சனி, 4 நவம்பர், 2017

உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது?

என்னிடம் ஒரு நண்பர் ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அல்ல அது அறிவியல் ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அவர் பிறந்த நேரத்தில் இருந்த கிரகங்களே தீர்மானிக்கிறது என்று வாதிட்டார்
எவ்வளவோ அறிவியல் பூர்வமாக வாதிட்டும் அவர் அவரது கொள்கையில் உறுதியா இருந்தார்.
கடைசியா ஒரு கேள்வி கேட்டேன்
ஒருவர் பிறக்கும்போது கிரகங்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்துத்தான் ஒருவர் வாழ்க்கை அமைகிறது என்றால் ஜாதி அமைப்பு முறை எப்படி வந்தது?
என்னுடைய பாட்டனோடு பத்துப் பேர் பிறந்தார்கள்
பத்துப் பேரும் ஒரே தொழிலைத்தான் செய்தார்கள்
என்னுடைய தாத்தனோடு ஏழு பேர் பிறந்தார்கள்
ஏழு பேரும் என் பாட்டன்கள் செய்த தொழிலையே செய்தார்கள்.
என் அப்பனோடு அய்ந்து பேர் பிறந்தார்கள்
அந்த அய்ந்துபேரும் என் பாட்டனும் தாத்தனும் செய்த தொழில்களையே செய்தார்கள்
என் மாமன்மார்கள் நாலுபேர்
அந்த நாலு பேரும்கூட என் பாட்டனும் தாத்தனும் அப்பனும் சித்தப்பனும் பெரியப்பனும் செய்த தொழில்;களையே செய்தார்கள்
கிரகங்கள்தான் ஒருவரது வாழ்ககையை தீர்மானிக்கிறது என்றால்
எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு தொழில்கள்தானே இருந்திருக்க வேண்டும்?
அப்படி இல்லாமல் எல்லோருக்கும் குலத்தொழிலாக ஒரே தொழிலே அமைந்தது எப்படி?
இவர்கள் பிறக்கும்போது மட்டும் எல்லா கிரகங்களும் எல்லா நாளிலும் யாரோ உத்தரவு போட்டது மாதிரி ஒரே பொசிஷனில் வந்து ஒரே இடத்தில் நின்று கொண்டதா?
பார்ப்பனர்கள் மட்டும் பரம்பரை பரம்பரையாக மணியடிக்கும் தொழிலை செய்து வருகிறார்களே அவர்களுக்கும் பரம்பரைத் தொழில் மாறாமல் தொடர்ந்து வருவது ஏன்?
அவர்கள் பிறக்கும்போதும்எல்லா கிரகங்களும் எல்லா நாளிலும் யாரோ உத்தரவு போட்டது மாதிரி ஒரே பொசிஷனில் வந்து ஒரே இடத்தில் நின்று கொண்டதா?
என்று கேட்டேன்.
உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது?
நீங்க இப்படித்தான் குண்டக்கா மண்டக்கான்னு கேள்வி கேட்பீங்கன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணிட்டாரு
தனது கருத்து தவறு என்று ஒத்துக்கொள்ள மனமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக