வெள்ளி, 25 மே, 2018

கம்யூனிசம் பற்றி பிஎம்எஸ் சின் புருடா



“காட்டுத்தீ எரிந்துகொண்டே இருக்கும். அனைத்தையும் கருக்கி விடும். கம்யூனிசமும் இதைப் போலவே செய்லபட்டு வருகிறது. எனவே,கம்யூனிசமும் ஜனநாயகமும் ஒருபோதும் சேர்ந்து இருக்க முடியாது” என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதாக புருடா மன்னர்கள் தனது பிஎம்எஸ் நியூஸ் மே 2018ல் தெரிவித்துள்ளார்கள். இதற்கு என்ன ஆதாரம்? அண்ணல் அவர்கள் எங்கே அப்படிச் சொல்லி இருக்கிறார்? என்றெல்லாம் ஒன்றும் அதில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் நாம் படித்தவரை “இந்துமதம் ஒரு எரிமலையின் மீது மிதந்துகொண்டிருக்கிறது. இன்று அது உயிரற்ற எரிமலையாகத் தோன்றலாம். ஆனால் அதில் உண்மை இல்லை. இந்த வலுமிக்க கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்கள் தாங்கள் இழிநிலையில் இருப்பதற்குக் காரணம் இந்து மதத்தின் தத்துவங்கள்தான் என்பதை உணர்ந்த நொடியில் அது உயிர்பெற்று வெடிக்கத் தொடங்கிவிடும்” என்கிறார் அம்பேத்கர். ஆதாரம் : அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு தொகுதி 17

அதுபோல கம்யூனிசமும் ஜனநாயகமும் சேர்ந்து இருக்க முடியாது என்று சொல்லும் புருடா மன்னர்களுக்கு அம்பேத்கர் என்ன கூறுகிறார் தெரியுமா?

 “ பார்ப்பனியமும் ஜனநாயகமும் எதிரெதிர் நிலைகளில் நிற்பவை. ராமன் கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்கள். ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள்” என்று கூறி அவர்களின் தேசியக் கதாநாயகர்களான ராமன், கிருஷ்ணன் ஆகியோரின் யோக்கியதையைத் தோலுறிக்கிறார். ஆதாரம் ஜனதா இதழில் 17.5.1951ல் அம்பேத்கர் எழுதிய கட்டுரை

மேலும் அம்பேத்கர் அவர்கள் “ உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக்கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான் ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும்  இந்த வகையில்  முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். உழைக்கும் வர்க்கம் இந்த ஆவணங்கள் மீது உரிய கவனம் செலுத்தத் தவறி விட்டன. மாறாக பண்டைய மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய புனைசுருட்டல்களின் கட்டுக்கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர். இந்தக் கெட்ட பழக்கத்திற்கு அடிமைகளாகி விட்டனர்” என்று அம்பேத்கர் நூல் தொகுதி 18 பக்கம் 144ல் குறிப்பிடுகிறார்.

மார்க்சின் மூலதனத்தைத் தொழிலாளர்கள் படிக்க வேண்டும் என்று சொல்கிற அம்பேத்கர் எந்த இடத்திலும் இராமாயணத்தைப் படியுங்கள், கீதையைப் படியுங்கள், வேத புராண இதிகாசங்களைப் படியுங்கள் என்று சொன்னதில்லை. மாறாக சாதி ஒழிய வேண்டுமானால் இந்தப் புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் அனைத்தும் புனிதமானவை என்ற நம்பிக்கையைத் தகர்க்க வேண்டும் என்று தனது ஜாதி ஒழிப்பு என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். (நூல் தொகுதி 1)


அத்துடன் தொழிலாளர்கள் காங்கிரஸ் மற்றும் இந்துமகாசபையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறார். அப்படி விலகி இருப்பதன் மூலமாகத்தான் தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அண்ணல் கூறுகிறார். (ஆதாரம் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் நூல் தொகுதி 18பக்கம் 146)

இந்துமகாசபை என்பது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கட்சி. பாஜக வின் முந்தைய பெயர். பிஎம்எஸ்சின் மூத்த சகோதரர்) இந்துமகாசபையில் சேரக் கூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் இன்று பிஎம்எஸ் வைக்கும் தேசபக்தியுள்ள தொழிலாளர்களை உருவாக்குவோம் என்ற முழக்கமும் தொழிலாளர்களை ஏமாற்றும் தந்திர வார்த்தை என்றும் கூறுகிறார்.


எனவே,ஆர்எஸ்எஸ் பிஎம்எஸ் கும்பல் தன்னை செருப்பாலடித்ததை மறைத்து அடுத்தவரை குச்சியால் அடித்ததாக பெரிதுபடுத்தி இன்பம் காண்கிறது. அவர்களின் பித்தலாட்ட வார்த்தைகளில்; மயங்க வேண்டாம் என்று தொழிலாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


சனி, 19 மே, 2018

பார்ப்பனக் கொள்ளை பாரீர்!

பார்ப்பனக் கொள்ளை பாரீர்!
------------------------------------------------
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலுக்குள் இருந்த புதையலை தோண்டி எடுத்ததாக, தேவஸ்தான அதிகாரிகள் மீது, தலைமை அர்ச்சகர், ரமண தீட்சிதர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள, திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வந்த ரமண தீட்சிதருக்கு, நேற்று, தேவஸ்தானம் கட்டாய பணி ஓய்வு வழங்கியது.
ஆபரணங்கள் : இந்நிலையில், நேற்று காலை, தனியார் தொலைக்காட்சிக்கு, அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஏழுமலையான் கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு கூடத்தை, 25 நாட்கள் வரை மூடிய அதிகாரிகள், அங்கு, பூமிக்கு அடியில் தோண்டினர். 'அந்த இடத்தில், பல்வேறு மன்னர்கள், ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கிய ஆபரணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன' என, முன்னோர்கள் கூறியுள்ளனர்.எனவே, அங்கு புதையலாக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபரணங்கள் என்ன ஆனது என தெரியவில்லை.கடந்த, 2001ல், பிரமோற்சவ கருடசேவையின் போது, மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த பிளாட்டின மாலையில் பதிக்கப்பட்ட வைர கல் விழுந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த வைரக்கல், பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில், 500 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் : இந்நிலையில், ரமண தீட்சிதரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகம் எதிரில், இந்து சம்ரட்சண சமிதி அமைப்பினர், நேற்று போராட்டம் நடத்தினர்
Dinamalar news 20-05-2018

திங்கள், 14 மே, 2018

வெல்டர்களுக்கு மட்டும் ஏன் அலவன்ஸ்?




இந்தக் கேள்வி அனைவர் மனதிலும் மிக சாதாரணமாக எழக்கூடிய கேள்வி. இதில் நியாயம் இருப்பதாகவும் தோன்றும். ஏன் பிட்டிங் அலவன்ஸ் இல்லை? ஏன் மிஷினிங் அலவன்ஸ் இல்லை என்ற வினாவும் அனைவருக்கும் எழுவது இயல்பே.
நம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் ஒருவர். பொதுமேலாளர் 21 பேர். கூடுதல் பொதுமேலாளர் 121 பேர். முதுநிலை துணைப்பொதுமேலாளர்கள் 54 பேர். துணைப்போதுமேலாளர் 169. முதுநிலை மேலாளர் 150. மேலாளர் 64. துணை மேலாளர் 222. முதுநிலைப்பொறியாளர் 598. பொறியாளர் 113 பேர்.
இவர்களில் யாருக்காவது ஒரு சான்றிதழுக்கு சான்றளிக்கும் (யுவவநளவநன) அதிகாரம் இருக்கிறதா? யாருக்குமே இல்லையே. நமது நிறுவனத்திற்காக வரும் மாநில அரசு ஊழியரான கொதிகலன் ஆய்வாளருக்கு மட்டுமே ஒருவரது படிப்பு மற்றும் அவரது சான்றிதழ்களுக்கு சான்றளிக்கும் அதிகாரம் உள்ளது.
அந்த கொதிகலன் ஆய்வாளர் அவர்களுடைய பெயரும் எண்ணும்தான் ஒரு கொதிகலனிலோ உயர் அழுத்த குழாய்களில் உள்ள இணைப்புக்களிலோ பதிவு செய்யப்படும். அது இல்லாத கொதிகலன்கள் சட்டவிரோதமானவை என்பதுதான் கொதிகலன் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகும். அந்த இணைப்புக்களில் கொதிகலன் ஆய்வாளருக்கு முன்னதாகவே அந்த இணைப்புக்களில் பற்றவைப்புப் பணி செய்யும் வெல்டர்களின் எண்ணும் பதிவுசெய்யப்படும். அந்த அளவிற்கு ஒரு கொதிகலனுக்கு வெல்டர் என்பவர் மிக  மிக முக்கியமானவர்.
அதன் காரணமாகத்தான் வெல்டர்களுக்கு அலவன்ஸ் வழங்கப்படுகிறதே தவிர இது நிர்வாகம் போடும் பிச்சை அல்ல. இந்த அலவன்ஸ் ஒன்றும் எல்லாருக்கும் வழங்கப்படுவது இல்லை. வெல்டர்களுக்கு உரிய கால இடைவெளியில் பயிற்சி; வழங்கப்பட்டு அதற்கான செய்முறைத் தேர்வுகளில் வெற்றி பெற்று தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அலவன்ஸ் வழங்கப்படுகிறது. வெல்டர் என்று சொல்லிக்கொள்பவர் அனைவருக்கும் இது வழங்கப்படுவதில்லை. இது நமது நிறுவனத்தில் மட்டும் வழங்கப்படுவதில்லை. உலக அளவிலுள்ள வெல்டர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச விதி. இதனை நிறுத்துவதோ வழங்காமல் இருப்பதோ சர்வதேச சட்டத்தின்படி மிகப்பெரிய குற்றமாகும்.
இந்த அலவன்சை நிர்வாகமே எந்த பங்குபெறும் சங்கமும் ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக அறிவிப்பது சர்வாதிகாரமானது. தொடர்புடைய வெல்டர்கள் போராடினால் அவர்களை அழைத்துப் பேசி சுமுகமான தீர்வு காண்பதுதான் நல்ல நிர்வாகத்துக்கு அழகே தவிர அதை விடுத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது பாசிசமானது. இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் அந்தமான் சிறையிலும் போடுவார்களோää அல்லது தூக்கில் போடுவார்களோ எனறு அஞ்சும் அளவிற்கு நிர்வாகத்தின் எதேச்சாதிகாரப்போக்கு நிலவுகிறது.  இது வன்மையான கண்டனத்துக்குரியது.
நமது பாய்லர்கள் தரமாக இருந்தால்தான் நமக்கு ஆணைகள் நிறையக் கிடைக்கும். அது தரமாக இருக்க வேண்டும் என்றால் வெல்டர்களும் தரமான திறமையானவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு நியாயமாகவும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய அலவன்ஸ்களும் கிடைக்க வேண்டும். எனவேää நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையை நிறுத்தி ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக் கொள்கிறோம். 14.05.2018

வெள்ளி, 11 மே, 2018

நீட் தேர்வால் மாணவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்

 மருத்துவப் படிப்பிற்காக நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் 3 மாணவர்கள் தங்களது தந்தையரை இழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வியாளர் ராம சுப்ரமணியன் நீட் தேர்வால் மாணவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் இதனால் யார் அதிக பயனடைவார்கள் என்பது குறித்து நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் கடந்த மூன்று வருடங்களாக மருத்துவப் படிப்புக்கான "நீட்'' எனும் நுழைவுத் தேர்வு பற்றிய புத்தகங்களும் பாதகங்களும் பல தரப்பில் அறிமுகப்படுகின்றன. இந்தியாவில் சுமார் 65000 இடங்கள் மருத்துவப் படிப்பிற்கும் 25000 இடங்கள் பல் மருத்துவப் படிப்பிற்கும் உள்ளன. இது தவிர 2018ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேதம் யுனானி சித்தா ஹோமியோபதி யோகா போன்ற படிப்பிற்கும் ""நீட்'' தேர்வு அவசியமாக்கப்பட்டது. வெளி நாட்டில் மருத்துவம் படிக்கவும் "நீட்'' தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீட் எனும் நுழைவுத் தேர்வு பொறியியல் வணிகம் போன்ற இதரப் படிப்புகளுக்கும் அவசியம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது.

உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு சட்டப்படி செல்லாது என முந்தைய உத்தரவினை மாற்றி எழுதியது. தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தின் மூலம் 2016 ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து ஒரு வருடம் விலக்கு உண்டு என்று தெரிவித்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. 2017ம் ஆண்டு தமிழக அரசு அரசுக் கல்லூரிகள் சேர்க்கைக்கு நீட் தேர்வு கிடையாது என்ற ஒரு மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைத்ததற்கு இன்றுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

 மத்திய அரசு இவ்விஷயத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில்இ பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.சி.இ ஐ.சி.எஸ்.சி போன்ற 42 வகைப் பாடத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கிய பாடங்களான உயிரியல் பௌதீகம்

 ரசாயனம் ஆகியவை ஒரே மாதிரியாக இல்லை. இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான பாடத்திட்டம் வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் குறிப்பிட்டாலும்

 அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் வெவ்வேறு விதமான பாடத்திட்டங்கள் கொண்ட நம் நாட்டில்இ சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட அடிப்படையில் சி.பி.எஸ்.சி. எனும் மத்திய கல்வித் துறை அமைப்பு கேள்வித் தாள்களைத் தயாரித்து தேர்வினையும் நடத்துவது ஒரு சமதளப் போட்டி இருக்காது என்று பல மாநிலங்களிலும் எதிர்ப்பு இருந்தாலும் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்குப் பெருந்தீங்கு ஏற்படுத்தும் என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்க ஆவன செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிமொழி அளித்ததை ஒட்டி தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இதை ஏற்க இயலாது என்று மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அறிவித்தது தமிழக மாணவர்களுக்கு அநீதியாக முடிந்தது.

இதனால் மருத்துவம் படிக்க முடியாது போன அனிதா எனும் மிகச் சிறந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிரான போரட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. 2016இல் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு 30 இடங்களே கிடைத்த நிலையில் 2017இல் 1310 இடங்கள் அவர்கள் பெற்றனர். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 3382. தமிழகப் பள்ளி பாடத்திட்டத்தின்படி 23830 மாணவர்களில் 2224 பேர் தகுதி பெற்றனர். அதாவது வெறும் 9.33% மாணவர்கள் மட்டுமே. சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு "ஜாக்பாட்'' அடித்தது. தேர்வு பெற்ற மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வுக்காக பெரிய அளவில் கட்டணம் செலுத்தி தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் ஒருவருடம் இருவருடம் முன்பே பிளஸ்டூ தேர்வு எழுதியவர்களும் மீண்டும் இந்த நீட் தேர்வில் பங்கு பெற பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆக பணம் சமதளமற்ற பாடத்திட்டங்கள் கடுமையான பயிற்சி ஓரிரு வருடம் கால விரயம் ஆனாலும் மீண்டும் போட்டித் தேர்வில் பங்கு பெறுதல் என்பது அனைத்து மாணவர்களுக்கும் இயலாத ஒன்றே. இது அதர்மமான போட்டித் தேர்வு என்று தமிழகம் கொதிப்பது நிச்சயமாக அர்த்தமுள்ளது. மேலும் சி.பி.எஸ்.சி. க்குப் பதில் வேறொரு தந்திரமான அமைப்பு தேர்வினை நடத்தும் என்ற மத்திய அரசு அறிவிப்பு காற்றில் விடப்பட்டது. பொறியியல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர 2006 ஆம் ஆண்டு வரை தமிழக அரசால் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பிளஸ்டூ மதிப்பெண்ணுக்கு 66% நுழைவுத் தேர்வுக்கு 37% என இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வெற்றிபெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு வந்த பிறகு பிளஸ்டூ மதிப்பெண்ணைக் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நுழைவுத் தேர்வுக்குத் தயாரிப்பு மன உளைச்சல்இ கட்டணக் கொடுமை என்பதையெல்லாம் கணக்கெடுத்து இனி நுழைவுத் தேர்வே கிடையாது பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்ற 2006 ஆம் ஆண்டு சட்டம் அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது.

நீட் தேர்வின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தரமற்ற மாணவர்கள் சேர்க்கை கட்டணக் கொள்ளை ஆகியவற்றைத் தவிர்த்து நாடு முழுவதற்கும் மருத்துவப்படிப்பிற்கு ஒரே நுழைவுத் தேர்வு என்ற வகையில் தரமான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கட்டணக் கொள்ளையைத் தவிர்க்கலாம் என்ற அடிப்படை என்று வாதிடப்பட்டு உச்ச நீதிமன்றம் இதனை ஏற்றது. ஆனால் பல்வேறு தரப்பட்ட பாடத்திட்டங்கள் கொண்ட நாட்டில் சி.பி.எஸ்.சி. எனும் பாடத்திட்டப்படியே தேர்வு என்பதும்இ சி.பி.எஸ்.சி. அமைப்பே தேர்வை நடத்தும் என்பதும் எந்தவகையில் நியாயம்? நீட் தேர்வில் சென்ற வருடம் 11.38 லட்சம் பேர் பங்கு பெற்றனர். இவ்வருடம் 13.26 லட்சம் பேர் பங்கு பெற்றுள்ளனர். இதில் குறைந்தது 10 லட்சம் மாணவர்களாவது கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற்றவர்களே. இக்கட்டணம் ரூ. 15000 முதல் ரூ. 1.50 லட்சம் வரை பல பயிற்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டுள்ளன. சராசரியாக ரூ. 25000 பயிற்சிக் கட்டணம் என்று கணக்கிட்டால் 10 லட்சம் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகை ரூ. 2500 கோடி ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை என்று பேசியவர்கள் இந்த பயிற்சிக் கட்டணக் கொள்ளையைப்பற்றி என்ன கூறுகிறார்கள்? விண்ணப்பப் படிவம் ஒன்று ரூ. 1இ400 என்றும்இ தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு ரூ. 750 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சராசரியாக ரூ. 1000 என்று எடுத்துக் கொண்டாலும்இ 13.26 லட்சம் மாணவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவத்திற்கு மட்டும் சி.பி.எஸ்.சி. பெற்ற தொகை ரூ. 13.26 கோடிகள். இது பகற்கொள்ளைதானே! தனியார் மருத்துவக் கல்லூரிகள்இ பல்கலைக் கழகங்கள்இ தாங்கள் விருப்பப்பட்டபடியே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆகஇ தனியார் கட்டணக் கொள்ளை என்பது நிறுத்தப்படவில்லை. ஒரு தனியார் பல்கலைக்கழகம் வருடத்திற்கு ரூ. 25 லட்சம் கட்டணம் வசூலிக்கிறது. இந்த பயிற்சி நிலையங்கள் பெரிய அளவு கட்டணம் வசூலிப்பதைப் பார்த்துஇ முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நீட் போன்ற போட்டித் தேர்வு பயிற்சி வணிகத்தில் நுழைகின்றது. ஆக அம்பானி போன்றவர்கள் ஆதாயம் பெறவே இந்த ஏற்பாடு என்று பலரும் ஐயப்படுவது தவறா? கேள்வித் தாள்களிலும் குளறுபடிகள் ஏராளம். தமிழ் வினாத்தாளில் 68 வார்த்தைகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் 49 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் தமிழக மாணவர்கள் எழுதியுள்ளனர். சுமார் 5700 மாணவர்கள் கேரளா சிக்கிம் ராஜஸ்தான் போன்ற இடங்களுக்குத் தேர்வு எழுத அனுப்பப்பட்டதால் பல்வேறு உடல் மன நிதி வேதனைக்கு உள்ளாயினர். 3 மாணவர்கள் தங்கள் தந்தையர்களை இழந்தனர். இப்படி மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடந்திருந்தால் பெரிய போராட்டமே வெடித்திருக்குமல்லவா! சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வு கேள்விகள் வெளி ஆனதற்கு எதிர்ப்பு வந்ததும்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மீண்டும் தேர்வு இல்லை என்றும்இ பிளஸ்டூ வகுப்பு பொருளாதாரத்தாளுக்கு மட்டும் மீண்டும் தேர்வு என்றும் சந்தடி இல்லாமல் மத்திய அரசும் சி.பி.எஸ்.சி.யும் பிரச்னையை முடித்துவிட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஏழாயிரம் மாணவர்களில் 5700 மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு எழுத இடமில்லை என்று சி.பி.எஸ்.சி. கூறியதை உச்சநீதி மன்றமும் ஆமோதித்தது. அகில இந்திய அளவில்அனைத்து பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவதும் பிளஸ்டூ தேர்வு மதிப்பெண்ணுக்கு உரிய மதிப்பு அளிப்பதும் தேவையான அளவிற்கு புதிய அரசு மருத்துவக் கல்வி நிலையங்களை நாடு முழுவதும் உருவாக்குவதுமே இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும். பள்ளிகளைப் பயிற்சி மையங்களாக மாற்றக் கூடாது. வடமாநிலங்களில் பிளஸ் ஒன் பிளஸ்டூ தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றனர். மற்ற நேரங்களில் பயிற்சிப் பள்ளிகளிலேயே இருக்கின்றனர். ஆகவே சமதளமற்ற நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் மாணவ சமுதாயத்திற்கு நியாயம் வழங்க இயலாது. மேலும் தேசிய ஒருமைப்பாட்டை குலைக்கும் நடவடிக்கையாக அமையும் என்ற பெருங்கவலையும் ஏற்படுகின்றது. இக்கவலை ஆழமானது. அர்த்தமுள்ளது. உலக அளவிலும் கூட நிறைய பணச் செலவும்இ மாணவர்களுக்கு மனரீதியானஇ உடல் ரீதியான பிரச்னைகளை உருவாக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்பு அதிகமாகிறது. அமெரிக்காவில் "சாட்'' என்றும் "ஆக்ட்'' என்றும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டாலும்இ கருப்பர்கள் ஹிஸ்பானிக் மற்றும் ஏழ்மையான குழந்தைகளால் தேர்ச்சி பெற இயலவில்லை. இது அநியாயம் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக 4300 பல்கலைக் கழகங்களில்இ 1000 பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு இல்லை என அறிவித்து விட்டன. அமெரிக்க "டியூக்'' பல்கலைக்கழகம் ஆய்வில் நுழைவுத் தேர்வு மோசடிகள் 70%யும் கடந்து விட்டன என்று குறிப்பிடுகின்றது. சீன நாட்டில் "கௌகாவ்'' எனும் கடுமையான நுழைவுத் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கின்றது. நுழைவுத் தேர்வு நடத்தும் ஜுன் மாதத்தை "கருப்பு மாதம்'' என்று குறிப்பிடுகின்றனர். தென் கொரியாவில் நுழைவுத் தேர்வு மோசடிகளைப் பற்றி "ஏமாற்றுக்கலாச்சாரம்'' எனும் நூலில் டேவிட் கலஹன் என்பவர் எழுதியுள்ளார். நுழைவுத் தேர்வு நடக்கும்போது தென் கொரியா முழுவதும் மயான அமைதி கடைபிடிக்கின்றது. ஆஸ்திரேலியாவில் 40மூ நுழைவுத்தேர்வு மோசடிகள் என கிரிபித் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. தாய்லாந்து இங்கிலாந்திலும் நுழைவுத் தேர்வு பற்றிய கவலை மேலோங்குகிறது. பாகிஸ்தானில் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் அதிகமானதால்இ "இறைவனுக்கு பயந்து தேர்வினை எழுதுங்கள்'' என்று பல இடங்களில் மசூதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆக உலகம் முழுவதிலும் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிய அச்சம் அதிகரிக்கும் நிலையில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையில்லை நல்ல பலன்களை விட பாதகம் அதிகரிக்கும். கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் என்பதே நேர்மையான கல்வியாளர்களின் கருத்தாக அமைகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.