தென் மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையான சேதுசமுத்திரத்திட்டத்தை முடக்குவதற்கு இராம ப(க்)தர்கள் இராமர்பாலம் என்கின்ற ஆயுதத்தைக் கையில் எடுத்ததால் தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இராமனைப்பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
வால்மீகி இராமாயணத்தில் இராமன் ஒரு குடிகாரன் என்று சொல்லப்பட்டுள்ளது என்ற செய்தியை அவர் தெரிவித்தவுடன் வானரம்போல் தாவிக்குதித்தனர் காவிகள். வால்மீகி இராமாயணத்தில் அப்படி ஒரு செய்தியே இல்லை என்று அதனைக் கரைத்துக் குடித்தவர்போல உளறிக்கொட்டினர் சிலர்.; மது என்றால் தேன் என்று பொருள். அதனைத்தான் இராமன் குடித்தான் என்று சாட்சியமளித்தனர் வேறு சிலர்.
பள்ளியில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாகப் படிக்க விரும்பினார் ஒருவர். அவர் தீண்டத்தகாத ஜாதி என்பதால் அவருக்கு சமஸ்கிருதம் கற்றுத்தர முடியாது என்று மறுத்துவிட்டனர் பார்ப்பனர்களாக இருந்த ஆசிரியர்கள். பின்னாளில் தனது சொந்த முயற்சியால் சமஸ்கிருதத்தை சரிவரக்கற்று அதன் மூல நூல்களையே கற்றுத் தேர்ந்தார் ஒருவர். அவர்தான் அண்ணல் அம்பேத்கர்.
அவர் இராமனும் கிருஷ்னணும் ஒரு புதிர் என்ற ஒரு நூலை எழுதினார். அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில்
~இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறான். அதன்படி இராமனின் ஒருநாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும் நண்பகலுக்குப்பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல்வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப்பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறிமாறித் தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக்களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நாடி ஓடுவான்.
(உத்தரகாண்டம்: சருக்கம்43, சுலோகம்1)
இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறான். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்குதான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமன் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன. மதுää மாமிசம்ää பழவகைகள் அனைத்தும் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் போடும் கூத்தாட்டத்தில் சீதையையும் பங்குகொள்ளச் செய்தான்.
(உத்தரகாண்டம்: சருக்கம்43,சுலோகம்8)
அழகிகளின் மத்தியில் இராமன் குடித்துக் கூத்தாடிக் கலந்து மகிழ்ந்தான். அப்பெண்கள் எல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடுபட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துக்குள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறான் வால்மீகி. இவையெல்லாம் இராமனின் ஒருநாள் நிகழ்ச்சி அல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவைகளாகும்||.
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 8, பக்கம் 462, 463)
இதற்குப் பதவுரை பொழிப்புரை தேவையில்லை என்று கருதுகிறோம். அண்ணல் அம்பேத்கர் அவர்களைவிடப் படித்தவர் யாரும் கிடையாது. அப்படியிருக்க இராமனுக்கு வக்காலத்து வாங்கி மக்கள் நலத்திட்டத்தை முடக்க நினைப்போரின் யோக்கியதையைத் தெரிந்துகொள்வீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக