சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற தத்துவத்தை வலியுறுத்துவதுதான் இராமாயணமும் மகாபாரதமும். பிராமணனே வணங்கத்தக்க தெய்வம்@ யார் பிராமணனை தெய்வமாக வணங்குகிறார்களோ அவரைத்தான் எனக்குப் பிடிக்கும். பிராமணனை வெறுப்பவர்களை எனக்குப் பிடிக்காது என்று சொன்னவன் இராமன். சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளை நோக்கி தவம் இருந்ததற்காக அவனைத் தலையைச் சீவிக் கொன்றவன் இராமன். அந்தத் தத்துவத்தின் காரணமாகத்தான் இன்றளவும் ஒரு அர்ச்சகனாக பார்ப்பனரல்லாதார் யாரும் வர முடியவில்லை. இது இராமாயணம்.
ஏகலைவன் என்ற வேடன் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது “ஒரு சூத்திரனின் கடமை பிராமணää சத்திரியää வைசியர்களுக்கு தொண்டு செய்வதுதானே தவிர வில் வித்தை கற்றுக் கொள்வதல்ல” என்று கூறி அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர மறுத்தவர் துரோணாச்சாரி. அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது என்றால் வழங்குகின்றவர் மனதில் என்ன இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். இது மகாபாரதம்.
அந்த இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்புப் பாடமாக சேர்ப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுதான் இந்துத்துவா என்பது. இன்று இராமாயண மகாபாரதத்தை பாடமாக வைப்பார்கள். தொடர்ந்து இவர்கள் ஆட்சியிலிருந்தால் படிப்படியாக பார்ப்பனரல்லாதாரின் கல்வி வேலைவாய்ப்புக்களை தட்டிப் பறிப்பார்கள். அதற்கான அறிகுறியாகத்தான் மதுரையில் அமித்ஷா கலந்துகொண்ட மாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டே இட ஒதுக்கீடு வேண்டாம் என்று தீர்மானம் போட வைத்துள்ளார்கள். குஜராத்தில் பொருளாதாரத்தில் நன்கு முன்னேறியுள்ள பட்டேல் இனத்தவரைத் தூண்டிவிட்டு எங்களுக்கு இட ஒதுக்கிடு கொடு@ இல்லையேல் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் ரத்து செய் என்று முழக்கமிட வைத்துள்ளார்கள். அந்தப் போராட்டம் இட ஒதுக்கீட்டுக்கான ஆதரவுப் போராட்டம் கிடையாது. இட ஒதுக்கீட்டை அழித்தொழிக்கும் போராட்டமாகும். அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பிஜேபி இருக்கிறது. இதுதான் இந்தத்துவா என்பது.
அந்த இந்துத்துவா வினுடைய இன்னொரு விஷக்கொடுக்குத்தான் விஷ்வ கர்மா ஜெயந்தி என்பது. இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் புராணங்களிலும் வரக்கூடிய ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான் விஷ்வகர்மா என்பவன். அவனுடைய செயல்களாகச் சொல்லப்படுபவை எல்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் சம்மந்தமில்லாதவை. விருதுராசுரன் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்தான். ஒரு முனிவரின் விலா எலும்பை எடுத்து ஆயுதம் செய்துகொடுத்தான் விஷ்வகர்மா. அந்த ஆயுதத்தால் விருதுராசுரன் அழிக்கப்பட்டான் என்ற கதையை பிஎம்எஸ் காரர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அந்த விருதுராசுரன் விஷ்வகர்மாவினுடைய மகன் என்று கதை விடுவார்கள்.
இந்தக் கதை கொஞ்சமாவது அறிவுப் பூர்வமானவையா? அசுரன் என்பவன் யார்? தேவர் என்பவர்கள் யார்? அவர்கள் எந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள்? எங்கே வாழ்ந்தார்கள்? தேவர்கள் தேவாமிர்தம் சாப்பிட்டு சாகா வரம் பெற்றவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றதே! அந்த தேவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? என்ற பல கேள்விகள் எழுகின்றன.
இந்துத்துவாவினுடைய மறைமுக திட்டங்களில் இதுவும் ஒன்று. தொழிலாளர் மத்தியில் இதுபோன்ற கற்பனைக் கதைகளைச் சொல்லிக் குழப்பிவிட்டு மதவெறியைத் தூண்டி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை பார்ப்பனியத்துக்கு அடிமையாக்குவதுதான் இவர்களின் திட்டம். அதனால்தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் தன்மானத்துக்காகவும் தொண்ணூற்றைந்து வயதிலும் பாடுபட்ட தந்தை பெரியாரின் பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்து அன்றுதான் விஷ்வகர்மா பிறந்தான் என்ற விஷத்தை ஆர்எஸ்எஸ் கூட்டம் பரப்பி வருகிறது. அந்த விஷ நச்சரவத்தின் கொடும்பல்லை வேரோடு பிடுங்கி எறிய தமிழர்களே அனைவரும் ஒன்றிணைவோம். சமத்துவ சமுதாயத்தைப் படைப்போம் வாரீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக