புதன், 5 அக்டோபர், 2016

ஆயுதபூஜை,அண்ணா


எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக்கப்பல், அதைக்கண்டுபிடிக்கும் கருவி டார்பிடோ, அதனின்று தப்பும் கருவி, விஷப்புகை, அதைத்தடுக்கும் முகமூடிää இன்ஜக்ஷன் ஊசிää இனாகுலேசன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆபரேஷன் ஆயுதங்கள்ää தூரதிருஷ்டிக் கண்ணாடிää ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, (இப்பொழுது செல்ஃபோன்) கம்பியில்லாத்தந்தி, போட்டோ மெஷின், சினிமாப்படம் எடுக்கும் மெஷின், விமானம், ராக்கெட், ஆளில்லா விமானம், டைப்மெஷின், அச்சு இயந்திரம், (இப்பொழுது கம்ப்யூட்டர், இன்டர்நெட், இ-மெயில்) புது உரம், புது விவசாயக்கருவிகள் இன்னும் என்னென்ன புதிய பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்தää மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருட்கள்ää ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஆயுதபூஜை, சரசுவதி பூஜை கொண்டாடாதவர்கள்.
நூற்றுக்கு நூறு படித்துள்ள மேனாட்டிலே சரசுவதிபூஜை, ஆயுதபூஜை இல்லை. ஏனப்பாää கொஞ்சம் யோசிக்கக்கூடாதா? ஓலைக்குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும்ää இரட்டை மாட்டுவண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கருவிகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை! கற்பூரம் நீ செய்ததில்லை! கடவுள் படத்துக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடிகூட சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்துத்தான் நீ கொண்டாடுகிறாய்.
ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூஜைகள் செய்து வந்த நாம்ää நமது மக்கள்ää இதுவரை என்ன புதிய அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம்? உலகுக்குத்தந்தோம் என்று யோசித்துப் பார்த்தாயா? கோபப்படாதே! உண்மை அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி, உன்னையே அறியாமல் நீ சிரிப்பாய்!
மேனாட்டான் கண்டுபிடித்துக்கொடுத்த அச்சு இயந்திரத்தில் உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து மகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்துக்கொடுத்த இரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய அற்புத திருத்தலம் போகிறாயே! அவன் கண்டுபிடித்துக்கொடுத்து ரேடியோää (டிவியில்) உன் பழைய பஜனைப்பாட்டைப் பாடவைத்து மகிழ்கிறாயே! சரசுவதி பூஜை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்று பத்திரிகையில் செய்தி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! தந்தி முறை தசரதன் வீட்டில் இருந்ததில்லை. (இராமன் ரேடியோ கேட்டதில்லை, சீதை சீரியல் பார்த்ததில்லை காணாமல் போன சீதை அங்கு வந்தாளா என்று கேட்டறிய செல்போன் இருந்ததில்லை) இவைகளெல்லாம் மிகமிகச் சுலபமாக நமக்குக் கிடைக்கிறது. அனுபவி;க்கும்போதுகூட அரிய பொருளைத் தந்த அறிவாளர்களை மறந்துவிடுகிறோம். அவர்கள் ஆயுதபூஜை சரசுவதி பூஜை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்துவிடுகிறோம்.
(டெலிவிஷனில் இராமாயணமும், மஹாபாரதமும் பார்த்து ரசிக்கிறோம்) இது முறைதானா? பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதிபூஜை ஆயுதபூஜை நமக்குப் பலன் தரவில்லையே! அந்தப் பூஜைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும்படியான அற்புதம் செய்ததாகக் கூறும் நம் அவதார புருஷர்கள்(விஸ்வகர்மாக்கள்) காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணைகொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும், பிறகு வெட்கமாக இருக்கும்ää அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்! யோசித்துப்பார் அடுத்த ஆண்டிற்குள்ளாவது….                      (திராவிட நாடு – 26-10-1947)
(அண்ணா இப்படிச் சொல்லி இருக்கிறார். அண்ணாவின் தம்பிகள் ஆயுதபூஜைக்கு விசிட்டிங் பர்மிஷன் கேட்கலாமா? விசிட்டிங் தேவைதான். அதனை மே தினத்திற்குக் கேட்கலாம். இந்நிறுவனம் வருவதற்குக் காரணமான காமராசர் பிறந்த நாளுக்குக் கேட்கலாம். சுதந்திரதினம்ää குடியரசு தினத்துக்குக் கேட்கலாம். அதை விடுத்து ஆயுதபூஜைக்குக் கேட்கலாமா?)
உரிமையோடு கேட்கிறோம். அண்ணா சொன்னவாறு கோபியாமல் சிந்தித்துப் பாருங்கள். கொள்கை உணர்வும் பகுத்தறிவு உணர்வும் தானாக வரும்!           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக