வரலாறு என்றால் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். இராஜராஜன் ஆண்டான் என்பதற்கு சாட்சியாக தஞ்சைப்பெரியகோயில் நிழல்விழாக் கோபுரத்தோடு நிமிர்ந்துநிற்கிறது.
பல்லவர்கள் ஆட்சி நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக மாமல்லபுரக் கடற்கரையும் பல்லவர் காலத்து பிரமிக்கவைக்கும் சிற்பச் செல்வங்களும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
இப்படி இராமர் வாழ்ந்தார்,அவர் பாலம் கட்டினார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா என்று கேட்டால் சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள சிஅய்.ஏ உளவாளி சு.சாமியால்கூட அதற்கு ஆதாரம் எதையும் காட்ட முடியவில்லை.
இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் இருந்தவராம். அவர் வாரமிருமுறை ஏடொன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு கட்டுக்கதையை ஆதாரம் என்ற சாதிக்க முனைந்திருக்கிறார்.
~~இராமாயணத்திலே இராமர் சத்திரியர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இராமர் சேதுபாலத்தை அமைத்து தன் குருவான வசிஷ்டரிடம் ~யாரைக்கொண்டு சேதுவைத் ;திறக்க யாகம் நடத்தலாம்| என்று கேட்டிருக்கிறார். அதற்கு ~அந்தப்பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன் இராவணன் மட்டுமே, அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்| என்று வசிஷ்டர் அறிவுறுத்த இராவணனை அழைத்திருக்கிறான். இராவணனும் யாகபூஜையில் கலந்துகொண்டான்|| என்று சு.சாமி கதை அளந்திருக்கிறார்.
சு.சாமியின் இந்தக் கற்பனை வெளிவந்த அதே இதழில் கீதாசார்யன் என்ற பத்திரிகையின் ஆசிரியர் டாக்டர் வேங்கடகிருஷ்ணன் என்பவர் இந்தக் கருத்து வால்மீகி இராமாயணத்திலும் இல்லை. கம்பராமாயணத்திலும் இல்லை. சு.சாமி குறிப்பிடும் இந்த சம்பவம் எதில் இருந்தது என்று தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார்.
மக்களை எல்லாம் மடையர்கள் என்ற நினைப்பில் சு.சாமி போன்றவர்கள் இதுபோன்ற அண்டப் புளுகை அவிழ்த்து விடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?
தமிழ்நாட்டில் பத்து இருபது ஆண்டுகளாய்க் கலக்கிக்கொண்டிருந்த செய்தி சந்தனவீரப்பன் சம்பந்தப்பட்ட செய்தி. வீரப்பனைப்பிடிக்க பலகோடிகளை மத்திய - மாநில அரசுகள் வாரி இரைத்தும் பலகாலம் வீரப்பனை நெருங்கக்கூட முடியவில்லை. அதையொட்டி கற்பனையான ஒரு செய்தியை இதனுடன் ஒப்பிடுவோம்.
தேவாரம் என்பவர் ஜெயலலிதா அரசால் வீரப்பனைப்பிடிக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் சந்தன வீரப்பனைப்பிடிக்க சத்தியமங்கலம் காட்டுக்குள் ஒரு சாலை போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சாலையைப் போட்டு முடிந்தவுடன் ஜெயலலிதாவிடம் அந்த சாலையைத்திறக்க யாரை அழைக்கலாம் என்று கேட்பதாகவும் வைத்துக் கொள்வோம்.
அதற்கு ஜெயலலிதா அந்தப்பகுதியில் காடுமேடு எல்லாம் நன்கு அறிந்தவர் சந்தனக்கடத்தல் வீரப்பன்தான். அந்த சந்தன வீரப்பனை வைத்து அந்த சாலையைத்திறப்புவிழா செய்வதே சாலச்சிறந்தது. என்று ஜெயலலிதா சொல்லி தேவாரமும் வீரப்பனை வைத்துத் திறப்பு விழா செய்தார் என்று செய்தி வநதிருந்;தால் எப்படி இருக்கும்?
இப்படிப்பட்ட செய்தியைப் படிப்பவர் என்ன நினைப்பர்? இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்றுதானே நினைப்பர்?
அதுபோல இராவணனைப்பிடிக்கப் பாலம் கட்டி இராவணனை வைத்தே இராமன் திறப்புவிழா செய்தான் என்று சு.சாமிகள் சொல்கிறார்கள் என்றால் பார்ப்பனப்புளுகு எப்படிப்பட்டது என்பது நன்கு புரியவில்லையா?
இராமர்பாலம் என்பதும் இதுபோன்ற ஒரு அண்டப்புளுகுதான். அந்த மோசடியை முறியடிப்போம். சேதுசமுத்திரத் த்pட்டத்தை நிறைவேற்ற கலைஞர் அரசுக்கு உறுதுணையாக இருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக