திங்கள், 26 ஜூன், 2017

ashok house



இன்று (22.04.2017)மதியம் நமது ஊரகத்திலுள்ள C2/381 வீட்டில் புகைப்போக்கியும் அதனுடன் சேர்ந்த மேற்கூரையும் இடிந்து விழுந்ததில் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் ஸ்டவ் அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது. ஆட்கள் யாராவது அங்கு இருந்திருந்தால் அவர்கள் உயிர் நிச்சயம் பிழைத்திருப்பது மிகவும் கடினமே!
இது முழுக்க முழுக்க சிவில் நிர்வாகத்தின் அலட்சியப்போக்காலும் மெத்தனத்தாலுமே நடந்துள்ளது. இதுபோல பல நிகழ்வுகள் ஊரகத்தில் பல நடக்கக் கூடாத நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. யாராவது ஒரு உயிர் போனால்தான் இவர்களுக்கு சொரணையே வரும்போல் தெரிகிறது. வேகத்தடை அமைக்காததால் ஒரு குழந்தையின் உயிர் போன பிறகுதான் வேகத்தடை அமைக்கப்படுகிறது. இந்த இலட்சணத்தில் செயல்படும் அதிகாரிக்கு பெஸ்ட் எஞ்சினியர் விருதுகொடுத்துப் பாராட்டுகிறது வெட்கங்கெட்ட நிர்வாகம். பெஸ்ட் அதிகாரியே இப்படியென்றால்; ஒர்ஸ்ட் அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்?
ஓராண்டுக்கு முன்பே புகார் தெரிவித்திருந்தும் இடிந்து விழும்வரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இடிந்த பிறகு வந்து உங்களுக்கு வேறு வீடு தருகிறோம் என்று சமாளிக்கிறது ஊரகத்துறை. கட்டிடம் இடிந்து பாத்திரபண்டங்கள் நொறுங்கியதால் இத்துடன் தப்பி;த்தது. உயிர் போயிருந்தால் இந்த அதிகாரிகள் அந்த உயிரைத் திருப்பித் தருவார்களா?
இதுவரை யாராவது ஒரு அதிகாரியின் வீடு இப்படி இடிந்து விழுந்ததாக நிகழ்ச்சி உண்டா? அந்த வீடுகளில் ஏதாவது ரிப்பேர் என்றால் வரிந்துகட்டிக்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஊரக நிர்வாகம் தொழிலாளி வீடு என்றால் அலட்சியப்படுத்துவது ஏன்?
தொழிலாளர்களின் உயிரும் உடைமையும் அவ்வளவு கிள்ளுக் கீரைகளா?
புகார் தெரிவித்திருந்தும் அலட்சியமாக இருந்து இவ்வளவு பாதிப்புக்கும் காரணமாக இருந்த அதிகாரிமீது நிர்வாகமே நடவடிக்கை எடு!
பழுதடைந்த பாத்திர பண்டங்கள் ஸ்டவ் போன்ற பொருட்களை அவரது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து புதிதாக வாங்கிக் கொடு. அப்பொழுதுதான் இனி அடுத்தடுத்த வீடுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
வருமுன்னர் காப்பதுதான் புத்திசாலித்தனம். விபத்தில்லாத ஆலை என்பது  மாத்திரம் நமது இலட்சியமாக இருக்கக் கூடாது. விபத்தில்லாத ஊரகமாகவும் விபத்தில்லாத இல்லமாகவும் இருந்தால்தான் தொழிலாளி நிம்மதியாக உழைக்க முடியும். உறங்கவும் முடியும்.
எனவே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த வீடுகளில் பயத்துடன் வாழும் ஊழியர்கள் அனைவருக்கும் மாற்று வீடு கொடுத்து அனைத்து வீடுகளையும் புதுப்பித்துத் தர வேண்டும். புதுப்பிக்க முடியாத வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவண்



எதையாச்சும் தியாகம் செஞ்சுதானே ஆகனும்



அண்ணன்ஜி : டேய் தம்பி இங்கே வாடா

தம்பி : என்னண்ணே ரொம்பநாளா இந்தப் பக்கமாக் காணோம், போன பங்குபெறும் சங்கத் தேர்தலின்போது பாத்தது அதுக்கப்பறும் இப்பத்தான் பாக்கிறேன், என்னண்ணே விசேசம்

அண்ணன் : அப்படிக் கேளுடா பணிக்குழுத் தேர்தல்ல நம்ம பிஎம்எஸ் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டுருடா தம்பி அதாண்டா இப்ப வேணும்

அண்ணேää போன பங்கு பெறும் சங்கத் தேர்தலில நீங்க சொன்னிங்கன்னு மரியாதைக்கு ஓட்டுப் போட்டேன். அதுக்கப்புறம் அவங்க நடவடிக்கை ஒன்னும் திருப்தியா இல்லியேண்ணே

அப்படி என்னடா நடந்துபோச்சு

அப்படிக் கேளுண்ணேää இதுக்கு முன்னே இருந்தவங்க எல்லாம் கையாலாகாதவங்கன்னும் நாங்க வந்தா இழந்தத மீட்போம் இருப்பதைக் காப்போம்னெல்லாம் சொன்னீங்களேண்ணே இப்ப செஞ்சீங்களான்னே PPP போனசும் ளுஐP போனசும் இதுவரைக்கும் இருந்தவங்க வாங்கிக் குடுத்ததைவிட மிகமிக குறைஞ்சுபோச்சுண்ணே. என்னோட பத்து வருட சர்வீஸ்ல இவ்வளவு கேவலமான போனச நான் வாங்கினதே இல்லண்ணே. இதுக்கு முன்ன இருந்தவங்க முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணவங்க வாங்கின போனசை எங்களுக்கு வாங்கிக் கொடுத்தாங்க நீங்க வந்து அதைக்கூட இல்லாம படு கேவலமான தொகைய வாங்கிக் கொடு;த்தீங்க. வீட்டுல கொண்டு போயி இதான் போனசு ன்னு கொடுத்தா என் பொண்டாட்டியே என்ன நம்ப மாட்டேங்குறாண்ணே

விடுறா விடுறா கம்பெனியே நஷ்டத்துல ஓடுது நாம என்னடா பண்ண முடியும்?

சரிண்ணே இந்த வருஷம்தான் இலாபம் வந்துருச்சில்லண்ணே இப்ப என்ன நடந்துச்சு. நஷ்டம்னு சொன்னப்ப அரைகிலோ ஸ்வீட் கொடுத்தாங்கண்ணே இப்ப அதுகூட இல்லையேண்ணே வெறும் நானூறு கிராம்தான் குடுத்தாங்கன்னு கொண்டுபோயி வீட்டில கொடுத்தா என்னோட கடைக்குட்டி பிள்ளைகூட என்னை கேவலமாப் பாக்குதுண்ணே,என்னப்பா இதெல்லாம் ஒரு ஸ்வீட்டான்னு கேட்குதுண்ணே என்னால ஒன்னும் பேச முடியலேண்ணே

சரிடா தம்பி ஸ்வீட்டெல்லாம்  ஒரு மேட்டரா வேற சொல்லு தம்பி

ஸ்வீட்டெல்லாம்கூட என் பிள்ளைகளுக்கு வாங்கிக் குடுத்துருவேன் அண்ணே,தமிழக முதல்வர் செத்தப்ப லீவு கெடைக்கும்னு நம்பி நானும் வேலைக்கு வரலேண்ணே இந்த வீராதி வீர சூராதிசூர உங்க சிங்கக் குட்டிக எனக்கு மட்டுமில்லை என்னப்போல முப்பது நாப்பது கிலோமீட்டருக்கு மேல இருந்து வார்றவங்க எல்லோருக்கும் நாமத்த சாத்திப்புட்டாங்களேண்ணே

 தம்பி கம்பெனி நல்லா இருக்கனுமின்னா நாம எதையாச்சும் தியாகம் செஞ்சுதானே ஆகனும்

நாங்க நல்லா இருந்தாத்தானே கம்பெனி நல்லா இருக்கும்? நீங்க போன தேர்தல்ல மத்த சங்கத்த எல்லாம் பாத்து சொன்னாங்களே செஞ்சாங்களா சொன்னாங்களே செஞ்சாங்களான்னு கேட்டு புக் போட்டீங்களே அண்ணே ஒங்க ஆளுங்க சொன்னத எதையாச்சும் செஞ்சாங்களா அண்ணே! காலாண்டுப் பரிசுப்பொருள் வாங்கித்தருறோம்னு சொன்னாங்க செஞ்சாங்களா? 2012லே இருந்து புது வேஜ் ரிவிசன் வாங்கித் தருவோம்னு சொன்னாங்களே, இப்ப 2017 முடிஞ்சு அஞ்சு மாசம் ஆயிருச்சேன்னே வேஜ் ரிவிசன்கிற வார்த்தையையே உங்க ஆளுங்க உச்சரிக்கிறதில்லையே அண்ணே, எப்பவும் ஏப்ரல் பொறந்த ஒடனே இலாபம் இவ்வளவுன்னு தெளிவா சொல்லிப்புடுவாங்க. இந்த வருடம் இலாபமா? நட்டமா? எதுவுமே தெரியலேண்ணே! இன்னும் எவ்வளவோ இருக்குது அண்ணே அந்த லட்சணத்துல மறுபடியும் வந்து பிஎம்எஸ்சுக்கு ஓட்டுப் போடுன்னு கேட்குறீங்களேண்ணே, உங்களுக்கு வெட்கமே இருக்காதாண்ணே!

டேய், வெட்கத்தப் பாத்தா எல்லாம் நடக்குமாடா, நம்ம ஆளுக நிக்குறாக அவுகளுக்கு எப்படியாவது ஓட்டுப்போட்டுருடா அவ்வளவுதான்

இப்படியெல்லாம் நம்மாளுக அவங்க ஆளுக அப்படின்னெல்லாம் பேசிக்கிட்டு வராதீங்க. ஒன்னு மட்டும் சொல்லுறேன் யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப்போடுவேன். எதையாவது கேட்டா தியாகம் பண்ணனும்னு சொல்லுற ஒங்க ஆளுகள இப்ப தியாகம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்ää போயிட்டு வாங்கண்ணே!
கருத்து :

BMS n கிடுகிடு போராட்டம்



BMS n  கிடுகிடு போராட்டம்

நாங்க நடந்தா நிர்வாகமே நடுநடுங்கும்! கார்ப்பரேட்டே கதிகலங்கும்! மத்திய அரசே மதிமயங்கும் என்றெல்லாம் சவடால் விட்டாங்க! எங்க கிடுகிடு போராட்டத்தால மத்திய அரசு போட்ட உத்தரவையே வாபஸ் வாங்கும். மோடியே பயந்து நடுங்குவாரு.
மத்த யாருமே கையலாகாவங்க! எங்களாலதான் எல்லாம் முடியும்! ஏற்கனவே நாங்க வந்து அதப்புடுங்கினோம் இதைக் கத்தை கட்டினோம் என்று மற்றவர்கள் சாதிச்சத எல்லாம் தன்னோட சாதனைன்னு சொல்லி ஏமாத்தி ஓட்டுக் கேட்டாங்க. அதையும் நம்பித் தொழிலாளிங்களும் ஓட்டுப் போட்டாங்க.  இப்ப என்னய்யா ஆச்சு?

உற்பத்தி முடிஞ்சு போச்சு. முடிஞ்ச உடனே நிர்வாகம் உற்பத்தி முடிஞ்ச மகிழ்ச்சியைக் குடும்பத்தோடு கொண்டாடுங்கன்னு சொல்லி கிலோ கணக்கில இனிப்பு காரமெல்லாம் கொடுப்பாங்க. இலாபம் நெறையக் கெடச்சப்ப நெறைய இனிப்பு கெடச்சது. போன வருடம் லாபம் இல்லேங்கிறது எல்லோருக்கும் தெரியும்.
நிர்வாகம் இந்த ஆண்டு இனிப்புக் கொடுத்து கொண்டாடுற மனநிலை இல்லே. அதனால இனிப்பு இல்லே அப்படின்னாங்க. அப்போ இருந்த கையாலாகாத நாலு பங்குகளும் இந்த வருடம் இலாபமில்லாட்டி என்னங்க. இனி வரப்போற வருடத்திலே இலாபத்த சம்பாதிச்சுத் தர்றோம். இத்தனை வருடமா கொடுத்துப்புட்டு இப்ப கொடுக்கறத நிறுத்தினா நல்லா இருக்காது என்று வலியுறுத்தி அரை கிலோ இனிப்பாவது வாங்கிக் கொடுத்தாங்க.

இலாபம் இல்லாதப்பவே அரை கிலோ வாங்கிக் கொடுத்தாங்க என்கிறபோது இலாபம் வந்துள்ள இந்த வருடம் எப்படி இருக்கனும்? அதை விட கூட இல்லாட்டியும் குறையாமலாவது இருக்கனுமா இல்லையா?

இப்ப எவ்வளவு? கிலோ கணக்கெல்லாம் கிடையாது. போனாப் போவுது 400 கிராம் வாங்கிக்கன்னு நிர்வாகம் சொல்ல அதுகூட எதுக்குங்க நீங்க குடுக்கறதக் குடுங்கன்னு கால்கிலோ மிக்சர் கூட இல்லாம 200 கிராம் வாங்கித் தர்றாங்க வீராதி வீர சூராதி சூரர்கள் இடம் பெற்றுள்ள இந்த ஆண்டில்.

இதுதான் பெர்ர்ரிய சாதனை இந்த ஆண்டில். அது மட்டுமா?
கையாலாகாத பங்குகள் இருந்தப்ப நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள் மறைவுற்றாங்க.

இந்திராகாந்தி அம்மையார் இறந்தப்ப நாலுநாள் லீவு கெடச்சது. எம்ஜியாருக்கும் நாலுநாள். அதே மாதிரி ராஜீவ் மறைந்தபோதும் லீவு கெடைச்சது.

அதெல்லாம் கையாலாகாதவர்கள் வாங்கித் தந்தது.
இப்ப இந்த வீராதி வீர சூராதி சூரப்புலிகள் வந்த பிறகு தமிழக முதலமைச்சராக இருந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் மறைவுற்றாங்க  ஏற்கனவே முன்னுதாரணம் இருக்கறதால வெளியூரில இருந்து வருகிற தொழிலாளியெல்லாம் சிறப்பு விடுப்பு கிடைச்சிரும் கிற நம்பிக்கையில மெத்தனமா இருந்துட்டாங்க. அதோட இந்த வீராதி வீர சூராதி சூரப்புலிகள் கிடு போராட்டம் நடத்தியாவது சிறப்பு விடுப்பு வாங்கித் தந்துருவாங்கன்னு நம்பி … லீவு போட்டுட்டாங்க. இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா பஸ் இல்லாட்டியும் நடந்தாவது வேலைக்கு வந்திருப்பாங்க. யாரு அடிச்சாலும் பரவாயில்லேன்னு மறைஞ்சு மறைஞ்சாவது வேலைக்கு ஓடோடி வந்திருப்பாங்க.

நம்பிக்கையெல்லாம் வீணாப்போச்சே! இனி எதிர் காலத்தில யார் செத்தாலும் லீவு கெடைக்காதுங்கிற பெரிய சாதனை நடந்துருக்கு.
அதுக்குப் பிறகும்கூட நம்ம மருத்துவ பிடித்தம் சம்மந்தமா கிடுகிடு போராட்டம் நடத்தி கார்ப்பரேட்டையே கதிகலங்க வச்சாங்க. அப்படிக் கதிகலங்க வச்சவங்க ஜெ.அம்மையார் மறைவுக்கு லீவு வாங்கித் தருவாங்கன்னு எதிர்பார்த்தாங்க. அதுவும் நடக்கல. இப்ப ஸ்வீட்டும் கசப்பாப் போச்சு. இனனும் என்ன என்னவெல்லாம் பறிபோகுமோ? வேஜ் ரிவிசன் வேற வருதுன்னு தொழிலாளி பயத்தோட இருக்கிறான். பார்ப்போம். என்ன நடக்குதுன்னு!

இராமானுஜர் சாதி ஒழிப்புப் போராளியா?

இராமானுஜர் சாதி ஒழிப்புப் போராளியா?

செ.கார்கி
தமிழ்நாட்டில் உள்ள சில முற்போக்கு வேடமணிந்த பெருச்சாளிகள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். எவன் எவன் எல்லாம் இந்தச் சமூக அமைப்பு மாறக்கூடாது, இது இப்படியே சனாதன முறைப்படி நடைபெற வேண்டும், பார்ப்பனன் எப்போதுமே சமூக அடுக்கில் மேல்நிலையில் ஆதிக்கம் செய்பவனாக இருக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் பூராவும் வாழ்ந்து மண்டையைப் போட்டானோ, அவனுக்கெல்லாம் சீர்திருத்தவாதி என்றும், சாதி ஒழிப்புப் போராளி என்றும் பட்டம் கொடுப்பது. முடிந்தால் அது போன்ற அயோக்கியர்களைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சீரியல் எடுப்பது என்பது வரை அவர்களின் அழிச்சாட்டியங்கள் தொடருகின்றன. அவர்களுக்கு ஏதாவது ஒரு சின்ன துரும்பு கிடைத்தால் கூட போதும்.. அதை வைத்துக்கொண்டு அதன் மேல் தன்னுடைய கற்பனையை ஏற்றி, ஆகா ஓகோ என்று புகழ்ந்து, சம்மந்தப்பட்ட பார்ப்பனனே கூசிப்போகும் அளவுக்கு சொறிந்து, சொறிந்து ரத்தம் வரவழைத்து விடுவார்கள். இவர்களைத்தான் நாம் எப்போதுமே பார்ப்பன அடிவருடிகள் என்கின்றோம். அப்படி தமிழ் நாட்டில் உள்ள சில பார்ப்பன அடிவருடிகளால் திட்டமிட்டு ஊதி பெரிதாக்கப்பட்ட போலி பிம்பம் தான் ராமானுஜன் ஒரு சாதி ஒழிப்புப் போராளி என்பது.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கி.பி 1017 இல் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராமானுஜம். இவர் உருவாக்கிய தத்துவத்திற்குப் பெயர்தான் விசிஷ்டாத்வைதம். அதாவது விஷேசமான அத்வைதம் என்று பெயர். இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இவரைப் பற்றி தமிழ்நாட்டில் சில முற்போக்கு வேடமணிந்த பார்ப்பன அடிவருடிகளால் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். ராமானுஜர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்றும், அவர் திருவரங்கம் கோயிலில் அறங்காவலர் குழுவில் இருந்து பல சீர்திருத்த நடவடிக்கைகளை செய்தார் என்பதும் அவரை சோழ மன்னன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதும் மோசடியாக சோடிக்கப்பட்ட புளுகு வேலை என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
ராமானுஜரை ஒரு சாதிய எதிர்ப்பாளனாகக் காட்ட பார்ப்பன அடிவருடிக் கும்பல் அவரது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் குரு பரம்பரைஎன்ற நூலில் குறிப்பிடப்படுகின்றது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழக வைணவர்களிடையே உள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. இந்நூலில் உள்ள கதைகள் நம்பமுடியாதனவாய் உள்ளன என்பதை இந்நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் தன்னுடைய முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தக் குருபரம்பரை கதையில் கூறப்பட்ட ராமானுஜர் பற்றிய செய்திகள் அனைத்தும் வாய்மொழி அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அதற்கு எந்தவித அடிப்படை சான்றும் கிடையாது. ராமானுஜர் எழுதியதாக சொல்லப்படும் எந்த நூலிலும் மேற்படி பார்ப்பன அடிவருடிகள் சொல்லும் எந்தக் கதையும் கிடையாது.
யாதவப் பிரகாசர் என்பவரிடம் முதலில் ராமானுஜர் சீடராக இருந்ததாகவும், ஆனால் அவரின் கொள்கைகளோடு ராமானுஜர் உடன்படாமல் போனதால் அவரை காசிக்கு அழைத்துச்சென்று, காஞ்சி சங்கராச்சாரியார் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனை போட்டுத்தள்ளியது போல போட்டுத் தள்ள திட்டம் தீட்டினார் என்றும் அதை எப்படியோ மோப்பம் பிடித்த ராமானுஜர் தப்பிவந்து திரும்ப அவரிடமே சீடராக சேர்ந்தார் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் இருவருக்கும் ஒத்துவராததால் ராமானுஜரை அவர் வெளியேற்றிவிட்டாராம். இதன் பின் திருக்கச்சி நம்பிகள் என்ற பிராமணரல்லாத ஒருவரை ராமானுஜர் குருவாக ஏற்றுக் கொண்டாதவும் கூறப்படுகின்றது. ஒரு நாள் தனது இல்லத்திற்கு சாப்பிட தனது குரு திருக்கச்சி நம்பியை ராமானுஜர் அழைத்திருக்கின்றார். அதை நம்பி அவரும் ராமானுஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டிருக்கின்றார். ஆனால் ராமானுஜர் மனைவி அவர் சாப்பிட்ட இலையைக் கையால் எடுக்காமல் கோலால் தள்ளி அவர் உட்கார்ந்த இடத்தை சாணத்தால் மொழுகி சுத்தப்படுத்தி இருக்கின்றார். இதைப் பார்த்த ராமானுஜர் கொதித்துப்போய் அவர் மனைவியை அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு துறவறம் மேற்கொண்டார் என்று சொல்கின்றார்கள்.
இந்தக் கதையில் எங்கே சாதிக்கு எதிரான குரல் ஒலிக்கின்றது எனத் தெரியவில்லை. ராமானுஜம் தன் மனைவியிடம் நீ எப்படி அவர் இலையைக் கோலால் தள்ளிவிடலாம், அதுவும் எனக்கு சாதி மீது நம்பிக்கை கிடையாது என உனக்குத் தெரியாதா, இதைப் பார்த்தால் ஊர் உலகம் என்னுடைய சாதி எதிர்ப்பு கருத்தைப் பற்றி கேலி பேசாதாஎன சொல்லி அவரின் மனைவியைத் திட்டியதாக எந்தக் குறிப்பும் இல்லை. அவர் தன் மனைவியை அன்பாக பின்னர் அழைத்துச் செல்வதாக கூறியே அவரின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றார். பின்னர் ஏன் அவரின் மனைவி குருவின் இலையை கோலால் தள்ளினார், அவர் உட்கார்ந்த இடத்தை சாணியால் மொழுகினார் என நீங்கள் கேட்கலாம். ஒருவேளை குரு பார்ப்பனர் இல்லை என்ற காரணமாகவும் இருக்கலாம், இல்லை குரு பார்ப்பனன் வீட்டு சமையல் நன்றாக இருந்தது என்று வயிறு புடைக்க தின்றதால் உட்கார்ந்த இடத்திலேயே கக்காபோயிருக்கலாம். இதனால் மனம் வெறுத்துப் போன ராமானுஜரின் மனைவி 'பாவி, ரோட்ல குளிக்காம சுத்தற கண்ட கண்ட பரதேசிப் பயலை எல்லாம் சாமியாருனு கூட்டிவந்து நடு வூட்ல பேலவுட்டு என் தாலியை அறுக்குறான்' என மனம் வெதும்பி அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் இதை எல்லாம் வைத்துக்கொண்டு ராமானுஜர் ஒரு சாதிய எதிர்ப்பாளர் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும்? சம்மந்தப்பட்ட ராமானுஜர் சாதிக்கு எதிராகப் பேசியதாக ஒரு வார்த்தை கூட கதையில் பதிவாகவில்லையே.
மேலும் திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம் ஓம் நமோ நாராயணாயஎன்ற புனித மந்திரத்தை கற்றதாகவும், இந்த மந்திரத்தை யாருக்கும் கூறக்கூடாது என்ற உறுதிமொழியை மீறி திருவிழாவின் போது கோயில் மதில்மீது ஏறி நின்று அனைவருக்கும் கேட்கும்படி அதைச் சொன்னதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் நம்பி ராமானுஜரிடம் கேட்ட போது குருவுக்கு அளித்த வாக்குறுதியைத் தாம் மீறியதால் நரகத்திற்குச் சென்றாலும் இதைக் கேட்டவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்என்றும் சொல்லி இருக்கின்றார். ஆனால் யாரின் மூளையிலும் தோன்றாத பல வருட கடின உழைப்பின் மூலம் தொந்தி பார்ப்பனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அதிசயமான புனித மந்திரம் ராமானுஜருக்கு முன்பே ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார் என்ற தொந்தி பார்ப்பான் ஓம் நமோ நாராயணாயஎன்ற அஷ்ட சக்ர மந்திரத்தை கூறுபவர் சொர்க்கத்தை அடைவார் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். அதுமட்டும் அல்லாமல் ராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யத்தில் ஆன்ம விடுதலை என்பது அந்தணர், வைசியர்,சத்ரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. அது சூத்திரர்களுக்கு என்றும் கிடையாது என்று கூறியிருக்கின்றார். எனவே ராமானுஜர் அடிப்படையில் தான் ஒரு சாதி வெறியன் என்பதை அவரே அவருடைய நூலில் ஒப்புக் கொண்டிருக்கின்றார். ஆனால் சில பார்ப்பன அடிவருடிகள்நாங்கள் அப்படி எல்லாம் விடமாட்டோம், நீங்க ஆயிரம்தான் உண்மையைச் சொன்னாலும் நாங்கள் ராமானுஜரை சாதிய எதிர்ப்பாளன் என்று தான் சொல்வோம்என கங்கணம் கட்டிக்கொண்டு புளுகிக்கொண்டு இருக்கின்றார்கள்.
அடுத்து அவரை சோழ மன்னனான முதலாம் குலோத்துங்கச் சோழன் கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் செய்தியைப் பார்க்கலாம். இது ராமானுஜர் திருவரங்கம் கோயிலில் வாழ்ந்த போது நடந்ததாக சொல்லப்படுகின்றது. முதலாம் குலோத்துங்கன் ஒரு ஏட்டில் சிவாத் பரதரம் நாஸ்தி” (சிவத்தைக் காட்டிலும் மேலானது எதுவும் இல்லை) என்று எழுதி அதில் பண்டிதர்கள் அனைவரையும் கைச்சாத்து இடும்படி கட்டளையிட்டதாகவும், வைணவரான ராமானுஜர் அதில் கைச்சாத்து இடாமல் தனக்குப் பதில் தனது சீடரான கூரத்தாழ்வாரை தன்னைப்போலவே வேடமிட்டு அனுப்பி வைத்தாகவும் அவர் அங்கு சென்று குருணிக்கு மேல் பதக்கு உண்டுஎன்று எழுதி கைச்சாத்து இட்டதாகவும், ஆனால் குருணி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு ஒன்று படி போல ஒரு முகத்தல் அளவை, மற்றொன்று சிவன் என்பதாகும். இந்த அறிய உண்மையைக் கண்டுபிடித்த மன்னன் கூரத்தாழ்வானின் கண்களை பிடிங்கிவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய சந்நியாச ஆடைகளைக் களைந்து வெள்ளை உடை தரித்து ராமானுஜர் கர்நாடகத்திற்குத் தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகின்றது.
திருவரங்கம் கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த எண்பது கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் அதில் ஒரு கல்வெட்டில் கூட இந்தச் செய்தி பதிவாகவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள செய்தி எல்லாம் கோயிலுக்குச் சொந்தமான நிலம், தங்கம், கால்நடைகள் பற்றியும் வழிபாட்டிற்கான செலவுகள் பற்றியுமே உள்ளது. மேலும் இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்கனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றது. கோயில் ஒழுகுஎன்ற நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார், ராமானுஜரைக் கொல்ல முதலாம் குலோத்துங்கன் முயற்சி செய்தான் என்பதை மறுத்துள்ளார். இதனால் குழம்பிப் போன வரலாற்றுப் பொய்யர்கள் உடனே முதலாம் குலோத்துங்கன் கிடையாது, இரண்டாம் குலோத்துங்கன் என கதைவிட ஆரம்பித்து விட்டார்கள்.
ராமானுஜர் 1017இல் பிறந்தார் என்பதை பொதுவாக வைணவ வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். ராமானுஜர் 120 வயதுவரையும் வாழ்ந்ததாகவும், தன்மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க அவர் கர்நாடகா தப்பிச்சென்று அங்கே 12 ஆண்டுகள் வாழ்ந்தாகவும், பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி அவர் தன்னுடைய சாதிய எதிர்ப்புப் பணியை செவ்வனே செய்ததாகவும், பிறகு தன்னுடைய 120வது வயதில் மண்டையைப் போட்டதாகவும் நம்புகின்றார்கள். இதிலே கேலிக்கூத்தானது என்னவென்றால் 1133இல் தான் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி பொறுப்புக்கு வருகின்றான். அதன் படி பார்த்தால் ராமானுஜருக்கு வயது 116. தள்ளிவிட்டாலே செத்துப்போகும் நிலையில் இருந்த ஒரு கிழவனை இரண்டாம் குலோத்துங்கன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதும், அதற்குப் பயந்து அந்தக் கிழவன் கர்நாடகம் தப்பிச் சென்றான் என்பதும், பிறகு 12 ஆண்டுகள் கழித்து திரும்ப வந்தான் என்பதும் குமாரசாமி கணக்கைவிட மோசமான கணக்காகும். இருந்தாலும் இங்கிருக்கும் பார்ப்பன அடிவருடி கும்பல்கள் இதே கதையைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப சொல்லி மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் ராமானுஜர் எந்த ஆணியையும் புடுங்கவில்லை என்பதுதான். வழக்கமாக எல்லா பார்ப்பன அயோக்கியர்களும் உழைக்காமல் வயிறு புடைக்க தின்றுவிட்டு மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்துக்கொண்ட செய்யும் ஆன்மீக ஆராய்ச்சியைத்தான் இந்த ராமானுஜரும் செய்திருக்கின்றார். அப்படி அவர் மல்லாக்கப் படுத்துக்கொண்டு யோசித்து கண்டுபிடித்த வாழ்வியல் நெறி என்னவென்றால் இறைவன், உயிர், பொருள் ஆகிய மூன்றும் உண்மை. அதே வேளையில் இம்மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு ஒன்றில் இணைந்துள்ளன. அந்த ஒன்றே பிரும்மம் என்பது. எனவே தனிமனித ஆன்மா ஒரு நாளும் பிரம்மமாக முடியாது என்றாலும் பிரம்மத்தை சரணடைவதன் மூலம் மோட்ச நிலையை அடைய முடியும்" என்பதுதான் சாரமாக ராமானுஜரின் கருத்து. தினம் தினம் உழைத்துச் சோறு தின்னக்கூடிய மக்களால் எளிதில் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் நாள் கணக்கில், வருடக்கணக்கில் உழைக்காமல் ஓசியில் உண்டகட்டி வாங்கித் தின்பவராக இருக்க வேண்டும். அதனால் இராமாஜர் கண்டுபிடித்த அந்த உண்மையைப் பற்றி ஆழமாக நாம் உள்ளே போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்திய சமூகத்தில் அறிவியல் சிந்தனை காயடிக்கப்பட்டதற்குச் சங்கரருக்கு எந்த அளவிற்குப் பங்குண்டோ அதே அளவிற்கு இந்த ராமானுஜர் என்ற பார்ப்பனனுக்கும் பங்குண்டு.
இப்போது ராமானுஜரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால் தற்போது ராமானுஜரின் ஆயிரமாவது அவதார விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஸ்ரீபெரும்புதுரில் நடைபெறும் இந்த விழாவுக்கு நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களிலும் மின்தடை ஏற்பட்டு விடக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்திரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கத் துப்பில்லாத அரசு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், கார்ப்ரேட் சாமியார்களின் பணம் கொழிக்கும் மடங்களுக்கும், மக்களிடையே மூட நம்பிக்கையைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் வழங்க உத்திரவிடும் அயோக்கியத்தனத்தைச் சுட்டிக்காட்டத்தான். அத்தோடு தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பன அடிவருடி கும்பலின் புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தவும் தான். இனி எவனாவது ராமானுஜர் சாதி ஒழிப்புக்காக பாடுபட்டார் என்று உங்கள் முன்வந்து நின்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்………?

செ.கார்கி