சனி, 7 ஜூலை, 2018

திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் நீதிக்கட்சி வரலாறு அயோத்தி தாசர் வரலாறு ரெட்டைமலை சீனிவாசன் வரலாறு எல்லாம் வைக்கப்பட்டது. அப்போது பார்ப்பனர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தினமணியில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சு விதைப்பதாக எழுதினார்கள். ஜெயலலிதா ஆட்சியில் சமச்சீர் கல்வியை ஒழிக்க குழ அமைத்தார்கள். அதில் பார்ப்பனர்களை நியமித்து திருவள்ளுவர் படத்தைக்கூட மறைத்தார்கள். நீதிமன்றத் தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப் பட்டாலும் பார்ப்பன சூழ்ச்சியால் நம் தலைவர்களின் வரலாறுகள் இருட்டடிக்கப்பட்டன.
இப்படி பார்ப்பனர்கள் நம் தலைவர்களின் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லியே தரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் போது அதனைக் கண்டிக்க வக்கில்லாமல் திராவிட இயக்கம்தான் அயோத்தி தாசரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடித்தது என்று பேசுவது என்ன வகையில் சேர்த்தி என்பது தெரியவில்லை

வெள்ளி, 6 ஜூலை, 2018





வியாழன், 3 ஆகஸ்ட், 2017

இரட்டைமலை சீனிவாசன்



இரட்டைமலை சீனிவாசன்




ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமை முரசு கொட்டிய இரட்டை மலை சீனிவாசன் செங்கற்பட்டு மாவட்டம்இ மதுராந்தகத்தில் இன்று (7.7.1860) தான் பிறந்தார். அவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டினார்.



தென்னாப்பிரிக்காவில் காந்தியார் அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.



1923ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினராக நியமிக் கப்பட்டார். 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார்.



அவர்தம் நற்பணிகளுக்காக ராவ்சாகிப்இ ராவ் பகதூர்இ திவான்பகதூர் ஆகிய பட்டங்கள் அவருக்கு அளிக்கப்பட்டது உண்டு.



1928-1929ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் பங்கு கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி என்று காந்தியார் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோதுஇ அம்பேத்கர் அவர்களுடன் சேர்ந்து இரட்டை மலை சீனிவாசன் கடுமையாக எதிர்க்குரல் கொடுத்தார்.



பறையன் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.



ஆரியப் பார்ப்பனர் எதிர்ப்பில் மிகத் தெளிவாகவும்இ உறுதியாகவும் திகழ்ந்தார்.



1895ஆம் ஆண்டில் ஒரு வித்தியாசமான - சுவையான நிகழ்வு! லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அந்த தேர்வில் தேறுகிறவர்கள் - ஆங்கிலேயர்களே! அவர்கள்தான் மாவட்ட ஆட்சியர்களாகவும்இ நீதிபதிகளாகவும் உயர் பதவிகளிலும் வருவார்கள். அந்தத் தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் காங்கிரசார் மசோதா ஒன்றை சமர்ப்பித்தனர். அந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் உயர் ஜாதி பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து ஏழை ஜாதியினரைத் தீண்டாதார் என்று இம்சிப்பார்கள்.



அதன் காரணமாக பறையர் மகாஜன சபையார் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு பெருங் கூட்டம் கூட்டிஇ அந்த மசோதாவை மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்களைச் சேகரித்து ஜெனரல் சர்ஜார்ஜ் செவ்னி (புநநெசயட ளுசை புநழசபந ஊhநறநெல) என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் சமர்ப்பித்தனர். இதன் மூளையாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார். மசோதாவை காங்கிரஸ்காரர்கள் பின் வாங்கிக் கொண்டனர்.



பார்ப்பனர்களின் தன்மைகளைத் துல்லியமாக உணர்ந்ததோடு - அதனைத் தடுக்க புதிய யுக்தியையும் கையாண்ட இரட்டைமலையாரின் சிந்தனைத் திறனை என்னென்று கூறுவது!





7.7.2011



நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

நேரம் ஆகஸ்ட் 03இ 2017

ஞாயிறு, 16 ஜூலை, 2017

அயோத்தி தாசர்


ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நாயகரும்பவுத்த நெறி பரப்புவதில் தனிமுத்திரை பொறித்தவருமான அயோத்திதாச பண்டிதரின் பிறந்தபெருமைக்குரிய நாள் இந்நாள் (20.5.1845).

சென்னை இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் தமிழ் என்ற வார இதழை நடத்தியபெருமையும் அவருக்கு உண்டு.

பார்ப்பன வேதாந்த விவரம்நந்தன் சரித்திர விளக்கம்நூதன ஜாதிகள் உற்பவ பீடிகைதிருவள்ளுவ நாயனார்  பறைச்சிக்கும்பார்ப்பானுக்கும்பிறந்தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.

தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்இவர் குறித்து  விடுதலை தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும்கருத்தும் இக்காலஇளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்ததுகூட்டத்தில் அவர் பேசும்போதுவள்ளுவர் பார்ப்பனவிந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்சுக்கல சுரோனிதம் கலப்பறியாது என்று குறிப்பிட்ட போதுஅக்கூட்டத்தில் இருந்தஅயோத்திதாச பண்டிதர் எழுந்துநீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றார்.

அதற்கு சிவநாமசாஸ்திரி சரிகேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.., பி.., படித்துப்பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களேஅவர்கள்யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்என்று கேட்டார்அயோத்திதாசர்அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.

தொடர்ந்துபெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர்நினைக்கிறீர்என்று அடுத்து வினாக்களைத் தொடுத்தார்.

திருதிருவென்று விழித்தார் சாஸ்திரிவாள்ஏன்பதில் சொல்லாமல் நிற்கிறீர்சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்தபோது கூட்டத்தில்இருந்த ஆனரபிள் திரு.பிஅரங்கையா நாயுடுவும்திரு.எம்.வீரராகவாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தினர்.  கூட்டத்தில்இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டனர்சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்துசிறிது நேரத்தில் நடையைக்கட்டிவிட்டார்.

அதுமட்டுமல்ல இன்றும் பார்ப்பனர்கள் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும்மனப்பான்மையில்தான் உள்ளனர்.

இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் தமிழினத் தன்மான உணர்வோடு உஞ்சவிருத்திக் கூட்டத்தை  உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரைநினைவு கூர்வோம்!

20.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்