திங்கள், 14 மே, 2018

வெல்டர்களுக்கு மட்டும் ஏன் அலவன்ஸ்?




இந்தக் கேள்வி அனைவர் மனதிலும் மிக சாதாரணமாக எழக்கூடிய கேள்வி. இதில் நியாயம் இருப்பதாகவும் தோன்றும். ஏன் பிட்டிங் அலவன்ஸ் இல்லை? ஏன் மிஷினிங் அலவன்ஸ் இல்லை என்ற வினாவும் அனைவருக்கும் எழுவது இயல்பே.
நம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் ஒருவர். பொதுமேலாளர் 21 பேர். கூடுதல் பொதுமேலாளர் 121 பேர். முதுநிலை துணைப்பொதுமேலாளர்கள் 54 பேர். துணைப்போதுமேலாளர் 169. முதுநிலை மேலாளர் 150. மேலாளர் 64. துணை மேலாளர் 222. முதுநிலைப்பொறியாளர் 598. பொறியாளர் 113 பேர்.
இவர்களில் யாருக்காவது ஒரு சான்றிதழுக்கு சான்றளிக்கும் (யுவவநளவநன) அதிகாரம் இருக்கிறதா? யாருக்குமே இல்லையே. நமது நிறுவனத்திற்காக வரும் மாநில அரசு ஊழியரான கொதிகலன் ஆய்வாளருக்கு மட்டுமே ஒருவரது படிப்பு மற்றும் அவரது சான்றிதழ்களுக்கு சான்றளிக்கும் அதிகாரம் உள்ளது.
அந்த கொதிகலன் ஆய்வாளர் அவர்களுடைய பெயரும் எண்ணும்தான் ஒரு கொதிகலனிலோ உயர் அழுத்த குழாய்களில் உள்ள இணைப்புக்களிலோ பதிவு செய்யப்படும். அது இல்லாத கொதிகலன்கள் சட்டவிரோதமானவை என்பதுதான் கொதிகலன் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகும். அந்த இணைப்புக்களில் கொதிகலன் ஆய்வாளருக்கு முன்னதாகவே அந்த இணைப்புக்களில் பற்றவைப்புப் பணி செய்யும் வெல்டர்களின் எண்ணும் பதிவுசெய்யப்படும். அந்த அளவிற்கு ஒரு கொதிகலனுக்கு வெல்டர் என்பவர் மிக  மிக முக்கியமானவர்.
அதன் காரணமாகத்தான் வெல்டர்களுக்கு அலவன்ஸ் வழங்கப்படுகிறதே தவிர இது நிர்வாகம் போடும் பிச்சை அல்ல. இந்த அலவன்ஸ் ஒன்றும் எல்லாருக்கும் வழங்கப்படுவது இல்லை. வெல்டர்களுக்கு உரிய கால இடைவெளியில் பயிற்சி; வழங்கப்பட்டு அதற்கான செய்முறைத் தேர்வுகளில் வெற்றி பெற்று தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அலவன்ஸ் வழங்கப்படுகிறது. வெல்டர் என்று சொல்லிக்கொள்பவர் அனைவருக்கும் இது வழங்கப்படுவதில்லை. இது நமது நிறுவனத்தில் மட்டும் வழங்கப்படுவதில்லை. உலக அளவிலுள்ள வெல்டர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச விதி. இதனை நிறுத்துவதோ வழங்காமல் இருப்பதோ சர்வதேச சட்டத்தின்படி மிகப்பெரிய குற்றமாகும்.
இந்த அலவன்சை நிர்வாகமே எந்த பங்குபெறும் சங்கமும் ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக அறிவிப்பது சர்வாதிகாரமானது. தொடர்புடைய வெல்டர்கள் போராடினால் அவர்களை அழைத்துப் பேசி சுமுகமான தீர்வு காண்பதுதான் நல்ல நிர்வாகத்துக்கு அழகே தவிர அதை விடுத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது பாசிசமானது. இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் அந்தமான் சிறையிலும் போடுவார்களோää அல்லது தூக்கில் போடுவார்களோ எனறு அஞ்சும் அளவிற்கு நிர்வாகத்தின் எதேச்சாதிகாரப்போக்கு நிலவுகிறது.  இது வன்மையான கண்டனத்துக்குரியது.
நமது பாய்லர்கள் தரமாக இருந்தால்தான் நமக்கு ஆணைகள் நிறையக் கிடைக்கும். அது தரமாக இருக்க வேண்டும் என்றால் வெல்டர்களும் தரமான திறமையானவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு நியாயமாகவும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய அலவன்ஸ்களும் கிடைக்க வேண்டும். எனவேää நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையை நிறுத்தி ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக் கொள்கிறோம். 14.05.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக