ஞாயிறு, 4 ஜூன், 2017

பொய்யும் பித்தலாட்டமும் -பிஎம்எஸ்

ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க் கூட்டம் இப்பொழுது அண்ணல் அம்பேத்கரைத் தூக்கிப் பிடிப்பதாகக் கூறிக்கொண்டு பல பித்தலாட்டங்களைச் செய்து வருகிறது.
பொய்யும் புனைசுருட்டுமே அவர்களது வேலையாக இருக்கிறது. பெல் நிறுவனத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் இந்த ஆண்டு தனது பிஎம்எஸ் நியூஸ் என்ற மாத இதழை அம்பேத்கர் ஜெயந்தி சிறப்பிதழ் என்று வெளியிட்டுள்ளது
அதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் பொய்யும் பித்தலாட்டமும் திரிபுவேலையும்தான்

உதாரணத்திற்கு ஒன்று

அண்ணல் அவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்று திரும்பி வந்த பிறகு பரோடா சமஸ்தானத்தில் ராணுவச் செயலாளராகப் பணியாற்றச் சென்றார் 1917 செப்டம்பர் மத்தியில் சென்ற அவர் அங்கு தீண்டாமை காரணமாக பல்வேறு அவமானங்களைச் சந்தித்தார்
தங்குவதற்கு இடம் கூடக் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்த அண்ணல் அவர்கள் இந்த நிகழ்வின்போதுதான் கண்ணீர்விட்டுக் கலங்கியுள்ளார்.
அந்த அளவிற்கு அங்கு தீண்டாமை தாண்டவமாடியது

மன்னரிடம் அதனை எடுத்துச் சொல்லியும் எந்தப் பலனும் இல்லை
அவர் திவானைப் பார்க்கச் சொன்னார். திவானும் இந்த ஜாதி விஷயத்தில் எதுவும் செய்ய இயலாது எனக் கைவிரித்து விட்டார்.
அதனால் கலங்கிய மனத்துடன் பரோடாவை விட்டு வெளியேறினார். இது நடந்தது நவம்பர் 1917ல்.

ஆதாரம் தனஞ்செய்கீர் எழுதிய அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு தமிழ் மொழிபெயர்ப்பு க.முகிலன் பக்கம் 45 46

இரண்டு மாதம்கூட அங்கு பணியாற்றாமல் வெளியேறிய அம்பேத்கரை பதினெட்டு மாதங்கள் பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றினார் என்று துணிச்சலாகப் பொய் சொல்கிறார்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்.

இதுபோலப் பல பொய்கள் அந்த இதழில் மலிந்து கிடக்கின்றன.

இவையெல்லாம் எதற்காக?
அம்பேத்கர் வரலாற்றையும் தெரியாமல் அவரது கொள்கைளையம் புரிந்துகொள்ளாமல்
தனது சமூகத்தின் வரலாற்றையும் தெரிந்துகொள்ளாமல் அப்பாவியாய்க் கிடக்கும் தலித் மக்களைக் கவர்ந்து ஓட்டுக்களைப் பெற்று காலாகாலத்திற்கும் அவர்களை கீழ்ஜாதியாகவே வைத்திருக்கும் தந்திரம் தவிர வேறு எதுவும் இல்லை

எனவே இத்தகைய பச்சை அயோக்கியர்களிடமிருந்து அண்ணலையும் காக்க வேண்டும். அவர்களின் சூழ்ச்சிக்குப்பலியாகாமல் தாழ்த்தப்பட்ட மக்களையும் காக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக