சனி, 30 டிசம்பர், 2017

சங்கரராமனைக் கொன்றது மனு விதிகளின்படி சரியானது


காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சுப்பிரமணிய சங்கராச்சாரிää தனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனை பட்டப்பகலில் ஆள் வைத்துக் கொலை செய்தார் .
இந்த நாட்டில் அரசு காவல்துறை நீதிமன்றங்கள் அனைத்தும் இருந்தும் ஒரு பார்ப்பான் எப்படித் துணிச்சலாகக் கொலை செய்தான் என்று என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு குழப்பம் இருந்து வந்தது.
அந்தணன் அரசனுக்கும் மேலே என்று இதே சங்கராச்சாரி ஒரு விழாவில் பேசியதும் எனக்கு நினைவில் வந்தது. அந்தணர் என்போர் அறவோர் என்ற திருக்குறள்படி அவர்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு உள்ளவர்கள் என்று கருதிக் கொண்டிருந்தேன்.
அந்தக் குழப்பத்துக்கெல்லாம் இப்பொழுது விடை கிடைத்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய கட்டுரைகள
் ~பார்ப்பனீயத்தின் வெற்றி| என்ற நூலாகத் தொகுக்குப்பட்டுள்ளது.
அந்த நூலை நான் படித்துக் கொண்டிருந்த போது அந்தக் குழப்பத்திற்கு எனக்கு விடை கிடைத்தது.
அதில் மனுதர்மத்தில் உள்ள சுலோகங்கள் எப்படி பார்ப்பனருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அண்ணல் அவர்கள் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
அதாவது
“சட்டமறிந்த பார்ப்பனன் மன்னனிடம் எந்த வழக்கையும் கொண்டு செல்ல வேண்டியதில்லை. தன் சொந்த அதிகாரத்தின் மூலம் தன்னைத் தொல்லைப் படுத்திய எவரையும் தண்டிக்கலாம்”
மனு அத்தியாயம் 11. சுலோகம் 31
“ மற்றவர்களை நம்பியுள்ள அரசனின் பலத்தைக் காட்டிலும்ää தன்னையே நம்பியுள்ள பார்ப்பனனின் பலம் வலிமையானது. ஆகவே ஒரு பார்ப்பனன் தன் எதிரிகளைத் தானே பணிய வைக்கலாம்.”
மனு அத்தியாயம் 11. சுலோகம் 32
“ ஒரு பார்ப்பனன் மூவுலகத்தில் இருக்கும் மக்களைக் கொன்றாலும் கூட ரிக்ää யசுர் அல்லது சாம வேதங்களையும் உபநிடதங்களையும் மூன்று முறை பாராயணம் செய்தால் அனைத்துப் பாவங்களில் இருந்தும் முற்றிலும் விடுவிக்கப்படுவான்”
மனு அத்தியாயம் 11. சுலோகம் 261-62
இவ்வளவ தெளிவாக ஒரு பார்ப்பனனுக்கு அதிகாரத்தை மனு தர்மம் வழங்கியிருக்கும் போது சங்கராச்சாரி தனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனைக் கொன்றது மனு விதிகளின்படி சரியானதுதானே!
காந்தியைக் கொலை செய்த கோட்ஷேவும் அதைத்தானே செய்தான்.
அதனால்தான் மனுதர்மத்தை நம்புகின்ற சுப்பிரமணிய சாமி இராமகோபலன் வெங்கட்ராமன்ää சோ அய்யர் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பனர்களும் சங்கராச்சாரியைக் கைது செய்தபோது கண்டித்தார்கள்.
ஏனெனில் அவர்கள் மனுதர்மத்தை நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள்.
இப்பொழுது பிஜேபி ஆர்எஸ்எஸ் அட்சி அமைந்துள்ளது. அவர்கள் மனுதர்மத்தை நம்புகிறவர்கள். அதனை அமுல்படுத்த வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள்.
இனிமேல் இதுபோன்ற தர்மங்கள் நிலைநாட்டப்படலாம் என்று எதிர் பார்ப்போமாக!

சனி, 16 டிசம்பர், 2017

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி பற்றி அர்த்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்குதாம்
நமக்கு அர்த்த சாஸ்திரம் தெரியாது

ஆனால் மனுதர்ம சாஸ்திரத்தில் வரி பற்றி என்ன சொல்லி இருக்குதுன்னு தெரியும்

இந்த மனுதர்மம் அர்த்த சாஸ்திரத்தின் அடுத்த நிலை
இதோ அத்தியாயம் 7 சுலோகம் 137

“காய்கறி முதலானவைகளைத் தன் தேசத்தில் விற்றப் பிழைக்கிற ஏழைகளிடத்தில் வருஷத்திற்கொரு தரம் சொற்பப் பொருளை அரசன் தீர்வையாக வாங்கிக் கொள்ள வேண்டியது”

என்று ஏழைகளிடத்தில் கூட இரக்கமில்லாமல் வரி வசூலிக்கலாம் என்று சொல்லும் மனுதர்மம் அத்தியாயம் 133ல் என்ன சொல்கிறது தெரியுமா?

“ அரசன் எளியவனாக இருந்தாலும் (அதாவது வருமானம் இல்லாமல் கஜானா காலியாக இருந்தாலும்) வேதமோதின பிராமண சிரேஷ்டனிடத்தில் ஒருபோதும் தீர்வை வாங்கக் கூடாது. அந்தப் பிராமணனும் தன் தேசத்தில் பசியினால் துன்பப் படக்கூடாது”  என்று சொல்கிறது

அத்தியாயம் 134 இவ்வாறு சொல்கிறது

“ எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதினவன் சாப்பாட்டுக்கில்லாமல் பசியினால் துன்பப் படுகிறானோ அந்த அரசன் தேசம் முழுவதும்  சீக்கிரத்திலேயே துன்பப்பட்டு அழிந்துபோகும்” என்கிறது

அதாவது நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் பட்டினி  கிடக்கலாம். பார்ப்பான் மட்டும் பட்டினி கிடந்தால் அந்த தேசம் அழிந்துவிடும் என்கிறது.

இந்த மனுதர்மத்தை ஆர்எஸ்எஸ் சட்டமாக்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறது தெரியுமா?

இதற்குத்தான் அர்ஜூன் சொம்பத்துகளும் தமிழிசைகளும் கிச்சாசாமிகளும் லாலி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத் தில் வரலாற்றுப் பிரிவு முதுகலை பயில்வோருக்கான தேர்வுகள் சமீபத் தில் நடந்துள்ளன. அதில் தற்போதைய நிகழ்வுகளை ஒட்டி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன  உலக மயமாக்கலின் முன்னோடி மனுதர்மத்தை எழுதிய மனு என ஒரு கட்டுரை எழுதவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான பதில் இதுதான்

உலக மயம் என்றாலும் தேசிய மயம் என்றாலும் பார்ப்பன மயம்தான்

மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 100 இவ்வாறு கூறுகிறது

"உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் பிராமணர்களுக்கே சொந்தம். பிராமணனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவன் ஆகிறான்"

அதே அத்தியாயம் சுலோகம் 101 இவ்வாறு கூறுகிறது

“பிராமணன் தனது சொந்த உணவையே உண்கிறான். தனது சொந்த உடையையே அணிகிறான். தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறான். மற்ற மனிதர்கள் பிராமணனின் கருணையின் மூலமாகவே வாழ்கிறார்கள்”

அத்தியாயம் 8 சுலோகம் 417 இவ்வாறு கூறுகிறது

“ஒரு பிராமணன் உயிர் வாழ்வதற்கு வழியில்லாமல் கஷ்டநிலையில் இருந்தால் அவன் தயக்கமில்லாமல் சூத்திரன் பொருட்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம்” என்கிறது

இதுதான் உலகமயத்தைப் பற்றி மனுதர்மம் கூறும் விளக்கமாகும்

உலகமயம் என்றால் அனைத்தும் பார்ப்பன மயமே.

இதை ஒரு ஆர்எஸ்எஸ் காரன் திருத்தினால் முழு மதிப்பெண் கொடுப்பான்
நீங்க எவ்வளவு கொடுப்பீங்க?

ராமர் பாலத்த யாரோ விஞ்சானிகள் கண்டுபிடித்து விட்டதாகக ;கதை விடும் கபோதிகளே

அப்படியே இந்தப் பால்கடல் எங்க இருக்குது என்பதையும் கண்டுபிடித்துச் சொன்னீங்கன்னா பால் பிரச்சினைக்கு தீர்வு வரும் கண்டு பிடிப்பீங்களா?

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

facebook

ஒரு காலத்தில் நந்தனைத் தீ வைத்துக் கொளுத்தினான்
இன்று பார்ப்பான் தன்னைத் தானே கொளுத்திக் கொள்வேன் என்கிறான்
இதுதான் பெரியார் அம்பேத்கருக்குக் கிடைத்த வெற்றி
மனுதர்மக் காலமாக இருந்தால் இந்நேரம் திருமாவைக் கொளுத்தியிருப்பான்

பவுத்தத்தை ஒழித்து விட்டு பார்ப்பனியத்தை நிலைநாட்டியதற்கான ஆதாரம் வேண்டுமா? எச்ச ரசாவே இதோ ஆதாரம்
புஷ்யமித்திர சுங்கன் ஆட்சிக்கு வந்தபின் புத்த சமயத்தையும் பௌத்தர்களையும் ஒழித்துக் கட்டுவதற்கு மிகக் கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டான் என்பதற்குச் சான்று உள்ளது
புத்த மதத்துக்கெதிராக புஷ்யமித்திரன் மேற்கொண்ட ஒடுக்குமுறை எவ்வளவு இரக்கமற்றதாக இருந்தது என்பதைப் பவுத்த பிக்குகளுக்கு எதிராக அவன் வெளியிட்ட அறிவிப்பிலிருந்து காண முடியும்.
அந்த அறிவிப்பில் புஷ்யமித்திரன் ஒவ்வொரு பவுத்த பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்தான்
என்று அண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார்
பார்ப்பணியத்தின் வெற்றி என்ற நூலில்
அண்ணலின் பேச்சும் எழுத்தும் தொகுதி 7 பக்கம் 163
இதற்கு என்ன சொல்கிறாய் எச்சயே?

பவுத்த மதம் தோன்றியது இந்தியாவில்
உலகிலேயே மூன்றாவது பெரிய மதமாக இருக்கும் பவுத்தம் ஏன் இந்தியாவில் இல்லை?
பார்ப்பனர்கள் பவுத்தத்தை அழித்தார்கள்
பவுத்த பிக்குகளைக் கொன்றார்கள்
பவுத்த விகார்களை இடித்தார்கள்
அதனால்தான் அந்த மதம் இந்தியாவில் அழிக்கப்பட்டது
அதற்குப் பழி வாங்க நினைத்தால் நாட்டில் ஒரு பார்ப்பான் தப்புவானா?

அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று கூறும் காவிகளே!
அவர்தாண்டா
பவுத்த பிக்குகளை பார்ப்பனர்கள் கொன்றார்கள் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்
அவரது கருத்தை மறுத்து விட்டு அப்புறம் வாங்கடா திருமாவிடமும் எங்களிடமும்

பவுத்த கோயிலகள் இடிக்கப்பட்டுத்தான் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன என்பதற்கு ஆதாரம் உண்டா?
எச்சராசா
ராமன் கோயிலை இடிச்சுப்புட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு முதலில் ஆதாரம் கொடுடா எச்ச


திருமாவளவன் தலையை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு
இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத்
அவனிடம் ஒரு கோடி எப்படி வந்தது என்று கண்டு பிடித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா?


திருமாவளவன்மீது வன்முறை தூண்டும் பேச்சு...!
கழகத் தலைவர் ஆசிரியர் கி. #வீரமணி
கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். #திருமாவளவன் கடந்த 6 ஆம் தேதி அண்ணல் #அம்பேத்கர் நினைவு நாளில் பேசிய பேச்சை திசை திருப்பும் வகையில் கருத்துத் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும், தலைக்கு விலை என்றெல்லாம் காவிகள் கூச்சலிடுகின்றனர். திருமாவளவன் அவர்கள் ‘நான் என்ன பேசினேன்...?’
என்பதற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.
பவுத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. திருப்பதி கோயிலிலிருந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில் என்று நீண்ட பட்டியலே உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘‘பவுத்தமும் தமிழும்'' எனும் ஆய்வு நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்.
இதற்கு முன் சில இடங்களில் அவர்மீது வன்முறை ஏவப்பட்டுள்ளது. அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்டத்திற்கு காவிகள் தாவியுள்ளனர்.
மிரட்டல், உருட்டல் கண்டு அஞ்சக் கூடியவர் அல்லர் மானமிகு திருமாவளவன் அவர்கள். அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை!
‘‘புலி வாலை மிதிக்க வேண்டாம்'' என்ற சொலவடை உண்டு; அதற்குப் பதிலாக ‘‘சிறுத்தைகளின் வாலை மிதிக்க ஆசைப்படாதீர்’’ என்று எச்சரிக்கிறோம்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.12.2017
பவுத்த சாம்ராஜ்யத்தை ஏன் அழித்தார்கள் பார்ப்பனர்கள் தெரியுமா?
அங்கே சூத்திரர்களும் பெண்களும் கல்வி கற்றிருந்தார்கள்
அதனால் அழித்தார்கள்
நாம் படிப்பது அவர்களுக்குப் பிடிக்காது
அண்ணல்அம்பேத்கர்

சம்பூகன்

அன்று சம்பூகன் தலையை வெட்டி வா என்று பார்ப்பான் கட்டளையிட்டான் ராமனுக்கு
அந்த முட்டாளும் சம்பூகனை வெட்டிக் கொன்றான்
அந்த ராமனைப் போன்ற ஒரு முட்டாளை ஆட்சியில் அமர்த்தி தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டுவதுதான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பார்ப்பனக் கூட்டத்தின் திட்டம்
ராமஜெயம் என்றால் அங்கே பார்ப்பானுக்குத்தான் ஜெயம்
பார்ப்பனரல்லாதாருக்குத் தோல்வி
இது ராமசாமிப்பெரியாரின் காலம்
அம்பேத்கரின் சகாப்தம்
இனி ராமனுக்கு ஒரு போதும் ஜெயம் உண்டாகாது

திங்கள், 4 டிசம்பர், 2017

தலைவராகவும் - தந்தையாகவும்... - ‘பெல்’ ஆறுமுகம்

விடுதலை ஆசிரியர் பிறந்தநாள் மலரில் இடம்பெற்ற எனது கட்டுரை


தலைவராகவும் - தந்தையாகவும்... - ‘பெல்’ ஆறுமுகம்



நான் பதின்மூன்று வயதிலிருந்து தந்தை பெரியார் கொள்கையால் கவரப்பட்டு இந்த இயக் கத்தைப் பின்பற்றி வருகிறேன். பெல் நிறுவனத்தில் பணியில் சேரந்து திராவிடர் தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராகி 1992இல்  அதன் செயலா ளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் கொள்கை சார்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். பெல் நிர்வாகத்தில் பல கோரிக்கைகளை வைத்து அதற்காகப் போராடி வந்தோம். 1992இல் நிர்வாகத்திடம் பெல் நிறுவனம் வருவதற்குக் காரணமான பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்தினை நிர்வாகக் கட்டடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதற்கு நெறிமுறை (றிஸிளிஜிளிசிளிலி) கிடையாது என்று கூறி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனைத் தமிழர் தலைவர் அவர்களிடம் தெரிவித்த போது நிர்வாகத்தினுடைய இந்தப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. அதனை எதிர்த்து கழகத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தாரகள். அந்த ஆரப்பாட்டத்தின் விளைவாக பெல் நிர்வாகம் நிறுவனத்தின் நிர்வாக வளாக கட்டடத்தில் பெருந் தலைவர் காமராசர் படம் இன்றுவரை கம்பீரமாக அலங்கரித்துக் கொண் டிருக்கிறது.

அடுத்து 2000 ஆவது ஆண்டில் ஒரு நிகழ்வு. பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் தொழிற் சங்கங்கள் எல்லாம் தொழிலாளர் தினமான மே நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ்சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் மாத்திரம் மே நாளை என்பது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்நியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டது என்று அதனைக் கொண்டாடாமல் இருப்பதோடு விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்று கொண்டாடியது. அந்த விஸ்வ கர்மா ஜெயந்தி எது என்றால் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 தான் என்று கூறி அந்த நாளில் இது பெரியார் பிறந்ததால் பெருமைக் குரிய நாள் அல்ல; விஸ்வகர்மா ஜெயந்தி என்ப தால்தான் பெருமைக்குரியது எனக் கூறி பெரியார் பிறந்தநாளின் சிறப்பைக் குலைக்க ஆரம்பித்தது. அத்துடன் தங்கள் சங்கத்துக்கும்இ ஆர்எஸ் எஸ்சுக்கும் - தங்கள் சங்கத்துக்கும்இ பிஜேபிக்கும் தொடர்பு இல்லை என்று கூறி தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது. இதனைத் தமிழர் தலைவர அவர்களிடம் எடுத்துக் கூறி மே நாளைக் கொண் டாட்டத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அவர்களும் அதில் வந்து கலந்து கொண்டாரகள். 

அந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ்.இ சங்க் பரிவார் இயக்கத் துக்கு எதிரான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து காவிக் கூட்டத்துக்கு எதிராக அனைவரையும் பேச வைத்தோம். இதனைத் தமிழர் தலைவர் அவர்கள் வெகுவாகப் பாராட்டி யதோடு நம் இயக்கத்தவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இது உதாரணமாகத் திகழ்கிறது என்று மே இரண்டாம் தேதி நடைபெற்ற சிதம்பரம் பொதுக்குழுவில் பாராட்டினார்கள். பொதுக் குழுவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் கரவொலி எழுப்பி அதனைப் பாராட்டினார்கள். ஓட்டு மொத்த இயக்கத்தி னரையும் எங்களைப் பாராட்ட வைத்த தமிழர் தலைவர் என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

அதேபோல் 2002இ 2003இ 2004ஆம் ஆண்டு களில் திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற பொறியாளர் நியமனங்களில் தமிழர்கள் யாருமே நியமிக்கப்படாமல் முழுக்க பிற மாநிலத்தவர் களையே நியமித்து வந்தனர். 

அந்தப் பணி நியமனத்தை எதிர்த்து திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக துண்டறிக்கை வெளியிட் டோம். அந்தத் துண்டறிக்கையினையும்இ மூன்று ஆண்டுகளில் பணிநியமனம் பெற்றோர் பட்டி யலையும் தமிழர் தலைவர் அவர்களிடத்திலே அளித்தோம். அதனைப் பார்த்த தலைவர் அவர்கள் நாங்கள் வெளியிட்ட அதே துண்டறிக் கையினை தனது பெயரில் அறிக்கையாக  வெளியிட்டதோடு திருச்சி சிந்தாமணியிலே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும்இ பெல் நிறுவனத்தில் கண்டனக் கூட்டத்தினையும் நடத்தி எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். 

அதன் பிறகுதான் தமிழர்கள் ஓரளவு இங்கு பணிநியமனம் பெற்று வருகிறாரகள். நான் வெளியிட்ட துண்டறிக்கையினை தனது பெயரிலேயே வெளியிட்டது எனக்கு மிகவும் பெருமைக்குரியதாக நான் கருதுகிறேன்.

அத்துடன் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப் போலோ மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்வேறு பணி களுக்கிடையிலும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்தியது ஒரு தந்தை தனயனுக்குக்கு ஆறுதல் சொல்லி யதாகவே நான் கருதுகிறேன்.

தலைவர் என்ற இடத்திலிருந்து ஒரு தந்தை யாகவும் தமிழர் தலைவர் என் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்பதைப் பெருமையாகக் கருது கிறேன்.

செவ்வாய், 21 நவம்பர், 2017

கவிஞர் இனியன், திருச்சி - 13

நடுவண் அரசு உச்சிக்குடுமிகளின் நேர்மையற்ற நீட் தேர்வு!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
நீட்டென்னும் நேர்மை சிறிதுமற்ற தேர்வால்
சமூகநீதிக்கு சவக்குழி வெட்டினார்
நாட்டு நலம்பேணும் நம்தமிழ்த் தலைவர்கள்
எடுத்துரைத்தும் கேளாக் காதினராய்
நடுவண் அரசும் உச்சிக் குடுமிகளும்
நயவஞ்சக நிர்மலா பொன்னார்
கேடுசெய்தனர் அனிதா எனும் அருந்தவச்
செல்வியைக் கொன்றும் போட்டனர்!
நம்பவைத்துக் கழுத்தறுத்து நட்டாற்றில் விட்டது
நடுவத்தை யாளும் மோடியரசு
நம்தமிழ் நாட்டு மாணவ மணிகள்
எதிர்காலம் இருண்டு போனது
தமிழகமே திரண்டு போராடியும் தரங்கெட்ட
தறுதலைகள் கையாலாகாத் தனத்தால்
அமிழ்ந்தது சோகத்தில் அய்யகோ அரியலூர்
மாணவி அனிதாவின் மரணம்!
ஒருமனதாய் இருசட்ட மியற்றிப் பயனில்லை
உன்மத்தர்கள் பதுங்கிக் கொண்டார்
ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிடும்
மனுவெறி பிடித்த காவியாட்சி
ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டமே நீட்
கொல்லைப்புற வழியாய்ப் புகுத்தினர்
உச்சிக் குடுமிகள் ஒத்தூத இடஒதுக்
கீட்டை ஒழித்துக் கட்டியது!
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிய ஒதுக்கீடு
அய்ம்பதுகளில் கேள்விக்குள் ளாக
நீதிமன்றத் தடையுடைத்தார் பெரியார் அரசமைப்புச்
சட்டத்தை முதன்முறை திருத்தினர்
அறுபத் தொன்பது விழுக்காடு கண்ணை
உறுத்த அடம்பிடித்தார் கூடாதென
அறுபத் தொன்பது அட்டவணை ஒன்பதில்
தமிழர் தலைவர் சட்டத்தால்!
நீட்டால் கேட்டைச் செய்யும் டில்லி
நீசரை தூக்கிச் சுமக்கும்
எட்டப்பன் எடப்பாடி குடிலன் பன்னீர்
டில்லி அடிமைகளே விலகிடு
அடிமைச் சேவகம் புரியும் உமக்கு
ஆட்சி அதிகாரம் எதற்கு?
காட்டாட்சி நடத்தும், டில்லிக்குக் காவடி
எடுக்கும் பேடிகளே விலகிடு!
எந்தமிழ் நாட்டரசு இருபத்தி ரெண்டு
மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த
அந்நியர்க்குத் தாரை வார்க்கவா? அடங்காச்
சினத்தால் எச்சரிக்கை செய்கின்றோம்
அனிதாநீ ஆயிரங் காலத்துப் பயிருன்னை
பலிகொடுத்த பின்உயிரென்ன வெல்லமா?
கண்ணைவிற்றுச் சித்திரமா கயமை ஆட்சிக்கு
முடிவுகட்ட ஆர்த்தெழுந்தது தமிழகமே!
-
கவிஞர் இனியன்,
திருச்சி - 13

விடுதலை ஞாயிறுமலர் 28-10-2017-2

நாம் இந்து மதத்தை வெறுக்க வேண்டும்? ஏனெனில்...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
13) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
14) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
15) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
16) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
17) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
18) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
20) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
21) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
22) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது
44) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது
45) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
46) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
47) அதுதான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
48) அதுதான் என்னை ஒட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
49) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
50) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
51) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது
52) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
53) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
54) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
55) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
56) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது
57) அதுதான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.
58) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்கு. பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை
அடித்தால் போதும் என்றது.
59) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது
60) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது
61) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது
62) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது
63) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது
64) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது
65) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது
66) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது
67) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது
68) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது
69) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது
70) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது
71) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது
72) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது
73) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது
74) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது
75) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
76) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
77) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது
78) அதுதான் சாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது
79) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது
80) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது
81) அதுதான் சாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது
82) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது
83) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது
84) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது
85) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது
86) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது
87) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம், கருமாதி, திதி, தெவசம், கோயில்
திருவிழா, தேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது
88) அதுதான் சாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது
89) அதுதான் சாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது
90) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது
91) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது
92) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது
93) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது
94) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது
95) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது
96) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது
97) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது
98) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது
99) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது
இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. இவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளது. அந்த இந்து மதத்தை நாம் எதிர்க்க இப்படி எத்தனையோ
காரணங்கள் இருக்க நாம் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.
இப்படிக்கு:
மானமுள்ள சுயமரியாதைக்காரர்கள், திருவெறும்பூர்

விடுதலை ஞாயிறுமலர் 28-10-2017

விஸ்வகர்மா கண்டுபிடித்த கருவி என்ன?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம் நாட்டில் ஒரு காலத்தில் தெருக்கூத்துக்கள் நடக்கும். அந்த நாடகங்களில் ராஜா வருவார். வந்த உடன், “மந்திரி! நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? வருடம் ஒரு பொன்மாரி பொழிகிறதா?” என்று கேட்டு “அவரவர் குலத்தொழிலை அவரவர் ஒழுங்காகச் செய்கிறார்களா?” என்று கேட்பார். மந்திரியும் “அவரவர் குலத்தொழிலை ஒழுங்காகச் செய்கிறார்கள் மன்னா!” என்பார்.
மன்னராட்சிக் காலம் என்பது இப்படித் தான் இருந்தது. மன்னனுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது. அதனை ரிஷிகள், முனிவர்கள் என்று சொல்லக் கூடிய பார்ப்பனர்கள் பார்த்துக்கொள் வார்கள். அவர்கள் வகுத்துக் கொடுக் கக்கூடிய சட்ட திட்டத்தின்படிதான் மன் னர்கள் ஆள வேண்டும். மன்னன் அவன வன் குலத்தொழிலை அவனவன் ஒழுங் காகச் செய்யவில்லையென்றால் அவர் களுக்கு கடுமையான தண்டனை கொடுத் தான். தாழ்ந்த ஜாதியான் பணத்தாசையால் தனக்கு மேல் ஜாதியானுடைய தொழி லைச் செய்தால் அவனை ஊரை விட்டு விரட்ட வேண்டும் என்று மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 96ஆவது சுலோகம் சொல்கிறது.
இப்படி கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் எவனுக் காவது வேறு தொழிலைச் செய்ய வேண்டும் என்கிற துணிவு வருமா? துணி துவைப்பவன் துணிதான் துவைக்க வேண்டும். மண்பாண் டம் செய்பவன் மண்பாண்டம்தான் செய்ய வேண்டும். நகை செய்பவன் நகைதான் செய்ய வேண்டும். செருப்புத் தைப்பவன் செருப்புத்தான் தைக்க வேண்டும்.
இதன் காரணமாகத்தான் நமது நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக எந்த நவீனக் கருவிகளும் கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னுடைய அப்பன் எந்த உளியை வைத்து செதுக்கினானோ அதே உளியைத்தான் மகனும் பயன்படுத்தினான். அப்பன் எந்த கலப்பையைக் கொண்டு ஏர் உழுதானோ அதே ஏர்க் கருவியைக் கொண்டுதான் விவசாயி ஏர் உழுதான். இப்படி பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வந்ததினால்தான் இங்கே தொழில் புரட்சியும் வரவில்லை. புதிய தொழில் கருவிகளும் கண்டுபிடிக்கப் படவில்லை. நாம் கண்டு பிடித்தது ஏர்க் கலப்பையும் வண்டிச்சக்கரமும் உளியும் சுத்தியலும்தான். இன்றைக்கு இருக்கும் நவீனக் கருவிகள் எல்லாம் அய்ரோப் பியனும் ஆங்கிலேயனும் வெளிநாட்டுக் காரனும் கண்டு பிடித்த கருவிகள்தான். புதிய கருவிகள் கண்டுபிடிக்கத் தேவை எதுவும் ஏற்படவில்லை. தேவைகள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தாய் என்பார்கள். அப்பன் செய்த தொழிலையே மகனும் செய்கிறபோது புதிய தேவைகளே ஏற்படாது அல்லவா? அதனால்தான் நமது நாட்டில் புதிய கண்டுபிடிப்புக்கள் எதுவும் நடக்க வில்லை.
இப்படிப்பட்ட சமுதாயத்தை அப்படியே கட்டிக்காக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்சினுடைய கொள்கை. அதைத் தான் ஆர்எஸ்எஸ்சின் ஆலோசகரான குருமூர்த்தி போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். அந்த ஜாதித் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் இங்கே பிஎம்எஸ் காரர்கள் விஸ் வகர்மா ஜெயந்தி என்ற ஒன்றைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த விஸ்வகர்மா தொழில்களுக்கு குரு என்கிறார்கள். அவனால் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட்ட கருவிகள் எந்திரங்கள் என் னென்ன? யாராவது கூற முடியுமா? இப்படி காலாவதியாகிப்போன ஒரு தத்துவத்தின் கைச்சரக்குத்தான் விஸ்வகர்மா ஜெயந்தி என்பது. அது நம்முடைய நாட்டின் முன் னேற்றத்தையும் மக்களின் முன்னேற்றத் தையும் பின்னோக்கி இழுக்கக் கூடியது. எனவே ஆர்எஸ்எஸ், பிஎம்எஸ் ஆகிய வற்றின் மக்கள் விரோதக் கொள்கைகளை விரட்டி அடிப்போம். நவீனகாலத் தொழில் நுட்பத்தைக் கையாண்டு நாட்டையும் மக் களையும் முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்வோம்.
- திராவிடர் தொழிலாளர் கழகம், திருவெறும்பூர்

திங்கள், 6 நவம்பர், 2017

உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்; கோரக்பூர் மருத்துவமனையில் 58 குழந்தைகள் உயிரிழப்பு

சூத்திரன் யாராவது கடவுளை நோக்கி தவம் இருந்திருப்பான்
அதனால்தான் இந்தக் குழந்தைகள் இறக்கின்றன.
அவர்களைத் தேடிப்பிடித்து இராமர் வழியில் தலையை வெட்டினால் இறந்த குழந்தையெல்லாம் பிழைச்சுக்கும்

அதற்குத்தான் இராமராஜ்யம் அமைக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்

சனி, 4 நவம்பர், 2017

உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது?

என்னிடம் ஒரு நண்பர் ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அல்ல அது அறிவியல் ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அவர் பிறந்த நேரத்தில் இருந்த கிரகங்களே தீர்மானிக்கிறது என்று வாதிட்டார்
எவ்வளவோ அறிவியல் பூர்வமாக வாதிட்டும் அவர் அவரது கொள்கையில் உறுதியா இருந்தார்.
கடைசியா ஒரு கேள்வி கேட்டேன்
ஒருவர் பிறக்கும்போது கிரகங்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்துத்தான் ஒருவர் வாழ்க்கை அமைகிறது என்றால் ஜாதி அமைப்பு முறை எப்படி வந்தது?
என்னுடைய பாட்டனோடு பத்துப் பேர் பிறந்தார்கள்
பத்துப் பேரும் ஒரே தொழிலைத்தான் செய்தார்கள்
என்னுடைய தாத்தனோடு ஏழு பேர் பிறந்தார்கள்
ஏழு பேரும் என் பாட்டன்கள் செய்த தொழிலையே செய்தார்கள்.
என் அப்பனோடு அய்ந்து பேர் பிறந்தார்கள்
அந்த அய்ந்துபேரும் என் பாட்டனும் தாத்தனும் செய்த தொழில்களையே செய்தார்கள்
என் மாமன்மார்கள் நாலுபேர்
அந்த நாலு பேரும்கூட என் பாட்டனும் தாத்தனும் அப்பனும் சித்தப்பனும் பெரியப்பனும் செய்த தொழில்;களையே செய்தார்கள்
கிரகங்கள்தான் ஒருவரது வாழ்ககையை தீர்மானிக்கிறது என்றால்
எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு தொழில்கள்தானே இருந்திருக்க வேண்டும்?
அப்படி இல்லாமல் எல்லோருக்கும் குலத்தொழிலாக ஒரே தொழிலே அமைந்தது எப்படி?
இவர்கள் பிறக்கும்போது மட்டும் எல்லா கிரகங்களும் எல்லா நாளிலும் யாரோ உத்தரவு போட்டது மாதிரி ஒரே பொசிஷனில் வந்து ஒரே இடத்தில் நின்று கொண்டதா?
பார்ப்பனர்கள் மட்டும் பரம்பரை பரம்பரையாக மணியடிக்கும் தொழிலை செய்து வருகிறார்களே அவர்களுக்கும் பரம்பரைத் தொழில் மாறாமல் தொடர்ந்து வருவது ஏன்?
அவர்கள் பிறக்கும்போதும்எல்லா கிரகங்களும் எல்லா நாளிலும் யாரோ உத்தரவு போட்டது மாதிரி ஒரே பொசிஷனில் வந்து ஒரே இடத்தில் நின்று கொண்டதா?
என்று கேட்டேன்.
உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது?
நீங்க இப்படித்தான் குண்டக்கா மண்டக்கான்னு கேள்வி கேட்பீங்கன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணிட்டாரு
தனது கருத்து தவறு என்று ஒத்துக்கொள்ள மனமில்லை

வியாழன், 26 அக்டோபர், 2017

பிஎம்எஸ்சின்அம்பேத்கர் சிறப்பிதழ்

 ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் கோல்வால்கர் சிறப்பிதழ் வெளியிடலாம். சவர்க்கர் சிறப்பிதழ் வெளியிடலாம். ஹெட்கேவர் சிறப்பிதழ் வெளியிடலாம். டெங்கடி சிறப்பிதழ் வெளியிடலாம். ஏன்? மோடி சிறப்பிதழ் கூட வெளியிடலாம். அதையெல்லாம் யாரும் குறை கூறப் போவதில்லை. எதற்காக அம்பேத்கர் சிறப்பிதழ் வெளியிட வேண்டும்? அங்கேதான் அவர்களின் சூழ்ச்சி புதைந்திருக்கிறது.

தங்களது கொள்கை என்பது வெகுமக்களுக்கு எதிரானது. அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. முஸ்லிம்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரானது என்பதை இப்பொழுது அவர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் அதனை அமுல்படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறி இருக்கிறது. எப்படியாவது இந்துராஜ்யத்தை உருவாக்கி பார்ப்பனர் கைகளில் ராஜ்யத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக அவர்கள் எவ்வளவு கீழான நிலைக்கும் செல்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
தங்கள் கொள்கைகள் வெகுமக்களிடம் எடுபடாமல் போனதற்குக் காரணம் அம்பேத்கரும் பெரியாரும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழகத்தில் அண்ணா போன்றவர்கள் காரணம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனை எதிர்த்து அவர்கள் கொள்கைகளுக்கு மறுப்புச் சொல்லித் தங்கள் அமைப்பை இங்கே காலூன்ற வைக்க முடியாது என்பதால்தான் அவர்களை அரவணைப்பதுபோல் அரவணைத்து அழித்தொழிக்க நினைக்கிறார்கள். அதனால்தான் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களை வளைத்துப் போட்டு அவர்கள் மூலமாக இப்பொழுது பெரியார் கொள்கைகளும் அம்பேத்கர் கொள்கைகளும் ஒத்து வராது என்று சொல்ல வைக்கிறார்கள். அப்படிச் சொன்ன கையோடு அம்பேத்கரும் பெரியாரும் இப்பொழுது இருந்திருந்தால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று பேச வைக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் சின் எந்த சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதையும் சொன்னால் பரவாயில்லை. அதைச் சொல்ல மாட்டார்கள். பெரியாரும் அண்ணலும் ஆர்எஸ்எஸ் சின் இந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வார்களா? இராமராஜ்யத்தை ஆதரிப்பார்களா? இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆதரிப்பார்களா? பகவத் கீதையை அங்கீகரிப்பார்களா? மனுதர்மத்தை ஒத்துக் கொள்வார்களா? இராமனுக்குக் கோயில் கட்டுவதை சரி என்பார்களா? சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்க்க இராமன் பாலம் இருந்தது என்ற சிந்தனையை அவர்கள் அங்கீகரிப்பார்களா?
இது எதுவும் நடக்காது. இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற ஒரு கருத்தைப் பரப்பி வருகிறார்கள். இப்பொழுது புதிதாக ஒருவர் முரளிதர ராவ் என்ற ஆந்திராக்காரர் ஏதோ அண்ணாவை முழுதாக அறிந்தவர் போல அறிஞர் அண்ணா இன்று இருந்தால் பாஜக வில்தான் சேருவார் என்று கதை விடுகிறார்.
அதைவிட ஒருபடி மேலே போய் வெங்கடேசன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞரைப்பிடித்து இந்துத்துவ அம்பேத்கர் என்று எழுத வைக்கிறார்கள்.
அப்படி அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று நிரூபிப்பதற்காகத்தான் பிஎம்எஸ் சும் அம்பேத்கர் ஜெயந்தி சிறப்பிதழ் என்று வெளியிட்டு அம்பேத்கரின் கொள்கைகளை தப்பும் தவறுமாகச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறது. அதுபோன்ற கருத்துக்கள் அவர்கள் வெளியிட்ட அம்பேத்கர் சிறப்பிதழில் ஏராளம் மலிந்து கிடக்கிறது. அதில் பல விசமத்தனமான கருத்துக்கள் இடம் பிடித்துள்ளன.
அதில் ஒன்றுதான் அம்பேத்கர் பாக்கிஸ்தான் பிரிவதை கடுமையாக எதிர்த்தார் என்று எழுதுகிறது. பாக்கிஸ்தான் பற்றிய சிந்தனைகள் என்ற நூல் கிட்டத்தட்ட எழுநூறு பக்கங்கள் கொண்டது. அதை முழுவதையும் படித்து உள்வாங்குவதற்கே ஒரு தனி அறிவு வேண்டும். அந்த நூலில்  இந்துக்கள் இஸ்லாமியர் இரு தரப்பாருடைய வாதங்களையும் நடுநிலையோடு ஆராய்ந்து பொதுவான கருத்துக்கள் பலவற்றை எடுத்துரைக்கிறார். இருதரப்பாருடைய அணுகுமுறையுமே தேசிய நலனுக்கு அப்பாற்பட்டவையாகத்தான் உள்ளன என்கிறார். (பக்கம் 577)
எந்த இடத்திலும் பாக்கிஸ்தான் கூடாது கூடவே கூடாது என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் இந்துராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். “இந்துராஜ்யம் நிஜமாகும் பட்சத்தில் அது இந்த நாட்டின் மிகப்பெரும் சோக சம்பவமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்துக்கள் என்ன சொன்னாலும் இந்துமதம் விடுதலைää சமத்துவம்ää சகோதரத்துவம் ஆகியவற்றுக்குப் பேரிடராகவே இருக்கும். இந்த விசயத்தில் அது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. இந்து ராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட வேண்டும்” என்று சொல்லும் அவர் அதற்குப் பரிகாரமாக பாக்கிஸ்தான் அமையாது என்பதையும் நடுநிலையோடு சுட்டிக்காட்டுகிறார். பக்கம் 536)
இதனை அப்படியே மூடிமறைத்து விட்டு அண்ணல் அவர்கள் ஏதோ முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரான கருத்தைச் சொன்னார் என்று அவரைத் திசைதிருப்பப் பார்க்கிறது.
ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் முஸ்லிம்களிடையே உருவாகவில்லையே என்று கவலைப்படும் அவர் முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே பாக்கிஸ்தான் கோரிக்கையை வைக்கவில்லை என்பதையும் முகமதலி ஜின்னா 1920 லிருந்து 1937 வரை பாக்கிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “1937வரை கூடிவாழும் விருப்பம் நிச்சயமாக இருந்து வந்தது. 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் உருவாக்கப்பட்டபோது தாங்கள் ஒரே நாட்டின் ஒரே சட்டத்தின் கீழ் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டதுடன் அச்சட்டம் ஏற்றப்படுவதற்கு முந்தைய விவாதங்களிலும் கலந்துகொண்டனர்” என்கிறார் அண்ணல் (பக்கம்521)
பாகிஸ்தான் எதிர்ப்பாளர்களின் முகத்திரையைப் பல இடங்களில் கிழித்துத் தொங்க விட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் இந்துமகாசபையின் இரட்டை வேடங்களைத் தோலுறித்துக் காட்டுகிறார்.
இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் பிரிவதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்ட கோட்பாடாகிவிட்டது. “கர்னாடகமும் ஆந்திராவும் பிரிவதில் அதிர்ச்சி அளிக்கக் கூடியது எதுவம் இல்லையெனில் பாக்கிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையில் மட்டும் என்ன அதிர்ச்சி இருக்க முடியும்? பாக்கிஸ்தான் கோரிக்கை சீர்குலைவை உண்டுபண்ணும் என்று வாதிப்பதனால் இந்து முhகாணங்களான கர்னாடகம் மகாராஷ்டிரத்திலிருந்தும் ஆந்திரா சென்னையிலிருந்தும் பிரிந்து செல்வதைவிட இது அதிக சீர்குலைவை ஏற்படுத்தி விடாது. பாக்கஸ்தான் என்பது தனக்கே  உரிய தனது சொந்தக் கலாச்சாரத்தை வளர்;த்துக்கொள்வதற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற ஒரு கலாச்சார யூனிட் முன்வைக்கும் கோரிக்கையின் மறு வெளிப்பாடாகும்” என்று கூறுகிறார் (பக்கம் 41)அத்துடன் 1826 முதல் இந்தியாவுடன் இணைந்திருந்த பர்மா 1937ல் தனி நிர்வாகத்தின் கீழ் வந்தது. அவ்வாறு இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்டதை எதிர்க்காத இந்துக்கள் அரசியல் நோக்கில் பிரிக்கக் கூடியதும் சமுதாய நோக்கில் பகையுணர்வு மிக்கதும் சமய நோக்கில் அந்நியமானதுமான பாக்கிஸ்தான் போன்றதொரு பகுதியை மட்டும் பிரிக்கக் கூடாதெனக் கூறுதல் மிக விந்தையானது”  என்கிறார் அண்ணல் (பக்கம் 96)
அத்துடன் பாக்கிஸ்தான் பிரிவதால் இந்தியாவின் வலிமை குன்றும் என்ற கூற்றுக்கு இங்கு நிறைந்துள்ள வளங்களை நோக்கும்போது விலிமையான அரண்களை நம்மால் உருவாக்க இயலும் என்று இந்துக்கள் உறுதியாக நம்பலாம் என்று மேலும் கூறுகிறார் பக்கம் 99) வளங்களின் பற்றாக்குறை குறித்தும் அச்சம் எதுவும் தேவை இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். 102
போர்ப்படைகள் குறித்த பிரச்சினைகளைப்பற்றி அலசி ஆராய்ந்த அண்ணல் அவர்கள் போர்ப்படைகளுக்காக குறிப்பாக முஸ்லிம் போர்ப்படைகளுக்காக செலவிடப்படும் தொகை இந்துக்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படுகிறது என்றும் அதற்கு உறுதியான வழி பாக்கிஸ்தான் பிரிந்துபோக விட்டுவிடுவதே நல்லது என்றும் அவர் சொல்கிறார்.
ஆனால் இந்துமகாசபையும் காங்கிரசும் பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தார்கள். இந்துக்களிலுள்ள உயர்சாதி இந்துக்கள் இந்தப் பிரிவினைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்துள்ளார்கள். அவர்களது இரட்டை வேடத்தை அண்ணல் அவர்கள் அம்பலப்படுத்துகிறார். 1915ல் பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்துவைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்றவர்கள் 1929ல் சைமன் கமிஷன் முன்பு சிந்து மாகாணத்தைப் பிரிக்கக் கூடாது என்கிறார்கள் என்றும் அவர்களது முரண்பாட்டைச் சுட்டிக்காட்டும் அண்ணல் அவர்கள் 1915ல் சிந்து மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை என்றும் முஸ்லிம் அரசாகவும் இல்லாத நிலையில் அரசு உயர் பதவிகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிவிடலாம் என்ற நோக்கிலேயே 1015ல் சிந்து மாகாணத்தைப் பிரிக்க ஒத்துக் கொண்டார்கள். ஆனால் 1929ல் சிந்து மாநிலமாகப் பிரிக்கப்பட்டு அங்கு முஸ்லிம் அரசு பொறுப்பேற்றுள்ளதால் அரசு உயர் பதவிகளில் தங்களுடைய ஏகபோக நிலைமை பாதிக்கப்படும் என்பதால் இந்துக்கள் எதிர்த்தனர் என்கிறார்.
மேல்சாதி இந்துக்களின் கீழான பண்புக்கு வங்கப் பிரிவினைக்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பினைக்  கூறலாம். முழுமையான வங்காளம் மட்டுமின்றி பீகார் ஒரிசா அஸ்ஸாம் அய்க்கிய மாகாணங்கள் ஆகியவற்றில் அனைத்து உயர் அரசுப் பொறுப்புக்களையும் வங்காள இந்துக்களே பெற்று வந்தனர். வங்க மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் பசுமையான இந்த மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதி போய்விடுமே என்பதால்தான் இந்துக்கள் வங்கப் பிரிவினையை எதிர்த்தனர். வங்கம் பிரிந்தால் கிழக்கு வங்கத்தின் ஆட்சி அதிகாரப் பதவிகளை முஸ்லிம்களுக்கு பெரும்பாலும் விட்டுத்தர வேண்டியிருக்கும். இவ்வாறு வங்காள முஸ்லிம்களுக்கு தமது பதவிகளில் ஒரு பகுதியை விட்டுத் தரவேண்டிய நிலைமையை தவிர்த்து தங்கள் ஏகபோக நிலையை நீடித்து இருத்திக் கொள்வதே இந்துக்களின் வங்கப் பிரிவினை எதிர்ப்புக்கு தலையாய காரணம்” என்று அண்ணல் அவர்கள் மேல்சாதிப்பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைத் தோலுறித்துக் காட்டுகிறார்.
மேல்சாதி இந்துக்களின் தாழ்பண்புகள் காரணமாகத் தங்களது பதவி வேட்டைக்காடுகளின் பரப்பு குறைந்து விடுமேயென்ற காரணம் ஒன்றுக்காகவே பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்க்கிறார்களோ என்ற அச்சம் தோன்றுவதாக அண்ணல் கூறுகிறார். பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பதற்கான பல்வேறு காரணங்களில் மேல்;சாதி இந்துக்களின் தன்னலமும் ஒன்றாக இருக்குமெனில் வியப்பதற்கில்லை என்கிறார் 176
“தங்களுடைய உயர் வேலைவாய்ப்புப் பகுதிகளில் சில குறைந்துவிடும் என்பதற்காக வங்க பஞ்சாபி மேல்சாதி இந்துக்கள் பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பதன் மூலம் மாபெரும் தவறு செய்கிறார்கள் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அரசுப் பதவிகள் அனைத்தையும் தங்கள் ஏகபோக உரிமையாய் வைத்துக்கொள்ளும் காலம் மலையேறிவிட்டதென்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தேசியத்தின் பெயரால் அவர்கள் தாழ்ந்த சாதி இந்துக்களை வேண்டுமானால் இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாமேயன்றி முஸ்லிம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி அதிகாரப் பதவிகளைத் தங்கள் வசமே தக்க வைத்துக்கொள்வது என்பது இனியும் நடவாது. …. முஸ்லிம்களை முட்டாளாக்கி முழுமையான ஆட்சி அதிகாரத்தை என்றென்றும் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுவது அறிவுடைமை ஆகாது” என்று பார்ப்பனர்களின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுகிறார் (பக்கம் 177)
மேலும் சவர்க்கர் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்துக்கும் ஆபத்தான ஒரு நிலையை உருவாக்குகிறார் என்றும் இந்து இனத்தவர் தங்களுக்கென்று தனியாக ஒரு நாடு இருக்க வேண்டும் என்று கோருகின்ற அவர் முஸ்லிம் இனத்தவர் தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று கோருவதை எப்படி மறுக்க முடியும்? என்கிறார் (பக்கம் 206)
“முஸ்லிம் இனத்தவர்கள் அதிகாரத்தில் இந்து இனத்தவர்களுடன் சரிசமமாக இருப்பதை திரு சவர்க்கர் அனுமதிக்க மாட்டார். இந்து இனம் ஆதிக்கம் செலுத்தும் இனமாகவும் முஸ்லிம் இனம் சேவகம் புரியும் இனமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்து இனத்தவருக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் இடையில் பகைமை என்னும் விதையைத் தூவிய பின்னர் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் ஒரே நாட்டில் வாழ வேண்டுமென்று திரு சவர்க்கர் விரும்புகிறார் என்பது விளக்குவதற்குக் கடினமானதாகும்” என்கிறார் அண்ணல் (பக்கம் 207)
திரு சவர்க்கர் உருவாக்கிய சுயராஜ்யத் திட்டம் முஸ்லிம்களை அடக்கி ஆளும் ஒரு சாம்ராஜ்யத்தை இந்துக்களுக்கு வழங்கி அதன் மூலம் தாங்கள் ஒரு ஏகாதிபத்திய இனம் என்ற திருப்தியையும் பெருமையையும் வழங்கும். ஆனால் அது இந்துக்களுக்கு ஒரு நிலையான அமைதியைத் தராது. ஏனெனில் முஸ்லிம்கள் இத்தகையை ஒரு பயங்கரமான மாற்றுத் திட்டத்திற்கு ஒருபோதும் ஒப்புக்கொண்டு அடிமைகளாக இருக்க மாட்டார்கள்” என்றும் அண்ணல் அவர்கள் சவர்க்கரை அம்பலப்படுத்துகின்றார்.
இந்துராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறும் அண்ணல் அவர்கள் எந்த இடத்திலும் அதேபோல பாக்கிஸ்தான் தடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறவில்லை. மாறாக “பாக்கிஸ்தான் வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரும் பட்சத்தில் அவர்களது கோரிக்கைக்கு இணங்குவதே அறிவார்ந்த பாதையாக இருக்கும் என்பதில் அய்யம் ஏதும் இருக்க முடியாது” என்கிறார் (பக்கம் 550)
அப்படி பாக்கிஸ்தான் வேண்டும் என்பதை யார் முடிவு செய்ய வேண்டும் என்பதையும் அண்ணல் கூறுகிறார்.
பாக்கிஸ்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்லக் கூடிய வேலை பம்பாய் அல்லது சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை. பல ஆண்டுகளாக தங்களது வாழ்வும் வருங்காலமும் எந்த அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளதோ அதில் ஏற்பட்ட மிகவும் உக்கிரமான மிகவும் புரட்சிகரமான மிகவும் அடிப்படையான ஒரு மாற்றத்தின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அப்பகுதிகளில் வாழும் மக்களே அதைத் தீர்மானிக்க விட்டு விட வேண்டும். பாக்கிஸ்தான் மகாணங்களில் வாழும் மக்களிடையே நடத்தப்படும் ஒரு கருத்துக் கணிப்புத்தான் பாக்கிஸ்தான் பிரச்சினையைத் தீர்க்கும் மிகவும் பாதுகாப்பான அரசியல் சட்டரீதியான வழிமுறையாக எனக்குத் தோன்றுகிறது என்று அண்ணல் கூறுகிறார். 593.
இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கு மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கத்தினுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தச் செய்வதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எண்ணுவது முஸ்லிம் லீக்கின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்ற இன்னொரு விசயத்தையும் நான் கூற விரும்புகிறேன். பாகிஸ்தானைப் பெறுவதைவிட மிக முக்கியமானதென்று நான் கருதுவது என்னவெனில் பாகிஸ்தானை ஏற்படுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறைகளேயாகும். பிரிவினைக்குப் பின்னர் பாக்கிஸ்தானும் இந்தியாவும் இரு நேச நாடுகளாக ஒன்று மற்றதன்பால் நல்லெண்ணத்துடனும் பகைமையுணர்வு இன்றியும் தொடரவேண்டும் என்பதே குறிக்கோளாகும்.
மக்களின் வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் முடிவைத் தவிர இந்த இலக்கை அடைவதற்கு வேறொரு சிறந்த தீர்வு இருக்க முடியுமா என்பதை நானறியேன். 600
இவ்வளவு தெளிவாக பாக்கிஸ்தான் பற்றிய தனது முடிவை அண்ணல் அவர்கள் தெரிவித்திருக்கும்போது முஸ்லிம் லீக்கின் பிரிவினை கோஷத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார் என்று எழுதுவது விசமத்தனமானது. அண்ணலை முஸ்லிம்களுக்கு எதிராகச் சித்தரிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு அவர்களை அடியாளாகப் பயன்படுத்துவதே அவர்களது நோக்கமாகும்.
அதே நூலில் அண்ணல் அவர்கள் இந்துராஜ்யம் அமைவதைத் தடுக்க முகமதலி ஜின்னாவுக்கு யோசனையும் தெரிவிக்கிறார். நாட்டைத் துண்டாடாமல் முஸ்லிம் லீக்கை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்த ஒரு கட்சியை உருவாக்குவதுதான் இந்துராஜ்யம் என்ற பூதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரே பயனுறு வழியாகும். அரசியல் சட்டரிதியான பாதுகாப்பு நடவடிக்கைளின் பிரச்சினை மீதான கருத்து வேறுபாடுகள் தொடரும்வரை காங்கிரசிலும் இந்துமகாசபையிலும் சேருவது முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் சாத்தியமில்லை என்பது உண்iதான். ஆனால் இப்பிரச்சினை நிச்சயம் தீர்க்கப்படும். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இது. இத்தீர்வு முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுத்தரும் என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும். இது நிறைவேற வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகின்றோம். அவ்வாறு நிகழும்போது கட்சிகள் மறு ஒருங்கிணைக்கப்படும் வழியில் எதுவும் குறுக்கிட முடியாது.
காங்கிரசும் இந்து மகாசபையும் தகர்ந்துபடும்.
இந்து சமுதாயத்தில் பல கீழ்மட்டப் பிரிவுகள் உள்ளன. அவர்களுடைய பொருளாதார அரசியல் சமூகத் தேவைகள் பெரும்பாலான முஸ்லிம்களின் தேவைகளைப் போன்றதேயாகும். பல நூற்றாண்டுகளாகத் தங்களுக்கு சாதாரண மனித உரிமைகளை மறுத்தும் பறித்தும் வந்த உயi;ஜாதி இந்துக்களுடன் இணங்கிப் போவதைவிட பொதுவான இலக்குகளை எய்துவதற்கு முஸ்லிம்களுடன் ஒரு பொதுவான இலட்சியத்தில் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள். இத்தகைய ஒரு போக்கை பின்பற்றுவதை அபாயகரமான செயல் என்று கருத முடியாது. இப்பாதை நன்கு பழகிய பாதைதான். பெரும்பாலான மாநிலங்களில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் முஸ்லிம்களும் பிராமணர் அல்லாதார்களும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் ஒன்று சேர்ந்து 1920 முதல் 1937 வரை ஒரே குழு உறுப்பினர்களைப் போன்று சீர்திருத்தங்களைச் செயல்படுத்தப் பாடுபட்டது உண்மையல்லவா?
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு வகுப்புவாத நல்லிணக்கத்தை எய்தவும் இந்துராஜ்யம் உருவாகும் அச்சுறுத்தலை ஒழிக்கவுமான மிகவும் பயனுள்ள வழிமுறை இதில்தான் உள்ளது.
திரு.ஜின்னா இந்த வழியை எளிதில் பின்பற்றியிருக்கலாம். அதில் வெற்றிபெறுவது திரு ஜின்னாவுக்கு கடினமானது அல்ல. இத்தகைய ஒரு வகுப்புசாராத கட்சியை உருவாக்க திரு ஜின்னா முயன்றிருந்தாரேயானால் அவரது தரப்பில் வெற்றிக்கு எல்லா வாய்ப்புக்களும் இருந்திருக்கும் என்று திரு ஜின்னாவுக்கே ஆலோசனை வழங்கியவர் அண்ணல் அவர்கள்.
அவரது ஆலோசனையை ஏற்காமல் பிரிட்டிஷ் அரசு பாக்கிஸ்தானைப் பிரித்ததால்தான் தேவையற்ற மதக்கலவரங்களும் கொலைகளும் வெட்டுக்குத்துகளும் ஏற்பட்டன.
இந்தியாவிலுள்ள மற்ற சிறுபான்மையினரும் பார்ப்பனரல்லாதாரும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒருங்கிணைந்தால் இந்துராஜ்யம் அமையும் அபாயத்தைத் தகர்க்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணல் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவரது ஆலோசனையின்படி இன்றுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பார்ப்பனரல்லாதாரும் முஸ்லிம்களும் மற்ற சிறுபான்மையினரும் ஒன்று சேர்ந்து இந்துராஜ்யம் உருவாவதைத் தடு;த்து விடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் சங் பரிவார் கும்பல் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடப் பார்க்கிறது. அதனை அண்ணலின் அறிவுhயுதத்தைக்கொண்டு முறியடிப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 12 அக்டோபர், 2017

பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான மோடி அரசின் சட்ட விரோத ஆணை; கிரிமிலேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்



- குடந்தை கருணா -



கிரிமிலேயர் எனும் அரசியல் சட்ட விரோத விதியைப் பயன்படுத்தி வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ஒழித்திடும் கிரிமிலேயர் சட்டத்தை மோடி அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை மத்திய அரசு 8.9.1993 முதல் நடைமுறைப்படுத்தியது. இதில் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினரை நீக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற ஆணையின்படி ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரைப்படி மத்திய அரசில் குரூப் ஏ குரூப் பி பதவிகளில் பணியாற்றுவோரை கிரிமிலேயர் என அறிவித்தது மத்திய அரசு. குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு பணியாளர்களைப் பொறுத்தவரை ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அத்தகைய ஆண்டு வருமானத்தில்இ மாதச் சம்ப

ளத்தையும் விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்திட தேவையில்லை என்றும் அரசு அறிவித்தது.

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கு இணையான குரூப் ஏ, பி பதவிகள் எவை என நிர்ணயிக்கும்வரை அதில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தை அதில் மாதச் சம்பளம் தவிர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாணை தெரிவித்தது.

இதன்படிஇ மத்திய அரசில் குரூப் சி, டிஇ பதவிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் என்பதைக் கண்டறிய ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அது ரூ.ஆறு லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த வருமானத்தில் மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு குறித்த எந்தப் பிரிவிலும் கிரிமிலேயர் எனும் பொருளாதார அளவு கோல் இல்லை என்ற நிலையில் இது நீக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட நலச் சங்கங்களும் திமுக,  வலது கம்யூனிஸ்ட்,  ஜனதா தளம், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்திய நிலையிலும்இ மாதச் சம்பளம் ஆண்டு வருமானத்தில் எடுத்துக் கொள்ளாததால்இ பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு சான்றிதழ் பெறவும், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறவும் ஒரு வாய்ப்பு கிட்டியது. இத்தகைய சூழ்நிலையிலும்இ தற்போது மத்திய அரசின் குரூப் ஏ பதவிகளில்இ பிற்படுத்தப்பட்டோர் வெறும் பத்து விழுக்காடுதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசின் பணி யாளர் ஆணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதமரின் கட்டுப்பாட்டில் இயங்கும் பணியாளர் நலத்துறை பணி ஒதுக்கீடு அளிக்கவில்லை. இதற்கான காரணம், தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோரின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்களில்பணியாற்றுகிறார்கள்;அவர்களது ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சத்திற்கு மேல் உள்ளது என்று அவர்களது மாதச் சம்பளத்தை வருமானமாக கணக்கிட்டு, அவர்கள் முன்னேறிய வகுப்பினர்; ஆகவே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு பணி வழங்க முடியாது என பணியாளர் நலத்துறையின் அதிகாரிகள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை நிர்வாக தீர்ப்பாயத்திலும் சிலர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை நிர்வாக தீர்ப்பாயம் மத்திய பணியாளர் நலத்துறையின் செயல்பாடு சட்டவிரோதமானது என 12.1.2017 அன்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பணியாளர் நலத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து 31.8.2017 அன்று தீர்ப்பளித்தது. பணியாளர் நலத்துறையின் சட்ட விரோத முடிவைக் கண்டித்தும் பாதிக்கப்பட்டோருக்கு உடன் பதவி வழங்கிடவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய மத்திய அரசின் பணியாளர் நலத்துறை தங்களது 8.9.1993 ஆணையில் திருத்தம் செய்து புதிய ஆணையை தற்போது 6.10.2017 அன்று வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் அவர் கள் நிர்வாகிகளாக பணியாற்றினாலும் அதற்குக் கீழ் உள்ள பணிகளில் இருந்தாலும் ஆண்டு வருமானம் ரூ. ஆறு லட்சம் (தற்போது ரூ.எட்டு லட்சம்) மேல் இருப்பின் அவர்கள் முன்னேறிய பிரிவினர் (கிரிமிலேயர்) எனக் கருதப்படுவார்கள்; அதேபோன்று அரசு வங்கிகள் மற்றும் காப்பீட்டுக்கழகத்தில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் அதிகாரிகளாக பணியில் தேர்வானாலே அவர்கள் கிரிமிலே யராகக் கருதப்படுவார்கள்; அதிகாரிகள் பதவிக்குக் கீழ் உள்ள எழுத்தர் பியூன் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சம் (தற்போது எட்டு லட்சம்) மேல் இருந்தால் அவர்கள் கிரிமிலேயராகக் கருதப் படுவார்கள்.

இந்த ஆணையை சம்மந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் 31.3.2018-க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது மத்திய அரசின் கல்வித்துறையிலும் பணிகளிலும் சேரும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறை யும். அந்த இடங்கள் பொதுப் பிரிவினர் என்ற போர்வையில் பார்ப்பனர்களுக்கு செல்லும் நிலை ஏற்படும்.

மத்திய அரசின் பதவிகளுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பதவிகள் குறித்து தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையம் 26.10.2015 அன்று மத்திய அரசுக்கு அறிக்கைஅளித்துள்ளது.இந்தபரிந்துரையையும்இமத்திய அரசின் பணியாளர் நலத்துறை ஏற்கவில்லை. பிற்படுத்தப் பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவின் கருத்தையும் ஏற்கவில்லை. மாறாக பணியாளர் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அதிகாரிகள் முடிவு செய்து ஆணையை வெளியிட்டுள்ளனர்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரச மைப்புச் சட்ட அதிகாரம் அளிப்போம் என்று கூறி மாநில அரசின் உரிமைகளைப் பறித்திட ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எந்தெந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்திய அரசின் பணிகளில் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளார்கள் என்று எந்த புள்ளி விவரத்தையும்இகணக்கெடுப்பையும்வெளியிடாமல்பிற் படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோரைக் கண் டறிய நீதிபதி ரோகிணி தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்துள்ள மோடி அரசு தற்போது உச்சக்கட்டமாக பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோரை முன்னேறியப் பிரிவினர் பட்டியலில் சேர்த்து உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

பொருளாதரப்பிரிவு சொல்லப்படவில்லை.

அரசமைப்புச் சட்டவிரோத கிரிமிலேயர் பிரிவை முற்றிலுமாக நீக்கினால்தான் பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் உயர் பதவிகளில் வாய்ப்பு பெற முடியும் என்பதை உணர்ந்து மத்திய அரசின் இந்த சமூக விரோத ஆணையை எதிர்த்து போராட பிற்படுத்தப்பட்டோர் முன்வர வேண்டும்.