வியாழன், 21 செப்டம்பர், 2017

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?  ஏனெனில்
1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
4) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
5) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
6) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
7) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
8) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
9) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
10) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
11) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
12) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
13) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
14) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
15) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
16) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
17) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
19) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
20) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
21) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
22) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
23) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
26) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது
27) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
28) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
29) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
30) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
31) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
32) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
33) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
34) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
35) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
36) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
37) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
38) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
39) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
40) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
41) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது
42) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது

53) அதுதான்  விவசாயம் பாவத் தொழில் என்றது
54) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது
55) அதுதான் என்னை பார்;ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது
56) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்கு. பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடித்தால் போதும் என்றது
57) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும்  சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது
58) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது
59) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது
60) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது
61) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது
62) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது
63) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது
64) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது
65) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது
66) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது
67) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது
68) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது
69) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது
70) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது
71) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சதுப்பு நிலத்தில் சிக்கிய பசுப்போல அழிந்துவிடும்
என்றது
72) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது
73) அதுதான் சூத்திரன் நீதி விசாரணை செய்யக் கூடாது என்றது
74) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது
75) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது
76) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது
77) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
78) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
79) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது
80) அதுதான் சாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது
81) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது
82) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது
83) அதுதான் சூத்திரன் சாமியாராக ஆக முடியாது என்றது
84) அதுதான் சாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது
85) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது
86) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது
87) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது
88) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது
89) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது
90) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கலியாணம் கருமாதி திதி தெவசம் கோயில் திருவிமா தேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது
91) அதுதான் சாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது
92) அதுதான் சாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது
93) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது
94) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது
95) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது
96) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது
97) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது
98) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது
99) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது
100) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது
இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. இவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.
இப்படிக்கு: மானமுள்ள சுயமரியாதைக்காரன்

வியாழன், 14 செப்டம்பர், 2017

கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் யார்?

ஆகஸ்ட்07
கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் யார்?

விவரங்கள்
எழுத்தாளர்: வாலாசா வல்லவன்
தாய்ப் பிரிவு: தலித் முரசு
பிரிவு: ஆகஸ்ட்07
 வெளியிடப்பட்டது: 03 மே 2010
இந்து மதம்
அம்பேத்கர்
கோயில் நுழைவுப் போராட்டம்இ வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பேசப்பட்டிருக்கிறது. இந்து மதத்தைப் பொறுத்தவரைஇ கோயில் கர்ப்பக்கிரகம்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளின் பிறப்பிடமாகஇ உற்பத்திக் கேந்திரமாக இன்றளவும் விளங்குகிறது. எனவேஇ பாகுபாட்டின் - தீண்டாமையின் தோற்றுவாயில் சமத்துவத்தைக் கோரும்போதுஇ அதில் வெற்றி பெறும்போதுஇ சமூகத்தின் பிற நிலைகளில் இயல்பாகவே சமத்துவம் மிளிரும். அதனால்தான் கடவுளை மறுத்த பெரியார்கூடஇ கோயில் நுழைவு மற்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். அர்ச்சகர் பதவிகளை ஜனநாயகப்படுத்துவது என்பதுஇ சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான முதற்படி என்பதே அம்பேத்கரின் கருத்துமாகும்.

தற்பொழுது கோயில் நுழைவுப் போராட்டங்களை பார்ப்பனர்களும்இ தேவர்களும் முன்னின்று நடத்தியதாக ஆதாரமின்றி கட்டுக் கதைகள் ("தினமணி' - 8.7.2007; இல. கணேசன் பேட்டி - "புதிய பார்வை'இ ஆகஸ்ட் 2007) வெளிவரத் தொடங்கியுள்ளன. எனவேஇ கோயில் நுழைவுப் போராட்டங்கள் தொடர்பான வரலாற்றுப் பின்னணியை உற்று நோக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில்இ கோயில் நுழைவுக்கான முயற்சி 1872களிலேயே தொடங்கிவிட்டது. இதை நாடார் சமூகம் முன்னின்று நடத்தியது. பார்ப்பனரல்லாதார் இயக்கம்இ நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம்இ 30.11.1917 அன்று நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தென்மண்டல மாநாட்டில்இ இந்து கோயில்களுக்குள் இந்து நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. "ஆதிதிராவிடர் பொது இடங்களில் நடப்பதைத் தடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; அதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும்' என எம்.சி. ராஜா 1921இல் கோரிக்கை வைத்தார்.

நீதிக்கட்சி அரசு 1925 இல் இயற்றிய இந்து அறநிலையத் துறைச் சட்டத்தின்படி நாடார்களும்இ ஆதிதிராவிடர்களும் கோயில்களில் அறங்காவலர் குழுவில் அங்கம் வகிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசில் வகுப்புரிமைக்காகப் போராடிஇ இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. திராவிடர் இயக்கத்தின் சார்பில் முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் ஜே.எஸ். கண்ணப்பர். திருவண்ணாமலை கோயிலில் 7.2.1927 அன்று அவர் கோயில் நுழைவு செய்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 30.4.1928 அன்று வழக்கு முடிவுற்றது. கோயில் குருக்கள் கண்ணப்பர் வரும்போது கதவை மூடிச் சென்றதால் ராமநாத சாஸ்திரிஇ குப்புசாமி குருக்கள் ஆகியவர்களுக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது; கண்ணப்பருக்கு ரூ. 100 இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது ("குடி அரசு' 6.5.28).

1929 ஏப்ரலில் குத்தூசி குருசாமி முயற்சியில் ஈரோடு ஈஸ்வரன் கோயிலில்இ கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வழக்கு நடத்திஇ சுயமரியாதை இயக்கத்தினர் வெற்றி பெற்றனர். 1929 மே 26 அன்று அண்ணல் அம்பேத்கர் தலைமையில் நாக்பூரில் சுயமரியாதை மாநாடுஇ உண்மை நாடுவோர் சங்கம் மூலம் நடத்தப்பட்டது. அம்பேத்கரை பற்றிய சிறப்பான அறிமுகத்துடன் அவருடைய தலைமை உரையை "ரிவோல்ட்' ஏடு (23.6.1929) வெளியிட்டது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 3.3.1930 அன்று நாசிக் காலாராம் கோயிலில் சத்தியாகிரகத்தை நடத்தினார். 500 பெண்கள் உள்பட 8இ000 பேர் இதில் பங்கேற்றனர். 2.5.1932 அன்று சென்னை ஆதிதிராவிடர் சங்கத்தை சேர்ந்தவர்கள்இ மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நுழைந்து பூசை செய்து வழிபட்டனர். அதே போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பண்டிதர் அயோத்திதாசர் மகன் பட்டாபிராமன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தனர். "ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை' என 3.5.32 "திராவிடன்' ஏடு எழுதியது.

இவ்வாறு எண்ணற்ற முயற்சிகள்இ சாதி ஒழிப்பையும்இ உரிமை வேட்கையையும் மய்யமாகக் கொண்டுஇ கோயில் நுழைவுப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

31.1.1933 அன்று டாக்டர் சுப்பராயன்இ சென்னை சட்டமன்றத்தில் கோயில் நுழைவு உரிமைக்கான சட்டவரைவு ஒன்றை கொண்டு வந்தார். அப்போது சுப்பராயன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. "சுப்பராயன் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால்இ நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இம்மசோதாவை கட் டாயம் ஆதரிக்க வேண்டும்' என்று மசோதா வரும் முன்பே பெரியார் எழுதினார் ("குடி அரசு' - 10.11.32). இம்மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் உட்படப் பலரும் பேசினர். நீதிக் கட்சியில் சிலர் ஆதரித்தனர்இ சிலர் நடுநிலை வகித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 56 வாக்குகளும் நடுநிலையாக 19 வாக்குகளும் பதிவாயின. எதிர்ப்பு என்பதே இல்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு வைசிராய் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால்இ இது சட்டமாக்கப்படவில்லை.

சுப்பராயன் மசோதாவிற்கு மாற்றாக ரங்க அய்யர் கோயில் நுழைவு மசோதா ஒன்று டெல்லி சட்டசபையில் (பார்லிமெண்ட்) 24.3.1933 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருந்தன. இதனால் இதை அம்பேத்கர் ஆதரிக்க மறுத்தார். காந்தி இதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜி.டி. பிர்லாஇ ராஜாஜிஇ தேவதாஸ் காந்தி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தார். 1935இல் தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இம்மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலேயே குழி தோண்டி புதைத்தனர்.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி 1937 தேர்தலில் தோல்வி கண்டது. 1937இல் ராஜாஜி முதல் அமைச்சரானார். எம்.சி. ராஜா அப்போது அவர்களுடன் இருந் தார். 15.8.1938 அன்று எம்.சி. ராஜா கோயில் நுழைவு மசோதா ஒன்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துஇ "டாக்டர் சுப்பராயன் மசோதாவிற்குஇ கவர்னர் ஜெனரல் ஒப்புதல் தரவில்லை. ரங்க அய்யர் மசோதா புதைக்கப்பட்டது. எனவேஇ கோவில் நுழைவு உரிமைக்காக நான் இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன்'' என்றார். முதல்வர் ராஜாஜிஇ "வேண்டாம் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார். எம்.சி. ராஜாஇ முடியாது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். உடனே ராஜாஜி இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிவிட்டு வாக்கெடுப்புக்கு விட்டார். இதற்கு 24 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 130 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோயில் நுழைவில் ராஜாஜியின் அக்கறையும்இ யோக்கியதை யும் இவ்வளவுதான்.

காங்கிரஸ் இயக்கம் 1885இல் தொடங் கப்பட்டது. 1916 வரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில்இ தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. 1917இல் அன்னி பெசன்ட் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்தான் தீண்டாதார் பிரச்சனை பற்றி பேசப்பட்டது. 1919க்குப் பிறகு காந்தி காங்கிரசை கைப்பற்றுகிறார். காந்தி வர்ணசிரம ஆதரவாளர்இ அழுத்தமான இந்து சனாதனிஇ வெளிவேடத்திற்கு தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசி வந்தவர்.

"தீண்டாதார்களுக்கு நான் கூறும் பொதுவான யோசனை என்னவென்றால்இ தீண்டாமை தீமை நடைமுறையில் இருக்கும் வரையில்இ அவர்கள் ஆலயப் பிரவேச உரிமையை சோதனை செய்து பார்க்க வேண்டாமென்பதுதான். கர்ப்பகிரகத்திற்குள் செல்லும்படி நான் யாருக்கும் யோசனை கூறியதே இல்லை'' ("யங் இந்தியா' - 8.12.1927).

யார் இந்த மதுரை வைத்தியநாத அய்யர்? 1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் நாடார்கள் கோவில் நுழைவு தீர்மானம் கொண்டு வந்தால்இ காங்கிரசை விட்டே விலகி விடுவேன் என மிரட்டி தீர்மானம் நிறைவேறாமல் செய்தவர். சேரன் மாதேவி குருகுலப் போராட்டத்தில்இ பார்ப்பன சிறுவர்களோடு மற்ற சாதிச் சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம் எனத் தீர்மானம் கொண்டு வந்தவுடன் காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து விலகியவர். இந்நிலையில்இ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார் என்ற கூற்றில் உண்மை இருக்க முடியுமா?

1939 சூலை 8 அன்று வைத்திய நாத அய்யர்இ அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் வருவதாகச் சொல்லிஇ குருக்களை இரவு இருக்கச் சொல்லியிருந்தார். இரவு 8.45 மணிக்கு 5 ஆதிதிராவிடர்களையும்இ ஒரு நாடாரையும் வைத்தியநாத அய்யர் (அய்ந்து ஆதிதிராவிடர்கள் : சுவாமி முருகானந்தம்இ பி. கக்கன்இ முத்துஇ சின்னையாஇ ஆர். பூவாலிங்கம்இ விருதுநகர் நகர மன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சண்முக நாடார்) அழைத்துச் சென்றார் (ஆதாரம் : "தமிழ் நாட்டில் காந்தி' பக். 624). அதற்குப் பிறகு வெளியில் வந்து "அரிசன ஆலயப் பிரவேசம்' நடந்துவிட்டதாக அறிவித்தார். இதை அறிந்த பட்டர்கள்இ கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றனர். அங்கு அறங்காவலராக இருந்த ஆர்.எஸ். நாயுடுஇ நீதிக் கட்சிக்காரர். எனவேஇ அவர் மறுநாள் பூட்டை உடைத்து கோயிலைத் திறந்து விட்டார். "இரவு 8.45 மணிக்கு மந்திரி வருகிறார் என்று சொல்லி கோயில் பட்டரை ஏமாற்றி கூட்டிக் கொண்டுஇ நிர்வாகி ஆர்.எஸ். நாயுடு வந்தார். அந்நேரம் பார்த்து கோயிலுக்குள் நுழைந்த வைத்தியநாதய்யரிடம் பட்டர் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு தீபாராதனை காண்பித்து விபூதி கொடுத்தார். அதன் பின்னரே அவருடன் வந்தவர்கள் - அய்ந்து பஞ்சமரும் ஒரு நாடாரும் எனத் தெரிந்தது என வர்ணாசிரம சங்கம் சார்பில் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது'' ("விடுதலை' - 13.7.1939).

கோயில் நுழைவை பகிரங்கமாக நடத்தும் நோக்கமும் துணிவுமின்றிஇ இரவு 8 மணிக்கு மேல் கோயில் நுழைவு நாடகமாடியதற்குக் காரணம் என்ன என்பதை பெரியார் விளக்குகிறார் : "தேர்தல் வந்ததுஇ கதவும் திறந்தது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதிற்கொண்டே வைத்தியநாதய்யர் நாடகமாடினார். இதுஇ ராஜாஜியின் சூழ்ச்சி. இதனால் ஆதிதிராவிடர்களுக்கு நிரந்தரப் பயன் எதுவும் இல்லை. செய்கிற சட்டத்தை ஒழுங்காகவும் நன்றாகவும் செய்ய வேண்டும் என பெரியார் வேண்டுகோள் விடுத்தார்'' ("விடுதலை'இ 12.7.1939).

நடேச அய்யர் தலைøமயில் வைதிகர் கள் கோயில் நுழைவை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இதிலிருந்து வைத்தியநாத அய்யரைக் காப்பாற்றவேஇ ராஜாஜி ஆலய நுழைவு அவசர சட்டம் ஒன்றை இயற்றினார். பின்பு அது சட்டமாக்கப்பட்டது. இதனால் அவர்கள் கைது செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர். இதைத்தான் வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம் என்று வி.கே. ஸ்தாது நாதன் 7.7.07 அன்று "தினமணியில்' எழுதியிருக்கிறார். இதைவிட ஒரு பெரிய மோசடி என்னவென்றால்இ 8.7.07 அன்று "தினமணி'யில் "மீனாட்சி அம்மன் கோயிலில் 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்' என்று ஒரு படத்தை வெளியிட்டுள்ளதுதான். உண்மையில் அந்தப்படம்இ ஆலயப் பிரவேசம் நடந்ததாக சொல்லப்படும்போது எடுக்கப்பட்ட படமல்ல. வேறு எங்கோ எடுக்கப்பட்ட படம் அது.

இதைவிட ஒரு பெரிய கொடுமைஇ விடுதலைச் சிறுத்தைகள் மண்ணுரிமை மாநாட்டில் இயற்றிய தீர்மானம். "காந்தியார் கோயில் நுழைவு நடத்தச் சொன்னதாகவும்இ வைத்தியநாத அய்யர் தலைமையில் அது நடந்ததாகவும்இ அவருடன் முத்துராமலிங்கத் தேவர் இருந்ததாகவும் - அதனால் அந்த நாளில் கோயில் நுழைவை நடத்த வேண்டும்' என்றும் "நமது தமிழ்மண்' (சூலை 2007) தலையங்கம் கூறுகிறது. இந்த கோயில் நுழைவுப் போராட்டம் நடந்த காலத்தில் முத்துராமலிங்கத் தேவர் சட்டமன்ற உறுப் பினர். அவர் அதில் கலந்து கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்இ சத்தியமூர்த்தி அய்யரின் ஆதரவாளர். போராட்டம் நடத்திய வைத்திய நாத அய்யரோ ராஜாஜியின் சீடர். காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் இருந்த நேரம் அது. வைத்திய நாதய்யரே கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தவில்லை என்னும்போதுஇ அதில் முத்துராமலிங்கத்திற்கு இடமேது?

அண்ணல் அம்பேத்கரின் காலாராம் கோயில் போராட்டமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறியீடாக இருக்க முடியும். சாதி இந்துக்கள் நடத்தாத ஒரு போராட்டத்தைக் கொண்டாடுவதுஇ வரலாற்றை முன்மொழிவதாகாது; வரலாற்றைப் பிழையாக
மொழிவதிலேயே அது முடியும்.

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு


 வெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2014
திராவிடம்
நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட்டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்றுஉண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சிலநாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தநாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளியிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்துசெய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றைஆதாரங்களுடன் விளக்கிஇ மேட்டூர் கழகத் தோழர் மே. கா. கிட்டுஇ ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார்.

‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக்கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவுசெய்கிறது. கடந்த 08. 07. 2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி. கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலயபிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட்டிருந்தீர்கள். அதில்இ “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதிமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சகோதரர்கள் நால்வருடனும் அந்நாளில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்களுடனும் வைத்தியநாத ஐயர் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்து சாமி தரிசனம்செய்தார்” என்று எழுதியுள்ளார் கட்டுரையாளர்.

இப்பொழுது மட்டுமல்லஇ 23. 02. 1997 ஆம் ஆண்டு‘தினமணி’யில் “ஆலயப் பிரவேசத்தின் முன்னோடி”என்ற தலைப்பிலும் மதுரை மீனாட்சியம்மன்கோவிலில் நடந்ததுதான் முதல் கோவில் நுழைவுப்போராட்டம் என்றும்இ போராட்டத்தின் முன்னோடிவைத்தியநாதர் அய்யர் என்றும் எழுதியிருந்தார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் பற்றியஉண்மைகளைத் தெரிந்தே திட்டமிட்டு மறுத்து வி. கே. ஸ்தாணுநாதனால் எழுதப்பட்ட கட்டுரைக்குமறுப்புத் தெரிவித்து உண்மையான வரலாற்றை எழுதிஇ கடிதமாக பெரியாரியக்கத் தோழர்கள் அனுப்பினார்கள்.

மறுப்புக் கட்டுரையை ‘தினமணி’ நாளேடு வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாசகர் கடிதம் பகுதியிலும்கூட மறுப்பை வெளியிடவில்லை. மீண்டும் ‘தினமணி’ 08. 06. 2005 இல் அதே ஸ்தாணுநாதன் எழுதிய “வரலாறு படைத்த நிகழ்ச்சி” என்ற கட்டுரையில் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிப் பற்றிய செய்தியை வெளியிட்டது. முன்பு எழுதிய கட்டுரையில் இருந்த அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலேயே அந்தக் கட்டுரையும் அமைந்திருந்தது. இதையெல்லாம் மறுத்து பெரியாரியக்கத் தோழர்களால் 2005 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பெரியார் பாசறை வெளியீட்டின் மூலம் குத்தூசி குருசாமி நூற்றாண்டு நினைவாக ஒரு சிறு நூலையும் வெளியிட்டார்கள்.

கட்டுரையாளரின் பொய் வரலாறு ‘தினமணி’யிலிருந்து ‘தினத்தந்தி’க்கு மாறியிருக்கிறது அவ்வளவுதான். தொடர்ந்து ஒரே பொய் வரலாற்றை மாறி மாறி எழுதுகிறார். ஈழத் தமிழர் வரலாற்றை பிரசுரித்து அதை நீங்கள் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளீர்கள். இங்குள்ள தமிழர்களின் வரலாற்றை தவறாக உங்கள் இதழ்களில் இனிமேலும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இதை பிரசுரிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

• சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01. 1926 இல்கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத்தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07. 02. 1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும்மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமுன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர். மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (‘கேசரி’ 71இ 73 ஐசளஉhமைஇ 339)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் தலைமையில்1927இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழை வாயிலையும்கருவறையையும் கோவில் நிர்வாகிகள்பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள்சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25. 06. 1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும்12. 08. 1928இல் திருவானைக்கோவிலிலும்அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

•தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர்காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு - பொதுஉரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதி திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரதேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளேபெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமிஇ பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன்இ மஞ்சமேட்டான் மகன் பசுபதிஇ கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய்இ பழம்இ பூ ஆகியவை அடங்கியதட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள்இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர்.

இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்கமறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன்இ பசுபதிஇகருப்பன் ஆகியோருக்கு ரூ. 60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டிஇ ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர்ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்றுபாராட்டி எழுதியது.

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடுநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும்இ காரைக்குடியில் சொ. முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும்இ திருவல்லிக்கேணி பார்த்தசாரதிஇ மயிலை கபாலீசுவரர் கோவில்களில்‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன்இ பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும்இ ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல்டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவுமசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939 ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது?
யார் இந்த வைத்தியநாத அய்யர்?

வைத்தியநாத அய்யர்இ திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் (1922) பெரியார் கொண்டு வந்த தீண்டப்படாதார் கோவில் நுழைவுத் தீர்மானத்தைஎதிர்த்தவர். இதை திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இவர் நடத்திய ஆலயப்பிரவேசம்இ அன்று நடக்கவிருந்த மதுரைஇஇராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

கோவிலில் யாருக்கும் தெரியாமல்இ இரவு நேர கடைசிபூஜைக்குப் பிறகுஇ சில தாழ்த்தப்பட்டவர்களுடன் உள்ளே நுழைந்தார். இதற்கு உறுதுணையாக இருந்ததோடு கருவறையை பூட்டிவிட்டு ஓடிய பார்ப்பனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தவர்இ கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். எஸ். நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரர். வரலாற்றுப் பிழையான கட்டுரைக்கு வரலாற்று ஆதாரங்களோடு எழுதியுள்ளேன்.

தமிழ் தமிழ்நாடு தமிழனுக்காக பத்திரிகை நடத்துபவராகிய நீங்கள் தமிழனுடைய வரலாற்றைத் தவறாகப் பிரசுரித்ததற்காக அந்த களங்கத்தைத் துடைக்கும் வண்ணம் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கழகத் தோழர் மே.கா.கிட்டு ‘தினத்தந்தி’ ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இந்து சமயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சமய இலக்கியங்களும் சான்று பகர்கின்றனவா?


தி இந்து

08 Jul 2015

பி.எஸ். சந்திரபிரபு



இந்து சமயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சமய இலக்கியங்களும் சான்று பகர்கின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயப் பிரவேச நிகழ்வு நடைபெற்று இன்று ஜூலை 8-ல் 76 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இந்த ஆலயப் பிரவேசம் நடைபெறுவதற்கு முன்னதாக இதேபோன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் நடைபெற்றது.

அதாவதுஇ திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சி.பி.ராமசாமி அய்யரின் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் அப்போதைய மன்னர் சித்திரைத் திருநாள் என்ற பலராம வர்மா தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த சுமார் 2இ000-த்துக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை 1936 நவம்பர் 12-ம் நாள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிட ஆணையிட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் என்பது ஒரு தனிப்பட்ட மன்னராட்சியின்கீழ் செயல்பட்டு வந்த ஒரு நாடு. தனது நாடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு உத்தரவையும் தடையின்றிப் பிறப்பிக்க மன்னருக்கு அதிகாரமிருந்தது. ஆனால்இ மதுரை அப்படியல்ல. இது பலம் பொருந்திய ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. இங்கு எந்த ஒரு செயலையும் குறிப்பாக சமூகம்இ சமயம் போன்ற காரியங்களில் எதையும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது. வலிமையான சட்டங்கள்இ அதிகாரமிக்க நீதிமன்றங்கள்இ திறமையான நிர்வாகம் என எல்லாமும் ஆங்கிலேயரிடம் இருந்துவந்தன. இச்சூழ்நிலையில்இ காந்தியடிகளின் தலைமையின் கீழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களும் நடைபெற்றுவந்தன. ஆங்கிலேயர்கள் மிக விழிப்புடன் நிலைமையைக் கையாண்டுவந்தனர்.

‘யங் இண்டியா’-வில் தீண்டாமை ஒழிப்பு

1932-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புணே ஒப்பந்தத்துக்குப் பிறகுஇ அகில இந்திய ஹரிஜன சேவக சங்கம் ஆரம்பிக்கப்பட்டுஇ காந்தியடிகளின் வழிநடத்துதலின்பேரில்இ தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றப் பணிகள் தேசம் முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்றுவந்தன. இதில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய இடம்பெற்றது. தீண்டாமை ஒழிப்பின் அவசியம்பற்றி ஆரம்பம் முதலே தனது ‘யங் இண்டியா’ பத்திரிகையில் காந்தி ஏராளமாக எழுதிவந்தார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இழைக்கப்பட்டுவந்தஇ பல சமூகக் கொடுமைகளைத் தாங்கிக்

கொண்டிருந்தவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட உறுதிபூண்டார். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக முன்னேற்றத் திட்டங்கள் நடைபெறச் செய்தார். அத்திட்டங்களில் ஒன்றுதான்இ ஆலய நுழைவுப் போராட்டம்.

அய்யருக்கு ஆசான் ராஜாஜி

தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட ஹரிஜன முன்னேற்ற வேலைகளுக்குத் தலைமை ஏற்குமாறு மதுரை அ. வைத்தியநாத அய்யரை காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். காந்தியடிகளின் வேண்டுகோளைச் சிரமேற்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரும் பாடுபடலானார்.

வழக்கறிஞர் தொழில் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும் தனது பணிகளுக்காகச் செலவு செய்தார். 1934-ல் ஹரிஜன நல நிதி திரட்டுவதற்காக காந்தியடிகள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டபோதுஇ அதிகப்படியான நிதி வசூல் கிடைப்பதற்குப் பாடுபட்டார். தீண்டாமை ஒழிப்புப் பணியில் அய்யருக்கு ஆசானாக விளங்கியவர் ராஜாஜி.

சமய இலக்கிய மேற்கோள்கள்

தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார் காந்தியடிகள். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கான வேலைகளைத் திறம்படச் செய்து காந்தியடிகளின் நன்மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனஇ இவ்விரு தலைவர்களும் விரும்பினார்கள். இதன் வெளிப்பாடாக அமைந்ததுதான் தமிழ்நாட்டில் ஆலய நுழைவுப் போராட்டம்.

தீண்டாமை ஒழிப்பு வேலைகளின் ஒரு அங்கம் ஆலய நுழைவுப் போராட்டம். ஆலய நுழைவு உரிமை வேண்டி சில ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதற்கு முன்பும் பல போராட்டங்களை நடத்தியிருந்தன. அப்போராட்டங்கள் கலவரங்களிலும் தோல்விகளிலும்தான் முடிந்தன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான்இ மக்கள் ஆதரவுபெற்ற இயக்கத்தின் மூலமாகத்தான் சமூகப் புரட்சியை ஏற்படுத்த முடியுமென ராஜாஜியும் அய்யரும் எண்ணினார்கள். ஆலய நுழைவுப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார்கள். அனைத்துச் சமூகங்களையும் இப்போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தார்கள்.

கோயில் நகரங்களில் தெருத் தெருவாகச் சென்று அய்யர் பிரச்சாரம் செய்தார். இந்து சமயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதைச் சமய இலக்கியங்களை மேற்கோள்காட்டி வாதாடினார். சர்தார் வல்லபபாய் பட்டேல் உட்பட பல தேசத் தலைவர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். பொதுமக்களின் ஆதரவைத் திரட்டினார். எல்லா நகரசபைகளிலும் ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அப்போதைய மாகாண முதலமைச்சரான ராஜாஜி அய்யரை இயக்கினார். அய்யரும் இயங்கினார். சமூகம்இ சட்டம்இ நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்துஇ இவ்விரு தலைவர்களும் செயல்பட்டனர். ஏனெனில்இ இப்போராட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பும் நிலவிவந்தது. நில மானிய முறைக்கு ஆதரவான மனோபாவம் கொண்ட சிலர்இ தாழ்த்தப்பட்ட மக்கள் சம உரிமை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர்.

நடேச அய்யரின் எதிர்ப்பு

சனாதனிகளின் தலைவரான மதுரையைச் சார்ந்த ‘லா பாயிண்ட்’ நடேச அய்யர் ஆலய நுழைவுப் போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இந்தப் போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தருணத்தில் ராஜாஜியும் அய்யரும் உலக சூழ்நிலைகளை நன்கு அலசி ஆராய்ந்து நிதானமாக யோசித்துஇ ஒரு முடிவை மேற்கொண்டனர்.

அதன்படி 1939 ஜூலை 8-ம் நாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன்இ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் அழைத்துக்கொண்டுஇ அய்யர் தனது தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்துவைத்தார். இது ஒரு ‘மிராக்கிள்’ (அதிசயம்) என்று அய்யரைப் பாராட்டி காந்தி கடிதம் எழுதினார்.

அஹிம்சை முறையில் நடத்தப்பட்ட ‘செயற்கரிய செயல்’ இது. இதற்காக ராஜாஜியும் அய்யரும் பட்ட பாடுகள்இ அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம். இத்தருணத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தி யாதெனில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆதரித்தார்கள்.

ராஜாஜி போன்ற தலைவர்கள் நல்லதுதான் செய்வார்கள் என ஆங்கிலேயர்கள் நம்பினார்கள். ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவான சட்டங்கள்இ சென்னை மாகாண சட்டமன்றத்தில் இயற்றப்பட்டபோதுஇ மாநில ஆளுநரும்இ மத்திய தலைமை ஆளுநரும் உடனடியாகத் தங்களது ஒப்புதல்களைத் தெரிவித்தார்கள்.

‘அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் ஆணை உச்ச நீதிமன்றத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது’ செயல்படுத்தத் தலைவர்கள் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கிறபோதுஇ ராஜாஜியும் அய்யரும் மிக உயர்வான இடத்தில் வைக்கப்பட்டு போற்றப்பட வேண்டியவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்!

- பி.எஸ். சந்திரபிரபு பேராசிரியர்
‘அமரர் அ. வைத்தியநாத அய்யர்’
‘மதுரை காந்தி: என்.எம்.ஆர்.சுப்பராமன்’ முதலான நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: pளஉhயனெசயிசயடிhர@லயாழழ.உழஅ