இராமாயணம் நடந்த கதையல்ல. இராமன் என்பவன் வரலாற்று நாயகன் அல்ல. ஒரு புராண இதிகாசப் புளுகுப் பாத்திரம் என்ற உண்மையைச் சொன்னால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் தாவிக் குதிக்கும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பஜ்ரங்தள் (குரங்குப்படை) தொண்டர்களே!
இராவணனை இராமன் எதற்காகக் கொன்றான் என்று கேட்டால் சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றான். அதனால் இராவணனை இராமன் கொன்று சீதையை மீட்டு வந்தான் என்று பாமரனையும் நம்ப வைத்திருக்கும் புளுகுணிச்சித்தர்களே!
உங்கள் இராமன் திருமாலின் அவதாரம் என்கிறீர்கள். அந்தத் திருமால் இராமனாக மட்டும் அவதரிக்கவில்லை. நரகாசுரனைக்கொல்ல பன்றி அவதாரம் எடுத்தான். பத்மாசுரனை ஒழிக்க மோகினி அவதாரம் எடுத்தான். இரண்யனை ஒழிக்க நரசிம்மாவதாரம் எடுத்தான். மகாபலியை ஒழிக்க குள்ளப்பார்ப்பான் அவதாரம் எடுத்தான். கம்சனை ஒழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தான் என்றெல்லாம் கதைவிடும் நீங்கள்தான் இராவணனை ஒழிக்க இராமாவதாரம் எடுத்தான் என்று கதை விடுகிறீர்.
அந்தக் கதையின்படி "இராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் யாவரும், இந்திரனோடு நான்முகன் உலகடைந்து தங்கள் குறையைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கு வந்து சேர்ந்தார் உடனே நான்முகனும் தேவர்களும் அவரைப்பார்த்து பூமியில் மனிதனாகப் பிறந்து இராவணனைக் கொன்று வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலுக்குத் தாமும் இசைந்து திருமால் தசரத மன்னருக்கு மகனாகப் பிறந்து இராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் வாழ்ந்து பின்னர் இங்கே வருவேன் |" என்று கூறி தசரதனுக்கு மகனாகப் பிறந்ததாக உங்கள் புராணங்கள் கூறுகின்றன.
அப்படியானால் இராவணனைக் கொல்ல வேண்டும் என்று முன்பே முடிவுசெய்து இராமன் அவதரிக்கிறான். இராவணனைக் கொல்ல எந்தக் காரணமும் இல்லாததால் சீதையை அவனோடு அனுப்பிவைத்து (கூட்டிக்கொடுத்து) சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றுவிட்டான் என்று வேண்டுமென்றே பழிபோட்டு இராமன் அவனைக் கொன்றான் என்றுதானே பொருளாகிறது?
இதில் எது உண்மை?
சீதையை இராவணன் சிறையெடுத்ததால் இராமன் அவனைக் கொன்றானா?
ஏற்கனவே முடிவு செய்து தேவர்களும் நான்முகனும் கேட்டுக்கொண்டதால் பூமியில் தசரதனுக்கு மகனாகப் பிறந்து வந்து இராவணனைக் கொன்றானா?
அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்வீர்!
சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் சந்திப்போம்!!
டோஸ் தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக