செவ்வாய், 11 அக்டோபர், 2016

பார்ப்பனர் விடும் சரடுகள்


 (பார்ப்பனர் விடும் சரடுகள்)

பார்ப்பனர்கள் திட்டமிட்டு ஒரு பொய்யை உருவாக்குவார்கள். கொஞ்சநாளில் அது பொய் என்பது வெளிப்பட்டுவிடும். இருந்தாலும் அதற்காகக் கொஞ்சமும் வெட்கப்படாமவல் அந்தப் பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அதனுடைய ஒரு கட்டம்தான் ராமன்பாலம் என்பதுவும். அமெரிக்க விண்வெளித்துறையான நாசா இதைப்பற்றிச் சொன்னது என்றார்கள். நாசா அப்பொழுதே அதனை மறுத்துவிட்டது. கடலில் ஒரு மணல் திட்டுத்தான் உள்ளது என்றுதான் நாசா சொன்னது. அதனை மனிதன் கட்டினான் என்றோ ராமன் கட்டினான் என்றோ நாசா ஒருபோதும் சொன்னதில்லை.

சேதுசமுத்திரத்திட்டத்தை முடக்கும் தன்மையில் ராமன்பாலம் என்ற ஒரு கற்பனையை முட்டுக்கட்டையாகப் போட்டுள்ளனர் காவிகள்.

இண்டோ லிங்க் காம் வைஷ்ணவ நிறுவன நெட்வொர்க் என்னும் பார்ப்பனர்களின் நெட் ஒர்க் ஒன்றுதான் நாசாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தன் விருப்பத்துக்கு ஏற்ப சரடு விட்டிருக்கிறது. இதுபோன்று கயிறு திரிப்பது கற்பித்துப் பெருமைகளைச் சேர்த்துக் கொள்வது பார்ப்பனர்களுக்கே உரித்தான் கைவந்த கலையாகும்.

ஆனந்தவிகடன்; மணியன் என்ற பார்ப்பனர் இதுபோன்ற வேலைகளில் மும்முரமாக இருக்கக் கூடியவர். இதற்காகவே ஞானபூமி என்ற இதழை நடத்தி வந்தார்.

1982ம் ஆண்டு வெளிவந்த ஞானபூமி இதழில் ஒரு கதையை அவிழ்த்துக் கொட்டியிருந்தார். `நான் சென்ற வெளிநாடுகளில் எல்லாம் விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் நம் மதத்தின் தத்துவங்கள் வேரோடிப் போயிருப்பதைக் கண்டு வியந்தேன். கலிபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு சங்கரா (sankara) என்று பெயரிட்டிருப்பதைக் கண்டு அவர்களிடம் விசாரித்தபோது `உங்கள் சங்கரரின் ருத்ரதாண்டவத் தத்துவத்தின் அடிப்படையியே பெரிய விஞ்ஞானத் தத்துவம் அடங்கியிருக்கிறது என்றார்கள். ஒரு விஞ்ஞானி சொன்னார், உங்கள் மெய்ஞானம் ஏற்கனவே தேடிக் கண்டுபிடித்திருப்தைத்தான்      ((Search) மீண்டும் கண்டுபிடிக்கிறோம் (research)’  என்று ஞானபூமி இதழில் எழுதியிருந்தார்.

இந்தத் தகவல் உண்மையாக இருக்க முடியுமா என்று அய்யப்பட்ட சோமனூர் வழக்கறிஞர் திரு.பத்மநாபன் அவர்கள் டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த மடல் சென்னையில் உள்ள அமெரிக்கச் செய்தி நிறுவனத்துக்குத் திருப்பி விடப்பட்டது.

திரு ஜே.எம்.கோர்ஃப் என்னும் அதிகாரி சென்னையிலிருந்து பதில் கடிதம் வரைந்தார்.

`கலிஃபோர்னியாக்காரன் என்ற முறையில் ஓரளவு உறுதிப்பாட்டோடு நான் கூறமுடியும். அந்த மாநிலத்தில் சங்கரா என்ற பெயருடன் எந்த விண்வெளி ஆய்வு நிறுவனமும் நிறுவப்படவில்லை. என்று பதில் எழுதினார். மேலும் இத குறித்துத் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க முகவரிகள் இரண்டையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டிருந்த லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழுக்கு எல்லாத் தகவல்களையம் தெரிவித்தார் சோமனூர் வழக்கறிஞர் திரு.பத்மநாபன்.

அவ்விதழின் அறிவியல் பகுதி ஆசிரியர் திரு. ஜியார்ஜ் அலெக்சாண்டர் என்பவர் கீழ்க்கண்டவாறு பதில் எழுதினார்.

`ஹிந்துமதத்தின் அழிப்புக் கடவுளான சங்கரனுக்காக எல்லா மதிப்புடனும் கலிஃபோர்னியாவிலோ அமெரிக்காவில் வேறு எங்குமோ எந்த ஆய்வுக்கூடமும் அவ்வாறு சங்கரன் பெயர் சூட்டப்படவில்லை. என்பதை முழு உறுதியோடு உங்களுக்கு நான் சொல்ல முடியும். என்று எழுதிவிட்டு கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள லிவர்மூர் என்னும் ஊரில் உள்ள ஆய்வுக் கூடத்துடனும் தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தார். அந்த முகவரியோடும் தொடர்பு கொண்டார். அந்த ஆய்வுக்கூட அதிகாரி ஸ்டீவன்சன் என்பவர் இவ்வாறு எழுதியிருந்தார்.

`ஹிந்துமத நம்பிக்கைளிலும் பழக்கங்களிலும் பற்றார்வம் ஏற்படுவதில் விரும்பி ஈடுபடுவதற்கு அமெரிக்க அறிவியலார்க்கு எந்தத் தேவையும் ஏற்படவில்லை| என்று ஓங்கி அடித்து விட்டார்.
எந்த அளவிற்குக் கற்பனையாக உண்மைக்கு மாறாக பொய்யென்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே சாதிக்கும் குணம்கொண்டவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்று போதாதா?

தங்கள் மதத்தின் புராதனத்தைத் த}க்கிப்பிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய அதே கூட்டம்தான் நாசா சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சரடுவிடுகிறது.
இவர்களின் உண்மை உருவத்தைப் புரிந்துகொள்வீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக