புராண - இதிகாசங்களில் தேவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்தான்; ஆரியர்கள் என்பதும் அசுரர்கள் எனப்படுபவர்கள் திராவிடர்கள் என்பதும்தான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
ஆரியர்கள் திராவிடர் தலைவனை வென்ற நாளையே தீபாவளியாக அறிவித்து சூழ்ச்சியாக திராவிடர்களையே கொண்டாட வைத்து திராவிட இனத்தை இழிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் தீபாவளியின் தத்துவமாகும்.
உலகில் வேறு எந்த இனமாவது தன்னுடைய இனத்துத் தலைவனை எதிரிகள் வென்ற நாளை திருநாளாகக் கொண்டாடுகிறார்களா தமிழர்களைத் தவிர?
கோல்வால்கர் இறந்தநாளை ஆர்எஸ்எஸ் காரர்கள் திருநாளாகக் கொண்டாடுவார்களா?
காந்தி இறந்தநாளை இந்தியர்கள் யாரும் திருநாளாய்க் கடைப்பிடிப்பார்களா?
கென்னடி சுடப்பட்ட நாளை அமெரிக்கர்கள் கோலாகலமாய்க் கொண்டாடுவார்களா?
எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை தமிழ்நாட்டில் மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது. காரணம்ää தமிழர்கள் தன்மான உணர்வுடன் சிந்திக்க மறுப்பதே! அந்த அளவிற்கு ஆரியம் தமிழனின் மூளையில் விலங்கு மாட்டியிருக்கிறது. கைகளில், கால்களில், கழுத்தில் போடப்பட்டுள்ள விலங்குகளெல்லாம் கண்ணுக்குத் தெரியும். ஆனால் மூளையில் மாட்டப்பட்டுள்ள விலங்கு மட்டும் கண்ணுக்குத் தெரியாது.
தந்தை பெரியார் என்ற மாமனிதர் இந்த மண்ணில் பிறந்து தனது வாழ்நாளெல்லாம் தமிழனின் மூளையில் மாட்டப்பட்டுள்ள அந்த விலங்கை உடைக்கப் பாடுபட்டிருந்தாலும் மற்ற எல்லா வகைகளிலும் தந்தை பெரியார் உழைப்பின் பலனை அனுபவித்தாலும் தந்தை பெரியார் இல்லையேல் தமிழனுக்கு வாழ்வு இல்லை என்பதை ஒத்துக் கொண்டாலும் பக்தி என்று வருகின்றபொழுது புத்தியைப் பயன்படுத்த தமிழர்கள் மறுத்து வருகிறார்கள்.
பூமியை ஒரு அசுரன் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்துகொண்டான் என்று எழுதி வைக்கப்பட்டுள்ள கதையே தீபாவளி. இந்தக் கதையையும் சாங்கோபாங்கமாகச் சொல்லிக்கொண்டு தீபாவளி கொண்டாடுவதன் அவசியத்தை ஒருபக்கம் வலியுறுத்துவார்கள் பார்ப்பனர்கள். அதே நேரத்தில் நமது முன்னோர்கள்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடித்தார்கள் என்றும் கதை விடுவார்கள்.
இன்று உலகம் தட்டை என்று சொன்னால் LKG பிள்ளைகூட கேலி செய்து கைகொட்டிச் சிரிக்கும். அப்படியிருக்க உலகம் தட்டை என்ற கருத்தை வலியுறுத்தும் தீபாவளிக்காகச் செய்யப்படும் அமர்க்களம் கொஞ்சமா? நஞ்சமா?
ஒரு புடவை வாங்கினால் இன்னொரு புடவை இலவசம் என்பதும்ää ஒரு வேட்டி வாங்கினால் சட்டை இலவசம் என்பதும் இன்னும் பல்வேறு ஏமாற்று வேலைகளின் மூலம் மக்களின் பணத்தை; கொள்ளையடிக்கும் வியாபாரிகள்; ஒருபக்கம். தமிழனை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க விடாமல் செய்து தீபாவளியைக் கொண்டாட வைக்கக் கற்பனைகளை உண்மையாக்கி நம்பிக்கை என்ற ஒரு பூதத்தைக் கிளப்பி அறிவைக் கொள்ளையடிக்கும் பார்ப்பன மதவாதிகள் இன்னொரு பக்கம்.
தீபாவளிக்காகச் செலவழிக்கப்படும் தொகையை ஒரே ஒரு ஆண்டு நிறுத்தி அதனை அரசிடம் ஒப்படைத்தால் நமது நாட்டின் அந்நியக்கடன்களையே முழுவதும் அடைத்து விட முடியும். அந்த அளவிற்கு தீபாவளிக்காக ஒரே நாளில் நமது நாட்டின் பொருளாதாரம் வீணடிக்கப்படுகிறது.
நாடாவதுää சமுதாயமாவது, எப்படியாவது பார்ப்பான் மட்டும் உடலுழைப்பு செய்யாமல் காலமெல்லாம் மக்களைச் சுரண்டி உண்டு கொழுக்க வேண்டும் என்பதே பார்ப்பன ஆர்எஸ்எஸ்ää சங்கராச்சாரி, சோ, இராமகோபாலன், இல கணேசன்களின் எண்ணமாகும்.
இவற்றையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளும் காலமே, தமிழர்க்கு உண்மையான திருநாளாகும். அந்த நாள் எந்நாளோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக