வெள்ளி, 6 ஜூலை, 2018





வியாழன், 3 ஆகஸ்ட், 2017

இரட்டைமலை சீனிவாசன்



இரட்டைமலை சீனிவாசன்




ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமை முரசு கொட்டிய இரட்டை மலை சீனிவாசன் செங்கற்பட்டு மாவட்டம்இ மதுராந்தகத்தில் இன்று (7.7.1860) தான் பிறந்தார். அவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டினார்.



தென்னாப்பிரிக்காவில் காந்தியார் அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.



1923ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினராக நியமிக் கப்பட்டார். 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார்.



அவர்தம் நற்பணிகளுக்காக ராவ்சாகிப்இ ராவ் பகதூர்இ திவான்பகதூர் ஆகிய பட்டங்கள் அவருக்கு அளிக்கப்பட்டது உண்டு.



1928-1929ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் பங்கு கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி என்று காந்தியார் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோதுஇ அம்பேத்கர் அவர்களுடன் சேர்ந்து இரட்டை மலை சீனிவாசன் கடுமையாக எதிர்க்குரல் கொடுத்தார்.



பறையன் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.



ஆரியப் பார்ப்பனர் எதிர்ப்பில் மிகத் தெளிவாகவும்இ உறுதியாகவும் திகழ்ந்தார்.



1895ஆம் ஆண்டில் ஒரு வித்தியாசமான - சுவையான நிகழ்வு! லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அந்த தேர்வில் தேறுகிறவர்கள் - ஆங்கிலேயர்களே! அவர்கள்தான் மாவட்ட ஆட்சியர்களாகவும்இ நீதிபதிகளாகவும் உயர் பதவிகளிலும் வருவார்கள். அந்தத் தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் காங்கிரசார் மசோதா ஒன்றை சமர்ப்பித்தனர். அந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் உயர் ஜாதி பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து ஏழை ஜாதியினரைத் தீண்டாதார் என்று இம்சிப்பார்கள்.



அதன் காரணமாக பறையர் மகாஜன சபையார் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு பெருங் கூட்டம் கூட்டிஇ அந்த மசோதாவை மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்களைச் சேகரித்து ஜெனரல் சர்ஜார்ஜ் செவ்னி (புநநெசயட ளுசை புநழசபந ஊhநறநெல) என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் சமர்ப்பித்தனர். இதன் மூளையாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார். மசோதாவை காங்கிரஸ்காரர்கள் பின் வாங்கிக் கொண்டனர்.



பார்ப்பனர்களின் தன்மைகளைத் துல்லியமாக உணர்ந்ததோடு - அதனைத் தடுக்க புதிய யுக்தியையும் கையாண்ட இரட்டைமலையாரின் சிந்தனைத் திறனை என்னென்று கூறுவது!





7.7.2011



நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

நேரம் ஆகஸ்ட் 03இ 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக