செவ்வாய், 11 அக்டோபர், 2016

பார்ப்பனர்கள் இரட்டை நாக்குடையவர்கள்

பார்ப்பனர்கள் இரட்டை நாக்குடையவர்கள் என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரியமாயை நூலில் மிக அழகாக எடுத்துச் சொல்லியிருப்பார். தங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயம் என்பதை எப்பொழுதும் கடைப்பிடிப்பவர்கள். பார்ப்பான் கொலை செய்தால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். சூத்திரன் கொலை செய்தால் அவனைத் தூக்கில் போட வேண்டும் என்று மனு(அ)தர்மத்தில் எழுதிவைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அதையே அமுல்படுத்தி வந்த கூட்டம்தானே!

 அதாவது சூத்திரன் உயிரும் பார்ப்பான் மயிரும் சமம் என்பதுதான் அவர்கள் கோட்பாடு.
கடவுளையும் கீதையையும் பார்ப்பனர்கள் தூக்கிப் பிடிப்பார்கள். ஆண்டவன் எடுத்த அவதாரங்களைப்பற்றி; விடியவிடியக் கதாகாலட்சேபம் செய்வார்கள். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றபொழுது பகவான் இப்பூவுலகில் அவதரித்து அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று வண்டிவண்டியாக ரீல் விடுவார்கள்.

அதேபோல கீதையிலே ~எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுää எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறதுää எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்| என்று எல்லாப்பார்ப்பானும் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கடைகளிலும் அச்சடித்து மாட்டி வைத்திருப்பார்கள். இதை எந்தப் பார்ப்பனரும் நம்புவதில்லை. சங்பரிவார்க்கும்பலும் நம்புவதில்லை. வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுமில்லை.

பாபர் இராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டினான் என்று புலம்பும் இவர்கள் கீதையின்படி என்ன செய்ய வேண்டும்? பாபர் இராமன் கோயிலை இடித்தது நன்றாகவே நடந்தது. மசூதி கட்டினதும் நன்றாகவே நடந்தது என்று பஜனை பாடிக்கொண்டு இருக்க வேண்டுமல்லவா? அப்படியும் இல்லையா? அந்த பகவானிடம் சென்று பகவானே! நீ பிறந்த இடத்தையே பாவிகள் அபகரித்துக் கொண்டார்களே! உன் கோயிலையே இடித்துவிட்டார்களே! நீ உடனே அவதரித்து இந்த அதர்மத்தை அக்கிரமக்காராளை அழிப்பாயாக என்று வேண்டி அதற்காக யாகங்கள் பூஜைகள் செய்து பகவானை அவதரிக்கச் செய்ய வேண்டும்.

அதேபோல சிறீரங்கத்தில் கோபுரத்துக்கு எதிரே பெரியார் சிலை வைத்ததுவும் நன்றாகவே நடந்தது என்று நம்ப வேண்டும். அல்லது அந்த பகவானிடம் சென்று முறையிட வேண்டும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு கடப்பாறையைத் தூக்குவதும் மசூதியை இடிப்பதும் பெரியார் சிலையைச் சேதப்படுத்துவதும் கவர்னரிடம் சென்று மனு கொடுப்பதும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதும் எதற்காக?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கடவுள் இல்லை என்பது நன்றாகவே தெரியும். அந்த நம்பிக்கை என்பது கிடையவே கிடையாது. எந்தப் பார்ப்பனராவது சாமி வந்து ஆடுகிறார்களா? எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது நாக்கில் அலகு குத்தி தீச்சட்டி ஏந்தி வருகிறார்களா? கடவுள் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்ததால்தான் அவர்கள் இதையெல்லாம் செய்வதில்லை. கடவுள் நம்பிக்கையை பாமரமக்களிடத்தில் பரப்பி அதன்மூலம் மக்களைச் சுரண்டி தாங்கள் மட்டுமல்லாமல் தங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உண்டு கொழுக்கவேண்டும் என்பதுதான் அவர்கள் கொள்கை. அதனால்தான் கடவுளைப்பரப்புகிறவன் அயோக்கியன் என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். கடவுளை நம்பாவிட்டாலும் அவனுக்கு இந்து மதத்தில் இடமுண்டு. ஆனால் வேதத்தை ஏற்க மறுப்பவனே நாஸ்திகன் என்பதுதான் அவர்கள் கொள்கை. ~நாஸ்திகா வேதநிந்தகா| என்பது அவர்கள் மந்திரம். வேதத்தில்தானே பார்ப்பான் உயர்ந்தவன். பார்ப்பானையே சூத்திரர்கள் வணங்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது?

அதனால்தான் அவர்களது அந்த வேதத்தையும் புராண- இதிகாசங்களையும் மனு தர்மங்களையும் நார்நாராகக் கிழித்தெறிந்து அதன் யோக்கியதையை அம்பலப்படுத்திய பெரியாருக்கு சிலை வைப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உலகத்திலேயே மிகவும் சகிப்புத்தன்மை அதிகம் உள்ளவர்கள் என்பார்கள். ஆனால் இதை மட்டும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். இராமகோபாலன்களும்ää எச்.இராஜாக்களும்ää இலகணேசன்களும் போடும் கூச்சலுக்கு ஏதேனும் பொருளுண்டா? தீர்த்தவாரி நடக்கும்போது திக காரர்கள் சிலைக்கு அருகிலே நின்றுகொண்டு போகிற வருகிற பக்திமான்களைக் கேலி செய்வார்கள். அதனால்தான் சிலை இங்குகூடாது என்கிறோம் என்றார்களே!

இப்பொழுது தீர்த்தவாரியும் நடக்கிறது. பகல்பத்து இராப்பத்தும் நடக்கிறது. எந்த திக காரனும் எந்த பக்தரிடமும் வம்பிழுக்கவில்லையே! மாறாக பக்தர்கள் என்ற போர்வையில் ஏதொவொரு கூட்டம் வைகுண்ட ஏகாதசியன்று பெரியார் சிலைக்குமுன்பு நின்றுகொண்டு காறி உமிழும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து அதனை இராமகோபாலனே கண்டித்து அறிக்கை விட்டுள்ளாரே!  காலித்தனத்தை இவர்களே செய்துவிட்டு அடுத்தவர்மீது பழிபோடும் கூட்டம்தானே இந்த ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க் கூட்டம்? தமிழகத்தில் சரிந்துவரும் தங்கள் செல்வாக்கைத் தூக்கிநிறுத்த சங்பரிவார்க் கூட்டம் போட்ட பித்தலாட்ட நாடகம்தான் பெரியார் சிலைக்கு எதிரப்;பு  என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும்.
இவண்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக