திங்கள், 26 பிப்ரவரி, 2018

நாடி ஜோதிடப் பித்தலாட்டம்

The Hindu tamil

ரஜினி அரசியல்: 30 - விசுவாமித்திரரின் நாடி ஜோதிடம்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

குணத்தின் அடிப்படையில பிராமணராக ஆகாதது ஏன்?

குணத்தின் அடிப்படையில்தான் வருணாசிரமம் இருக்கிறது என்று சொல்லும் காவிகள்தான் மகாபாரதத்தை எழுதிய வியாசன் மீனவன்
என்றும் ராமாயணத்த எழுதிய வால்மீகி வேடன்என்றும் சொல்றாங்க
அவங்க குணத்தின் அடிப்படையில பிராமணராக ஆகாதது ஏன்?

சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவனுக்கும் பிராமணன் அந்நியன்.


-
தன்னுடைய முன்னோர்களால் வகுத்துத் தரப்பட்ட பிராமணீய சித்தாந்தத்தில் இன்று ஒவ்வொரு பிராமணனும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறான். சூத்திரனும் தீண்டத்தகாதவனும் தனக்குக் கீழானவர்கள் என்ற பிராமணீய சித்தாந்தத்தில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறான். அவன் இந்து சமுதாயத்தில் ஒரு அந்நிய சக்தி ஆவான். பிரெஞ்சுக்காரனுக்கு ஒரு ஜெர்மானியன் எவ்வாறு அந்நியனோ யூதரல்லாதவருக்கு ஒரு யூதன் எவ்வாறு அந்நியனோ நீக்ரோவுக்கு ஒரு வெள்ளையன் எவ்வாறு அந்நியனோ அவ்வாறே சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவனுக்கும் பிராமணன் அந்நியன். ...
அவன் அவர்களுக்கு அந்நியன் மாத்திரமல்ல. பகைவனுமாவான். அவர்களுக்கிடையேயான உறவில் மனச்சான்றுக்கு நேர்மை உணர்வுக்கு இடமில்லை. நியாயத்தின் குரலைக் கேட்க முடியாது
அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 17 பக்கம் 107

பார்ப்பனர்களின் காவிப்பொய்



பார்ப்பனர்கள் தந்தை பெரியாரை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே இருப்பான்கள் போல் தெரிகிறது
கேடி ராகவன் என்ற பார்ப்பான் இப்பொழுது புதிதாக யாரும் இதுவரை சொல்லாத ஒரு அவதூறை பெரியார் மிது சுமத்துகிறான்
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லையாம்
எல்லாம் பதவி ஆசைதானாம் காங்கிரசில் பதவி கிடைக்காததால்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாராம்.
அதற்கு அருள்மொழி பதில் சொன்னாங்க
பெரியார் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கு முன்பே 29 பதவிகளை வகித்து அனைத்துப் பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு வந்தார் காங்கிரசில் வந்தும் மாகாண காங்கிரஸ் செயலாளராகவும் மாகாண தலைவராகவும் பதவி வகித்தார். அவர் பதவிக்காக காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பது தவறானது என்றார்
இது ராகவன் பார்ப்பான் மட்டுமல்ல
ஆதாரமில்லாமல் பொய் சொல்வது காவிக் கூட்டத்துக்கே உரிய கைவந்த கலை
ஒருமுறை விஜயபாரதம் இதழில் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதற்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா?
பெரியார் வகுப்புரிமைக்காகவோ சேரன்மாதேவிப் போராட்டத்திற்காகவோ காங்கிரசை விட்டு வெளியேறவில்லை
ஒருமுறை பெரியார் காங்கிரஸ் கட்சியின் செலவில் ரஷ்யாவுக்குப் போனார்
உடன் ராமநாதன் என்பவரை அழைத்துப் போனார்
வரும்போது ராமநாதனை ஜெர்மனியிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார்
இங்கே வந்த உடன் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ரஷ்யா சென்று வந்ததற்கான கணக்கை கேட்பதற்கு எல்லோரும் தயாராக இருந்தார்கள்
கணக்கு காட்ட முடியாததால் காங்கிரஸ் ஒழிக பார்ப்பான் ஒழிக என்று கோசம் போட்டுக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்
என்று அந்த விஜயபாரதத்தில் எழுதினான்
இது எவ்வளவு பெரிய ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை பெரியார் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்
பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறியது 1925ல்
ரஷ்யாவுக்கு சென்று வந்தது 1932ல்
1925ல் நடந்த சம்பவத்துக்கு 1932ல் நடந்த செயல்தான் காரணம் என்று எழுதுகிறான் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்
இத்தகைய பொய்களை காவிக் கூட்டத்திடம் அவிழ்த்து விட்டால் ஏன்? எதற்கு என்று கேட்காமல் அப்படியே நம்புவான்
எதையும் ஆதாரத்தோடு பேசும் பெரியார் தொண்டர்களிடம் இது எடுபடுமா?
அப்படி விஜயபாரதம் அவிழ்த்து விட்ட பொய்யைப் போலவே இந்த ராகவன் பயலும் எதையோ அவிழ்த்து விடுவான் போலத் தெரிகிறது
இவர்கள் எவ்வளவதான் கோயபல்ஸ் பொய் சொன்னாலும் தந்தை பெரியார் என்ற இமயத்தை போர்வை கொண்டு மறைக்க முடியாது என்று மட்டும் எச்சரிக்கிறோம்

நாடி ஜோஸ்யம்


ஒரு குடும்பத்தில் அம்மா அவங்க தங்கச்சி அவங்க பிள்ளைங்க என நாலு பேரு நாடி ஜோஸ்யம் பாக்கப் போனாங்களாம்
முன் ஜென்மத்தப் பத்தி சொன்ன ஜோஸ்யரு
ஒருத்தரு முன் பிறவியில சேர மன்னர் குடும்பத்தில இளவரசியாப் பொறந்தீங்கன்னாராம்
இன்னொருத்தரு சோழ மன்னர் குடும்பத்து இளவரசியாம்
மூனாவது நபர் பாண்டிய மன்னர் குடும்பத்து இளவரசியாம்
கடைசிப் பொண்ணு பல்லவ வம்சத்து இளவரசியாம்
ஏம்பா எல்லோருமே மன்னர் குடும்பத்துல இளவரசியாத்தான் பொறந்தாங்களா?
இந்த மன்னர்கள் எல்லாம் எத்தனை வருஷத்துக்கு முன்ன ஆண்டாங்க?
இத்தனை வருஷம் கழிச்சா இவங்க இந்தப் பிறவி எடுத்திருக்காங்க?
யாருமே ஏழை வீட்டில பிறக்கலயா?
ஒருத்தரும் பிச்சைக்காரன் வீட்டில பிறக்கலயா?
எப்படியெல்லாம் ஏமாத்துறான் பாரு?
ஒருத்தர ஏமாத்தனும்னா அவங்களை ரொம்பப் புகழனும்கிற சித்தாந்தத்த நல்லாப் புரிஞ்சுக்கிட்டு ஏமாத்தறான் பாருங்க

இந்துமதம்தான் உங்களுக்கு வாழ்க்கை நெறியா?


இந்து என்பது ஒரு மதமல்ல
அது ஒரு வாழ்க்கை நெறி என்று கூறுவோரே
ஒரு பெண்ணுக்கு எட்டு வயதுக்குள் அதாவது பெண் ருதுவாவதற்குள் விவாஹம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று சங்கராச்சாரி தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் கூறி இருக்கிறாரே
அதுதான் வாழ்க்கை நெறியா?
இன்றைக்கு அதைக் கடைப்பிடித்து எத்தனை பார்ப்பனர்கள் தங்கள் பெண்களை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்கிறீர்?

இந்துமதம் ஒரு வாழ்க்கை நெறி என்று சொல்லும் காட்டுமிராண்டிகளே!
பிரிட்டிஷ் ஆட்சியில் 1891ல் சம்மத வயதுச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள்
திருமணமான ஆண் மனைவிக்கு 12 வயது ஆன பிறகுதான் அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம். அதற்கு முன் அது பத்து வயதாக இருந்தது
அப்படியானால் பத்து வயது குழந்தையுடனேயே உடலுறவு வைத்த காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கிறது
இது எங்கள் மதவிஷயம். அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது பத்து வயதை பனிரண்டு வயதாக உயர்த்தக் கூடாது என்பதற்காகக் கிளர்ந்து எழுந்து முதல்முதல் அரசியல் களத்தில் குதித்தவர்தான் தேசபக்த திலகமான பாலகங்காதர திலகர்.
இப்படி பத்து வயதுப் பெண்ணோடு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிற இந்துமதம்தான் உங்களுக்கு வாழ்க்கை நெறியா?

பார்வதி பரமசிவன் கல்யாணத்தின்போது சிவன் தனது தலையில்அவனது வைப்பாட்டி கங்காதேவியை வைத்திருந்தான் என்பதைக் கொண்டாடும் கபோதிகள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்
கல்யாணத்தின்போதே வைப்பாட்டியை உடன் வைத்துக்கொண்டு திருமணம் செய்வதுதான் உயர்ந்த பண்பாட்டின் அறிகுறியா?

காத்தவராயன் என்கிற தாழ்த்தப்பட்டவன் ஆரியமாலா என்கிற பார்ப்பனப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்பதற்காகவே அவனை அனுமதித்தால் சாதியம் உடைபட்டுவிடும் என்பதனால் காத்தவராயனை பொதுவெளியில் கழுமரம் ஏற்றி கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள்

அதுதான் வாழ்க்கை நெறியா?

வியாழன், 15 பிப்ரவரி, 2018

தந்தை பெரியார் தேசத்துரோகியா?


தந்தை பெரியார் அவர்கள் 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது அதனை ஆதரிக்கவில்லை
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போகக்கூடாது என்று சொன்னார் அதனால் அவர் ஒரு தேசத்துரோகி என்று திரும்பத் திரும்பக் காவிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
தந்தை பெரியார் மாத்திரமல்ல். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுத்தார்களோ அவர்கள் எல்லோருமே வெள்ளைக்காரன் இந்த நாட்டிற்கு வந்ததனால்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரளவுக்கேனும் உரிமை பெற்றார்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். மகாத்மா ஜோதிபா புஃலேää அயோத்திதாசப் பண்டிதர் ஆகியோர் அவ்வாறு கருதினார்கள்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தனது மூக் நாயக் என்ற பத்திரிகையில் எழுதுகின்றபொழுது “பிரிட்டிஷ் அரசின் நீதியற்ற அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பார்ப்பனர்கள் சொல்வதில் எந்த அளவிற்கு நியாயம் இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு நியாயம் ஆட்சி அதிகாரம் பார்ப்பனர் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பதிலும் அடங்கி இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படுமானால் தீண்டப்படாதவர்பால் இரக்கமில்லாதவர்கள் இவர்களை மிதித்து நசுக்கி விடுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்காத சுயராச்சியம் அவர்களுக்கு உண்மையான சுயராச்சியமாக இருக்க முடியாது. அது அவர்களுக்கு ஓர் அடிமைத் தளையாகவே இருக்கும் என்று எழுதினார்.
சுதந்திர இந்தியா பழைய மரபுகளுக்குத் திரும்பிச் சென்று விடும் என்று கருதினார். அந்நிலையில் அவருடைய மக்கள் வறுமைக்குழியில் தள்ளப்படுவார்கள் புறக்கணிக்கப்படுவார்கள். சமூகத்திலிருந்தும் அரசுப் பொது ஊழியத்திலிருந்தும் தள்ளி வைக்கப்படுவார்கள் என்றும் கருதினார்.
அதனால் 1946ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள் இலண்டன் பயணமானார். அங்கு சென்று இங்கிலாந்தின் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பிரிட்டிஷ் பிரதமர் அட்லிää இந்தியாவுக்கான செயலாளர்ää வின்ஸ்டன் சர்ச்சில் போன்றோரைச் சந்தித்துப் பேசினார். இப்பொழுது சுதந்திரம் வேண்டாம். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து இந்தியாவிலுள்ள கட்சிகளிடம் ஒன்றுபட்ட இந்தியாவை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் அது நிறைவேறாததால் மனந் தளர்ந்த நிலையில் இந்தியா திரும்பினார் என்று அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1927ல் சைமன் குழு இந்தியா வந்தபொழுது காங்கிரஸ் அதனை எதிர்த்தது. அம்பேத்கர் அவர்கள் அந்த கமிஷனைச் சந்தித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான கோரிக்கைப் பட்டியலைக் கொடுத்தார். அதனால் அப்பொழுது காங்கிரசார் அம்பேத்கரை தேசதுரோகி என்றனர். அத்துடன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று தனித்தொகுதி முறைக்காகப் போராடியபொழுது அதனை காந்தி எதிர்த்தார் என்பதனால் காந்தியாரை அண்ணல் அவர்கள் கடுமையாக எதிர்த்தார். அப்பொழுதும் அண்ணலை தேச தரோகி என்று தூற்றினர்.
அண்ணல் அம்பேத்கர் என்ன காரணத்திற்காக சுதந்திரம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாரோ அதே காரணத்தினால்தான் தந்தை பெரியாரும் சுதந்திரம் இப்பொழுது வேண்டாம் என்றார்.
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போனால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் பார்ப்பன பனியா கைகளுக்குச் சென்று விடும். அது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அமைந்து விடும். வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு செல்வதற்குள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டுச் செல்ல வேண்டும் என்றார்.
இதை எல்லாம் மூடி மறைத்துவிட்டு வெள்ளைக்காரன் எப்பொழுதுமே இந்த நாட்டை விட்டுப் போகக்கூடாது என்று சொன்னதாகப் பித்தலாட்டமாகக் கூறி பெரியாரை தேச துரோகி என்ற பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் காவிக் கூட்டம் செய்கிறது.
இன்று தந்தை பெரியாரை தேசதுரோகி என்று கூறுகின்ற இதே கூட்டம்தான் அண்ணல் அம்பேத்கரையும் அன்று தேச துரோகி என்று கூறியது என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும்.
அவர்கள் பார்வையில் பார்ப்பனர் நலனுக்குப் பாடுபடுகின்றவர்கள்தான் தேசப்பற்றாளர்கள். பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாடுபடுகின்றவர்கள் தேச துரோகிகள்.
இவர்கள் பார்வையில் பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பாடுபட்டவர்கள் தேசதுரோகிகள் என்று சொன்னால் அதுபோன்ற தேசதுரோகக் காரியத்தைத் தொடரந்து செய்வோம்.

புதன், 14 பிப்ரவரி, 2018

தீண்டாமைக்கு ஆதாரம் இல்லை என்று கூறுவது யாரை ஏமாற்ற?

நேற்று 13-02-2018 நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் மிகவம் அறிவார்ந்த வினா ஒன்றைத் தொடுத்தார்

அதாவது

 எல்லோரும் இந்து என்று சொல்கிறீர்களே
இராம கோபாலனும் இந்துதான்
அர்ச்சுன் சம்பத்தும் இந்துதான்

இருவரும் காஞசி சங்கராச்சாரியாரைக் காண வரும்போது இராம கோபாலனுக்கு தொட்டு பிரசாதம் வழங்கும் சங்கராச்சாரி அர்ச்சுன் சம்பத்துக்கு தொடாமல் அவர் கை தன் மேல் பட்டு விடாதபடி ஒரு அடி உயரத்திற்கு தூக்கி பிரசாதம் வழங்குவவதும் அதனை அர்ச்சுன் சம்பத் மிகவும் பணிவாக குனிந்து பவ்யமாக வாங்குவது ஏன்? என்று கேட்டார்

அதற்கு பதில் சொல்ல வந்த பாஜக எஸ்ஆர் சேகர் என்பவர்

காஞ்சி மடத்திற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது. அந்த விதிமுறையின்படி சங்கராச்சாரியார் நடந்துகொண்டார் என்று தெரிவித்தார்

அந்த விதிமுறை என்பது என்ன?

அதுதானே தீண்டாமை என்பது?

இராமகோபாலன் பிராமணர் என்பதால் தொட்டு பிரசாதம் வழங்குவதும் அர்ச்சுன் சம்பத்தை தொடாமல் வழங்குவதும் அந்தத் தீண்டாமையின் அடிப்படையில்தானே

தீண்டாமை சேமகரமானது என்று சொன்னவர்தானே சங்கராச்சாரியார்?

அந்தத் தீண்டாமையை சாஸ்திர விதிகளின்படிதானே சங்கராச்சாரி கடைப்பிடிக்கிறார்?

அவரே தீண்டாமையைக் கடைப்பிடிக்கும்போது மற்றவர்கள் அவருக்கு சப்பைக்கட்டு கட்டுவது ஏன்?

இந்து மத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதாரம் இல்லை என்று கூறுவது யாரை ஏமாற்ற?

அப்படி ஆதாரம் இல்லை என்று கூறுபவர்கள்
தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சங்கராச்சாரியைக் கண்டிக்காமல் வக்காலத்து வாங்குவது ஏன்?

இது ஊரை ஏமாற்றத்;தானே?

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018


உளறுவது திக வினரா? பார்ப்பனர்களா? விஜய பாரதமே பதில் சொல்
மகாபாரதம் எழுதிய வியாசர் மீனவரா? பார்ப்பானா?
பராசரன் என்ற ரிஷிக்கும் மச்சகந்தி என்ற மீனவப ;பெண்ணுக்கும் பிறந்தவன் வியாசன் என்றுதான் உன் புராணம் சொல்கிறது
மனுதர்மப்படி ஒரு பிள்ளை தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவன்தான்
அப்படியானால் பிராமண ரிஷிக்குப் பிறந்த வியாசனை மீனவன் என்று எப்படிச் சொல்றீங்க?
அந்த மச்சகந்தி கன்னிப்பெண்ணாம்
கன்னிப்பெண்ணால் பிள்ளை பெற முடியுமா?
பிள்ளை பெற்ற பிறகு அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாக மாறினாளாம்
அப்படி பிள்ளை பெற்றவள் மீண்டும் கன்னிப் பெண்ணாக மாற முடியுமா?
இதையெல்லாம் நம்பினால்தான் உன் புராணப் புளுகுகளையும் நமப முடியும்

விஜயபாரத ஆரியப் பார்ப்பனக் கூட்டமே?இதற்குப் பதில் என்ன

விவேகானந்தரும் தி.க.காரர் தானா?
விவாத மேடை
கருஞ்சட்டை
கேள்வி: இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் பிராமணர்களின் கட்டுக் கதை என்கிறார்களே?
விஜயபாரதம் பதில்: தி.க.வினர் உளறுவதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள். ராமாயணம் எழுதிய வால்மீகியும், மகாபாரதம் எழுதிய வியாசரும் பிராமணர்கள் இல்லை. வால்மீகி வேடுவர். வியாசர் மீனவர், சிறீராமர் க்ஷத்திரியர். சிறீ கிருஷ்ணன் யாதவர், சொன்னவர்களும் பிராமணர்கள் இல்லை. சொல்லப் பட்டவர்களும் பிராமணர்கள் இல்லை. (விஜயபாரதம் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் 16.2.2018 பக்கம் 35).
அண்ணல் அம்பேத்கர்தான் மிக அழகாகச் சொன்னார். பார்ப்பனர்களுக்கு பாரதம் தேவைப்பட்டது ஒரு வியாசரை அழைத்துக் கொண்டனர். அவர் பார்ப் பனர் இல்லை. அவர்களுக்கு இராமாயணம் தேவைப் பட்டது வால்மீகியை அழைத்தனர் - அவர் பார்ப்பனர் இல்லை.
அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் தேவைப்பட்டது என்னை அழைத்தனர் என்று விஜயபாரதங்களுக்கு அப்பொழுதே செவிளில் அறைந்தது போல் பதில் சொன்னார் அண்ணல் அம்பேத்கர்.
கம்பர்கூட இராமாயணத்தை எழுதியவர்தான் வால்மீகி எழுதியதைக்கூடத் திருத்தி ஆரியப் பார்ப் பனர்களுக்குச் சங்கடம் ஏற்பட்டு விடக் கூடாது என் பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் - அதனால்தான் கம்பனையும் விபீஷணர் பட்டியலில் துரோகிகளின் பட்டியலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்ற, வால்மீகி எழுதிய உத்தரகாண்டத்தையே தவிர்த்து விட்டவன் தானே கம்பன்.
வால்மீகி எழுதுகிறார் சீதை இராவணனுடன் விரும் பியே சென்றாள் என்று.
'தனக்கு எவ்வளவே மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையி டத்தில் . ஆசை மேலிட்டு, புதன் ரோஹிணியைப் பிடிப்பது போல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கெண்டு, மற்றெரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.
இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத் தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப் பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.
காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக் குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பெருள்.
மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந் திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளு டைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.
இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப்புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.
சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது
'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டா யிற்று.' (பக்கம் 155, சர்க்கம் 55)
மூல நூலான வால்மீகி இராமயணத்தில் சீதையைத் தொட்டுத் தூக்கினான் என்றிருக்க, தழுவல் இராமாயணம் எழுதிய கம்பனோ சீதையைப் பூமியோடு தூக்கிச் சென்றான் என்று எழுதியது எந்த நோக்கத்தில்?
சீதையைக் காப்பாற்ற வேண்டும், இராவணனை இழிவுபடுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில்தானே.
ராமாயணம், மகாபாரதம் பற்றி தி.க.வினர் உளறு வதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாதீர்கள் என்று விஜயபாரதத்தின் பேனா வாய் நீளுகிறதே - அந்தக் கூட்டத்திற்கு சில கேள்விகள்.
தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று எழுதியுள்ள ரோவேஷ் சந்திர தத்தர் (புராதன இந்தியா பக்கம் 52). தி.க.காரரா?
ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவிடர் களை, தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்; ஆரியக் கவிகள் திராவிடர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பையே இது காட்டுகிறது என்று எழுதியுள்ள (இந்திய சரித்திரம் முதல்பாகம் - இந்து இந்தியா எனும் தலைப்பில் பக்கம் 16,17ஆம் பக்கங்கள்)
சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ. ஆகியோரும் தி.க.வினர்தானா?
மத நம்பிக்கை ஒருபுறமிருக்க இராமாயணக் கதை யானது உவமையுரையோ (Allegory) சரித்திரமோ அல்ல; கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்ட கதையேதான் என்று எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ் திரியும் கருப்புச்சட்டைக்காரர்தானா?
இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும் உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவை உண்மையென்று நான் நம்பவேயில்லை. "பஞ்ச தந்திரம்" "அராபியன் நைட்" முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை (டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77) என்று எழுதிய ஜவகர்லால் நேருவும் பெரியாரின் சீடர்தானா?
வெகு தூரம் போவானேன்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்த விவேகானந்தரை தி.க.காரர் என்று விஜயபாரதம் சொல்லாது என்று திடமாக நம்புகிறோம் இதோ அவரே பேசுகிறார்:
"தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்" ("சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் "இராமாயணம்" எனும் தலைப்பில் பக்கம் 587-589).
இதற்குப் பதில் என்ன விஜயபாரத ஆரியப் பார்ப்பனக் கூட்டமே?