திருவரங்கத்தில் இருக்கும் கோபுரம் ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மொட்டையாக இருந்தது. திருவில்லிப்புத்தூர் கோபுரத்தைவிட குட்டையாகவும் இருந்தது. ஒருநாள் அரங்கநாதர் ஜீயர் கனவில் வந்தாராம். திருவில்லிப்புத்தூரிலுள்ள தனது காதலி ஆண்டாள் கோபுரம் தனது கோபுரத்தைவிட உயரமாக இருப்பதாகவும் அதனால் இங்கிருந்து ஆண்டாளைப் பார்க்க (சைட் அடிக்க) முடியவில்லை யென்றும் அதனால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தைப்போல தனது கோபுரத்தையும் உயர்த்த வேண்டும் என்று உத்தரவு போட்டாராம். அதனால் ரெங்கநாதர் ஆண்டாளை சைட் அடிக்க வசதியாகக் கோபுரத்தை உயர்த்தத் திட்டமிட்டதாக ஜீயர் தெரிவித்து அதற்கான பணிகளைச் செய்து வந்தார். அந்தச்சமயம் திரை இசைத்துறையில் மிகவும் கொடிகட்டிப்பறந்த இளையராஜாவிடம் எட்டாவது கோபுரம் கட்ட டொனேஷன் கேட்க அவரும் அதற்கிசைந்து எட்டு லட்ச ரூபாயை அள்ளிக்கொடுத்தார். அப்படி அள்ளிக் கொடுத்த சந்தோசத்தில் கும்பாபிஷேகத்தில் தனக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும் என்று ஆசையில் ஓடிவந்தார் இளையராஜா. உட்காரக் கூட சீட் தராமல் இழிவுபடுத்தியது அய்யங்கார்க் கூட்டம்.
கோடிகோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் நீ பறையன்; என்பதை மாற்ற முடியாது. பணத்துக்காக உனக்கு முதல் மரியாதை தரமுடியாது என்று சொல்லாமல் சொல்லியது. பின்னர்தான் தெரிந்தது எட்டாவது எண் அமங்கலமானது. அதை ஒரு பஞ்சமன்மூலம் கட்டினால் ஷேமமாக இருக்கும் என்ற அய்தீகத்தில்தான் பஞ்சமரான இ.ராஜாவின் பணத்தில் அந்தக் கோபுரத்தைக்கட்டினார்களாம். ஒரு வாஷிங்பவுடர் விளம்பரத்தில் கறை நல்லது என்று வருவதுபோல இ.ராஜாவும் தீண்டாமை நல்லது என்று அதை ஏற்றுக்கொண்டுவிட்டார்.
அத்துடன் கோபுரங்கள் ஏன் உயரமாகக் கட்டப்பட்டது என்பதற்கும் ஒர அய்தீகம் உண்டு. சாமியை ஒவ்வொரு வருணத்தானும் எவ்வளவு தூரத்திலிருந்து தரிசிக்க வேண்டும் என்று சுருதிகளும் ஸ்மிருதிகளும் புராண இதிகாசங்களும் தெளிவாகச் சொல்லி இருக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புக்களும் இருக்கின்றன. அதில் பஞ்சமன் எங்கே நிற்க வேண்டும் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவன் எங்கே நிற்க வேண்டுமென்றால் கோபுரத்தை எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரிகிறதோ அவ்வளவு தொலைவில் இருந்துதான் தரிசிக்க வேண்டுமே தவிர கோவிலுக்குப்பக்கத்தில் வந்து தரிசிக்க வேண்டுமென்றோ கோயிலுக்குள் நுழைய வேண்டுமென்றோ எந்த ஒரு பஞ்சமனும் (பள்ளர்ääபறையர்ääசக்கிலியர்) நினைக்கக் கூடாது என்பதுதான் கோபுரங்களின் தத்துவம்.
தீண்டாமையின் ஆணிவேர் எங்கிருக்கிறது என்பது இப்பொழுது புலப்படவில்லையா? தீண்டாமையை ஒழிக்க நினைப்போர் முதலில் எதை ஒழிக்க வேண்டும்.? இதைத்தானே?
இதுதான் புனிதச்சின்னமாம். இதற்குப் பக்கத்தில் பெரியார் சிலை வைக்கலாமா என்று உச்சநீதிமன்றம் வரை சென்று எக்காளமிடுகிறது எத்தர்களின் கூட்டம். புனிதச்சின்னம் என்றால் யாருக்குப் புனிதச்சின்னம்? கறை நல்லது என்றால் யாருக்கு நல்லது? வாஷிங்பவுடர் தயாரிப்பவனுக்கும் சோப் தயாரிப்பவனுக்கும் நல்லது. கஸ்டமர்களுக்கு? அதுபோல் தீண்டாமை நல்லது என்றால் யாருக்கு நல்லது? ஜாதித் திமிர் பிடித்தவர்களுக்குத்தானே?
ஜாதி காப்பாற்றப்பட வேண்டும். தீண்டாமை காப்பாற்றப்பட வேண்டும் என்பவர்களுக்கு வேண்டுமானால் இது புனிதச்சின்னமாக இருக்கலாம். ஆனால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பவர்களுக்கு இத்தகைய கோபுரங்கள் அவமானச்சின்னங்கள் இல்லையா? சாதாரணமான கோபுரங்களே தீண்டாமையின் சின்னம் என்றால் இது ராஜகோபுரமல்லவா? அது எத்தகைய சின்னம்? இராஜ அவமானமா?
சுயமரியாதை அற்றவன் பூஜ்யத்துக்குச் சமம் என்றார் அம்பேத்கர்.
சுயமரியாதை அற்ற கும்பல் வேண்டுமானால் கோபுரங்களைப் புனிதச்சின்னம் என்று ஏற்றுக்கொள்ளலாம். சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்று கருதுவோர் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
நானூறு ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட ஒரே ஒரு மசூதி அவமானச்சின்னம் என்று அதை இடித்துத் தள்ளிவிட்டு எக்காளமிடுகிறது பார்ப்பனக் கூட்டம். ஆயிரக்கணக்கில் நாட்டில் கோபுரங்களைக் கட்டிவைத்து தீண்டாமையைப் பாதுகாக்கும் அந்த அயோக்கியர் கூட்டத்தையும் தீண்டாமையின் சின்னங்களான அந்தக் கோபுரங்களையும் என்ன செய்வது?
சுயமரியாதை உணர்வு கொண்டோரே சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக