வெள்ளி, 15 ஜூன், 2018

BHEL HR சிறந்த மனிதவள மேலாண்மையா?



அரசியல் சட்டத்தை எழுதிய மேதை அம்பேத்கர் “இந்த சட்டம் நல்லவர் கையில் இருந்தால்தான் மக்களுக்குப் பயன்படும். அல்லாதவர் கைகளில் சிக்கினால் பாதிப்பு அதிகம்” என்றார். எல்லா மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்கிறது அந்தச்சட்டம். ஆனால் இன்றைக்கு அந்தச் சட்டத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் அதனைக் கேலிக்குரியதாக்குகிறார்கள்.

திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஒருவர் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு திருச்சியில் யார் யார் வீட்டில் Raid நடந்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த புத்திசாலி அதிகாரிகள் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா? Raid என்றால் Oxford Dictionary என்ன விளக்கம் சொல்கிறது? Lifco Dictionary  என்ன விளக்கம் சொல்கிறது? என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். இது அந்தச் சட்டத்தை கேலிக்குரியதாக்குகிறதா இல்லையா?

அதுபோல பெல் நிறுவனத்தில் Vincott  என்கிற ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் நபர்களுக்கு நாள் சம்பளம் எவ்வளவு? மாதச் சம்பளம் எவ்வளவு என்று கேள்வி கேட்டால் As per the minimum wage act என்று பதில் சொல்கிறது நிர்வாகம் இரவுப்படி வழங்கப்படுகிறதா? எவ்வளவு என்று கேட்டால் As per the minimum wage act என்று இப்படி எல்லாக் கேள்விக்குமே இதே பதில்தான்.

Vincott என்கிற ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் அனைவரும் டிப்ளமாää மற்றும் பி.ஈ படித்தவர்கள். தரக்கட்டுப்பாட்டுத் துறையில் பணிபுரிகிறார்கள். இந்த ஒப்பந்ததாரருக்கு முன்னாள் இருந்த ஒப்பந்ததாரர் மாதம் 13000.00 ரூபாய் ஊதியம் கொடுத்தார். ஆனால் இந்த Vicott என்கிற ஒப்பந்ததாரர் 6000.00 ரூபாய் மட்டுமே தருகிறார். இது நமது நிர்வாகம் சொல்வதுபோல சட்டப்படியான குறைந்தபட்சக் கூலி கிடையாது. ஒரு ஊழியருக்கு 7000.00 ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுகிறது. இந்த ஒப்பந்ததாரரிடம் 200 பேருக்கு மேல் பணிபுரிகிறார்கள். ஒரு நபருக்கு மாதம் ஏழாயிரம் சுரண்டப்படுகிறதென்றால் மொத்தம் எவ்வளவு சுரண்டப்படும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள்.

இது நிர்வாகத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே நிர்வாகம் இந்த பதிலைத் தந்திருக்கிறது. ஏன் நிர்வாகம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்? நிர்வாகத்துக்குத் தெரிந்தே இந்த உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது என்பதுதானே அதன் பொருள்? அந்த ஒப்பந்ததாரருக்கு என்ன வேலை? வேலைக்கு இண்டர்வியு வைப்பது நமது அதிகாரிகள். அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நாம். அவர்களிடம் வேலை வாங்குவது நாம். இடையில் எதற்கு அந்த ஒப்பந்ததாரர் தரகராக இருக்க வேண்டும்? நம் நிர்வாகமே நேரடியாக அவர்களுக்கு வேலை வழங்கி முறைப்படி கிடைக்க வேண்டிய ஊதியத்தை முழுமையாக வழங்கலாமே?

அதில் பணியாற்றக் கூடிய அனைத்து ஊழியர்களும் மிக மிக இளைஞர்கள். திருமண வயதில் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டிய வயசு. பெயர் பெற்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமை என்று கருதி வேலைக்கு வந்தால் அவர்களது வறுமைää வேலை இல்லாத்திண்டாட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் உழைப்பைச் சுரண்டுவது எந்த விதத்தில் நியாயம்?

அவர்களுக்கு ஊதியம் வழங்கும்போது எந்த விதமான விவரங்களும் பூர்த்தி செய்யாமல் வெற்று ரெஜிஸ்டரில் கையொப்பம் வாங்கிக்கொண்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதையெல்லாம் தெரிந்துகொண்டு நிர்வாகம் அந்த ஒப்பந்ததாரர்களை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்?

அத்துடன் இன்னொரு காண்ட்ராக்டர் 13000 ஊதியம் தருவதாக வெளியில் சொல்லிக்கொண்டு ஆவணங்களையும் உருவாக்கி விட்டு நவீன முறையில் சுரண்டுகிறார். ஊழியர்களது சம்பளத்தை வங்கியில் செலுத்திவிட்டு அவர்களிடம் ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியைத்தான் அந்த ஊழியர்களுக்கு வழங்குகிறார்கள்.

இப்படிப்பட்ட முறைகேடான ஒப்பந்ததாரர்களை வளர்த்து விடுவதுதான் சிறந்த மனிதவள மேலாண்மையா? எனவேää நிர்வாகம் உடனடியாக முறைகேடாக நடக்கும் ஒப்பந்ததாரர்களை வெளியேற்றிவிட்டு உழைப்பவர்களுக்கு சட்டப்படியான முழுமையான ஊதியம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக