.
காமராசரைக் கொல்ல முயன்ற கூட்டம் நம் மீது பழியைப் போடப்பார்க்கிறது
இந்தியத் தலைநகரில் பட்டப்பகலில் பலபேர் பார்த்திருக்க காவல்துறையின் கண்முன்னே ஆர்எஸ்எஸ்ää ஜனசங்கத்தைச் சேர்ந்த ரவுடிகள் மற்றும் நிர்வாணச் சாமியார்கள் கர்மவீரர் காமராசரை புதுடில்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை தீ வைத்து அவரை உயிரோடு கொளுத்த முயன்றார்கள். அதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் பத்திரிகைச் செய்திகள் இருக்கின்றன. போலீஸ் டைரிக்குறிப்பும் இருக்கிறது.
கோட்ஷே கும்பல் வெறியாட்டம் என்ற பெயரில் டில்லியிலிருந்து வெளிவந்த பிளிட்ஸ் ஏடு காமராசரைக் கொலை செய்ய நடந்த முயற்சியை எழுதியுள்ளது. பார்ப்பன ஏடான தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் புதடில்லி நிருபரான திரு ரங்கசாமி அவர்கள் பசுவைக் காப்பாற்றுங்கள் என்ற இயக்கத்தின் பின் ஒளிந்திருக்கும் சக்திகள் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் காமராசர் வீடு தாக்கப்பட்டது ஒரு திட்டமிட்ட செயலே என்று எழுதியுள்ளார். லிங்க் என்ற ஏடு கடந்த 7.11.66 அன்று நாட்டின் தலைநகரில் இந்துப் பாசிசம் அதன் நச்சுப் பற்களைப் பதித்துக் காட்டி விட்டது என்று எழுதியுள்ளது. டில்லியிலிருந்து வெளிவந்த பேட்ரியாட் என்ற பத்திரிகைää கரண்ட் பத்திரிகை ஆகியவையும் காமராசர் கொலை முயற்சியையும் ஆர்எஸ்எஸ் ஜனசங்கத்தின் முகத்திரையையும் தோலுறித்துக் காட்டியுள்ளது.
பார்ப்பன ஏடான கலைமகள் புதுடில்லி நிருபர் கே.சீனிவாசன் என்பவர் தலைநகரிலிருந்து என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். மித்திரன் என்ற பத்திரிகையின் டெல்லி நிருபர் காமராசர் வீட்டைக் கொளுத்தும்போது மந்திரி ரகுராமய்யா என்பவரின் வீடும் கொளுத்தப்பட்டது என்று எழுதியுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வெளிவந்த இதழ்களான ரஷ்ய ஏடு பிராவ்தாää பிரிட்டிஷ் ஏடு சண்டே டைம்ஸ்ää சன்டே அப்சர்வர் போன்ற ஏடுகளும் பசுப் பாதுகாப்பு இயக்கத்தின் அட்டூழியங்களையும் காமராசர் வீட்டுக்குத் தீவைத்த செயலையும் தோலுறித்துக் காட்டியுள்ளது.
அதற்கும் ஒருபடி மேலே பெருந்தலைவர் காமராசர் அவர்களே தன்னைக் கொல்ல முயன்ற காவிக்கூட்டத்தின் முகத்திரையைக் கிழித்துக் காயப்போட்டுள்ளதை நவசக்தி இதழில் வந்த அவரது உரையை வெளியிட்டிருந்தோம்.
காவிக்கும்பலால் இவ்வளவையும் மறுக்க முடியவில்லை. இது பொய் என்று கூடச் சொல்ல முடியவில்லை. இவற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்க முடியவில்லை. இப்பொழுது புதிதாக முத்துராமலிங்கத் தேவர் பெயரில் அவதூறு கிளப்புகிறது. அவர் என்ன ஆர்எஸ்எஸ் காரரா? அவர் ஜனசங்கமா? அவரை ஏன் இப்பொழுது இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்ஸின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கும். காந்தியைக் கொலை செய்த கோட்ஷே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு காந்தியைக் கொன்றான். காரணம் மாட்டிக் கொண்டவுடன் கொன்றது யார் என்று ஆராயும்போது இந்தப் பச்சையைப் பார்த்து காந்தியை ஒரு முஸ்லிம் கொன்று விட்டான் என்று வதந்தி பரவி இஸ்லாமியர் கொல்லப்பட வேண்டும் என்ற கெட்ட நோக்கம்தான்.
அப்படிப்பட்ட கெட்ட நோக்கத்தில்தான் முத்துராமலிங்கத் தேவரை களம் இறக்குகிறது காவிக் கும்பல். அவரைச் சொன்னால் அவரைப் பற்றி நாம் விமர்சனம் செய்வோம். அதனால் அவரது சமுதாயத்தவர் நமக்கு எதிராகக் கிளம்புவர். அதில் இரத்தம் குடிக்கலாம் என்ற ஓநாய் புத்தியுடன் இப்படிப்பட்ட தகவல்களை வெளியிடுகிறது காவிக்கும்பல். இவையனைத்தும் எந்த ஆதாரமுமின்றிச் சொல்லப்பட்டவை. இவற்றுக்கெல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியும். முதலில் நாம் கேட்ட கேள்விகளுக்கே பதிலைக் காணோம்.
பிஜேபிக்கும் பிஎம்எஸ் சுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? பிஜேபியின் உறுப்பினர்கள் பிஎம்எஸ்ஸில் உறுப்பினராக இருக்கிறார்களா? இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய்? இது ஒரு சாதாரண விசயம். இதையே கோணிப்பைக்குள் மறைக்கும் இந்தக் காவிக் கும்பல் காமராசர் கொலை முயற்சியை எப்படி ஒத்துக் கொள்வார்கள்.
ரெங்கராஜன் குமாரமங்கலத்துக்கும்ää லலிதா குமாரமங்கலத்துக்கும்ää சுகுமாறன் நம்பியாருக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வாயிற்கூட்ட அனுமதி வாங்கித் தந்தது யார்?
விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு என்ற நூலை நாங்கள் விமர்சனம் செய்தபோது அதற்கு நேரடியாக பதில் சொல்ல வக்கில்லாமல் பாரத தொழிலாளர் கழகம் என்ற பெயரிலும் விவேகானந்தர் நல உரிமைச்சங்கம் என்ற பெயரிலும் நோட்டீஸ் ஒட்டியது யார்?
காந்தியைக் கொன்ற கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்பவர்கள் கோழைகள் என்று கோட்ஷேவின் தம்பி கோபால் கோட்ஷே கூறினான். ஆனால் இன்னமும் கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்று சொல்லுகிறீர்கள். அது ஏன்?
இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். உங்கள் கேள்வியின் யோக்கியதையை பிறகு பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக