செவ்வாய், 11 அக்டோபர், 2016

விஜயபாரதம்.ஏட்டின் இலட்சணம்


தமிழில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான ஏடு விஜயபாரதம். அந்த இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது.
ஈவெரா காங்கிரசைவிட்டு ஏன் வெளியேறினார் தெரியுமா? என்று கேள்வி கேட்டு விடையையும் அவர்களே தெரிவித்திருந்தார்கள்.

~ஈவெரா ஒருமுறை ரஷ்யா சென்றிருந்தார். அவருடன் இராமநாதன் என்ற ஒருவரையும் அழைத்துச் சென்றார். திரும்பி வரும்போது இராமநாதனை உடன் அழைத்து வராமல் ஜெர்மனில் விட்டுவிட்டு வந்துவிட்டார். வந்தபிறகு காங்கிரஸ் கட்சியிடம் கணக்கு வழக்கையும் காட்டவில்லை. காஞ்சிபுரத்தில் நடைபெற இருந்த காங்கிரஸ் காரியக்கமிட்டியில் அந்தக் கணக்குவழக்கு பற்றியும் இராமநாதனை ஏன் உடன் அழைத்து வரவில்லை என்பது பற்றியும் கேள்வி கேட்க சிலர் தயாராக இருந்தார்கள். இதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட ஈவெரா காங்கிரஸ் ஒழிக! காந்தி ஒழிக! என்று கோஷம் போட்டுக்கொண்டு வெளியேறிவிட்டார்| என்று எழுதி இருந்தது.

இது எவ்வளவு பெரிய உண்மைக்கலப்பில்லாத பித்தலாட்டமான செய்தி தெரியுமா? தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறியது 1925ல். இரஷ்யாவுக்கு 1931 டிசம்பரில் சென்று 1932 நவம்பரில் இந்தியா திரும்பினார்.

1925ல் நடந்த காரியத்திற்குக் காரணமாக 1932ல் நடந்த நிகழ்ச்சியை   இட்டுக்கட்டிக் கூறுகிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் எவ்வளவு பெரிய பித்தலாட்டமாக நாட்டில் இயக்கம் நடத்துகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.   
 
நமது அம்பி அடுத்த ஆண்டு நமது நிறுவனத்தின் இரகசியங்களைக் கடத்திச் சென்றுவிடுவார் என்று இந்த ஆண்டு நிர்வாகம் அவரைப் பணிநீக்கம் செய்கிறது என்று சொன்னால் எப்படி இருக்குமோ அது மாதிரிதானே இதுவும்?

ஒரு இயக்கத்தின் அதிகாரபூர்வமான ஏட்டின் இலட்சணமே இது என்றால் அந்த இயக்கம் யாருக்காக இருக்கிறதோ அந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதை எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அப்படிப்பட்ட பித்தலாட்டமான பேர்வழிதான் ஆர்எஸ்எஸ் என்ற பெயரிலோää பிஜேபி என்ற பெயரிலோ செய்திகளை வெளியிடாமல் காவிக்கதிரவன் என்ற பெயரில் துண்டறிக்கை வெளியிட்டு வருகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவர்;. அந்தக் காலத்தில் கல்வி வேலைவாய்ப்புக்கள் அனைத்தும் பார்ப்பன மயமாகவே இருந்தன. அதனால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு அவரவர் வகுப்பு எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார். அதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் கொண்டுவர முயற்சிக்கிறார். 1920ல் திருநெல்வேலி மாநாட்டிலும் 1921ல் தஞ்சாவூரிலும்ää 1922ல் திருப்பூரிலும்ää 1923ல் சேலத்திலும்ää 1924ல் திருவண்ணாமலையிலும் தீர்மானம் கொண்டுவருகிறார்.

ஆனால் காங்கிரஸில் ஆதிக்கம்பெற்றிருந்த இராஜகோபாலாச்சாரிää சேலம் விஜயராகவாச்சாரிää சீனிவாசயங்கார் போன்றோர் அந்தத் தீர்மானங்களை எதிர்த்து முறியடிக்கிறார்கள். 1925ல் காஞ்சிபுரம் மாநாட்டிலும் அத்தீர்மானம் தோற்கடிக்கப்படவே காங்கிரஸால் பார்ப்பனரல்லாதாருக்கு நன்மை கிட்டப்போவதில்லை என்று காங்கிரஸைவிட்டு வெளியேறுகிறார்.

தந்தைபெரியார் 1920ல் தொடங்கியபோர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு என்பது. பார்ப்பனர்கள் அன்றும் மாறவில்லை இன்றும் மாறவில்லை என்பதையே அது உணர்த்துகிறது. மாறமாட்டார்கள் என்பதற்கு அம்பியே உதாரணம். இவர்மட்டும் பூணூலைக் கழட்ட மாட்டாராம். நாம் மட்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டுமாம்.

காவிமயம் என்பதற்குப் பொருளே பித்தலாட்டம்தான். அதனால்தான் காவித்தனமாக 1822ல் 60 முதல் 70 சதவிகிதம் படித்திருந்தார்கள் என்றும் நாட்டில் பிச்சைக்காரனும் திருடனும் இல்லாமல் அனைவரும் செல்வச் செழிப்போடு இருந்தார்கள் என்றும் உண்மைக்கலப்பில்லாமல் செய்தி வெளியிடுகிறார்.
நம்மோடு வாழ்ந்து நமக்காகவே பாடுபட்டு மறைந்த ஒரு தலைவரின் வாழ்க்கை பற்றிய செய்திகளும் சாட்சிகளும் ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளம் இருக்கும்போதே இவ்வளவு துணிச்சலாக செய்தி வெளியிடுகிறார்கள் என்றால் மெக்காலே பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசினான் என்ற செய்தியில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதைத் தொழிலாளர்களே நன்கு புரிந்து கொள்வீர்! அவர்கள் கூறுகின்ற செய்திகள் அனைத்தும் இதே தன்மை வாய்ந்தவைதான் என்பதையும் புரிந்துகொள்வீர்!              
இவண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக