செவ்வாய், 27 மார்ச், 2018

நீங்கள் யாருக்கெல்லாம் படியளந்தீர்கள்?


படியளந்த சாதிகளுக்கு சில கேள்விகள்
நீங்கள் யாருக்கெல்லாம் படியளந்தீர்கள்?
உங்கள் முகத்திலுள்ள தேவையற்ற மயிர்களை அகற்றி அசிங்கமான உங்களை அழகாக மாற்றிய முடி திருத்துபவர்களுக்கு
ரெண்டுநாள் போட்டிருந்தா நாற்றமெடுக்கும் உங்கள் துணிமணிகளைத் துவைத்து உங்களை ஆள்பாதி ஆடை பாதி என்று மாற்றிய சலவைத் தொழிலாளர்களுக்கு
நீங்கள் கல்லிலும் முள்ளிலும் நடக்கும்போது கள் முள் குத்தாமலும் வெயிலில் நடக்கும்போது வெயில் சுடாமலும் இருக்க செருப்புத் தைத்துக் கொடுக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு
நீங்களும் உங்கள் குடும்பமும் உல்லாசமாய் வாழ தங்கள் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உங்களுக்கு உணவுப்பொருளை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு
இப்படி உங்களுக்கு உழைத்துப் போட்ட மக்களுக்குப் படியளந்ததாகச் சொல்கிறீர்களே
அவர்கள் தங்கள் தொழிலைச் செய்யாமல் உங்களுக்கு உழைக்காமல் இருந்திருந்தால்
உங்கள் பிழைப்பு நாறிப் போயிருக்காதா?
நீங்கள் காரிலும் பங்களாவிலும் உல்லாசமாக வாழ முடியுமா?
நல்ல சோறு திங்க முடியுமா?
நல்ல துணிமணி உடுத்த முடியுமா?
காலில் செருப்புப் போட்டு நடக்க முடியுமா?
;
ஆனால் இன்னொரு குரூப்புக்கு நீங்கள் அன்று படியளந்தது மாத்திரமல்லாமல் இன்றைக்கும் அளந்துகொண்டிருக்கிறீர்களே
அந்த குரூப்புக்கு படியளந்ததாக என்றாவது சொல்லி இருக்கிறீர்களா?
உங்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அதற்கு மேலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்ற பெயரால் புரோகிதம் செய்து உங்கள் மூளையைக் காலி செய்து உங்களை சூத்திரர்கள் வேசி மக்கள் என்று சொல்லி உங்கள் பெண்களை சூத்திரச்சிகள் தேவடியாள்கள் என்று இழிவுபடுத்தி இன்னமும் காசு பறித்து வருகிறார்களே
அவர்களுக்கு படியளந்ததாக என்றாவது சொல்லி இருக்கிறீர்களா?
அவர்கள் புரோகிதம் செய்யவில்லையெனில் உங்கள் வாழ்வில் ஏதாவது நட்டம் உண்டா?
உங்கள் பணத்தையும் பெற்றுக் கொண்டு உங்களையே இழிவுபடுத்தும் அவர்களிடம் வராத கோபம் உங்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்துப் போட்ட மக்களிடம் காட்டுகிறீர்களே அதுதான் உங்கள் வீரமா?
அந்த வீரத்தை பார்ப்பானிடம் காட்டிப் பாருங்கள்
அப்பொழுது தெரியும் உங்க சேதி
அப்ப சொல்லுவீங்க
பெரியார் சொன்னதுதாங்க சரி என்று
சிந்திப்பீர்
இன்னும் ஆண்டசாதி ஆண்ட சாதி என்று வீண் பெருமை பேசித் திரியாதீர்

திங்கள், 26 மார்ச், 2018



ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுதர்மம். வேதம் என்பதுதான் அக்காலக் கல்வி. வேதத்தை சூத்திரன் காதில் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்@ அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. அவ்வாறு கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து வெள்ளைக் காரன் வந்த பிறகும் அவன் காலை நக்கி பார்ப்பனர்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் தங்கள் இனத்துக்கே சொந்தமாக்கிக் கொண்டனர். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியைப் புகுத்தி பார்ப்பனர் மட்டுமே மருத்துவம் படிக்க வழிவகை செய்து கொண்டனர்.
காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தார்கள். காங்கிரஸ் கட்சியின் மாகாணத் தலைவர்ää செயலாளர் ஆகிய பதவிகளில் பெரியார் இருந்தாலும் காங்கிரஸ் மாநாடுகளில் அந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் காங்கிரசை விட்டு வெளியேறினார் பெரியார்.
தமிழகத்தை ஆண்ட நீதிக்கட்சியும்ää நீதிக்கட்சியின் ஆதரவுடன் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையும் வகுப்புரிமைத் தீர்மானத்தை அமுல்படுத்தினர். அதன்படி கல்வி வேலைவாய்ப்புக்களில் பார்ப்பனர்ää கிறிஸ்துவர்ää முஸ்லிம்கள்ää பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்தது.
சுதந்திரம் கிடைக்கும்வரை அதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பிறவியின் காரணமாக சூத்திரர்களின் கல்வி வேலைவாய்ப்பை மறுத்த பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தான் பிறந்;த ஜாதியின் காரணமாக தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று  வழக்குப் போட்டார். அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் யார் தெரியுமா? அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் சட்ட வரைவுக்குழுவில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்குப் போட்டியிடுவதுபோல இருக்கிறதா? இல்லையா? அதுதான் பார்ப்பன இனநலன். தங்களது இனநலத்தைப் பாதுகாக்கப் பார்ப்பனர்கள் எவ்வளவு கீழ்நிலைக்கும் இறங்கிச் செல்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவ்வழக்கில் அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரும் பார்ப்பனர். நீதிபதி பார்ப்பனர். தீர்ப்பு எப்படி வரும்? கல்வியில் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததிலும் அதே தீர்ப்பு உறுதியானது.
உடனே ஆர்த்தெழுந்து போராடினார் தந்தை பெரியார். அன்றைக்கு பிரதமர் நேரு அவர்கள். சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு சட்டத்தைத் திருத்த முன்வந்தது. தமிழகத்தில் நடந்த போராட்டத்தின் காரணமாகத்தான் இந்த அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது என்பதை பிரதமர் நேரு அவர்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் அவர்களாலேயே தந்தை பெரியாரின் போராட்டத்தால் முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
அவ்வாறு பெரியார் போராடி இருக்காவிட்டால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்விதான் கிடைத்திருக்குமா? வேலைவாய்ப்புத்தான் கிட்டியிருக்குமா? இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் யார் காரணம்? தந்தை பெரியார் அல்லவா? நாம் இன்று வாழ்வதே பெரியாரால் அல்லவா?
செப்டம்பர் 17 அவரது பிறந்தநாள். அவரால் வாழ்வுபெற்ற நாம் அவரது பிறந்தநாளை சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவோம். நன்றியுள்ள மனிதர்களாக வாழ்ந்திடுவோம். வாழ்கபெரியார்! வளர்க அவரது கௌ;கை!!



நம்முடைய நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. விவசாய நிலங்கள் அனைத்தும் ஒரு சிலருக்குச் சொந்தமாயிருக்க பெரும்பான்மை மக்கள் விவசாயக் கூலிகளாக நில உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருப்பார்கள். அவர்களுக்கு கூலி என்பது அந்த பண்ணையாராகப் பார்த்துக் கொடுப்பதுதான். அங்கே எந்த சங்கமும் வைத்துக் கொள்ள முடியாது. அந்த விவசாயக் கூலிக்கு ஆடி மாதத்திலிருந்து தை மாதம் வரை வயலில் வேலை கிடைக்கும். அப்பொழுதுதான் அவன் சம்பாதிக்க முடியும். சம்பாதித்ததை மீதமுள்ள ஆறு மாதத்திற்கும் சேர்த்து வைத்துக்; கொள்ள வேண்டும்.
அப்படி சேமித்து வைக்கும் உணவுப்பொருள் அடுத்த நடவுகாலத்திற்குள் தீர்ந்துவிட வேண்டும். அப்படித் தீராமல் அவனுடைய தேவைக்கு அதிகமாக இருந்தால் சரியான நேரத்தில் வேலைக்கு வரமாட்டான் என்று சிந்தித்த ஆதிக்க வர்க்கம் திருவிழாää தேர்ää பண்டிகை என்று உருவாக்கி அந்தத் திருவிழாவில் கிடாவெட்டுää பொங்கல்ää குடிää கூத்துää கேளிக்கை என்று பலவற்றை ஏற்படுத்தி அடுத்த ஊரிலிருந்து தன்னுடைய மாமன் மச்சான் சொந்த பந்தங்களையெல்லாம் அழைத்து செலவுசெய்து சேமித்த உணவு தானியம் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும். அப்பொழுதுதான் கூலிக்காரன் வேலைக்கு வருவான். இல்லையென்றால் அவனுக்குத் திமிர் ஏறிவிடும் என்று நினைத்த மேல்ஜாதி மேல்வர்க்கத்தின் சிந்தனையில் உதித்ததுதான் இந்தப் பண்டிகைகள். அதனால்தான் கிராமக்கோயில் திருவிழாக்களெல்லாம் தை முடிந்து மாசி மாதத்தில் தொடங்கி ஆடிவரை நடக்கும்.
அதுபோலத் தீபாவளி என்பது நடவு தொடங்கி களையெடுப்பு நடைபெறும் காலத்தில் வருவதால் அவன் அந்தச் செலவுக்குப் பணம் போதவில்லையென்று தன்னுடைய பண்ணையாரிடமே கடன்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; வாங்கி அத் தீபாவளியைக் கொண்டாடி அந்தக் கடனை அடைக்க அவனிடமே நிரந்தரமாக வேலை செய்ய வேண்டும். இந்தப் பண்டிகைகளால் பார்ப்பனருக்கும் வியாபாரிகளுக்கும்தான் நல்ல வேட்டையே தவிர உழைக்கும் மக்களுக்கு மிஞ்சுவது மானக்கேடும் அறிவுக்கேடும் செலவும்தான்.
ஆனால் நம் நிறுவனத்தில் நமக்கு வழங்கப்படும் போனஸ் என்பது நம்முடைய உழைப்பின் பயன். நாம் ஈட்டிக் கொடுத்த இலாபத்தில் பங்கு. நம்முடைய ஊதியத்தின் கொடுபடாத ஒரு பகுதி. அந்த போனசை முதலாளிமார்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக குறைந்தது அக்டோபர் 30க்குள் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டம் இயற்றி அந்த போனசுக்கான காலக் கெடுவை சட்டப்பூர்வமாக்கினார்கள். அதுவும் முதலாளிமார்கள் மார்ச் மாதம் உற்பத்தி முடிந்தாலும் இலாப - நட்டக் கணக்கைப் பார்க்க சிறிது காலம் பிடிக்கும் எனபதால் இந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த நவீன கணிணி யுகத்தில் மார்ச் 31 முடிந்த உடன் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் உற்பத்தி எவ்வளவு? இலாபம் நட்டம் என்ன? என்பதெல்லாம் ஒரு நொடிக்குள் தெரிந்துவிடக் கூடிய இக்காலக்கட்டத்தில் அக்டோபர் வரை நீட்டிப்பது ஏமாற்று வேலை. எனவேää நம்முடைய உழைப்பின் பலன் பயனுள்ள வகையில் நம்முடைய பிள்ளைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படும் வகையில் மே - ஜூன் மாதத்திற்குள் வழங்கு என்று கேட்க வேண்டிய  சங்கங்கள் தீபாவளி நெருங்கிவிட்டது போனஸ் கொடு என்று கேட்பது கேலிக் கூத்தானது. தீபாவளிக்கும் போனசுக்கும் என்ன சம்மந்தம்? இந்த போனஸ் என்ன இந்துக்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படுகிறதா? தொழிலாளர் எல்லோருமே தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா?;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
அதைவிட எது நடந்;ததோ அது நன்றாகவே நடந்தது என்று சொல்லும் ஒரு சங்கம் தீபாவளி நெருங்கிவிட்டது யூனிபார்ம் கொடு என்கிறது. இந்த யூனிபார்மைத்தான் தீபாவளிக்குப்; போடுவாங்களா? போனஸ் லேட்டாவதால் தீபாவளியைத் தள்ளிப் போடும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். இந்தப் போராட்டத்தை நாங்களும் வரவேற்கிறோம். அதைவிட தீபாளியைத் தடைசெய் என்று போராடினால் அதிலே நாங்களும் கலந்துகொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். செய்வார்களா?



தமிழ்நாட்டில் இருக்கும் பெல் நிறுவனத்தில் தமிழனுக்கு வேலையில்லை என்பதை வேதனையுடன் நாம் குறிப்பிட்டாலும் அந்த வேதனையின் வலி கார்ப்பரேட்டில் உள்ளவருக்கும் புரிவதில்லை. திருச்சியில் உள்ளவருக்கும் தெரிவதில்லை. நூறுபேர் எடுத்தாலும் அதில் தமிழன் யாருமே இல்லையென்றாலும் அது தமிழனுக்கே உறைப்பதில்லை.

தமிழனுக்குத்தான் வேலையில்லை என்றாலும் தமிழுக்கு இங்கே என்ன மரியாதை என்றால் அதுவும் ~0| தான். பெயர்களை ஆங்கிலத்தில்
எழுதுகின்றார்கள்.

பெயருக்கு முன்னால் தமிழில் ~திரு| சேர்ப்பதைப்போல் ஆங்கிலத்தில் ‘Mr’ என்று சேர்ப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பெயரை எழுதி அதற்கு முன்னால் ‘Shri’ என்று போடுகிறார்கள். அது வடமொழி. ஆங்கிலத்துக்கு முன்னால் வடமொழி எப்படி வந்தது? ஏன் அந்த  ‘Shri’ என்று போட வேண்டும்? ‘Shri’ என்று போடுவதற்குப் பதிலாக ‘Thiru’ என்று போடலாமே! ஏன் அதனைப் போடுவதில்லை? எல்லாம் வடநாட்டுமோகம்.
அத்துடன் நமது ஆலைக்கு வரும் வழியில் வரவேற்பு வளைவுää கணேசா அருகில் உள்ளது. அந்த வளைவிலும் இரண்டாம் விரிவாக்க வாயிலில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயிலிலும் Bharat Heavy Electricals  என்று ஆங்கிலத்தில் இருக்கிறது. அதனைத் தமிழில் மொழிபெயர்ப்பதாக பாவ்லா செய்து ~பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்| என்று தமிழ் எழுத்தில் எழுதியிருக்கிறார்களே! இது தமிழா? இதைத் தமிழ் என்று எந்தத் தம்ப்ளர் மொழி பெயர்த்துச் சொன்னது? தமிழை இதைவிட வேறு யாரால் கொலை செய்ய முடியும்? இப்படி மொழி பெயர்க்கவில்லை என்று யார் அழுதது? இதைவிட இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மலையாளத்திலும் வைத்து விட்டுப் போகலாமே! கேட்டால் இங்கே அவர்கள்தான் அதிகம் வேலை செய்கிறார்கள். அதனால் அந்த மொழிகளில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி விடலாமே! வேறு எந்த நிறுவனத்திலாவது அந்த மாநில மொழியை இப்படிச் சிதைத்தால் சும்மா விடுவானா? தமிழன் இளித்தவாயன்ää தமிழ் இளைத்தமொழியா? முத்தமிழ் மன்றங்களும் முத்தமிழ் வித்தகர்களும் இருந்தும் இந்நிலை இருப்பதை எவர் கேட்டார்?
இந்த இலட்சணத்தில் இங்கே சில ஊழியர்களுக்கு குற்றப்பத்திரிகையும் நினைவுக்குறிப்பும் வழங்கியுள்ளது நிர்வாகம். அந்த ஊழியர்கள் அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொன்னால் மொழிபெயர்த்துத் தரமுடியாது என்று கூறுவதோடு ஏதோ அந்த ஊழியர்களுக்கு ஆஙகிலமே அறவே தெரியாதது போலவும் அவர்கள் வேலைக்குச் சேரும்போது எழுதிக்கொடுத்த உறுதிமொழியில் ஆங்கிலம் தெரியும் என்று சொல்லியிருப்பதால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அல்லது முன்பு தவறான தகவலைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறி அந்த உறுதி மொழியின்படி அந்த ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுபோல் மிரட்டுகின்ற பாணியில் கடிதம் கொடுத்துள்ளது.
இன்று நீதிமன்றங்களே குற்றப்பத்திரிகைகளை அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் இங்கே மிரட்டுகின்றார்கள். இவர்களுக்கு தமிழே தெரியாது. அவர்கள் மொழிபெயர்த்தால் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதற்கு நம்முடைய வரவேற்பு வளைவுகளில் உள்ள தமிழே சான்று. ~யூ ஹேவ் பீன் சார்ஜ்டு| என்று தமிழ் எழுத்துக்களில் எழுதித் தருவார்கள். இதுதான் தமிழ் என்பார்கள். எனவேää இவர்கள் மொழிபெயர்த்துக் கொடுப்பதைவிட கொடுக்காமல் இருப்பதே மேல்!
நாம் சொல்வது தவறு. நாங்கள் உண்மையில் தமிழை மதிக்கிறோம் என்று நிர்வாகம் கூறுமேயானால் உடனடியாக இந்த வளைவுகளிலும் நுழைவாயில்களிலும் தமிழ் என்ற பெயரால் கொலை செய்யப்பட்டிருக்கும் சொற்றொடர்;களை எடுத்து விட்டு உண்iமான தமிழில் நுழைவாயிலையும் வரவேற்பு வளைவையும் எழுதி வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்;. நிர்வாகம் தமிழை மதிக்குமா?
01-07-2013

பூனா ஒப்பந்தம்



முதல் வட்ட மேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெட்டமலை சீனிவாசனும் கலந்துகொண்டார். பிரிட்டிஷ் மன்னரும்ää பிரதமரும் அவர்கள் இருவருக்கும் கைகுலுக்குகிறார்கள். ஒரே மேசைமுன் அமர்ந்து தேனீர் அருந்துகிறார்கள். ஆனால் இங்கே ஒரு கல்வியறிவற்ற மூடன் அம்பேத்கரின் கல்வியறிவின் கால்தூசுகூடப்பெறாத ஒரு பார்ப்பான் அவருக்குத் தண்ணீர் தர மறுக்கிறான். அவரிடம் கோப்புகளைக் கையில் கொடுத்தால் தீட்டு என்பதற்காகத் தூக்கி வீசுகிறான். இதில் யாருக்கு யார் அன்னியன்?
அந்த வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் தனித் தொகுதி முறை வேண்டும். அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அம்பேத்கரும் சீனிவாசனும். இந்த வட்ட மேசை மாநாட்டைப் புறக்கணித்த காந்தி இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்கிறார். அங்கே கலந்துகொண்டு வெள்ளையனே வெளியேறு என்று முழங்கவில்லை. எங்களுக்கு சுதந்திரம் கொடு என்று கேட்கவில்லை. அம்பேத்கருடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார். கிறிஸ்துவர்கள்ää முஸ்லிம்கள்ää சீக்கியர்களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டை எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொண்ட காந்தி தாழ்த்தப்பட்டவர்களுடைய இட ஒதுக்கீட்டை மாத்திரம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் அம்பேத்கரின் கோரிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்த காந்திää முஸ்லிம் தலைவர்களிடம் சென்று அம்பேத்கரின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்கிறார். அதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
பிரிட்டிஷ் பிரதமர் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இரட்டை வாக்குரிமையை அமுல்படுத்த உறுதியளித்தார். அதாவது தாழ்த்தப்பட்டவர்களுடைய பிரதிநிதிகளைத் தாழ்த்தப்பட்டவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அதே தொகுதியில் பொது வேட்பாளருக்கும் தாழ்த்தப்பட்டோர் வாக்களிக்கவேண்டும் என்ற முறை அது. அதனால் தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதி தே;ரந்தெடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது.
இதனை ஏற்றுக்கொள்ளாத காந்தி அந்த உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். காந்தி இறந்துவிட்டால் நாடே ரணகளமாகும். அம்பேத்கர் மிரட்டப்படுகிறார். அரக்கன்ää துரோகிää பிரிட்டிஷாரின் கைக்கூலி என்றெல்லாம் அம்பேத்கர் தூற்றப்படுகிறார்.  காந்தியின் ஒரு உயிருக்காக ஆறு கோடி மக்களின் வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்காதீர் என்று பெரியார் தமிழ்நாட்டிலிருந்து தந்தியடிக்கிறார். நிலைமை அதற்கேற்றாற்போல் இல்லை. அம்பேத்கர் காந்தியின் உயிரைக் காப்பாற்ற அவரது விருப்பத்திற்கு மாறாக பூனா ஒப்பந்தத்தில் காந்தியுடன் கையெழுத்திடுகிறார். அதனால் இரட்டை வாக்குரிமை பறிபோகிறது. இன்று தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதிகள் செல்ல முடியாது. உயர்ஜாதிக்காரர்களின் ஏவலாள்களும் அடிமைகளும் அரசியல் கட்சிகளின் ஏவலாட்களும்தான் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் செல்ல முடியும். அதனால்தான் பெரியார் அம்பேத்கரை ஆரியஸ்தாபனமான காங்கிரசுக்கு அடங்கிப்போனவர் என்று கூறுகிறார். அதனைப் பின்னாளில் அம்பேத்கரே உணர்ந்தார். பார்ப்பனரல்லாதார் சட்டமன்றத்துக்குச் செல்வதை கடுமையாக எதிர்த்தவர் திலகர். வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் எடுத்த முடிவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த எம்.சி.இராஜாää ஆர்எஸ்எஸ் தலைவரான மூஞ்சே வின் தூண்டுதலால் அதனை எதிர்க்கிறார். அம்பேத்கர் நடத்திய ~மூக்நாயக்| என்ற பத்திரிகைக்கான விளம்பரத்தை தனது பத்திரிகை தீட்டாகிவிடும் என்பதால்.  காசுகொடுத்தும் வெளியிட மறுத்துவிட்டது திலகர் நடத்திய ~கேசரி| என்ற பத்திரிகை. அந்தத் திலகர் வழிவந்த இ.முன்னணி பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் சிண்டுமுடிவது பார்ப்பனர்களுக்கே உரித்தான பிறவிப்புத்தி. இவர்களைப் புரிந்துகொள்வீர்!

முதல் அரசியல் சட்டத் திருத்தம்


காலுக்குச் செருப்பும் தோளுக்குத் துண்டும் போடுவதற்கு உரிமைபெற்றுத் தந்தவர் தலைவர் தந்தை பெரியார். உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப் போல தமிழ்ச் சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றும் பணிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள். இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள்; தங்களுடைய உயர்வுக்குத் தந்தை பெரியாரின் உழைப்பே காரணம் என நன்றி உணர்ச்சியுடன் நினைவுகூர்கிறார்கள். ஆனால் நம் நிறுவனத்தில் உள்ள சிலர் தந்தை பெரியாரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்ற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நடத்தி இளைஞர்களைக் குழப்பி வருகிறார்கள். இந்த சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடுத்து வைத்திருந்த இன எதிரிகளும் துரோகிகளும் செய்துவரும் பித்தலாட்டமான பிரச்சாரங்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்களையும் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.
அண்ணல் அம்பேத்கரை திராவிடர் கழகத்தவர்களும் பெரியார் தொண்டர்களும் யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதிலே எங்களுக்கு எந்த விதமான அய்யப்பாடும் கிடையாது. ஆனால் தாழ்த்தப்பட்ட அமைப்புக்களில் உள்ள சிலருக்கு பெரியார் என்றால் வேப்பங்காயாகக் கசக்கிறது. பெரியார் பாடுபட்டதால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன் கிடைத்தது என்பதை ஒத்துக்கொண்டால் இளைஞர்கள் பெரியார் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். தாங்கள் தனிக் கம்பெனி நடத்தி பிழைப்பு நடத்த முடியாது என்று கருதக் கூடிய சிலர் அந்த அமைப்புக்களில் முன்னணியில் இருப்பதால் பெரியாருக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். அவர்கள் அம்பேத்கரையும் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டதில்லை. அவர் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பதுமில்லை. அதனால்தான் அவர்கள் பெரியாருக்கு எதிராகப் பேசி வருகிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் சட்டத்தின்மூலம் இட ஒதுக்கீட்டுச்  சலுகைகயைப் பெற்றுத் தந்தார்கள் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. ஆனால் சென்னை மாகாணத்தில் அந்த இட ஒதுக்கீடு 1928 முதல் கம்யூனல் ஜி.ஓ. என்ற பெயரில் நடைமுறையில் இருந்து வந்தது. அந்த கம்யூனல் ஜி.ஓ மூலம் அனைத்து அரசுப் பணிகளிலும் தாழ்த்தப்பட்டோர்ää பிற்படுத்தப்பட்டோர்ää முன்னேறிய ஜாதியினர்ää பார்ப்பனர் உட்பட அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரம் அடையும்வரை அதில் யாரும் கைவைக்க முடியவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும்கூட ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் அந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக அறிவித்த உடன் அண்ணல் அம்பேத்கருடன் அரசியல் சட்ட வரைவுக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி என்ற கில்லாடிப் பார்ப்பானால் சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் செல்லாது என்று தீர்ப்பு வாங்கப்பட்டது.
அப்பொழுது தமிழகத்தில் தந்தை பெரியாரும் அவர்தம் இயக்கத்தினரும் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் அன்று பிரதமராக இருந்த நேருவும் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அரசியல் சட்டத்தை முதல் முதலாகத் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தார்கள்.
அவ்வாறு அந்த அரசியல் சட்டத் திருத்தம் வரவில்லையென்றால் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல தாழ்;த்தப்பட்டவர்களுக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி இந்திய அரசியல் சட்டத்தை முதல்முதல் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த பெரியாரால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது நன்றி உணர்ச்சியற்ற தன்மையாகும். இவ்வாறு நன்றி உணர்ச்சியற்ற சிலர் இளைஞர்களுக்கும் அந்த நன்றி உணரச்சி வரக்கூடாது என்று கருதக் கூடியவர்கள் இதுபோன்ற பரப்புரைகளைச் செய்து வருகிறார்கள். தயவு செய்து அவர்களுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லாவிட்டாலும் தவறான வரலாற்றைப் பதிவு செய்து வரலாற்றில் கரும்புள்ளி ஆகாதீர்கள் என்று கேட்டுக்கௌ;கிறோம். 



பெரியாரும் தமிழும்


மானுட விடுதலையின்பால் மட்டற்ற நாட்டமுடைய தற்சிந்த னையாளர் தந்தை பெரியார்! அறிவு வாயிலின் கதவுகளை அகலத் திறந்து வைத்து, ஏன், எதற்கு என்கிற வினாக்களின் அணிவகுப்பை நடத்திக் காட்டியவர் அவர். கட்டற்ற சிந்தனைகளின் உலைக்களமாய் அவர் உள்ளம் கனன்று கொண்டே இருந்தது.
சிற்றூர் பேரூர் என அவர் கால்கள் செல்லாத இடமில்லை. தமிழகம் முழுவதும் தன்மானச் சுடரொளியாய்ச் சுற்றிச் சுழன்ற பகுத்தறிவுச் சூறாவளி! மொழி, இனம், நாடு, கலை, இலக்கியம், பண்பாடு எனப் பல்வேறு தளங்களில் தத்துவ ஒளி பாய்ச்சிய தணல் நெருப்பு!
மொழி உணர்ச்சி பற்றிப் பெரியார் :
மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானால் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய இனஉணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்! (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பகுதி 6 பக்கம் 2797).
இப்படிக் கருத்துச் சொன்ன பெரியார், ‘மொழிப்பற்றுஎன்கிற செய்தியில் வேறு மாதிரியும் பேசுகிறார்.
மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல; அது இயற்கை ஆனதும் அல்ல; அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு - விஷயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதே யொழிய பற்றுக் கொள்வதற்கு அவசியமானதல்ல. (பெரியார் சிந்தனைகள் 3-2, பக்கம் 1752).
இங்கு மொழியின் பயன்பாட்டுத் தன்மை பற்றிப் பேசும் பெரியார், தமிழை அறிவுகொள் கருவியாகக் கையிலெடுத்துத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பாமரர் மொழியி லேயே பேசி அவர்தம் உள்ளங்களில் ஊடுருவினார். மாபெரும் அறிவுப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டி னார். தன்னலமற்ற தலைவராக மக்கள் நெஞ்சங் களில் ஒளிர்ந்தார்.
மொழியாயினும் சமுதாயமாயினும் ஒன்று மற் றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது. சமத்தவமும் சம உரிமையும் பேணப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரின் நிலைப்பாடு. மேலும் மொழியின் மீது தெய்வீகத்தன்மை ஏற்றப் படுவதையும் அவர் கண்டித்தார்.


தமிழ் பரமசிவன் டமாரத்திலிருந்து வந்ததா?
தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதி யிடம் பேசிய பாஷையென்றோ சொல்லி விடுவதாலும் - தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும்’, ‘முதலை உண்ட பாலனை அழைத்ததாலும்’, ‘எலும்பைப் பெண்ணாக்கினதாலும்’, ‘மறைக்கதவைத் திறந்ததாலும்தமிழ் மேன்மை உற்றதாகிவிடாது. அன்றியும் அந்தப் படியிருந்தால், பார்ப்பான் தமிழ்மொழியைச் சூத்திர பாஷையென்றும், அதைக் காதிலே கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா என்று யோசித்துப் பாருங்கள்!’ (13.1.1936, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழர் திருநாள் விழா உரை, குடிஅரசு 26.1.36)
கம்பநாடனின் ஆள்காட்டி வேலை
தமிழ்மொழிக்குக் கிடைத்த அழியாத கலைச்செல் வங்கள் கம்பராமாயணமும், பெரியபுராணமும், இன்ன பிற இலக்கியங்களும் ஆகும். இவற்றையெல்லாம் பெரியார் கண்டபடி இழித்தும் பழித்தும் பேசியுள்ளார் என்று பெரியார் மீது குறைபட்டுக் கொள்வோர் இன்றும் இருக்கிறார்கள். பொதுவுடைமைத் தலைவர் ஜீவா போன்றவர்கள் கம்பராமாயணத்தில் காரல்மார்க்சைக் கண்டு வியந்தார்கள். ஆனால் கம்பரோ பார்ப்பன மனு தர்மக் கருத்தியலைத் தன் இராமகாதையில் பச்சை யாகவே பாடிவைத்தார்.
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத் துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப் பட்டது. எனவே பிராமணனே நமது தெய்வம் (தெய்வா தீனம் ஜெகத் சர்வம்; மந்தராதீனம் தெய்வதம்; தன் மந்தரம் பிராமணாதீனம்; பிராமனோ மம தேவதா) என வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.
இதன் தன்மையிலான கருத்து இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளதைக் கீழ்க்காணும் ஒரு பாடலைக் கொண்டு அறியலாம்.
தசரதன் வசிட்டரை அழைத்து இராமனுக்கு வேண் டுவன செய்து அரச நீதிகளை உரைத்தருள்கஎன்றதா கவும், அவ்வாறே வசிட்டர் இராமனிடம் சென்று, கீழ்க் கண்டபடி நீதிகள் உரைத்தாகவும் கம்பர் கூறுகிறார்.
கரிய மாலினும் கண்ணுற லானினும்
உரிய தாமரை மேலுறை வானினும்
விரியும் பூதம்ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்
அதாவது திருமால், சிவன், நான்முகம், அய்ம்பூதம், வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும் அந்தணர்கள் பெருமையுடையவர்கள்; ஆகையால் அவர்களை உள்ளன் போடு வழிபடுவாயாக! என்று அந்தணர் பெருமை யைக் கூறுகிறார். (குடிஅரசு கட்டுரை 12.2.1944)
இதுதானா தமிழருக்கு நீதி - பண்டிதர்களே கருணை காட்டிக் கூறுங்கள்.
பெரியபுராணம் - நஞ்சைக் கக்கும் மதவெறி :
ஆலவாய் அழகராம் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பாடும் திருத்தொண் டர் புராணத்தைச் (பெரிய புராணத்தை) சைவ மெய்யன் பர்கள் தலைமேல்வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் அந்த நாள் முதலே கட்சி மாறித் தனங்களும், மாற்று மதத்துக்காரனர் மனைவியரை மானபங்கப்படுத்த வேண்டும் என்னும் மதவெறியுணர்ச்சியும், 8000 சமணர்களை ஈவிரக்கமின்றிக் கழுவேற்றிக் கொன்ற கயமைத்தனங்களும் பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளன.
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என் னும் தலைப்பில் 3ஆவது பாட்டு,
மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாய்அருள்
பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண்,
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே
என்பதாம்.
இந்தத் திராவிடர்களின் (பெண்களை) - மனைவிகளை, தானே கற்பழிக்கத் திருவுளமேஎன்பது சம்பந்தர் பாடினதா? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கிற விபரத் தைப் பண்டிதர்கள் - சைவப் பண்டிதர்கள், அல்லது கிருபானந்தவாரியார், திரு.வி. கல்யாணசுந்தர முதலி யார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கடப் பாடுடையவனாக இருப்பேன். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944).
பெரியாரும் மறைமலையடிகளும் :
மறைமலையடிகள் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பழுத்த சிவப்பழம். கம்பராமாயணம்போன்ற வைணவ இலக்கியங்கள் திராவிட இயக்கத்தவரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதைக் களிப்புடன் வரவேற்ற அடிகளார், பெரிய புராணத்தைப் பெரியார் தோலுரிக்கத் தொடங்கியபோது கடுப்பாகிப் போனார். பெரியாரையும் இவரது இயக்கத்தினைரையும் தனது பேச்சாலும் எழுத்தாலும் கடுமையாகத் தாக்கி வசைமாரி பொழிந்தார்.
மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழியக்க வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த இயக்கமாகும். பிறமொழியின் கலப் பின்றித் தூய தமிழில் பேசவும் எழுதவும் இயலும் என்பதை தன் அறிவார்ந்த வினைத்திறனால் நிறுவிக் காட்டிய பெருமகனார் மறைமலையடிகள் ஆவார். தனித்தமிழ் இயக்கப் பணிகள் பார்ப்பனரிடையே பெரும் அச்சத்தை உருவாக்கின. சமற்கிருதத்தை மிகுதியும் உச்சரிக்க உச்சரிக்க மாந்தனின் வாழ்நாட்குறையும் என்பதை மொழியியலின் வழிநின்று மறைமலை அடிகள் மெய்ப்பித்துக் காட்டியதை அறிந்து பார்ப்பனர் கள் அவர் மேல் எரிச்சலுற்றனர். அவரின் அறிவுத்திற னைக் கொச்சைப்படுத்திப் பகை கக்கினர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்புக்குப் (இன்டர் மீடியட்) பாடமாக வைக்கப்பட்டிருந்த அறிவுக்கொத்துஎன்னும் அடிகளாரின் நூலைத் தடைசெய்ய வேண்டு மென்று கூக்குரல் எழுப்பினர். அதுபோழ்து தந்தை பெரியார், மறைமலையடிகளுக்கு அரணாய் நின்று அவரின் தமிழ்ப் பணியைப் போற்றினார். பார்ப்பனர் களால் வியந்து போற்றப்படும் உ.வே.ச.வைவிடப் பன்மடங்கு உயர்ந்தவர் மறைமலைகள் என்று தம் குடிஅரசு ஏட்டில் தலையங்கம் தீட்டினார்.
இன்று தமிழ்பாஷையின் பேரால் பெருநிதி திரட்டிக் கொண்டவரும், பெரும் புகழ் அமைத்துக் கொண்டவரும், தமிழுக்குத் தாயகமென விளம்பரப்படுத்தப்பட்டு மகா மஹோபாத்தியாயர் எனப்பட்டம் சூட்டப் பெற்றவரு மான தோழர் உ.வே. சுவாமிநாதய்யர் அவர்களை ஒரு தட்டில் வைத்து, சுவாமி வேதாச்சலமவர்களை மற் றொரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமிநாதய்யர்களைப் போட்டால் சுவாமி வேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்க முடியும் என்பதை ஒவ்வொரு நேர்மையான மகனும் தன் நெஞ்சில் கைவைத்து உண்மை உணர்வோடு பார்ப்பானானால் நன்றாய் விளங்கிவிடும்.
...ஆதலால் ஒவ்வொரு ஊரிலுமுள்ள சுயமரியாதைச் சங்கங்களும், பார்ப்பனரல்லாத சங்கங்களும், பார்ப்பனர் களுடைய விஷமப் பிரச்சாரத்தைக் கண்டித்துச் சர்க்கா ருக்குத் தீர்மானங்கள் அனுப்பும்படி வேண்டுகிறோம்”. (குடிஅரசு தலையங்கம் 1.8.1935).
பெரியாரும் சமற்கிருத எதிர்ப்பும் :
1937இல் இராசகோபாலாச்சாரி இந்தியைக் கட்டாய மாக்கியதன் உள்நோக்கமே இந்தியைச் சமற்கிருதத்தின் இடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். சரிந்துவரும் சமற்கிருதத்தின் (வடமொழியின்) செல் வாக்கைத் தடுத்து நிறுத்தவும், அம்மொழிக்குத் தமிழ ரிடையே உருவாகிவிட்ட வெறுப்பைத் தடுக்கவுமே அவர் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க விரும்பி னார். இதனை இராசகோபாலாச்சாரியே பல கூட்டங் களில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்த வஞ்சகப் பார்ப்பன நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டதால் தான் பெரியார் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரைத் தமிழகத்தில் நடத்தி 2000 பேரைச் சிறைக்கனுப் பியதுடன், தானும் மூன்றாண்டுக்காலம் கடுங்காவல் தண்டனை ஏற்றார்.
வெள்ளையன் வெளியேறி, நாடு பார்ப்பனக் கொள் ளையரின் கைக்கு வந்தபின் 1956இல் நடுவண் அரசு சமற்கிருதக் கமிஷன்என ஒன்றை அமைத்துப் பல கோடி ரூபாயைக் கொட்டி அழத் திட்டமிட்டது. இச் செயலை வன்மையாகக் கண்டித்துப் பெரியார் தொடர்ந்து விடுதலை ஏட்டில் ஆசிரியவுரை எழுதினார்.
இதனால் யாருக்காவது காதொடிந்த ஊசியளவுபிரயோசனம் உண்டா? விரயம் செய்யப்பட்ட பணம் அத்தனையும் நம்மிடத்திலிருந்து வரியாகக் கோடிக் கணக்கில் - தில்லி சர்க்காரால் - பகற்கொள்ளையரைப் போல் எடுத்துச் செல்லப்படுவது தானே? பார்ப்பனரிட மிருந்து போகும் வரி விகிதாசாரம் என்ன? நம்மிடம் இருந்து போகும் வரியின் விகிதாசாரம் என்ன? ‘அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையேஎன்கிற தன்மையில், இலட்சக்கணக்கில் இப்படி வாரியிறைத்துப் பதறப்பதற நாசமாக்கிக் கொண்டிருப்பதை நாம் இன் னமும் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ் வாறுதான் இருக்க வேண்டுமா?...
இப்படிப் பல இலட்ச ரூபாயைக் கரியாக்குவதன் மூலம் யாருக்கு என்ன நன்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அரசியல் சட்டத்தில் உள்ள மற்ற 13 மொழி களுக்குக் காட்டாத சலுகை, சமற்கிருதத்திற்கு மட்டும் என்ன தேவை? அப்படிச் சமற்கிருத இலக்கியத்திற்கும் மொழிக்கும் ஊக்கம் அளிப்பது என்றால் அதைத் தனிப் பட்டவர்களான பிர்லா, கே.எம். முன்ஷி போன்றவர் களால் அதற்கெனவே ஏற்படுத்தப்பட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்ற - பாரதிய வித்யா பவனம், பாரத இதிகாச சமதி, சமற்கிருத விசுவ பரிஷத் போன்ற வைகளில் செய்து கொள்ளலாம் அல்லவா? மத்திய சர்க்கார் மாத்திரம் இதற்கு ஏன் இவ்வளவு சலுகை காட்ட வேண்டும்?
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? இவ்வளவு ஆர்வம் செலுத்துவதன் நோக்கம் என்ன? என்று ஆராய்ந்தால்தான் பார்ப்பான் தனது ஆதிக்கத் தையும் ஏகபோக உரிமையையும் பாதுகாப்பதில் எவ்வளவு கண்ணுங்கருத்துமாக இருக்கிறான் என்பது விளங்கும்.
சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழ முடியும்; சுரண்ட முடியும்; நம்மைக் கீழ்ச்சாதி மக்களாக ஆக்கமுடியும்; அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிர தையாக-விழிப்போடு காரியம் செய்து வருகி றார்கள்”.
(விடுதலை, கட்டுரை, 15.2.1950, பெரியார் சிந்தனைகள் தொகுதி 3-2, பக்கம் 1764, 1765).
ஆக, சமற்கிருத எதிர்ப்பையும், தமிழ்மொழிக் காப்பு, தமிழரின் இன உரிமைக்காப்பு என்கிற கண்ணோட்டத்தில்தான் பெரியார் அணுகினார்.
தொடக்கக் காலங்களில் கல்லூரிகளில் சமற்கிருதப் பேராசிரியர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருந்தது. சமற்கிருத ஆசிரி யருக்கு மட்டுந்தான் புரொஃபசர்என்று பெயர். தமிழ்ப் பேராசிரியர் வெறுமனே ஆசிரியர்என்று அழைக்கப் பட்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் பெற்ற மாத ஊதியம் வெறும் 81 ரூபாய் மட்டுந்தான். ஆனால் அதே கல்லூரியில் சமற்கிருதம் கற்பித்த குப்புசாமி சாஸ்திரி மாத ஊதியம் ரூ.300/-க்கு மேல்!
இதுபற்றிப் பெரியார் எழுதும்போது
ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு. பனகல் ராஜா அவர்களே இதைக்கண்டு மனங்கொதித்து என்னிடம் நேரில் சொல்லி நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்என்று சொன்னார். அவர் சமற்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்ற போதிலும் அந்த மாதிரி - அந்தஸ்திலும் சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்று மையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலையில்தான் இருந்திருக்கக் கூடும்”.
(பெரியார் சிந்தனைகள் தொகுதி 3-2, பக்கம் 1761)
அக்காலத்தில் மருத்துவப் படிப்பிற்குச் சமற்கிருத மொழி கட்டாயம் என்கிற கேடான நிலை இருந்தது. மருத்துவப் படிப்பு என்பதே பார்ப்பனர்களின் பண் ணையமாக இருந்த பாழான அந்த நிலையை மாற்றிய ஆட்சியும் நீதிக்கட்சியின் ஆட்சிதான் என்பதை இன்றுள்ள தமிழர்கள் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.
பெரியாரும் தமிழில் வழிபாடும் :
பெரியார் இறை மறுப்புக் கொள்கை உடையவர். சமய நம்பிக்கை இல்லாதவர். ஆயினும் தமிழன் கட்டிய கோயிலில் கடவுள் வழிபாடு தமிழில்தான் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயக் கொள்கை யாகப் பின்பற்றியவர்.
15.12.1956 அன்று மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் தமிழகக் கோயில் களில் தமிழ் வழிபாட்டை வலியுறுத்திப் போராட்டம் நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்தார். இது தொடர்பாக 26.12.1956இல் குன்றக்குடி அடிகளால் பெரியாருக்கு எழுதிய மடலில் இரண்டு வினாக்களைத் தொடுத்திருந்தார்.
“1.    தாங்கள் நடத்த இருக்கும் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையையும், திருக்கோயில் வழிபாட்டையும் அடிப்படையாக வைத்திருக்கின்றீர்களா? அல்லது சிலர் கருதுவது போல இனம் அல்லது சாதியின் அடிப் படையில் கிளர்ச்சிதான் நோக்கமா?
2.     ‘தமிழன்வழிபாட்டிற்கு நியமிக்கப் பெற வேண் டும்என்று நிபந்தனை கூறியுள்ளீர்கள். தமிழன்என்றால், தாங்கள் யாரைத் தமிழன் என்று கூறு கிறீர்கள். இதில் சாதி அல்லது இனம் உணர்ச்சி தலை காட்டுகின்றதா? இது சம்பந்தமாகத் தாங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்
இதற்குப் பெரியார் விடுத்த விடை மடல் :
போராட்டத்தின் இலட்சியம் இரண்டு.
“1.    தமிழ்நாட்டில் தமிழன் கோவிலில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும்.
2.     தமிழ்நாட்டில், தமிழன் கோயிலுக்குள் தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும்”.
இந்த இரண்டு காரியமும் கடவுளையும், வழிபாட் டையும் பற்றியது மாத்திரமல்ல. தமிழ்மொழியின் தன்மானத்தையும், தமிழனின் தன்மானத்தையும் பற்றியதுமாகும்.
கோவிலிலுள்ள கடவுள் என்பதைத் தமிழில் பூசை செய்யாததற்குக் காரணம், வடமொழியிலேயே பூசை செய்வதற்குக் காரணம் - தமிழ் மிலேச்சமொழிஎன்பதும், வடமொழி தேவமொழிஎன்பதுமேயாகும்.
அதுபோலவே, தமிழன் பூசை செய்யக்கூடாது என்பதற்கு, ‘தமிழன் சூத்திரன், இழிமகன்என்பதும், பார்ப்பான் மேல்மகன், பிராமணன்என்பதுமே கார ணம். இதை அடிகளார் ஒப்புக்கொள்ளாதிருக்கலாம்; ஒப்புக் கொள்ள மறுக்கலாம்.
இந்தப் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு நம்பிக்கையும் அடிப்படையா? அல்லது இனம் சாதி அடிப்படையா?’ என்று அடிகளார் கேட்டிருக் கிறார்கள். அடிகளார் அருள்கூர்ந்து முன்னின்று செய்யும் போராட்டத்திக்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு நம்பிக்கையும் உயைவர்களையே கலந்து கொள்ளும்படி பார்த்துக் கொள்கிறேன். இதில் அடிகளாருக்குச் சங்கடம் வேண்டியதில்லை.
தவிர, ‘தமிழன் என்று யாரைக் கருதுகிறீர்கள்?’ என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள். நான் தமிழன்என்று கருதுவது - பெரிதும் நம் நாட்டில் சூத்திரர்கள்என்று சொல்லப்படுகிறவர்களையேயாகும்”.
(தொகுதி 1, விடுதலை 7.11.1957,
பெரியார் சிந்தனைகள், 6-1, பக்கம் 3055 - 3057)
பெரியார் பிறப்பால் கன்னடராகப் பிறக்க நேர்ந்தி ருக்கலாம். அவர் ஒருநாளும் கன்னடர்க்காகச் சிந்தித்தவர் அல்லர். தமிழையும், தமிழரையும் சிதைக்க அரசியல் நடத்தியவர் அல்லர்.
பெரியார் நாத்தழும்பேறும் அளவு நாத்திகம் பேசினார். தமிழரின் இலக்கியங்களையெல்லாம் சாடித் தீர்த்தார். தமிழைக் காட்டுமிராண்டி மொழியென்று காய்ந்தார் என்ற கருத்தும் இப்போது முன்நிறுத்தப் படுகிறது.
பெரியார் தனது எழுத்திலும் பேச்சிலும் ஒரு கருத்தை மிகவும் முகாமையாய் முன்வைப்பார். தன் கருத்துகள் மட்டுமே முடிந்த முடிவானவை அல்ல. ஏற்பன ஏற்கலாம். தள்ளுவன தள்ளலாம் என்பார். தமிழ்ப்பாட்டனார் வள்ளுவரும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்றுதான் பாடிச் சென்றுள்ளார். எல்லா நிலையிலும் தமிழர்க்கு உற்ற அடிமைத்தளைகள் அறுபட வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோள். அந்த அடிப்படையிலே அவர் எல்லாத் தளங்களிலும் இயங்கினார்.
ஆதிக்கமற்ற பொதுமைச் சமுதாயத்தின் கூறுகள் தமிழனின் பண்பாட்டு அடையாளமாக இருந்துள்ளது என்பதைப் பெரியார் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.
"சிந்து தீரத்தைப் பற்றியும் அங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பூர்வ சின்னங்களைப் பற்றியும் பேசுவதில், ஆரியர்களுக்கு முன் தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும், இந்தியா கண்டம் பூராவும் தமிழர்கள் இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இன்றைக்கு 6000, 7000 வருடங்களுக்கு முந்தியது என்று சொல்லப்படுகிறது." (சித்திரபுத்திரன் என்ற பெயரில் குடிஅரசு கட்டுரை, 20.9.1947)
கலாசாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்ட வர்கள் தங்களது கலாசாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டில் தமிழனின் கலாசாரங்களை - பழக்கவழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாசாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. (விடுதலை கட்டுரை 30.1.1959)
நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்திற்கும் தன்மான உணர்ச்சிக்கும், தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்குகளாகவே (அனுமார்களா கவே) இருந்திருப்போம். (குடிஅரசு 6.3.1938)
ஒரு நண்பர் சொன்னார் இந்த நவராத்திரிப் பண்டி கையும் ஆடிப்பெருக்குப் பண்டிகையும் நம் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப் பதற்குப் பயன்பட்டு வந்திருக்கின்றனஎன்று! நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப்பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டுபோய்ப் போடப்படுவதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழையவைகளையும் குப்பையில் எறிந்துவிடுவதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.....
இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்து போய்விட்டன. இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதாரங்கள் ஒழிந்தே போய்விட்டன. (பெரியார் சிந்தனைகள் தொகுதி 5-2, பக்கம் 126)
ஆரியப் புராணங்களில் அநேகம் முத்தமிழ்க் கலை இலக்கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய் திருக்கும் கேட்டை ஒழிக்க மானத்தில் கவலையுள்ள நாம் எதைப் பலிகொடுத்தாவது இந்த நிலையை மாற்றி யாக வேண்டும்; அடியோடு ஒழித்தாக வேண்டும். (குடிஅரசு தலையங்கம், 29.1.1944)
மேற்காண் கூற்றுகளிலிருந்து தமிழர்களின் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய பெரியாரின் உணர்வுகளை உய்த்துணர முடிகிறது. அதேநேரத்தில் மானுட விடுதலைக்குத் தடையாய் இருந்த எந்தக் கருத்தியலையும் அவர் மறுத்தார்.
வீட்டுமொழியாகவும், வேலைக்காரி பேசும் மொழியாகவும் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று அவர் அவாவியது தமிழின்பால் கொண்ட வெறுப்பினால் அன்று. ஆங்கிலக் கல்வியின் வழியே பார்ப்பனர்கள் அனைவரும் வாழ்வின் உச்சத்தை எட்டுகிறார்களே! தமிழர்களும் அந்த நிலையை அடைய ஆங்கிலவழிக் கல்வியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே! என்கிற ஆற்றாமையால்தான். ஆனாலும் பெரியாரின் அக்கருத்து பிழைபட்ட கருத்தே ஆகும்.
1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போரின் மூலவராய் நின்ற பெரியார், 1965இல் தமிழகத்தில் தோன்றிய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரில் மக்கள் எழுச்சியைக் கொச்சையாக மதிப்பிட்டதும், அப்போருக்கு எதிராய் நின்றதும் வரலாற்று அவலமே ஆகும். நம் இன மானத் தந்தை இடறி விழுந்த இடங்களில் அதுவும் ஒன்று.
ஆனாலும் ஒடுக்கப்பட்ட, உழைப்புச் சாதித் தமிழர் களின் உரிமைப் போருக்குக் கிடைத்த ஒப்பற்ற கள மறவர் தந்தை பெரியாரே ஆவார். அவரின் நீண்ட நெடிய பொதுவாழ்வில் காணும் உள்ளங்கை அளவுள்ள பள்ளங்குழிகளைச் செப்பனிட்டுப் பண்படுத்திப் பயணத்தைத் தொடர வேண்டியது நம் முன்னுள்ள மாபெரும் பணியாகும்!
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டாற்று!
உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு!
இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்று!
தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற்றில்லாத மரம்போல - கோடரி கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம் போல் - தானாகவே விழுந்து விடும்!
தன் இனத்துக்குத் தொண்டாற்றுபவனுக்கு அடையாளம் என்னவென்றால் - அத்தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும் உடலையும் ஒப்புவித்துக் கொண்டவனாக இருக்க வேண்டும்!
இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியம்”.
- திருச்சியில் 27.8.1945இல் திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய உரை, குடிஅரசு 1.9.1945