சனி, 30 டிசம்பர், 2017

சங்கரராமனைக் கொன்றது மனு விதிகளின்படி சரியானது


காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சுப்பிரமணிய சங்கராச்சாரிää தனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனை பட்டப்பகலில் ஆள் வைத்துக் கொலை செய்தார் .
இந்த நாட்டில் அரசு காவல்துறை நீதிமன்றங்கள் அனைத்தும் இருந்தும் ஒரு பார்ப்பான் எப்படித் துணிச்சலாகக் கொலை செய்தான் என்று என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு குழப்பம் இருந்து வந்தது.
அந்தணன் அரசனுக்கும் மேலே என்று இதே சங்கராச்சாரி ஒரு விழாவில் பேசியதும் எனக்கு நினைவில் வந்தது. அந்தணர் என்போர் அறவோர் என்ற திருக்குறள்படி அவர்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு உள்ளவர்கள் என்று கருதிக் கொண்டிருந்தேன்.
அந்தக் குழப்பத்துக்கெல்லாம் இப்பொழுது விடை கிடைத்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய கட்டுரைகள
் ~பார்ப்பனீயத்தின் வெற்றி| என்ற நூலாகத் தொகுக்குப்பட்டுள்ளது.
அந்த நூலை நான் படித்துக் கொண்டிருந்த போது அந்தக் குழப்பத்திற்கு எனக்கு விடை கிடைத்தது.
அதில் மனுதர்மத்தில் உள்ள சுலோகங்கள் எப்படி பார்ப்பனருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அண்ணல் அவர்கள் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
அதாவது
“சட்டமறிந்த பார்ப்பனன் மன்னனிடம் எந்த வழக்கையும் கொண்டு செல்ல வேண்டியதில்லை. தன் சொந்த அதிகாரத்தின் மூலம் தன்னைத் தொல்லைப் படுத்திய எவரையும் தண்டிக்கலாம்”
மனு அத்தியாயம் 11. சுலோகம் 31
“ மற்றவர்களை நம்பியுள்ள அரசனின் பலத்தைக் காட்டிலும்ää தன்னையே நம்பியுள்ள பார்ப்பனனின் பலம் வலிமையானது. ஆகவே ஒரு பார்ப்பனன் தன் எதிரிகளைத் தானே பணிய வைக்கலாம்.”
மனு அத்தியாயம் 11. சுலோகம் 32
“ ஒரு பார்ப்பனன் மூவுலகத்தில் இருக்கும் மக்களைக் கொன்றாலும் கூட ரிக்ää யசுர் அல்லது சாம வேதங்களையும் உபநிடதங்களையும் மூன்று முறை பாராயணம் செய்தால் அனைத்துப் பாவங்களில் இருந்தும் முற்றிலும் விடுவிக்கப்படுவான்”
மனு அத்தியாயம் 11. சுலோகம் 261-62
இவ்வளவ தெளிவாக ஒரு பார்ப்பனனுக்கு அதிகாரத்தை மனு தர்மம் வழங்கியிருக்கும் போது சங்கராச்சாரி தனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனைக் கொன்றது மனு விதிகளின்படி சரியானதுதானே!
காந்தியைக் கொலை செய்த கோட்ஷேவும் அதைத்தானே செய்தான்.
அதனால்தான் மனுதர்மத்தை நம்புகின்ற சுப்பிரமணிய சாமி இராமகோபலன் வெங்கட்ராமன்ää சோ அய்யர் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பனர்களும் சங்கராச்சாரியைக் கைது செய்தபோது கண்டித்தார்கள்.
ஏனெனில் அவர்கள் மனுதர்மத்தை நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள்.
இப்பொழுது பிஜேபி ஆர்எஸ்எஸ் அட்சி அமைந்துள்ளது. அவர்கள் மனுதர்மத்தை நம்புகிறவர்கள். அதனை அமுல்படுத்த வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள்.
இனிமேல் இதுபோன்ற தர்மங்கள் நிலைநாட்டப்படலாம் என்று எதிர் பார்ப்போமாக!

சனி, 16 டிசம்பர், 2017

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி பற்றி அர்த்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்குதாம்
நமக்கு அர்த்த சாஸ்திரம் தெரியாது

ஆனால் மனுதர்ம சாஸ்திரத்தில் வரி பற்றி என்ன சொல்லி இருக்குதுன்னு தெரியும்

இந்த மனுதர்மம் அர்த்த சாஸ்திரத்தின் அடுத்த நிலை
இதோ அத்தியாயம் 7 சுலோகம் 137

“காய்கறி முதலானவைகளைத் தன் தேசத்தில் விற்றப் பிழைக்கிற ஏழைகளிடத்தில் வருஷத்திற்கொரு தரம் சொற்பப் பொருளை அரசன் தீர்வையாக வாங்கிக் கொள்ள வேண்டியது”

என்று ஏழைகளிடத்தில் கூட இரக்கமில்லாமல் வரி வசூலிக்கலாம் என்று சொல்லும் மனுதர்மம் அத்தியாயம் 133ல் என்ன சொல்கிறது தெரியுமா?

“ அரசன் எளியவனாக இருந்தாலும் (அதாவது வருமானம் இல்லாமல் கஜானா காலியாக இருந்தாலும்) வேதமோதின பிராமண சிரேஷ்டனிடத்தில் ஒருபோதும் தீர்வை வாங்கக் கூடாது. அந்தப் பிராமணனும் தன் தேசத்தில் பசியினால் துன்பப் படக்கூடாது”  என்று சொல்கிறது

அத்தியாயம் 134 இவ்வாறு சொல்கிறது

“ எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதினவன் சாப்பாட்டுக்கில்லாமல் பசியினால் துன்பப் படுகிறானோ அந்த அரசன் தேசம் முழுவதும்  சீக்கிரத்திலேயே துன்பப்பட்டு அழிந்துபோகும்” என்கிறது

அதாவது நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் பட்டினி  கிடக்கலாம். பார்ப்பான் மட்டும் பட்டினி கிடந்தால் அந்த தேசம் அழிந்துவிடும் என்கிறது.

இந்த மனுதர்மத்தை ஆர்எஸ்எஸ் சட்டமாக்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறது தெரியுமா?

இதற்குத்தான் அர்ஜூன் சொம்பத்துகளும் தமிழிசைகளும் கிச்சாசாமிகளும் லாலி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத் தில் வரலாற்றுப் பிரிவு முதுகலை பயில்வோருக்கான தேர்வுகள் சமீபத் தில் நடந்துள்ளன. அதில் தற்போதைய நிகழ்வுகளை ஒட்டி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன  உலக மயமாக்கலின் முன்னோடி மனுதர்மத்தை எழுதிய மனு என ஒரு கட்டுரை எழுதவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான பதில் இதுதான்

உலக மயம் என்றாலும் தேசிய மயம் என்றாலும் பார்ப்பன மயம்தான்

மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 100 இவ்வாறு கூறுகிறது

"உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் பிராமணர்களுக்கே சொந்தம். பிராமணனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவன் ஆகிறான்"

அதே அத்தியாயம் சுலோகம் 101 இவ்வாறு கூறுகிறது

“பிராமணன் தனது சொந்த உணவையே உண்கிறான். தனது சொந்த உடையையே அணிகிறான். தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறான். மற்ற மனிதர்கள் பிராமணனின் கருணையின் மூலமாகவே வாழ்கிறார்கள்”

அத்தியாயம் 8 சுலோகம் 417 இவ்வாறு கூறுகிறது

“ஒரு பிராமணன் உயிர் வாழ்வதற்கு வழியில்லாமல் கஷ்டநிலையில் இருந்தால் அவன் தயக்கமில்லாமல் சூத்திரன் பொருட்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம்” என்கிறது

இதுதான் உலகமயத்தைப் பற்றி மனுதர்மம் கூறும் விளக்கமாகும்

உலகமயம் என்றால் அனைத்தும் பார்ப்பன மயமே.

இதை ஒரு ஆர்எஸ்எஸ் காரன் திருத்தினால் முழு மதிப்பெண் கொடுப்பான்
நீங்க எவ்வளவு கொடுப்பீங்க?

ராமர் பாலத்த யாரோ விஞ்சானிகள் கண்டுபிடித்து விட்டதாகக ;கதை விடும் கபோதிகளே

அப்படியே இந்தப் பால்கடல் எங்க இருக்குது என்பதையும் கண்டுபிடித்துச் சொன்னீங்கன்னா பால் பிரச்சினைக்கு தீர்வு வரும் கண்டு பிடிப்பீங்களா?

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

facebook

ஒரு காலத்தில் நந்தனைத் தீ வைத்துக் கொளுத்தினான்
இன்று பார்ப்பான் தன்னைத் தானே கொளுத்திக் கொள்வேன் என்கிறான்
இதுதான் பெரியார் அம்பேத்கருக்குக் கிடைத்த வெற்றி
மனுதர்மக் காலமாக இருந்தால் இந்நேரம் திருமாவைக் கொளுத்தியிருப்பான்

பவுத்தத்தை ஒழித்து விட்டு பார்ப்பனியத்தை நிலைநாட்டியதற்கான ஆதாரம் வேண்டுமா? எச்ச ரசாவே இதோ ஆதாரம்
புஷ்யமித்திர சுங்கன் ஆட்சிக்கு வந்தபின் புத்த சமயத்தையும் பௌத்தர்களையும் ஒழித்துக் கட்டுவதற்கு மிகக் கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டான் என்பதற்குச் சான்று உள்ளது
புத்த மதத்துக்கெதிராக புஷ்யமித்திரன் மேற்கொண்ட ஒடுக்குமுறை எவ்வளவு இரக்கமற்றதாக இருந்தது என்பதைப் பவுத்த பிக்குகளுக்கு எதிராக அவன் வெளியிட்ட அறிவிப்பிலிருந்து காண முடியும்.
அந்த அறிவிப்பில் புஷ்யமித்திரன் ஒவ்வொரு பவுத்த பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்தான்
என்று அண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார்
பார்ப்பணியத்தின் வெற்றி என்ற நூலில்
அண்ணலின் பேச்சும் எழுத்தும் தொகுதி 7 பக்கம் 163
இதற்கு என்ன சொல்கிறாய் எச்சயே?

பவுத்த மதம் தோன்றியது இந்தியாவில்
உலகிலேயே மூன்றாவது பெரிய மதமாக இருக்கும் பவுத்தம் ஏன் இந்தியாவில் இல்லை?
பார்ப்பனர்கள் பவுத்தத்தை அழித்தார்கள்
பவுத்த பிக்குகளைக் கொன்றார்கள்
பவுத்த விகார்களை இடித்தார்கள்
அதனால்தான் அந்த மதம் இந்தியாவில் அழிக்கப்பட்டது
அதற்குப் பழி வாங்க நினைத்தால் நாட்டில் ஒரு பார்ப்பான் தப்புவானா?

அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று கூறும் காவிகளே!
அவர்தாண்டா
பவுத்த பிக்குகளை பார்ப்பனர்கள் கொன்றார்கள் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்
அவரது கருத்தை மறுத்து விட்டு அப்புறம் வாங்கடா திருமாவிடமும் எங்களிடமும்

பவுத்த கோயிலகள் இடிக்கப்பட்டுத்தான் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன என்பதற்கு ஆதாரம் உண்டா?
எச்சராசா
ராமன் கோயிலை இடிச்சுப்புட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு முதலில் ஆதாரம் கொடுடா எச்ச


திருமாவளவன் தலையை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு
இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத்
அவனிடம் ஒரு கோடி எப்படி வந்தது என்று கண்டு பிடித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா?


திருமாவளவன்மீது வன்முறை தூண்டும் பேச்சு...!
கழகத் தலைவர் ஆசிரியர் கி. #வீரமணி
கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். #திருமாவளவன் கடந்த 6 ஆம் தேதி அண்ணல் #அம்பேத்கர் நினைவு நாளில் பேசிய பேச்சை திசை திருப்பும் வகையில் கருத்துத் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும், தலைக்கு விலை என்றெல்லாம் காவிகள் கூச்சலிடுகின்றனர். திருமாவளவன் அவர்கள் ‘நான் என்ன பேசினேன்...?’
என்பதற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.
பவுத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. திருப்பதி கோயிலிலிருந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில் என்று நீண்ட பட்டியலே உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘‘பவுத்தமும் தமிழும்'' எனும் ஆய்வு நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்.
இதற்கு முன் சில இடங்களில் அவர்மீது வன்முறை ஏவப்பட்டுள்ளது. அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்டத்திற்கு காவிகள் தாவியுள்ளனர்.
மிரட்டல், உருட்டல் கண்டு அஞ்சக் கூடியவர் அல்லர் மானமிகு திருமாவளவன் அவர்கள். அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை!
‘‘புலி வாலை மிதிக்க வேண்டாம்'' என்ற சொலவடை உண்டு; அதற்குப் பதிலாக ‘‘சிறுத்தைகளின் வாலை மிதிக்க ஆசைப்படாதீர்’’ என்று எச்சரிக்கிறோம்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.12.2017
பவுத்த சாம்ராஜ்யத்தை ஏன் அழித்தார்கள் பார்ப்பனர்கள் தெரியுமா?
அங்கே சூத்திரர்களும் பெண்களும் கல்வி கற்றிருந்தார்கள்
அதனால் அழித்தார்கள்
நாம் படிப்பது அவர்களுக்குப் பிடிக்காது
அண்ணல்அம்பேத்கர்

சம்பூகன்

அன்று சம்பூகன் தலையை வெட்டி வா என்று பார்ப்பான் கட்டளையிட்டான் ராமனுக்கு
அந்த முட்டாளும் சம்பூகனை வெட்டிக் கொன்றான்
அந்த ராமனைப் போன்ற ஒரு முட்டாளை ஆட்சியில் அமர்த்தி தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டுவதுதான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பார்ப்பனக் கூட்டத்தின் திட்டம்
ராமஜெயம் என்றால் அங்கே பார்ப்பானுக்குத்தான் ஜெயம்
பார்ப்பனரல்லாதாருக்குத் தோல்வி
இது ராமசாமிப்பெரியாரின் காலம்
அம்பேத்கரின் சகாப்தம்
இனி ராமனுக்கு ஒரு போதும் ஜெயம் உண்டாகாது

திங்கள், 4 டிசம்பர், 2017

தலைவராகவும் - தந்தையாகவும்... - ‘பெல்’ ஆறுமுகம்

விடுதலை ஆசிரியர் பிறந்தநாள் மலரில் இடம்பெற்ற எனது கட்டுரை


தலைவராகவும் - தந்தையாகவும்... - ‘பெல்’ ஆறுமுகம்



நான் பதின்மூன்று வயதிலிருந்து தந்தை பெரியார் கொள்கையால் கவரப்பட்டு இந்த இயக் கத்தைப் பின்பற்றி வருகிறேன். பெல் நிறுவனத்தில் பணியில் சேரந்து திராவிடர் தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராகி 1992இல்  அதன் செயலா ளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் கொள்கை சார்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். பெல் நிர்வாகத்தில் பல கோரிக்கைகளை வைத்து அதற்காகப் போராடி வந்தோம். 1992இல் நிர்வாகத்திடம் பெல் நிறுவனம் வருவதற்குக் காரணமான பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்தினை நிர்வாகக் கட்டடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதற்கு நெறிமுறை (றிஸிளிஜிளிசிளிலி) கிடையாது என்று கூறி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனைத் தமிழர் தலைவர் அவர்களிடம் தெரிவித்த போது நிர்வாகத்தினுடைய இந்தப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. அதனை எதிர்த்து கழகத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தாரகள். அந்த ஆரப்பாட்டத்தின் விளைவாக பெல் நிர்வாகம் நிறுவனத்தின் நிர்வாக வளாக கட்டடத்தில் பெருந் தலைவர் காமராசர் படம் இன்றுவரை கம்பீரமாக அலங்கரித்துக் கொண் டிருக்கிறது.

அடுத்து 2000 ஆவது ஆண்டில் ஒரு நிகழ்வு. பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் தொழிற் சங்கங்கள் எல்லாம் தொழிலாளர் தினமான மே நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ்சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் மாத்திரம் மே நாளை என்பது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்நியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டது என்று அதனைக் கொண்டாடாமல் இருப்பதோடு விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்று கொண்டாடியது. அந்த விஸ்வ கர்மா ஜெயந்தி எது என்றால் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 தான் என்று கூறி அந்த நாளில் இது பெரியார் பிறந்ததால் பெருமைக் குரிய நாள் அல்ல; விஸ்வகர்மா ஜெயந்தி என்ப தால்தான் பெருமைக்குரியது எனக் கூறி பெரியார் பிறந்தநாளின் சிறப்பைக் குலைக்க ஆரம்பித்தது. அத்துடன் தங்கள் சங்கத்துக்கும்இ ஆர்எஸ் எஸ்சுக்கும் - தங்கள் சங்கத்துக்கும்இ பிஜேபிக்கும் தொடர்பு இல்லை என்று கூறி தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது. இதனைத் தமிழர் தலைவர அவர்களிடம் எடுத்துக் கூறி மே நாளைக் கொண் டாட்டத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அவர்களும் அதில் வந்து கலந்து கொண்டாரகள். 

அந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ்.இ சங்க் பரிவார் இயக்கத் துக்கு எதிரான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து காவிக் கூட்டத்துக்கு எதிராக அனைவரையும் பேச வைத்தோம். இதனைத் தமிழர் தலைவர் அவர்கள் வெகுவாகப் பாராட்டி யதோடு நம் இயக்கத்தவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இது உதாரணமாகத் திகழ்கிறது என்று மே இரண்டாம் தேதி நடைபெற்ற சிதம்பரம் பொதுக்குழுவில் பாராட்டினார்கள். பொதுக் குழுவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் கரவொலி எழுப்பி அதனைப் பாராட்டினார்கள். ஓட்டு மொத்த இயக்கத்தி னரையும் எங்களைப் பாராட்ட வைத்த தமிழர் தலைவர் என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

அதேபோல் 2002இ 2003இ 2004ஆம் ஆண்டு களில் திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற பொறியாளர் நியமனங்களில் தமிழர்கள் யாருமே நியமிக்கப்படாமல் முழுக்க பிற மாநிலத்தவர் களையே நியமித்து வந்தனர். 

அந்தப் பணி நியமனத்தை எதிர்த்து திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக துண்டறிக்கை வெளியிட் டோம். அந்தத் துண்டறிக்கையினையும்இ மூன்று ஆண்டுகளில் பணிநியமனம் பெற்றோர் பட்டி யலையும் தமிழர் தலைவர் அவர்களிடத்திலே அளித்தோம். அதனைப் பார்த்த தலைவர் அவர்கள் நாங்கள் வெளியிட்ட அதே துண்டறிக் கையினை தனது பெயரில் அறிக்கையாக  வெளியிட்டதோடு திருச்சி சிந்தாமணியிலே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும்இ பெல் நிறுவனத்தில் கண்டனக் கூட்டத்தினையும் நடத்தி எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். 

அதன் பிறகுதான் தமிழர்கள் ஓரளவு இங்கு பணிநியமனம் பெற்று வருகிறாரகள். நான் வெளியிட்ட துண்டறிக்கையினை தனது பெயரிலேயே வெளியிட்டது எனக்கு மிகவும் பெருமைக்குரியதாக நான் கருதுகிறேன்.

அத்துடன் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப் போலோ மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்வேறு பணி களுக்கிடையிலும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்தியது ஒரு தந்தை தனயனுக்குக்கு ஆறுதல் சொல்லி யதாகவே நான் கருதுகிறேன்.

தலைவர் என்ற இடத்திலிருந்து ஒரு தந்தை யாகவும் தமிழர் தலைவர் என் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்பதைப் பெருமையாகக் கருது கிறேன்.