அருந்ததியருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு சமூக மாற்றத்திற்கோர் அடித்தளம்
~அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் அவ்வைப்பாட்டி. மனிதனை மனிதன் தாழ்த்தி, இழிவுபடுத்தி, ஏமாற்றும் தன்மையைப் பார்த்த தந்தை பெரியார் ~கொடிது, கொடிது, மானிடராய்ப் பிறத்தல் கொடிது| என்றார். அதிலும் ஒரு மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் தலையில் சுமக்க வேண்டும், அதுதான் உன் தலைவிதி, பகவான் இட்ட கட்டளை, அதை ஒழுங்காகச் செய்தால்தான் மோட்சம் கிட்டும் என்று பல்லாயிரம் ஆண்டுகளாய் வைத்திருந்தார்களே! அது அதைவிடக் கொடுமை என்றார்.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்லுகிறபோத, ஜாதி ஆதரவாளர்கள் பாமர மக்களிடம் சென்று ~ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தவர் சொல்கிறார்களே! ஜாதியை ஒழித்து விட்டால் மலம் அள்ளுவது, செருப்புத் தைப்பது, முடி திருத்துவது, துணி வெளுப்பது, மாடு தூக்குவது, பிணம் எரிப்பது போன்ற வேலைகளையெல்லாம் யார் செய்வது? என்று கூறி அப்பாவி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைக்கூட ஜாதிக்கு ஆதரவாளராக மாற்றுகின்ற பணியைத் திட்டமிட்டுச் செய்கிறார்கள்.
ஏன்ää இந்த நாட்டு மனிதன்தான் செருப்பு அணிகின்றானா? மலம் கழிக்கின்றாரா? முடி வெட்டிக் கொள்கிறாரா? துணியை வெளுப்பாக்கிக் கட்டுகிறார்களா? வேறு நாடுகளில் இல்லையா?
அங்கெல்லாம் இவற்றைச் செய்யத் தனித்தனி ஜாதிகள் இருக்கின்றதா? எவருக்கு எந்தத் தொழில் விருப்பமோ அதனைச் செய்த அதற்குரிய ஊதியத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அந்தத் தொழில் செய்பவர்களை யாரையும் யாரும் இழிந்தவன் என்று ஒதுக்கி வைப்பதில்லை.
இங்கேதான் பீ நாற்றத்தையும் அசிங்கத்தையும் தாங்கிக்கொண்டு தாங்கள் பல நோய்களுக்கு ஆளானாலும்ää சமூகத்தில் மற்றவர்கள் நோய்க்கு ஆளாகாமல் இருக்க தங்களை அர்ப்பணித்துள்ள மக்களை இழிஜாதி என்று ஆக்கி வைத்துள்ளார்கள். சமுதாயத்திற்கு எந்தப் பலனுமே இல்லாத மணி அடிப்பதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் உயர்ஜாதி என்று உலா வருகிறார்கள்.
இன்னமும் தோட்டிதான் மலம் அள்ள வேண்டுமா? சக்கிலியர்தான் செருப்புத் தைக்க வேண்டுமா? பறையன்தான் பிணம் சுட வேண்டுமா? இதைக் கர்மயோகம் என்று கூறுபவர்கள் இதைச் செய்து கருமயோகம் பெறலாமே!
இவ்வளவு காலம் இந்தத் தொழில்களை அவர்கள் செய்தார்கள். இனிமேல் மற்றவர்கள் செய்யலாமே! ஒரு அய்யர் செருப்புத் தைத்தால் செருப்பு கிழிந்தா போகும்? செட்டியார் பிணத்தை எரித்தால் பிணம் வேகாதா என்ன?
அந்த ஜாதியை ஒழிக்க சரியான வழிதான் இட ஒதுக்கீடு. சக்கிலியன் மகனைக் கூப்பிட்டு செருப்புத் தைக்கும் வேலையைச் செய்யச் சொன்னால் அதுதான் ஜாதியைப் பாதுகாக்கும் செயல். அவனை அழைத்து ~உன்னுடைய அப்பா செருப்புத் தைக்கிறாரா? நீ மாவட்ட ஆட்சியராகப் போ| என்று வேலை கொடுக்கும்போது அவருக்கு மட்டுமல்ல அந்த சமுதாயத்திற்கே பெருமை ஏற்படுகிறது. இழிவு ஒழிக்கப் படுகிறது.
சங்கராச்சாரியும்ää இராம.கோபாலன்களும் சலவைப் பெட்டியும் சவரப் பெட்டியும் வாங்கித் தந்து அவரவர் குலத்தொழிலை ஒழுங்காகச் செய்யுங்கள் என்கிறார்கள். இது ஜாதியைப் பாதுகாக்கத்தான் உதவுமே தவிர ஜாதியை ஒழிக்க உதவாது.
ஜாதி ஒழிப்பிற்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோல் இந்தச் செருப்புத் தைக்கிற தொழிலும் மாற்றப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே செய்வதால்தான் அது கீழான தொழில் என்று இழிவு படுத்தப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலை உருவாகும்போது உயர்வு, தாழ்வு என்பது அங்கே இருக்காது.
அதனால்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமியற்றிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், அருந்ததியருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்கிற சட்டத்தைக் கொண்டுவர முயற்சி எடுத்து மூன்று விழுக்காடு வழங்கலாம் என்றார். தமிழக அமைச்சரவை ஒப்புதலளித்து இப்பொழுது மத்திய ஆதி திராவிடர் நல ஆணையமும் ஒப்புதல் அளிக்க உள்ளது.
அரசுச் செயலாளர்கள் இப்பொழுதே இதைச் செய்ய வேண்டுமா? என்று கலைஞரிடம் கேட்டதற்கு “ என்னுடைய சரித்திரத்தின் கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய செய்தியாக இருந்தாலும் அருந்ததியினருக்குச் சமூக நீதி அளித்தேன் என்ற அச்செய்தி இடம் பெற வேண்டும்” என்று கூறி அதை அமுல் படுத்த உள்ளார்கள். இதன்மூலம் சமூக மாற்றத்தில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் கலைஞர்.
தலையில் மலம் தூக்குவோர் தலைவிதியை மாற்றிடää தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றேன் நான். பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைக்கப் பணிபுரிவோம் தொடர்ந்து@ பகுத்தறிவைத் துணை கொண்டு நடத்து! என்று கூறும் கலைஞர் வாழ்க பல்லாண்டு!
பெல் ம.ஆறுமுகம்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்கிய பொழுது பெல். ம. ஆறுமுகம் அவர்களால் எழுதப்பட்டு விடுதலை நாளிதழில் 18-12-2008ல் வெளிவந்த கட்டுரை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக