உண்மையைத் தவிர வேறு எதுவுமே பேசத் தெரியாத உத்தம புத்திரர்கள் யாரென்றால் அவர்கள்தான் இந்த RSS,BJP,BMSகூட்டம். இப்பத்தான் கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் இங்கே நோட்டீஸ் ஒட்டினார்கள். BJP ஒருபோதும் மனுதர்மத்தைச் சட்டமாக்கச் சொன்னதில்லை என்று. இவர்களையெல்லாம் இப்படிப் பேசச் சொல்லி பயிற்சி கொடுத்து அனுப்பியது RSS. அந்த ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொடுப்பதை இவர்கள் வாந்தியெடுத்தாலும் இவர்களது குருநாதர்கள் அவ்வப்பொழுது இவர்களின் முட்டாள்தனத்தை கேலி செய்வதுபோல நடந்துகொள்வார்கள்.
கடந்த 2015 ஆகஸ்ட் 6ந் தேதி மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. அதனைக் கூட்டியவர்கள் தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதியில் உள்ள தேவேந்திர குலத்தவர்களில் ஒரு சிறு பிரிவினர். எல்லா மக்களும் அவர்கள் பின்னால் இருப்பது போல பாவனை செய்தாலும் அவர்களின் பின்னணியில் இருப்பது RSS கூட்டம்தான். கிருஷ்ணசாமிää ஜான்பாண்டியன் போன்றோர் பின்னால்தான் அந்த மக்களில் 99.9 சதவிகித மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கவில்லை.
அந்த மதுரை மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் ஜாதியையும் தீண்டாமையையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பிஜேபி தலைவர் அமித்ஷா, ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி, தமிழகத்தின் எச்ச.ராஜா. இவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியாததை அந்த தேவேந்திர குலத்தவரைக் கொண்டு சொல்ல வைத்துள்ளார்கள்.
மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று இவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளர் மனுதர்மத்திலிருந்து சுலோகங்களை எடுத்துச் சொல்லுகின்றார். ஜாதியை இவர்களால் வெளிப்படையாக ஆதரித்துப் பேச முடியாது. ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளர் ஜாதியை ஆதரித்துப் பேசுகிறார். தீண்டாமையை இவர்களால் வெளிப்படையாக ஆதரித்துப் பேச முடியாது. ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளர் தாழ்த்தப்பட்டோரில் இன்னொரு பிரிவினர்தான் தீண்டத்தகாதவர்கள். அதற்கு மனுதர்மத்தில் ஆதாரம் இருக்கிறது என்று கூறுகிறார். இந்த RSS,BJP,BMS கூட்டம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. அதுவும் தமிழகத்தில் அதனைப் பேசி இவர்களால் ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளரை எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூற வைத்துள்ளார்கள். அமித்ஷா வும் அதற்கு மோடிஜி யிடம் கூறி ஆவன செய்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆக பூனைக்குட்டி கோணிப்பைக்குள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.
ரொம்ப ரொம்பää ரொம்ப யோக்கியமான BMS சங்கம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தீ;ணடாமைக்கு இந்துமத சாஸ்திரத்தில் இடமில்லை என்று புருடா விட்டது. இப்பொழுது அந்த யோக்கிய சிகாமணிகளின் முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.
எந்த மக்கள் இந்தத் தீண்டாமைக் கொடுமைக்கும் ஜாதிக் கொடுமைக்கும் ஆளாகிக் கிடந்தார்களோ அவர்களை வைத்தே ஜாதியையும் தீண்டாமையையும் பாதுகாக்க இவர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். எந்த மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்டகாலம் பின்தங்கியிருந்து எந்த இட ஒதுக்கீட்டால் இன்று ஓரளவு முன்னேறி இருக்கிறார்களோ அவர்களை வைத்தே அந்த இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டுகிறார்கள்.
இட ஒதுக்கீடு இழிவுக்குரியதல்ல@ அதுதான் உரிமை மறுக்கப் பட்டோருக்கு உந்து சக்தி என்ற கோட்பாடு தமிழகத்தில் வேரூன்றியுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு மாத்திரம் மத்திய அரசில் இட ஒதுக்கீடு இருந்தபோது இட ஒதுக்கீடே கூடாது. அது தகுதி – திறமையைப் பாதிக்கும் என்றவர்கள் இந்த RSS,BJP,BMS கூட்டம்.. பிறகு மண்டல் குழு அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வந்தபொழுது தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கூடாது என்றார்கள். இப்பொழுது மீண்டும் பழைய இடத்திற்கே வந்து தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள்.
இவ்வளவ காலமும் தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும்தான் மோத விட்டார்கள். இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே மோதலை உருவாக்க நினைக்கின்றனர். அடுத்து அவர்களின் குறி மதவெறிதான். எந்த மக்களைக்கொண்டு இதையெல்லாம் இன்று செய்ய நினைக்கிறார்களோ அதே மக்களைக் கொண்டு மதவெறியைக் கிளப்பி இஸ்லாமியனை வெட்டு@ கிறிஸ்துவனைக் கொல்லு என்று பயிற்சியும் பைசாவும் கொடுத்து அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றப் பார்ப்பார்கள். அவர்களிடம் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக