செவ்வாய், 21 நவம்பர், 2017

கவிஞர் இனியன், திருச்சி - 13

நடுவண் அரசு உச்சிக்குடுமிகளின் நேர்மையற்ற நீட் தேர்வு!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
நீட்டென்னும் நேர்மை சிறிதுமற்ற தேர்வால்
சமூகநீதிக்கு சவக்குழி வெட்டினார்
நாட்டு நலம்பேணும் நம்தமிழ்த் தலைவர்கள்
எடுத்துரைத்தும் கேளாக் காதினராய்
நடுவண் அரசும் உச்சிக் குடுமிகளும்
நயவஞ்சக நிர்மலா பொன்னார்
கேடுசெய்தனர் அனிதா எனும் அருந்தவச்
செல்வியைக் கொன்றும் போட்டனர்!
நம்பவைத்துக் கழுத்தறுத்து நட்டாற்றில் விட்டது
நடுவத்தை யாளும் மோடியரசு
நம்தமிழ் நாட்டு மாணவ மணிகள்
எதிர்காலம் இருண்டு போனது
தமிழகமே திரண்டு போராடியும் தரங்கெட்ட
தறுதலைகள் கையாலாகாத் தனத்தால்
அமிழ்ந்தது சோகத்தில் அய்யகோ அரியலூர்
மாணவி அனிதாவின் மரணம்!
ஒருமனதாய் இருசட்ட மியற்றிப் பயனில்லை
உன்மத்தர்கள் பதுங்கிக் கொண்டார்
ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிடும்
மனுவெறி பிடித்த காவியாட்சி
ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டமே நீட்
கொல்லைப்புற வழியாய்ப் புகுத்தினர்
உச்சிக் குடுமிகள் ஒத்தூத இடஒதுக்
கீட்டை ஒழித்துக் கட்டியது!
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிய ஒதுக்கீடு
அய்ம்பதுகளில் கேள்விக்குள் ளாக
நீதிமன்றத் தடையுடைத்தார் பெரியார் அரசமைப்புச்
சட்டத்தை முதன்முறை திருத்தினர்
அறுபத் தொன்பது விழுக்காடு கண்ணை
உறுத்த அடம்பிடித்தார் கூடாதென
அறுபத் தொன்பது அட்டவணை ஒன்பதில்
தமிழர் தலைவர் சட்டத்தால்!
நீட்டால் கேட்டைச் செய்யும் டில்லி
நீசரை தூக்கிச் சுமக்கும்
எட்டப்பன் எடப்பாடி குடிலன் பன்னீர்
டில்லி அடிமைகளே விலகிடு
அடிமைச் சேவகம் புரியும் உமக்கு
ஆட்சி அதிகாரம் எதற்கு?
காட்டாட்சி நடத்தும், டில்லிக்குக் காவடி
எடுக்கும் பேடிகளே விலகிடு!
எந்தமிழ் நாட்டரசு இருபத்தி ரெண்டு
மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த
அந்நியர்க்குத் தாரை வார்க்கவா? அடங்காச்
சினத்தால் எச்சரிக்கை செய்கின்றோம்
அனிதாநீ ஆயிரங் காலத்துப் பயிருன்னை
பலிகொடுத்த பின்உயிரென்ன வெல்லமா?
கண்ணைவிற்றுச் சித்திரமா கயமை ஆட்சிக்கு
முடிவுகட்ட ஆர்த்தெழுந்தது தமிழகமே!
-
கவிஞர் இனியன்,
திருச்சி - 13

விடுதலை ஞாயிறுமலர் 28-10-2017-2

நாம் இந்து மதத்தை வெறுக்க வேண்டும்? ஏனெனில்...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
13) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
14) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
15) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
16) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
17) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
18) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
20) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
21) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
22) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது
44) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது
45) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
46) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
47) அதுதான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
48) அதுதான் என்னை ஒட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
49) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
50) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
51) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது
52) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
53) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
54) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
55) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
56) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது
57) அதுதான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.
58) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்கு. பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை
அடித்தால் போதும் என்றது.
59) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது
60) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது
61) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது
62) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது
63) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது
64) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது
65) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது
66) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது
67) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது
68) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது
69) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது
70) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது
71) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது
72) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது
73) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது
74) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது
75) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
76) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
77) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது
78) அதுதான் சாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது
79) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது
80) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது
81) அதுதான் சாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது
82) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது
83) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது
84) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது
85) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது
86) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது
87) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம், கருமாதி, திதி, தெவசம், கோயில்
திருவிழா, தேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது
88) அதுதான் சாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது
89) அதுதான் சாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது
90) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது
91) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது
92) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது
93) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது
94) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது
95) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது
96) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது
97) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது
98) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது
99) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது
இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. இவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளது. அந்த இந்து மதத்தை நாம் எதிர்க்க இப்படி எத்தனையோ
காரணங்கள் இருக்க நாம் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.
இப்படிக்கு:
மானமுள்ள சுயமரியாதைக்காரர்கள், திருவெறும்பூர்

விடுதலை ஞாயிறுமலர் 28-10-2017

விஸ்வகர்மா கண்டுபிடித்த கருவி என்ன?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம் நாட்டில் ஒரு காலத்தில் தெருக்கூத்துக்கள் நடக்கும். அந்த நாடகங்களில் ராஜா வருவார். வந்த உடன், “மந்திரி! நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? வருடம் ஒரு பொன்மாரி பொழிகிறதா?” என்று கேட்டு “அவரவர் குலத்தொழிலை அவரவர் ஒழுங்காகச் செய்கிறார்களா?” என்று கேட்பார். மந்திரியும் “அவரவர் குலத்தொழிலை ஒழுங்காகச் செய்கிறார்கள் மன்னா!” என்பார்.
மன்னராட்சிக் காலம் என்பது இப்படித் தான் இருந்தது. மன்னனுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது. அதனை ரிஷிகள், முனிவர்கள் என்று சொல்லக் கூடிய பார்ப்பனர்கள் பார்த்துக்கொள் வார்கள். அவர்கள் வகுத்துக் கொடுக் கக்கூடிய சட்ட திட்டத்தின்படிதான் மன் னர்கள் ஆள வேண்டும். மன்னன் அவன வன் குலத்தொழிலை அவனவன் ஒழுங் காகச் செய்யவில்லையென்றால் அவர் களுக்கு கடுமையான தண்டனை கொடுத் தான். தாழ்ந்த ஜாதியான் பணத்தாசையால் தனக்கு மேல் ஜாதியானுடைய தொழி லைச் செய்தால் அவனை ஊரை விட்டு விரட்ட வேண்டும் என்று மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 96ஆவது சுலோகம் சொல்கிறது.
இப்படி கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் எவனுக் காவது வேறு தொழிலைச் செய்ய வேண்டும் என்கிற துணிவு வருமா? துணி துவைப்பவன் துணிதான் துவைக்க வேண்டும். மண்பாண் டம் செய்பவன் மண்பாண்டம்தான் செய்ய வேண்டும். நகை செய்பவன் நகைதான் செய்ய வேண்டும். செருப்புத் தைப்பவன் செருப்புத்தான் தைக்க வேண்டும்.
இதன் காரணமாகத்தான் நமது நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக எந்த நவீனக் கருவிகளும் கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னுடைய அப்பன் எந்த உளியை வைத்து செதுக்கினானோ அதே உளியைத்தான் மகனும் பயன்படுத்தினான். அப்பன் எந்த கலப்பையைக் கொண்டு ஏர் உழுதானோ அதே ஏர்க் கருவியைக் கொண்டுதான் விவசாயி ஏர் உழுதான். இப்படி பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வந்ததினால்தான் இங்கே தொழில் புரட்சியும் வரவில்லை. புதிய தொழில் கருவிகளும் கண்டுபிடிக்கப் படவில்லை. நாம் கண்டு பிடித்தது ஏர்க் கலப்பையும் வண்டிச்சக்கரமும் உளியும் சுத்தியலும்தான். இன்றைக்கு இருக்கும் நவீனக் கருவிகள் எல்லாம் அய்ரோப் பியனும் ஆங்கிலேயனும் வெளிநாட்டுக் காரனும் கண்டு பிடித்த கருவிகள்தான். புதிய கருவிகள் கண்டுபிடிக்கத் தேவை எதுவும் ஏற்படவில்லை. தேவைகள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தாய் என்பார்கள். அப்பன் செய்த தொழிலையே மகனும் செய்கிறபோது புதிய தேவைகளே ஏற்படாது அல்லவா? அதனால்தான் நமது நாட்டில் புதிய கண்டுபிடிப்புக்கள் எதுவும் நடக்க வில்லை.
இப்படிப்பட்ட சமுதாயத்தை அப்படியே கட்டிக்காக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்சினுடைய கொள்கை. அதைத் தான் ஆர்எஸ்எஸ்சின் ஆலோசகரான குருமூர்த்தி போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். அந்த ஜாதித் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் இங்கே பிஎம்எஸ் காரர்கள் விஸ் வகர்மா ஜெயந்தி என்ற ஒன்றைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த விஸ்வகர்மா தொழில்களுக்கு குரு என்கிறார்கள். அவனால் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட்ட கருவிகள் எந்திரங்கள் என் னென்ன? யாராவது கூற முடியுமா? இப்படி காலாவதியாகிப்போன ஒரு தத்துவத்தின் கைச்சரக்குத்தான் விஸ்வகர்மா ஜெயந்தி என்பது. அது நம்முடைய நாட்டின் முன் னேற்றத்தையும் மக்களின் முன்னேற்றத் தையும் பின்னோக்கி இழுக்கக் கூடியது. எனவே ஆர்எஸ்எஸ், பிஎம்எஸ் ஆகிய வற்றின் மக்கள் விரோதக் கொள்கைகளை விரட்டி அடிப்போம். நவீனகாலத் தொழில் நுட்பத்தைக் கையாண்டு நாட்டையும் மக் களையும் முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்வோம்.
- திராவிடர் தொழிலாளர் கழகம், திருவெறும்பூர்

திங்கள், 6 நவம்பர், 2017

உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்; கோரக்பூர் மருத்துவமனையில் 58 குழந்தைகள் உயிரிழப்பு

சூத்திரன் யாராவது கடவுளை நோக்கி தவம் இருந்திருப்பான்
அதனால்தான் இந்தக் குழந்தைகள் இறக்கின்றன.
அவர்களைத் தேடிப்பிடித்து இராமர் வழியில் தலையை வெட்டினால் இறந்த குழந்தையெல்லாம் பிழைச்சுக்கும்

அதற்குத்தான் இராமராஜ்யம் அமைக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்

சனி, 4 நவம்பர், 2017

உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது?

என்னிடம் ஒரு நண்பர் ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அல்ல அது அறிவியல் ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அவர் பிறந்த நேரத்தில் இருந்த கிரகங்களே தீர்மானிக்கிறது என்று வாதிட்டார்
எவ்வளவோ அறிவியல் பூர்வமாக வாதிட்டும் அவர் அவரது கொள்கையில் உறுதியா இருந்தார்.
கடைசியா ஒரு கேள்வி கேட்டேன்
ஒருவர் பிறக்கும்போது கிரகங்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்துத்தான் ஒருவர் வாழ்க்கை அமைகிறது என்றால் ஜாதி அமைப்பு முறை எப்படி வந்தது?
என்னுடைய பாட்டனோடு பத்துப் பேர் பிறந்தார்கள்
பத்துப் பேரும் ஒரே தொழிலைத்தான் செய்தார்கள்
என்னுடைய தாத்தனோடு ஏழு பேர் பிறந்தார்கள்
ஏழு பேரும் என் பாட்டன்கள் செய்த தொழிலையே செய்தார்கள்.
என் அப்பனோடு அய்ந்து பேர் பிறந்தார்கள்
அந்த அய்ந்துபேரும் என் பாட்டனும் தாத்தனும் செய்த தொழில்களையே செய்தார்கள்
என் மாமன்மார்கள் நாலுபேர்
அந்த நாலு பேரும்கூட என் பாட்டனும் தாத்தனும் அப்பனும் சித்தப்பனும் பெரியப்பனும் செய்த தொழில்;களையே செய்தார்கள்
கிரகங்கள்தான் ஒருவரது வாழ்ககையை தீர்மானிக்கிறது என்றால்
எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு தொழில்கள்தானே இருந்திருக்க வேண்டும்?
அப்படி இல்லாமல் எல்லோருக்கும் குலத்தொழிலாக ஒரே தொழிலே அமைந்தது எப்படி?
இவர்கள் பிறக்கும்போது மட்டும் எல்லா கிரகங்களும் எல்லா நாளிலும் யாரோ உத்தரவு போட்டது மாதிரி ஒரே பொசிஷனில் வந்து ஒரே இடத்தில் நின்று கொண்டதா?
பார்ப்பனர்கள் மட்டும் பரம்பரை பரம்பரையாக மணியடிக்கும் தொழிலை செய்து வருகிறார்களே அவர்களுக்கும் பரம்பரைத் தொழில் மாறாமல் தொடர்ந்து வருவது ஏன்?
அவர்கள் பிறக்கும்போதும்எல்லா கிரகங்களும் எல்லா நாளிலும் யாரோ உத்தரவு போட்டது மாதிரி ஒரே பொசிஷனில் வந்து ஒரே இடத்தில் நின்று கொண்டதா?
என்று கேட்டேன்.
உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது?
நீங்க இப்படித்தான் குண்டக்கா மண்டக்கான்னு கேள்வி கேட்பீங்கன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணிட்டாரு
தனது கருத்து தவறு என்று ஒத்துக்கொள்ள மனமில்லை