செவ்வாய், 19 ஜூன், 2018

பிரியா விடைபெறுகிறேன்.





அன்புள்ள தோழர்களே!
திராவிடர் தொழிலாளர் கழகம் என்ற பெயரிலும்ää திராவிடர் கழகம் என்ற பெயரிலும்ää பகுத்தறிவாளர் கழகம் என்ற பெயரிலும் துண்டறிக்கைகள் மூலம் உங்களுடன் உறவாடிய ம.ஆறுமுகம் ஆகிய நான் பெருமைமிகு இப் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணியாற்றி 23-06-2018 முதல் உங்களிடமிருந்து பிரியா விடைபெறுகிறேன். என்மீது அன்புகொண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது கொள்கைகள்தான் இந்த மானிட சமுதாயத்தை உய்விக்கும் கொள்கைகள் என்பதால் அவர்கள் போட்டுத் தந்த பாதையில் என்னால் இயன்றவரை பயணித்திருக்கிறேன்.
சாதியும் மதமும்தான் நமது சமுதாயத்தை வீழ்த்திய நாசகாரக் கருவிகள் என்பதால் அதனை வீழ்த்த அவ்விரு தலைவர்களும் தந்த கொள்கை ஆயதத்தால் போராடி இருக்கிறேன்.
அந்த சாதியையும் மதத்தையும் கட்டியழும் நயவஞ்சகக் கூட்டம்  அதனை அப்படியே காப்பாற்றி பெரும்பான்மை மக்களை சூத்திரர்களாகää பஞ்சமர்களாக வைத்திருக்கவும் அவர்களை உயர்ஜாதிக் கூட்டம் என்றென்றும் சுரண்டிப் பிழைக்கவும் சில அமைப்புகள் முயன்ற நேரத்தில் அதனை எதிர்த்து முறியடித்திருக்கிறேன்.
இந்திய அரசி;ன் மதச்சார்பற்ற கொள்கைக்கு முரணாக ஆதிக்கக் கூட்டம்  முயன்ற நேரங்களில் அதனை எதிர்த்து அறிக்கைகள் கொடுத்திருக்கிறேன். மக்கள் மத்தியில் மண்டிக்கிடக்கும் மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி இருக்கிறேன்.
டுஊளு ஊழியர்களின் பணி நிரந்தரத்திற்காக இறுதிவரை போராடி வந்திருக்கிறேன். இன்னும் அந்தப் போராட்டம் முடிவுக்கு வரவில்லையே என்ற ஏக்கத்தோடு விடைபெறுகிறேன். இருந்தாலும் அந்த இலட்சியம் நிறைவேறும்வரை போராடுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுபோல் கேட்பதற்கு யாருமில்லா ஒப்பந்த ஊழியர்கள் அப்ரண்டிசுகள் ஆகியோரின் உரிமைக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன்.
வேறு எவரும் செய்யத் தயங்குகின்றää அஞ்சுகின்ற பணிகளை தயங்காமல் அஞ்சாமல் திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் செய்து வந்திருக்கிறேன். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துää வடநாட்டார் சுரண்டலை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறேன்.
ஒரு சிலருக்கு அது எரிச்சலைத் தந்திருந்தாலும் மிகப் பலர் நம்மிடம் உங்களுக்குப் பிறகு யார் இதனைச் செய்வார்? என்று வினா எழுப்புகின்றனர். அவர்களது அன்புக்கு நன்றி சொன்னாலும் தந்தை பெரியாருக்குப் பின்னால் இந்த இயக்கம் இருக்குமா? தொடர்ந்து இயங்குமா? என்று பலரும் அய்யப்பட்ட நேரத்தில் தந்தை பெரியாருடைய இயக்கம் தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்து ஆசிரியர் விரமணி அதனைத் தொடர்வதுபோல இங்கேயும் அந்த இயக்கம் தொடர்ந்து இயங்கும் என்பதிலே எந்த அய்யமும் இல்லை.
இந்த இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று விரும்புகின்ற நீங்கள்தான்  அதனை இயக்க வேண்டும். இது வாழையடி வாழை போன்ற இயக்கம். ஆலமரம் போன்ற இயக்கம். கொள்கை விழுதுகள் இம்மண்ணில் வேர்பிடித்து இருக்கின்றது. அதனை அனைவரும் ஆதரித்து பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுகிறேன்.  நன்றி! வணக்கம்!
இப்படிக்கு
என்றும் உங்கள் அன்புள்ள
  ம.அறுமுகம் (தி.க)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக