செவ்வாய், 11 அக்டோபர், 2016

Dose no -2



 இராமாயணம் நடந்த கதையல்ல. இராமன் வரலாற்று மாந்தன் அல்ல என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். இல்லை இல்லை. இராமாயணம் நடந்த வரலாறு. இராமன் வரலாற்று நாயகன் என்கிறது புளுகுணிக்கும்பல்.

 வரலாற்றில் எங்கும் குரங்குகள் பேசியதாகவோ கழுகு காக்கை குருவியெல்லாம் பேசியதாகவோ எப்பொழுதும் கிடையாது. பஞ்சதந்திரக் கதைகள், அரேபியன் நைட் போன்ற கதைகளில்தான் விலங்குகளும் பறவைகளும் பேசியதாகக் கதைகள் உள்ளன.

 இராமாயணத்தில் குரங்குகள் பேசியிருக்கின்றன. கழுகு பேசுகிறது. கரடி பேசுகிறது. அனுமானுக்கு சொல்லின் செல்வர் என்று பெயராம். ~சீதையைக்கண்டேன்| என்பதனைக் ~கண்டேன் சீதையை| என்றானாம். இது அனுமானின் சொல்வன்மையைக் காட்டுகின்றதாம். தமிழ்ப்புலவர்கள் புளகாங்கிதம் அடைவார்கள். குரங்கு தமிழ் பேசியதா? அல்லது தமிழ் பேசியவன் குரங்கா?

 வரலாற்றில் எந்த நாட்டிலாவது இதுபோல் உண்டா? அப்பொழுதுள்ள குரங்குகள் பேசியிருந்தால் இப்பொழுது குரங்குகள் ஏன் பேசுவதில்லை?

 இராமன் வடநாட்டிலிருந்து வருகின்றான். அவன் என்ன மொழி பேசினான்? இங்கிருந்தவர்கள் பேசியது அவனுக்குப் புரிந்ததா? அவன் பேசியது இங்கிருந்தவர்களுக்குப் புரிந்ததா? இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் தேவைப்படவில்லையா?

 சங்பரிவார்க் கும்பல் உயர்வாகப் போற்றுகின்ற விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் ~இராமாயணம்| என்ற தலைப்பில்
 ~~தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்||  என்று எழுதுகிறார்.

 ஆரியர்கள் சோமபானத்தையும் சுரா பானத்தையும் அருந்தியதால் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அதை அருந்த மறுத்த திராவிடர்களை அசுரர் என்று அழைத்தார்கள். அவர்களை ஆதரித்து தங்கள் ஆதிக்கம் இங்கு வருவதற்குத் துணை புரிந்த திராவிடர்களையும் மனிதர்களாகக்கூட ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை அவர்களுக்கு. அதனால்தான் வாலிää சுக்ரீவன்ää அனுமான் ஆகியோரைக் குரங்குகள் என்று எழுதிக் கேவலப்படுத்துகிறார்கள்.

 ஆரிய -திராவிடப் போரைக்  கதையாகச் சித்தரிப்பதுதான் இராமாயணமே தவிர அது உண்மை வரலாறு அல்ல.

 தங்கள் இனத்தைக் குரங்குகள் என்றும் கரடிகள்ä,அரக்கர்கள், அசுரர்கள் என்றும் கேவலப்படுத்தியிருப்பதைக் கண்டும்கூட எப்படி வேண்டுமானாலும் எங்களை இழிவுபடுத்திக்கொள், எங்களுக்குத் தேவை பதவிதான் என்பவர்கள் வேண்டுமானால் விபீஷணனாக இருந்து இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பதவி சுகம் அனுபவிக்க நினைக்கலாம்.

 தன்மான உணர்வுள்ள எவனும் அதனை ஏற்றுக்கொள்வானா?
 ~மானமும் அறிவும் மனிதனுக்கழகு| என்றார் பெரியார். தமிழர்களே! மானமுள்ளவர்களாய் வாழ்வோம்!
ராமர்பால மோசடியை முறியடிப்போம்!
சேதுசமுத்திரத்திட்டத்தை நிறைவேற்ற உறுதியேற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக