Group III, IV பிரிவுகளில் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாம். புளகாங்கிதமடைந்து புல்லரித்துப்போய் எழுதியது BMS. கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன(?) சங்பரிவார் கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களான குஜராத்ää சத்தீஸ்கர்ää மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதுவரை அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மோடிக்கு அவ்வளவுதான் மரியாதை போல.
அது கிடக்கட்டும். நாம் கேட்ட கேள்வி என்னாச்சு? ஏன் BMS பதில் சொல்லவில்லை? அத்துடன் நமது நிறுவனம் ENGINERR,SUPERVISORநியமனம் செய்யும்போது அவர்களை நிரந்தர ஊழியர்களாக எடுக்கிறது. ஆனால் ARTISAN எடுக்கப்படும்போது அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிகம் என்று எடுத்து அதன்பிறகு அவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று நிர்வாகம் வேலைவாய்ப்புக் கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. இதுபற்றி உன் கொள்கை என்ன என்று கேட்டதற்கு ஏன் பதில் இல்லை?
இதுதான் மனுதர்மம் என்றால் அதற்கு பதில் சொல்ல கூசுவது ஏன்? நீங்கள் தொழிற்சங்கம் நடத்துவது தொழிலாளர்களுக்காக. அந்தத் தொழிலாளர்களைப் பாதிக்கும் கொள்கை முடிவுகள்பற்றி உன் கருத்து என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டாமா?
RSSன் கொள்கையே அதுதானே! பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு அடிமையாக்குவதுதானே RSSன் கொள்கை? குலத்தொழிலை நியாயப்படுத்த வேண்டும். அவரவரும் அவரவர் குலத்தொழிலை ஒழுங்காகச் செய்ய வேண்டும். செருப்புத் தைப்பவர் செருப்புத் தைக்க வேண்டும். துணி வெளுப்பவர் துணி வெளுக்க வேண்டும். மண்பாண்டம் செய்பவர் மண்பாண்டம் செய்ய வேண்டும். மீனவர் மீன் பிடிக்கவேண்டும். விவசாயி விவசாயம் மட்டும் செய்ய வேண்டும். நெசவாளி நெசவுத்தொழில் மட்டும் செய்ய வேண்டும். இவர்கள் பிள்ளைகள் எல்லாம் ஆரம்பக் கல்வியோடு நின்று விட வேண்டும். உயர் படிப்புப் படிக்கக் கூடாது. அரசுப் பதவிகளுக்குச் செல்ல ஆசைப்படக்கூடாது. நாட்டை ஆள ஆசைப்படக்கூடாது. பார்ப்பனர்கள் மட்டும் எந்த அத்தியாவசிய பணிகளையும் செய்யாமல் எல்லாவற்றையும் அனுபவிக்க வெண்டும். அவர்கள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும். அவர்கள் மட்டுமே உயர் படிப்புப் படித்து உயர் பதவிக்கு வரவேண்டும். அவர்களுக்கு மட்டுமே தகுதி திறமை இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தகுதி திறமை கிடையாது என்பவைதான் RSSன் கொள்கை. இதுதான் மனுதர்மமும் சொல்கிறது. அந்த மனுதர்மத்தை சட்டமாக ஆக்க வேண்டும் என்று சொல்லுவதுதான் டீஆளு. (இதற்கான ஆதாரம் BMSகொண்டாடும் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு என்ற நூல்)
அந்தக் காரணத்தினால்தான் பெல் நிர்வாகம் Engineer and Supervisor நியமனம் செய்யும்போது அவர்களை நிரந்தர ஊழியர்களாக எடுக்கிறது. ஆனால் ARTISAN எடுக்கப்படும்போது அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிகம் என்று எடுத்து அதன்பிறகு அவர்கள் நிரந்தரம் செய்கிறது. இது டீஆளு ன் கொள்கையோடு ஒத்துப் போகிறது. அதனால்தான் அக் கொள்கையை மறுத்து எந்த பதிலையும் BMS சொல்வதில்லை என்று குற்றம் சாட்டுகிறோம்.
மற்ற சங்கங்களெல்லாம் அதிகாரிகளுக்கு ஒரு நீதி. அதிக சலுகைள். தொழிலாளர்களுக்கு வேறு நீதி. சலுகைகள் குறைவு என்று சொன்னாலும் அந்தத் தொனியில் BMS இதுவரை பேசியதில்லை. அவர்கள் கொள்கையே அதிகார வர்க்கத்திற்கும் உயர்ஜாதி வர்ணத்திற்கும் சேவகம் செய்வதும் உழைக்கும் மக்களை அவர்களுக்கு அடிமையாக்குவதுதானே தவிர உழைக்கும் மக்களை உயர்த்துவது அல்ல.
இவர்களை நம்பி அந்த சங்கத்தின் பின்னால் செல்லும் உழைக்கும் இனமான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களே! உங்கள் நிலை என்ன? சிந்திப்பீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக