செவ்வாய், 21 நவம்பர், 2017

விடுதலை ஞாயிறுமலர் 28-10-2017

விஸ்வகர்மா கண்டுபிடித்த கருவி என்ன?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம் நாட்டில் ஒரு காலத்தில் தெருக்கூத்துக்கள் நடக்கும். அந்த நாடகங்களில் ராஜா வருவார். வந்த உடன், “மந்திரி! நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? வருடம் ஒரு பொன்மாரி பொழிகிறதா?” என்று கேட்டு “அவரவர் குலத்தொழிலை அவரவர் ஒழுங்காகச் செய்கிறார்களா?” என்று கேட்பார். மந்திரியும் “அவரவர் குலத்தொழிலை ஒழுங்காகச் செய்கிறார்கள் மன்னா!” என்பார்.
மன்னராட்சிக் காலம் என்பது இப்படித் தான் இருந்தது. மன்னனுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது. அதனை ரிஷிகள், முனிவர்கள் என்று சொல்லக் கூடிய பார்ப்பனர்கள் பார்த்துக்கொள் வார்கள். அவர்கள் வகுத்துக் கொடுக் கக்கூடிய சட்ட திட்டத்தின்படிதான் மன் னர்கள் ஆள வேண்டும். மன்னன் அவன வன் குலத்தொழிலை அவனவன் ஒழுங் காகச் செய்யவில்லையென்றால் அவர் களுக்கு கடுமையான தண்டனை கொடுத் தான். தாழ்ந்த ஜாதியான் பணத்தாசையால் தனக்கு மேல் ஜாதியானுடைய தொழி லைச் செய்தால் அவனை ஊரை விட்டு விரட்ட வேண்டும் என்று மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 96ஆவது சுலோகம் சொல்கிறது.
இப்படி கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் எவனுக் காவது வேறு தொழிலைச் செய்ய வேண்டும் என்கிற துணிவு வருமா? துணி துவைப்பவன் துணிதான் துவைக்க வேண்டும். மண்பாண் டம் செய்பவன் மண்பாண்டம்தான் செய்ய வேண்டும். நகை செய்பவன் நகைதான் செய்ய வேண்டும். செருப்புத் தைப்பவன் செருப்புத்தான் தைக்க வேண்டும்.
இதன் காரணமாகத்தான் நமது நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக எந்த நவீனக் கருவிகளும் கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னுடைய அப்பன் எந்த உளியை வைத்து செதுக்கினானோ அதே உளியைத்தான் மகனும் பயன்படுத்தினான். அப்பன் எந்த கலப்பையைக் கொண்டு ஏர் உழுதானோ அதே ஏர்க் கருவியைக் கொண்டுதான் விவசாயி ஏர் உழுதான். இப்படி பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வந்ததினால்தான் இங்கே தொழில் புரட்சியும் வரவில்லை. புதிய தொழில் கருவிகளும் கண்டுபிடிக்கப் படவில்லை. நாம் கண்டு பிடித்தது ஏர்க் கலப்பையும் வண்டிச்சக்கரமும் உளியும் சுத்தியலும்தான். இன்றைக்கு இருக்கும் நவீனக் கருவிகள் எல்லாம் அய்ரோப் பியனும் ஆங்கிலேயனும் வெளிநாட்டுக் காரனும் கண்டு பிடித்த கருவிகள்தான். புதிய கருவிகள் கண்டுபிடிக்கத் தேவை எதுவும் ஏற்படவில்லை. தேவைகள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தாய் என்பார்கள். அப்பன் செய்த தொழிலையே மகனும் செய்கிறபோது புதிய தேவைகளே ஏற்படாது அல்லவா? அதனால்தான் நமது நாட்டில் புதிய கண்டுபிடிப்புக்கள் எதுவும் நடக்க வில்லை.
இப்படிப்பட்ட சமுதாயத்தை அப்படியே கட்டிக்காக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்சினுடைய கொள்கை. அதைத் தான் ஆர்எஸ்எஸ்சின் ஆலோசகரான குருமூர்த்தி போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். அந்த ஜாதித் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் இங்கே பிஎம்எஸ் காரர்கள் விஸ் வகர்மா ஜெயந்தி என்ற ஒன்றைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த விஸ்வகர்மா தொழில்களுக்கு குரு என்கிறார்கள். அவனால் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட்ட கருவிகள் எந்திரங்கள் என் னென்ன? யாராவது கூற முடியுமா? இப்படி காலாவதியாகிப்போன ஒரு தத்துவத்தின் கைச்சரக்குத்தான் விஸ்வகர்மா ஜெயந்தி என்பது. அது நம்முடைய நாட்டின் முன் னேற்றத்தையும் மக்களின் முன்னேற்றத் தையும் பின்னோக்கி இழுக்கக் கூடியது. எனவே ஆர்எஸ்எஸ், பிஎம்எஸ் ஆகிய வற்றின் மக்கள் விரோதக் கொள்கைகளை விரட்டி அடிப்போம். நவீனகாலத் தொழில் நுட்பத்தைக் கையாண்டு நாட்டையும் மக் களையும் முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்வோம்.
- திராவிடர் தொழிலாளர் கழகம், திருவெறும்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக