சனி, 19 மே, 2018

பார்ப்பனக் கொள்ளை பாரீர்!

பார்ப்பனக் கொள்ளை பாரீர்!
------------------------------------------------
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலுக்குள் இருந்த புதையலை தோண்டி எடுத்ததாக, தேவஸ்தான அதிகாரிகள் மீது, தலைமை அர்ச்சகர், ரமண தீட்சிதர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள, திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வந்த ரமண தீட்சிதருக்கு, நேற்று, தேவஸ்தானம் கட்டாய பணி ஓய்வு வழங்கியது.
ஆபரணங்கள் : இந்நிலையில், நேற்று காலை, தனியார் தொலைக்காட்சிக்கு, அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஏழுமலையான் கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு கூடத்தை, 25 நாட்கள் வரை மூடிய அதிகாரிகள், அங்கு, பூமிக்கு அடியில் தோண்டினர். 'அந்த இடத்தில், பல்வேறு மன்னர்கள், ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கிய ஆபரணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன' என, முன்னோர்கள் கூறியுள்ளனர்.எனவே, அங்கு புதையலாக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபரணங்கள் என்ன ஆனது என தெரியவில்லை.கடந்த, 2001ல், பிரமோற்சவ கருடசேவையின் போது, மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த பிளாட்டின மாலையில் பதிக்கப்பட்ட வைர கல் விழுந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த வைரக்கல், பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில், 500 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் : இந்நிலையில், ரமண தீட்சிதரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகம் எதிரில், இந்து சம்ரட்சண சமிதி அமைப்பினர், நேற்று போராட்டம் நடத்தினர்
Dinamalar news 20-05-2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக