~பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான். அதில் பெருமைப்படுகிறோம். பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புக்கள்தாம் மசூதியை இடித்தோம். மக்கள் எழுச்சியின் விளைவு அது. என்ன தண்டனை தருவீர்கள்? எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால் தண்டித்துப் பாருங்கள்| என்று மக்களவைக்கு எதிர்க்கட்சித்தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி சுஷ்மா சுவராஜ் எக்காளமிடுகிறார்.
தமிழர்களின் நூற்றைம்பது ஆண்டு காலக்கனவான சேதுசமுத்திரத்திட்டம் கைவிடப்படுமோ என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.
இது இரண்டுக்கும் காரணமாக இருப்பது இராமன். 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்று அந்த மசூதி இடிக்கப்படுகிறது. சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படும் அந்த வழித்தடத்தில்தான் இராமன் பாலம் அமைத்து நடந்து சென்று சீதையை மீட்டு வந்தான் என்ற கதைகள் சொல்லப்படுகிறது. நீதிமன்றம் ஆதாரம் எதுவும் கேட்காமல் அதற்குத் தடை விதிக்கிறது. கேட்டால் நம்பிக்கை என்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் காரணம் இராமன் என்றால் அவனுடைய வரலாறாகச் சொல்லப்படும் கதையை ஆராய்வது அவசியமாகிறது. இராமனுடைய கதையைப் போதிப்பது இராமாயணம். இதில் பல இராமாயணங்கள், பல மொழிகளிலும் இருக்கிறது. வடமொழியில் வால்மீகி இராமாயணம். அதைக் காப்பியடித்து தமிழில் கம்பராமாயணம்.
ஒருவருடைய வரலாறு பல மொழிகளில் எழுதப்பட்டாலும் எல்லாவற்றிலும் நிகழ்வுகள் ஒரே மாதிரி இருந்தால்தானே அது உண்மையாக இருக்க முடியும்? இராமனுடைய பிறப்புப் பற்றி வால்மீகி இராமாயணத்தில் ஒருமாதிரியாகவும் கம்பஇராமாயணத்தில் வேறு மாதிரியாகவும் இருக்கிறதேää ஏன்? இராமன் கற்பனை என்பதனால் கவிஞர்கள் அவரவர் கற்பனைக்கேற்ப எழுதியிருக்கிறார்கள் என்றுதானே கருத இடமிருக்கிறது?
வால்மீகி இராமாயணத்தில் ~புத்திரனில்லாத தசரதன் அசுவமேத யாகம் நடத்தினதாகவும்ää யாகக் குதிரையை அவனது முதல் மனைவியான கோசலை மூன்று வெட்டாக வெட்டிக்கொன்றாள். பின்னார் அக்குதிரையின் குறியை எடுத்து தனது குறிக்குள் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் கலங்கா மனதுடன் கட்டித்தழுவி அந்தக் குதிரையோடு கூடியிருந்தாள். பின்னர் அந்த யாகத்தை நடத்திய புரோகிதர்களான ஹோதா, அத்வர்யு, உத்காதா ஆகியோர் இராசாவின் மனைவிகளைப் புணர்ந்தார்கள். அவர்கள் கர்ப்பமானார்கள். பின்னர் மன்னர் அந்த யாகப்புரோகிதர்களுக்கு உரிய தட்சனை கொடுத்து தனது மனைவியரை மீட்டு வந்தான்| என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் கம்பனோ அதனை மாற்றி ~ தசரதன் புத்திர காமேட்டி யாகம் செய்தான். அந்த யாகத் தீயிலிருந்து பூதம் ஒன்றுதோன்றியது. அந்த பூதம் தந்த பாயாசத்தை தசரதன் மனைவியர் சாப்பிட்டதால் கர்ப்பமாயினர்| என்று எழுதுகிறான்.
இதில் எது உண்மை? வால்மீகி சொல்வது போல் தசரதன் அசுவமேத யாகம் செய்து யாகப் புரோகிதர்கள் கூடியதால் இராம இலக்குமணர்கள் பிறந்தார்களா?
கம்பன் கூறுவதுபோல் புத்திர காமேட்டி யாகம் செய்து பாயாசம் சாப்பிட்டதால் இராம இலக்குமணர்கள் பிறந்தார்களா?
வாய் வழியாகச் சாப்பிடும் பாயாசம் வயிற்றுக்குப் போகுமா? கர்ப்பப்பைக்குப் போகுமா?
வயிற்றுக்குப் போகும் பாயாசம் எப்படி கர்ப்பத்தை உண்டாக்கும்?இன்று அதுபோல், நேற்று நடந்த விருந்தில பாயாசம் சாப்பிட்டேன். அதனால் எனக்கு கர்ப்பம் உண்டாகிவிட்டது என்று அக்கிரஹாரத்து இளம்பெண் சொன்னால் அதனை இராமகோபாலன்களோ, சுப்பிரமணிய சாமிகளோ சீரங்கத்து அம்பிகளோ ஏற்றுக்கொள்வார்களா?
பதில் சொல்வார்களா இராம பக்தர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக