திங்கள், 31 அக்டோபர், 2016

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடுபடவில்லை என்று சொல்வதெல்லாம் ஒருவித மனநோயே அல்லாமல் வேறில்லை

Image result for periyar ambedkar image



சில போராளிகள் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்ற பொங்குகிறார்கள்.

அவர்கள் உண்மையில் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைளை அறியாதவர்கள் என்றே நான் கருதுகின்றேன்.
எப்படியெனில் அம்பேத்கர் அவர்கள் ஜாதியை ஒழிக்க வழி என்ற நூலில் ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் ஜாதியைப் புனிதம் என்று சொல்லுகின்ற மதத்தை ஒழிக்க வேண்டும் என்றார். ஜாதி புனிதமானது என்று சொல்லுகின்ற சாஸ்திரங்களை ஒழிக்க வேண்டுமென்றார். சடங்குகள் சம்பிரதாயங்கள் வேதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் அனைத்துமே சாதி புனிதமானது என்று கூறுகின்றன.
அவற்றை ஒழிக்காமல் ஜாதியை ஒழிக்க முடியாது என்றார் அம்பேத்கர்.

 இந்தப் புனிதங்கள் அனைத்தையும் அழித்தொழிக்கப் பாடுபட்டவர்தானே தந்தை பெரியார்? கடவுள் புனிதமானது என்றனர். அதனை அழித்தொழிக்க முயன்றபொழுது மதம் புனிதமானது என்றார்கள். அதனை ஒழிக்க முயன்றபொழுது சாஸ்திரங்களும் சடங்குகளும் புனிதமானது என்றனர். அதனையும் அழித்தொழிக்க தந்தை பெரியார் பாடுபட்டபோது இவை அனைத்தையும் பாதுகாப்பது பார்ப்பானாக இருந்ததால் அந்தப் பார்ப்பானையும் எதிர்த்துப் போராடினார்.

தீண்டாமையை ஒழிய ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அந்த ஜாதியை ஒழிக்கவே தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் பெரியார்.

இந்த ஜாதியை மதத்தை சாஸ்திரங்களை சடங்குகளை புராணங்களை இதிகாசங்களை வேதங்களை இராமாயணத்தை மகாபாரதத்தை பகவத் கீதையை இராமனை கிருஷ்ணனை பிள்ளையாரை எதிர்த்து ஒரு சுண்டு விரலைக்கூட அசைக்காதவர்கள்தான் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்று கூசாமல் சொல்கிறார்கள்.

ஜாதி ஒழிவதால் மேல்ஜாதி என்று நம்பப் படுகின்றவனுக்கு அவனுடைய மேல்ஜாதித் தன்மை போகிறது. அது அவனுக்கு நட்டம்தான். ஆனால் ஜாதி ஒழிக்கப்படுவதால் தன்மீது சுமத்தப்பட்ட இழிவுகள் அனைத்தும் நீங்கி சுதந்திர மனிதனாக மாறுகின்றவன் தாழ்த்தப்பட்டவன்தான். எனவே பெரியாரின் போராட்டங்களால் பெரிதும் பயனடைகின்றவன் தாழ்த்தபட்ட மக்களே!

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடுபடவில்லை என்று சொல்வதெல்லாம் ஒருவித மனநோயே அல்லாமல் வேறில்லை

பெரியார் மதம் மாறாததை ஒரு பெரிய குறையாகப் பேசுகிறார்களே? அதன் பொருள் என்ன?

தலித்தியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் பெரியார் மதம் மாறாததை ஒரு பெரிய குறையாகப் பேசுகிறார்களே? அதன் பொருள் என்ன?

ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இரண்டுபேரும் ஜாதி ஒழிப்புக்காகச் சரியான வழிகளைக் கண்டறிந்தார்கள் என்பதிலும் எந்த அய்யமும் கிடையாது.

ஆனால் இந்த இந்துமத சனாதனவாதிகளிடம் போராடிப் பயனில்லை. இந்த இழிவிலிருந்து தானும் தனது மக்களும் விலகிவிட்டால் போதும் என்று கருதிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பவுத்த மார்க்கத்துக்கு மாறினார். அதனைத் தந்தை பெரியாரும்கூட ஆதரித்தார்.

அண்ணலுடைய நிலைப்பாட்டை தந்தை பெரியார் எந்த விதத்திலும் குறைகூறியதில்லை.
ஆனால் தந்தை பெரியார் அவர்கள் மதம் மாற விரும்பவில்லை. மதம் மாறிவிட்டால் தன்னைப் பொறுத்தவரையில் ஜாதியற்றவனாக ஆகிவிடலாமே தவிர இந்த இந்துமதச் சாக்கடையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மாட்டிக்கொண்டு பார்ப்பன சனாதனக் கும்பலிடம் தவித்துக் கொண்டிரக்கிற கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன தீர்வு?
அந்த மக்களை இந்த ஜாதிச் சகதியிலிருந்து மீட்டெடுக்க வேண்டாமா?
அந்த மக்களுடைய இழிவைத் துடைத்தெறிய வேண்டாமா? அவர்களது தன்மானத்தை கவரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா?
என்பதைப்பற்றிச் சிந்தித்த தலைவர் தந்தை பெரியார்.

இந்து மதத்திலேயே இருந்துகொண்டு தன்னை ஒரு இந்துவாக இந்து சம்பிரதாயங்களைக் கடைப்பிடிககிற ஒரு உயர்ஜாதிக் காரராகக் காட்டிக் கொள்வதல்ல அவருடைய நோக்கம். மாறாக எவையெல்லாம் ஜாதியைப் பாதுகாக்கிறதோ அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார். அதற்காக தன் இறுதிநாள்வரை பாடுபட்டார்.

சாக்கடை ஒழிய வேண்டும். அதனால் வியாதி பரவுகிறது என்று சொன்னால் அந்த சாக்கடை எங்கு இருக்கிறதோ அங்கேயே இருந்து அதன் நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு அதனை ஒழிக்கின்ற பணியைச் செய்தால்தானே சாக்கடை ஒழியும்? அதைவிட்டு சாக்கடை இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன். அதன் வாடையே எனக்கு ஆகாது. வேறு எங்காவது சென்ற விட்டால் இந்த சாக்கடை நாற்றத்திலிருந்து தப்பி விடலாம் என்று சென்று விட்டால் எப்படி சாக்கடை ஒழியும்?
அதனால்தான் அம்பேத்கர் அவர்கள் தன்னையும் பவுத்த மார்க்கத்திற்கு அழைத்தபோது நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் ஆனால் நான் இங்கேயே இருந்து ஜாதியை ஒழிக்க நீங்கள் என்னென்ன வழிகளையெல்லாம் சொல்லி இருக்கின்றீர்களோ அந்த வழிகளையும் சேர்த்து என்னுடைய கொள்கைளையும் இணைத்து ஜாதி ஒழிப்பிற்காகப் பாடுபடுகிறேன் என்று தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டார் பெரியார்.
அதனைப் புரிந்துகொள்ளாத சிலபேர்; இந்துமதம் வேண்டாம் என்ற பெரியார் ஏன் இந்த மதத்தை விட்டு மாறவில்லை என்ற பொங்குகிறார்கள்.

சனாதனவாதிகள் பொங்குவதில் பொருள் உண்டு. ஏனெனில் இந்த ஆள் இங்கேயே இருந்துகொண்டு நம்முடைய ஆதிக்கத்தையும் நம்முடைய வண்டவாளங்களையும் பித்தலாட்டங்களையும் தோலுறித்து நம்முடைய மதத்தை ஒழித்துக் கட்டி நாம் உழைக்காமல் உண்டுகொளுக்க உதவிடும் நம் மதத்தை ஒழித்துக் கட்டி நம் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறாரேää இவர் மதம் மாறிவிட்டால் நமக்குத் தொல்லை ஒழியுமே என்று கருதுகிற பார்ப்பன சனாதனவாதிகள் எண்ணினால் அதில் பொருளுண்டு.

ஆனால் தலித்தியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் பெரியார் மதம் மாறாததை ஒரு பெரிய குறையாகப் பேசுகிறார்களே? அதன் பொருள் என்ன?

இந்தப் பார்ப்பன சனாதனவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் காலகாலமாக அப்படியே கிடக்க வேண்டும். அவர்கள் எக்கெடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என்கிற பொறுப்பற்ற போக்கு என்பதைவிட பார்ப்பன எதிரியாக இருந்த பெரியாரைக் குறை கூறுவதன் மூலம் பார்ப்பன ஆதரவாளர்களாக மாறி பார்ப்பனர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்? இதில் ஏதாவது மாற்றுக் கருத்து இருக் முடியுமா?

தன்னுடைய மக்களின் இழிவு நீங்க வேண்டும் என்பதற்காக மதம் மாறிய அம்பேத்கரை பெரியாரியவாதிகள் எந்த இடத்திலும் குறை சொல்லாதபோது
அனைத்து மக்களுடைய இழிவையும் போக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளெல்லாம் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்ட நிலையிலும் இந்த மக்களின் சூத்திரப்பட்டத்தை ஒழிக்க தன் மூத்திரப்பையைக் கையில் பிடித்துக் கொண்டு பாடுபட்ட தந்தையை
தலித்தியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் குறை சொல்வதன் பொருள் என்னவாக இருக்க முடியும்?

அம்பேத்கருடைய உண்மையான கொள்கையை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அல்லது புரிந்துகொண்டும் புரியாதது மாதிரி நடிப்பதன் மூலம் பார்ப்பனர்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்? சிந்திப்பீர்!

மோடி அரசாங்கம் வந்த பிறகு காவிக்கும்பல் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள?


மோடி அரசாங்கம் வந்த பிறகு காவிக்கும்பல் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள?

பட்டேல் ஒன்றும் ஆர்எஸ்எஸ் காரரோ இந்துமகாசபையைச் சேர்ந்தவரோ அல்லவே கடைசிவரை காங்கிரசில் இருந்தவர்தானே அவரை ஏன் காவிக்கும்பல் உயர்த்திப் பிடிக்கிறது?

காந்தி கொலையை அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். தடுக்கவில்லை. தடுக்காதது மாத்திரமல்லாது அதன் முக்கிய குற்றவாளியான சவர்க்கரை தப்பிக்க வைத்தார். ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

அதைவிட மிக முக்கியமானது அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல காரியங்களைச் செய்திருக்கிறார்.

அவர் எப்படிப்பட்ட ஜாதி வெறியர் என்பதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
மேலும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 7ல் உள்ள செய்தி மேலும் அவரை அம்பலப்படுத்துகின்றது.
1935 பம்பாய் மாகாணம் டோல்கா தாலுகா கவிதா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியை அம்பெத்கர் விவரிக்கிறார்.

பொதுப்பள்ளிகளில் ஹரிஜனக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம் என பம்பாய் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நான்குபேர் தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் அக் கிராமத்தின் சாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகள் தீண்டத்தகாத குழந்தைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து படிப்பதை விரும்பாமல் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள்.
அதன்பின் ஒரு தீண்டத்தகாதவர் ஒரு பிராமணரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சாதி இந்துக்கள் தீண்டத்தகாதவர்களின் கிராமத்தில் புகுந்து அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள். ஈட்டிகள் அம்பு வாள்கள் போன்ற ஆயுதங்களைக்கொண்டு வயதான ஆண்களையும் பெண்களையும் தாக்கினார்கள்.தாக்கப்பட்டவர்களில் சிலர் பயந்துகொண்டு காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். வடுகளுக்குள் புகுந்து கதவைத் தாழிட்டு; கொண்டார்கள் இந்துக்கள் அந்த வீடுகளின் கதவுகளை உடைத்து ஓடுகளையும் சாரக்கட்டைகளையும் உடைத்து எரிந்தார்கள்.

தீண்டாதோரை வேலைக்கு அமர்த்த மறுத்தார்கள். கால்நடைகளை மேய்ப்பதற்கு இடம் தராமல் தாக்கினார்கள். தண்ணீர்க்கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றினார்கள்.
இவ்வளவு கொடுமைகள் செய்த உயர்சாதியினர் மீது வழக்குப் போட விடாமல் தடுத்து அவர்களுக்கு தண்டனை தரவிடாமல் தடுத்து உயர் ஜாதியினரைக் காப்பாற்றியவர் வல்லபாய் பட்டேல்; என்பதை மிகவும் விரிவாகவும் ஆணித்தரமாகவும் அண்ணல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரைத்தான் காவிக்கும்பல் தலைமேல தூக்கி வைத்து ஆடுகிறது.
அவரைத் தலைமேல் தூக்கி வைத்து ஆடும் அதே கும்பல் அண்ணலையும் பாராட்டுவதாக நடிக்கிறது.
அவர்களைப் போன்றவர்களிடம் தீண்டத்தகாதவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று அண்ணல் அவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 141வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்இ பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
செய்தி

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

வீரமணி இந்த இயக்கத்தின் தலைவராகாமல் இருந்திருந்தால் பெரியாரால் போராடிப்பெறப்பட்ட உரிமைகள் நமக்குத் தொடர்ந்து கிடைத்திருக்குமா?


Image result for veeramani image
பத்து வயதுக்கும் குறைவான வயதில் பகுத்தறிவுக்கொள்கையை மேடையேறி சிங்கமென கர்ஜித்த சிறுவன் வீரமணி, தான் அந்த இயக்கத்தின் தலைவராவோம் என்று எண்ணி இயக்கத்திற்கு வந்தவரல்ல. ஆனால் அவர் இந்த இயக்கத்தின் தலைவராகாமல் இருந்திருந்தால் பெரியாரால் போராடிப்பெறப்பட்ட உரிமைகள் நமக்குத் தொடர்ந்து கிடைத்திருக்குமா? எண்ணிப்பாருங்கள்.

பெரியார் அறக்கட்டளைப் பாதுகாப்பு :
   
பெரியார் மறைந்துவிட்டார். அப்பொழுது திராவிடர் கழகம் திமுகவுடன் இணையப் போகிறது. கலைக்கப் போகிறார்கள் திராவிடர் கழகத்தை என்ற வதந்தியை உலவவிட்டார்கள். பெரியார் மறைந்தவுடன் செய்தியாளர்கள் இக்கேள்வியை வீரமணியிடம் எழுப்ப திராவிடர் கழகம் இணையாது, கலையாது, தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார் வீரமணி. பெரியாருக்குப்பின் அன்னை மணியம்மையார் தலைமையில் இயக்கம் வீறுநடைபோட அன்னையாருக்கு உதவியாக இருந்து இயக்கத்தைக் கட்டிக் காத்தவர் வீரமணி.

நெருக்கடி நிலைக்காலத்தைப் பயன்படுத்தி பெரியார் சொத்துக்களை அபகரிக்கவும் அவர் கட்டிக்காத்த விடுதலையை ஒழித்துக்கட்டவும் பார்ப்பனர்கள் பகீரத முயற்சி எடுத்தார்கள். ஆனால் வீரமணியிடம் அம்முயற்சி பலிக்கவில்லை. வருமானவரித் துறையினர் பெரியார் காலத்திலேயே பல இலட்ச ரூபாய் வரி போட்டார்கள். அது அன்னை மணியம்மையார் காலத்திலும் அவரது மறைவுக்குப் பிறகும் பல மடங்காகி எண்பது லட்ச ரூபாய்க்கு மேல் ஆனது. அய்யா வீரமணி அவர்கள் தனது நுட்பமான அறிவால் அதையெல்லாம் எதிர்கொண்டு எண்பது லட்சம் ரூபாய் வருமானவரியைத் தள்ளுபடி செய்ய வைத்ததோடு பெரியார் அறக்கட்டளையை அறக்கட்டளைதான் என்று நீதிமன்றத்தையே அறிவிக்கச் செய்து அதற்கு வருமானவரியிலிருந்து விலக்குப் பெற்றுப் பெரியார் சொத்தைப் பாதுகாத்தார்.

வருமான உச்சவரம்பு நீக்கம்: 
   
எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார் என்றவுடன் ஆரியம் துள்ளாட்டம் போட ஆரம்பித்தது. பெரியார் அவர்கள் எந்த சமூகநீதிக்காக காங்கிரசைவிட்டு வெளியே வந்தாரோ அதை ஒழிக்க இதுதான் சரியான தருணம் என்று நினைத்து சதி வேலைகளில் இறங்கியது. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் எம்ஜிஆர் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதால் அவரைக்குழப்பிவிட்டு வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒன்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று எம்ஜிஆர் காலத்தில் உத்தரவு வந்தது. பெரியாரிடம் பாடம் பயின்ற வீரமணி இதனைக் கடுமையாக எதிர்த்தார். இட ஒதுக்கீட்டின் வரலாற்றை எம்ஜிஆருக்கு எடுத்துச்சொன்னார்.

ஒருவன் ஏழை என்பதால் அவனுக்குப் படிப்பு மறுக்கப்படவில்லை. அவன் பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் கல்வி மறுக்கப்பட்டது. ஏழையாக இருந்த பார்ப்பனப்பிள்ளைக்குக் கல்வி கிடைத்தது. பணக்காரனாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடையாது என்று இருந்த நிலையை எடுத்துச்சொல்லி எந்த ஜாதியின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அந்த ஜாதியின் காரணமாக அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதுதான் உண்மையான சமூகநீதி என்று கூறி எம்ஜிஆர் அவர்களிடத்தில் இடஒதுக்கீட்டுத் தத்துவத்தைப் புரியவைத்த பிறகு அதனைப் புரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு அதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்து வந்த 31 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக்கினார். அதுதான் பின்னர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகமாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதமாகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த வருமானவரம்பு ஆணை ஒழிந்து இடஒதுக்கீடு 50 சதவிகிதமாக ஆனபோது அய்யா வீரமணி அவர்களுக்கு அய்ம்பது வயதுகூட நிறைத்திருக்கவில்லை. அவ்வளவு இளவயதில் மிகப்பெரும் சமூகநீதிக்காவலராக விளங்கினார் அய்யா வீரமணி. அந்த வருமான வரம்பு ஆணை நடைமுறைப்படுத்தப் பட்டிருக்குமேயானால் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு என்பதேகூட இந்நேரம் ஒழிந்துபோயிருக்கும்.


இடஒதுக்கீட்டில் பார்ப்பனப்புரட்டை முறியடித்தல்: 

எம்ஜிஆர் அவர்களது அமைச்சரவையில் ஹண்டே என்ற பார்ப்பனர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் குலக்கல்வித்திட்டம் கொண்டுவந்த இராஜாஜியின் சுதந்திராக்கட்சியைச் சேர்ந்தவர். அவர்களுக்கு இடஒதுக்கீட்டின்மீது எப்பொழுதுமே ஒரு கண் உண்டு. எனவே, அவரது துறையில் நடைபெற்ற பணிநியமனத்தில் திறந்தபோட்டி என்பதை இதர வகுப்பினர் என்று வியாக்கியானம் தந்து முழுக்க முழுக்க முன்னேறிய ஜாதிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தது அந்தத்துறை. வெகுண்டெழுந்தார் வீரமணி. அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீட்டை சட்டவிரோதமாக ஏமாற்றுகிறது சுகாதாரத்துறை என்று வழக்குப்போட்டார். அந்த திட்டம் முறியடிக்கப்பட்டு பொதுப்போட்டியில் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தேர்வாகும் வழிவகை செய்தவர் அய்யா வீரமணி.


நுழைவுத்தேர்வை எதிர்த்துப்போர்ப்பரணி : 
 
அப்பொழுது கல்வியிலும் வேலைவாய்ப்புக்களிலும் ஆட்களைத் தேர்வு செய்வதற்கு நேர்முகத்தேர்வுமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அந்த முறையின்மூலமாக தேர்வுக்கு வருகின்றவர்களின் குடும்பப் பின்னணி, முதல்தலைமுறையாக வருகிறார்களா, கிராமப்புறத்தைச் சேர்ந்தவரா, ஏழை விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவரா என்றெல்லாம் விசாரித்து முதல்தலைமுறையில் வருபவர்களுக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. அதனால் ஏழை எளிய கிராமப்புற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தை எடுத்துச்சொல்லி நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் கடுமையாகப் போராடினார். நுழைவுத்தேர்வு நுழைவதா? என்ற அவரது நூல் நுழைவுத்தேர்வின் கேடுகளை அப்பட்டமாக விளக்கியது.

அது இருபது ஆண்டுகளுக்குப்பின்னால் நிறைவேறியது. அந்த நுழைவுத்தேர்வு ரத்துக்கு முதல்முதல் குரல் கொடுத்தவர் அய்யா வீரமணி அவர்கள்தான். தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ஒழிக்கபட்;டுவிட்டாலும் அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும் என்று மத்திய மனிதவளத்துறையின் அறிவிப்பைக் கடுமையாக இன்னமும் எதிர்ப்பதில் அய்யா வீரமணி அவர்கள் முன்னணியில் இருந்து வருகிறார்.

சமூகநீதிக்கு எதிரான சதி முறியடிப்பு : 

குஜராத்தில் மருத்துவ உயர்படிப்புக்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 2 சதவிகிதம் இடஒதுக்கீடு அந்த மாநில அரசால் வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து உயர்ஜாதி ஊடகங்கள் அங்கே மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டன. ஜாதிவெறியர்கள் கலகம் செய்தனர். அந்தக் கலவரத்தை ஆதரித்து தமிழகத்தில் அப்பொழுது முற்பட்டோர் என்ற பெயரைச்சொல்லி இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா? அனுமதியோம், அனுமதியோம் என்று ஆர்த்தெழுந்தார் அய்யா வீரமணி.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக எந்த இடத்தில் பேரணி நடத்த இருக்கிறார்களோ அதே இடத்தில் அதே தேதியில் அதே நேரத்தில் நாங்களும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேரணி நடத்துவோம் என்று அறிவித்தார் அய்யா வீரமணி. எம்ஜிஆர் அவர்கள் முற்பட்டோர் நடத்த இருந்த பேரணிக்கு அனுமதியை ரத்து செய்தார். அதன்மூலம் இடஒதுக்கீட்டு எதிர்ப்புக்குரல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. அதேபோல பார்ப்பன சங்கம் இடஒதுக்கீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் அறிவித்தார்கள். அதனை எதிர்த்து உண்ணும் விரதம் நடத்தப்படும் என்று அறிவித்து அதனையும் முறியடித்தவர் அய்யா வீரமணி அவர்கள்.

மண்டல் குழு அறிக்கைக்கான போராட்டமும் வெற்றியும் : 

சமூகநீதி வரலாற்றில் மண்டல்குழு அறிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்குமுன்பு சென்னை மாகாணத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு இருந்தது. சுதந்திர இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசில் ஒழிக்கப்பட்டுவிட்டது. சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதற்காக காகாகலேல்கர் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் தலைவரே அந்த அறிக்கைக்கு எதிரான கருத்தைக் கூறியதால் அந்த அறிக்கை அப்படியே ஊறுகாய் ஜாடிக்குள் சென்றுவிட்டது.


1977ல் ஜனதா ஆட்சிக்காலத்தில் பி.பி.மண்டல் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது இந்தியாமுழுவதும் ஆய்வுசெய்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது. அந்த அறிக்கை வெளியான உடனேயே இந்து பத்திரிகை அந்த அறிக்கையைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று தலையங்கம் தீட்டியது.

பெரியாரிடம் பாடம் பயின்ற அய்யா வீரமணி உடனடியாக விடுதலை யில் மண்டல் அறிக்கையை விரைந்து அமுல்படுத்த வேண்டும் என்று அறிக்கை எழுதினார்.
இந்து பத்திரிகைய நிருபர் அய்யா வீரமணியிடம் மண்டல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அதை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை எழுதுகிறீர்களே! அது எப்படி? என்று வினவியபோது உங்கள் பத்திரிகையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அதை புதைகுழிக்கு அனுப்பவேண்டும் என்று ஏன் எழுதினீர்களோ அதே காரணத்துக்காகத்தான் நாங்கள் அதனை விரைந்து அமுலாக்க வேண்டும் என்று எழுதுகிறோம் என்று பதிலடி கொடுத்தார்.

அந்த மண்டல் அறிக்கையை வெளியிடவே மறுத்தது இந்திரா அரசு. அதனை வெளியிடுவதற்காக அய்யா வீரமணி அவர்கள் எடுத்த முயற்சிக்கு அளவே இல்லை. வடநாட்டிலிருந்து ராம்விலாஸ் பஸ்வான், சந்திஜித் யாதவ், சரத் யாதவ், போன்ற தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து மாநாடு நடத்தினார். இவரும் வடபுலத்திற்குச்சென்று பல்வேறு மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். இந்திராகாந்தி வீட்டுமுன்பு மறியல் செய்தார். இப்படி அவர் தலைமையில் மண்டல் அறிக்கையை வெளியிடவும் அதனை அமுல்படுத்தவும் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42. போராட்டங்கள் 16. வேறு எந்த இயக்கமும் இதுபோன்று ஒரு பிரச்சினைக்காகவே இத்தனை மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி இருக்குமா என்பது அய்யமே!

வாராது வந்த மாமணி வி.பி.சிங் :    

 மண்டல் அறிக்கை வெளியான பிறகு அதனை அமுல்படுத்துவற்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தியவர் அய்யா வீரமணியவர்கள். வாராது வந்தமாமணியாய் வி.பி.சிங் அவர்கள் பிரதமரான பிறகு அவர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மண்டல்குழு அறிக்கையில் கூறியுள்ள ஒரு பகுதியை மட்டும் அமுல்படுத்தினார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிஜேபி ஆர்எஸ்எஸ் கூட்டம் ரதயாத்திரை நடத்துவதாகக் கூறி நாடெங்கிலும் மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டது. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தபோது விபிசிங் அரசுக்கு எதிராக வாக்களித்து அவருடைய அரசையே கவிழ்த்தது பிஜேபி கும்பல். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒருமுறை அல்ல ஆயிரம் முறைகூட நான் பதவி இழக்கத் தயார் என்றார் விபி.சிங் அவர்கள்.

உபி முதல்வராகவும் இந்திரா அமைச்சரவையில் அமைச்சராகவும் பின்னர் ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த வி.பி.சிங் அப்பொழுதெல்லாம் மண்டல் குழு அறிக்கையைப் பற்றிப் பேசாதவர் பிரதமரானவுடன் அதனை அமுல்படுத்துவது ஓட்டுக்காக என்று கிண்டல் செய்தார் துக்ளக் சோ. உபி முதல்வராகவும் இந்திரா அமைச்சரவையில் அமைச்சராகவும் பின்னர் ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர் வி.பி.சிங். அப்பொழுதெல்லாம் மண்டல் குழு அறிக்கையைப் பற்றி வி.பி.சிங் அவர்களுக்கு எதுவும் தெரியாது. பிரதமர் ஆனவுடன் ராம்விலாஸ் பஸ்வான் மூலமாக அவருக்கு மண்டல் அறிக்கையை அமுல்படுத்துவதன் அவசியத்தைப் புரிய வைத்தவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் ஆவார்கள்.

~அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கிளிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேபோல சமுதாயப்பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து அந்த உணர்ச்சியை நான் பெறுகிறேன்| என்றார்  வி.பி சிங் அவர்கள்.

அந்த உணர்ச்சிதான் சமூகநீதிக்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் பதவி இழக்கத் தயார் என்று கூற வைத்தது.

தாழ்த்தப்பட்டோருக்கு மண்டல்குழு அறிக்கையின் பாதுகாப்பு :
 
இந்த மண்டல்குழு அறிக்கையை அமுல்படுத்துவதற்காக திராவிடர் கழகம் போராடி வந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடையே பிரித்தாளும் சூழ்ச்சி நடந்தது. அதாவது இந்த மண்டல்குழு அறிக்கையினால் தாழ்த்தப்பட்டோருக்கு எந்தவித நன்மையுமில்லை. எனவே, இப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்ற விசமத்தனமான கருத்து பரப்பப்பட்டது. அய்யா வீரமணி அவர்கள் இதற்கு சரியான விளக்கம் கொடுத்தார்கள். அதுவரை இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவரது இட ஒதுக்கீட்டையுமே ஒழிப்பதற்கு முயற்சித்தார்கள் என்பதையும் ஜாதி அடிப்படையில் எந்த இடஒதுக்கீடு இருந்தாலும் அது தகுதி – திறமையை பாதிக்கும் எனவும் எனவே ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றே அனைவரும் முயற்சித்தார்கள்.

மண்டல் குழு அறிக்கை என்பது தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு வேலி பொன்றது. அது அமுலானால்தான் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் பாதுகாக்கப்படும். இல்லையேல் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் மிகச் சுலபமாக அந்த இடஒதுக்கீட்டையும் ஒழித்து விடுவார்கள் என்று மிகத் தெளிவாக விளக்கமளித்தார்கள். அத்துடன் மண்டல்குழு அறிக்கையில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து வழங்கப்பட்டு வந்தாலும் அது முழுமையாக வழங்கப்படவில்லை என்பதையும் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டது. அவர்களுக்குரிய இடஒதுக்கீடு அனைத்துத் துறைகளிலும் அனைத்துப்பணிகளிலும் நிரப்பப்பட வேண்டும் என்று மண்டல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்தார்கள். அவரது கூற்று நூற்றுக்கு நூறு சரி என்று பின்னர் நிரூபணமானது.

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நியாயமானதுதான். ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அவசியமில்லை என்று அந்த இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் பேச ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு மண்டல் குழு அறிக்கை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்குமே பொதுவானது என்பதை எடுத்துக்கூறி ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் மண்டல்குழு அறிக்கையை அமுல்படுத்தப் போராட வேண்டியதன் அவசியத்தை அய்யா வீரமணி அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான சதி :     

மண்டல்குழு அறிக்கை செல்லுமா செல்லாதா என்று வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. திர்ப்பளித்த நீதிபதிகள் அந்த அறிக்கை செல்லும் அல்லது செல்லாது என்று தீர்ப்பளிப்பதற்குப் பதிலாக மண்டல் அறிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டு வழக்குக்குத் தொடர்பில்லாமல் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று அதில் குறிப்பிட்டனர். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு அப்பொழுது நடைமுறையில் இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிலுள்ள இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு பெரிய துருப்புச்சீட்டுக் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது.

வழக்கறிஞர் விஜயன் என்பவர் மூலம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் தமிழ்நாட்டிலுள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு செல்லாது@ 50 சதிவிகிதத்திற்குமேல் இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசோ இதில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியது. எதிர்க்கட்சிகளோ இதுதான் சரியான தருணம். இந்த அரசு இதில் அக்கறை காட்டவில்லை@ சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறைகூறி அரசியல் நடத்தலாம் என்று திட்டமிட்டன.

ஆனால் தந்தை பெரியார் வழிவந்த திராவிடர் கழகம் சும்மா இருக்க முடியுமா?

வகுப்புரிமைக்காகவே தன் வாழ்நாளில் பெரும் போராட்டம் நடத்திய தலைவர் பெரியார் அல்லவா? அவரது சீடரால் இந்த ஆபத்தைப் பொறுத்துக்கொண்டு வாளாவிருக்க முடியுமா? அப்பொழுது தமிழகத்தை ஆண்ட முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண்மணி. மத்தியில் பிரதமர் நரசிம்மராவ் ஒரு பார்ப்பனர். குடியரசுத்தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா என்ற பார்ப்பனர். அனைவருமே பார்ப்பனராக இருந்தாலும் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்வது. சிலர் இந்திய அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்கள்.

தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்தான் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை எங்கே? தீர்வு என்ன? என்பதைச் சரியாகக் கணித்து அதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள்.
31(சி) சட்டத்தை எழுதிக்கொடுத்தவர் தமிழர் தலைவர்:   மத்திய அரசை அணுகி இடஒதுக்கீட்டுக்காக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரச் செய்வது அப்போதைக்கு சாத்தியமல்ல என்றும் அதற்காக மாநில அரசே தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியாக ஒரு சட்டத்தை இயற்ற முடியும் என்றும் அப்படி சட்டம் இயற்றி அதனை இந்திய அரசியல் சட்டம் 9வது அட்டவணையில் பாதுகாப்பாக வைத்துவிட்டால் அதை எதிர்த்து யாரும் வழக்குத் தொடுக்க முடியாது என்பதையும் எடுத்துக்கூறி 31(சி) என்ற பிரிவின்படி ஒரு சட்டத்தையே எழுதிக்கொடுத்து அதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றச்செய்தார் அய்யா வீரமணி.

அதற்குப்பிறகு நாடாளுமன்ற இரு அவைகளிலும் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு சென்று குடியரசுத்தலைவரைச் சந்திக்கச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் என்று சொல்லிக் கொண்டவர்களெல்லாம் அக்குழுவில் செல்ல ஒத்துக்கொள்ளவில்லை.

தமிழர் தலைவர் அவர்கள் தமிழகத்திலுள்ள சிறிய அரசியல் கட்சிகள் சமுதாய அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று குடியரசுத்தலைவரைச் சந்தித்து அதற்கு ஒப்புதல் பெற்று அதனை 9வது அட்டவணையில் பாதுகாப்பாக இடம்பெறச்செய்தார்.

இந்த செயல் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

தேர்தலில் பங்கெடுக்காத ஒரு இயக்கம் சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்லாத ஒரு இயக்கம் ஒரு அரசியல் சட்டத்தை எழுதிக்கொடுத்து அதற்கு சட்டப்பாதுகாப்புப் பெற்றுத் தருவது மகத்தான ஒன்றாகும். அதனைச் செய்ததன்மூலம் அய்யா வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் உண்மையான கொள்கை வாரிசு என்பதையும் பெரியார் என்ற பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்த சரியான மாணவர் என்பதையும் தந்தையையும் விஞ்சக்கூடிய தனயன் என்பதையும் நிரூபித்துக் காட்டினார்.

 இந்திய அரசியல் சட்டம் இதே இடஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தின் காரணமாக முதல்முதலாகத் திருத்தப்பட்டது. அவரது தனயன் வீரமணி அவர்களால் ஒரு சட்டமே இயற்றப்பட்டு அது இந்திய அரசியல் சட்டத்தின் 76வது திருத்தமாக ஏற்கப்பட்டு 9வது அட்டவணையில் வைக்கப்பட்டது என்பது மிகப்பெரும் வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.

இந்த  ஒரு செயலுக்காகவே ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அவருக்கு ஊர்தோறும் சிலை அமைத்து அவருக்குச் சிறப்புச்செய்ய வேண்டும்.

ஆனால் நிலைமை எப்படி இருக்கிறது? இந்த இடஒதுக்கீட்டின்படி இன்று கல்வி வேலைவாய்ப்புப் பெறுகின்ற எந்த இளைஞனுக்கும் இந்த இடஒதுக்கீடு எப்படிக்கிடைத்தது என்ற வரலாறே தெரியாது.

நன்றிபாராத தொண்டுக்குச் சொந்தக்காரர்:   

கலைஞர் அவர்கள் ஒருமுறை இந்த சட்டத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது இதனை எழுதிக்கொடுத்தவர் மானமிகு வீரமணி. ஆனால் எந்த இடத்திலும் செல்வி ஜெயலலிதா அவர்கள் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை என்று சொன்னார்கள். அதற்கு ஆசிரியர் அவர்கள் என்ன கருத்துத் தெரிவித்தார்கள் தெரியுமா? திராவிடர் கழகம் என்பது நன்றிபாராத தொண்டினைச்  செய்யக்கூடிய இயக்கம். அதனால் யாரும் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்களா என்று பார்ப்பதைவிட அதனால் பயனடையும் மக்கள் யார் என்றுதான் பார்க்கவேண்டும் என்று அடக்கத்தோடு சொன்னவர்தான் அய்யா வீரமணி அவர்கள்.

மதவெறியை மாய்க்க மனிதநேயம் காக்க அய்யா வீரமணியின் முயற்சி:   

இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் ஒருபக்கம் இப்படி இருக்க இந்திய அரசியலில் மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்தாடியது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற கற்பனைவாதத்தைக் கிளப்பிவிட்டு ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார்க்கும்பல் மதவெறியைத் தூண்டிவிட்டு நாட்டையே கலவர பூமியாக மாற்றத் துடித்தது. நானூறு ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதியை கரசேவை செய்யப் போகிறோம் என்று கூறிக்கொண்டு இராணுவமும் காவல்துறையும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அதனால் நாடுமுழுவதிலும் இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டெறிந்தது. தமிழகம் தந்தை பெரியார் பிறந்தமண்@ இங்கு மதவெறிக்கு இடமில்லை என்று அறைகூவல் விடுத்து தமிழகமெங்கும் மதவெறியை மாய்ப்போம்@ மனிதநேயம் காப்போம் என்று சூறாவளி என சுற்றிவந்து பிரச்சாரம் செய்தார். அதன் காரணமாக தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியது.

 அதன்பிறகு தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்படத்துவங்கியது. திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்ட அ.இ.அதி.முக ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதாவுடன் கூட்டுச்சேர்ந்து அவர்கள் தமிழகத்தில் கணக்குத்திறக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தது. தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நாங்கள் காலூன்றிவிட்டோம். இனி எங்களை யாரும் அசைக்க முடியாது. இங்கே நாங்கள்தான் பெரியண்ணன் என்பதுபோல பிஜேபி மார்தட்டியது. அதற்கேற்றாற்போல அதிமுக பிஜேபியோடு உள்ள உறவைத் துண்டித்தபோது திராவிட இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்ட திமுக, மதிமுக போன்றகட்சிகளும் பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லிக்கொண்டவர்களும் அந்த பிஜேபியோடு கூட்டுச் சேர்ந்தார்கள்.

தந்தை பெரியார் கொள்கையில் ஊறித்திளைத்த அய்யா வீரமணி அவர்களால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிஜேபிக்கு எதிரான ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்க முயற்சித்தார்கள். 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக,கம்யூனிஸ்டுகள் தமிழ்மாநில காங்கிரஸ் உருவாக்கிய அய்யா மூப்பனார் ஆகிய அனைவரையும் ஓரணியில் சேர்த்து பிஜேபியோடு கூட்டுச்சேருகின்ற அணியினருக்குத் தமிழகத்தில் இடமில்லை என்ற வரலாற்றை உருவாக்கினார்கள். முன்பு கூட்டணி ஏற்படுத்தி ஜெயலலிதா இனி எக்காலத்திலும் பிஜேபியோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என்று பொதுமேடையில் அறிவித்தார்கள் என்று சொன்னால் அப்படிச் சொல்ல வைத்தவர் அய்யா வீரமணி ஆவார்கள்.

இந்த இடத்தில் ஒரு செய்தியைப் பதிவுசெய்தாகவேண்டும். 1996 தேர்தலில் நரசிம்மராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ளாமல் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கியவர் அய்யா மூப்பனார் அவர்கள். அவர்களிடம் பிஜேபியின் நச்சுத் தன்மையையும் அதனுடன் கூட்டுச்சேர்ந்து அக்கட்சியைத் தமிழகத்தில் வளரவிட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தினையும் எடுத்துச்சொல்லி ஊழலைவிட மதவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை எடுத்துச்சொல்லி பிஜேபிக்கு எதிரான ஒரு அணியை உருவாக்குவதன் அவசியத்தை எடுத்துச் சொன்னவர் அய்யா வீரமணி அவர்கள்.

அந்தக்காலக்கட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்கூட பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சியல்ல என்றும் ஆர்எஸ்எஸ் சும் திராவிடர் கழகம்போல ஒரு சமுதாய இயக்கம்தான் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தக்கருத்தை அய்யா மூப்பனார் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் அய்யா மூப்பனார் அவர்களும் வீரமணி எனக்கு ராஜகுரு. அந்த ராஜகுரு சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி பிஜேபிக்கு எதிரான அதிமுக அணியில் இடம்பெற்று பிஜேபிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்க ஒத்துக்கொண்டார்;.

ஆனால் சொன்ன வாக்கை ஜெயலலிதா காப்பாற்றவில்லை. மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டுச்சேர்ந்தார். 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த நிலைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்த அய்யா வீரமணி அவர்கள் திமுக ஆதரவு கேட்காமலேயே பிஜேபிக்கு எதிரான திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று நெய்வேலி மத்திய கமிட்டியில் தீர்மானம் இயற்றியதோடு பாஜகவை மட்டுமல்ல பாஜகவோடு கூட்டுச் சேர்கின்ற எவருக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்கப் பாடுபட்டார்.

அத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும் பாஜகவுக்கும் ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை. அத்தோடு பாஜகவின் அத்தியாயம் தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. இன்று அக்கட்சி தமிழகத்தில் சீந்துவாரற்ற கட்சி ஆகிப்போனது. அதற்கு மூலகாரணம் அய்யா வீரமணியும் அவர் அழியாது காப்பாற்றி வரும் தந்தை பெரியாரின் தத்துவங்களும்தான்.

2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி அனாதை ஆகிவிட்டது. அத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் தனது ஆட்சியில் முதல் அமைச்சரவைக்கூட்டத்திலேயே தந்தை பெரியாரின் இறுதி இலட்சியமான அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்மானத்தை இயற்றியதோடு அதற்கான பயிற்சியையும் அளித்தது திமுக அரசு. பார்ப்பனர்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கப்பட்டு அர்ச்சகர் நியமனம் தடைபட்டுக்கிடக்கிறது.

சேதுசமுத்திரத்திட்ட ஆதரவு:    

அத்துடன் தந்தை பெரியாரும் தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் போராடிவந்த சேதுசமுத்திரத்திட்டம் கலைஞர் அவர்களின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டு அதற்கான முக்கால்வாசிப்பணிகள் முடிவுற்ற நிலையில் திராவிட இயக்கம் என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் அண்ணா திமுகää அண்ணாவின் கொள்கைகளுக்கெதிராய் அங்கே இராமன் கட்டிய பாலம் இருக்கிறது@ அதனை இடிக்கக்கூடாது என்று சர்வதேச அரசியல் தரகர் சுப்பிரமணியசாமியுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடைபெற்றுள்ளார். அவர்களின் அந்த பார்ப்பனப் போக்கையும் எந்தவிதமான ஆதாரமுமில்லாமல் அத்திட்டத்திற்கு இடைக்காலத்தடை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் பார்ப்பனப் போக்கையும் அம்பலப்படுத்தி வருபவர் அய்யா வீரமணி அவர்கள்.

பார்ப்பனப் பண்பாட்டுப்படையெடுப்பை முறியடித்தல்:

அதேபோல் ஆபாசமான கதையைக் கொண்ட முழுவதும் சமஸ்கிருதப் பெயர்களைக்கொண்ட சித்திரை முதல் நாளை அடிப்படையாகக் கொண்ட புத்தாண்டு தமிழர்க்கு இழிவானது. தமிழர்களின் தன்மானத்தைக் காக்கின்ற வகையிலே தந்தை பெரியார் அவர்களும் மறைமலையடிகள் திருவிக போன்ற தமிழ் அறிஞர்களும் வலியுறுத்திய தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்களை அறிவிக்கச் செய்தவர் அய்யா வீரமணி அவர்கள்.

சேதுசமுத்திரத்திட்டமும் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமும் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்கின்ற தி;ட்டமும் தடுக்கப்பட்டுள்ளது தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால் ஆகும். அவையெல்லாம் அறிவுப்பூர்வமாக சட்டப்பூர்வமாக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் எடுத்துச்செல்லப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கான பணியினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அய்யா வீரமணி அவர்களால்தான் முடியும். அந்தப் பணிக்கு அவருக்குத் துணையாகத் தோள்கொடுக்க வேண்டியது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

தந்தை பெரியாருக்குப் பின்னால் தமிழகத்தில் ஜாதிவெறி மதவெறி தலைதூக்கிவிடாமல் தடுத்து சமூகநீதியைக் காத்து தமிழர்களின் தன்மானத்தைக் காத்து தமிழகத்தில் ஜாதிவெறி மதவெறிக்கட்சிகளுக்கு இடமில்லை என்ற நிலையைத் தோற்றுவித்து சங்கராச்சாரியார்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, சாமியார்களின் சல்லாபங்களைத் தோலுறித்து மூடநம்பிக்கைகளை முறியடித்து தந்தை பெரியாரின் உண்மையான வாரிசாகத் தமிழர் தலைவராக உயர்ந்து நிற்கிறார் அய்யா வீரமணி. அவர் மட்டும் இல்லாதிருந்தால் …

தந்தை பெரியார் தோற்றுவித்த கட்சி ஒழிக்கப்பட்டிருக்கும். அவரது செல்வங்கள் ஆதிக்கச்சக்திகளால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கும். சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கப்பட்டிருக்கும். தமிழகம் மதவெறியர்களின் பிடிக்கு மாறியிருக்கும். ஜாதிவெறி தலைதூக்கியிருக்கும். மூடநம்பிக்கைகள் முடைநாற்றமெடுத்திருக்கும். மீண்டும் இங்கு மனுதருமம் மகுடமேறியிருக்கும். வருணாசிரமம் காலூன்றியிருக்கும்.

 இன்னமும் சமூகநீதிக்கு ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மண்டல் அறிக்கை இன்னும் முழுமையாக அமுலாகவில்லை. உயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு இன்னும் முழுமைபெறவில்லை. கிரீமிலேயர் என்ற கிருமி பிற்படுத்தப்பட்டோரை வாட்டி வதைக்கிறது. பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு என்பது இன்னமும் கானல்நீராகவே உள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட்டு விட்டது என்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் இனி அகில இந்திய நுழைவுத்தேர்வு என்ற பூச்சாண்டி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 அவற்றையெல்லாம் முறியடிக்க ஈரோட்டுக்கண்ணாடி அணிந்திருக்கும் தமிழர் தலைவர் அவர்களால்தான் இது முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இவ்வாறு தமிழர்களின் பாதுகாவலராக தமிழர் தலைவராக இவ்வளவு சாதனைகளைச் செய்வதற்கு அவருக்கு போர்க்கருவியாக இருந்தது இருந்துவருவது விடுதலை நாளிதழாகும். அந்த விடுதலை நாளிதழ் அய்யா வீரமணியின் பொறுப்பிற்கு வராமல் இருந்திருந்தால் தந்தை பெரியாரே அதனை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்.

அய்யா வீரமணி அவர்கள் விடுதலை நாளிதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு தந்தை பெரியார் காலத்தைவிட வலிவோடும் பொலிவோடும் வந்துகொண்டிருக்கிறது. அது இணையதளத்திலும் வெளியாகி உலகிலுள்ள 93 நாடுகளில் வாழக்கூடிய தமிழர்களாலும் உடனுக்குடன் படிக்கப்பட்டுவருகிறது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

50 ஆண்டு வரலாற்றுச்சாதனை:     

அவர் விடுதலைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது என்பது உலகப் பத்திரிகை வரலாற்றிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். அந்த அய்ம்பது ஆண்டு நிறைவடையும் நிலையில் அவருக்கு பாராட்டுவிழா என்பதை நன்றி என்பதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். அவர் விரும்புவதெல்லாம் விடுதலை இல்லாத தமிழன் இல்லமே இருக்கக் கூடாது என்பதுதான். என்னைச் சந்திக்க வருகின்றவர்கள் எனக்கு சால்வை அணிவிக்காதீர்கள். சால்வைக்குப் பதில் சந்தா வழங்குங்கள் என்பதையே அவர் ஒவ்வொரு தோழரிடமும் வேண்டுகோளாக வைப்பார்கள். விடுதலையை வளர்த்தெடுப்பதையே அவர் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டுள்ளார்.

விடுதலைக்கு அய்ம்பது அண்டுகள் ஆசிரியராக இருந்திருக்கிறாரே தவிர அதற்காக தந்தை பெரியார் காலத்திலும் அதற்குப்பிறகும் ஒரு பைசா ஊதியமாக எதிர்பார்த்ததில்லை. தனக்கு பொதுக்கூட்டங்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் தொகை முழுவதையும் இயக்கத்திற்கே ஒப்படைக்கும் ஏந்தல் அவர். அவரது எடைக்கு எடை ரூபாய் நாணயங்கள வழங்கப்பட்டாலும் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டாலும் அதனை இயக்கத்திற்கே ஒப்படைத்து வருபவர். எடைக்கு எடை வழங்கப்பட்ட வெள்ளியையும் தங்கத்தையும்கூட இயக்கத்தின் சொத்தாக மாற்றியவர் அய்யா வீரமணி. அப்படி தங்கத்தால் எடைபோடப்பட்ட தங்கத்தலைவரின் மனங்குளிர விடுதலை சந்தாக்களை வாரி வழங்குவோம். நன்றியுள்ள தமிழர்களே! வெள்ளித்தோட்டாக்களை அள்ளி வழங்குங்கள் விடுதலை என்ற போர்வாளைக் கூர்தீட்ட.
 

வியாழன், 27 அக்டோபர், 2016

வாழ்க கே.ஆர் நாராயணன்! வெல்க சுயமரியாதை!!

சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியா இருந்தப்ப திருப்பதி வெங்கடாஜலபதியப் பார்க்க வாரந் தவறாம வருவாரு

ஒரு தடவ படியேற முடியாம தடுமாறிக்கூட விழுந்திட்டாரு

இருந்தாலும் வாரந் தவறாம திருப்பதிக்கு வந்திருவாரு

அவர் எப்ப வந்தாலும் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தது திருப்பதி தேவஸ்தானம்

அடுத்து நமது மக்கள் ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் குடியரசுத்தலைவராப் பதவியேற்றாரு

உடனே திருப்பதி தேவஸ்தானம் ஒரு தீர்மானம் போட்டது
என்ன தெரியுமா?

திருப்பதியில் இனிமேல் யாருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதில்லை என்பதுதான் அது

அதன் நோக்கம் என்ன?

எங்கே இந்த தலித் கே.ஆர் நாராயணனும் மத்த ஜனாதிபதி மாதிரி திருப்பதிக்கு வந்துருவாரோ
வந்தா அவருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கனுமே. எப்படி ஒரு பஞ்சமனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது? என்பதாலதான் அவசர அவசரமா இந்தத் தீர்மானத்தப் போட்டாங்க

ஆனா சுயமரியாதையுள்ள நம் கே.ஆர்.நாராயணன்
தான் பதவி வகித்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட திருப்பதிக்குச் சென்றதில்லை.
அதேபோல காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்றதில்லை

வாழ்க கே.ஆர் நாராயணன்!
வெல்க சுயமரியாதை!!

Image result for k.r.Narayanan image

கலைஞர்கிறிஸ்துமசுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ரம்ஜானுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ஏன் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்றதில்லை


கலைஞர்கிறிஸ்துமசுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ரம்ஜானுக்கு வாழ்த்துச் சொல்றாரு, ஏன் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்றதில்லைன்னு அக்கா தமிழிசை ரொம்பத்தான் ஆதங்கப்படுறாங்க.

ஒரு பாதிரியார் பார்க்க வந்தால் கைகுலுக்குகிறார். ஒரு முல்லா பார்க்க வந்தால் கட்டிப்பிடிக்கிறார். அங்கே சகோதரத்துவம் பிறக்கிறது. ஆனா உங்க சங்கராச்சாரிய உங்க அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்க்கப் போனப்பவே சரிசமமான நாற்காலி போட்டுக் கூட உட்கார வைக்கலியேää அது ஏன்? அதே நேரத்தில எந்தப் பதவியிலயும் இல்லாத சு.சாமி போனப்ப சரிசமமா நாற்காலி போட்டுப் பேசினாரே உங்க சங்கராச்சாரி. அதனாலதான் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்றதில்லை சகோதரி.

அது மட்டுமில்லாம யாரொருவன் இஸ்லாத்துக்கு மாறுகிறானோ அங்கே போய் அந்த மதப் படிப்பப் படிச்சா அடுத்த நாளே அவன் அங்கே முல்லா. மசூதியில பாத்தியா ஓதலாம். யாரொருவன் கிறிஸ்தவத்துக்கு மாறுறானோ அவன் அந்த பாதிரியாருக்குரிய படிப்பப் படிச்சா அடுத்த நாளே அவன் பாதிரியார். எல்லோரும் அவரிடம் போய் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால்  இந்து மதத்தில் அப்படி உண்டா? கலைஞர் கொண்டுவந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்கிற சட்டம் இன்னும் அமுலாக விடமாட்டேங்கிறாங்களே சகோதரி?


அந்த மதத்திலயெல்லாம் கர்த்தர்தான் கடவுள். அல்லாதான் கடவுள். ஆனா உங்க மதத்தில பார்ப்பானைத்தானே எல்லோரும் சாமி என்கிறீங்க? அங்கே கடவுள் இல்லை என்பவன்தான் நாத்திகன் உங்க மதத்தில வேதத்தை ஏற்றுக் கொள்ளாதவன்தான் நாத்திகன். ஏன் என்றால் அந்த வேதம்தான் பார்ப்பனர்தான் கடவுள். அவனைத்தான் பார்ப்பனரல்லாதார் வணங்க வேண்டும் என்கிறது. இராமனும் கிருஷ்ணனுமே அதைத்தான் சொல்றாங்க.

அங்கே தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதெல்லாம் இல்லை சகோதரி. ஆனால் நம் சமூகத்தில் எப்படின்னு உங்க தாத்தா பாட்டி யாராவது இருந்தாக் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க சகோதரி. ஜாக்கெட் போடக்கூட இந்த மதத்தில் உங்க முன்னோர் எத்தனை வருடம் போராடி அந்த உரிமை கிடைச்சதுன்னு வரலாற்றைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க சகோதரி.

அங்க மசூதிக்கோ சர்ச்சுக்கோ போனால் எல்லோருக்கும் சரி சமமான இடம்தான் சகோதரி. ஆனால் நீங்க சொல்லும் இந்த மதத்தில் எல்லோருக்கும் ஒரே இடத்தில் நிற்க முடிகிறதா சகோதரி. உங்க பாட்டன் பாட்டிகளெல்லாம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ளே சென்று சாமி கும்பிட உரிமை வேண்டும்னு வழக்குப் போட்டப்ப எந்தெந்த இடத்தில் எந்தெந்த சாதிக் காரங்க நின்னு சாமி கும்பிடனுமுன்னு தீர்ப்பே வந்துச்சு சகோதரி. அதெயெல்லாம் விவரம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க சகோதரி.

அந்தத் தீர்ப்பில நாலு வர்ணத்துக்கும் நாலு இடம் ஒதுக்கப்பட்டுச்சு. அஞ்சாவதா பஞ்சமர் எங்கே நிக்கனும் தெரியுமா? பஞ்சமர்னா யாருன்னு தெரியுதா? நூறு வருடத்துக்கு முன்னாலேயே திராவிட இயக்கம் அழித்தொழித்த தீண்டாமையைப் போக்கிய தமிழகத்தில் தலித் விட்டில போய் சாப்பிடுறது பெர்ரிய புரட்சின்னு போய் சாப்பிட்டீங்களே அந்த தலித்துகள் எங்கே நின்னு சாமி கும்பிடனும்னு சொல்லி இருக்குது தெரியுமா? எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தால் கோபுரம் தெரியுதோ அவ்வளவு தொலைவில் இருந்துதான் அவங்க தரிசனம் பண்ணனும்னு சொல்லி இருக்குது தெரியுமா சகோதரி?

நீங்களெல்லாம் கோயிலுக்குள்ளே போயி சாமிய தரிசனம் பண்ணுறீங்கää நாங்க மட்டும் கோபுரத்தப் பாத்துக் கும்பிடு போடனுமான்னு அந்த மக்கள் கேட்டப்ப கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சொல்லி வச்சாங்க சகோதரி.

நீங்க மருத்துவம் படிச்சதனால வரலாறு படிச்சிருக்க மாட்டீங்க. இனிமேலாவது இந்த வரலாற்றையெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்கங்க சகோதரி. முக்கியமா அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றையும் முனைவர் கோ.கேசவன் எழுதிய கோயில் நுழைவுப் போராட்ட வரலாறு என்கிற புத்தகத்தையும்ää படிச்சுத் தெரிஞ்சுக்கங்க சகோதரி. இந்த வரலாற்றையெல்லாம் தெரிஞ்சதனாலதான் கலைஞர் உங்க இந்துமத பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்றதில்லைன்னு புரிஞ்சக்கங்க சகோதரி.
 

பார்ப்பனரல்லாதார் கூட்டமைப்பு - தலித் அல்லாதார் கூட்டமைப்பு



நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் கூட்டமைப்பு என்று துவக்கி பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டனர் திராவிட இயக்க முன்னோடிகள்.

அப்பொழுது கலெக்டர் பதவிகளில் இந்தியர் என்ற பெயரில் இருந்தவர்கள் 11 பேர். இதில் 9 பேர் பார்ப்பனர்கள். ஜில்லா முன்சீப்புகளில் 200 பேரில் 150 பேர் பார்ப்பனர்கள். 61 சப் ஜட்ஜூகளில் 45 பேர் பார்ப்பனர்கள். அதுபோல மேல்மட்ட பதவிகளில் முக்கால்வாசிப்பேர் பார்ப்பனர்களே! பார்ப்பனர்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவிகிதம். அனுபவித்தது 75லிருந்து 90 சதவிகிதம். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1894ல் பட்டம் பெற்றோர் 3 சதவிகிதமுள்ள பிராமணர்கள் 69 சதவிகிதம் பேர். 87 சதவிகிதமுள்ள பிராமணரல்லாதார் 19 சதவிகிதம். 6 சதவிகிதமுள்ள முஸ்லிம்கள் 0.7 சதவிகிதம் மட்டுமே! தாழ்த்தப்பட்டோர் எவருமே இல்லை. 1800ல் துவக்கப்பட்ட மெட்ராஸ் ஹைகோர்ட்டில் ஒருவர்கூட பார்ப்பனரல்லாத நீதிபதி வரவில்லை.

மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி சென்னை மாகாணத்தில் இருந்தது. அதை நீக்கியது நீதிக்கட்சி. அப்படி நீக்கவில்லையென்றால் நம்ம அய்யாக்கள் டாக்டராகி இருக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாருக்கு படிப்பு வராது என்றார்கள். மீறிப் படித்தோம். தகுதி – திறமை எங்களுக்கே சொந்தம் என்றது பார்ப்பனக்கூட்டம். அதையும் முறியடித்து நம் தகுதி திறமையை நிலை நாட்டினோம்.
அந்தக் காலத்தில் மட்டுமல்ல இன்னமும் அதுதானே நிலை. மத்திய அரசின் செயலாளர்கள் 102பேரில் அனைவருமே பார்ப்பனர்கள். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒரே ஒருவர். பிற்படுத்தப்பட்டவர் யாரும் இல்லை. பிரதம மந்திரி அலுவலகம்ää ஜனாதிபதி அலுவலகம் முழுக்க பார்ப்பன ஆதிக்கம்.  இன்னமும் அய்அய்டி யில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமுலுக்கு வரவில்லை. அகில இந்திய மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த அன்புமணி இராமதாஸ் ஆனந்த் அய்யரிடம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. பொதுத்துறைகளில் இட ஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தனியார் துறையில் அது எட்டிப்பார்க்கவில்லை.

ஆக, தாழ்த்தப்பட்ட –பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்குமான உரிமையைத் தட்டிப்பறித்து ஆதிக்கம் செய்த பார்ப்பனருக்கு எதிராக பார்ப்பனரல்லாதார் கூட்டமைப்பு உருவானதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் தலித் அல்லாதார் கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாகியுள்ளதே! அதன் நோக்கம் என்ன? எல்லா இடத்திலும் தலித்துகளே ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்லப்படுவது உண்மையா? எங்கே போனாலும் 18 சதவிகிதத்துக்காரனிடம் கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது என்று பேசப்படுவது உண்மையா? அவர்களே சொல்வதுபோல் அவன் பதினெட்டு சதவிகிதம்தான் இருக்கிறான். அது அவர்கள் ஜனத்தொகையைவிடக் குறைவுதானே! ஆனால் மூன்று சதவிகிதம் இருக்கக் கூடிய பார்ப்பான் 70 சதவிகிதம் 80ää 90 சதவிகிதங்கள் இன்னமும் அனுபவிக்கிறார்களே! அவர்களுக்கு எதிராக உங்கள் கோபம் திரும்பவில்லையே, ஏன்?

நேற்றுவரை தலித்தான அவன்  நம்மிடம் கைகட்டி நின்றான். அவனிடம் நாம் சென்று கைகட்டி நிற்பதா? என்கின்ற ஆதங்கம்தானே இதில் மேலோங்கி இருக்கிறது? முழங்காலுக்குக் கீழே வேட்டியணியாதே! என்று கொடுமைப்படுத்தினோம். இன்று அவன் ஜீன்ஸ் பேண்ட் போட்டு உலா வருகிறானே! காலிலே செருப்புப்போடாதே என்று மிரட்டி வைத்தோம். இன்று விலை உயர்ந்த ஷ_க்களை அணிந்து வருவதா என்கின்ற ஆத்திரம்தானே! தெருவிலே நடக்காதே என்றோம். இன்று அவன் காரிலே உல்லாசமாய் வருகின்றானே என்கின்ற பொறாமை உணர்ச்சிதானே இதற்கெல்லாம் காரணம்?
நீங்கள் செய்த அந்தக் கொடுமைகளுக்குப் பழிவாங்க நினைக்காமல் தன்னுடைய முன்னேற்றத்தைப் பார்த்துக்கொண்டு செல்வதைப் பொறுக்க மாட்டாமல்தான் தலித் அல்லாதார் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறீர்களா?  அவர்கள் முன்னேற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத உங்களால் பார்ப்பனரிடம் உரிமைபெற முடியுமா? பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற பொருளில் சூத்திரன் என்று சொல்வதற்கே கோபப்படாத நாங்களா இதற்கெல்லாம் கோபப்படப் போகிறோம் என்கிறீர்களா? மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடி வெற்றி பெறலாம், மானமற்ற ஒருவனிடம் போராடி வெற்றி பெற முடியாது என்றார் பெரியார். அதை உண்மையாக்க முயற்சிக்காதீர்! மான உணர்ச்சி பெறுவீர்! மனித உரிமையை மதிப்பீர்!!
 

சித்திரை 1அய் ஆதரிப்பவர்கள் தமிழ்ப்பெயர் அல்லாத ஆண்டுகளை தமிழன் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இவரை யாருமே நாணயமான அறிவுப்பூர்மான பதிலைச் சொன்னதில்லை



 கடந்த 2008ம் ஆண்டு தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக்கழக அரசு தமிழர்களுக்குப் புத்தாண்டு சித்திரை 1 அல்ல. தை முதல்நாள்தான் என்று அரசு ஆணை பிறப்பித்தார்கள். இந்த முறை ஆட்சியைப்பிடித்த அஇஅதிமுக அரசு அதனை மாற்றி மீண்டும் சித்திரை 1 தான் தமிழர்க்குப் புத்தாண்டு என்று அறிவித்தது. ஆகக் கூடி ஒரு அரசு நினைத்தால் ஒரு உத்தரவில் ஒரு ஆண்டுப்பிறப்பு எது என்று மாற்ற முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறதா? இல்லையா?

சித்திரை 1 அய் மீண்டும் தமிழர்களின் ஆண்டுப்பிறப்பாகக் கொண்டாட உத்தரவிட்டதற்கு அதிமுக அரசும் அதன் ஆதரவாளர்களும் சொல்லும் காரணம் ஆண்டாண்டு காலமாய் இருந்ததைக் கருணாநிதி மாற்றி விட்டார். எனவே, அதிமுக அரசு மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வந்தது என்று கூறுகிறார்கள். அவர்கள் ஒரு வினாவிற்கு விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்த சித்திரை 1 தான் தமிழனின் ஆண்டுப்பிறப்பு என்பது எவ்வளவு காலமாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூற முடியுமா? அதற்கு முன்பு வேறு ஒரு நடைமுறை இருந்திருக்கலாம். அப்பொழுதெல்லாம் மன்னராட்சிக்காலம். மன்னர் யாராவது ஒருவர்தான் இதனை மக்கள் மீது திணித்திருக்க முடியுமே தவிர தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இதனை யாரிடமாவது கோரிக்கை வைத்து அமுல்படுத்தி இருக்க வாய்ப்பில்லை.

மன்னர்கள் அனைவரும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செய்ல்பட்டார்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. மன்னர்கள் எத்தனையோ பேர் எது எதற்கெல்லாமோ அடிமையாகி ஆட்சியையே யார்யாரையோ ஆளச் செய்துவிட்டு அந்தப்புரமே கதி என்று கிடந்திருக்கிறார்கள். உல்லாச வாழ்வும் ஊதாரி வாழ்வும் மதுää மாது என வாழ்ந்த மன்னர்களும் ஏராளம் இருந்திருக்கிறார்கள். மக்கள் எப்பொழுதும் ஏன்? எதற்கு? என்று எதிர்த்துக் கேட்க முடியாத அளவுக்கு அடிமையாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அடிமை வாழ்வு வாழ்ந்தகாலத்தில் எவனோ ஒரு ஏமாளி மன்னனைப் பிடித்து தமிழனுக்கு விரோதமானää தமிழுக்கு விரோதமான கும்பல் இந்த சித்திரை 1தான் தமிழனின் புத்தாண்டு என்று மாற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில் இந்த சித்திரை 1அய் அடிப்படையாயக் கொண்ட ஆண்டுகளின் பெயர்கள் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோர்பதி பவ, யுவ, தாது, ஈஸ்வர என்று அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒரு சொல்கூடத் தமிழச் சொல் கிடையாது. தமிழ்ச்சொல் இல்லாத பெயர்களைக் கொண்ட ஆண்டுகள் எப்படித் தமிழன் தலையில் திணிக்கப்பட்டது? அதைத் திணித்தவன் யார்? இதனை அப்படியே எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழன் ஏற்றுக் கொண்டிருந்திருப்பானா? எவ்வளவு அடக்குமுறை கொண்டு இது தமிழன்மீது திணிக்கப்பட்டதோ? யார் கண்டது?

அடுத்து இந்த ஆண்டுகளின் பெயர்களுக்குக் காரணமாகச் சொல்லப்படும் கதை அறிவுப் பூர்வமானதா? ஒழுக்கமானதா? அந்தக் கதையைää தாய்ää தங்கைää தமக்கைää மகள் ஆகியோரிடம் கூச்சமில்லாமல் சொல்ல முடியுமா? எவ்வளவு ஆபாசம்? அசிங்கம்?
நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் அல்லது அலிக்கும்ää கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்தான் இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறதேää அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

அடுத்து இந்த சித்திரை 1 ஆதரவாளர்கள் கூறும் காரணம் ~காலம் காலமாய் இருப்பதை மாற்றலாமா? | என்பதுதான்.

காலம் காலமாய் இருப்பதை மாற்றாமல் அப்படியே எல்லாவற்றையும் கடைப்பிடித்தால் தமிழன் காட்டுமிராண்டியாகத்தான் இருப்பான். காலம் காலமாயத் தமிழனின் தேசிய ஆடை எது? கோவணம்தானே? அந்தக் கோவணத்துடன்தான் இருப்பேன் என்று எந்தத் தமிழனாவது சொல்லுவானா?

நாயும் பூனையும் கழுதையும் பன்றியும் நடமாடிய வீதிகளில் மனிதன் நடக்க முடியாத காட்டுமிராண்டித்தனம் இருந்ததே அதை மாற்றும்போது கூட பிற்போக்குவாத காட்டுமிராண்டிகள் இந்த பதிலைத்தானே சொன்னார்கள்? அதனை ஏற்றுக்கொண்டு தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள முடியுமா?

பிறந்த உடனே பெண் குழந்தையின் கழுத்தில் தாலி கட்டிய காட்டுமிராண்டித்தனம் சாரதா சட்டத்தின்மூலம் ஒழிக்கப்பட்டதே! அதுவும் காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்கம்தானே! அதனை மீண்டும் கொண்டு வரலாமா? கணவன் இறந்த உடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தபோதும் இதே கூச்சல் கேட்கவில்லையா? தேவதாசி என்ற பொட்டுக்கட்டும் முறையை ஒழிக்கச் சட்டம் கொண்டு வந்தபோதும் சென்னை மாகாண சட்டசபையில் இதேபோன்ற வாதத்தை தமிழ்நாட்டின் பிரபலமான தலைவர்கள் எடுத்து வைத்து வாதிட்டார்களே! அதனை ஏற்று மீண்டும் தேவதாசி சட்டத்தைக் கொண்டு வரலாமா? குழந்தைத்திருமணத்தால் ஒரு வயதுக் குழந்தைகூட விதவையாக இந்த நாட்டில் இருந்ததே! அது கடைசிவரை விதவையாகத்தான் இருக்க வேண்டும், வெள்ளைச் சேலை யுடுத்தி முக்காடுபோட்டு மூலையில் உட்கார வைத்து நடமாடும் பிணமாக சமுதாயம் அவர்களை வைத்திருந்ததே! அந்தக் கொடுமைகூட காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததுதான். அதனை மீண்டும் அமுல்படுத்தலாம் என்று எந்த அறிவாளியாவது சொல்வாரா?

குழந்தைத் திருமணம் செய்துகொண்ட ஆண் அந்தப் பெண்ணுக்கு பத்து வயதாக இருக்கும்பொழுது உடலுறவு கொள்ளலாம் என்று இருந்த சட்டத்தை வெள்ளைக்காரன் 1890களில் பனிரெண்டு வயதாக ஆக்கினான். அதனை எதிர்த்து இந்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் திலகர் போன்ற பிரபல தலைவர்களே போராடினார்கள். அந்தத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று வெள்ளைக் காரன் அந்தச் சட்டத்தை வாபஸ் வாங்கியிருந்தால் இன்று நாம் விலங்குகளைவிடக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோமா?

இந்த நாட்டின் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கூடக் கல்வி மறுக்கப்பட்டது. அதேபோல அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்றுகூடக் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டவைதானே! அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்ட கல்வியைப் பறித்து விடலாமா?
இப்படி ஏராளமான பழக்கங்களும் வழக்கங்களும் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தவையெல்லாம் அவ்வப்பொழுது அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அதுபோலத்தான் அறிவுக்கு ஒவ்வாத கதைகளும் காரணங்களும் கொண்ட சித்திரை 1அய் தை முதல் நாளுக்கு மாற்றுவது தவறில்லை என்று டாக்டர் கலைஞர் அவர்கள் அதனை மாற்றினார்கள். அது ஒன்றும் அவருடைய சொந்தக் கருத்துக் கிடையாது.

தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திருவிக. நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள் அய்நூறு பேருக்குமேல் 1920ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி தமிழருக்கான ஆண்டினை முடிவு செய்தார்கள். தமிழனின் முப்பாட்டன் திருவள்ளுவப் பெருந்தகையின் பிறப்பை அடிப்படையாக வைத்து தமிழனின் ஆண்டை முடிவு செய்தார்கள். கிறித்து பிறப்புக்கு 31 ஆண்டுக்கு முற்பட்டவர் திருவள்ளுவர் என்று முடிவுசெய்து அதனைத் தேர்வு செய்தார்கள். அதனைக் கடைப்பிடிப்பதும் எளிதானது.

நடப்பு ஆண்டான 2013 உடன் 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பாகும். இதில் காலக்கணக்கை எளிதாக கணக்கிட முடியும். ஒருவர் வயதைக் கணக்கிடுவதற்குக் கூட பழைய ஆண்டுமுறை உதவாது. அறுபது ஆண்டு முடிந்;து மீண்டும் முதல் ஆண்டு வரும்போது 61 வயது முடிந்தவரை நேரில் பார்க்காதவர் அவருக்கு வயது ஒன்று என்றுதான் கூறுவாரே தவிர 61 என்று கூற மாட்டார். இதற்காகவும் பழைய ஆண்டுமுறையை மாற்ற வேண்டியது அவசியமாகும். அத்துடன் தை ஒன்று என்பது விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்டு வாழ்ந்த தமிழனுக்குப் பெருமைதானே தவிர அதில் ஒன்றும் இழிவு இல்லை.

சித்திரை 1அய் ஆதரிப்பவர்கள் தமிழ்ப்பெயர் அல்லாத ஆண்டுகளை தமிழன் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இவரை யாருமே நாணயமான அறிவுப்பூர்மான பதிலைச் சொன்னதில்லை. அதுபோல் அறுபது ஆண்டுகளின் தோற்றத்துக்குச் சொல்லப்படும் கதை அறிவுக்குப் பொருத்தமில்லாத ஆபாசமானதாக இருக்கிறதேää அதனை ஏன் தமிழன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கும் எவரும் பதில் சொன்னதில்லை. அத்துடன் இந்த ஆண்டினைக் கொண்டு காலத்தையும் கணிக்க முடியாது. ஒருவனின் வயதைக்கூட கணக்கிட முடியாது என்றால் அதற்கும் நாணயமான பதில் இல்லை.  இது தமிழனின் மானத்துக்கும் அறிவுக்கும் விடப்பட்ட சவாலாகும்.
எனவேää மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் கொண்டாட வேண்டிய புத்தாண்டு தை முதல்நாள்தான். தமிழனுக்கு மானமும் அறிவும் இருக்கக் கூடாது என்று சொல்பவர்கள் சித்திரை 1 அய்க் கொண்டாட வேண்டும் என்கிறார்கள்.

ஆகவே தமிழர்களே! மானத்தோடும் அறிவோடும் இருக்கப் போகிறீர்களா? தமிழின எதிரிகளின் பேச்சைக் கேட்டு அவற்றை இழிக்கப் போகிறீர்களா? சிந்திப்பீர்!
         இவண்
         ம.ஆறுமுகம்.

ஒரு பாவத்துக்கு மன்னிப்புக் கிடைக்கிறது என்றால் அல்லது பரிகாரம் இருக்கிறது, கழுவாய் இருக்கிறது என்றால் பாவம் செய்ய எவனாவது தயங்குவானா?


சொர்க்கலோகம், நரகலோகம், இந்திரலோகம், சிவலோகம், வைகுண்டம், பரலோகம் இப்படி எத்தனை எத்தனையோ லோகம் இருக்கிறதாம். எங்கே அய்யா இருக்கிறது என்;றால் எல்லாம் மேலே என்று கையைக் காட்டுவார். அந்த லோகத்திற்குச் சென்று வந்தவர் எவர்? என்றால் விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் என்பார். அங்கே என்ன இருக்கிறது என்றால் ஆளாளுக்கு வியாக்கியானம் செய்வர். ரம்பா, ஊர் வசி, மேனகை, திலோத்தமை எல்லோரும் இருப்பார்கள், வேண்டிய இன்பங்களை வாரியிறைப்பர், காராம்பசு இருக்கும். கற்பக தரு இருக்கும் வேண்டியது உடனுக்குடன் கிடைக்கும் என்று ஒருவர் சொல்லுவார்.

இன்னொருவர் சொல்லுவார் ஆண்டவர் நீ செய்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். நீ செய்கின்ற நல்லது கெட்டதுக்குத் தகுந்தபடி நியாயத் தீர்ப்பு வழங்குவார் என்பார்.

நீ பாவம் செய்கிறாய். அதற்கு மன்னிப்பே கிடையாது. கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும் என்பார் ஒருவர். நீ செய்த பாவத்தையெல்லாம் நான் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவிடம் சொல்லி மன்னிப்பு வாங்கித் தருகிறேன். எனவே, நீ செய்த பாவங்களையெல்லாம் என்னிடம் தெரிவி என்று சொல்லுவார். ஒரு பாவத்துக்கு மன்னிப்புக் கிடைக்கிறது என்றால் அல்லது பரிகாரம் இருக்கிறது, கழுவாய் இருக்கிறது என்றால் பாவம் செய்ய எவனாவது தயங்குவானா?

பார்த்தார் ஒருவர். மற்றவர் செய்கிற பாவத்துக்கெல்லாம் பரமபிதாவிடம் மன்னிப்பு வாங்கித் தருகிறோம். அதே மாதிரி நாம் பாவம் செய்தாலும் மன்னிப்பார்தானே என்று நெல்லையில ஒருவர் பரமபிதாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்று 11ம் வகுப்புப் பெண்ணை மாதாவாக்கினார். பரமபிதா மன்னித்தாரோ என்னவோ தெரியவில்லை. இந்தப் படுபாவி காவல்துறை அதைக் கண்டுபிடித்து நீ செய்தது பாவம். அதற்கு மன்னிப்பே கிடையாது என்று எஃப்ய்ஆர் போட்டுட்டாங்க. பரலோகப்பிதாவிடம் மன்னிப்புக் கேட்டும் பலனில்லாததால் பாவியான  காவல்துறை அதிகாரியிடம் சரண்டர் ஆயிட்டார்.

அவருக்கு ஒன்னும் வௌரம் தெரியவில்லைபோலும். பரிசுத்த ஆவிதான் அவர் வயிற்றில் வளருது என்று கதை கட்டியிருக்கலாம். இல்லாட்டி நித்தம் நித்தம் ஆனந்தம் தந்தவர் மாதிரி நான்தான் பரமாத்மா. என்னோட கூடினா அந்த பரமாத்மாவிடமே கூடினது மாதிரி என்று கதை விட்டிருக்கலாம். காஞ்சி காமகோடி பீடம் கம்மனாட்டியையே கையப்புடிச்சி இழுத்தார்.  காக்கிகள் கைது செய்துகேஸ் போட்;டா. நான் யார் தெரியுமா? நான் ஆண்டவனுக்கும் மேலே! என்மேலயா கைய வச்சே என்று கர்ஜித்தது மாதிரி கர்ஜித்திருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் வௌரம் தெரியாம சரண்டர் ஆயிட்டார்.

இவங்க எல்லாமே ஒன்னச் சொல்லுவாங்க. பக்திதான் ரொம்ப ரொம்ப முக்கியம். பக்தி இல்லேன்னா இந்த ஒலகமே அழிஞ்சிடும். அதனால எல்லோரும் பய பக்தியோட இருக்கனும்கறத ரொம்ப அழுத்தம் திருத்தமாச் சொல்லுவாங்க.

ஆனா இந்த ஈரோட்டுக் கிழவன் மட்டும் வேறு மாதிரி சொன்னார். பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார். எனக்கு பக்தி இல்லாததால் நரகம் கிடைக்கும் என்றால் அதனால் உனக்கு ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லையென்றால் எல்லாமே பாழ் என்றார். இதில் எது முக்கியம்? பக்தியா? ஒழுக்கமா? சிந்திப்பீர்! பகுத்தறிவுப் பகலவனின் பாதையைத் தேர்ந்தெடுப்பீர்!
 

பண்டிகைகள் திருவிழாக்கள்தீபாவளி போனஸ்

;;
 நம்முடைய நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. விவசாய நிலங்கள் அனைத்தும் ஒரு சிலருக்குச் சொந்தமாயிருக்க பெரும்பான்மை மக்கள் விவசாயக் கூலிகளாக நில உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருப்பார்கள். அவர்களுக்கு கூலி என்பது அந்த பண்ணையாராகப் பார்த்துக் கொடுப்பதுதான். அங்கே எந்த சங்கமும் வைத்துக் கொள்ள முடியாது.

அந்த விவசாயக் கூலிக்கு ஆடி மாதத்திலிருந்து தை மாதம் வரை வயலில் வேலை கிடைக்கும். அப்பொழுதுதான் அவன் சம்பாதிக்க முடியும். சம்பாதித்ததை மீதமுள்ள ஆறு மாதத்திற்கும் சேர்த்து வைத்துக்; கொள்ள வேண்டும்.

 அப்படி சேமித்து வைக்கும் உணவுப்பொருள் அடுத்த நடவுகாலத்திற்குள் தீர்ந்துவிட வேண்டும். அப்படித் தீராமல் அவனுடைய தேவைக்கு அதிகமாக இருந்தால் சரியான நேரத்தில் வேலைக்கு வரமாட்டான் என்று சிந்தித்த ஆதிக்க வர்க்கம் திருவிழாää தேர்ää பண்டிகை என்று உருவாக்கி அந்தத் திருவிழாவில் கிடாவெட்டு பொங்கல் குடிää கூத்துää கேளிக்கை என்று பலவற்றை ஏற்படுத்தி அடுத்த ஊரிலிருந்து தன்னுடைய மாமன் மச்சான் சொந்த பந்தங்களையெல்லாம் அழைத்து செலவுசெய்து சேமித்த உணவு தானியம் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும். அப்பொழுதுதான் கூலிக்காரன் வேலைக்கு வருவான். இல்லையென்றால் அவனுக்குத் திமிர் ஏறிவிடும் என்று நினைத்த மேல்ஜாதி மேல்வர்க்கத்தின் சிந்தனையில் உதித்ததுதான் இந்தப் பண்டிகைகள். அதனால்தான் கிராமக்கோயில் திருவிழாக்களெல்லாம் தை முடிந்து மாசி மாதத்தில் தொடங்கி ஆடிவரை நடக்கும்.

அதுபோலத் தீபாவளி என்பது நடவு தொடங்கி களையெடுப்பு நடைபெறும் காலத்தில் வருவதால் அவன் அந்தச் செலவுக்குப் பணம் போதவில்லையென்று தன்னுடைய பண்ணையாரிடமே கடன்வாங்கி அத் தீபாவளியைக் கொண்டாடி அந்தக் கடனை அடைக்க அவனிடமே நிரந்தரமாக வேலை செய்ய வேண்டும். இந்தப் பண்டிகைகளால் பார்ப்பனருக்கும் வியாபாரிகளுக்கும்தான் நல்ல வேட்டையே தவிர உழைக்கும் மக்களுக்கு மிஞ்சுவது மானக்கேடும் அறிவுக்கேடும் செலவும்தான்.

ஆனால் நம் நிறுவனத்தில் நமக்கு வழங்கப்படும் போனஸ் என்பது நம்முடைய உழைப்பின் பயன். நாம் ஈட்டிக் கொடுத்த இலாபத்தில் பங்கு. நம்முடைய ஊதியத்தின் கொடுபடாத ஒரு பகுதி. அந்த போனசை முதலாளிமார்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக குறைந்தது அக்டோபர் 30க்குள் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டம் இயற்றி அந்த போனசுக்கான காலக் கெடுவை சட்டப்பூர்வமாக்கினார்கள். அதுவும் முதலாளிமார்கள் மார்ச் மாதம் உற்பத்தி முடிந்தாலும் இலாப - நட்டக் கணக்கைப் பார்க்க சிறிது காலம் பிடிக்கும் எனபதால் இந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த நவீன கணிணி யுகத்தில் மார்ச் 31 முடிந்த உடன் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் உற்பத்தி எவ்வளவு? இலாபம் நட்டம் என்ன? என்பதெல்லாம் ஒரு நொடிக்குள் தெரிந்துவிடக் கூடிய இக்காலக்கட்டத்தில் அக்டோபர் வரை நீட்டிப்பது ஏமாற்று வேலை. எனவேää நம்முடைய உழைப்பின் பலன் பயனுள்ள வகையில் நம்முடைய பிள்ளைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படும் வகையில் மே - ஜூன் மாதத்திற்குள் வழங்கு என்று கேட்க வேண்டிய  சங்கங்கள் தீபாவளி நெருங்கிவிட்டது போனஸ் கொடு என்று கேட்பது கேலிக் கூத்தானது. தீபாவளிக்கும் போனசுக்கும் என்ன சம்மந்தம்? இந்த போனஸ் என்ன இந்துக்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படுகிறதா? தொழிலாளர் எல்லோருமே தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா?

அதைவிட எது நடந்;ததோ அது நன்றாகவே நடந்தது என்று சொல்லும் ஒரு சங்கம் தீபாவளி நெருங்கிவிட்டது யூனிபார்ம் கொடு என்கிறது. இந்த யூனிபார்மைத்தான் தீபாவளிக்குப்; போடுவாங்களா? போனஸ் லேட்டாவதால் தீபாவளியைத் தள்ளிப் போடும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். இந்தப் போராட்டத்தை நாங்களும் வரவேற்கிறோம். அதைவிட தீபாளியைத் தடைசெய் என்று போராடினால் அதிலே நாங்களும் கலந்துகொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். செய்வார்களா?
 

செவ்வாய், 25 அக்டோபர், 2016

உண்ணாவிரதம் இருந்தாலும் உபவாசம் இருந்தாலும் அற்புதம் எதுவும் நடக்காது.


 உலக மக்களைப் படைத்தது பிரம்மா, காப்பது விஷ்ணு, அழிப்பது சிவன் என்று கதைகள் கட்டினர் பார்ப்பனர். இராமன் விஷ்ணுவின் அவதாரமாம். பிரம்மா படைத்ததை அவன்தான் பாதுகாப்பானாம். அவன் இராமனாக அவதரித்துக் கட்டினானாம் பாலம். அது இப்பொழுது இருக்குமிடம் தெரியாமல் அழிந்துபோய் அதை அமெரிக்காக்காரன் கண்டுபிடித்துக் கொடுத்தானாம். அதையும் இந்த மிலேச்சர்கள் அழிக்க சேது சமுத்திரத்திட்டத்தை அமல் படுத்துகிறார்களாம்

 இப்பொழுது இராமனுக்கு அதாவது விஷ்ணுவுக்கு சக்தி இல்லைபோல் தெரிகிறது. அவனால் அதைக்காக்கமுடியாமல் போகவே இவாளெல்லாம் அதைக் காக்கப் புறப்பட்டுவிட்டார்களாம். பிரம்மாவால் உருவாக்கியதையே காப்பாற்றும் சக்திபடைத்த விஷ்ணுää தான் படைத்ததை ஏன் காக்க முடியவில்லையோ தெரியவில்லை. அவனுக்கு சக்தி இல்லை என்பதை இவாள் உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ இவாளே அதைக் காக்கப் புறப்பட்டுட்டா போலிருக்கு.

 தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றபொழுது நானே அவதரித்து தர்மத்தைக் காப்பேன் என்றானாம் கண்ணன். அதாவது விஷ்ணு. அவன் கட்டிய பாலத்தை இடிப்பது அவனுக்கு அதர்மமாகத் தெரியவில்லைபோலிருக்கு. அதனால்தான் அவன் அவதரிக்கவில்லைபோலும். ஆனால் இவாளுக்கு அது அதர்மமாகப் படுகிறது. அவனும் அவரிப்பதாகத் தெரியவில்லை. எவனெவனோ நான்தான் கல்கி அவதாரமென்கிறான். அதையும் இவா நம்பத் தயாராக இல்லை. என்ன செய்வது?

 அவாளே களத்தில் இறங்கிட்டா. முதல் கட்டமாய் மதுரையில் உண்ணாவிரதம் இருந்தாளாம். (காலையில் ரெண்டு மூணு டஜன் இட்டிலிமட்டும். இரவில் பருப்பு நெய் வடை பாயசத்துடன் சாப்பாடு. இதற்குப்பெயர் உண்ணாவிரதம்) இரண்டாம் கட்டமாய் திருச்சியில் உபவாசமாம். (அதுவும் ஒருவனே தேவன்; என்ற அண்ணா சிலைக்குப் பக்கத்திலாம். அவர் சொன்ன ஒருவனே தேவன் இராமனா? அவர்தானே இராமாயணத்தைத் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்றார். அவரை எப்படி இவர்கள் துணைக்கு அழைக்க முடியும்?) உண்ணாவிரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று புரிகிறது. ஆனால் உபவாசம் என்றால் என்ன எழவோ ஒன்னும் புரியவில்லை. அதுவும் சாப்பிடாமல் இருப்பதுதான் என்று இவ்வளவு நாளாய் நினைத்துக்கொண்டிருந்தோம். இப்பொழுது வேறு ஏதோ அர்த்தம் போலிருக்கிறது. எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும்.

 ஆனால் முடிவில் அற்புதங்கள் நிகழும் என்கின்றார். என்ன அற்புதம் என்றுதான் புரியவில்லை. பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் நடத்தினார். உடைப்பதற்கு முன் அதனைத்தூக்கி வைத்துக்கொண்டு உடைக்காமல் சிறிதுநேரம் வைத்திருந்தார். ஏனய்யா என்று தொண்டர்கள் கேட்டதற்கு ~இந்தப் பார்ப்பானெல்லாம் கதைவிடுறது மாதிரி பிள்ளையார்னு ஒன்னு உண்மையா இருந்தா திடீர்னு வந்து தன்னை உடைப்பதைத் தடுப்பானா என்று பார்த்தேன். அவன் வரவில்லை. அதனால் இப்பொழுது உடைக்கிறேன்| என்றாராம். அதேபோல இராமனையும் செருப்பால் அடித்தார். அப்பொழுதும் ரோஷப்பட்டு இராமன் அவதரிக்கவில்லை. அப்படியெல்லாம் வந்திருந்தால் அற்புதம் என்று நாமும் ஏற்றுக்கொண்டிருக்கலாம். பெரியார்கூட இராமபக்தராய் மாறியிருக்கலாம். அப்பொழுதெல்லாம் நடக்காத அற்புதம் இப்பொழுது நடக்கப் போகிறதாமே!

 அதிலேயும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் தெரிகிறது. அதனால்தான் அடுத்த கட்டமாக பருப்பு நெய் நவதானியங்கள் போன்ற உணவுப்பொருட்களையெல்லாம் நெருப்பில் போட்டு யாகம் நடத்தப்போவதாய் இராமகோபாலய்யர் சொல்லியிருக்கார். கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் தஞ்சைப் பெரியகோயிலில் யாகம் நடத்தினபோது நூற்றுக்கணக்கானோர் இறந்துபோனார்கள். ஆனால் யாகம் நடத்திய ஒரு பார்ப்பான்கூட அதில் சாகவில்லை. அது வேண்டுமானால் அவாளுக்கு அற்புதமாகத் தெரியலாம்.

 எப்படியோ கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. எல்லாம் பார்ப்பனர் புரட்டு என்ற கருத்துக்கு வலிமை உண்டாகிக்கொண்டிருப்பதை அவாளால் மறுக்க முடியவில்லை. அதனால்தான் கடவுளிடம் போய் முறையிடாமல் இவாளே களத்தில் இறங்கியிருக்கிறார்.

 என்ன செய்வது? பார்ப்பான் உயர்ந்தவன் என்ற தத்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமே!
பக்தியில் முழுகிக் கிடக்கும் பாமரனை மயக்க இப்படி ஏதாவது கதைவிட்டால்தானே அவாள் பிழைப்பு நடக்கும்?

உண்ணாவிரதம் இருந்தாலும் உபவாசம் இருந்தாலும் அற்புதம் எதுவும் நடக்காது. தின்னுவிட்டுத் தின்னுவிட்டு கொழுப்பேறிக்கிடக்கும் அவாளுக்கு அந்தக் கொழுப்பு வேண்டுமானால் கொஞ்சம் குறையலாம். அப்படி நடந்தால் அவாளுக்கு அதுவேண்டுமானால் அற்புதமாய் இருக்கலாம். வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.                     
இப்படிக்கு
 

ராமன் என்பதே கற்பனையாக இருக்கும்போது ராமன் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எந்த அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்கிறது



தமிழர்களின் நூற்றாண்டுக்கனவு சேது சமுத்திரத்திட்டத்தினை திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு நிறைவேற்றுகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களிலிருந்து இலங்கையைச் சுற்றி கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் இலங்கைப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இந்தக் கால்வாய்மூலம் பயணம் செய்யும். இதனால் முப்பது மணிநேரம் மிச்சம் என்றால் இது சாதாரணமானதா? நேரம் மிச்சம்,காலமிச்சம், எரிவாயுமிச்சம்! போக்குவரத்துச் செலவும் குறைவு!

 இந்தத்திட்டம் முடிந்தால் 2008ல் 3000 கப்பல்களும் 2025ல் 8000 கப்பல்களும் இக்கால்வாய் வழியாகப் பயணிக்கும். இந்தத் திட்டத்திற்காகச் செலவழிக்கப்படும் 2427.4 கோடியும் 2017ல் வட்டியும் முதலுமாக வந்துசேரும்.

 கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் வளர்ச்சிபெறும். இலட்சக் கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெருகும். தொண்டியில் 16கோடி செலவில் சிறு கப்பல்கள் தங்கும்தளம்ää முத்துப்பேட்டையில் இரு சிறுமீன்படித் துறைமுகங்கள், தனுஷ்கோடியில் 16கோடி ரூபாய் செலவில் மீன்பிடித்துறைமுகம் மீனவர்கள் வளர்ச்சிக்காகச் செலவிடப் படுகிறது.

 இத்திட்டத்தினை ஆர்எஸ்எஸ், பிஜேபி, பிஎம்எஸ் வகையறாக்களும் அதிமுகவும் வரிந்துகட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள். இராமாயணத்தின் கற்பனைக் கதாநாயகன் இங்கு பாலத்தைக் கட்டினான் எனவும் அதனை அமெரிக்க நாசா படமெடுத்துச் சொன்னதாகவும் கதைவிட்டார்கள். நாசா விண்வெளி ஆய்வுமய்யம் அங்கே பாலம் இருப்பதாகவோ அது மனிதனால் கட்டப்பட்டதென்றோ தெரிவிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. அதற்குப்பிறகும் அவர்கள் திருப்பித்திருப்பி அதே பொய்யைக் கூறி வந்தார்கள்.

 சேதுசமுத்திரத் திட்டத்தலைவர் ரகுபதி அவர்கள்  அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு  மின்னஞ்சல் அனுப்பினார் ~~ நீங்கள் (நாசா) வெளியிட்டுள்ள புகைப்படத்தினால் இங்கு பிரச்சினை எழுந்துள்ளது. அது செயற்கையாகக் கட்டப்பட்டதா? அல்லது மணல்மேடா? அல்லது இந்தியப் பெருங்கடல் முழுவதும் நிலப்பரப்பாகவிருந்து கடலில் மூழ்கி மிச்சம் இருக்கும் மலைப்பகுதியா? என்று          26-07-2007 அன்று அதில் கேட்டிருந்தார்கள். அன்று மாலையே நாசாவும்; பதில் அனுப்பியது.

 அதில் ~~இந்தியா - இலங்கை இடையே உள்ள அந்தப்பகுதி இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுத்தான் || என்று தெளிவுபடுத்திவிட்டனர்.
அதற்குப்பிறகும் ராமர்பாலம் என்பது எங்கள் நம்பிக்கை. அதை இடிக்கக் கூடாது என்று உண்ணாவிரதம் உபவாசமெல்லாம் இருந்தார்கள். அதிலும் பலன் ஏற்படாமல் யாகமெல்லாம்கூட நடத்தினார்கள்.

 யாகமெல்லாம் ஊரை எமாற்றத்தான். அதில் ஒன்றும் பலன் ஏற்படாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த காரணத்தால் உச்சநீதிமன்றத்திலும் வழக்குப் போட்டார்கள். உச்சநீதிமன்றம் என்றால் உச்சிக்குடுமி நீதிமன்றம்தானே?

 எந்தச்சட்டத்தையும் பார்க்காமல் எந்த ஆதாரத்தையும் கேட்காமல் ராமன் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல்; மற்ற பகுதிகளில் பணிகள் தொடரலாம் என்று இடைக்காலமாகத் தடைவிதித்துத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால் சில பத்திரிகைகள் சேதுசமுத்திரத்திட்டத்திற்கே தடைவிதித்ததுபோல் செய்தி வெளியிட்டுள்ளன. ராமன் என்பதே கற்பனையாக இருக்கும்போது ராமன் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எந்த அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்கிறது என்றே தெரியவில்லை.

 ராமனுக்கு சக்தி இருப்பதாக நம்புகிறவர்கள், உபவாசம் நடந்தால் அற்புதம் நடக்கும் என்று சொல்கிறவர்கள், யாகத்தை நம்புகிறவர்கள் ராமன்பற்றி உபந்நியாசம் நடக்கும் இடங்களிலெல்லாம் அனுமான் தோன்றுவான் என்று சிலாகிக்கிறவர்கள்  நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

ராமன் எங்கே போனான்? அவனுடைய சக்தி என்னவாயிற்று? அனுமான் எங்கே போனான்? ஊருக்குஊர் நூறடி, இருநூறடி உயரத்தில் நெடுஞ்சாலையின்- இருபுறங்களிலும் அனுமானுக்கு சிலை எழுப்பி இருக்கிறார்களே! அவனிடம் தகவல் தெரிவிக்க வேண்டியதுதானே! அனுமன் தன்புஜபல பராக்கிரமத்தால் ராமன் பாலத்தை இடிக்க வருபவர்களை ஒரு கை பார்க்க வேண்டியதுதானே!  அதை விடுத்து நீதிமன்றம் செல்வது ஏன்? அவர்களும் நாத்திகர்கள் ஆகிவிட்டார்களோ!                
                                     இவண்
 

சேது சமுத்திரக்கால்வாய்த்திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடித்தால் கடல் பகுதியில் எரிமலை வெடித்துக்கிளம்பும் என்று ஓய்வுபெற்ற புவியியல் நிபுணர் கூறியிருப்பதாகக் கூறியுள்ளார்.



இராமன் என்ற இதிகாசக் கற்பனையைத் தூக்கிப்பிடித்து இந்த நாட்டில் பார்ப்பனீய வருணாசிரமக் கொடியை மீண்டும் பறக்க விடலாம் என்ற மனப்பான்மையிலிருந்து பார்ப்பனர்கள் விடுபடுவதாகத் தெரியவில்லை. பாபர் மசூதியை இடித்து ராமன் கோயிலை எழுப்பத் துடிப்பதும் மக்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில்  ~ராமன்பாலம்| என்ற புளுகைத் திணிப்பதும் அந்த வகையைச் சேர்ந்ததேயாகும்.

 புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மை வரலாறுபோல் நிலைநாட்ட இந்தக் கூட்டம் மேற்கொள்ளும் பித்தலாட்டத்தைச் சொல்லி முடியாது. கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாது என்கின்ற கட்டம் வருகின்றபொழுது தயாராக சில சொற்களைக் கையிருப்பில் வைத்திருப்பார்கள்.

   ---- என்பது நம்பிக்கை    ---- என்பது அய்தீகம்     என்கின்ற வார்த்தைப் பிரயோகங்கள்தான் அவை. இப்படிச் சொல்லிவிட்டால் அதற்குமேல் எந்தவித விவாதத்துக்கம், அறிவுரீதியான விமர்சனத்துக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது பொருளாகும்.

 பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் இராமன் கோயில் பிரச்சினையைக்கிளப்பும் நிலையிலும்கூட இந்தப் பிரச்சினையில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. கூடாது இது ஒரு நம்பிக்கைப்பிரச்சினை என்று அடம்பிடித்துப் பேசினார்கள்h   --- இன்றும் பேசுகிறார்கள்

 ராமன் பாலம் பிரச்சினையில் தொடக்கத்தில் விஞ்ஞான முலாம் பூசிப் பார்த்தனர். நாசாவைச் சந்திக்கு இழுத்தனர். மணல் திட்டு இருப்பதாகத்தான் கூறினோமே தவிர ராமன் பாலம் என்றெல்லாம் கூறவில்லை. 17 லட்சம் வருடங்களுக்கு முந்தியது அந்தப் பாலம் என்றும் கூறவில்லை என்று அவர்கள் கைவிரித்த நிலையில்ää புதுப்புது அக்கப் போர்களைக் கிளப்பிவிட்டுப் பார்த்தனர்.

 யாரோ ஒரு விஞ்ஞானியாம். புனித் தனேஜா (வயது 40) என்ற நபர் விஞ்ஞானி என்று சங் பரிவார்க் கும்பலால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ~இஸ்ரோ| வின் விஞ்ஞானி என்றும் அவர் கூறிக்கொண்டார். அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்தினார்கள் சங்பரிவார்க் கூட்டம். தனுஷ்கோடி கடற் பகுதியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று மணல் திட்டுக்களை வீடியோ படம் எடுத்து இதுதான் ராமர்பாலம் என்று தெரிவித்தாராம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களும் நம்பினார்களாம். அதன் பிறகே அவர்கள் இந்தப் பிரச்சினையை உரத்த குரலில் முழங்கினார்களாம்.

 கடைசியில் இப்பொழுது என்னாயிற்று? இஸ்ரோ வின் அதிகாரிகள் அப்படி ஒரு நபர் இஸ்ரோவில் பணியாற்றவில்லை என்று அடித்துச் சொல்லி விட்டார்கள். அந்த ஆசாமி இதற்காக ஆர்எஸ்எஸ் தலைவரிடமிருந்து ஏழு லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இவர்கள் தூக்கி நிறுத்திய இந்தப் பிரச்சினை அடிப்படை ஏதும் இல்லாததால் அடி முறிந்து அசிங்கமாகப் போய்விட்டதே.

 இந்த நிலையில்தான் இந்துமுன்னணி அமைப்பாளர் திருவாளர் இராமகோபாலன் என்பார் சங்பரிவார்க் கும்பலுக்கே உரித்தான வழக்கமான பாணியில் கரடி விட ஆரம்பித்து விட்டார்.

 ~சேது சமுத்திரக்கால்வாய்த்திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடித்தால் கடல் பகுதியில் எரிமலை வெடித்துக்கிளம்பும் என்று ஓய்வுபெற்ற புவியியல் நிபுணர் கூறியிருப்பதாகக் கூறியுள்ளார். யார் அந்தப் புவியியல் நிபுணர்? எந்த ஊர்க்காரர்? என்கிற விவரங்களை அவர் கூறவில்லை. இது அவர்களின் வழமையான பாணியாகும். அறிவு நாணயத்துக்கும் அவர்களுக்கும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.

 இதுவரை எந்தப் புவியியல் நிபுணராவது அந்தப் பகுதியில் எரிமலை இருப்பதாகக் கூறியதுண்டா? அப்படி இருந்தால் அதனை வெளிப்படுத்தலாமே! கடைசியில் நெருக்கிக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

 ~ராமன் நேற்றிரவு என் கனவில் வந்து அப்படிக் கூறினார்| என்று சொன்னாலும் சொல்வார்கள். சிதம்பரத்தில் நடராஜக் கடவுள் கனவில் வந்து நந்தனைத் தீயில் குளித்துவரச் சொன்னார் என்று சொல்லி, நந்தனைச் சாம்பலாக்கி விடவில்லையா?  சீரங்கத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருக்கும் தன் காதலி ஆண்டாளை சைட் அடிக்க முடியவில்லை. அதனால் கோபுரத்தை உயர்திக்கட்டு என்று அரங்கநாதன் ஜீயர் கனவில் கூறியதாகச் சொல்லி கோபுரத்தை உயர்த்திக் கட்டவில்லையா?

     நியாயமாகக் காவல்துறை, திருவாளர் இராமகோபலனை அழைத்து எரிமலை வெடிக்கும் என்று கூறியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அப்படி ஒரு புவியியல் நிபுணர் இருப்பாரேயானால் அவரிடமும் தகவல் கேட்கும் முறையில் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற புரளிகள் மக்களை அச்சுறுத்தும் போக்கிரித்தனங்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.
 இவண் :

ஒரு வெறிபிடித்த சாமியார் கருணாநிதியின் நாக்கையோ, தலையையோ வெட்டி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்குகிறேன்| என்கிறான்




இல்லாத இராமனைப்பற்றிக் கலைஞர் சொல்லி விட்டாராம். பொய்யைச் சொல்லியே காலம் காலமாய்ப் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களை ஏய்த்து வந்த கூட்டத்துக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கலைஞர் ஆதாரத்தோடு சொன்ன வாதத்துக்கு அறிவுப்பூர்வமாகப் பதில் சொல்ல முடியாத அக்கிரமக்கூட்டம் தலைகால் புரியாமல் ஆத்திரத்தில் குதிக்கிறது.
 வடநாட்டிலே ஒரு வெறிபிடித்த சாமியார் பிஜேபி சார்பாக எம்பி யாக இருந்தவன்                   

கருணாநிதியின் நாக்கையோ, தலையையோ வெட்டி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்குகிறேன்| என்கிறான்.

 எவ்வளவு கொழுப்பு, ஆணவம் இருந்தால் இவ்வாறு அவன் கூறியிருப்பான்.

அதைக் கண்டிக்க வக்கற்ற கூட்டம் பிஜேபி அலுவலகம் தாக்கப்பட்டதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. அவன் பிஜேபி எம்பி மட்டுமல்ல. விசுவ இந்த பரிஷத் தினுடைய மண்டலத் தலைவராக இரண்டு முறை இருந்தவன். ஆனால் பிஜேபி என்ன சொல்கிறது? அவனுக்கும் பிஜேபி க்கும் சம்மந்தமே இல்லை என்கிறது. அப்படியானால் அவனைக் கைது செய்யச்சொல்லி பிஜேபி யோ அதன் அடிவருடிகளோ ஏன் கூறவில்லை? அவனைப் போன்றவர்களாகத் தேடிப்பிடித்து எம்பி பதவியை ஏன் வழங்கியது?

 பிஜேபி இவனை மட்டும் சம்மந்தமில்லை என்று சொல்லவில்லை. பெங்களுருவில் செல்வியின் வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டவர்களுக்கும் பிஜேபிக்கும் ஆர்எஸ்எஸ_க்கும் சம்மந்தமில்லை என்றது. ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவரது மகன்களையும் உயிரோடு தீ வைத்துக் கொன்றவனை நல்லவன் என்றார் அத்வானி. பஜ்ரங்தள்காரர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

 அதேபோலத்தான் கோட்ஸேவுக்கும் ஆர்எஸ்எஸ் ஸ_க்கும் சம்மந்தமில்லை என்றும் சொல்லி வருகிறது.

 இதுதான் ஆர்எஸ்எஸ் கும்பலின் கலாச்சாரம். இவர்கள் பேச்சின்மூலம் கொலைவெறியைத் தூண்டுவார்கள். ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். இவர்களது பேச்சால் வெறியேற்றப்பட்ட ஒருவன் இதுபோன்ற கொலைவெறிச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று கூறித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.

 இத்தகைய கொலைவெறி என்பது பார்ப்பனர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல. அசோகரது பேரன் பிம்பிசாரனை அவனது தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கன் என்பவன்  கொன்று விட்டு ஆட்சியைப்பிடித்த பின்னர் புத்தபிக்குகளின் தலையை வெட்டி வருபவர்களுக்கு நூறு தங்கக் காசுகள் பரிசு என்று அறிவித்து அதன்மூலம் நாட்டில் இருந்த புத்தபிக்குளையெல்லாம் ஒழித்துக் கட்டினான்.

 காரணம் அசோகர் காலத்தில் அரசமதமாக இருந்த பௌத்தமதம் வருணாசிரமத்தை ஒழித்துக்கட்டியது. அதனால் சமுதாயத்தின் உச்சாணிக்கொம்பிலிருந்த பார்ப்பனர்களின் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் மனம் வாடியிருந்த பார்ப்பனர்கள் சமயம்பார்த்து மன்னனைக் கொன்றுவிட்டு தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.

 அதேபோல சமத்துவப் பெரியாராக விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சாதியை ஒழிக்க சமத்துவபுரங்களை உருவாக்கி வருகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றி பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு வேட்டுவைக்கிறார்.

 சுயமரியாதைத் திருமணத்தை அகில இந்தியாவிலும் அமுல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார். அத்துடன் தங்கள் ஆதிக்கபீடங்களாக இருக்கக் கூடிய அய்அய்டி, அய்அய்எம், ஏஅய்எம்எஸ் போன்ற இடத்திலெல்லாம் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்க்க மன்மோகன்சிங் அரசையும் பயன்படுத்தி வருகிறார்.

 இதனால் தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிற வேதமதக் கூட்டம் புஷ்யமித்திரன் பாணியில் கலைஞரின் தலைக்கு விலை வைக்கிறது.
சூடுசொரணையுள்ள தமிழர்களே! அந்தக் கொலைகாரக் கும்பலுக்குத் தக்க பாடம் புகட்டுவீர்!
இவண் :
 

அந்தப் பாலம் பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அது உலக அதிசயம். அதை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகள் அந்தப் பாலத்தை நீங்கள் பார்த்தீர்களா? என்று வழக்கறிஞரைக் கேட்கிறார். அதை நான் பார்க்கவில்லை மை லார்ட்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உலக அதிசயம் பற்றி ஆய்வு நடந்தது. அதில் தாஜ்மகாலும் எகிப்து பிரமிடுகளும் நிரந்தர அதிசயங்களாகவும் மேலும் பல அதிசயங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த ஆய்வின்போது மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலையும் உலக அதிசயத்தில் சேர்க்க வேண்டும் என்று அங்கு உள்ளவர்கள் கோரிக்கை விடுத்தனர். வாக்கெடுப்புக்கூட நடத்தினர். உலக அதிசயத்தில் அது சேர்க்கப்படவில்லை என்றாலும் தமிழனின் கட்டிடக்கலையை அது எடுத்துக் காட்டுகிறது என்பதில் அய்யமில்லை.

மதுரை மீனாட்சி கோயில் கண்ணுக்குத் தெரிகிறது. நம் நாட்டினர் மட்டுமல்லாது வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதை வந்து அதன் கட்டிட நேர்த்தியைக் கண்டு களித்துச் செல்கின்றனர்.

உலக அதிசயங்கள் பற்றிய ஆய்வு நடந்தபோது பிஜேபி யினரும் விஇப, பஜ்ரங்தள் (குரங்குப்படை) எல்லோரும் இங்குதான் இருந்தார்கள். ஜெ. அம்மையாரும் ஆட்சியில் இருந்தார். சோ வும் சு.சாமியும், இல.கணேசன், இராமகோபாலன் அய்யர்களும் உயிரோடுதான் இருந்தார்கள்.

அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு இராமர் பற்றியோ அவர் கட்டிய பாலம் பற்றியோ கனவு வரவில்லை போல் தெரிகிறது. இராமர் தடவியதால் அணில் முதுகில் இருக்கும் கோடுகளும் அதிசயமாகத் தெரியவில்லை போல் தெரிகிறது.

கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்து தமிழனின் நூற்றைம்பது ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தை மத்திய அரசில் 2500 கோடி நிதி உதவிபெற்று நடைமுறைப்படுத்தும் போதுதான் இராமனும், லட்சுமணனும், அனுமாரும் கனவில் வந்து சொல்லி இருப்பார்கள் போல் தெரிகிறது.

அந்தப் பாலம் பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அது உலக அதிசயம். அதை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகள் அந்தப் பாலத்தை நீங்கள் பார்த்தீர்களா? என்று வழக்கறிஞரைக் கேட்கிறார். அதை நான் பார்க்கவில்லை மை லார்ட் என்று கீழ்ஜாதி         கே.ஜி பாலகிருஷ்ணனிடம் சொல்கிறார் உயர்ஜாதி வழக்கறிஞர்.

நீங்களும் பார்க்கவில்லை, நீதிபதிகளாகிய நாங்களும் பார்த்ததில்லை, வேறு யாருமே பார்த்ததாகத் தெரியவில்லை. இப்படி யாருமே பார்க்காத ஒன்றை எப்படி புராதனச் சின்னமாக அறிவிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேட்டவுடன் சட்டத்தைக் கரைத்துக்குடித்து மிகப்பெரிய சட்டமேதை என்று ஜெயலலிதாவால் கணிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் காசுகொடுத்து வழக்குப் போடச்சொன்ன ஜெயலலிதாவைக்கூட ஒரு வார்த்தை கேட்காமல் வழக்கைப் பின் வாங்கிக் கொண்டார்.
அந்தப் பாலம் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதை இவர்கள் நம்பி யிருந்தால் உலக அதிசயம்பற்றி ஆய்வு செய்த குழுவிடம் இவர்கள் விண்ணப்பித்திருக்கலாமே! அப்படி விண்ணப்பித்திருந்தால் இன்று நீதிபதிகள் கேட்ட இதே கேள்வியை அவர்கள் கேட்டிருப்பார்களே!

இந்திய நாட்டு நீதிபதியிடமே பதில் சொல்ல முடியாமல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வந்தவர்கள் அவர்களிடம் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டும் போலிருக்கிறது. அது மாத்திரமல்லாமல் உலகம் பூராவும் உள்ள அறிவுள்ள மக்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.

இப்படி நகைப்பிற்கிடமான ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு குறிப்பாக தென்தமிழக வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள் என்றால் இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த விந்தை நடக்காது.
உச்சநீதி மன்றத்திலேயே மூக்குடைபட்ட பின்னரும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் தமிழன் கால்வாயான அண்ணா கனவு கண்டää பெரியார் போராடிய காமராஜர் விரும்பிய இன்னும் பல தலைவர்களெல்லாம் ஆசைப்பட்ட சேதுக்கால்வாய்திட்டத்தை முடக்குவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்களே!

தமிழர் நலனில் அக்கறையுள்ளோரே! இவர்களை அடையாளங் கண்டுகொள்வீர்!

25.02.08

விஷ்ணு ஒன்பது அவதாரம் எடுத்திருந்தாலும் பார்ப்பனர்களும் சங் பரிவாரும் இராமனையும் கிருஷ்ணனையும் மட்டும் முன்னிலைப்படுத்துவதேன்?



இராமன் விஷ்ணுவின்; அவதாரமாம். அந்த விஷ்ணு பத்து அவதாரம் எடுக்க வேண்டியதில் ஒன்பது அவதாரத்தை எடுத்து விட்டான். பத்தாவதாக கல்கி அவதாரம் எடுக்க வேண்டும். எப்பொழுது எடுப்பான் என்று எவனுக்கும் தெரியாது. அவன் அவதாரம் எடுக்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் மக்களை மடையர்களாக்க எவனெவனோ இன்று நான்தான் கல்கி அவதாரம் என்று ஏமாற்றுகிறான். அவன் பின்னாலும் செல்வதற்கு இங்கு மக்கள் இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.

 விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்தான். ஆமை அவதாரம் எடுத்தான். நரசிம்ம அவதாரம் எடுத்தான் குள்ளப்பார்ப்பான் அவதாரம் எடுத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இப்படி ஒன்பது அவதாரம் எடுத்திருந்தாலும் பார்ப்பனர்களும் சங் பரிவாரும் இராமனையும் கிருஷ்ணனையும் மட்டும் முன்னிலைப்படுத்துவதேன்?
 அனைத்து அவதாரங்களும் ஆரிய - திராவிடப்போராட்டத்தை விளக்கினாலும் இராமனும் கிருஷ்ணனும் பார்ப்பனர்களை மிக உச்சத்தில் உயர்த்திப்பிடிக்க உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களாகும்.

 பௌத்த இராமாயணம், யவன இராமாயணம், ஜைன இராமாயணம் என்று பல இராமாயணம் இருந்தாலும் இந்து மதவாதிகளால் போற்றப்படுவது வடமொழியில் வால்மீகி இரமாயணம் தமிழில் கம்ப இராமாயணம் இந்தியில் துளசிதாஸ் இராமாயணம் ஆகியவையாகும். இவை கதையிலும் கருத்துக்களிலும் பல்வேறு முரண்பாடு கொண்டவையாகும். இவை அனைத்திலும் பார்ப்பான்தான் எல்லாரையும்விட மிக உயர்ந்தவன் என்ற தத்துவம் உயர்த்திக்காட்டப்பட்டுள்ளது.
 பிரேம்நாத்பாஸ் என்பவர் துளசிதாஸ் இராமாயணத்தை ஆய்வு செய்து அதில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்.

~இராமராஜ்யத்தில் ஆண்களும் பெண்களும் தாராளமாக இருந்தார்கள். பார்ப்பனர்கள் முன்னாலே அவர்கள் அடக்கமான வேலைக்காரர்களாக இருந்தனர்.

     இராமராஜ்யத்தில் இரண்டுபேர்தான் வணங்கத்தக்கவர்கள். ஒன்று பார்ப்பனர்கள். இரண்டு கோமாதா. இராமன் இலட்சிய புருஷன். அவன் யாரை வணங்குகிறான்? பார்ப்பனர்களையும் பசுக்களையும் தான் வணங்குகிறான்.

      அடுத்து அதில்; இராமனே கூறுவதாகப் பல வசனங்கள் உள்ளன.

பார்ப்பனர்களுடைய சாபம் பயங்கரமானது. அதன் விளைவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஏழேழு பிறவிக்கும் உங்களை விடாது.|

பார்ப்பனர்களை எவர் எதிர்க்கிறார்களோ வெறுக்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களை நான் விரும்ப மாட்டேன்

 பிரம்மா விஷ்ணுää சிவன் மற்றும் இவற்றின் ஆதிக்கத்தாக்கத்துக்கு உட்பட்ட எல்லாக் கடவுள்களுமே பார்ப்பனர்களை நன்றியோடு வணங்கித் தொழுதனர்.

 பார்ப்பான் நம்மை திட்டினாலும் கொன்றாலும் அவனமீது ஆத்திரப்படக்கூடாது. அப்பொழுதும் அவனைத்தான் நீ வணங்கவேண்டும்.

 இந்த உலகத்தில் மதிப்பிற்குரியதாகச் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்று உள்ளது. அது பார்ப்பனர்களின் காலடியைத் தொழுவதுதான். அப்பொழுதுதான் கடவுளுக்கு மகிழ்ச்சி வரும.;

 பார்ப்பனர் என்பவர் கடவுளுக்கு இணையானவர் என்பதை அறிந்துகொள்க! |
ஒரு இடத்தில் பார்ப்பனர்கள் கடவுளைவிட மேலானவர்கள் என்று கூறும் இராமன் இன்னொரு இடத்தில் பார்ப்பனர்கள் கடவுளுக்கு இணையானவர் என்கிறார்.

இப்பொழுது புரிகிறதா ஆர்எஸ்எஸ் சங்பரிவார், சுப்பிரமணியசாமிகள், இராமகோபாலன்கள், துக்ளக் சோ க்கள், சீரங்கத்து அம்பிகள் எல்லாம் இராமனை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று?
இராமராஜ்யம் வரவேண்டும் என்பதன் சூட்சுமமும் புரிகிறதா?       தொடரும்...
இவண் :

பக்தியும் ஒழுக்கமும்


 கடந்த ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் நேர்மையற்றவர்கள் என்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் நாணயத்தோடும் நடந்துகொள்வார்கள் என்றும் கடவுள் பக்திதான் இவற்றையெல்லாம் ஊட்டுகிறது என்றும் சில பேர் நீட்டி முழக்கினார்கள்.

இந்த கடவுள் பக்தி எந்த அளவுக்கு ஒழுக்கத்தை போதிக்கிறது என்பதை மகாபாரதத்தைப் படித்தாலே போதும். ரொம்ப ரொம்ப ஒழுக்கமுள்ள தர்மரே சூதாடுகிறார். மனைவியை வைத்து சூதாடுகிறார். அதுவும் தனக்கு அய்ந்தில் ஒரு பங்கு மட்டுமே உரிமையுள்ள துரௌபதியை வைத்து சூதாடுகிறான். இப்படி ஒழுக்கக் கேட்டிற்கும் துரோகத்திற்கும் வஞ்சனைக்கும் மதநூல்களில் இருந்து ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

இந்த மதவாதிகள் சொல்லும் பக்தியும் ஒழுக்கமும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு மதுரையில்  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைச் சொல்லலாம். அழகர் ஆற்றில் இறங்குகிறார் ஆற்றில் இறங்குகிறார் என்று பக்திச்சுவை நனிசொட்டச் சொட்ட பத்திரிகைகள் எழுதுகின்றன. தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. ஆற்றில் ஏன் இறங்குகிறார்? இறங்கி எங்கே போகிறார்? ஏன் போகிறார்? எப்பொழுது திரும்பி வருவார் என்பதைப்பற்றி யாராவது எழுதுகிறார்களா?         

 மதுரையில் சொக்கநாதருக்கும் மீனாட்சிக்கும் திருமணமாம். அந்தத் திருமணத்துக்கும் தேரோட்டத்துக்கும் எத்தனை ஆர்ப்பாட்டங்கள்? அமர்க்களங்கள்? தங்கத்தால் குதிரை. தங்கத்தால் காளை. வெள்ளியால் காளை. வெள்ளிக்குதிரை என தங்கமும் வெள்ளியும் ஜொலிக்கின்றன. திருமணத்துக்கு வரவேண்டிய பெண்ணின் அண்ணன் கள்ளழகர் நேரத்துக்கு வரவில்லை. திருமணம் முடிந்து விடுகிறது. நான் வருவதற்குள் எப்படித் தாலி கட்டலாம் என்று கோபித்துக்கொண்டு வைகை ஆற்றில் இறங்கி வைப்பாட்டி வீட்டுக்குச் செல்கிறார். அங்கே மூன்று மாதம் தங்கி உல்லாசமாய் இருக்கிறார். மூன்றுமாதமாய் தன்னுடைய கணவனைக் காணவில்லையே என்று அழகரின் மனைவி தேடி வந்து தன்னுடைய கணவன் தேவடியார் வீட்டில் இருப்பதைப் பார்த்து விளக்குமாற்றால் அடித்து வீட்டுக்குக் கூட்டி வருகிறார்.

இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களங்களும். இந்தத் திருவிழாக் கொண்டாடுகின்ற பக்தர்களுக்கு இந்தக் கதையைக் கேட்டால் பக்தி உணர்வு பிறக்குமா? வேறு உணர்வு பிறக்குமா? சொக்கருக்கும் மீனாட்சிக்கும் கல்யாணம் எத்தனை முறை நடப்பது? சென்ற ஆண்டு நடந்த திருமணம் என்னாச்சு? டைவர்சா? சென்ற ஆண்டுதான் லேட்டா வந்தோமே இந்த ஆண்டாவது சீக்கிரம் போகணும் என்று அழகர் சீக்கிரம் வரலாமே? ஏன் வரவில்லை? சென்ற ஆண்டு மச்சான் வருவதற்குள் தாலி கட்டியதால் கோபித்துக் கொண்டு போனானே இந்த ஆண்டாவது கொஞ்சம் பொறுத்திருந்து தாலி கட்டலாம் என்று சொக்கநாதரும் தாலி கட்டலாமே? மீனாட்சிதான் என் அண்ணன் வரும்வரை பொறுத்திருங்கள் நாதா என்று சொக்கரைக் கேட்டிருக்கலாமே? ஏன் இவையெல்லாம் நடக்கவில்லை? எல்லாம் பிள்ளை விளையாட்டு என்றார் வள்ளலார். சிறு பிள்ளைகள் மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடுவதுபோல் பெரியவர்கள் கடவுள் பொம்மையை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான் இதுபோன்ற தேர்த்திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் எல்லாம்.

இதற்காக எத்தனை லட்சம் மக்கள் கூடுகின்றார்கள்? எத்தனை கோடி பணம் செலவாகிறது? இந்தக் கூட்டத்தில் என்ன என்ன ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன? எத்தனை நாட்கள் அரசு இயந்திரங்கள் முடக்கப்படுகின்றன? இதனால் காதொடிந்த ஊசிமுனையளவாவது இந்த நாட்டுக்கோ சமுதாயத்துக்கோ நன்மை உண்டா? பொருளாதார நிபுணர்கள் இதில் எவ்வளவு நட்டம் என்பதை அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா? பொறுப்புள்ள அரசாங்கம் இதனைத் தடை செய்ய வேண்டாமா?

கள்ளழகர் ஆற்றில் இறங்கி தேவடியாள் வீட்டுக்குப் போவதுபோல் சீரங்க ரெங்கநாதனையும் உறையூர் நாச்சியாரிடம் கொண்டுவந்து விட்டு விடிய விடியக் காவல் காத்து பார்ப்பனர்கள் தூக்கிச் செல்வதை சேர்த்தி வைபவம் என்று கொண்டாடுகிறார்களே! இவையெல்லாம் ஒழுக்கத்தை வளர்க்கத்தானா? இந்த இலட்சணத்தில் பக்தி உள்ளவன்தான் ஒழுக்கமாக இருப்பான். பக்தி இல்லாதவனுக்கு ஒழுக்கம் இருக்காது என்பதெல்லாம் எவ்வளவு ஆணவமான பேச்சு என்பது விளங்கவில்லையா? சிந்திப்பீர்! ஒருவனுக்கு பக்தி இல்லாவிட்டால் யாருக்கும் எந்த நட்டமுமில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எலலாமே பாழ் என்ற பெரியார் சொன்னதன் உண்மையைப் புரிந்துகொள்வீர்!
14.05.2014