செவ்வாய், 11 அக்டோபர், 2016

என்னுடைய பாட்டன் முப்பாட்டனெல்லாம் பார்ப்பானுக்கு அடிமைiயாய்க்கிடந்ததை எண்ணிப்பெருமிதம் அடைய முடியமா?

கடந்தகாலம் குறித்த பெருமித உணர்வு   நிகழ்காலம் குறித்த கவலைகள்     எதிர்காலம் குறித்த பொன்னான கனவுகள் கொண்டிருக்கும் தேசமும் சமுதாயமும்தான் முன்னேறுமாம். அக்கிரஹாரத்து அம்பி தத்துவம் பொழிகிறது.

எதைக்குறித்துப் பெருமைகொள்வது? எதற்காகக் கவலைப்படுவது? எப்படிப்பட்ட கனவு காணுவது?
 அண்மையில் பெரியார் திடலில் நடந்த ஒருநிகழ்ச்சியில் ஒரு நீதிபதி கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார். அவர் தனது உரையில்

~என்னுடைய அப்பா ஒரு மிகப்பெரிய ஜமீந்தார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். அவர் வீதியில் வந்தாலே எதிரில் வருவோர் போவோரெல்லாம் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து ;இடுப்பில் கட்டிக்கொண்டு எல்லோரும் மரியாதையாக வணக்கம் தெரிவிப்பார்கள்.

அப்படிப்பட்ட மரியாதைக்குரிய என்னுடைய அப்பாவோடு நான் பள்ளிக்கூடத்திற்குச் சேர்வதற்காகச் சென்றபோது ஒரு டீக்கடைப்பார்ப்பான் ~என்னடா சதாசிவம்ää உன்னுடைய பையனை அழைச்சிண்டு எங்கடா போறே? என்று கேட்டான்.

அப்போது என்னுடைய அப்பாவைக் கேட்டேன். ~அப்பாää ஊரில் உள்ளோரெல்லாம் உங்களுக்கு இவ்வளவு மரியாதை செலுத்தும்போது உங்களைவிட வயதில் குறைந்தää வசதியிலும் குறைந்த ஒரு அழுக்குப்பார்ப்பான் ஏன்டா சதாசிவம்? என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறானே! அது ஏனப்பா? என்று கேட்டேன். நீ சின்னப்பையன். உனக்கு இப்பொழுது அது புரியாது. நீ வளர்ந்து பெரியவனானதும் நீயே புரிந்துகொள்வாய்| என்று சொன்னார்.

நான் வளர்ந்து பெரியவனாகி இப்பொழுது ஜட்ஜ் ஆகி நீதிமன்றத்தில அமர்ந்திருக்கிறேன். அந்த அழுக்குப் பார்ப்பானுடைய மகன் வக்கீலாகி என்னைப்பார்த்து மை லார்ட் என்கிறான்.
எவ்வளவு பெரிய ஜமீந்தாராக இருந்தாலும் மிட்டா மிராசாக இருந்தாலும் மன்னவனே ஆனாலும் இந்த இந்துமத வருணாசரிமத்தின்படி எல்லோரும் பார்ப்பானுக்குக் கீழே என்ற சித்தாந்தம் இந்த நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாய் நீடித்துக்கிடப்பது இப்பொழதுதான் எனக்குப் புரிகிறது. என்னுடைய அப்பாவை வாடா போடா என்று அழைத்தது பார்ப்பனக் கொழுப்பு. இன்று அதே பார்ப்பானின் மகன் மைலார்ட் என்று என்னை அழைத்தது காலத்தின் மாற்றம். அந்தப் பார்ப்பனக் கொழுப்பை அடக்கியவரும் இந்தக் காலமாற்றத்திற்குச் சொந்தக்காரரும் தந்தை பெரியார்| என்று பேசினார்.

இதில் அந்தப் பார்ப்பன அம்பி என்னுடைய தாத்தன்ää பாட்டன் முப்பாட்டனிடம் எவ்வளவ பெரிய மன்னாதி மன்னனும் ஜமீந்தாரும் மிட்டா மிராசும் அடிமையாய்க்கிடந்தார்கள் என்பதை எண்ணிப் பெருமிதம் அடையலாம். அப்படி அடிமையாய்க்கிடந்தவன் பிள்ளை ஜட்ஜாய் இருக்க அவனைப்பார்த்து மை லார்ட் என்ற சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டதே என்று கவலைப்படலாம்.

தீண்டத்தகாதவனெல்லாம் இன்று குடியரசுத்தலைவராகிவிட்டான். சுப்ரீம் கோர்ட்டில் சீஃப் ஜட்ஜாகவே ஆகிவிட்டான். இந்தப் படுபாவி கருணாநிதி ஆட்சியில் ஆண்டவன் அருகில் நெருங்கவே யோக்கியதை இல்லாதவனெல்லாம் அர்ச்சகனாகிவிட்டான் என்று வருத்தப்படலாம்

இந்த நிலையைமாற்றி ஆர்எஸ்எஸ்ஸை ஆட்சிப்பொறுப்பில் ஏற்றி மீண்டும் அந்த வருணாசிரமத்தைக் கொண்டுவந்து இழந்த குலப்பெருமையை மீண்டும் அடையவேண்டும் என்று கனவ காணலாம்.

ஆனால் அந்த ஜமீன்தாரின் மகன் என்னுடைய பாட்டன் முப்பாட்டனெல்லாம் பார்ப்பானுக்கு அடிமைiயாய்க்கிடந்ததை எண்ணிப்பெருமிதம் அடைய முடியமா? இன்று ஜட்ஜ் ஆகி எவன் நம் பாட்டனை அப்பனை கேவலப்படுத்தினானோ அவனுடைய பிள்ளை இன்று என்னைப் பார்த்து மைலார்ட் என்ற சொல்கிறானேää அந்த அளவிற்கு நம்முடைய நிலை மாறிவிட்டது என்று எண்ணிக் கவலைப்படுவானா? மீண்டும் பழைய நிலைக்குப் போய் பார்ப்பானிடம் அடிமையாய்க் கிடக்கவேண்டும் என்று எவனாவது கனவு காண்பானா?
குல்லூகபட்டரின் பரம்பரையே! குதர்க்கம் பேசாமல் பதில் சொல்!!
இவண்  :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக