செவ்வாய், 11 அக்டோபர், 2016

தீபாவளி என்பது திராவிடனை அதாவது நம் முன்னோரை ஆரியர் கொன்றநாள்.


 பிஎம்எஸ் சார்பா 17-09-2013 தந்தை பெரியார் பிறந்தநாள் அன்று விஸ்வகர்மா பிறந்தார் என்று கதை கட்டி வாயிற்கூட்டம் நடந்தது. அதில் ஒரு கத்துக்குட்டியைப் பேச விட்டாங்க. சென்ற ஆண்டு பேசின கத்துக்குட்டி என்ன பேசினாரோ அதையேதான் இவரும் பேசினார்.

இவரு கொஞ்சம் அறிவுப்பூர்வமாப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசினார். அதாவது மே தினம் என்பது அமெரிக்காவில் நடந்த போராட்டத்தை வைத்து நடத்தப்படுது. அந்தப் போராட்டத்துல ஏழு போலீஸ்காரர்கள் செத்துப்போனாங்க. 11 தொழிலாளிங்க செத்துப் போனாங்க. அந்த நாளை அதாவது இறந்தநாளை மகிழ்ச்சியாக யாராவது கொண்டாடுவாங்களான்னு ரொம்ப அறிவுப்பூர்வமாக்(?) கேட்டாரு.

அந்த அறிவுஜீவிக்குச் சொல்லிக்குடுத்தவங்க நாம எப்படி தீபாவளி கொண்டாடுறோம்னு சொல்லிக் கொடுக்கல போல. நரகாசுரன் செத்த நாளில் அந்த நரகாசுரனின் வேண்டுகோளின்படிதான் தீபாவளி கொண்டாடுறோம்னு சொல்லித்தரலியா? கேரளாவில ஓணம் பண்டிகைன்னு ஒரு பண்டிகை கொண்டாடுறாங்களே! அது எதுக்காக? மகாபலி என்ற மன்னன் செத்த நாள்தானே?

தீபாவளின்னா தீமை அழிந்து நன்மை வென்றநாள் அப்படீன்னு கதை விடுறீங்க! நரகாசுரன் தேவர்களைக் கொடுமைப் படுத்தினான். அதனால மகாவிஷ்ணு அவனை கிருஷ்ணாவதாரம் எடுத்து அழிச்சார் என்று கதை விடுறீங்க! ஆனா அந்த மகாபலியையும் அதே மஹாவிஷ்ணு குள்ளப்பார்ப்பான் உருவம் எடுத்து அழிச்சதாக் கதை விடுறீங்களே! அந்த மகாபலி செய்த தவறு என்ன? எந்தத் தவறுமே செய்யலங்கறதுதான் அவனுடைய தவறு. அவன் சிறப்பா ஆட்சி பண்ணினதாலே ஈரேழு பதினாலு லோகத்திலும் அவன் புகழ் கொடி கட்;டிப் பறந்ததாம். அந்தப் புகழ்ச்சி மகாவிஷ்ணுவுக்குப் பொறாமையாப் போச்சாம். அந்தப் பொறாமையிலதான் மகாபலியைக் கொன்றானாம். இந்த நாளைத்தான் கேரளமக்கள் ஓணம் பண்டிகையாக் கொண்டாடுறாங்க. பொறாமையும் பொச்சரிப்பும் உள்ளதுதான் உன் கடவுளா?

இந்தக் கட்டுக் கதைகளையெல்லாம் அந்தக் கத்துக் குட்டிக்குச் சொல்லித் தரலபோல. இப்பவாவது சொல்லித் தாங்க. இல்லாட்டி நாங்க சொல்லித் தர்றோம்.

உங்க இந்து மதத்தின் புராணங்களில் அசுரன்ää அரக்கன்ää தஸ்யூää தாசன் என்றெல்லாம் சொல்லப்படுவது திராவிடர்களாகிய நம் முன்னோர்களைத்தான். தேவர்கள்ää ரிஷிகள். முனிவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் ஆரியர்களாகிய நம் இன எதிரிகளைத்தான். சுரர் என்றால் சுராபானம்ää சோமபானம் ஆகியவற்றைக் குடிப்பவர்கள். ஆரியர்கள் அந்த பானங்களைக் குடித்து விட்டு குடிவெறியில் எழுதி வைத்தவைதான் வேதங்களும்ää புராணங்களும்ää இதிகாசங்களும். அந்தக் குடியை வெறுத்தவர்கள் அல்லது மறுத்தவர்கள் அசுரர்கள். திராவிடர்கள் குடியை வெறுத்ததோடு ஆரிய வர்ணாசிரமää வேதää புராணங்களை எதிர்த்தார்கள். நீதி என்பதன் எதிர்ப்பதம் அநீதி என்பதுபோல தர்மம் என்பதன் எதிர்ப்பதம் அதர்மம் என்பதுபோல சுரர் என்பதன் எதிர்ப் பதம்தான் அசுரர் என்பது.

தென்னாட்டில் உள்ள மக்களைத்தான் அசுரர் என்றும் அரக்கர் என்றும் புராணங்களில் புளுகி வைத்துள்ளார்கள் என்று விவேகானந்தரே கூறியுள்ளார். அந்தக் குடிகார ஆரியர்கள் எந்தவித சூதுவாதும் அறியாத திராவிடர்களை சூழ்ச்சியால் கொன்றுவிட்டு அந்த திராவிட சமுதாய மக்களையே மிரட்டி உருட்டி அவர்கள் இறந்தநாளைக் கொண்டாட வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் தீபாவளி.

தீபாவளி என்பது திராவிடனை அதாவது நம் முன்னோரை ஆரியர் கொன்றநாள்.
அந்தநாளைக் கொண்டாடுவது திராவிடருக்குää தமிழருக்கு தன்மானக்கேடு. பார்ப்பனருக்கும் வியாபாரிகளுக்கும் அது வருமானக்கோடு. அதனால்தான் பார்ப்பன ஊடகங்களும் வணிக நிறுவனங்களும் தீபாவளியை அளவுக்கு அதிகமாக விளம்பரம் செய்து நம்முடைய பாக்கெட்டையும் மூளையையும் காலி செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். எனவேää தீபாவளி கொண்டாடி அறிவையும் மானத்தையும் இழக்காதீர்! ஆரிய அடிமை ஆகாதீர்!! என்று  தமிழ்ப் பெருமக்களுக்கும் ஆர்எஸ்எஸ் ஸில் உள்ள தமிழர்களுக்கும் சேர்த்து வேண்டுகோளாய் வைக்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக