திராவிடர் கழகமோ, திராவிடர் தொழிலாளர் கழகமோ ஆதாரம் இல்லாமல் எந்த தகவலையும் வெளியிடுவதில்லை. அப்படி ஆதாரத்தோடு வெளியிடப்பட்டதுதான் வளாகத் தேர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதாகும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி 01-03-2012 அன்று பெல் பொதுத் தகவல் அலுவலருக்கு; எந்தெந்தக் கல்லூரிகளில் பெல் நிறுவனத்திற்காக பொறியாளர்கள் வளாகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? வளாகத் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்ää வளாகத் தேர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? இட ஒதுக்கீட்டின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல், பொதுப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஆகியவற்றை வழங்கக் கோரி விண்ணப்பித்தோம். திருச்சி பொதுத் தகவல் அலுவலர் எந்தெந்தக் கல்லூரிகளில் வளாகத் தேர்வு நடைபெற்றது என்பதைத் தெரிவித்து 21-04-2012 அன்று தகவல் அளித்தார்கள். அதில் கல்லூரிகளின் பெயர்களும் எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற பட்டியலும் தரப்பட்டது.
அதில் நாம் கேட்டபடி தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் பெயர்ப்பட்டியலும் பொதுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலும் தராததால் டெல்லி கார்ப்பரேட்டில் மேல் முறையீடு செய்தோம். அவர்கள் 01-10-2012 அன்று பதில் தெரிவித்தார்கள். நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையிலும் அவர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையிலும்தான் கார்ப்பரேட் நிர்வாகம் 2007 முதல் 2011 வரை தேர்வு செய்த வளாகத் தேர்வுகளில் பொறியாளர் தேர்வில் அந்த இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கவில்லை என்ற தகவலைத் தெரிவித்தோம்.
BITS, BILANI,NIT,IIT,ANNA UNIVERSITYபோன்ற நிறுவனங்களில் நடந்த வளாகத் தேர்வுகளில் இட ஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. 2006 மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பொதுப்போட்டியில் தாழ்த்தப்பட்ட - இதர பிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் இடம் பெறவில்லை. மொத்தம் தேர்வான பொறியாளர்கள் -- 1416 பேர். இதில் இதரபிற்படுத்தப்பட்டவர்கள் -- 267 பேர். சதவிகிதம் 18.85% தாழ்த்தப்பட்டவர்கள் -- 230 பேர். சதவிகிதம் 16.26% மலைவாழ்மக்;கள் -- 87 பேர். சதவிகிதம் 6.14%
இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை. ஆனால் பெல் நிர்வாகத்தில் வழங்கப்பட்டுள்ளதோ வெறும் 18.85% முன்னேறிய ஜாதியினர் 832 பேர் இவர்கள் 58.75% திறந்த போட்டியில் இதர பிற்படுத்தப்பட்டவர் யாரும் நியமிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களில் இரண்டே இரண்டு பேர் மட்டும் அய்அய்டி நாக்பூரில் மட்டும் எடுக்கப்பட்டுள்ளார்கள். மற்ற எந்தக் கல்வி நிறுவனத்திலும் தாழ்த்தப்பட்டவர்களும் இதர பிற்படுத்தப்பட்டவர்களும் பொதுப்போட்டியில் எடுக்கப்படவில்லை. இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. யாருக்காவது சந்தேகம் இருந்தால் எங்கள் நிர்வாகிகளிடம் கேட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்ட நாங்கள் தயார்.
இது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான துரோகம் ஆகும். இதனை இங்கே உள்ள பிற்படுத்தப்பட்ட ஜாதி சங்கங்கள் யாரும் கேட்கவில்லை. தாழ்த்தப்பட்டோர் அமைப்புக்களும் கேட்கவில்லை. நம்முடைய உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்காகத்தான் ஜாதி சங்கங்கள் இருக்க வேண்டுமே தவிர யார் பெரிய ஜாதி? யார் சின்ன ஜாதி? என்று போட்டியிடுவதற்கோää வெறுமனே திருமண தகவல் மையமாகவோ செயல்படுவதற்கோ நிர்வாகத்திடம் சின்னச்சின்ன சலுகைகள் பெறுவதற்காக ஜால்ரா போடுவதற்கோ அல்ல. இதற்கிடையில் ABCD சங்கம் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படுவதாகத் தெரிவித்திருப்பது யாரைத் திருப்திப்படுத்த என்று தெரியவில்லை. ஏற்கனவே ABCD சங்க பொதுச் செயலாளரிடம் ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். அப்படியிருந்தும் இத்தகவல் ஏன் பரப்பப்படுகிறதோ தெரியவில்லை.
நாங்கள் தெரிவித்துள்ள தகவல்கள் தவறு என்று யாராவது ஆதாரத்தோடு தெரிவித்தால் நாங்கள் எங்களுடைய கருத்துக்களை மாற்றிக் கொள்ளத்தயார். இந்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியவர்கள் திராவிடர் கழகத்தினர் என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைவரின் உரிமைகளையும் காக்கப் பாடுபடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக