செவ்வாய், 11 அக்டோபர், 2016

எந்த சாஸ்திரத்திலும் புனித நூலிலும் ; தீண்டாமை குறிப்பிடப்படவில்லை என்று அப்பட்டமாகத் துணிந்து பொய் சொல்கிறார்.


இந்தியாவில் இரயிலும் தொழிற்சாலையும் வந்தால் ஜாதியும் தீண்டாமையும் ஒழிந்துவிடும் என்றார் கார்ல்மார்க்ஸ். இரயில் வந்தது. இரயில்வே உணவகத்தில் பிராமணாள் சாப்பிடும் இடம் என்று தனியாகவும் வந்தது. சவுத் இந்தியன் இரயில்வே என்பது சீரங்கம் அய்யர் அய்யங்கார் இரயில்வே என்று கூறப்படும் அளவுக்கு அவாள் ஆதிக்கம் தலைவிரித்தாடியது. வெள்ளைக்காரன் கொண்டு வந்த இரயிலில் எப்படி பிராமணாள் சாப்பிடும் இடம் தனியாக? வெள்ளைக்காரனுக்கு அட்வைசரே அவாள்தான். சூத்திராளுடன் சேர்ந்து சாப்பிட்டால் தோஷம் என்று சாஸ்திரத்தில் பெரியவா சொல்லியிருக்கா. அதனாலே எங்களவாளுக்கு சாப்பிடத் தனியிடம் வேணும் என்று வெள்ளைக்காரனிடம் கேட்டு வாங்கிக்கொண்டா.

சங்கரராமனைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போனார் காஞ்சி காமகோடி சங்கராச்சாரி. அங்கே சூத்திரா சமைச்சா நான் சாப்பிட மாட்டேன்னுட்டு அங்கே வேலை பார்த்த பார்ப்பன கான்ஸ்டபிளை விட்டு சமைக்கச் சொல்லிச் சாப்பிட்டாரே. தீண்டாமை சேமகரமானது என்று செத்துப்போன சங்கராச்சாரி தெய்வத்தின் குரல் என்ற நூலில் எழுதியிருக்கிறாரே.  உலகத்தில் உயர்ந்த சோப்புப் போட்டுக் குளித்தாலும் தீண்டாதவன் உடம்பிலுள்ள அழுக்கு வேண்டுமானால் போகலாம். அவன் பிறவியில் உள்ள அழுக்குப் போகாது என்று சொன்னாரே பூரி சங்கராச்சாரி?

அவாளுக்கெல்லாம் சாஸ்திரம் தெரியாதா? அவாளுக்குத் தெரிந்தது இராமகோபாலனுக்குத் தெரியாமலிருக்குமா? தெரிந்தாலும் அதை இப்பொழுது சொல்லிப் பிழைப்பு நடத்த முடியாதே! அதனாலே எந்த சாஸ்திரத்திலும் புனித  நூலிலும் ; தீண்டாமை குறிப்பிடப்படவில்லை என்று அப்பட்டமாகத் துணிந்து பொய் சொல்கிறார். அவாளின் மூலதனமே பொய்தானே?

பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்னிக்கு எஸ்சி எஸ்டி எவனாவது வைத்திருக்கும் அம்பேத்கர் சிலையைத் தேடிப்பிடித்து மாலை அணிவித்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுவார்கள். அந்த அம்பேத்கர் சமஸ்கிருதம் படிக்க பார்ப்பனர்கள் அனுமதியாதபோதும் தாமே முயன்று சமஸ்கிருதத்தைக் கற்று இவர்களுடைய சாஸ்திரங்களையும் புனித நூல்களையும் மூலத்தையே கற்று இராமகோபாலன்களின் முகமூடியைக் கிழித்தெறிந்திருக்கிறார்.

|| ஒரு இந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான் எனில் அவனுடைய மதம் அவனுக்கு அவ்வாறு கட்டளை இட்டிருப்பதால்தான். இந்துக்கள் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி தீண்டாமையைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் ää இந்துமதம் |மதக்கட்டுப்பாடு தெய்வீகமானது ää அதனால் அது புனிதமானது என்று சொல்வதோடு மட்டுமல்ல - இந்தக் கட்டுப்பாட்டினை எல்லா இயன்ற வழிகளிலும் பேணிக்காப்பது கடமை என்றும் விதித்திருப்பதுதான். அவர்கள் மனிதாபிமானக் குரலுக்குச் செவிசாய்ப்பதில்லை என்றால்ää அவர்கள் தீண்டாதோரை மனிதர்களாகவே கருதக்கூடாது என்று இந்துமதம் கட்டளை விடுத்திருப்பதுதான் || என்று கூறியிருப்பதுடன் எந்தெந்த சாஸ்திரங்களில் தீண்டாமை வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதனை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.    (விபரம் வேண்டுமானால் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் தொகுதி - 9 அய்ப் படித்துப்பார்க்க)

தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் ஜாதி ஒழியவேண்டும். ஜாதி ஒழிய வேண்டுமெனில் ஜாதி புனிதமானது என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ள சாஸ்திரங்களும் புராண இதிகாசங்களும் ஒழிய வெண்டும். அவற்றைப்பாதுகாக்கும் இந்துமதம் ஒழிய வேண்டும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
இதை இராமகோபாலன் வகையறாக்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா?; நாலணா பூணூலை புனிதச்சின்னம் என்று பாதுகாப்பதே ஜாதி புனிதமானது என்ற நம்பிக்கையில்தான்.Cஜாதியையும் தீண்டாமையையும் ஒழிக்க அம்பேத்கர் அருமையான அறிவுப்பூர்வமான கருத்துக்களை ஆக்கப்பூர்வமாகச் சொல்லி யிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல் இராமகோலய்யர்வாள் சொல்லியிருக்கிறார் பாருங்கோ!

|பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அரிஜன தம்பதியரை வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு நமது சகோதரி வீட்டுக்கு வந்துபோகும்போது எப்படி உபசரிப்போமோ அப்படி உபசரித்து அனுப்ப வேண்டும்| என்று அய்டியா சொல்லி இருக்கிறார்.
தீண்டத்தகாதவர்தான் பார்ப்பான் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொல்கிறார்களா? அவர்களை அழைத்து சாப்பாடு போட்டால் எப்படி தீண்டாமை ஒழியும்? தீண்டத்தகாதவனை சமைக்கச் சொல்லி பார்ப்பானெல்லாம் அங்கே போய் சாப்பிட வேண்டும் என்று சொன்னாலாவது ஏற்றுக்கொள்ளலாம். தீண்டப்படாதவனை சங்கரமடத்தில் சமையல்காரனாகப் போடச்சொல்லி அவன் சமைத்ததை அங்கிருப்போர் அனைவரும் சாப்பிடவேண்டும் என்று போராடலாம். அதைவிடுத்து தாழ்த்தப்பட்டவனை அழைத்து சோறு போட வேண்டும் என்பதே தான் உயர்ந்த ஜாதி என்ற திமிரில்தான். அது தீண்டாமையை மேலும் பாதுகாக்கவே பயன்படும்.! அதனை வெளியிடும் அம்பியின் நோக்கமும் அதுவே!
 :
27-04-07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக