வெள்ளி, 7 அக்டோபர், 2016

வாழ்க வி.பி.சிங்!

வி.பி.சிங் அவர்கள் மறைந்தபோது பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை


இட ஒதுக்கீடு பற்றி சோ முதல் சொறிப்பார்ப்பான்வரை போடும் கூச்சல் என்னவென்றால் 'அரசியல்வாதிகள் ஓட்டுக்காக இடஒதுக்கீட்டை அமுல்படுத்துகிறார்கள்|' என்பதாகும். ஆனால் அந்த இடஒதுக்கீட்டை அமுல்படுத்தினால் தனது ஆட்சி பறிபோகும் என்று தெரிந்திருந்தும் மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்தியவர் வாராது வந்த மாமணியாம் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆவார்.

 பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நன்மை தரும் இடஒதுக்கீடு பார்ப்பனருக்கு வேப்பங்காயாகக் கசக்கும் என்பதில் அய்யமில்லை. தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த வசதிகளைப் பங்குபோட தாழ்த்தப்பட்டவரையும் பிற்படுத்தப்பட்டவரையும் அனுமதிப்பார்களா?;

 சோ கூட்டம் சொல்லுவதுபோல் ஓட்டுக்காகத்தான் இட ஒதுக்கீடா?

தேர்தலிலேயே ஈடுபடாத தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை ஆதரிக்காத காரணத்தினால் அக்கட்சியை விட்டு வெளியேறினாரே, அது ஓட்டுக்காவா?

 மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை 1925ல் தந்தை பெரியார் ஆதரவுபெற்ற நீதிக்கட்சி நீக்கியதே அது ஓட்டுக்காகவா?

 முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள அண்ணல் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தைக்குச் சென்ற தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்,அய்ந்தாம் ஜாரஜ் மன்னர் தன்னிடம் கைகுலுக்க வந்தபோது ~பெருமைக்குரிய அரசே! என்னை நீங்கள் தொடாதீர்கள், தொட்டால் நீங்கள் தீட்டாகிவிடுவீர்கள்| என்று கூறி தீண்டாமையின் கொடுமையைப் புரிய வைத்துப் பெற்று வந்தார்களே இட ஒதுக்கீடு! அது ஓட்டுக்காகவா?

 அம்பேத்கருடன் அரசியல் சட்டம் எழுதுவதில் ஒரு உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே, அந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து வாதாடி இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வந்தபோது தமிழகத்தில் தந்தை பெரியார் இயக்கம் தொடுத்த போராட்டத்தால் அரசியல் சட்டத்தை முதல்முதலாகத் திருத்தினாரே பிரதமர் நேருää அது ஓட்டுக்காகவா?

 பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதற்காக பிரதமர் நேரு காகா கலேல்கர் என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தாரேää அது ஓட்டுக்காகவா?
 சோ கூட்டம் மிகவும் புகழ்ந்துபேசும் மொரார்ஜி தேசாய் மண்டல் கமிஷன் அமைத்தாரேää அது ஓட்டுக்காகவா?

அந்த மண்டல் குழு அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டு வெளிவராத நிலையிலேயே மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஏடான இந்து பத்திரிகை Burry the mandal Reportஎன்று எழுதிய நேரத்தில் தேர்தலில் நிற்காத திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள விடுதலையில்;Hurry the Mandal Report என்று தலையங்கம் எழுதியதோடு அதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தினாரே, அது ஓட்டுக்காகவா?

பிரதமர் வி;பி.சிங் அவர்கள் மண்டல் அறிக்கையை அமுல்படுத்தியபோது அதை நேரடியாக எதிர்க்க வக்கில்லாமல்; கமண்டலத்தைத் தூக்கிக் கொண்டு ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தி பல்லாயிரம் பேர் பலியாகக் காரணமாக இருந்த பிஜேபி அத்வானிக் கூட்டம்  இன்று வேறு வழியில்லாமல் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல் நாடகமாடுவதுதான் ஓட்டுக்கான அரசியல். தைரியமிருந்தால் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அத்வானிக் கூட்டம் சொல்லிப்பார்க்கட்டுமே!

தான் பிறந்த ஜாதிக்கு இந்த இட ஒதுக்கீட்டால் பலன் இல்லை என்றாலும் ஜாதியின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி மண்டல் அறிக்கையை அமுல்படுத்தினால், பிஜேபியும், ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரசும்,  ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் இன்னபிற கட்சிகளும் ஆதரவு தரமாட்டார்கள் அதனால் ஆட்சி கவிழும் என்று தெரிந்திருந்தும் இந்த இடஒதுக்கீட்டுக்காக ஆயிரம்முறை வேண்டுமானாலும் பதவி இழக்கத் தயார் என்று முழக்கமிட்டு அதனை அமுல்படுத்திய மாமனிதர் வி.பி.சிங்.

அது அமுலான காரணத்தால்தான் இன்று பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் அரசுத்துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைவாய்ப்புப் பெற முடிகிறது.
IIT, AIMS, IIM போன்ற கல்வி நிறுவனங்களிலும் அமுல்படுத்த காங்கிரஸ் அரசு சட்டம் இயற்றியுள்ளது. வி.பி.சிங் உடலால் மறைந்தாலும் அவர் கொடுத்த இட ஒதுக்கீட்டின்மூலம் கோடானுகோடி தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் உள்ளங்களில் வாழ்வார். வாழ்க வி.பி.சிங்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக