செவ்வாய், 11 அக்டோபர், 2016

வாஸ்துப்படி வீடு கட்டுகிறோம் என்பது கேலிக் கூத்தானது?


உழைக்கும் மக்களுக்கு பன்னெடுங் காலமாக நம் நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் செய்தது மனுதர்மம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மனுதர்மம் சூத்திரன் கெட்டி வீடு கட்டிக் கொள்ளவும் உரிமையளிக்கவில்லை.

மண்சுவர் வைத்துக் கட்டப்பட்டதாவும் ஓலைகள் வேயப்பட்டதாகவும்தான் சூத்திரர்களின் வீடுகள் இருக்க வேண்டும் என்று மனு(அ)தர்மம் கட்டளையிடுகிறது. அந்த மனுதர்மத்தினால்தான் நம்முடைய முன்னோர்கள் மச்சு வீடு மாடி வீடு எதுவுமில்லாமல் இருந்தார்கள். அதனால்தான் திராவிடர் தொழிலாளர் கழகம்கூட உங்கள் முன்னோர் நூறு ஆண்டுக்கு முன்பு மச்சுவீடு கட்டியிருந்ததை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு என்று அறிவித்தோம். ஆனால் அந்தப் பரிசைப்பெற எவரும் முன்வரவில்லை.

இன்று பெரியாரின் உழைப்பால்ää கல்வி வள்ளல் காமராசர் கொண்டு வந்த பள்ளியில் படித்து பெரியார்ää அம்பேத்கர் பாடுபட்டதன் விளைவாகக் கிடைத்த வேலையில் இருந்துகொண்டு பல இலட்சம் சம்பாதித்து வீடு கட்டும்போது வாஸ்துப்படி வீடு கட்டுகிறோம் என்று மடமைச் சேற்றில் நம் தொழிலாளர்கள் விழுகிறார்கள்.

 உண்மையில் வாஸ்துப்படி யாரும் வீடு கட்ட முடியாது.

வாஸ்துவில் கழிவறை கட்ட இடமில்லை. இன்று கழிவறை இல்லாமல் யாராவது வீடு கட்ட முடியுமா? அடுத்து மனை தேர்வு செய்வதே வாஸ்துப்படி முடியாது. வாஸ்துவில் ஒவ்வொரு வருணத்தானும் அந்தந்த வருணத்திற்கேற்ப மனையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வாஸ்து சொல்கிறது.
பிராமணனுக்கு வெள்ளை நிற மண்ணாகவும் அதன் ருசி இனிப்பாகவும் வாசம் நெய் மணத்துடனும் இருக்க வேண்டும்@ சத்திரியனுக்கு சிவப்பு நிறத்திலும் இரத்த வாடை அடிப்பதாகவும் உவர்ப்பு சுவையுடனும் இருக்க வேண்டும்@ வைசியனுக்கு மஞ்சள் நிற மண்ணில் தானிய வாடையுடன் உப்பு சுவை இருக்க வேண்டும்@ தொழிலாளர்களாகிய சூத்திரர்களுக்கு கறுப்பு நிற மண்ணாகவும் கசப்பு சுவையுடனும் சாராய வாடை அடிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

இதன்படி யாராவது மனையைத் தேர்ந்தெடுக்க முடியுமா? இது எவ்வளவு அயோக்கியத்தனமானது? இந்த வாஸ்துப்படி வீடு கட்டுகிறோம் என்பது எவ்வளவு கேலிக் கூத்தானது?

இந்த வாஸ்து அண்மையில் படுத்தியிருக்கும் அவலத்தைப் பார்த்தீர்களா? சென்னை புழல் பகுதியில் அழகுநிலையம் அமைத்து அதன் பெயர்ப்பலகையை வாஸ்துப்படி மாற்றி வைக்கும்போது உயர் அழுத்த மின் கம்பியில் விளம்பரப் பலகை மோதியதால் நான்குபேர் மின்சாரம் தாக்கி இறந்துபோனார்கள் புரோகிதர் உட்பட. அந்த வாஸ்து அவர்கள் உயிரைக் காப்பாற்றவில்லையே! அநியாயமாக நால்வர் உயிர் பறிபோய்விட்டதே!

வாஸ்து சாஸ்திரம் எழுதப்பட்ட காலத்தில் மின்சாரம் உண்டா? மின்விளக்கு வீட்டுக்கு வைக்கலாமா? ஏசி வைக்கலாமா? இன்வெர்டர் வைக்கலாமா? என்று எந்த வாஸ்து சாஸ்திரமும் சொல்லி இருக்கிறதா? இந்த வாஸ்துவை உருவாக்கியவன் விஸ்வகர்மாவாம்! அவன் பிறந்தநாள்தான் தொழிலாளர் தினமாம்!
எனவேää தோழர்களே! இனியும் வாஸ்துவை நம்பி வீணாகாதீர்! அறிவையும் அறிவியலையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவீர்!! இந்த வாஸ்துவை நம்பச்சொல்லும் மதவாதிகளையும் அடையாளம் காண்பீர்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக