இரண்யாட்சதன் என்ற அசுரன் பூமியைப்பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்து கொண்டானாம்.. பகவான் விஷ்னு பீ தின்னும் பன்றி அவதாரம் எடுத்து அந்த அசுரனிடமிருந்து பூமாதேவியைமீட்டு விடுவித்தானாம். தன்னை விடுவித்த பன்றிமீது பூமாதேவிக்குக் காதல் வந்ததாம். அதில் பிறந்தவன்தான் நரகாசுரனாம். அந்த நரகாசுரன் தேவர்களை இம்சிக்க அவனை பூமாதேவியுடன் சேர்ந்து பகவான் ஒழித்தானாம். அந்த நாள்தான் தீபாவளியாம்.
இந்தக்கதையை எழுதி வைத்தவன் யார்? இஸ்லாமினா? கிறிஸ்தவனா?
பூமி பாயாகச் சுருட்டக்கூடிய அளவிற்கு தட்டையா? அதை அசுரன் சுருட்டினான் என்றால் எதன் மீது நின்று சுருட்டினான்? அப்படியே சுருட்டியிருந்தாலும் கடலுக்குள் எப்படி ஒளிந்துகொண்டான். கடல் பூமிமீது இல்லாமல் தனியாக இருந்ததா?
இந்தக் கேள்வியைப் பெரியார் தொண்டர்கள் எழுபது எண்பது ஆண்டுகளாய்க் கேட்டதற்கு இதுவரை பதிலில்லை. ஜாரஜ் புஷ் ஹேப்பி தீவாளி என்;கிறான் டோனிபிளேர் ஹேப்பி தீவாளி என்கிறான் என்று நக்கல் செய்ததே தவிர அறிவு நாணயத்தோட அம்பி பதில் சொல்லவில்லை.
இப்பொழுது என்னடான்னா ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே பூமி உருண்டை என்று நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டான் என்கிறது.
அவ்வையார் என்ன உன்னுடைய இந்துமதமா? அவர் சைவமா? வைணவமா?
பூமி உருண்டை என்பது தீபாவளி கொண்டாடும்போது தெரியவில்லையா? இப்பொழுதுதான் திடீரென ஞானம் வந்ததா?
பரமசிவன் பார்வதி கல்யாணம் உலகத்தின் வடகோடியான இமயமலையில் நடந்தது. முப்பத்துமுக்கோடி தேவர்கள் நாற்பத்தியெண்ணாயிரம் ரிஷிகள் கின்னரர் கிம்புருடர் அட்டதிக்குப் பாலகர்கள் எல்லாம் குவிந்து விட்டதால் உலகின் வடகோடியான இமயமலை தாழ்ந்து தென்கோடியான கன்னியாகுமரி உயர்ந்து விட்டதென்று எழுதி வைத்திருக்கிறானே! இவையெல்லாம் உன்னுடைய இந்துமத புராணங்கள்தானே? இமயமலைக்கு வடக்கேயும் கன்னியாகுமரிக்குத் தெற்கேயும் உலகமே இல்லையா?
பூமி உருண்டை என்று இப்பொழுது தெரிந்துவிட்டதே! இப்பொழுதாவது பூமி தட்டை என்று எழுதிவைத்துள்ள உனது புராணங்களையும் இதிகாசங்களையும் இதுவரை தீவைத்துக் கொளுத்தாமல் அவற்றையெல்லாம் இன்னும் உயர்வாகக் கொண்டாடுவது ஏன்?
அந்தக்கதைகளை இன்னும் பரப்பி மக்களை முட்டாளாக்கி விழாக்களாகக் கொண்டாட வைப்பது ஏன்? அந்தக்கதைகளின் அடிப்படையில் எத்தனை விழாக்கள்? திதி என்கிறீர்கள்ää நட்சத்திரம் என்கிறீர்கள். அஷ்டமி என்கிறீர்கள் நவமி என்கிறீர்கள்.
ஜோதிடவிஞ்ஞானம் என்று சொல்லி உன்னுடைய பிஜேபி அரசு பாடத்திட்டத்தில் கொண்டு வந்ததே! அந்த ஜோதிட விஞ்ஞானத்தில் பூமியைத்தானே சூரியன் சந்திரன் மற்ற எல்லா கோள்களும் சுற்றி வருவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது? பூமியைச் சூரியன் சுற்றுகிறதா? சூரியனைப் பூமி சுற்றுகிறதா? எது விஞ்ஞானம்? சூரியன் நட்சத்திரமா? கிரகமா? பூமியைக் கிரகமாக உன்னுடைய ஜோதிடம் சொல்வதில்லையே! சந்திரன் கிரகமா? இராகுவும் கேதுவும் எங்கே இருக்கிறது?
சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் இராகு கேது எனகிற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதால் ஏற்படுகிறது என்று உன்னுடைய புராணங்களில் எழுதப்பட்டுள்ளதே! அவையெல்லாம் விஞ்ஞானமா? அஞ்ஞானமா?
பூமி உருண்டை என்று தெரியாத காலத்தில் அவற்றை உன்னுடைய முன்னோர்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அவர்கள் முட்டாள்கள். மன்னித்து விடலாம். பூமி உருண்டை என்று தெரிந்தபின்னும் அந்தக்கதையையும் மாற்றாமல் அவையெல்லாம் உண்மைபோலக் கூறி மக்களை மடையர்களாக்கி பிரச்சாரம் செய்து பரப்பி வருகிறீர்களே! இது அயோக்கியத்தனம் இல்லையா?
பூமி தட்டை என்று எழுதி வைக்கப்பட்டுள்ள புராணங்கள் - இதிகாசங்கள் அத்தனையையம் தீவைத்துக் கொளுத்த நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?
பூமி தட்டை என்று எழுதப்பட்டுள்ள கதையை நம்பி இனி யாரும் தீபாவளி கொண்டாடாதீர் என்று பிரச்சாரம் செய்யத்தயாரா?
இதையெல்லாம் எடுத்துச்சொன்னால் நாங்கள் மண்டூகங்களா? மண்டூகத்துக்குப்பிறந்த மண்டூகமே! மரியாதையாக பதில்சொல்!
:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக