திங்கள், 10 அக்டோபர், 2016

காந்தியை ஒழித்துக் கட்டியவர்களை அரியணையேற்ற அந்த காந்தி பெயரை உச்சரிப்பவரே பயன்படுவது கேலிக்கூத்தாக இல்லையா?


 இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் பிரிவினைக்கு முகம்மதலி ஜின்னாதான் காரணம் என்று நம் நாட்டில் பலபேர் இன்னும் தவறாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஜின்னாவுக்கு 1940 வரை தனிநாடு கேட்க வேண்டிய எண்ணமே எழவில்லை. 1940ல்தான் ஆர்எஸ்எஸ் ஹெட்கேவரும்ää வீரசவர்க்கரும் தூண்டிவிட்ட மதவெறியின் காரணமாக இனி இஸ்லாமியர் இந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வருகிறார் ஜின்னா.

1947 மார்ச் 8 அன்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பாக்கிஸ்தானைப் பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இத்தீர்மானத்தை நேரு ஆதரித்தார். வங்காளத்தைப் பிரிப்பதற்கு ஆதரவு கொடுத்தவர் பிஜேபியின் முன்னோடியான ஜனசங்கத் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி ஆவார். தேசப் பிரிவினையை கடைசிவரை ஏற்காத ஒரு காங்கிரஸ் தலைவர் இருந்தார் என்றால் அது மகாத்மா காந்திதான்.

தேசம் பிரிக்கப்பட்ட பிறகு நாடெங்கிலும் மிகுந்த மதக்கலவரம் நடந்தது. நாடே இரத்தக்காடாக மாறிப்போனது. மதக்கலவரத்தை எதிர்த்து இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர் மகாத்மா காந்தி. நாட்டையே பிரித்து விட்டார்கள். அப்படியானால் எல்லாவற்றையும் பாகம் பிரிக்க வேண்டியதுதானே! பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். மத ஒற்றுமைக்காகவும் பாக்கிஸ்தானை ஏமாற்றாமல் அவர்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கவும் வலியுறுத்தி மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அதனை எதிர்த்த ஆர்எஸ்எஸ் இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் காந்தி ஒழிக என்று கோஷம் போட்டார்கள். சவர்க்கர் காந்தியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிக் கொடுத்தார். கோட்ஷேவும் அவனுடைய ஆதரவாளர்களும் 1948 ஜனவரி 30ந்தேதி  காந்தியைத் தீர்த்துக் கட்டினார்கள்.

 காந்தியைக் கொலை செய்ய பத்து முறை முயற்சி நடந்திருக்கிறது. ஜனவரி 20 அன்று அதே பிர்லா மாளிகையில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் காந்தி உயிர் தப்பினார். அந்த குண்டு வெடிப்பில் கைதான நபர் காந்தியைக் கொலை செய்ய ஏழு பேர் கொண்ட கும்பல்  முயன்றதையும் யார் யார் என்பதையும் தெரிவித்தான். அதில் கோட்ஷேயும் அவனுடன் தண்டனை பெற்ற நாராயண்; ஆப்தேயும் அடக்கம். அவர்களை அப்பொழுதே கைது செய்திருந்தால் காந்தி கொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் காவல்துறையும் உள்துறை அமைச்சகமும் அவர்கள்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. விமானம் மூலமாகவே கோட்ஷேவும் ஆப்தேயும் டெல்லி வந்தார்கள். சாதாரண சோதனை மூலமே அவர்களைக் கைது செய்திருக்க முடியும். உள்துறையை தன் வசம் வைத்திருந்த வல்லபாய் படேல் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காந்தி கொலை செய்யப்பட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்க வல்லபாய் பட்டேல் மிகுந்த முயற்சி எடுத்தார். இந்துமகாசபைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சவர்க்கரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு எதனையும் செய்யவில்லை.

 வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்க மோடி ஏன் இவ்வளவு முயற்சி செய்து வருகிறார் என்பது தௌ;ளத் தெளிவாகப் புரிகிறதா இல்லையா?

 இவ்வாறு காந்தியைக் கொலை செய்ய முயன்ற கூட்டத்தைச் சேர்ந்த மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பவர் யார் என்பதுதான் வேடிக்கையானது.

 தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் வேலையைச் செய்கிற தமிழருவி மணியன் என்பவர் வைத்திருக்கும் இயக்கத்துக்குப் பெயர் காந்திய மக்கள் இயக்கம். இது வேடிக்கையாக இல்லையா? இன்று தமிழர்கள் தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது புரிகிறதா?    திராவிடனை ஒழித்து விட்டு அவன் இறந்தநாளை அந்த திராவிடர்களையே கொண்டாட வைத்தது ஆரியம். அதேபோல காந்தியை ஒழித்துக் கட்டியவர்களை அரியணையேற்ற அந்த காந்தி பெயரை உச்சரிப்பவரே  பயன்படுவது கேலிக்கூத்தாக இல்லையா?

பழைய காலமாக இருந்திருந்தால் காந்தி என்ற அரக்கனை கடவுள் கேட்ஷே என்ற அவதாரம் எடுத்து அழித்தார். அதனால் அந்த காந்தி இறந்தநாளை காந்தி பக்தர்கள் அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும் என்று புராணம் எழுதி வைத்தாலும் வைத்திருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பூனைக்கண்ணன் செம்பட்டை மயிரன் வெள்ளைக்காரன் வந்து படிக்கக் கூடாத மக்களுக்கும் கொஞ்சம் படிப்பறிவைக் கொடுத்து விடடான். அதனால் இவர்களால் புதிய கோட்ஷே புராணம் எழுத முடியவில்லை. ஆனால் தமிழன் மட்டும் இன்னும் மாறாமல் ஆரியக்கும்பலிடம் என்றும் நிரந்தரமாக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டானே! என்ன செய்ய? எனவேää இவர்களைப் புரிந்துகொள்வீர்!
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக