புதன், 31 ஜனவரி, 2018

கிரகணம்

கிரகணம் தோஷமல்ல... குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் பெற்றோரே!
கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?-

 : கிரகணம் என்பது தோஷமல்ல அதனை அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும்இ வெறும் கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கிரகணம் என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. காலம் காலமாக புரையோடி இருக்கும்

மூடநம்பிக்கைகளில் இருந்து இளம் தலைமுறையினரை அறிவியல் ரீதியாக சிந்திக்க வைக்க வேண்டியதும் பெற்றோர் செய்ய வேண்டியதே. பூமியின் ஒரு பக்கம் சூரியனும் மறுபக்கம் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூப்பர் மூன் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமி ப்ளூ மூன் என்று அறிவியல் ரீதியில் அழைக்கப்படுகிறது. ப்ளூ மூன் என்பதால் நிலவு நீல நிறத்தில் தெரியாது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம்.


 வழக்கமாக நிலவு வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆனால் இன்றைய அதிசய நிகழ்வின் போது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும். இதோடு பூமி நிலவு சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது நிகழும் கிரகணத்தின் போது நிலவொளி முற்றிலும் இருண்டுவிடும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பூமி விலகிச் செல்லச் செல்ல நிலவு மீண்டும் முழு வடிவிற்கு வரும்.

எப்போது கிரகணத்தை பார்க்கலாம்

மாலை 5.48 மணிக்கு கிரகணம் தோன்றினாலும் நிலவு உதயம் மாலை 6.04 மணிக்கே கிரகணத்தை பார்க்க முடியும். தொடர்ந்து 2 மணி நேரங்கள் படிப்படியாக நிலவு மீது இருக்கும் பூமியின் நிழல் விலகத் தொடங்கி 8.40 மணியளவில் முழுமையாக நிலவு தெரியும். அதன் பின்னர் நிலவு வழக்கம் போல வெண்மை நிற ஒளி வீசும். வெறும் கண்களாலேயே பார்க்கலாம் பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படாமல் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே கிரகணத்தை பார்க்கலாம். கடற்கரைகளில் கிரகணம் இன்னும் சற்று தெளிவாகத் தெரியும் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடற்கரைகளுக்கு அழைத்து சென்றும் கிரகணம் பற்றிய புரிதலை ஏற்படுத்தலாம்.

 குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்

அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் வானியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக அறிவியல் இயக்கம் சார்பில் விளக்கக் கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வளர் தலைமுறையினருக்கு கிரகணம் தொடர்பான புரிதலை ஏற்படுத்த பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சரியான முறையில் அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

வானியல் நிகழ்வை பார்த்து மகிழுங்கள் கிரகணம் என்றாலே தோஷம் என்று பார்க்கப்படும் நிலை இனியேனும் மாற அவை தொடர்பான அறிவியல் காரணங்கள் மிக முக்கியம். எனவே மக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் குடும்பதோடு குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சூப்பர் மூனைக் காட்டி விளக்க வேண்டும்.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

பார்ப்பனர்கள்


*பார்ப்பன சாம்ராஜ்யம் 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்*
*(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பன..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பன..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.
பாரப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரபிரதேசம்.
பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.
பார்ப்பன..ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.
பார்ப்பன...அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பார்ப்பன....
பொருளாதாரத்தில் பார்ப்பன...பின்தங்கிய மாநிலம் := கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.
பார்ப்பன...அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.
பார்ப்பன MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரபிரதேசம்
லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%
ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%
பார்ப்பன கவர்னர்கள் := 50%
பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%
மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பன...54%
இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன....62%
பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன...70%
பல்கலைக்கழகங்களில் பார்ப்பன வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%
சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%
ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%
வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனர்தள் := 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பன...மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%
வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%
ஏர்லைன்ஷ் சில் பார்ப்பனர்கள் := 61%
IAS ல் பார்ப்பனர்கள் := 72%
IPS ல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%
CBI மற்றும் Custom சில் பார்ப்பனர்கள் := 72%
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்*
இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!

திங்கள், 29 ஜனவரி, 2018

வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர் வேதங்களை ஆதரித்தாரா?
அம்பேத்கரை திரிபுவாதம் செய்யும் பிஜேபி
வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்
இது உண்மையா?
வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறுவதைக் கேளுங்கள்
நியமம் அல்லது சடங்குகளின் கோர்வையாக ஆரியர்களின் மதம் இருந்தது. சிறந்த வாழ்ககை வாழ வேண்டும். ஒழுக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரிய மதம் ஆகிவிட்டது.
ரிக் வேதத்தில் இருக்கும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்
இந்தப் பாசுரங்கள் ஆரியர் தம் கடவுளைப் போற்றிப் பாடியவை.
எதைக் கேட்பதற்குப் பிரார்த்தனை செய்தனர்?
ஆசைகளிலிருந்து விடுவிக்கும்படி வேண்டினார்களா?
தீமைகளிலிருந்து நீக்கும்படி வேண்டினார்களா?
பாவமன்னிப்பு கேட்டார்களா?
இந்திரனைப் போற்றிப் புகழ்வதாக அமைந்தவை இந்தப் பாசுரங்கள்.
ஆரியர்களின் எதிரியை அழித்ததற்காக – கிருஷ்ணன் என்னும் அசுரனின் கர்ப்பிணி மனைவியை அவன் கொன்றதற்காக
அசுரர்களின் நூற்றுக்கணக்கான கிராமங்களை நாசப்படுத்தியதற்காக
பாராட்டு தெரிவிக்கின்றன.
இலட்சக் கணக்கான தஸ்யூக்களை அழித்ததற்காக இந்திரனை அவை போற்றுகின்றன.
அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும் அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும்
அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்ந்தார்கள்.
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரியமதம் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது
என்கிறார் அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 7 பக்கம் 40
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன
என்று மிகத் தெளிவாக அண்ணல் குறிப்பிட்டிருந்தும் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அண்ணல் அம்பேத்கர் வேதங்களைப் பாராட்டினார் என்று பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது புரிகிறதா? இல்லையா?

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கோவிந்தா, கோவிந்தா


முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடும் போதும், சாமியைக் கும்பிடும் போதும் அரோகரா, அரோகரா, என்று கூச்சலிடுவதைப் பார்க்கலாம். அதே போல, பெருமாள் கோவில்களில் சாமியை பாடையில் தூக்கி வரும் போதும், சாமியைக் கும்பிடும் போதும் கோவிந்தா, கோவிந்தா, என்று அலறுவதை பார்க்கலாம்... 
நீங்கள் புதிதாக ஒரு வீடோ, அல்லது ஒரு கடையோ புதிதாகத் திறக்கும் போது, உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்கள் மேல் பக்தி( மரியாதை) உள்ளவர்கள் யாரேனும் கோவிந்தா, கோகோவிந்தா. என்றோ அரோகரா..அர அர அரோகரா என்று கூடி வாழ்த்தினால், கோபப்படுவீர்களா, அல்லது மகிழ்ச்சி அடைவீர்களா? 
டேய் வாய மூடரா, நல்லவார்த்தையே வராதா என்று தானே சொல்லுவீர்கள்? கோவிலில் நல்ல வார்த்தை, வீட்டில் எப்படி கெட்ட வார்த்தையானது

வெள்ளி, 26 ஜனவரி, 2018

கலைஞர் பக்கம் நிற்பது கடமை


"தமிழை தாக்குபவன் முதலில் குறி வைப்பது கலைஞர் கருணாநிதியை தான்".. ஏன்??
ஏனென்றால், அவர்களால் "நீச பாஷை" என கேவலப்படுதபட்ட, இழிவுப்படுதபட்ட தமிழ் மொழியை, தான் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது,
ஆலய வழிப்பாட்டில் தமிழ் - சட்டத்தின் மூலம் செயல்படுத்தினார்...
தமிழ்த் தாய் வாழ்த்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார்...
இசை மேடைகளில் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு சார்பில் உதவிகள் பல செய்தார்..
தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் அமைத்தார்..
பல தமிழ் புலவர்கள், அறிஞர்களுக்கு நினைவு சின்னங்கள் அமைத்தார்...
பல தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்கி உதவினார்..
தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை துவக்கினார்...
தமிழ் இணைய பல்கலைகழகம் துவக்கினார்...
1970ஆம் ஆண்டிலேயே தமிழ் நாடு பாடநூல் கழகம் மூலம் கம்ப்யூட்டர் & எலக்ட்ரானிக்ஸ் குறித்த விஞ்ஞான நூல்களை தமிழில் அறிமுகப்படுத்தினார்..
"தமிழ் யூனிகோட்" எழுத்துருவை, கம்ப்யூடருக்கு பொதுவான எழுத்துருவாக அதிகாரப்பூர்வ அறிவித்தார், இதினால்தான் இணையத்தில் தமிழின் பயன்பாடு சுலபமாகியது.. பரவலாகியது..
கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைவரும் கற்க, தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களை அறிமுகம் செய்தார்..
தமிழ் வழி படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு அளித்தார்..
தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்றினார்...
வணிகநிறுவனகளின் பெயர்பலகையில் தமிழ் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றினார்...
தமிழ் மொழிக்காய் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தார்...
மொழிப்போர் தியாகிகளுக்கு அரசு வேலை, பென்ஷன் போன்றவற்றை அளித்தார்..
நீதிமன்றங்களில் தமிழையும் ஒரு வழக்காட்டு மொழிக்க வழிவகுத்தார்..
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தார்....
திருக்குறள் வளர்சிக்கு பல உதவிகள் செய்தார், திருவள்ளுவர் புகழ் பாடும், வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை போன்றவற்றை அமைத்தார்...
திருவள்ளுவர் தினத்தை அறிவித்தார்..
உலக தமிழாராய்ச்சி நூல்நிலையம் அமைத்தார்..
தமிழிசை பண்ணாராய்ச்சி மையம் அமைத்தார்..
தமிழ்வளர்ச்சித்துறை என்று தனி அமைச்சகம் கண்டார்...
இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்...எந்த ஒரு முதல்வரையும் விட, தமிழுக்கு, அதின் வளர்ச்சிக்கு அதிகம் பாடுபட்டவர் கலைஞரே....
எனவே, தமிழ், தமிழர் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும், சோ.சாமி, சு.சாமி, குருமூர்த்திகள், எச்.ராஜாக்கள், தினமலர் கும்பல், குமுதம் வரதராஜன், தினமணி வைத்தியநாதன், பாண்டேக்கள் போன்ற ஆரிய பார்ப்பனீய சக்திகளால் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படும், "புகையையும் பகையையும் மிச்சம் வைக்ககூடாது, அழித்துவிடவேண்டும்" என்ற தீரா வன்மத்துடன் அவர்களால் எதிர்க்கப்படும், ஒரே அரசியல் தலைவர், கலைஞர் மட்டுமே...எதிர்க்கப்படும் ஒரே அரசியல் இயக்கம், திமுக மட்டுமே.....
ஆகையால், உண்மையான தமிழர்கள், திராவிடர்கள் அனைவரும் திமுக & கலைஞர் பக்கம் நிற்பது கடமையல்லவா...

புதன், 24 ஜனவரி, 2018

சங்கர மடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்!

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க கி. வீரமணி வலியுறுத்தல்

 தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் அவமதித்த விஜயேந்திரர்..கொந்தளித்த தமிழ் ஆர்வலர்கள் சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கி. வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர் ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல் இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார். ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்துஇ புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால் வெளியில் நடமாடும் இவர் அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில்இ தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூடஇ எழுந்து நிற்க மறுத்து
 அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது? இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?

தமிழ் நீஷ பாஷை - சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் - கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்? தள்ளாத வயதில்கூட கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில்இ கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும் நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை பேதத்தன்மை இவர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்! தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை - தமிழர்கள் புரிந்துகொள்வார்களா - அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட? தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்! இவ்வாறு வீரமணி வலியுறுத்தியுள்ளார்.


விஜயேந்திரனின் கொழுப்பு



தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனர்கள் தமிழில் பேசினாலும் தமிழையே வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் தமிழைத் தமது தாய்மொழியாகக் கருதுவதில்லை. செத்துப்போன சமஸ்கிருதத்திற்குக் கொடுக்கும் மரியாதையை சீரிளமைத் திறத்தோடு விளங்கும் தமிழுக்குத் தருவதில்லை.

காஞ்சி சங்கராச்சாரி தமிழில் பேசினால் தீட்டு என்று கருதுபவர். தப்பித் தவறித் தமிழில் பேசிவிட்டால் தீட்டாகிவிட்டது என்று கூறி உடனே குளிக்கக் கூடியவர். தமிழில் பத்திரிகை நடத்தி தமிழால் பிழைப்பு நடத்தும் தினமலர்ப் பார்ப்பான் சமஸ்கிருதம் செம்மொழி ஆக அறிவிக்கப்பட்டதை வரவேற்றான். ஆனால் தமிழ் செம்மொழி ஆனால் வீட்டு;க்கு வீடு பிரியாணி வருமா என்று கேட்டான்.

தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திய துக்ளக் பார்ப்பான் தமிழ் படித்தால் சட்டி சுரண்டும் வேலைக்குக்கூடப் பயன்படாது என்று சொன்னான்.

 படிப்பறிவில்லாத பார்ப்பான் கூட தமிழில் கோயில்களில் அர்ச்சனை செய்ய வேண்டுமென்றால் கூடவே கூடாது என்பான். சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமி என்ற முதியவரை அங்குள்ள தீட்சதப் பார்ப்பான்கள் அடித்து கையை முறித்துப் போட்டார்கள்.

அப்படிப்பட்ட பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு எச்.ராஜா என்ற எச்சக்கலைப் பார்ப்பான் இன்று தமிழ்நாட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறான். அவன் தமிழில் பேசினாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் தமிழுக்காக என்றும் குரல் கொடுக்க மாட்டான். ஏனெனில் அவனது பூர்வோத்திரம் பீஹார் ஆகும். அவனது தந்தை ஹரிஹர சர்மா என்பவர் தமிழ் - சமஸ்கிருத அகராதியை எழுதி இருக்கிறார். அந்த நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து நடந்திருக்கிறது. அப்போது அனைவரும் எழுந்து நிற்க அதில் கலந்துகொண்ட இளைய சங்கராச்சாரி விஜயேந்திரன் மட்டும் எழுந்திருக்காமல் அப்படியே இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் விழா முடிந்து தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நின்றிருக்கிறார். இது எவ்வளவு பெரிய கொழுப்பு? தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நின்ற நபரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்க முடியாதா?
காரணம் என்ன? தமிழுக்கு நாம் ஏன் மரியாதை அளிக்க வேண்டும் என்ற திமிர்தானே இதற்குக் காரணம்? திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் தேசிய அவமதிப்பு என்று நீதிமன்றமே கூறும்போது அதே சட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காவிட்டால் குற்றம் என்று சொல்லாதா? அப்படி எழுந்து நிற்காத, சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கிய சொர்ணமால்யா புகழ் விஜயேந்திரனுக்கு அது பொருந்தாதா?

வைரமுத்து ஏதோ ஆண்டாளைப் பற்றிச் சொல்லி விட்டார் என்பதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று துள்ளிக் குதிக்கும் பார்ப்பனர்கள் இந்த சங்கராச்சாரியை மன்னிப்புக் கேட்கச் சொல்வார்களா?

வைரமுத்து தலை இந்நேரம் உருண்டிருக்க வேண்டாமா? என்று காட்டுக்கத்தல் கத்திய எச்சராசாவிடம் இது பற்றிக் கேட்டதற்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்று அலட்சியமாகச் சென்றிருக்கிறார்.

எனவே, தமிழர்களே! பார்ப்பான் என்றைக்கும் தமிழுக்கோ தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்கோ எதிரிகள்தான். அவர்களது வலையில் சிக்கி சீரழியாதீர்!

வைரமுத்து அவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லும் பார்ப்பனர்களே! தமிழையும் தமிழ் இனத்தையும் இழிவுபடுத்தும் சங்கராச்சாரியும் பார்ப்பனர்களும் மன்னிப்புக் கேட்பது எப்போது?

சமாளிக்கவே தியானம்

எப்பொழுதும் காவிச்சிந்தனை



பெல் நிர்வாகம் எப்பொழுதுமே ஏதோ ஒரு காவிச்சிந்தனையிலேயே இருந்து கொண்டிருப்பது தொடர்கதையாகி வருகிறது. கைலாசபுரம் என்று ஊரகத்திற்குப் பெயர் வைத்ததிலிருந்தே அது ஆரம்பமாகி விட்டது.
ஊரகத்திற்குள் எந்த இறைச்சிக் கடையும் இருக்கக் கூடாது. அசைவ உணவகம் இருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டுத்திட்டத்தை உருவாக்கி உணவகங்களைப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து மாமி ஓட்டல் என்று பெயர் வைக்க அனுமதிப்பது மத ஊர்வலங்களை அனுமதித்து ஊரகத்திற்குள் வாணவேடிக்கைகள் பட்டாசுகளோடு யானை ஊர்வலத்தை நடத்துவது உள்ளிட்ட மதவாத சிந்தனையோடு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது கண்கூடு.
1996ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அது கூடுதலானது. ரொம்ப நல்ல மனிதர் என்று புகழப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர் கம்பருக்கு நிர்வாகச் செலவிலேயே விழா எடுத்தார். எவ்வளவு நல்லவர்களாகக் காட்டிக் கொண்டாலும் தங்கள் ஜாதிதான் எல்லவாற்றிலும் உயர்வானது என்பதை உயர்த்திப்பிடிப்பதில் என்றும் அவர்கள் சளைக்காதவர்கள்.
2002ல் நிர்வாகம் வழங்கிய காலண்டர் முழுவதும் பனிரெண்டு மாதத்திற்கும் பனிரெண்டு மதப்படங்கள். அதில் பத்து இந்துமதக்கடவுளர் கடவுளச்சிகள். நமது கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது தொடர்ந்து வருவது தடைப்பட்டது.  விவேகானந்தர் 150 வது ஆண்டுவிழா என்ற பெயரில் வழங்கப்பட்ட நூல் ஜாதியை ஒழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்றது. எல்லாம் பிராமணத்துவம் என்ற தத்துவத்தை அது போதித்தது. இந்தியாவையே தாங்கி நிற்பது தாமரைதான் என்ற தோற்றத்தை அது உருவாக்கியது. அதுவும் நமது முயற்சியால் தடைப்பட்டது.
எப்பொழுதும் காவிச்சிந்தனையிலேயே இருக்கும் பெல் நிர்வாகம் தற்பொழுது நுழைவாயில்களில் காவி வண்ணத்தை அடித்துக் கொண்டுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் சின்னமாக விளங்கும் காவி வண்ணம் இங்கிருப்பவர்களின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் இந்த நாடு மதச்சார்பற்ற நாடு. இன்னும் இந்த நாடு இந்துராஜ்யமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாகவே முந்திக்கொண்டு ஆட்சியாளர்களின் தயவைப் பெறுவதற்காக இந்தக் காவி வண்ணம் பூசப்படுகிறதோ என்ற அய்யம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்தியாநாத் அரசாங்கம் தனது அலுவலகம்  முழுக்க காவி வண்ணத்தைப் பூசி நடப்பது காவிகள் ஆட்சி என்று பறைசாற்றி வருகிறது. அங்கும் கூட ஹஜ் அலுவலகத்திற்கு காவி வண்ணம் அடிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பால் அந்தக் காவி வண்ணம் தற்பொழுது மாற்றப்பட்டு விட்டது.
அங்கேயே அப்படி என்கிறபோது இ;ங்கே காவி இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது பெரியார் பிறந்த பூமி. இங்கு காவிகளுக்கு ஒருபோதும் இடமில்லை.  அதிகாரிகள் தங்களது காவிச்சிந்தனையைக் காட்டுவதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன. ஆனால் திருச்சியிலே அந்த எண்ணம் தொடரக் கூடாது.
எனவேää உடனடியாக பெல் நிறுவன  நுழைவாயிலில் பூசப்பட்டு வரும் காவி வண்ணம் மாற்றப்பட வேண்டும். வேறு எங்காவது அந்த வண்ணத்தைப் பூசலாம் என்ற எண்ணமும் மாற்றப்பட வேண்டும். இல்லையேல் கடுமையான போராட்டத்தை பெல் நிர்வாகம் சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்க்pறோம்.

வியாழன், 18 ஜனவரி, 2018

யார்? யார்? யார்?

தொடர்ந்து இந்துமத்தை மட்டுமே விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது

காவிகள்

1) இந்து மதத்தில் உள்ளவனை சூத்திரன் என்று இழிவுபடுத்தியது யார்?
2) இந்து மதத்தில் உள்ளவனை தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கி வைத்தது யார்?
3) இந்து மதத்தில் உள்ளவனை தொட்டால் தீட்டு என்று சொன்னது யார்?
4) இந்து மதத்தில் உள்ளவனை பார்த்தால் பாவம் என்று சொன்னது யார்?
5) இந்து மதத்தில் உள்ளவனை இந்துக் கடவுளை வணங்க அனுமதி மறுத்தது யார்?
6) இந்து மதத்தில் உள்ளவனை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது யார்?
7) இந்து  மதத்தில் உள்ளவன் கோயிலுக்குள் நுழைந்தால் கோயில் தீட்டாகிவிடும் என்று சொன்னது யார்?
8)   இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகன் ஆகக்கூடாது என்று சொல்பவர் யார்?
9) இந்து மதத்தில் உள்ளவனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னது யார்?
10) இந்து மதத்தில் உள்ளவன் கற்றால் நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னது யார்?
11)   இந்து மதத்தில் உள்ளவனை கற்பதைக் காதில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னவர் யார்?
12)   இந்து மதத்தில் உள்ளவன் படித்ததை நெஞ்சில் நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப்பிள என்று சொன்னது யார்?
13) இந்து மதத்திள் உள்ளவனுக்கு கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொன்னது யார்?
14) இந்து மதத்தில் உள்ளவன் சொத்து சேர்த்தால் அந்த சொத்தை பிடுங்கிக் கொள்ளலாம் என்று சொன்னது யார்?
15) இந்து மதத்தில் உள்ள பெண்களைப் பொட்டுக்கட்டி தேவதாசியாக்கியது யார்? 
16) இந்து மதத்தில் உள்ள பெண்களை குழந்தைத் திருமணம் செய்து கொடுத்தது யார்?
17) இந்து மதத்தில் உள்ள பெண்களை கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற்றியது யார்?
18) இந்து மதத்தில் உள்ள பெண்களை விதவையாக்கி வீட்டுக்குள் முக்காடு போட்டு முடக்கியது 
யார்?
19) இந்து மதத்தில் உள்ள பெண்களுக்கு அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று முடக்கியது யார்?
20) இந்து மதத்தில் உள்ள பெண் இந்து மதக்கடவுளை வணங்க அனுமதி மறுத்தது யார்?
இன்னும் பல கேள்விகள் இருக்கி இந்து மதத்தை அவமதிப்பதாக மற்றவர்களைச் சொல்வது யார்? யார்? யார்?

புதன், 17 ஜனவரி, 2018

MGR

எங்கள் ஊரில் ஒரு அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.
எங்கள் ஊரில் உயர்நிலைப்பள்ளி கிடையாது. தொடக்கப்பள்ளிதான். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தள்ளி உள்ள ஒரு சிறுகிராமத்தில் காமராசரால் கொண்டுவரப்பட்ட உயர்நிலைப்பள்ளி இருந்தது. அப்பள்ளியில் ஒரு ஆசிரியர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் பணியில் சேர்ந்தார். அவர் MSc BEd., பட்டதாரி.
அந்த ஊரில் அவர் பிற்ந்த ஜாதியைக்கேட்ட மக்கள் அவருக்கு குடியிருக்க வீடு தர மறுத்து விட்டார்கள். அதனால் எங்கள் ஊரில் வந்து ஜாதியை மாற்றிச் சொல்லி வீடு கேட்டார். உடனே கொடுத்து விட்டார்கள். ஒரு ஆண்டு குடியிருந்தார். ஆசிரியரின் மனைவியும் அந்த ஊர் மக்களோடு மிகவும் அன்பாக நெருக்கமாகப் பழகினார். அவர் வீட்டில் வந்து பலரும் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள்.
ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த ஆசிரியரின் ஊருக்குப் போனார். அந்த ஆசிரியர் சொன்ன ஜாதித் தெருவில் சென்று அந்த ஆசிரியரின் விடு எங்கே என்று கேட்கிறார். அந்த ஊர் மக்கள் எங்கள் ஜாதியில் அந்தப் பெயரில் எந்த ஆசிரியரும் இல்லை. பள்ளத் தெருவில்தான் அந்தப் பெயரில் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
உடனே ஏதோ குடியே முழுகிப் போய் விட்டதுபோல் உணர்ந்த அந்த நபர் தான் சென்ற காரியத்தையும் மறந்து உடனடியாக தனது ஊருக்கு வந்து அந்த ஆசிரியர் இல்லாத நேரத்தில் அவரது மனைவியை கடுமையாகப் பேசி என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறி வீட்டில் இருந்த தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்து வெளியில் வீசி அவர்களை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழி காற்றில் பறந்தது. பட்டதாரியானாலும் பண்டிதரானாலும் கீழ்ஜாதிக்காரன் கீழ்ஜாதிக்காரன்தான் என்று நிரூபணமானது.
அதே ஊரில் ஒரு பதினைந்து ஆண்டு கழித்து ஒரு கிராம நிர்வாக அலுவலர் வருகிறார். அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அந்த ஊரில் வந்து பணியில் சேர்ந்து தனக்கு ஒரு வீடு வேண்டும் என்று தேடுகிறார். எந்த ஜாதி ஆதிக்கவாதிகள் பட்டதாரி ஆசிரியருக்கு விடு தர மறுத்தார்களோ அவர்கள் இந்த கிராம நிர்வாக அலுவலருக்கு வீடு தர போட்டி போட்டார்கள். ஒவ்வொருவரும் எங்கள் வீட்டில் தங்குங்கள் சார். வாடகைகூடத் தர வேண்டாம் என்றார்கள். இவர் அய்யா நான் ஜாதியால் தாழ்த்தப்பட்டவன் என்று சொன்னார்.
சார் நாங்கள் லாம் ஜாதி பாக்கிறதில்ல சார். எங்க வீட்டில் தங்குங்க சார் என்றார்கள் என்று கூறி வீடு கொடுத்தார்கள்.
என்ன காரணம்?
இவர் சற்று அதிகாரமுள்ள கிராம நிர்வாக அலுவலர் பதவியில் உள்ளார்.
அப்பொழுதெல்லாம் தாழ்த்தப்பட்டவன் கிராம முன்சீப்பாகவோ கர்ணமாகவோ வர முடியாது. பரம்பரை பரம்பரையாக ஆதிக்க ஜாதியினர்தான் கிராம முன்சீப்பாகவோ கர்ணமாகவோ இருப்பார்கள். அவர்களுக்கு முன்னே தாழ்த்தப்பட்டவர்கள் கைகட்டி வாய்பொத்தித்தான் ஒரு ஜாதி சான்றிதழோ வருமான சான்றிதழோ பெற முடியும்.
அப்படிப்பட்ட ஜாதியில் வந்த ஒருவருக்கு போட்டிபோட்டு வீடு கொடுத்தார் என்றால் அதற்குக் காரணம் அவரது பதவிதான்.
இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?
எல்லாம் இட ஒதுக்கீடுதான். தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இங்கே வெற்றி பெற்றார்கள். அத்துடன் இந்த மாற்றத்தை ஒரே இரவில் ஒரு துளி மையில் ஒரே கையெழுத்தில் மாற்றி இனி பரம்பரை கிராம முன்சீப் கர்ணம் யாரும் கிடையாது. படித்தவர்கள் அனைத்து ஜாதியிலுமிருந்து 68 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியவர் புரட்சித்தலைவர் MGR ஆவார்.
அவர் போட்ட உத்தரவால்தான் ஜாதி வெறி பிடித்த ஆதிக்க சாதிக்காரர்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
அந்த மாற்றம் உருவாகக் காரணமான உத்தரவு போட்ட எம்ஜியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

திங்கள், 15 ஜனவரி, 2018

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..????


800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!!
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..????
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய 
இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால்,
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள்
இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்....???
அவை நாம் என்னவென்று பார்ப்போம்...
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த
இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை
எழுத தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம்.
ஆனால்
அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!!
சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே,
பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும்.
அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்
1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பார்ப்பான் மட்டுமே
கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும்
கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு
கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை
1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம்
இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால்,
சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,
சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் மகாத்மா
ஜோதிராவ் புலே அவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது, இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது,
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால்
அம்பேத்கர் இல்லை, அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.
சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்
வாசித்ததில்நேசித்தது

சனி, 13 ஜனவரி, 2018

இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?

இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?
விவேகானந்தர் இந்தமதத்தின் பெருமைகளை அமெரிக்காவரை சென்று பரப்பி வந்தவர் என்று எல்லோரும் பெருமைபொங்கச் சொல்லுவர். அவருக்கு அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? அமெரிக்கா உருவாகி 400வது ஆண்டுவிழா 1883ல் சிகாகோவில் நடத்தப்பட்டது. உலக மதங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது. இந்து மதத்தில் பார்ப்பனர் ஒருவருக்குத்தான் அந்த அழைப்பு வந்தது. பார்ப்பனர் கடல் தாண்டிச் செல்வது ~தோஷம்| என்பதால் அவர் செல்ல மறுத்ததனால் பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
அங்கு பேசிய அனைவரும் ~லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்| என்று பேசினார்களாம். விவேகானந்தர் ~பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்| என்று பேசினாராம். உடனே அவருக்குக் கூடுதல் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள் என்று வானத்தைக் கிழித்து எழுதி வருகிறார்கள்.
உண்மையில் இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா? கூட்டம் முடிந்தவுடன் பலர் அவரிடம் கேள்வி கேட்டார்கள். உங்கள் நாட்டில் மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை இருக்கிறதே! அப்படியிருக்க, சகோதரத்துவம் நிலவுவதாகச் சொல்வது சரிதானா? என்ற கேள்விக்கு விவேகானந்தரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.
பிறப்பதற்கு முன்பே ஒரு குழந்தையின்மீது திணிக்கப்பட்ட ஜாதி அந்தக் குழந்தை பெரியவனாகி இறந்த பிறகு சுடுகாட்டில்கூடத் தொடர்கிறதே! மனிதன் சாகிறான்
ஆனால் அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மதத்தில் சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால் அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துச் சொல்லப்பட்ட பொய்யுரை அல்லவா?
அமெரிக்கா வரை சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

புதன், 10 ஜனவரி, 2018

தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என கலைஞர் தை தைமுதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என கலைஞர் அவர்கள் ஆணையிட்டார். அது தவறு சித்திரை ஒன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அம்மையார் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனை வெறும் அரசியலாகப் பார்க்கக் கூடாது. கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்குமான சண்டையோ போட்டியோ கிடையாது. காலங் காலமாய் உழைக்கும் மக்களுக்கும் அவர்களை உறிஞ்சிப் பிழைப்போருக்குமான சண்டையாகத்தான் பார்க்க வேண்டும்.
தமிழன் இதுவரை புத்தாண்டாய்க் கொண்டாடியது எதனை? பிரபவää விபவää சுக்கில என்று சொல்லக் கூடிய அறுபது ஆண்டுகளைத்தான். அந்த அறுபது ஆண்டுகளையும் ஞாயிறு திங்கள்ää செவ்வாய் என்பதுபோல வரிசையாகச் சொல்லக்கூடியவன் யாரும் இல்லை. காரணம் என்ன? அது தமிழனுடையது அல்ல என்பதனால்தான். இந்த அறுபது பெயர்களும் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. இந்த அறுபது ஆண்டுக்குச் சொல்லப்படும் கதையும் மிகவும் அருவருப்பானது. ஆபாசமானது.
தமிழனின் ஆண்டின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கலாமா? என்பதனை 1921லேயே தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே ஒன்று கூடி ஆய்வு செய்தனர். தமிழனுக்கென்று ஒரு ஆண்டை உருவாக்க வேண்டும். அது தமிழனின் பெருமையையும் கலாச்சாரத்தையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்தனர். பொதுக்கணக்கு ஆண்டிற்கு எப்படி ஏசுநாதர் பிறப்பை அடிப்படையாகக்கொண்டு ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதேபோல் தமிழனின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிய திருவள்ளுவர் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழனுக்கு ஆண்டினை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து திருவள்ளுவர் பிறந்தநாளான தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு என்று முடிவு செய்தனர். அதுதான் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உகந்தது. பயன்பாட்டுக்கும் மிக எளிதானது என்பதனால் தமிழர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோர் அனைவரும் குரல் கொடுத்து வந்தனர். அதனையே கலைஞர் அமுல் படுத்தினார்.
மனுதர்மத்தை ஏற்றுக்கொண்டிருக்கிற கூட்டம்தான் அதனை எதிர்த்தது. திருக்குறள் என்ன சொல்கிறது? சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற குறளில் உழவுத் தொழில்தான் மிகச் சிறந்தது. என்றும் உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்ற குறளில் உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர்கள் என்றும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற குறளில் உழவுத்தொழில் செய்பவர்கள் பின்னால்தான் மற்றவர்கள் செல்ல வேண்டும் என்றும் திருவள்ளுவப் பெருந்தகை அறுதியிட்டுச் சொல்கிறார்.
ஆனால் மனுதர்மம் என்ன சொல்கிறது?
உழவுத்தொழில் மிகவும் பாவமானது என்றும் உழவு செய்பவர்கள் பாவிகள் என்றும் அதனால் அவர்கள் சூத்திரர்கள் என்றும் இழிவுபடுத்துகிறது. பார்ப்பனர்கள் உழவுத்தொழில் செய்யக் கூடாது. அப்படிப் பார்ப்பனர்கள் ஏர்பிடித்தால் அது பாவம் என்று சொல்லும் மனுதர்மம் அந்த ஏர்பிடிக்காத பார்ப்பனர்கள்தான் உலகத்தில் முதன்மையானவர்கள். அவர்களை மன்னன் உட்பட அனைவரும் வணங்க வேண்டும் என்கிறது.
இந்தப் போராட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதனுடைய தொடர்ச்சிதான் இந்தத் தமிழ்ப்புத்தாண்டு என்பதிலும் தொடர்கிறது. உழவுத்தொழிலை மிகவும் இழிவாகக் கருதுகின்றவர்களுக்கும் அதனை உயர்வாகப் போற்றுகின்றவர்களுக்குமான போராட்டம்தான் இதில் ஒளிந்திருக்கிறது.
தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதனை எதிர்க்கிறவர்கள் அனைவருமே திருவள்ளுவருக்கு கர்நாடகாவில் சிலை வைப்பதை எதிர்ப்பவர்கள். காவிரியில் தண்ணீர் கேட்க தமிழனுக்கு உரிமையில்லை என்பவர்கள். தமிழ் செம்மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? என்று கேட்பவர்கள். தமிழ் மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குகின்றபோது தமிழன் ஏன் எல்லைதாண்டிச் செல்லுகின்றான்? அதனால் அவனை இலங்கை தாக்குவதில் தவறில்லை என்பவர்கள். தமிழில் அர்ச்சனை கூடாது என்பவர்கள். தமிழன் கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்பவர்கள்.
தன்மானமுள்ள தமிழர்களே! இதில் நீங்கள் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி. உழைப்பவரான தமிழர்களை உயர்த்தும் தை முதல்நாளைப் புத்தாண்டாய் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? உழைப்பவன் இழிஜாதி என்ற தத்துவத்தை நிலைநிறுத்தும் மனுதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் கூட்டம் ஏற்றிப் போற்றும் சித்திரையை ஏற்று இழிவைச் சுமக்கப் போகிறீர்களா?

திங்கள், 8 ஜனவரி, 2018

மராட்டியர்களை மஹர்கள் தோற்கடித்தது எப்படி?

28 ஆயிரம் மராட்டியர்களை 800 மஹர்கள் தோற்கடித்தது எப்படி?

மகாராஷ்டிராவின் பல இடங்களில் தலித்துகளுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்ற வன்முறை மோதல்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். கோரேகாவ் பீமா பாபல் ஷிகர்பூர் ஆகிய இடங்களில் தொடங்கிய மோதல்கள் வன்முறையாக உருமாறின. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்இ கோரேகாவ் பீமா என்ற இடத்தில் 1818 ஜனவரி முதல் நாளன்று மராட்டிய அரசர் பேஷ்வாவுக்கு எதிராக நடைபெற்ற போரில் பேஷ்வா தரப்பு தோல்வியைத் தழுவியது. ஆங்கிலேயப் படையில் மஹர் தலித் மக்கள் இடம் பெற்றிருந்தனர். அப்போது நடைபெற்ற போரில் உயிரிழந்த மஹர்களின் நினைவாக கோரேகாவ் பீமாவில் நிறுவப்பட்டுள்ள வெற்றித் தூணுக்கு தலித் மக்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்தப்படுவதாக கூறி மராட்டிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 200வது ஆண்டான இந்த ஆண்டு நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வன்முறை வெடித்ததுஇ ஒருவர் கொல்லப்பட்டார்இ பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மஹாராஷ்டிரா: தலித்- மராத்தா மோதலின் பின்னணி என்ன? தலித்துகளின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்த வெற்றியை மிகவும் உற்சாகமாக தலித் தலைவர்கள் கொண்டாடுவதற்கு காரணம்இ இந்த போரில் பங்கேற்ற கிழக்கிந்திய கம்பெனியின் படையில் தீண்டதகாதவர்கள் என்று கருதப்பட்ட மஹர் சமுதாயத்தினர் அதிக அளவில் ஈடுபட்டிருந்தனர் என்பதே. இந்தப் போர் கோரேகாவ் போர் என்றும் அறியப்படுகிறது. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தலைமையில் 28 ஆயிரம் மராட்டியர்கள் புனேயை தாக்க முற்பட்டார்கள் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தாக்க செல்லும் வழியில் 800 படை வீரர்களைக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் படைப்பிரிவு ஒன்றை அவர்கள் எதிர்கொண்டனர். அது புனேயில் பிரிட்டிஷ் துருப்புக்களின் வலிமையை அதிகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தது. கோரேகாவில் இருந்த கிழக்கிந்திய படையுடன் சண்டையிடுவதற்காக பேஷ்வா தன்னுடைய இரண்டு ஆயிரம் படைவீரர்கள் கொண்ட பிரிவையும் அனுப்பினார். கேப்டன் பிரான்சிஸ் ஸ்டாண்டனின் தலைமையின் கீழ்இ கிழக்கு இந்திய கம்பனியின் இந்த குழு கிட்டத்தட்ட 12 மணி நேரம் மராட்டியர்களை எதிர்கொண்டது. மராட்டியர்களால் சுலபமாக வெல்ல முடியவில்லை. பின்னர் தாக்குதல் நடத்தும் முடிவை மாற்றிக்கொண்ட மராட்டிய படை பின்வாங்கியது. கிம்மின் பொத்தானைவிட பெரியது' என் அணு ஆயுத பொத்தான்: டிரம்ப் 'வடகொரிய சிறையில் சடலங்களை புதைத்தேன்' ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஒரு பெரிய பிரிட்டிஷ் படை உதவிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் வெற்றி எளிதாக இருக்காது என்று மராட்டிய படை அச்சம் கொண்டதுதான் இந்த பின்வாங்கலுக்கு காரணம். இந்தத் துருப்புகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களில் பெரும்பாலானோர் பாம்பே காலாட்படையை சேர்ந்த மஹர் தலித்துகள். இந்த போரை தலித் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக தலித் ஆர்வலர்கள் கருதுவதற்கான காரணம் இதுவே. 'யு ர்ளைவழசல ழக வாந ஆயாசயவவயள' என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் கிராண்ட் டஃப் இந்தப் போரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இரவு முழுவதும் சண்டையிட்டு புத்தாண்டு காலை சுமார் பத்து மணிக்குஇ பீமாவின் கரையில் அவர்கள் 28 ஆயிரம் மராட்டியர்களை தடுத்து நிறுத்தியிருந்தார்கள். அவர்கள் நதியை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது அவர்கள் நதியை கடக்க விரும்புவதாக பேஷ்வாவின் படையினர் நினைத்தார்கள்இ ஆனால் கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதியை கைப்பற்றிய அவர்கள்இ அதை தங்கள் நிலையாக மாற்றினார்கள். இந்தப் போரில் மஹர் தலித்துகளின் தைரியத்தைப் பற்றி 'இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு' (ர்ளைவழசல ழக வாந Pழடவைiஉயட யனெ ஆடைவையசல வுசயளெயஉவழைளெ ழக ஐனெயை) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹென்றி டி. பிரின்சேப் ருசியான ஜப்பானிய அரிசி கேக் 'மோச்சி' உயிரை பறித்தது எப்படி? இந்து தேசியவாதிகளை குறிவைத்து காணொளி வெளியிட்ட அல்-கய்தா கேப்டன் ஸ்டோன்டன் தலைமையில் இந்த படைப்பிரிவு புனே சென்றுக்கொண்டிருந்தபோதுஇ அதை தாக்கும் வாய்ப்புகள் இருந்ததாக அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வெட்டவெளியில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் பொருட்டுஇ கோரேகாவில் தனது நிலையை உருவாக்க முடிவு செய்தது இந்த துருப்பு. இந்த துருப்புக்கள் வெட்டவெளியில் சிக்கியிருந்தால்இ மோசமான சூழ்நிலையில் மராட்டியர்களின் கைகளில் சிக்கியிருக்கலாம். எண்ணிக்கைப் பற்றிய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. கம்பெனியில் படையில் இருந்த 834 வீரர்களில் 275 பேர் கொல்லப்பட்டனர்இ காயமடைந்தனர் அல்லது காணாமல் போய்விட்டார்கள். இதில் இரண்டு அதிகாரிகளும் அடங்குவார்கள். காலாட்படையில் 50 பேர் கொல்லப்பட்டனர் 105 பேர் காயமடைந்தனர். பிரிட்டன் அதிகாரிகளின் மதிப்பீடுகளின்படிஇ 500-600 பேஷ்வா படையினர் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அடையாளத்திற்கான போர் மஹர் மற்றும் பேஷ்வாக்கள் இடையே நடைபெற்ற போரை வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரான இந்திய ஆட்சியாளர்களின் போராகவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். உண்மையில் அதில் தவறும் இல்லை. ஆனால் மஹர்களை பொறுத்தவரையில் அவர்கள் ஆங்கிலேயர்களுக்காக இந்தப் போரை நடத்தினார்கள் என்பதைவிட தங்களின் அடையாளத்திற்கான போராட்டமாகவே இதை கருதினார்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய இந்தியாவில் வருணாசிரம முறையில் 'தீண்டப்படாமைக்கு' ஆளான மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோஇ அதேபோல பேஷ்வா ஆட்சியாளர்கள் மஹர்களை நடத்தினார்கள். இதற்கான பல தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் பல இடங்களில் வழங்கியுள்ளனர். நகரத்திற்குள் நுழையும் மஹர்கள் தங்கள் இடுப்பில் ஒரு விளக்குமாற்றை கட்டிக்கொள்ளவேண்டும். ஏன் தெரியுமா? 'மாசடைந்த மற்றும் தூய்மையற்ற'வர்களாக நடத்தப்பட்ட அவர்கள் நடந்து செல்லும்போது வீதிகளில் படியும் அவர்களின் அடிச்சுவடுகளை அந்த துடைப்பம் நீக்கிக்கொண்டே செல்லவேண்டும் என்பதற்காக. அவர்கள் தங்கள் கழுத்தில் ஒரு பாத்திரத்தையும் தொங்கவிட வேண்டும். அது எதற்கு? அவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வந்தால்இ வீதிகளில் துப்பினால் மாசுபடும் என்று கூறி கழுத்தில் கட்டியுள்ள பாத்திரத்தில் எச்சிலை துப்பிக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக. கிராமத்தில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து தாகத்திற்கு தண்ணீரை எடுப்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. வரலாற்று ஆசிரியரும் விமர்சகருமான பேராசிரியர் ரிஷிகேஷ் காம்ப்ளே கொரெகாவ் பீமாவின் மற்றொரு பக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மஹர்கள் மராத்தியர்களை தோற்கடிக்கவில்லை அவர்கள் வெற்றிகொண்டது பிராமணர்களையே. தலித்துகள் மீது தீண்டாதவர்கள் என்ற முத்திரையை குத்திஇ அவர்களை அடக்கி ஆண்டவர்கள் பிராமணர்கள் தான். தங்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைதான் மஹர்களை கோபப்படுத்தியது. அந்த வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளாததால்தான் அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைந்தார்கள். பிரிட்டிஷ் துருப்புக்கள் மஹர்களுக்கு பயிற்சி அளித்துஇ பேஷ்வாக்களுக்கு எதிராக போராட உத்வேகம் அளித்தன. மராட்டிய சக்தியின் பெயரில் உயர் மதிப்பு கொண்டிருந்த பிராமணர்களுக்கு எதிரான போராட்டம் அது. அவர்களையே மஹர்கள் தோற்கடித்தார்கள் உண்மையில் இது மராத்தாவுக்கு எதிரான போர் அல்ல. மஹர் மற்றும் மராட்டியர்களுக்கு எதிரான கருத்து வேறுபாடோமோதலோ இதன் பின்னணி என்று வரலாற்றில் எங்கும் கூறப்படவில்லை என்று கூறும் காம்ப்ளே தீண்டாமை என்ற கொடுமையை பிராமணர்கள் முடித்துவிட்டிருந்தால் இந்த போரே நடைபெற்றிருக்காது என்று சொல்கிறார். பிராமணர்கள் மாராட்டியர்களிடம் இருந்து அவர்களின் மதிப்பை பறித்ததால்தான் மராட்டியர்களின் பெயர் இந்த போரில் இடம் பெறுகிறது என்கிறார் காம்ப்ளே. இறுதியாக எஞ்சியிருந்த பேஷ்வாவின் பலத்தை அடக்க நினைத்த பிரிட்டிஷ் ராணுவம் மஹர்கள் கொண்ட படையை கட்டமைத்து பேஷ்வாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.