வேளாங்கண்ணி கோயிலுக்குக் கடவுளைக் கும்பிடப்போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப் போனது. கேதார்நாத் பத்ரிநாத்தில் ஆண்டவனை வழிபடச் சென்ற பக்தர்களை பூகம்பமும் மண் சரிவும் வெள்ளமும் சொர்க்கத்துக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்தது. விநாயகனைக் கடலில் கறைக்கச் சென்ற பக்தனை கடல்நீர் விழுங்கிக் கொண்டது. அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானைக் கல்லால் எறிந்து கொல்லலாமென ஹஜ் யாத்திரை சென்ற பக்தர்களை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு அய்க்கியமாக்கி விட்டது ஜனநெரிசல். எழுநூற்றைம்பது பேருக்குமேல் இறந்து போனார்கள். இந்தியர்கள் மாத்திரம் அதில் 35 பேர். சாத்தான் மீது கல்லெறிவதாகச் சொன்னாலும் அவர்கள் எறிந்த கல் அனைத்தும் எதிரே இருந்த இன்னொரு மனிதன் மேல்தானே பட்டது. அப்படியானால் அந்த மனிதர்கள்தான் சாத்தான்களா? முட்டாள் தனமும் மூடநம்பிக்கையும் எந்த ஒரு மதத்துக்கும் தனிப்பட்ட சொந்தம் இல்லை என்பதை இவை உணர்த்துகின்றன.
புனித யாத்திரை செல்பவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக இறந்துபோகிறார்களே! இதுதான் கடவுள் கருணையா என்றால் அவர்கள் எல்லாம் கடவுளின் இராஜ்யத்திற்குச் சென்று பரலோகத்தை அடைந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள் மதவாதிகள். எந்த ஒரு பக்தனும் இன்னும் இந்த பூமியில் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றுதான் வேண்டுகிறார்களே தவிர செத்து சிவலோகம் போக வேண்டும் மாண்டு மண்ணுலகை விட்டு மகேசனிடம் செல்ல வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கை வைப்பதில்லை. அந்த இறைவன்தான் தங்களை வாழவைப்பதாக நம்பிக் கொண்டு அத்தனை பக்தர்களும் புனித யாத்திரை செல்கிறார்கள். அப்படிச் செல்பவர்களை இப்படிக் கொன்று குவித்து வேடிக்கை பார்ப்பதுதான் கருணை மிக்கவனான கடவுளின் காருண்யமா?
வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார். செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு காம இச்சையைத் தீர்த்துக்கொண்ட நித்தியானந்தா. கணவனை இழந்த பெண்ணோடு தகாத முறையில் நடந்துகொண்டதோடு சங்கரராமனையும் பட்டப் பகலில் போட்டுத் தள்ளிய சங்கராச்சாரிää கோயில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன். இன்னும்ää இன்னும்..ää பெண்களின் இயல்பான மாதவிடாயை தீட்டு என்ற பெயரில் ஒதுக்கி வைத்துக் கூனிக்குறுக வைக்கும் இந்து மதம் பெண்களோடு கடவுள் புனர்கிற காட்சிகளை சிலைகளாக கோயில் கோபுரங்களில் வைத்துக் கும்பிடச் சொல்கிறது.
ஆயிரம் சமத்துவம் பேசினாலும் கன்னியாஸ்திரிகள் திருப்பலி நிறைவேற்ற முடியாது. திருச்சபையின் அதிகாரம் பொருந்திய பொறுப்புகளான பாதிரிää கர்தினால் போப் உள்ளிட்ட பதவிகளை பெண்கள் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது என்கிறது கிறிஸ்தவம். புர்கா ஒழுங்காக அணியாத பெண்களை கல்லால் அடித்துக் கொன்றும் கால் விரல் நகம் தெரிய நடந்த பெண்களின் பாதங்களை வெட்டியும் காரணமே இல்லாமல் பெண்களை விவாகரத்து செய்து எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம் என்று கூறும் இஸ்லாம். எல்லாம் வல்லவரான எங்கும் எதிலும் இருப்பவரான தூணிலும் துரும்பிலும் இருப்பவரான முக்காலமும் உணர்ந்தவரான நன்மையே மிக்கää கருணையே மிக்கவரான கடவுள் இவற்றையெல்லாம் அகோர சிரிப்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ததாகத் தெரியவில்லை.
கடவுளின் ஆணைப்படிதான் ஈராக் மீது போர் தொடுத்தேன் என்று சொன்ன அமெரிக்க அதிபர்ää புனிதப்போர் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் தாலிபான் ஐஎஸ் தீவிரவாதிகள்ää தருமயுத்தம் என்ற பெயரால் மசூதியை இடித்து மதவெறித் தாண்டவமாடி அப்பாவி மக்களைக் கொன்று குவித்துää பாதிரியாரையும் அவர் மகன்களையும் உயிரோட கொளுத்தி கன்னியாஸ்திரியைக் கற்பழித்த இந்து தீவிரவாதி. தன் பேரைச் சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்டாலும் எப்பேர்ப்பட்ட கொடூரச் செயலைச் செய்தாலும் எல்லா மதக் கடவுள்களும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டுதானிருக்கின்றன. ஒவ்வொரு மதக்காரனும் மாற்று மதக்காரனை எதிரியாக நினைக்கிறான். மற்ற மதத்தவரைக் கொன்று ஒழிப்பதில் கொடூர சுகம் காணுகிறான். இறப்பது மனிதர்கள் மட்டுமல்ல மனித நேயமும்தான்.
மதம் மனிதனைப்பற்றிக் கவலைப்படாதே என்கிறது. கடவுளை மற! என்று சொன்ன பெரியார் மனிதனை நினை!! என்றார். பெரியாரின் இந்த மனித நேயத் தத்துவத்தை எண்ணிப் பாருங்கள்! பகுத்தறிவோடு சிந்தியுங்கள்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக