ஞாயிறு, 3 ஜூன், 2018

வேகாததைத் தின்னு விதி முடியும் முன்னே சாவு

வெந்ததைத் தின்போம் - விதி வந்தால் சாவோம்
பழமொழி
வேகாததைத் தின்னு விதி முடியும் முன்னே சாவு
கேண்டீன் மொழி







உணவகம் என்பது ஒரு தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கண்டிப்பாகச் செய்து தர வேண்டும் என்பது 1942ல் அண்ணல் அம்பேத்கர் தொழிலாளர் நலக்குழு உறுப்பினராக இருந்தபொழுதே கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதை எவரும் மாற்ற முடியாது. அந்த அடிப்படையில்தான் நமக்கு உணவகத்தில் உணவு மானிய விலையில் தரப்படுகிறது.
குறைந்த விலையில் தருவதால் அதைச் சாப்பிட வரும் தொழிலாளர்களை எதைப் போட்டாலும் சாப்பிடுவார்கள் என்ற மமதையில் உணவக நிர்வாகம் இருந்து வருகிறது. சோறு வேகாமலேயே அரிசி அரிசியாக வழங்குவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. சாம்பாரில் தண்ணீர் ஊற்றுவதும் ரசத்தில் தண்ணீர் ஊற்றுவதும் வாடிக்கை ஆகி விட்டது. உணவகத்தில் உள்ள ஆலோசனைப் புத்தகத்தில் எழுதினால் எழுதுகின்றவர்களை இழிவுபடுத்துவது உணவக மேற்பார்வையாளர்களின் வழக்கமாக இருக்கிறது. இவ்வளவு பேர் வாயை மூடிக்கொண்டு தின்றுவிட்டுப் போகும்போது நீ மட்டும் ஏன் கேள்வி கேட்கிறாய் என்ற தொனியில்தான் அவர்களின் பதில் இருக்கிறது.
அப்படி ஒரு தொழிலாளி கடந்த 28-05-2018 அன்று சோறு முழுவதும் அரிசியாக இருக்கிறது என்று நோட்டில் எழுதிவிட்டு அருகில் இருந்த மேற்பார்iயாளரிடம் தெரிவித்தபொழுது ஸ்டீம் சப்ளை தடைப்பட்டது. அதனால் அரிசி வேகவில்லை என்று சொல்லி இருக்கிறார். சார் அரிசி வேகவில்லை என்றால் அதை நிறுத்திவிட்டு வேறு சோறு வடித்துப் போடுவதுதானே! கொஞ்சம் அரிசி வீணாய்ப் போனால் என்ன? அதைச் சாப்பிடுகிறவன் வயிறு வீணாகப் போகக் கூடாது அல்லவா என்று கேட்டபொழுது நீ என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறாய் என்று கூறியதோடு அதே ஆலோசனை நோட்டில் இந்தத்தொழிலாளி அடிக்கடி இங்கே வந்து எங்களைத் தரக்குறைவாகத் திட்டுகிறார் என்று பதில் எழுதி இருக்கிறார்கள். அதைப் பார்வையிட்ட அதிகாரி இனிமேல் சோற்றை நன்கு வேகவைத்து தொழிலாளிக்கு பரிமாறுங்கள் என்று அவர்களுக்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக அந்தத் தொழிலாளியைப்பற்றி மனிதவள மேலாண்மை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கிறேன் என்று எழுதியதோடு யுபுஆ ஃர்சு க்கு புகாரும் தெரிவித்திருக்கிறார்.
இதுதான் சரியான நடைமுறையா? பிரச்சினைக்கு தீர்வு காணாமல் யார் பிரச்சினையைத் தெரிவிக்கிறாரோ அவரை இழிவுபடுத்துவது அல்லது அவர்மீது நடவடிக்கை எடுப்பதுதான் அதற்குத் தீர்வா? எனவேää நிரவாகம்ää உணவக நிர்வாகத்தை சரிசெய்து நல்ல தரமான உணவை வழங்க வேண்டியதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
இப்பொழுது புதிதாக ஒரு வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது யார் சமுதாயத்திலுள்ள குறைகளை முன்னிறுத்தி அரசையோ நிர்வாகங்களையோ எதிர்த்துக் குரல் கொடுக்கிறானோ அவனை சமூகவிரோதி என்று முத்திரை குத்தி தேசதுரோகி என்று பட்டம் கட்டி அவனை ஒழித்து விட்டால் இனி எதிர்ப்புக் குரலே வராது என்கிற நிலையை ஏற்படுத்த சிலர் முற்பட்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற ஒரு நிலையை இங்கேயும் ஏற்படுத்த ஒரு சிலர் முனைவதாகவே தெரிகிறது. அதற்கு ர்சு நிர்வாகம் இடம் தரக் கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
உணவக நிர்வாகக் குழு தேர்தல் நடந்து பல வாரங்களாகியும் ஏன் அவர்கள் பொறுப்பேற்க இயலவில்லை? அவர்கள் பொறுப்பேற்றிருந்தால் தொழிலாளர்கள் அவர்களிடம்தானே முறையிடுவார்கள். அப்படி இல்லாததால்தானே இந்த நிலை என்பதனையும் ர்சு நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக