வு செய்தோமானால் அதற்கும் வாய்ப்பு இல்லை. நம்முடைய காஞ்சி ஜெயேந்திர சரசுவதி, சங்கரராமன் என்ற வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளரை ஏன் போட்டுத் தள்ளினார் தெரியுமா?

சங்கராச்சாரி அப்பொழுது வெளிநாடு போக முயற்சித்தார். இந்து சாஸ்திரங்களின்படி பிராமணர் கடல் தாண்டிப் போகக் கூடாது என்று இருக்கிறது. எனவே, சங்கராச்சாரி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று தடுத்தார். சங்கரராமனை சங்கராச்சாரி போட்டுத்தள்ளியதற்கு இதுவும் ஒரு காரணம்.

மண்ணுருண்டை மாளவியா என்று ஒருவர் இருந்தார். அவருக்கு அப்பெயர் ஏன் வந்தது? அவர் ஒரு பிராமணர். பிராமணர் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் இவர் வெளிநாடு செல்ல வேண்டும். அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார். அவர் செல்லும்போது இந்திய மண்ணை ஒரு பிடி உருண்டையாக (பிள்ளையாரைப்போல்) பிடித்து தன்னுடன் எடுத்துச் செல்வார். அதாவது அவர் எப்போதும் இந்திய மண்ணில்தான் இருக்கிறாராம். இது அவருடைய கண்டு பிடிப்பு. ஆக பிராமணரும் அக்கப்பலில் பயணித்திருக்க வாய்ப்பில்லை.

எஞ்சியிருப்பது சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும்தான். இந்த நாட்டிற்கு வெள்ளைக் காரன் வந்து பஸ்ஸை ஓட்டினான். பஸ் முதலாளிகள் இந்தியர்கள். அந்த பஸ்ஸில் ஏறுவதற்கு பஞ்சமர்களுக்கு அனுமதியில்லை என்று பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் அச்சடித்திருந்தான். பெரியாரின் தொண்டரான WPA சவுந்திரபாண்டியநாடார் இராமநாதபும் ஆட்சிமன்றக்குழுத் தலைவராக இருந்தபோது அவ்வாறு பஸ் டிக்கட்டில் அச்சடித்திருப்பதை எடுக்கவில்லையென்றால் பஸ் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்த பிறகுதான் அது நீக்கப்பட்டது என்பது தொன்னூறு ஆண்டுக்கு முன்பு உள்ள வரலாறு.

ஆக பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் பஞ்சமன் யாருமே பயணம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. யார் அந்த 40000 கப்பலில் பயணம் செய்தது? பொய் சொல்லவும் ஒரு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பிஎம்எஸ் காரர்களுக்கு நிறையவே உள்ளது. அதற்காக அவர்களைப் பாராட்டி புருடா மன்னர் சங்கம் என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாம்.
இவண் :