செவ்வாய், 19 ஜூன், 2018

திராவிடர் தொழிலாளர் கழகம் 2018 நிர்வாகிகள்

சிறப்புத்தலைவர் : ம.ஆறுமுகம்

தலைவர் : செ.பா.செல்வம்  6088066, Artisan II,BPN/TP
துணைத்தலைவர்கள்

: சு.சுதர்சன் 2217260 Artisan II, BPN/Header Shop
க.சுப்பிரமணியன் 6132324 Artisan III, BPN/Pipe Shop

பொதுச்செயலாளர் :
ஆ.அசோக்குமார் 6032958 Artisan II, BPN/Common Shop

துணைச் செயலாளர்கள்
: சி.கிருஷ்ணகுமார் 2213974  Artisan II, BPN /TP
வீ.அசோக்ராசா  6223982 Artisan III, Bldg 108/ A bay

பொருளாளர் : மு.ஆண்டிராசு 6028861, Artisan II, BPN /TP

பிரியா விடைபெறுகிறேன்.





அன்புள்ள தோழர்களே!
திராவிடர் தொழிலாளர் கழகம் என்ற பெயரிலும்ää திராவிடர் கழகம் என்ற பெயரிலும்ää பகுத்தறிவாளர் கழகம் என்ற பெயரிலும் துண்டறிக்கைகள் மூலம் உங்களுடன் உறவாடிய ம.ஆறுமுகம் ஆகிய நான் பெருமைமிகு இப் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணியாற்றி 23-06-2018 முதல் உங்களிடமிருந்து பிரியா விடைபெறுகிறேன். என்மீது அன்புகொண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது கொள்கைகள்தான் இந்த மானிட சமுதாயத்தை உய்விக்கும் கொள்கைகள் என்பதால் அவர்கள் போட்டுத் தந்த பாதையில் என்னால் இயன்றவரை பயணித்திருக்கிறேன்.
சாதியும் மதமும்தான் நமது சமுதாயத்தை வீழ்த்திய நாசகாரக் கருவிகள் என்பதால் அதனை வீழ்த்த அவ்விரு தலைவர்களும் தந்த கொள்கை ஆயதத்தால் போராடி இருக்கிறேன்.
அந்த சாதியையும் மதத்தையும் கட்டியழும் நயவஞ்சகக் கூட்டம்  அதனை அப்படியே காப்பாற்றி பெரும்பான்மை மக்களை சூத்திரர்களாகää பஞ்சமர்களாக வைத்திருக்கவும் அவர்களை உயர்ஜாதிக் கூட்டம் என்றென்றும் சுரண்டிப் பிழைக்கவும் சில அமைப்புகள் முயன்ற நேரத்தில் அதனை எதிர்த்து முறியடித்திருக்கிறேன்.
இந்திய அரசி;ன் மதச்சார்பற்ற கொள்கைக்கு முரணாக ஆதிக்கக் கூட்டம்  முயன்ற நேரங்களில் அதனை எதிர்த்து அறிக்கைகள் கொடுத்திருக்கிறேன். மக்கள் மத்தியில் மண்டிக்கிடக்கும் மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி இருக்கிறேன்.
டுஊளு ஊழியர்களின் பணி நிரந்தரத்திற்காக இறுதிவரை போராடி வந்திருக்கிறேன். இன்னும் அந்தப் போராட்டம் முடிவுக்கு வரவில்லையே என்ற ஏக்கத்தோடு விடைபெறுகிறேன். இருந்தாலும் அந்த இலட்சியம் நிறைவேறும்வரை போராடுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுபோல் கேட்பதற்கு யாருமில்லா ஒப்பந்த ஊழியர்கள் அப்ரண்டிசுகள் ஆகியோரின் உரிமைக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன்.
வேறு எவரும் செய்யத் தயங்குகின்றää அஞ்சுகின்ற பணிகளை தயங்காமல் அஞ்சாமல் திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் செய்து வந்திருக்கிறேன். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துää வடநாட்டார் சுரண்டலை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறேன்.
ஒரு சிலருக்கு அது எரிச்சலைத் தந்திருந்தாலும் மிகப் பலர் நம்மிடம் உங்களுக்குப் பிறகு யார் இதனைச் செய்வார்? என்று வினா எழுப்புகின்றனர். அவர்களது அன்புக்கு நன்றி சொன்னாலும் தந்தை பெரியாருக்குப் பின்னால் இந்த இயக்கம் இருக்குமா? தொடர்ந்து இயங்குமா? என்று பலரும் அய்யப்பட்ட நேரத்தில் தந்தை பெரியாருடைய இயக்கம் தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்து ஆசிரியர் விரமணி அதனைத் தொடர்வதுபோல இங்கேயும் அந்த இயக்கம் தொடர்ந்து இயங்கும் என்பதிலே எந்த அய்யமும் இல்லை.
இந்த இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று விரும்புகின்ற நீங்கள்தான்  அதனை இயக்க வேண்டும். இது வாழையடி வாழை போன்ற இயக்கம். ஆலமரம் போன்ற இயக்கம். கொள்கை விழுதுகள் இம்மண்ணில் வேர்பிடித்து இருக்கின்றது. அதனை அனைவரும் ஆதரித்து பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுகிறேன்.  நன்றி! வணக்கம்!
இப்படிக்கு
என்றும் உங்கள் அன்புள்ள
  ம.அறுமுகம் (தி.க)

வெள்ளி, 15 ஜூன், 2018

BHEL HR சிறந்த மனிதவள மேலாண்மையா?



அரசியல் சட்டத்தை எழுதிய மேதை அம்பேத்கர் “இந்த சட்டம் நல்லவர் கையில் இருந்தால்தான் மக்களுக்குப் பயன்படும். அல்லாதவர் கைகளில் சிக்கினால் பாதிப்பு அதிகம்” என்றார். எல்லா மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்கிறது அந்தச்சட்டம். ஆனால் இன்றைக்கு அந்தச் சட்டத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் அதனைக் கேலிக்குரியதாக்குகிறார்கள்.

திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஒருவர் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு திருச்சியில் யார் யார் வீட்டில் Raid நடந்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த புத்திசாலி அதிகாரிகள் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா? Raid என்றால் Oxford Dictionary என்ன விளக்கம் சொல்கிறது? Lifco Dictionary  என்ன விளக்கம் சொல்கிறது? என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். இது அந்தச் சட்டத்தை கேலிக்குரியதாக்குகிறதா இல்லையா?

அதுபோல பெல் நிறுவனத்தில் Vincott  என்கிற ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் நபர்களுக்கு நாள் சம்பளம் எவ்வளவு? மாதச் சம்பளம் எவ்வளவு என்று கேள்வி கேட்டால் As per the minimum wage act என்று பதில் சொல்கிறது நிர்வாகம் இரவுப்படி வழங்கப்படுகிறதா? எவ்வளவு என்று கேட்டால் As per the minimum wage act என்று இப்படி எல்லாக் கேள்விக்குமே இதே பதில்தான்.

Vincott என்கிற ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் அனைவரும் டிப்ளமாää மற்றும் பி.ஈ படித்தவர்கள். தரக்கட்டுப்பாட்டுத் துறையில் பணிபுரிகிறார்கள். இந்த ஒப்பந்ததாரருக்கு முன்னாள் இருந்த ஒப்பந்ததாரர் மாதம் 13000.00 ரூபாய் ஊதியம் கொடுத்தார். ஆனால் இந்த Vicott என்கிற ஒப்பந்ததாரர் 6000.00 ரூபாய் மட்டுமே தருகிறார். இது நமது நிர்வாகம் சொல்வதுபோல சட்டப்படியான குறைந்தபட்சக் கூலி கிடையாது. ஒரு ஊழியருக்கு 7000.00 ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுகிறது. இந்த ஒப்பந்ததாரரிடம் 200 பேருக்கு மேல் பணிபுரிகிறார்கள். ஒரு நபருக்கு மாதம் ஏழாயிரம் சுரண்டப்படுகிறதென்றால் மொத்தம் எவ்வளவு சுரண்டப்படும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள்.

இது நிர்வாகத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே நிர்வாகம் இந்த பதிலைத் தந்திருக்கிறது. ஏன் நிர்வாகம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்? நிர்வாகத்துக்குத் தெரிந்தே இந்த உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது என்பதுதானே அதன் பொருள்? அந்த ஒப்பந்ததாரருக்கு என்ன வேலை? வேலைக்கு இண்டர்வியு வைப்பது நமது அதிகாரிகள். அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நாம். அவர்களிடம் வேலை வாங்குவது நாம். இடையில் எதற்கு அந்த ஒப்பந்ததாரர் தரகராக இருக்க வேண்டும்? நம் நிர்வாகமே நேரடியாக அவர்களுக்கு வேலை வழங்கி முறைப்படி கிடைக்க வேண்டிய ஊதியத்தை முழுமையாக வழங்கலாமே?

அதில் பணியாற்றக் கூடிய அனைத்து ஊழியர்களும் மிக மிக இளைஞர்கள். திருமண வயதில் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டிய வயசு. பெயர் பெற்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமை என்று கருதி வேலைக்கு வந்தால் அவர்களது வறுமைää வேலை இல்லாத்திண்டாட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் உழைப்பைச் சுரண்டுவது எந்த விதத்தில் நியாயம்?

அவர்களுக்கு ஊதியம் வழங்கும்போது எந்த விதமான விவரங்களும் பூர்த்தி செய்யாமல் வெற்று ரெஜிஸ்டரில் கையொப்பம் வாங்கிக்கொண்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதையெல்லாம் தெரிந்துகொண்டு நிர்வாகம் அந்த ஒப்பந்ததாரர்களை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்?

அத்துடன் இன்னொரு காண்ட்ராக்டர் 13000 ஊதியம் தருவதாக வெளியில் சொல்லிக்கொண்டு ஆவணங்களையும் உருவாக்கி விட்டு நவீன முறையில் சுரண்டுகிறார். ஊழியர்களது சம்பளத்தை வங்கியில் செலுத்திவிட்டு அவர்களிடம் ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியைத்தான் அந்த ஊழியர்களுக்கு வழங்குகிறார்கள்.

இப்படிப்பட்ட முறைகேடான ஒப்பந்ததாரர்களை வளர்த்து விடுவதுதான் சிறந்த மனிதவள மேலாண்மையா? எனவேää நிர்வாகம் உடனடியாக முறைகேடாக நடக்கும் ஒப்பந்ததாரர்களை வெளியேற்றிவிட்டு உழைப்பவர்களுக்கு சட்டப்படியான முழுமையான ஊதியம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


வியாழன், 7 ஜூன், 2018

பாரதீய மஸ்தூர் சங்கம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

பாரதீய மஸ்தூர் சங்கத்தினுடைய துவக்கமே வெகு மக்களுக்கு எதிரானது. ஏனெனில் அவர்களே பெருமையுடன் கூறுகிறபடி அவர்களது சங்கம் தேசபக்த திலகம் பாலகங்காதர திலகருடைய பிறந்த நாளன்று துவக்கப்பட்டதாகும்.
அந்தத் திலகர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு எதிரானவர்.
இந்த நாட்டுக்கு விடுதலைக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் திலகர் அவர்கள்ää விடுதலைக்குப்பின் இந்த நாட்டுக்கு அரசியல் சட்டமாக மனுதர்மம்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். பிராமணர்கள் சொற்படிதான் அரசுகள் இயங்கவேண்டும் என்பது மனுதர்மம். சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதும் மனுதர்மம். அவரவர் குலத்தொழிலை அவரவர் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதும் மனுதர்மம்.
அதன்படி ~எண்ணெய்க் கடைக்காரனும்ää வெற்றிலைபாக்குக் கடைக்காரனும்ää வண்ணார்களும் மற்றவர்களும் சட்டமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது ஏன்? என்று தனக்குப் புரியவில்லை| என்றார் திலகர். அதே கருத்தைத்தான் வல்லபாய் பட்டேலும் கொண்டிருந்தார்.    (ஆதாரம்: காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற புத்தகத்தில் அண்ணல் அம்பேத்கர்|
இந்தத் திலகரையும் வல்லபாய் பட்டேலையும் பிஎம்எஸ் காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இந்தத் திலகரும் பட்டேலும் கீழ்ஜாதி மக்கள் ஆரம்பக் கல்வியோடு நின்றுவிட வேண்டும். உயர் கல்வி கற்க ஆசைப்படக் கூடாது என்றவர்கள்.
அத்துடன் விவேகானந்தரை ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடி வருபவர்கள் பிஎம்எஸ் காரர்கள். அந்த விவேகானந்தர் எழுதிய பாரதமே உயிர்த்தெழு என்ற நூலினை பெல் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியது. அந்த நூலில் ஜாதி நல்லது. அது காப்பாற்றப்பட வேண்டும். அதனை  அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார். அது மாத்திரமல்லாமல் குயவன் குயவனாகவும் மீனவன் மீனவனாகவும் விவசாயி விவசாயி ஆகவும்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அத்துடன் ஒரு செருப்புத் தைப்பவன் நாட்டை ஆள முடியுமா? என்று கேட்டு உயர்ஜாதிப் பார்ப்பான்தான் நாட்டை ஆள வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிறார்.
மேலும் பெண்ணுரிமைக்கு எதிராக பல்வேறு  கருத்துக்களை முன் வைக்கிறார். விதவைகளுக்கு மறுமணம் கூடாது என்பதையும் மறுமணம் என்கிற கருத்தினையும் மிக மிக கொச்சைப் படுத்துகிறார்.
டீதுP யும் டீஆளு ம் சுளுளு எங்கேயும் மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டதால் வெளிப்படையாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேச மாட்டார்களே தவிர அவர்களுடைய வார்த்தைகளில் மறைமுகமாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். உதாரணத்திற்கு
“நமது சமுதாயத்தில் அர்ச்சகர்கள்ää ஆசிரியர்கள்ää மற்றும் வைத்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களைக் காப்பாற்றியது. அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷிää முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்குப் பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாகக் காத்து வருகிறது. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்”                                                                     (டீஆளு சங்க மடல் 1998 ஜன. பிப்)
இப்படிச் சொல்கிறது பிஎம்எஸ்ஸின் சங்க மடல். இதில் உள்ள வார்த்தை ஜாலத்தைக் கவனித்தால் இதில் உள்ள விசமத்தனமும் ஆபத்தும் நன்றாகப் புரியும். இதுதான் மனுதர்மம். அர்ச்சகர்கள் ஆசிரியர்கள்ää வைத்தியர்கள் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றினார்களாம். என்ன தொண்டு? அவர்களால் யாருக்கு என்ன நன்மை? அர்ச்சகர்கள் யார்? ஆசிரியர்கள் யார்?இவர்கள் அனைவரும் பிராமணர்கள்தானே? அர்ச்சகர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? ஆசிரியர்கள் யாருக்குக் கல்வி புகட்டினார்கள்? பிராமணர்கள் வைத்தியத்தொழில் செய்தார்களா? அவர்கள் எல்லா சாதிக்காரர்களையும் தொட்டு வைத்தியம் செய்தார்களா? அடுத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுhயத்திற்காகத் தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களை; காப்பாற்றியது என்கிறது.
அர்ச்சகர்கள் ஆசிரியர்கள் வைத்தியர்கள் என்பவருக்கு மாத்திரமல்ல தொழிலாளர்களுக்கே கூலி என்பது கிடையாது. தொழிலாளர் என்பவர்களை சூத்திரன் என்றது மனுதர்மம். அந்த சூத்திரர்கள் ஏழு வகைப்படுவார்கள். அதில் ஒன்று சூத்திரன் பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளை என்று இழிவுபடுத்துகிறது.
சூத்திரனிடத்தில் ஒரு பிராமணன் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்கிறது மனுதர்மம். அந்த சூத்திரர்கள் மேல் வருணத்தாருக்கு தொண்டு செய்வதற்காகவே படைக்கப்பட்டார்கள் என்றும் மனு கூறுகிறது. அவர்களது உழைப்பை உறிஞ்சி உல்லாச வாழ்வு வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஏதோ சமுதாயத்திற்காக ஊதியம் எதுவும் வாங்காமலேயே இலவசமாக பணியாற்றியதுபோல பிஎம்எஸ் கதை விடுகிறது.
கல்வி சூத்திரர்களுக்குக் கிடைத்ததா? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றுதானே இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் இயற்றிய சட்டங்கள் சொன்னது? இவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தார்கள் என்பதுதானே கடந்த கால வரலாறு? அர்ச்சகர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு  ப10ஜை புனஸ்காரங்கள்ää சடங்குகள்  செய்யாமல் இருந்தால் யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்குமா? எந்த நட்டமும் ஏற்பட்டிருக்காது. மாறாக நன்மைகள்தான் ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்கள் என்று சவடால் அடிக்கிறது பிஎம்எஸ்.
அடுத்து அரசர்கூட சட்டத்தை இயற்ற முடியாதாம். அது ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டதாம். சுவாமி சிவானந்தா என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:
“இந்து ரிஷிகளும் முனிவர்களும் சமூகத்திற்குரிய லட்சியம் நிறைந்த திட்டத்தைத் தீட்டினர். தனியாரின் வாழ்வுக்கான லட்சியம் வாய்ந்த வழியையும் வகுத்துத் தந்தனர். அம்முறைதான் வர்ணாஸ்ரமதர்மம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வர்ணாஸ்ரமதர்மம் என்னும் அடிமனையால் இந்துமதம் என்னும் சொர்ண மாளிகை கட்டப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தலானது தன் வளர்ச்சிக்கும்ää மேம்பாட்டிற்கும் உதவி புரிகிறது. இது மிகமிக அவசியமானது. அதன் விதிகள் மீறப்படுமானால் நாடு இருந்த இடம் காடாக மாறிவிடும். பொதுவான நிலையான தர்மத்தின் வளர்ச்சியை அல்லது மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துதலே வர்ணாஸ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கமாகும்.
  (இந்து தர்மம் என்ற நூலில் பக்கம் 89ää சிவானந்தா ஆஸ்ரமம் வெளியீடுää நாமக்கல்)
~சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்@ பிராமணன் கொலை செய்தால் அவனுடைய தலையை மொட்டையடித்தால் போதும்| (மனுதர்மம் - அத்தியாயம் 8)
என்ற சாஸ்திர விதிகள் எல்லாம் இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் உண்டாக்கியதுதானே! இதனால் முழுப் பலனையும் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தானே? அதே அடிப்படையில் நமது சமுதாயத்தை அமைப்பதுதான் நமது இலட்சியம் என்று பிஎம்எஸ் சொல்கிறது என்றால் அவர்கள் யாருக்காக சங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற அந்த சமுதாய அமைப்பு இன்று மாறிப்போய் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றியுள்ளார்கள். பிஎம்எஸ்ஸின் இந்தக் கூற்றுப்படி அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
இந்த மனுதர்மம் தொழிலாளியிடத்தில் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொல்லுவதன் அடிப்படையில்தான் பெல் நிர்வாகம்கூட பொறியாளர்களையும் மேற்பார்வையாளர்களையும் நிரந்தர ஊழியர்களாக எடுக்கிறது. ஆனால் உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில்நுட்பப் பணியாளர்களை மட்டும் முதலில் தற்காலிக ஊழியராக எடுத்து பிறகு அவர்களை நிரந்தரம் செய்கிறது. அதற்காகத்தான் நிர்வாகம் விவேகாநந்தர் எழுதிய பாரதமே உயிர்த்தெழு என்ற நூலை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியது. அதனை பிஎம்எஸ் வரவேற்றது.
உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால் பிஎம்எஸ் சங்கம் மட்டும் மே தினம் தொழிலாளர் தினம் அல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
மே தினத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் வைக்கும் முழக்கம் “உலகத் தொழிலாளர்களேää ஒன்றுபடுங்கள்” என்பதாகும். தொழிலாளர்கள் ஒன்று பட்டால்தான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும். ஆதிக்க சக்திகளின் எதேச்சாதிகாரத்தை முறியடித்து பாட்டாளி சமுதாயத்தை அமைக்க முடியும் என்பது இதன் பொருள். ஆனால் பிஎம்எஸ் என்ன சொல்கிறது தெரியுமா?
“தொழிலாளர்களேää உலகை ஒன்று படுத்துங்கள்” என்று சொல்கிறது. (ஆதாரம் : பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001)
இதனுடைய நோக்கம் என்ன? தொழிலாளர்கள் ஒன்று பட்டுவிடக் கூடாது. அப்படி ஒன்றுபட்டு விட்டால் முதலாளிகளுக்கும் ஆதிக்கசக்திகளுக்கும் அது மிகப் பெரிய தொல்லையாகிவிடும். அதனால் தொழிலாளர்களை ஒன்று சேர விடாமல் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தால்தான் தங்கள் சுரண்டலை தாராளமாகச் செய்ய முடியும் என்பதுதான் அதன் நோக்கம்.
பிஎம்எஸ் சும் சங் பரிவாரும் அமைக்க விரும்பும் சமுதாயம் இந்து சமுதாயம் ஆகும். அந்த இந்து சமுதாயம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு தொழிலைச் செய்பவனும் ஒவ்வொரு ஜாதி;. அந்தத் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உதாரணத்திற்கு செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர் ஜாதிக்காரருக்;குத்தான் செருப்புத் தைத்துத் தர வேண்டுமே தவிர தனது காலிலே அணிந்து கொண்டு வீதிகளிலே நடமாடக் கூடாது. வெயிலில் வெந்து சாக வேண்டும். கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அவன் நடக்க அவதிப்பட வேண்டும். அதுபோல ஒரு விவசாயி நன்றாக மாட்டை வளர்த்து பாலையும்ää நெய்யையும்ää தயிரையும் உயர் ஜாதிப் பார்ப்பனருக்குக் கொடுத்து விட்டு தான் அய்ந்துக்கும் பத்துக்கும் மற்றவர் கையை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.
ஒரு தொழிலாளியும் இன்னொரு தொழிலாளியும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது. கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக் கூடாது என்று தொழிலாளர் சமுதாயத்தைப் பிரித்து வைத்தது இந்து மதம். உதாரணமாக தீண்டத்தகாவர்களே ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ண மாட்டார். பெண் கொடுக்க மாட்டார். பெண் எடுக்க மாட்டார். ஒரு சலவைத் தொழிலாளியும் நாவிதரும் ஒன்று சேரக்கூடாது. ஒரு தச்சரும் குயவரும் ஒன்று சேரக்கூடாது. இப்படி எல்லா சாதியினரையும் பிரித்து வைத்து அவர்கள் உழைப்பையெல்லாம் சுரண்டி உயர்ஜாதியினர் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த உல்லாச வாழ்வுக்கு கேடு வந்துவிடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்று சேரக் கூடாது என்று பிஎம்எஸ் சொல்கிறது. 
நாங்கள் ஏன் கீழ் ஜாதியாக இருக்க வேண்டும்? என்று கேட்டால் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவம்ää உங்கள் தலையெழுத்துää விதி என்றெல்லாம் காரணம் காட்டுவர். நீங்கள் மட்டும் எந்த உழைப்புமின்றி எங்கள் உழைப்பிலே உல்லாச வாழ்வு வாழ்கிறீர்களே! என்றால் அது எங்கள் முன்னோர் செய்த புண்ணியம் என்பார்கள்.
தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். பாவம்ää புண்ணியம்ää தலைவிதிää என்ற இந்த ஏமாற்று வேலை எடுபடாது. தங்கள் உல்லாச வாழ்வு ஒரு நொடியில் பறிபோய்விடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்றுபடக் கூடாது என்கிற தத்துவத்தை ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது. அது உயர் ஜாதியினருக்கான அமைப்பு. தொழிலாளர் மத்தியில் அந்த சிந்தனையை அடிமை மனப்பான்மையை வளர்க்கத்தான் பிஎம்எஸ்ஸை ஆர்எஸ்எஸ் துவக்கியது. அதனால்தான் ஆர்எஸ்எஸ்ஸால் இயக்கப்படும் பிஎம்எஸ் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்தை முன்வைக்கும் மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
மே தினம் தொழிலாளர் தினம் அல்ல என்பவர்கள் விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறார்கள். அந்த விஸ்வகர்மா தினம் எது என்றால் செப்டம்பர் 17 என்கிறார்கள். இந்து மதத்தில் எந்த ஒரு கடவுளர் பிறப்பும் குறிப்பிட்ட நாளில் வராது. திதி நட்சத்திரம் ஆகியவற்றை வைத்துத்தான் அந்தப் பண்டிகை வரும். கிருஷ்ண ஜெயந்திää ராமநவமிää கந்தர் சஷ்டி என்பதும் தீபாவளிää ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகைகளும் அப்படித்தான். ஆனால் இந்த விஸ்வகர்மா மட்டும் செப்டம்பர் 17 அன்று பிறந்தான் என்பது அவர்களது சூது மனதைக் காட்டுகிறது.
அந்த செப்டம்பர் 17தான் பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் வாயிருந்தும் ஊமையாய் கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கிடந்த மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டி சுயமரியாதை உணர்வூட்டி மனிதராய் மாற்றிய மகத்தான மனிதர் தந்தை பெரியார் பிறந்த நாளாகும். அந்த நாளுக்குரிய சிறப்பைக் குலைக்கவே இந்த செப்டம்பர் 17 அய்த் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் அதனை அறிவுப்பூர்வமாக மறுக்க வக்கற்று நாம் ஏதோ இந்த அய்ந்தொழிலாளர் எனப்படும் விஸ்வகர்மாத் தொழிலாளர்களுக்கு எதிரானவர் என்பதுபோல அவர்களை நமக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள்.
விஸ்வகர்மாவைக் கொண்டாடுவது அந்த கைவினைத் தொழிலாளர்களைச் சிறப்பிக்க அல்ல. மாறாக அவர்களையும் சூத்திரர் என்று சொல்லி அவர்கள் அணியும் பூணூலுக்கும் பார்ப்பனர் அணியும் பூணூலுக்கும் வேறுபாடு உள்ளது. பார்ப்பனர் அணியும் பூணூல்தான் உயர்ந்தது பார்ப்பனர்தான் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை நிலைநாட்டத்தான் என்பதால்தான் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி என்கிற நயவஞ்சகத்தை எதிர்க்கிறோம். அதற்கு உதராணம் என்னவென்றால் இத்தமிழ் மண்ணில் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி தான் பதவிக்கு வந்த உடன் இந்த அய்ந்தொழிலாளர்களான விஸ்வகர்மாத் தொழிலாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக்கூடாதுää ஆசாரி என்றுதான் போடவேண்டும் என்று உத்தரவிட்டவர். அது ஏனென்றால் ராஜாஜியும் ஆச்சாரி என்று போடுகின்றார். இந்த விஸ்வகர்மாத் தொழிலாளியும் ஆச்சாரி என்று போடுகின்றார் என்றால் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும் என்பதால் இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக் கூடாது என்கிறார்.
அத்துடன் பாரதீயர்களுக்கு லட்சியம் மோட்சம் அடைவதுதான். ஆனால் பிற நாட்டினருக்கோ அதிக சொத்து சேர்ப்பதுதான். நமக்கு புண்ணிய பாபங்களுக்கு வேறுபாடு தெரியும். பிற நாட்டவருக்கு பாவ தத்துவம் மட்டுமே தெரியும். புண்ணிய தத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். நமது கலாச்சாரத்தை நாம் மதித்துப் புகழ வேண்டும் என்று ஒரே சிந்தனை என்ற தலைப்பில் ஜெயதேவ்ஜி என்பவர் ஆற்றிய உரையை பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001 கூறுகிறது.
அந்த பாவ புண்ணிய தத்துவம்தான் நமது மக்களை ஏழைகளாகவும் தொழிலாளிகளாகவும் கீழ்ஜாதியாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. பாடுபடாத சோம்பேறி பணக்காரனாகவும் உயர்ஜாதியாகவும் முதலாளியாகவும் இருக்க பாடுபடும் நீ ஏன் ஏழையாக இருக்கிறாய் என்று கேட்டால் மக்களிடமிருந்து வரும் பதில் எல்லாம் அவன் செய்த புண்ணியம் நாங்கள் செய்த பாவம் என்கின்ற பதில் வரும். இந்த பாவ புண்ணிய தத்துவம் என்பது உழைக்கும் மக்களையே தங்களது இழிநிலைக்குக் காரணம் தங்கள்தான் தங்களை சுரண்டிப்பிழைக்கிற  உயர்ஜாதியினரோ பணக்காரர்களோ முதலாளிகளோ அல்ல என்கின்ற ஒரு சிந்தனையை உருவாக்கி சுரண்டல்வாதிகளுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கி வைத்திருக்கிறது.
அந்த பாவம் - புண்ணியம் என்கிற சிந்தனையைப் பாதுகாத்து காலா காலத்துக்கும் தொழிலாளர்களை ஏழைகளாகவும் கீழ்ஜாதியாகவும் வைத்திருந்து சுரண்டல்வாதிகளைப் பாதுகாப்பதுதான் பிஎம்எஸ் சின் கொள்கை என்பதால்தான் அதனை நாம் எதிர்க்கிறோம்.
அதுபோல ஏழைகள் கீழ்ஜாதியினர் உயர்ஜாதியினர்களுக்கு குறிப்பாக பார்ப்பனர்களுக்கு சேவை செய்வதன் மூலமாகத்தான் அடுத்த பிறவியில் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும் என்கிறது அவர்கள் கூறுகின்ற அந்த மதம். அதுதான் இந்து மதம். அந்த இந்துமதம்தான் தொழிலாளர்களுக்கும் அதாவது சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடையாது. அவர்கள் சொர்க்கம் அடைய வேண்டும் என்றால் இந்தப்பிறவியில் பிராமணர்களுக்கு தொண்டூழியம் செய்வதன் மூலம் அடுத்த பிறவியில்  பிராமணராகப் பிறப்பார்கள். அதன்பிறகே அவர்கள் மோட்சத்தை அதாவது சொர்க்கத்தை அடைவார்கள் என்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்த ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் மறுபிறப்பு ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். அவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன் என்கிறார்.
அண்ணல் அம்பேத்கர் இந்த ஆத்மாபற்றியும் சொர்க்கம் நரகம் பற்றியும்  என்ன கூறுகிறார் என்றால் ~இறந்தபிறகு ஆத்மாவுக்கு என்ன ஆகும்? என்ன ஆகாது? என்று வியாக்கியானம் செய்யும் மதம் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். அவர்களும் சாவகாசமாக உட்கார்ந்து அந்த மதத்தைப்பற்றி நினைத்து நினைத்து தங்கள் பொழுதுகளைப் போக்கிக் கொள்ளலாம். வாழும்போது அனைத்துவிதமான உல்லாசங்களிலும் ஊறித் திளைத்தவர்களுக்கு செத்த பிறகும் அதே உல்லாசத்தோடு வாழ மேலே ஒரு லோகம் காத்துக் கிடக்கிறது என்று ஆசை காட்டும் மதம்தானே  ஒரு மதமாகத் தெரியும்? ஆனால் அந்த மதத்தில் இருப்பதனாலேயே மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டவர்களும் உணவு உடை மறுக்கப்பட்டவர்களும் மனிதர்களாகக் கூட நடத்தப்படாதவர்களும் உலகியல் நோக்கில் மதத்தை அணுகாமல் கண்களை மூடி வானம் பாரத்து வணங்குவார்கள் என்று எதிர் பார்;க்க முடியுமா? இந்தப் பணக்கார சோம்பேறிகளின் வேதாந்தங்களினால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது| என்று கேட்பதன் மூலம் இந்த மோட்சம் நரகம் பாவம் புண்ணியம் என்ற தத்துவத்தை சோம்பேறிகளின் வேதாந்தம் என்கிறார். அப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக உழைக்கும் மக்களைத் தயார் படுத்துவதே பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ்சின் கொள்கை என்பதால்தான் நாம் பிஎம்எஸ் சையும் ஆர்எஸ்எஸ் சையும் எதிர்க்கிறோம்.
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனருக்கு அடிமையாக்கி பார்ப்பனர்களே நாட்டை ஆள வேண்டும். அவர்களுக்குக் கீழே தொழிலாளர்கள் உழைத்துப் போட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிஎம்எஸ் சும் ஆர்எஸ்எஸ் சும் செயல்படுகிறது என்பதனாலேயே அதனை எதிர்க்க வேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அதில் இருப்பது அவமானம் மட்டுமல்ல அடிமைத்தனம் என்பதாலும் அதனை எதிர்க்கிறோம்.
அத்துடன் இவர்கள் சங்கம் துவக்கிய காலத்தில் தங்களுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் தொடர்பே இல்லை என்று சத்தியம் செய்தார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மை மக்களை ஏமாற்றி சங்க அங்கீகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அதில் செர்ந்த பிறகு தொழிலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக மூளைச்சலவை செய்து ஆர்எஸ்எஸ் சின் பக்கம் ஈர்த்து தங்களது மதவெறிக்கு அவர்களைப் பலிகடாவாக்குவதற்குப் பயன்படுத்துவார்கள்.
மேலும் இதுவரை பிஎம்எஸ் சங்கம் அரசியல் கட்சியான பிஜேபி யோடு உறவே இல்லாததுபோல நடிப்பார்கள். அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதாகக் கூட நாடகம் ஆடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்து விட்டால் பிஜேபிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பார்கள்.
பிஜேபி பெரும்பாலும் தேர்தலில் போட்டி இட மாட்டார்கள். ஆனால் திருச்சியிலும் திருவெறும்பூரிலும் ரங்கராஜன் குமாரமங்கலம்ää சுகுமாறன் நம்பியார்ää லலிதா குமாரமங்கலம் போன்றோர் போட்டி இட்ட போது அவர்களுக்காக வரிந்து கட்டி தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.
இப்படி எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடுவதே அவர்களது செயல்பாடாக இருக்கிறது என்பதனால்தான் பிஎம்எஸ்ஸை எதிர்க்கிறோமே தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. மற்ற சங்கங்களிடமும் குறை இல்லாமல் இல்லை. அவர்களைக் குறை கூறாமல் பிஎம்எஸ் சை மட்டும் குறை சொல்வது ஏன் என்று கேட்டால் மற்றவர்கள் தாங்கள் யார்ää தங்களது கொள்கை என்ன? எந்த அரசியல் கட்சியினுடைய சங்கம் என்பதை வெளிப்படையாக அறிவித்து செயல்படுபவர்கள்.
ஆனால் பிஎம்எஸ் எதையுமே வெளிப்படுத்தாமல் ரகசியமாக இயங்கக் கூடியவர்கள்.
மற்ற சங்கங்களில் குறை இருக்கிறது என்றால் அது பாலில் தண்ணீர் கலந்ததுபோல. அதனை அருந்தினால் சத்துக்கள் குறையலாமே தவிர உயிருக்கு ஆபத்தில்லை.
ஆனால் பிஎம்எஸ் மட்டும் விசம் கலந்த பால் போன்றது. அதனை அருந்தினால் உயிர் போகும். அந்த விசம்தான் ஆர்எஸ்எஸ் என்பது. அந்த ஆர்எஸ்எஸ் நச்சரவம் உழைக்கும் மக்களுக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட பிpற்படுத்தப்பட்ட மக்களை பார்ப்பனர்களுக்கு அடிமையாக்குவது. அதனால்தான் அதனை எதிர்க்கிறோம்.
எனவே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் அதனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டு;க்கொள்கிறோம்.


பாரதீய மஸ்தூர் சங்கம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

பாரதீய மஸ்தூர் சங்கம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

பாரதீய மஸ்தூர் சங்கத்தினுடைய துவக்கமே வெகு மக்களுக்கு எதிரானது. ஏனெனில் அவர்களே பெருமையுடன் கூறுகிறபடி அவர்களது சங்கம் தேசபக்த திலகம் பாலகங்காதர திலகருடைய பிறந்த நாளன்று துவக்கப்பட்டதாகும்.

அந்தத் திலகர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு எதிரானவர்.
இந்த நாட்டுக்கு விடுதலைக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் திலகர் அவர்கள்äவிடுதலைக்குப்பின் இந்த நாட்டுக்கு அரசியல் சட்டமாக மனுதர்மம்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். பிராமணர்கள் சொற்படிதான் அரசுகள் இயங்கவேண்டும் என்பது மனுதர்மம். சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதும் மனுதர்மம். அவரவர் குலத்தொழிலை அவரவர் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதும் மனுதர்மம்.
அதன்படி ~எண்ணெய்க் கடைக்காரனும், வெற்றிலைபாக்குக் கடைக்காரனும், வண்ணார்களும் மற்றவர்களும் சட்டமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது ஏன்? என்று தனக்குப் புரியவில்லை| என்றார் திலகர். அதே கருத்தைத்தான் வல்லபாய் பட்டேலும் கொண்டிருந்தார்.    (ஆதாரம்: காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற புத்தகத்தில் அண்ணல் அம்பேத்கர்|

இந்தத் திலகரையும் வல்லபாய் பட்டேலையும் பிஎம்எஸ் காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இந்தத் திலகரும் பட்டேலும் கீழ்ஜாதி மக்கள் ஆரம்பக் கல்வியோடு நின்றுவிட வேண்டும். உயர் கல்வி கற்க ஆசைப்படக் கூடாது என்றவர்கள்.

அத்துடன் விவேகானந்தரை ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடி வருபவர்கள் பிஎம்எஸ் காரர்கள். அந்த விவேகானந்தர் எழுதிய பாரதமே உயிர்த்தெழு என்ற நூலினை பெல் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியது. அந்த நூலில் ஜாதி நல்லது. அது காப்பாற்றப்பட வேண்டும். அதனை  அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார். அது மாத்திரமல்லாமல் குயவன் குயவனாகவும் மீனவன் மீனவனாகவும் விவசாயி விவசாயி ஆகவும்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அத்துடன் ஒரு செருப்புத் தைப்பவன் நாட்டை ஆள முடியுமா? என்று கேட்டு உயர்ஜாதிப் பார்ப்பான்தான் நாட்டை ஆள வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிறார்.

மேலும் பெண்ணுரிமைக்கு எதிராக பல்வேறு  கருத்துக்களை முன் வைக்கிறார். விதவைகளுக்கு மறுமணம் கூடாது என்பதையும் மறுமணம் என்கிற கருத்தினையும் மிக மிக கொச்சைப் படுத்துகிறார்.
BJP யும் BMS ம் RSS எங்கேயும் மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா?

 தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டதால் வெளிப்படையாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேச மாட்டார்களே தவிர அவர்களுடைய வார்த்தைகளில் மறைமுகமாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு
“நமது சமுதாயத்தில் அர்ச்சகர்கள், ஆசிரியர்கள், மற்றும் வைத்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களைக் காப்பாற்றியது. அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷி, முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்குப் பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாகக் காத்து வருகிறது. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்”                                                                     (BMSசங்க மடல் 1998 ஜன. பிப்)
இப்படிச் சொல்கிறது பிஎம்எஸ்ஸின் சங்க மடல்.

இதில் உள்ள வார்த்தை ஜாலத்தைக் கவனித்தால் இதில் உள்ள விசமத்தனமும் ஆபத்தும் நன்றாகப் புரியும். இதுதான் மனுதர்மம். அர்ச்சகர்கள் ஆசிரியர்கள், வைத்தியர்கள் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றினார்களாம். என்ன தொண்டு? அவர்களால் யாருக்கு என்ன நன்மை? அர்ச்சகர்கள் யார்? ஆசிரியர்கள் யார்?இவர்கள் அனைவரும் பிராமணர்கள்தானே? அர்ச்சகர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? ஆசிரியர்கள் யாருக்குக் கல்வி புகட்டினார்கள்? பிராமணர்கள் வைத்தியத்தொழில் செய்தார்களா? அவர்கள் எல்லா சாதிக்காரர்களையும் தொட்டு வைத்தியம் செய்தார்களா? அடுத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுhயத்திற்காகத் தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களை; காப்பாற்றியது என்கிறது.


அர்ச்சகர்கள் ஆசிரியர்கள் வைத்தியர்கள் என்பவருக்கு மாத்திரமல்ல தொழிலாளர்களுக்கே கூலி என்பது கிடையாது. தொழிலாளர் என்பவர்களை சூத்திரன் என்றது மனுதர்மம். அந்த சூத்திரர்கள் ஏழு வகைப்படுவார்கள். அதில் ஒன்று சூத்திரன் பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளை என்று இழிவுபடுத்துகிறது.

சூத்திரனிடத்தில் ஒரு பிராமணன் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்கிறது மனுதர்மம். அந்த சூத்திரர்கள் மேல் வருணத்தாருக்கு தொண்டு செய்வதற்காகவே படைக்கப்பட்டார்கள் என்றும் மனு கூறுகிறது. அவர்களது உழைப்பை உறிஞ்சி உல்லாச வாழ்வு வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஏதோ சமுதாயத்திற்காக ஊதியம் எதுவும் வாங்காமலேயே இலவசமாக பணியாற்றியதுபோல பிஎம்எஸ் கதை விடுகிறது.

கல்வி சூத்திரர்களுக்குக் கிடைத்ததா? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றுதானே இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் இயற்றிய சட்டங்கள் சொன்னது?

இவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தார்கள் என்பதுதானே கடந்த கால வரலாறு? அர்ச்சகர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு  ப10ஜை புனஸ்காரங்கள், சடங்குகள்  செய்யாமல் இருந்தால் யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்குமா? எந்த நட்டமும் ஏற்பட்டிருக்காது. மாறாக நன்மைகள்தான் ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்கள் என்று சவடால் அடிக்கிறது பிஎம்எஸ்.

அடுத்து அரசர்கூட சட்டத்தை இயற்ற முடியாதாம். அது ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டதாம். சுவாமி சிவானந்தா என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்து ரிஷிகளும் முனிவர்களும் சமூகத்திற்குரிய லட்சியம் நிறைந்த திட்டத்தைத் தீட்டினர். தனியாரின் வாழ்வுக்கான லட்சியம் வாய்ந்த வழியையும் வகுத்துத் தந்தனர். அம்முறைதான் வர்ணாஸ்ரமதர்மம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வர்ணாஸ்ரமதர்மம் என்னும் அடிமனையால் இந்துமதம் என்னும் சொர்ண மாளிகை கட்டப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தலானது தன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவி புரிகிறது. இது மிகமிக அவசியமானது. அதன் விதிகள் மீறப்படுமானால் நாடு இருந்த இடம் காடாக மாறிவிடும். பொதுவான நிலையான தர்மத்தின் வளர்ச்சியை அல்லது மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துதலே வர்ணாஸ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கமாகும்.
  (இந்து தர்மம் என்ற நூலில் பக்கம் 89, சிவானந்தா ஆஸ்ரமம் வெளியீடு, நாமக்கல்)

~சூத்திரன் கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்@ பிராமணன் கொலை செய்தால் அவனுடைய தலையை மொட்டையடித்தால் போதும்| (மனுதர்மம் - அத்தியாயம் 8)

என்ற சாஸ்திர விதிகள் எல்லாம் இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் உண்டாக்கியதுதானே! இதனால் முழுப் பலனையும் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தானே? அதே அடிப்படையில் நமது சமுதாயத்தை அமைப்பதுதான் நமது இலட்சியம் என்று பிஎம்எஸ் சொல்கிறது என்றால் அவர்கள் யாருக்காக சங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் சொல்லுகின்ற அந்த சமுதாய அமைப்பு இன்று மாறிப்போய் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றியுள்ளார்கள். பிஎம்எஸ்ஸின் இந்தக் கூற்றுப்படி அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இந்த மனுதர்மம் தொழிலாளியிடத்தில் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொல்லுவதன் அடிப்படையில்தான் பெல் நிர்வாகம்கூட பொறியாளர்களையும் மேற்பார்வையாளர்களையும் நிரந்தர ஊழியர்களாக எடுக்கிறது.

ஆனால் உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில்நுட்பப் பணியாளர்களை மட்டும் முதலில் தற்காலிக ஊழியராக எடுத்து பிறகு அவர்களை நிரந்தரம் செய்கிறது. அதற்காகத்தான் நிர்வாகம் விவேகாநந்தர் எழுதிய பாரதமே உயிர்த்தெழு என்ற நூலை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியது. அதனை பிஎம்எஸ் வரவேற்றது.

உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால் பிஎம்எஸ் சங்கம் மட்டும் மே தினம் தொழிலாளர் தினம் அல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

மே தினத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் வைக்கும் முழக்கம் “உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்” என்பதாகும். தொழிலாளர்கள் ஒன்று பட்டால்தான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும். ஆதிக்க சக்திகளின் எதேச்சாதிகாரத்தை முறியடித்து பாட்டாளி சமுதாயத்தை அமைக்க முடியும் என்பது இதன் பொருள். ஆனால் பிஎம்எஸ் என்ன சொல்கிறது தெரியுமா?

“தொழிலாளர்களே, உலகை ஒன்று படுத்துங்கள்” என்று சொல்கிறது. (ஆதாரம் : பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001)

இதனுடைய நோக்கம் என்ன? தொழிலாளர்கள் ஒன்று பட்டுவிடக் கூடாது. அப்படி ஒன்றுபட்டு விட்டால் முதலாளிகளுக்கும் ஆதிக்கசக்திகளுக்கும் அது மிகப் பெரிய தொல்லையாகிவிடும். அதனால் தொழிலாளர்களை ஒன்று சேர விடாமல் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தால்தான் தங்கள் சுரண்டலை தாராளமாகச் செய்ய முடியும் என்பதுதான் அதன் நோக்கம்.

பிஎம்எஸ் சும் சங் பரிவாரும் அமைக்க விரும்பும் சமுதாயம் இந்து சமுதாயம் ஆகும். அந்த இந்து சமுதாயம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு தொழிலைச் செய்பவனும் ஒவ்வொரு ஜாதி;.

அந்தத் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உதாரணத்திற்கு செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர் ஜாதிக்காரருக்;குத்தான் செருப்புத் தைத்துத் தர வேண்டுமே தவிர தனது காலிலே அணிந்து கொண்டு வீதிகளிலே நடமாடக் கூடாது. வெயிலில் வெந்து சாக வேண்டும். கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அவன் நடக்க அவதிப்பட வேண்டும்.

அதுபோல ஒரு விவசாயி நன்றாக மாட்டை வளர்த்து பாலையும், நெய்யையும், தயிரையும் உயர் ஜாதிப் பார்ப்பனருக்குக் கொடுத்து விட்டு தான் அய்ந்துக்கும் பத்துக்கும் மற்றவர் கையை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.

ஒரு தொழிலாளியும் இன்னொரு தொழிலாளியும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது. கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக் கூடாது என்று தொழிலாளர் சமுதாயத்தைப் பிரித்து வைத்தது இந்து மதம்.

உதாரணமாக தீண்டத்தகாவர்களே ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ண மாட்டார். பெண் கொடுக்க மாட்டார். பெண் எடுக்க மாட்டார். ஒரு சலவைத் தொழிலாளியும் நாவிதரும் ஒன்று சேரக்கூடாது. ஒரு தச்சரும் குயவரும் ஒன்று சேரக்கூடாது. இப்படி எல்லா சாதியினரையும் பிரித்து வைத்து அவர்கள் உழைப்பையெல்லாம் சுரண்டி உயர்ஜாதியினர் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த உல்லாச வாழ்வுக்கு கேடு வந்துவிடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்று சேரக் கூடாது என்று பிஎம்எஸ் சொல்கிறது.

நாங்கள் ஏன் கீழ் ஜாதியாக இருக்க வேண்டும்? என்று கேட்டால் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவம், உங்கள் தலையெழுத்து, விதி என்றெல்லாம் காரணம் காட்டுவர். நீங்கள் மட்டும் எந்த உழைப்புமின்றி எங்கள் உழைப்பிலே உல்லாச வாழ்வு வாழ்கிறீர்களே! என்றால் அது எங்கள் முன்னோர் செய்த புண்ணியம் என்பார்கள்.

தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். பாவம், புண்ணியம், தலைவிதி, என்ற இந்த ஏமாற்று வேலை எடுபடாது. தங்கள் உல்லாச வாழ்வு ஒரு நொடியில் பறிபோய்விடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்றுபடக் கூடாது என்கிற தத்துவத்தை ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது.

அது உயர் ஜாதியினருக்கான அமைப்பு. தொழிலாளர் மத்தியில் அந்த சிந்தனையை அடிமை மனப்பான்மையை வளர்க்கத்தான் பிஎம்எஸ்ஸை ஆர்எஸ்எஸ் துவக்கியது. அதனால்தான் ஆர்எஸ்எஸ்ஸால் இயக்கப்படும் பிஎம்எஸ் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்தை முன்வைக்கும் மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

மே தினம் தொழிலாளர் தினம் அல்ல என்பவர்கள் விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறார்கள். அந்த விஸ்வகர்மா தினம் எது என்றால் செப்டம்பர் 17 என்கிறார்கள். இந்து மதத்தில் எந்த ஒரு கடவுளர் பிறப்பும் குறிப்பிட்ட நாளில் வராது. திதி நட்சத்திரம் ஆகியவற்றை வைத்துத்தான் அந்தப் பண்டிகை வரும். கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, கந்தர் சஷ்டி என்பதும் தீபாவளி, ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகைகளும் அப்படித்தான். ஆனால் இந்த விஸ்வகர்மா மட்டும் செப்டம்பர் 17 அன்று பிறந்தான் என்பது அவர்களது சூது மனதைக் காட்டுகிறது.

அந்த செப்டம்பர் 17தான் பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் வாயிருந்தும் ஊமையாய் கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கிடந்த மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டி சுயமரியாதை உணர்வூட்டி மனிதராய் மாற்றிய மகத்தான மனிதர் தந்தை பெரியார் பிறந்த நாளாகும். அந்த நாளுக்குரிய சிறப்பைக் குலைக்கவே இந்த செப்டம்பர் 17 அய்த் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் அதனை அறிவுப்பூர்வமாக மறுக்க வக்கற்று நாம் ஏதோ இந்த அய்ந்தொழிலாளர் எனப்படும் விஸ்வகர்மாத் தொழிலாளர்களுக்கு எதிரானவர் என்பதுபோல அவர்களை நமக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள்.

விஸ்வகர்மாவைக் கொண்டாடுவது அந்த கைவினைத் தொழிலாளர்களைச் சிறப்பிக்க அல்ல. மாறாக அவர்களையும் சூத்திரர் என்று சொல்லி அவர்கள் அணியும் பூணூலுக்கும் பார்ப்பனர் அணியும் பூணூலுக்கும் வேறுபாடு உள்ளது. பார்ப்பனர் அணியும் பூணூல்தான் உயர்ந்தது பார்ப்பனர்தான் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை நிலைநாட்டத்தான் என்பதால்தான் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி என்கிற நயவஞ்சகத்தை எதிர்க்கிறோம்.

அதற்கு உதராணம் என்னவென்றால் இத்தமிழ் மண்ணில் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, தான் பதவிக்கு வந்த உடன் இந்த அய்ந்தொழிலாளர்களான விஸ்வகர்மாத் தொழிலாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக்கூடாது, ஆசாரி என்றுதான் போடவேண்டும் என்று உத்தரவிட்டவர். அது ஏனென்றால் ராஜாஜியும் ஆச்சாரி என்று போடுகின்றார். இந்த விஸ்வகர்மாத் தொழிலாளியும் ஆச்சாரி என்று போடுகின்றார் என்றால் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும் என்பதால் இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக் கூடாது என்கிறார்.

அத்துடன் பாரதீயர்களுக்கு லட்சியம் மோட்சம் அடைவதுதான். ஆனால் பிற நாட்டினருக்கோ அதிக சொத்து சேர்ப்பதுதான். நமக்கு புண்ணிய பாபங்களுக்கு வேறுபாடு தெரியும். பிற நாட்டவருக்கு பாவ தத்துவம் மட்டுமே தெரியும். புண்ணிய தத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். நமது கலாச்சாரத்தை நாம் மதித்துப் புகழ வேண்டும் என்று ஒரே சிந்தனை என்ற தலைப்பில் ஜெயதேவ்ஜி என்பவர் ஆற்றிய உரையை பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001 கூறுகிறது.

அந்த பாவ புண்ணிய தத்துவம்தான் நமது மக்களை ஏழைகளாகவும் தொழிலாளிகளாகவும் கீழ்ஜாதியாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

பாடுபடாத சோம்பேறி பணக்காரனாகவும் உயர்ஜாதியாகவும் முதலாளியாகவும் இருக்க பாடுபடும் நீ ஏன் ஏழையாக இருக்கிறாய் என்று கேட்டால் மக்களிடமிருந்து வரும் பதில் எல்லாம் அவன் செய்த புண்ணியம் நாங்கள் செய்த பாவம் என்கின்ற பதில் வரும். இந்த பாவ புண்ணிய தத்துவம் என்பது உழைக்கும் மக்களையே தங்களது இழிநிலைக்குக் காரணம் தங்கள்தான் தங்களை சுரண்டிப்பிழைக்கிற  உயர்ஜாதியினரோ பணக்காரர்களோ முதலாளிகளோ அல்ல என்கின்ற ஒரு சிந்தனையை உருவாக்கி சுரண்டல்வாதிகளுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கி வைத்திருக்கிறது.
அந்த பாவம் - புண்ணியம் என்கிற சிந்தனையைப் பாதுகாத்து காலா காலத்துக்கும் தொழிலாளர்களை ஏழைகளாகவும் கீழ்ஜாதியாகவும் வைத்திருந்து சுரண்டல்வாதிகளைப் பாதுகாப்பதுதான் பிஎம்எஸ் சின் கொள்கை என்பதால்தான் அதனை நாம் எதிர்க்கிறோம்.

அதுபோல ஏழைகள் கீழ்ஜாதியினர் உயர்ஜாதியினர்களுக்கு குறிப்பாக பார்ப்பனர்களுக்கு சேவை செய்வதன் மூலமாகத்தான் அடுத்த பிறவியில் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும் என்கிறது அவர்கள் கூறுகின்ற அந்த மதம். அதுதான் இந்து மதம். அந்த இந்துமதம்தான் தொழிலாளர்களுக்கும்  அதாவது சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடையாது. அவர்கள் சொர்க்கம் அடைய வேண்டும் என்றால் இந்தப்பிறவியில் பிராமணர்களுக்கு தொண்டூழியம் செய்வதன் மூலம் அடுத்த பிறவியில் பிராமணராகப் பிறப்பார்கள். அதன்பிறகே அவர்கள் மோட்சத்தை அதாவது சொர்க்கத்தை அடைவார்கள் என்கிறது.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்த ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் மறுபிறப்பு ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். அவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன் என்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் இந்த ஆத்மாபற்றியும் சொர்க்கம் நரகம் பற்றியும்  என்ன கூறுகிறார் என்றால் "இறந்தபிறகு ஆத்மாவுக்கு என்ன ஆகும்? என்ன ஆகாது? என்று வியாக்கியானம் செய்யும் மதம் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். அவர்களும் சாவகாசமாக உட்கார்ந்து அந்த மதத்தைப்பற்றி நினைத்து நினைத்து தங்கள் பொழுதுகளைப் போக்கிக் கொள்ளலாம். வாழும்போது அனைத்துவிதமான உல்லாசங்களிலும் ஊறித் திளைத்தவர்களுக்கு செத்த பிறகும் அதே உல்லாசத்தோடு வாழ மேலே ஒரு லோகம் காத்துக் கிடக்கிறது என்று ஆசை காட்டும் மதம்தானே  ஒரு மதமாகத் தெரியும்? ஆனால் அந்த மதத்தில் இருப்பதனாலேயே மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டவர்களும் உணவு உடை மறுக்கப்பட்டவர்களும் மனிதர்களாகக் கூட நடத்தப்படாதவர்களும் உலகியல் நோக்கில் மதத்தை அணுகாமல் கண்களை மூடி வானம் பாரத்து வணங்குவார்கள் என்று எதிர் பார்;க்க முடியுமா? இந்தப் பணக்கார சோம்பேறிகளின் வேதாந்தங்களினால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது| என்று கேட்பதன் மூலம் இந்த மோட்சம் நரகம் பாவம் புண்ணியம் என்ற தத்துவத்தை சோம்பேறிகளின் வேதாந்தம் என்கிறார்.

அப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக உழைக்கும் மக்களைத் தயார் படுத்துவதே பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ்சின் கொள்கை என்பதால்தான் நாம் பிஎம்எஸ் சையும் ஆர்எஸ்எஸ் சையும் எதிர்க்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனருக்கு அடிமையாக்கி பார்ப்பனர்களே நாட்டை ஆள வேண்டும். அவர்களுக்குக் கீழே தொழிலாளர்கள் உழைத்துப் போட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிஎம்எஸ் சும் ஆர்எஸ்எஸ் சும் செயல்படுகிறது என்பதனாலேயே அதனை எதிர்க்க வேண்டியது அவசியம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அதில் இருப்பது அவமானம் மட்டுமல்ல அடிமைத்தனம் என்பதாலும் அதனை எதிர்க்கிறோம்.

அத்துடன் இவர்கள் சங்கம் துவக்கிய காலத்தில் தங்களுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் தொடர்பே இல்லை என்று சத்தியம் செய்தார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மை மக்களை ஏமாற்றி சங்க அங்கீகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அதில் சேர்ந்த பிறகு தொழிலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக மூளைச்சலவை செய்து ஆர்எஸ்எஸ் சின் பக்கம் ஈர்த்து தங்களது மதவெறிக்கு அவர்களைப் பலிகடாவாக்குவதற்குப் பயன்படுத்துவார்கள்.
மேலும் இதுவரை பிஎம்எஸ் சங்கம் அரசியல் கட்சியான பிஜேபி யோடு உறவே இல்லாததுபோல நடிப்பார்கள். அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதாகக் கூட நாடகம் ஆடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்து விட்டால் பிஜேபிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பார்கள்.

பிஜேபி பெரும்பாலும்தேர்தலில் போட்டி இட மாட்டார்கள். ஆனால்திருச்சியிலும் திருவெறும்பூரிலும்   ரங்கராஜன் குமாரமங்கலம்ää சுகுமாறன் நம்பியார்ää லலிதா குமாரமங்கலம் போன்றோர் போட்டி இட்ட போது அவர்களுக்காக வரிநது கட்டி தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.
இப்படி எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடுவதே அவர்களது செயல்பாடாக இருக்கிறது என்பதனால்தான் பிஎம்எஸ்ஸை எதிர்க்கிறோமே தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.

மற்ற சங்கங்களிடமும் குறை இல்லாமல் இல்லையா. அவர்களைக் குறை கூறாமல் பிஎம்எஸ் சை மட்டும் குறை சொல்வது ஏன் என்று கேட்டால் மற்றவர்கள் தாங்கள் யார், தங்களது கொள்கை என்ன? எந்த அரசியல் கட்சியினுடைய சங்கம் என்பதை வெளிப்படையாக அறிவித்து செயல்படுபவர்கள்.
ஆனால் பிஎம்எஸ் எதையுமே வெளிப்படுத்தாமல் ரகசியமாக இயங்கக் கூடியவர்கள்.

மற்ற சங்கங்களில் குறை இருக்கிறது என்றால் அது பாலில் தண்ணீர் கலந்ததுபோல. அதனை அருந்தினால் சத்துக்கள் குறையலாமே தவிர உயிருக்கு ஆபத்தில்லை.
ஆனால் பிஎம்எஸ் மட்டும் விசம் கலந்த பால் போன்றது. அதனை அருந்தினால் உயிர் போகும். அந்த விசம்தான் ஆர்எஸ்எஸ் என்பது. அந்த ஆர்எஸ்எஸ் நச்சரவம் உழைக்கும் மக்களுக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை பார்ப்பனர்களுக்கு அடிமையாக்குவது. அதனால்தான் அதனை எதிர்க்கிறோம்.

எனவே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் அதனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டு;க்கொள்கிறோம்.


ஞாயிறு, 3 ஜூன், 2018

வேகாததைத் தின்னு விதி முடியும் முன்னே சாவு

வெந்ததைத் தின்போம் - விதி வந்தால் சாவோம்
பழமொழி
வேகாததைத் தின்னு விதி முடியும் முன்னே சாவு
கேண்டீன் மொழி







உணவகம் என்பது ஒரு தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கண்டிப்பாகச் செய்து தர வேண்டும் என்பது 1942ல் அண்ணல் அம்பேத்கர் தொழிலாளர் நலக்குழு உறுப்பினராக இருந்தபொழுதே கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதை எவரும் மாற்ற முடியாது. அந்த அடிப்படையில்தான் நமக்கு உணவகத்தில் உணவு மானிய விலையில் தரப்படுகிறது.
குறைந்த விலையில் தருவதால் அதைச் சாப்பிட வரும் தொழிலாளர்களை எதைப் போட்டாலும் சாப்பிடுவார்கள் என்ற மமதையில் உணவக நிர்வாகம் இருந்து வருகிறது. சோறு வேகாமலேயே அரிசி அரிசியாக வழங்குவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. சாம்பாரில் தண்ணீர் ஊற்றுவதும் ரசத்தில் தண்ணீர் ஊற்றுவதும் வாடிக்கை ஆகி விட்டது. உணவகத்தில் உள்ள ஆலோசனைப் புத்தகத்தில் எழுதினால் எழுதுகின்றவர்களை இழிவுபடுத்துவது உணவக மேற்பார்வையாளர்களின் வழக்கமாக இருக்கிறது. இவ்வளவு பேர் வாயை மூடிக்கொண்டு தின்றுவிட்டுப் போகும்போது நீ மட்டும் ஏன் கேள்வி கேட்கிறாய் என்ற தொனியில்தான் அவர்களின் பதில் இருக்கிறது.
அப்படி ஒரு தொழிலாளி கடந்த 28-05-2018 அன்று சோறு முழுவதும் அரிசியாக இருக்கிறது என்று நோட்டில் எழுதிவிட்டு அருகில் இருந்த மேற்பார்iயாளரிடம் தெரிவித்தபொழுது ஸ்டீம் சப்ளை தடைப்பட்டது. அதனால் அரிசி வேகவில்லை என்று சொல்லி இருக்கிறார். சார் அரிசி வேகவில்லை என்றால் அதை நிறுத்திவிட்டு வேறு சோறு வடித்துப் போடுவதுதானே! கொஞ்சம் அரிசி வீணாய்ப் போனால் என்ன? அதைச் சாப்பிடுகிறவன் வயிறு வீணாகப் போகக் கூடாது அல்லவா என்று கேட்டபொழுது நீ என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறாய் என்று கூறியதோடு அதே ஆலோசனை நோட்டில் இந்தத்தொழிலாளி அடிக்கடி இங்கே வந்து எங்களைத் தரக்குறைவாகத் திட்டுகிறார் என்று பதில் எழுதி இருக்கிறார்கள். அதைப் பார்வையிட்ட அதிகாரி இனிமேல் சோற்றை நன்கு வேகவைத்து தொழிலாளிக்கு பரிமாறுங்கள் என்று அவர்களுக்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக அந்தத் தொழிலாளியைப்பற்றி மனிதவள மேலாண்மை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கிறேன் என்று எழுதியதோடு யுபுஆ ஃர்சு க்கு புகாரும் தெரிவித்திருக்கிறார்.
இதுதான் சரியான நடைமுறையா? பிரச்சினைக்கு தீர்வு காணாமல் யார் பிரச்சினையைத் தெரிவிக்கிறாரோ அவரை இழிவுபடுத்துவது அல்லது அவர்மீது நடவடிக்கை எடுப்பதுதான் அதற்குத் தீர்வா? எனவேää நிரவாகம்ää உணவக நிர்வாகத்தை சரிசெய்து நல்ல தரமான உணவை வழங்க வேண்டியதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
இப்பொழுது புதிதாக ஒரு வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது யார் சமுதாயத்திலுள்ள குறைகளை முன்னிறுத்தி அரசையோ நிர்வாகங்களையோ எதிர்த்துக் குரல் கொடுக்கிறானோ அவனை சமூகவிரோதி என்று முத்திரை குத்தி தேசதுரோகி என்று பட்டம் கட்டி அவனை ஒழித்து விட்டால் இனி எதிர்ப்புக் குரலே வராது என்கிற நிலையை ஏற்படுத்த சிலர் முற்பட்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற ஒரு நிலையை இங்கேயும் ஏற்படுத்த ஒரு சிலர் முனைவதாகவே தெரிகிறது. அதற்கு ர்சு நிர்வாகம் இடம் தரக் கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
உணவக நிர்வாகக் குழு தேர்தல் நடந்து பல வாரங்களாகியும் ஏன் அவர்கள் பொறுப்பேற்க இயலவில்லை? அவர்கள் பொறுப்பேற்றிருந்தால் தொழிலாளர்கள் அவர்களிடம்தானே முறையிடுவார்கள். அப்படி இல்லாததால்தானே இந்த நிலை என்பதனையும் ர்சு நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.



வேகாததைத் தின்னு விதி முடியுமுன்பு சாவு கேண்டீன்மொழி!

வெந்ததைத் தின்போம் விதி வந்தால் சாவோம்
என்பது பழமொழி
வேகாததைத் தின்னு விதி முடியுமுன்பு சாவு
கேண்டீன்மொழி!








உணவகம் என்பது ஒரு தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கண்டிப்பாகச் செய்து தர வேண்டும் என்பது 1942ல் அண்ணல் அம்பேத்கர் தொழிலாளர் நலக்குழு உறுப்பினராக இருந்தபொழுதே கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதை எவரும் மாற்ற முடியாது. அந்த அடிப்படையில்தான் நமக்கு உணவகத்தில் உணவு மானிய விலையில் தரப்படுகிறது.

குறைந்த விலையில் தருவதால் அதைச் சாப்பிட வரும் தொழிலாளர்களை எதைப் போட்டாலும் சாப்பிடுவார்கள் என்ற மமதையில் உணவக நிர்வாகம் இருந்து வருகிறது. சோறு வேகாமலேயே அரிசி அரிசியாக வழங்குவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. சாம்பாரில் தண்ணீர் ஊற்றுவதும் ரசத்தில் தண்ணீர் ஊற்றுவதும் வாடிக்கை ஆகி விட்டது.

உணவகத்தில் உள்ள ஆலோசனைப் புத்தகத்தில் எழுதினால் எழுதுகின்றவர்களை இழிவுபடுத்துவது உணவக மேற்பார்வையாளர்களின் வழக்கமாக இருக்கிறது. இவ்வளவு பேர் வாயை மூடிக்கொண்டு தின்றுவிட்டுப் போகும்போது நீ மட்டும் ஏன் கேள்வி கேட்கிறாய் என்ற தொனியில்தான் அவர்களின் பதில் இருக்கிறது.

அப்படி ஒரு தொழிலாளி கடந்த 28-05-2018 அன்று சோறு முழுவதும் அரிசியாக இருக்கிறது என்று நோட்டில் எழுதிவிட்டு அருகில் இருந்த மேற்பார்வையாளரிடம் தெரிவித்தபொழுது ஸ்டீம் சப்ளை தடைப்பட்டது. அதனால் அரிசி வேகவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

சார் அரிசி வேகவில்லை என்றால் அதை நிறுத்திவிட்டு வேறு சோறு வடித்துப் போடுவதுதானே! கொஞ்சம் அரிசி வீணாய்ப் போனால் என்ன? அதைச் சாப்பிடுகிறவன் வயிறு வீணாகப் போகக் கூடாது அல்லவா என்று கேட்டபொழுது நீ என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறாய் என்று கூறியதோடு அதே ஆலோசனை நோட்டில் இந்தத்தொழிலாளி அடிக்கடி இங்கே வந்து எங்களைத் தரக்குறைவாகத் திட்டுகிறார் என்று பதில் எழுதி இருக்கிறார்கள்.

அதைப் பார்வையிட்ட அதிகாரி இனிமேல் சோற்றை நன்கு வேகவைத்து தொழிலாளிக்கு பரிமாறுங்கள் என்று அவர்களுக்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக அந்தத் தொழிலாளியைப்பற்றி மனிதவள மேலாண்மை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கிறேன் என்று எழுதியதோடு AGM/HR க்கு புகாரும் தெரிவித்திருக்கிறார்.

இதுதான் சரியான நடைமுறையா? பிரச்சினைக்கு தீர்வு காணாமல் யார் பிரச்சினையைத் தெரிவிக்கிறாரோ அவரை இழிவுபடுத்துவது அல்லது அவர்மீது நடவடிக்கை எடுப்பதுதான் அதற்குத் தீர்வா?

எனவேää நிரவாகம்ää உணவக நிர்வாகத்தை சரிசெய்து நல்ல தரமான உணவை வழங்க வேண்டியதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

இப்பொழுது புதிதாக ஒரு வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது யார் சமுதாயத்திலுள்ள குறைகளை முன்னிறுத்தி அரசையோ நிர்வாகங்களையோ எதிர்த்துக் குரல் கொடுக்கிறானோ அவனை சமூகவிரோதி என்று முத்திரை குத்தி தேசதுரோகி என்று பட்டம் கட்டி அவனை ஒழித்து விட்டால் இனி எதிர்ப்புக் குரலே வராது என்கிற நிலையை ஏற்படுத்த சிலர் முற்பட்டிருக்கிறார்கள்.

அதுபோன்ற ஒரு நிலையை இங்கேயும் ஏற்படுத்த ஒரு சிலர் முனைவதாகவே தெரிகிறது. அதற்கு HR நிர்வாகம் இடம் தரக் கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

உணவக நிர்வாகக் குழு தேர்தல் நடந்து பல வாரங்களாகியும் ஏன் அவர்கள் பொறுப்பேற்க இயலவில்லை? அவர்கள் பொறுப்பேற்றிருந்தால் தொழிலாளர்கள் அவர்களிடம்தானே முறையிடுவார்கள். அப்படி இல்லாததால்தானே இந்த நிலை என்பதனையும் HR நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.